Wednesday, July 15, 2020

டைம்ஸ் நவ் (Times Now) நிறுவனத்தின் ஊழியம்!!

வடக்கில் எங்கேயோ நடந்த ஒரு குற்ற நிகழ்வுக்கு தெற்கிலுள்ள திரு ரமணாசிரமப் படத்தைப் போட்டிருக்கிறார்கள்!!

https://www.timesnownews.com/mirror-now/crime/article/up-godman-called-alcohol-coronavirus-medicine-forced-children-to-drink-it-before-sodomising-them/620237

கேட்டால், "கோப்பு படத்தை தேர்ந்தெடுப்பதில் தவறு நடந்துவிட்டது. மன்னிக்கவும்." என்று கிண்டல் கலந்த பார்வையுடன் பதிலளிப்பார்கள். இன்றைய நிலையில், இவர்கள் இருந்த இடத்திலிருந்து குற்றம் நடந்த இடத்தின் படத்தைப் பதிவிறக்கமுடியும். வேண்டுமென்றே இதை செய்திருக்கிறார்கள்!!

இதே உத்தியைப் பயன்படுத்தி காட்டுமிராண்டிகளின் பஸ்கி பயிற்சிக்கூடத்தையோ, பாவாடைகளின் பாவமன்னிப்பு "தொழில்" நடக்குமிடத்தையோ, வளர்ப்பு மகளை மணந்த ஒழுக்கங்கெட்டவன் விட்டுச்சென்ற மய்யத்தையோ காட்டியிருந்தால் என்ன நடந்திருக்கும்? பல தெருமாக்கள் (தெரு விலங்குகள்) இந்நேரம் ஊளையிட ஆரம்பித்திருக்கும்!

இதுவே, ஒரு காட்டுமிராண்டி இதைச் செய்திருந்தால், பாபா என்று மட்டும் போட்டு விட்டு, ஒரு இந்துத்துறவியின் வரைபடத்தைப் போட்டிருப்பார்கள். (சமீபத்தில், ஒரு காட்டுமிராண்டி, "முத்தம் கொடுத்து கொரோனாவை விரட்டுகிறேன்" என்று பலருக்கு பரப்பி விட்டு, தானும் இறந்துபோனான். இணையத்தில் மட்டும் அவன் ஒரு காட்டுமிராண்டி என்ற செய்தி வந்தது. மற்ற ஊடகங்களில் அது முற்றிலுமாக மறைக்கப்பட்டு, பாபா என்று மட்டும் சொல்லப்பட்டது.)

ஊடகத்துறை, திரைத்துறை மற்றும் தமிழ் கல்வி ஆகியவை #காபாகூபா முட்புதர்கள் மண்டிப்போன காடாகிவிட்டன. இவைகளை வெட்டி மூடாக்காகவோ, மக்க வைத்து எருவாகவோ பயன்படுத்தினால், இவற்றின் சாரத்தினால் அடுத்து கிளம்பும் பயிர்களும் கெட்டுவிடும். வடக்கில் செய்வது போல் தீயிட்டு கொளுத்தி (அதாவது, முற்றிலும் அழித்து) விட்டு, புதிதாக பயிர்செய்ய வேண்டும்.

👊🏽 காபா - உலக பெருந்தொற்றுகளான கா'ட்டுமிராண்டிகள் & பா'வாடைகள்

👊🏽 கூபா - சமூகப்பீடைகளான ஒழுக்கங்கெட்ட கூ'வஞ்சட்டைகள் & சதிகார பா'ன்பராக் சட்டைகள்

oOOo

💪🏽 இன்னும் சில நூற்றாண்டுகளில் காட்டுமிராண்டி மதம் புவியிலிருந்து முற்றிலும் அழித்தொழிக்கப்படும் என்பது திரு ராமச்சந்திர மகராஜ் 🌺🙏🏽என்ற முனிவரின் வாக்கு.

💪🏽 இன்னும் 230 ஆண்டுகளில் பகவான் திரு ரமண மாமுனிவரின் 🌺🙏🏽அறிவுரைகள் உலகுக்கு இன்றியமையாதவை ஆகிவிடும் என்பது திரு முருகனார் சுவாமிகளின் 🌺🙏🏽 வாக்கு. (அதாவது, பொய்பிள், புருடான் வகையறாக்களுக்கு சங்கு என்று பொருள்!)

💪🏽 எதிர்காலத்தில் திருவருணையில் வானளாவிய கட்டிடங்கள் தோன்றிவிடும் (அதாவது, ஒரு முக்கிய நகரமாகிவிடும்) என்பது பகவானின் வாக்கு.

மெய்யறிவில் நிலைபெற்ற மாமுனிவர்களின் வாக்குகள் பொய்யாகாது!!

oOOo

காட்டுமிராண்டிகள் அழிவர் என்று பார்த்தோம். பாவாடைகள் என்ன ஆவார்கள்?

பெரும்பாலும் அவர்களது ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கும். பெருந்தெய்வங்கள், சிறு தெய்வங்கள் என்ற வரிசையில் எச்சில் பிஸ்கோத்து தெய்வங்களும் சேர்ந்திருக்கும். 😏

இல்லை, இப்போதிருப்பது போல் உலகை சிரழிக்கும் தொழில் செவ்வனே நடந்து கொண்டிருந்தால்,

👊🏽 சில தலைமுறைகளுக்கு பின், ஆப்பிள் மரத்தினடியில் அமர்ந்திருக்கும் ஒரு பரங்கி இந்து சமயத்தைக் "கண்டுபிடிப்பான்"!

👊🏽 குளியல்தொட்டியிலிருந்து பிறந்தமேனியாக ஒரு பரங்கி "நீயே அது" என்று கத்திக் கொண்டே ஓடுவான்!!

👊🏽 "திருநீறு பூசுவது" மற்றும் "உருத்திராக்கம் அணிவது" ஆகியவற்றின் ஆன்மிக & மருத்துவ குணங்களை "கண்டுபிடித்ததற்காக" ஒரு பரங்கியை, பாவமன்னிப்பு தொழில் நிறுவனம் சிறை வைக்கும்!!!

