Thursday, June 30, 2016

ஆட்டோக்காரர்... ஆட்டோக்காரர்... நாலும் தெரிந்த ரூட்டுக்காரர்!!


☺ 👏👏👏 👍

(தினமலர் - வாரமலர் - சென்னை - 26/06/2016)

posted from Bloggeroid

இனமானம் காத்த தமிழர்கள்!!! 😤😡

திராவிடம் = திரமிளம் = திரை+மீளம்!!

திரை கடலோடி மீண்டும் கரை வந்து சேர்தல் அன்று வியக்கத்தக்க செயலாகும். இத்தகைய வியத்தகு செயலை செய்தது நம் தமிழ் முன்னோர்கள் தாம். 👍

மேலும், தமிழ் = அமிழ். தமிழர் = அமிழ்ந்தோர். கடலில் அமிழ்ந்த இனத்தின் மிச்சமே தமிழர்கள்! 👍

இப்படி பெயரிலேயே மலைக்க வைக்கும் விஷயங்களை வைத்திருந்த தமிழனின் இன்றைய நிலை: "அன்று பிராமணன் பொங்கவில்லை. ஆகையால், இன்று நாங்கள் வேடிக்கை பார்ப்போம். பொங்கமாட்டோம்." 😔

இவனெல்லாம் தமிழனேயல்ல! அயல் மதங்களுக்கும் அயல் நாட்டினருக்கும் கூஜா தூக்கும் கருங்காலிகள்!! 😛😜😝

நம்மை மொட்டைப் போட்டு அழித்துக் கொண்டிருந்த வடக்கத்திய சமண பெளத்தர்களிடமிருந்து நம் மொழி, சமயம் மற்றும் கலாச்சாரத்தைக் காப்பாற்றிய ஆளுடையபிள்ளையார் ஆதிசைவ பிராமணரே. அந்த பிராமணர் தோன்றியிருக்காவிட்டால் இன்று நாம் மொட்டையர்களாக வடக்கத்தியர்களுக்கு கல் படுக்கைகள் தயார் செய்து கொண்டிருப்போம். 😂

பரிதிமாற்கலைஞர் எனும் சூரியநாராயண சாஸ்திரிகள் தோன்றியிருக்காவிட்டால் இன்று தமிழே இருக்காது!! நாமனைவரும் மொழிகளில் தாசியாகிய ஆங்கிலத்தில் "பீட்டர்" விட்டுக் கொண்டிருப்போம். ஆற்காடு பீட்டர் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள்! 😂😂😂

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

#திராவிடம், #தமிழ், #தமிழர்

posted from Bloggeroid

Wednesday, June 29, 2016

மனநோயாளிகளின் கூடாரமாக மார்றிவருகிறதா சமூக வலைதளங்கள்?


(தினமலர் - சென்னை - 30/06/2016)

மிக அருமையான கட்டுரை!!

தலைப்பு மட்டும் சரியாகத் தேர்வு செய்திருந்தால் கனகச்சிதமாக இருந்திருக்கும்! 👍

posted from Bloggeroid

🔯 திருமறைகள் - ஒரு சிறிய அறிமுகம் 🔯

நம் சமய நூல்களான திருமறைகளைப் பற்றிய ஒரு சிறு அறிமுகக் கட்டுரை.


(வைகாசி மாத ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழிலிருந்து)

பேருண்மைகளை மறைத்து வைத்ததால் மறைகள். விலைமதிப்பற்ற பேருண்மைகள் என்பதால் திரு எனும் அடைமொழி சேர்க்கப்பட்டது.

இந்தத் திருமறைகளும், அவை இயற்றப்பட்ட சமற்கிருதமும் நமதே! அதிலுள்ள பேருண்மைகளை உள்ளுணர்வால் உணர்ந்து உலகிற்கு வெளிப்படுத்திய பெரும் மகரிஷிகளின் சமாதிகள் நம் தென்னகத்தில் இருப்பது ஒன்றே போதுமான சான்றாகும்!!

posted from Bloggeroid

Tuesday, June 28, 2016

மொகஞ்சதாரோ படக்கதையும் மூன்று துரோகிகளும் 👿👹👺


(தினமலர் - பட்டம் - சென்னை - 27/06/2016)

தினமலரின் இப்பணியை மனமார பாராட்ட வேண்டுகிறேன்!! 👏👏👏

நம் முன்னோர்கள் கடைபிடித்த விஷயங்களை, வாழ்ந்த விதத்தை, அவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு செய்தியாக இளம் வாசகர்களின் மனதில் ஆழப் பதியுமாறு கொடுத்திருக்கிறார்கள். 👍

இதே போன்று நம் மன்னர்கள், மகான்கள், பெரியோர்கள் மற்றும் அக்கால தமிழர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை மெக்காலே கல்வி கற்று வளரும் இளம் தலைமுறைக்கும், வளர்ந்த நம் தலைமுறைக்கும் எடுத்துச் செல்லவேண்டும்.