👊🏽 பின்னர், இவற்றிற்கெல்லாம் காப்புரிமை பெறப்படும். நம்மிடம் இருந்து, நமக்கு தெரியாமலேயே, நமது கொள்ளையர்கள் (ஆட்சியாளர்கள்) காப்புரிமை பணத்தை உருவி பரங்கி எஜமானர்களுக்கு கொடுத்து, பிறவிப் பெரும்பயனடைவார்கள்.

வேறென்ன நடந்துவிடப் போகிறது. 😏

oOOo

நெற்றிவிழி கண்மூன்றும் நித்திரையோ சோணேசா
பற்றிமழு சூலம் பறிபோச்சோ - சற்றும்
அபிமான மின்றோ அடியார்க ளெல்லாம்
சபிமாண்டு போவதோ தான்

-- #குகைநமச்சிவாயர் 🌺🙏🏽

பொருள்: சோணேசா, உனது நெற்றியிலுள்ள 3 கண்களும் உறங்கிவிட்டனவா? மழு, சூலம் ஆகிய உனது ஆயுதங்கள் எல்லாம் பறிபோய்விட்டனவா? உன்னையே நம்பியிருக்கும் உனது அன்பர்கள் எல்லோரும் நம்பிக்கையிழந்து மாண்டுபோக வேண்டியதுதானா?

இந்த வெண்பாவின் வரலாறு சுருக்கமாக...

சுமார் 16ஆம் நூற்றாண்டின் நடுவில், அகித் என்ற ஒரு கோரி முகம்மது வகையறா (காட்டுமிராண்டி) திருவண்ணாமலை நகரைக் கைப்பற்றியது. அது அண்ணாமலையார் திருக்கோயிலை தனது கோட்டையாகவும், மூலவரின் கருவறையை தனது அந்தப்புரமாகவும் பயன்படுத்தியது. இவற்றுடன், பெண்களைக் கவர்தல், பொருட்களை கொள்ளையடித்தல், பயிர்களுக்கு தீ வைத்தல் முதலான மார்க்கப் பணிகளை செய்து வந்தது. இவற்றால் மனம் நொந்த ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி குகை நமச்சிவாயரிடம் முறையிட்டனர். அவரும் மேற்கண்ட வெண்பாவைப் பாடினார்.

அன்றிரவு காட்டுமிராண்டியின் கனவில் ஒரு முதிய தவசி தோன்றி, ஒரு சிறு கூரான ஆயுதத்தால் அவனது முதுகில் குத்தினார். திடுக்கிட்டு விழித்தெழுந்தவன், பரிசோதித்துப் பார்த்ததில், கனவில் குத்து வாங்கிய இடத்தில் ஒரு சிறு வேர்க்குரு இருக்கக் கண்டான். அது நாளடைவில் வளர்ந்து, பிளவைக் கட்டியாக மாறி, அவனை மிகவும் துன்புறுத்தியது. கருவுற்ற மகளிரைக் கொன்று, கருவிலிருக்கும் பிண்டத்தை பிளவைக் கட்டிக்குள் வைத்து கட்டிப்பார்த்தான். குணமாகவில்லை. அவனது மதப்பெரியோர்கள் அவனை திருத்தலத்திலிருந்து வெளியேற அறிவுருத்தினார்கள். வேறு வழியின்றி அவனும் வெளியேறி, ஊருக்கு வெளியே கூடாரம் அமைத்துக் கொண்டான். ஆனாலும், குணமடையவில்லை. கட்டியில் புழுக்கள் தோன்றின. இறுதியில், மிகவும் துடிதுடித்து இறந்துபோனான். அவனது இறப்பை திருவண்ணாமலை நகரத்தார் அனைவரும் வெகுவாகக் கொண்டாடியுள்ளனர். தலைமுழுகி, புத்தாடை அணிந்து, வாணவேடிக்கைகள் செய்து, விருந்து உண்டு மகிழ்ந்துள்ளனர்!! 😍

இது போன்றொரு நிகழ்வு மீண்டும் நம் நாட்டில் நடக்கவேண்டும். குகை நமச்சிவாயர் போன்றொரு பெருமான் மனது வைக்கவேண்டும். நாசகார சதிகார நயவஞ்சக கருங்காலி ஈனப்பிறவிகள் ஒன்று, திருந்த வேண்டும்; அல்லது, மண்ணோடு மண்ணாக வேண்டும்.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Monday, July 13, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #55: ஊனமலை - சிறு விளக்கம்

புண்டரிகன் மால்தேடிப் பொன்முடியும் பொன்னடியும்
கண்டறிய ஒண்ணாத காட்சிமலை - தொண்டருடை
ஊனமலை பற்றறுக்க ஓம்நமச்சி வாயகுரு
ஆனமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #55

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸தொண்டருடை ஊனமலை

தொண்டர்களை உடைய குறையுள்ள மலை!! ஊன என்பதற்கு "ஐம்பூதங்களால் ஆன", "குறையுள்ள" என சில பொருள்கள் உண்டு. இங்கு "குறையுள்ள" என்பதே பொருத்தமாகும். எப்படி?

இவ்வளவு அருமையும், பெருமையும், தொன்மையும், வல்லமையும் கொண்டு மெய்யறிவு வடிவாய்த் திகழும் அண்ணாமலையாருக்கு தொண்டர்கள் இருக்கலாமா? தொண்டர்கள் எனில் (இங்கு) மெய்யறிவு பெறாதவர்கள். அண்ணாமலையாரின் பெருமை என்ன? அவரை நினைத்தவுடன் விடுதலை அளிப்பது. அவரது தொண்டர்கள் அவரை நினைக்காமல் இருப்பார்களா? அப்படி தன்னை நினைத்தவர்களை, நினைத்த கணம் அவர்களது தளைகளிலிருந்து விடுவித்திருக்க வேண்டுமல்லவா? அப்படி விடுவித்திருந்தால் இன்னும் தொண்டர்கள் இருப்பார்களா? இருக்கமாட்டார்கள். எனவே, அண்ணாமலையார் குறையுள்ளவர் ஆகிறார்! குறையுள்ள மலை = ஊனமலை!!

இந்த குறையைப் போக்கிக்கொள்ள அவர் என்ன செய்ய வேண்டும்? தனது தொண்டர்களின் தளைகளை அறுத்து அவர்களை விடுவிக்க வேண்டும். இதற்காகவே - தனது தொண்டர்களின் பற்றறுக்கவே - குகை நமச்சிவாயராக 🌺🙏🏽 வடிவெடுத்தாராம்!! பற்றறுக்க ஓம்நமச்சிவாய குரு ஆனமலை!!! 😊

("இளநீரை ஒத்த ஆற்றுநீரில் துள்ளி விளையாடும் வாளைமீன்களால் தெறிக்கும் நீர் துளிகள் பகலவனின் தேரோட்டியான அருணன் மீது போய் விழுந்தன" என்று ஒரு புனைவுரை உண்டு. இதிலுள்ள கற்பனைத்திறன் நம்மை புன்முறுவலிக்க வைக்கும். இது போன்றொரு புனைவுரை தான் எனது விளக்கம். 🙏🏽)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Friday, July 10, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #54 - சிவபெருமான் தூது சென்றது, காமனை எரித்தது, தமிழ் சங்கம் நடத்தியது - சிறு விளக்கம்

தொல்நாவல் சுந்தரற்காத் தூதுபோய் வந்தமலை
நன்மைதரத் தொண்டருக்கு நல்குமலை - மன்மதனைக்
காய்ந்தமலை கூடலில்சங் கத்தா ருடன்தமிழை
ஆய்ந்தமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #54

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸தொல்நாவல் ... வந்தமலை

பழமையான திருநாவலூரில் பிறந்த திரு சுந்தரமூர்த்தி நாயனாருக்காக 🌺🙏🏽 அவர் தம் முதல் மனைவியார் பரவை நாச்சியாரிடம் பகவான் 🌺🙏🏽 போன்ற ஒரு மெய்யறிவாளர் தூது போய்வந்த வரலாறு. ஏற்கனவே சற்று விரிவாகப் பார்த்திருக்கிறோம். "சிவபெருமான் தூது போய் வந்தார்" என்றதும், சடைமுடி, பிறைநிலவில் ஆரம்பித்து கால்களில் கழல் பூட்டிய ஒரு உருவம் தான் நம் நினைவுக்கு வரும்படி செய்துவிட்டார்கள்! இது தவறு.

தன் இருப்புணர்வில் நிலைபெற்ற அனைவருமே சிவபரம்பொருள் தான். ஆறுகள் பலவாக இருக்கலாம். கடலில் கலந்த பின்னர் அனைத்திற்கும் கடல் என்று ஒரு பெயர் தான். நீர்குமிழிகள் பலவிதமாக இருக்கலாம். அவை வெடித்த பின் இருப்பது ஒரே நீர்நிலைதான். இது போன்றே சீவர்களும் சிவமும். சீவர்கள் பலவாகத் தோன்றலாம். அவர்கள் காணும் காட்சிகளும் பலவாகத் தோன்றலாம். ஆனால், எல்லாம் "அடங்கிய" பின் (மெய்யறிவு பெற்ற பின்) இருப்பது ஒரு சிவபரம்பொருள்தான். இதனால் தான், அருணை, கூடல், நெல்லை போன்ற பழம்பெரும் திருத்தலங்களில் சமாதியாகி இருக்கும் மாமுனிவர்களை அண்ணாமலையார், சொக்கநாதர், நெல்லையப்பர் என்று தனித்தனியாக அழைத்தாலும் பொதுவாக சிவபெருமான் என்றே அழைத்தனர் நம் முன்னோர்.

மேற்கண்ட "#அடங்கு" என்ற சொல்லைப் பற்றி: தமிழில் வேடிக்கையாக "#அடங்குடா" என்பார்கள். அதிகம் ஆட்டம் போடுபவர்களைப் பார்த்து சொல்லப்படும் சொல்லாக இன்று விளங்குகிறது. ஆனால், இதன் வேர் ஆன்மிகத்தில் உள்ளது. நம்மை (நமது கவன ஆற்றலை) நாம் வெளிவிட்டால் தான் உலகம். அடங்கியிருந்தால் - அடக்கிக் கொண்டிருந்தால் - நமது கவன ஆற்றலை நம் இருப்புணர்வின் மீதே வைத்துக் கொண்டிருந்தால் - எல்லாம் சிவமயம் தான். "மனதை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்" என்பது பகவானது வாக்கு. அடங்கு எனில் தன்மையுணர்வில் அடங்குதல்!!

தமிழ் ஆன்மிக மொழி என்பதையுணர இன்னொரு எடுத்துக்காட்டு: மேற்சொன்னது போன்றே, அங்கும் இங்கும் அலைந்து திரிபவர்களைக் கண்டு பெரியவர்கள், "செத்த நேரம் #சிவனேன்னு கெடக்க வேண்டியது தானே?" என்று திட்டுவதைக் கேட்டிருப்போம். படித்தவர் முதல் பாமரர் வரை பயன்படுத்தும் சொற்றொடர் இது. உலகில் வேறெங்கும் இப்படியொரு வசைவுச் சொற்றொடர் இருக்காது. வேறெந்த தெய்வத்தைக் கொண்டும் இருக்காது. இன்று இது வெறும் சொற்றொடர். ஆனால், அன்று, இவ்வாறு திட்டியவருக்கும், திட்டுப் பெற்றவருக்கும் "சிவம் என்றால் என்ன?", "சிவமாய் கிடப்பது எப்படி?" என்ற கேள்விகளுக்கு பதில்கள் தெரிந்திருந்ததால் தான் அவ்வாறு திட்டமுடிந்தது, திட்டை ஏற்க முடிந்தது என்பதை நாம் உணரவேண்டும்!!