இங்கே 3 துரோகக் கூட்டம் இருக்கிறது!! 😠

சிறுவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்றால், "பிரகலாதன் போன்று" என்றும், ஒரு காரியத்தில் எப்படி கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும் என்றால், "அர்ஜூனன் போன்று" என்றும் ஒரு கூட்டம் பதில் கூறும். 😛

இன்னொரு கூட்டம் அதே கேள்விகளுக்கு அன்றைய அரேபியாவில் வாழ்ந்த ஏதாவது ஒரு காட்டுமிராண்டியை எடுத்துக்காட்டாகக் கூறும். 😜

மூன்றாவது கூட்டம், ஏதாவது ஒரு பரங்கி நாட்டிலிருந்து ஜேப்படி / வழிப்பறி / கொள்ளை பயிற்சி எடுத்த இளம் பரங்கியை எடுத்துக்காட்டாகக் கூறும். 😝

நம்மை மொட்டை போட்ட இரண்டு கூட்டங்களை திருஞானசம்பந்தரும் ஆதிசங்கரரும் அன்றே விரட்டியடித்து விட்டனர். இல்லையெனில், ஒன்று "போதிசத்வர்" என்று படம் காட்டும். இன்னொன்று "மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால்" என்று புருடா தள்ளும். 😀

இந்த நிலை மாறவேண்டும்!!

இனி, வீரம், தியாகம், சமயோசிதம், அறிவுகூர்மை, திட்டமிடுதல், பெரியோரை மதித்தல் என அனைத்திற்கும் இந்த மண்ணில் வாழ்ந்த தமிழ் முன்னோர்களையே எடுத்துக்காட்டாக கூறப்படும் நிலையை உருவாக்கவேண்டும். 😍

posted from Bloggeroid

🔥வந்தே மாதரம்🔥 எனும் உயிர்ப்புமிக்க முழக்கத்தை அளித்த திரு. பங்கிம் சந்திர சட்டர்ஜி பற்றி....


(தினமலர் - பட்டம் - சென்னை - 27/06/2016)

posted from Bloggeroid

Monday, June 27, 2016

🌸 திருநீற்றைப் / விபூதியைப் பற்றி சில தகவல்கள் 🌸

சைவச் சின்னங்களுள் ஒன்று. திருநீறு எனில் "மதிப்பிற்குடைய / ஞான செல்வம்" (திரு+நீறு). விபூதி எனில் "மேலான செல்வம்" (வி+பூதி). இது, இரு வகையில் மேலான செல்வத்தைக் குறிக்கும்.

🔯 தத்துவ ரீதியில்:

*ஒரு பொருள் முழுவதும் எரிந்து முடிந்த பிறகு, சில சமயம், அதன் உருவம் கலையாமல் சாம்பல் அப்படியே இருக்கும். உருவம் கலையாதிருப்பதால் மட்டும் அப்பொருளினால் எந்த உபயோகமும் கிடையாது. அவ்வாறே, ஞானமடைந்த பின் (சிவ நிலையை அடைந்த பின்), ஞானிக்கு (சிவனுக்கு) இவ்வுலகம் எரிந்து முடிந்து சாம்பல் உரு கலையாமல் இருப்பது போல் தோன்றும் (தோற்றமாத்திரமே; இருப்பற்றது; சுயப்பிரகாசமற்றது). இக்காரணத்தினால் தான் "சிவன் சுடுகாட்டில் வாழ்பவர்" எனப்படுகிறார்!!*

அதாவது, ஞானிக்கு (சிவனுக்கு) தன்னைத் தவிர மற்றனைத்தும் கலையாத சாம்பால் உரு போன்று, கானல் நீர் காட்சி போன்று, கனவு போன்று , பொய்யென்றுத் தோன்றும்!

🔯 மருத்துவ ரீதியில்:

பசுஞ்சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் விபூதி நல்ல கிருமிநாசினி!

மறைந்த மராத்திய பேராசிரியர் தபோல்க்கரின் ஆய்வின்படி, முழுவதும் எரிந்து முடிந்த பின் கிடைக்கும் சாம்பலில் இருக்கும் மேன்மையான சத்துக்கள் (மேலான செல்வங்கள்) மட்டுமே மண்ணிலிருந்து தாவரங்களால் உறிஞ்சப்பட்டவை. இவை அளவில் மிகக்குறைவாகவே இருக்கும். நம் உடலுக்கும் மிகக் குறைவாகவே தேவைப்படும். நாம் உடலில் பூசிக்கொள்ளும் போது தோலின் மூலம் சிறிதளவு அந்தச் சத்துக்கள் ஈர்த்துக் கொள்ளப்படும். அது போதுமானது.

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

இந்த மருத்துவ ரீதியான பயன் நமக்கு உடனடியாகப் புரியும். தத்துவ ரீதியான பயன்? ஞானிக்கு (சிவனுக்கு) உலகம் எப்படித் தோன்றினால் என்ன? அதனால் நமக்கு என்ன பயன்?