இவையெல்லாம் நம் அன்னைத்தமிழில் எவ்வளவு தூரம் ஆன்மிகம் கலந்திருக்கிறது என்பதற்கும், நம் முன்னோர்கள் எவ்வளவு தூரம் மெய்யறிவுத் தாகம் கொண்டவர்கள் என்பதற்கும், ஆதிசைவமே நமது சமயம் என்பதற்கும், சிவபரம்பொருளே நாம் போற்றிய தெய்வம் என்பதற்கும் சிறு எடுத்துக்காட்டுகள்.

🔸நன்மைதரத் தொண்டருக்கு நல்குமலை

இறைவன் நமக்கு வழங்கும் அறிவும், பொருளும் மற்றவர்களுக்கு நாம் நன்மை செய்வதற்காக, மற்றவர்களுடன் நாம் பகிர்ந்து கொள்வதற்காக என்கிறார் ஆசிரியர். இதில் பொருளைப் பற்றி நாம் சிந்திக்கத் தேவையில்லை. சாங்கியம், சடங்கு, சம்பிரதாயம், நியாயம், தர்மம், கடமை, சமூக அநீதி, மக்களாட்சி, கல்வி, மருத்துவம் என பல பெயர்களால் நம்மிடமிருப்பதை பறித்துக் கொள்ள குடும்பம், உறவினர், சமூகம், மாநில அரசு, நடுவண் அரசு, பரங்கியர்கள் (எதிர்காலத்தில் சீனர்கள்) என பல அமைப்புகள் உள்ளன. தனியாகப் பகிர்ந்து கொண்டு நமக்கு நாமே பட்டைநாமம் போட்டுக் கொள்ளத் தேவையில்லை. 😁

🔸மன்மதனைக் காய்ந்தமலை

சிவபெருமான் மன்மதனை எரித்த கதை.

ஒரு எடுத்துக்காட்டு. எந்நேரமும் பகவானது அறிவுரைகளைப் படித்துக் கொண்டும், அவற்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டும் ஒரு தீவிர அன்பர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒரு சமயம், வேறொரு மாமுனிவரின் அறிவுரையைப் படிக்கிறார். படித்ததும் சமாதியடைந்துவிடுகிறார். ஆனால், அவரது வினைத்தொகுதி இன்னமும் முழுவதும் தீரவில்லை. ஆகையால், அவரால் அந்நிலையில் தொடர்ந்து நீடிக்க முடியாது. சமாதியில் இருக்க வேண்டிய காலம் முடிந்ததும், மாயை தனது வேலையைக் காட்டும்.

"பகவானின் அறிவுரைகளால் அல்லவா இங்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். இப்படி வேறாரு பெருமானின் அறிவுரையால் வந்திருப்பது பகவானது புகழுக்கு இழுக்கல்லவா?" என்று தூபம் போடும். இவரும், தான் ஏமாற்றப்படுவது அறியாமல், "ஆம். இதுவும் சரிதான். பகவானது அறிவுரைகளால் மீண்டும் இங்கு வந்து சேருவோம்." என்று எண்ணிக் கொண்டு புறமுகமாகிவிடுகிறார். இதன் பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார். அடுத்த முறை, வினைத்தொகுதி முழுவதும் தீர்ந்து, மீண்டும் சமாதியடைகிறார். இம்முறை மாயை தனது வேலையைக் காட்டினாலும் ஏமாறமாட்டார், கண்டுகொள்ளமாட்டார். பற்றிக்கொள்வதற்கு ஒருவரும் இல்லாததால் எழுந்த மாயை அடங்கிவிடும்.

முதல் முறை, நமது அன்பரை புறமுகப்படுத்திய இறையாற்றலை சைவத்தில் #சிவகாமி, #காமாட்சி என்றும், வைணவத்தில் வெண்ணெய் திருடிய #கண்ணன் என்றும் அழைப்பர்! அடுத்த முறை, அன்பரால் ஒதுக்கித் தள்ளப்பட்டு, அடங்கிய இறையாற்றலே #மன்மதன் எனப்படும். ஒதுக்கித் தள்ளப்பட்ட செயலே மன்மதனை எரித்ததாகும் (#காம #தகனம்)!!

(நம் நாட்டில் பல சமயப் பிரிவுகள் இருந்தன. ஒருவர் பெண்ணாக பார்த்ததை இன்னொருவர் ஆணாக பார்த்திருக்கிறார். மற்றொருவர் அதை ஆண்-பெண் (மன்மதன்-ரதி) என்று மேற்கொண்டு பிரித்திருக்கிறார். இவை எல்லாம் பிற்காலத்தில் இணைந்து, ஒன்றுக்குள் ஒன்றாகி விட்டன.  "மன்மதன் என்ற சொல் எதைக் குறிக்கிறது?" என்று சிந்தித்தால் போதும். "ஏன் மன்மதன்-ரதி என்று பிரித்தார்கள்?" என்று சிந்தித்தால் ஓரளவிற்கு மேல் பதில் கிடைக்காது. எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணங்கள் மனிதனின் ஆணவம், சுயநலம் மற்றும் தேவை என்பதை நினைவில் கொண்டால் போதுமானது.)

🔸கூடலில் சங்கத்தாருடன் தமிழை ஆய்ந்தமலை

கடல் கொண்ட தென்மதுரையில் நடந்த #முதல் #தமிழ் #சங்கம் சிவபெருமானின் தலைமையில் நடந்த வரலாறு.

சிவபெருமான் என்பது தன்னையுணர்ந்த மெய்யறிவாளரைக் குறிக்கும் என்று முன்னமே பார்த்தோம். ஆணவம் சிறிதுமற்ற, பொய் சொல்ல தேவையற்ற, மனிதப்பிறவியின் நோக்கமறிந்த இத்தகையோர் உருவாக்கிய மொழி என்பதால் தான் நம் அன்னைக்கு நிறைமொழி என்று பெயர்!!

இப்பெருமான்கள் நமது மொழியை மட்டுமல்ல, நமது வாழ்க்கைமுறை, கலாச்சாரம், உணவு, உடை, இருப்பிடம், மருந்து, இவற்றை அடிப்படையாகக் கொண்ட தொழில்கள் என அனைத்தையும் உருவாக்கி/சீர்செய்து கொடுத்தவர்கள். ஆரியத்தில் சத்ய யுகம் என்று ஒரு காலப் பகுதிக்கு பெயரிட்டிருப்பார்கள். இக்காலத்தில் பிராமணர்கள் ஆண்டார்கள் என்பார்கள் (பிராமணர் - பிரம்மத்தை அறிந்தவர் / பிரம்மமாய் இருப்பவர் - மெய்யறிவாளர்கள்). இது, அவர்களது தாயகமான ரிஷிவர்ஷாவில் (இன்றைய சைபீரியா-ரஷ்யா) நடந்ததோ இல்லையோ, நமது புண்ணிய பூமியில் நடந்துள்ளது.

அன்று சிவபெருமானை ஆட்சியில் வைத்த நாம், இன்று கொள்ளையர்களை ஆட்சியில் வைத்திருக்கிறோம்! 😔 காலம் மாறும். என்றும் வாய்மையே வெல்லும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Wednesday, July 8, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #53: தாயான உண்ணாமுலையம்மை & பாகம்பிரியாள் - சிறு விளக்கம்

மூலமுதல் உண்ணா முலைஎன்றும் அன்பருக்குச்
சாலவரம் ஈந்தருளும் தாய்என்று - நாலுமறை
பேசுமலைப் பாகம் பிரியாச் சிவஞான
வாசமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #53

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸மூலமுதல் ... நாலுமறை பேசுமலை

மேலோட்டமாகப் பார்த்தால், "ஒரு தாய் போன்று, உண்ணாமுலையம்மை நாம் கேட்பதையெல்லாம் தந்திடுவார் என்று நான்மறைகள் கூறுகின்றன." என்ற பொருள் கிடைக்கும். ஆனால், இது சரியா? கேட்பதையெல்லாம் கொடுப்பவர் தாயா? பிள்ளை கேட்பதையெல்லாம் கொடுத்துக் கொண்டேயிருந்தால் பிள்ளையின் நிலை என்னவாகும்? அனைத்தும் உணர்ந்த குருநமச்சிவாயர் 🌺🙏🏽 இந்தப் பொருளில் பாடியிருக்க வாய்ப்பில்லை.

🔹மூலமுதல் உண்ணாமுலை - எண்ணங்களற்ற நிலையில் உள்ளோர் - பகவான் 🌺🙏🏽 போன்ற மெய்யறிவாளர்கள்.

🔹சாலவரம் - சிறந்த வரம் - மெய்யறிவாளர்கள் தங்களை நாடிவருவோருக்கு என்றும் ஈந்தருளும் ஆன்ம அறிவு.

🔹நாலுமறை - முந்தைய வெண்பாவில் பார்த்தது. மறை என்பது உபநிடதங்களைக் குறிக்கும். நாலுமறை பேசும் மலை - உபநிடதங்களிலுள்ள பேருண்மைகளை வழங்கிய மாமுனிவர்கள்.

தங்களை நாடிவரும் அன்பர்களுக்கு என்றுமே ஆன்ம அறிவு வழங்கும் மெய்யறிவாளர்கள் (உண்ணாமுலையர்கள்) தாய் போன்றவர்கள் என்று பேருண்மைகளைக் கண்டுணர்ந்த மாமுனிவர்கள் கூறுகிறார்கள் என்று பாடுகிறார் ஆசிரியர்.

🔸பாகம் பிரியாச் சிவஞான வாசமலை

சிவ + ஞானம் - இருப்பு + அறிவு - தன்மையுணர்வு.

#பாகம் #பிரியாள் - உமையன்னை.
பாகம் பிரியாச் சிவஞானம் - நாம் காணும் உலகமும் நாமும் வேறு வேறல்ல.

"முதலில் ஒருவன் தான் உடலல்ல என்பதை தெரிந்து கொள்ளட்டும். பின்னர், எல்லாமும் தானே என்பதை தெரிந்து கொள்ளட்டும்." என்பது பகவானது வாக்கு.

கனவும், அதைக் காண்பவனும் வேறு வேறல்ல. காண்பவனிடம் உள்ளவற்றால் உருவானது தான் கனவு. அவனேதான் அது. இவ்வாறே நனவும். காண்பவை யாவும் நம்முள்ளிருந்து உதிப்பவை. நாம் எதனால் ஆகியிருக்கிறோமோ அதே பொருளால் ஆனது தான் காண்பவையும். காண்பவையும் நாமே. கனவைக் காண்பவனிடமிருந்து பிரிக்கமுடியாது. இவ்வாறே நனவும். காண்பவையே பாகம் பிரியாள்.

கனவும் நனவும் நம் விதிப்படி உதிக்கும், உதிக்காமலிருக்கும். ஆனால், நாம் எப்போதும் நாமாகத்தான் இருக்கிறோம். இந்த உண்மையை உணரவேண்டும்.

கனவு காணும்போது, காண்பவனுக்கு, "தான் கனவு காண்கிறோம்" என்ற அறிவு இருந்தால் போதும். அவன் கனவால் பாதிப்படையமாட்டான். கனவை ரசிப்பான். இவ்வாறே நனவிலும், "காண்பவை தோற்ற மாத்திரமே" என்ற அறிவிருந்தால் போதும். காட்சிகளால் பாதிப்படையமாட்டோம்.

ஏதேது வந்தாலும் ஏதேது செய்தாலும்
ஏதேதில் இன்புற்று இருந்தாலும்
ஏதேதும் தானாகா வண்ணம்
தனித்திருக்கும் ஞானாகாரம் தானே நாம்

-- திரு நடனானந்தர் 🌺🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Monday, July 6, 2020

தமிழுக்கு மாறுங்க, பூசாரிகளே!!

🔹#நைவேத்யம் என்பது படையல் / திருவமுது என்று இருக்கவேண்டும்

🔹#அபிஷேகம் என்பது திருமுழுக்கு / புனலாட்டு என்று இருக்கவேண்டும்

🔹#வேத #பாராயணம் என்பது திருமுறை மற்றும் திருமறை ஓதுதல் / ஓதுகை என்று இருக்கவேண்டும்

இது போன்று அந்தந்த மாநிலத்தில் உள்ள மொழிகளைப் பயன்படுத்த வேண்டும். ஆரிய இடைச்செருகல் மற்றும் ஆரியத்தால் பூசி மெழுகுதல் போன்ற கைங்கர்யங்களில் ஈடுபடாது, அந்தந்த பகுதி மக்களாக மாறி, அந்தந்த பகுதி அடையாளங்களை தூக்கிப் பிடித்திருந்தாலே போதும் நம் சமயம் இன்றும் வலுவாக இருந்திருக்கும்; என்றும் வலுவாக இருக்கும்.