*நம் சமயத்தில் இருக்கும் பெரும்பாலான சமாச்சாரங்களைப் போன்று தான் இதுவும்: விபூதியை இட்டுக் கொள்வது, நம்மைப் பார்த்து மற்றவர்களும் மற்றவரைப் பார்த்து நாமும், மேற்சொன்ன பேருண்மைகளை மறவாதிருக்கவும் & இடைவிடாது சிந்திக்கவும் தான்!*

இந்த பேருண்மைகளை என்றும் மறவாது, தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருத்தால் இறுதியில் அதுவாகவே (சிவனாகவே) மாறிவிடுவோம் ("எதை நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்" என்ற கோட்பாட்டின் படி).


💠 "மந்திரமாவது நீறு" என்கிறார் ஆளுடையப்பிள்ளையார். மந்திரம் எனில் சிந்தனையைத் தூண்டக்கூடிய கருவி. இது சொல், சொற்றொடர், பொருள், அடையாளம், ஜீவன், எண்ணம், செயல் என எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆகையால், பிள்ளையாரின் வார்த்தைகளை இப்படி மாற்றலாம்: "சிந்திக்கத் தூண்டுவது நீறு". எதை சிந்திக்கத் தூண்டுகிறது நீறு? *மேற்சொன்ன பேருண்மைகளை!!*.

💠 "விபூதியை கீழே சிந்தாதே" என்பர் நம் பெரியோர். இதுவும் தத்துவ ரீதியில் சொல்லப்பட்டதே. "பாடுபட்டு அடைந்த மேலான ஞானத்தை இழந்து விடாதே" என்பதே இதன் பொருள். ஞானம் என்பது அறிவு. என்ன அறிவு? "நான் இவ்வுடலல்ல என்ற *அனுபவ* அறிவு". இவ்வனுபவம் கிட்டும் போது உலகம் இருப்பற்று போகும் - கலையாத சாம்பல் உரு / சுடுகாடாகி விடும். இந்த நிலையை அடையும் ஜீவன் சிவனாகிறான். இப்படி சிவநிலையை அடைந்த பின்னும் சிலர் மீண்டும் உலகமாயையில் சிக்கிவிடுவர். ஞானானுபவம் ("நான் இவ்வுடலல்ல" என்ற அனுபவம்) ஸ்திரமாகும் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பார் பகவான் ஸ்ரீரமணர்!


பகவானின் எச்சரிக்கைக்கு உதாரணமாக மாணிக்கவாசக பெருமானின் வரலாற்றை சிறிது பார்ப்போம். திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயிலில்) முதல் ஞானானுபவம் பெற்று பின்னர் இழந்துவிடுகிறார் (விபூதியை சிந்திவிட்டார்!!). பின்னர், அழுதுபுலம்பி அவ்வனுபவத்தைத் தேடி பல இடங்களுக்குச் செல்கிறார். இரண்டாவது முறையாக திருக்கழுகுன்றத்தில் சிறிது நேரம் கிடைக்கப் பெறுகிறார். இறுதியில், சிதம்பரத்தில் அவரது ஞானம் (சிவானுபவம் / ஞானானுபவம் / இறையனுபவம்) ஸ்திரமாகிறது. சீவத்தன்மை முற்றிலும் நீங்கப்பெறுகிறார் - சிவமாகிறார். இதையே "இறைவனோடு கலந்தார்" என்கிறோம்.

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

விபூதியை வாங்குவதிலும் மிகுந்த கவனம் தேவை! நாட்டுப் பசுவின் சாணத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட திருநீறே பூசிக்கொள்ள உகந்தது. தமிழகத்தில் மிகப் பிரபலமான விபூதி தயாரிப்பு நிறுவனம், பழைய காகிதங்களையும் மற்றும் குப்பை காகிதங்களையும் வாங்கி, எரித்து சாம்பலாக்கி பின்னர் அதனுடன் வாசனை வேதியல் பொருட்களைச் சேர்த்து "ஸ்பெஷல் விபூதி" என்று மக்களை ஏமாற்றுகின்றது!! ஆகையால், விசாரித்து வாங்கவும். நன்கு தெரிந்த அர்ச்சகரிடமிருந்து அபிஷேக விபூதி பெற்றாலும் கூட, தயவு செய்து பிரசாதமாக வாயில் போட்டுக் கொள்ளவேண்டாம்.

🔥 வெளிப்புறத்தில் தரமான திருநீற்றைப் பூசி மருத்துவப் பயன்களைப் பெறுவோம்
🔥 உள்புறத்தில் சரியான தவமியற்றி இறைவனடி எனும் திருநீற்றினைப் பெறுவோம்
🔥 பிறப்பறுப்போம்
🔥 பிறவிப்பயனையடைவோம்

🔯 திருச்சிற்றம்பலம் 🔯

posted from Bloggeroid