வடக்கிலிருந்து தமிழகம் வந்த சமண பௌத்த மதங்களில் சமணமே வெற்றி பெற்றது. சரியாக கல்லா கட்டியது. காரணம்... தமிழ்! சமணம் தனது கொள்கைகளைத் தமிழில் வழங்கியது. பௌத்தமோ ஆரியத்தையே இறுகப் பிடித்துக் கொண்டிருந்தது. இதனால் சரியாக போனியாகவில்லை. இங்கிருந்த பௌத்த நிர்வாகிகள் இதை உணர்ந்திருந்தாலும் அவர்களால் ஏதும்செய்ய முடியவில்லை. காரணம்... களநிலவரம் உணராத வடக்கிலிருந்த தலைமை. பின்னர், ஆளுடையபிள்ளையாரும் 🌺🙏🏽 ஆதிசங்கரப் பெருமானும் 🌺🙏🏽 செய்த உழவாரப்பணியிலிருந்து தப்பித்து, மொட்டையை நாமமாக மாற்றிய பின் (ப்ளே ஸ்டோரில் ஒரு செயலியைத் தடை செய்தால், இன்னொரு பெயரில் அது மீண்டும் நுழைந்துவிடுவது போல), ஆரியத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழை முன்னிறுத்தினார்கள். வெற்றி பெற்றார்கள். இன்று வரை அவர்களது திருவிழாக்களில், தமிழ் பாசுரங்களைப் பாடிக் கொண்டு ஒரு குழு முன்னே செல்ல, பின்னர் தான் பெருமாளே வருவார். கற்ற பாடம்!!

ஏமாற்றுக்கார பாவாடைகளும், சதிகார பான்பராக் சட்டைகளும், ஒழுக்கங்கெட்ட கூவஞ்சட்டைகளும் தமிழை நன்றாகவே பயன்படுத்துகிறார்கள். தொழில் செய்தவளுக்குப் பிறந்து, அக்காள் மகளை வைத்து தொழில் செய்து கொண்டிருந்தவன் சி.ஐ.ஏ. & பாவாடை பணத்தையும் தனது பேச்சாற்றலையும் முதலாக வைத்து ஆரம்பித்த தொழில் பெரும் வெற்றி பெற்றதும் தமிழால் தான். (மொழி பயன்பாட்டை பொறுத்தவரை, காட்டுமிராண்டிகள் 'ஙே' ரகம் தான். ஆரியர்களை பார்த்து சூடு போட்டுக் கொண்டவர்கள். இவர்களுக்கு இதெல்லாம் சரி வருமா? ஒரு நாள் எரிபொருள் தீரும். மீண்டும் குதிரையும் வாளும் பயன்பாட்டிற்கு வரும். அப்போது பார்த்துக்கொள்வார்கள். இறைவன் மிகப்பெரியவன். 😁)

கூகுள் இன்று மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்து நிற்க காரணம் ஆங்கிலத்தை விட்டு வெளியே வந்ததால்தான்! மொழிகளில் பரத்தையான ஆங்கிலத்தை மட்டும் பிடித்துக் கொண்டிருந்தால், "பெற்றத் தாயை விட, அப்பனின் கூத்தியாள் சிறந்தவள்" என்ற மாயைக்குள் சிக்கியிருக்கும் சிறு கூட்டத்தை மட்டுமே வாடிக்கையாளர்களாக பெற்று, ஒரு சிறு தொழிற்நுட்ப நிறுவனமாகவே இருந்திருக்கும். இது, முகநூலுக்கும் பொருந்தும்.

மேற்கண்ட அனைத்திலிருந்தும் பாடம் கற்க வேண்டும்.

"ஐரோப்பாவில், பாகன் மதத்தினர் பல சிறு குழுக்களாகப் பிரிந்து கிடந்ததால் தான், பாவாடை மதத்தினர் அவர்களை எளிதாக அழித்தொழித்தனர். ஆகையால், நாமும் குழுக்களாக பிரிந்து நிற்காமல், இந்து சமயம் என்ற ஒரே குடையின் கீழ் நிற்க வேண்டும்." என்ற வாதம் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். ஆனால், இதற்காக தமிழை, திருமுறைகளை, சேர சோழ பாண்டிய பல்லவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, வாந்தியை, ஆரியத்தை, திருமறைகளை, அசோக கனிஷ்க ஹர்ஷவர்தன குப்தர்களைத் தூக்கிப்பிடியுங்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

"உள்ளூருக்கு 80% வெளியூருக்கு 20%" என்பதே எல்லாப் பகுதியினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வெற்றி சூத்திரமாக இருக்கும்.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

(மேற்சொன்ன #ஐரோப்பிய #பாகன் செய்தியை வைத்து எழுதப்பட்டிருந்த முகநூல் இடுகையொன்றை நண்பர் அனுப்பியிருந்தார். அவருக்கு அனுப்பிய பதிலை சற்று விரிவாக்கி இந்த இடுகையை ஆக்கியுள்ளேன். பொருளாதார கணக்கில் மட்டுமே எழுதியுள்ளேன். நியாய மற்றும் நன்றி கணக்குகளை தவிர்த்துள்ளேன்.)

Saturday, July 4, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #52 - சோதிர்லிங்கம், தொல்மறை - சிறு விளக்கம்

தில்லைவனம் காசி திருவாரூர் தென்மதுரை
நெல்லையிலும் பேர்ஒளியாய் நின்றமலை - தொல்லைமறை
பாடுமலை சந்ததமும் பத்தர்அகம் மேவிநடம்
ஆடுமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #52

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸தில்லைவனம் ... பேர்ஒளியாய் நின்றமலை

தில்லை, காசி, திருவாரூர், மதுரை மற்றும் நெல்லை ஆகிய இத்திருத்தலங்களில் சமாதியடைந்திருக்கும் திருமூலர் 🌺🙏🏽, நந்திதேவர் 🌺🙏🏽, கமலமுனி 🌺🙏🏽, சுந்தரானந்தர் 🌺🙏🏽 மற்றும் நெல்லையப்பர் 🌺🙏🏽 (உண்மையான பெயர் தெரியவில்லை) ஆகிய மாமுனிவர்கள் சகஜ சமாதியில் இருந்தவர்கள் என்று பாடுகிறார் குருநமச்சிவாயர் 🌺🙏🏽.

பேர்ஒளியாய் - ஒளிமயமாய் - மெய்ப்பொருளாய் (மெய்ப்பொருளே ஒளி எனப்படும்). மெய்ப்பொருளாகவே இருந்தவர்கள். சகஜ சமாதியில் இருந்தவர்கள். ஒளியுடல் கொண்டவர்கள். ஆரியத்தில், சோதிர்லிங்கங்கள் எனப்படும் (சோதி - ஒளி, லிங்கம் - உடல்).

சோதிர்லிங்கம் எனில் நமக்கு 12 என்ற எண் நினைவுக்கு வரும். உடன், "தமிழகத்தில் உள்ள ஒரேயொரு சோதிர்லிங்கத் தலம் இராமேச்சுரம்" என்ற வரியும் நினைவுக்கு வரும். 😁 இந்த பட்டை நாமம் வடக்கிலிருந்து போடப்பட்டது. மிகவும் தொன்மையானதும், உலக மதங்களின் தாயாகிய இந்து சமயத்தின் பிறப்பிடமுமாகிய தமிழகம் ஒரேயொரு ஒளியுடலாரைத் தான் பெற்றெடுத்தது என்பதை ஏற்கமுடியாது! (விட்டால், ரிஷிவர்ஷாவிலிருந்து அவர்கள் வந்துசேர்ந்தபோது, இங்கு தமிழர்களில் ஒருவர்தான் கோவணமே கட்டியிருந்தார் என்று சொன்னாலும் சொல்வார்கள்!! 😏)

சில திருத்தல வகைகள்:

🔹சுயம்புத் தலங்கள் - எந்த மெய்யாசிரியரின் வழிகாட்டுதல் இல்லாமல் தாமாகவே மெய்யறிவைப் பெற்ற மாமுனிவர்களின் சமாதிகள்

🔹குருத்தலங்கள் - இத்தலங்களில் சமாதி அடைந்துள்ள மாமுனிவர்கள், தாங்கள் உடல் தாங்கியிருந்த காலத்தில் கல்விச்சாலைகளை நடத்தியிருப்பார்கள்; சிறந்த ஆசிரியர்களாக இருந்திருப்பார்கள்.

🔹வீரட்டத் தலங்கள் - இத்தலங்களில் சமாதியடைந்துள்ள மாமுனிவர்கள், அறியாமை இருள் விலகி நிலைபேறு அடையும் வரை தமக்குள் நடந்த நிகழ்வுகளை மிக நுணுக்கமாக கண்டுணர்ந்து வெளியிட்டிருப்பார்கள். அவர்கள் வெளியிட்ட பேருண்மைகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கும். திருக்கடவூரில் சமாதியாகி இருக்கும் திரு மார்கண்டேய மாமுனிவர் 🌺🙏🏽 இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாவார். மெய்யறிவு வெளிப்படும் விதத்தைக் கண்டுணர்ந்து இவர் வெளியிட்ட பேருண்மை தான் சிங்கப்பெருமாள், முருகப்பெருமான், சிவனுமைமுருகு (சோமாஸ்கந்தர்) ஆகிய திருவுருவங்களுக்கு அடிப்படையாகின்றது.

அண்மையில் நம்மிடையே வாழ்ந்த பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 ஒரு சிறந்த ஒளியுடலார் ஆவார். யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் நிலைபேற்றினை அடைந்ததால் இவர் சுயம்புத் திருமேனி உடையவராகிறார்.

🔸தொல்லைமறை பாடுமலை

தொல்லைமறை - பழமையான ஆரிய மறை நூல்கள். அணு, பிண்டம், அண்டம் என எல்லாவற்றின் தோற்றம், இயக்கம், மறைவு பற்றி, பன்னெடுங்காலமாக, நமது மாமுனிவர்கள் கண்டுணர்ந்து வெளியிட்ட தகவல்களை மறைத்து வைத்திருக்கும் தொகுப்பு. ஒரு எடுத்துக்காட்டு. காஷ்யப முனிவர் எல்லா உயிர்களுக்கும் தந்தை என்று பதிவு செய்திருப்பார்கள். இதன் உண்மையான பொருள் ஈரப்பதமே (காஷ்யபர்) உயிர்கள் தோன்றுவதற்கு அடிப்படை என்பதாகும்!! மேற்கத்திய அ'ழி'வியல் கடந்த 300 ஆண்டுகளில் "கண்டுபிடித்த" கோட்பாடுகளை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் மாமுனிவர்கள் கண்டுணர்ந்துள்ளனர். 💪🏽

திருமறைகளுக்குள் பல பகுதிகள் அடங்கியிருந்தாலும், அவற்றிற்கு மங்காத புகழ் சேர்ப்பது ஆன்ம அறிவியலைப் பற்றிய உபநிடதங்களே. இந்த வெண்பா பாடலில் "மறை" என்ற சொல்லின் மூலம் ஆசிரியர் குறிப்பது இந்த உபநிடதங்களைத் தான்!

ஏனெனில், இதன் பின்னர் "பாடும்" என்று தான் பாடியிருக்கிறாரே தவிர "பாடிய" என்று பாடவில்லை. பாடும் என்ற சொல் நிகழ்காலத்தையும் குறிக்கும்; எதிர்காலத்தையும் குறிக்கும். முன்னொரு காலத்தில் தனக்குள் மூழ்கிய ஒரு மாமுனிவர் "நீயே அது" (தத்வமஸி) என்ற முத்தையெடுத்துக் கொடுத்தார். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ரமண மாமுனிவர் "தன்மையின் உண்மையை தான் ஆய தன்மை அறும்" என்ற முத்தையெடுத்துக் கொடுத்தார். இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சரி, தனக்குள் மூழ்கும் ஒரு மாமுனிவர் இதே போன்றொரு முத்தைத்தான் வெளிக் கொணருவார். எனவே தான் "பாடும் மலை" என்று பாடினார் ஆசிரியர்.

தொல்லை மறை பாடும் மலை - என்றும் ஆன்மாவை/மெய்ப்பொருளை/நிலைப்பேற்றைப் பற்றியே பாடும் சிவம்! 🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Thursday, July 2, 2020

திருவாசகம் - மாணிக்கவாசகப் பெருமான் 🌺🙏🏽 சொல்ல, திருச்சிற்றம்பலமுடையான் 🌺🙏🏽 எழுதியது!!

மேலுள்ள படத்தைப் பார்த்ததும் இவ்விடுகையின் தலைப்பு தான் நினைவுக்கு வரும்! உடனே, பெரும்பாலானோர், கூத்தபிரானே மனித உரு தாங்கி வந்து, மணிவாசகர் பாடியதை சுவடிகளில் பதிவு செய்தார் என்று கற்பனை செய்துகொள்வார்கள். 😊 இது தவறு.

இங்கு கூத்தபிரான் எனில் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 போன்று தன்னையுணர்ந்த மாமுனிவர் என்று பொருள். மணிவாசகர் தில்லையில் சமாதியடைந்ததால் அம்பலவாணர் என்று குறிப்பிட்டுள்ளனர். பெருமான் வேறெங்காவது சமாதி அடைந்திருந்தால் அத்தலத்து இறைவனைக் குறிப்பிட்டிருப்பர்.

உண்மையில் நாம் எல்லோருமே அம்பலவாணர்கள் தான்! அம்பலத்தை ஆளும் வாணர்கள்!! இதை நாம் உணர்வதில்லை. நம் கண் முன்னே பரந்து விரியும் இந்த உலகமாகிய அம்பலம் நம்முள்ளிருந்து தான் உதிக்கிறது. இந்த அம்பலத்தில் தோன்றும் காட்சிகளோ பல பிறவிகளாக நாம் ஆடிய, ஆடிக் கொண்டிருக்கின்ற கூத்துகளின் விளைவுகள்.

எப்படி இந்த கூத்தை நிறுத்துவது? இதற்கான விடையை திருவாலங்காட்டில் கூத்தாடும் திரு இரத்தினசபாபதி பெருமானின் திருவுருவத்தில் காணலாம்.

(இரத்தினசபாபதி பெருமானுடன் இருக்கும் அம்மையின் பெயர் "அருகிலிருந்து வியந்த அம்மை"! பெயரே எவ்வளவு அழகு!! 😍)

பல காலமாக காளியன்னையுடன் போட்டி நடனமாடும் பெருமான், ஒரு சமயத்தில் தான் அணிந்திருக்கும் காதணியைத் தானே தன் காலால் கழற்றுகிறார். பெருமான் வென்றுவிடுகிறார். நடனம் முடிந்துவிடுகிறது.

🔹காளியன்னை - மாயை. பெருமான் - நாமே!!

🔹அன்னையுடன் பெருமான் ஆடும் நடனம் - ஒரு விதத்தில், உலக வாழ்க்கை. இன்னொரு விதத்தில், தன்னாட்டம் தவிர்த்து மீதமுள்ள அனைத்து ஆன்ம பயிற்சிகள்.

🔹காதணியைக் கழட்டுவது - புறமுகப் பார்வையை தன் மீது திருப்புவது. தன்னை நாடுவது. தன்னாட்டம். "தன்மையின் உண்மையைத் தான் ஆய தன்மை அறும்" என்பது பகவானது வாக்கு. இச்சொற்றொடரின் உருவ வடிவம் தான் இரத்தினசபாபதி பெருமான்!! 🌺🙏🏽😍

ஆக, நாம் விரும்பினால், முயன்றால் மட்டுமே நாம் ஆடும் கூத்தை நிறுத்த முடியும்.

நம் ஒவ்வொருவரது ஆன்ம பயணமும் ஒரு திருவாசகம் தான்! அதை எழுதும் சிற்றம்பலமுடையவர்களும் நாம் தான்!!

oOOo

திருவாசகத்தின் இறுதிப்பாடல்:

செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்
நம்மையுமோர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மை எனக்கருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

(சிதடரொடு - குருடரோடு - மெய்ப்பொருள் பற்றி அறியாதோர். நாய் சிவிகை - நாயுருவி சிவிகை - ஆணவமற்ற பேறு - நிலைபேறு. நாயுருவி உடல் வீக்கம் போக்க வல்லது. இங்கு வீக்கம் என்பது ஆணவம்.)

பொருள்: திருநெறியைப் பற்றி அறியாத அறிவிலிகளோடு கூடித் திரிகின்ற என்னை, யாவற்றிற்கும் முதல்வனாகிய எம்பெருமான் மும்மலங்களையும் அறும்படி செய்து, என்னையும் ஓர் பொருளாக்கி, நாயுருவிச் சிவிகையில் ஏற்றுவித்த அழகன் (அல்லது, தாய் போன்றவர்) எனக்கருளிய வழியினை/விதத்தை பெறவல்லார்/ஏற்றுக்கொள்பவர் வேறு யார்?

(நால்வர் துதியில் மணிவாசகப் பெருமானைக் குறிக்கும் அடைமொழி - ஊழிமலி!! "செத்து செத்துப் பிழைத்தவர்" என்பது பொருள். எனவே தான் "எனக்கருளிய ஆறு ஆர் பெறுவார்" என்று பாடியிருக்கிறார்! இப்பெருமானும் அப்பர் பெருமானும் 🌺🙏🏽 பட்ட துன்பங்கள் எண்ணிலடங்கா!!)

oOOo

ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி 🌺🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