Saturday, February 1, 2020

மூவர்ணக் கொடியின் உண்மை நிறம்!! 🤬

ஆகஸ்ட் 15 / ஜனவரி 26 வந்துவிட்டால் போதும், மூவர்ணக் கொடியைக் கொண்ட படங்கள் & காணொளிகளை சமூக வலைதளங்களில் சுற்ற விட்டு விடுகிறார்கள். இக்கொடியின் உண்மையான பொருள் தெரிந்தால் நம்மில் பலர்... 😤😠🤬😡

- காவி நிறம் இந்துக்களைக் குறிக்கும்.

- பச்சை நிறம் காட்டுமிராண்டிகளைக் குறிக்கும்.

- வெள்ளை நிறம் பாவாடைகளைக் குறிக்கும்.

- நீல சக்கரம் மொட்டைகளைக் குறிக்கும்.

அதாவது, இந்த சமயத்தினரும் காட்டுமிராண்டிகளும் மோதிக் கொள்ளாமல் பாவாடைகள் தடுக்கிறார்களாம்!! இது நேரடி பொருள். இதனுள் இன்னொரு பொருளையும் வைத்திருக்கிறார்கள்: இந்துக்களும் காட்டுமிராண்டிகளும் மோதிக் கொள்ளாமல் நயவஞ்சக நரித்துவ பரங்கியர்கள் நம்மைக் காத்தார்களாம்!!

நம்மை ஏமாற்றி நம் தலையில் கட்டப்பட்டக் கொடியிது என்பது கூடத் தெரியாமல் நம்மில் பலர் இதுநாள் வரை கேவல நிலையில் இருந்துள்ளனர்! இருக்க வைத்துள்ளனர்!! 😡

Sunday, January 19, 2020

ஆன்ம பயிற்சியாளனுக்கு உதவும் பட்டினத்தார் பாடல்!! 🌺🙏🏽

சென்னை திருவொற்றியூர் திரு பட்டினத்தார் உடையாரின் 🌺🙏🏽 (சுவாமிகளின்) திருக்கோயில் வாசலில் கீழ்காணும் அவரது பாடல் எழுதப்பட்டிருக்கும். ஆன்ம பயிற்சியில் ஈடுபட்டிருப்போருக்கு மிகவும் உதவக்கூடிய பாடலாகும்! 👌🏽

☀️ பதம் பிரிக்காமல்:

நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்புபொம்ம
லாட்டமென் றேயிரு பொல்லாவுடலை அடர்ந்தசந்தைக்
கூட்டமென் றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர்
ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்குப தேசமிதே

☀️ பதம் பிரித்து:

நாட்டம் என்றே இரு சற்குரு பாதத்தை நம்பு
பொம்மலாட்டம் என்றே இரு பொல்லா உடலை அடர்ந்த சந்தைக்
கூட்டம் என்றே இரு சுற்றத்தை வாழ்வை குடங்கவிழ்நீர்
ஓட்டம் என்றே இரு நெஞ்சே உனக்கு உபதேசம் இதே

🌼 நாட்டம் என்றே இரு

நாட்டம் எனில் #தன்னாட்டம். தன்னை நாடுவது. எனில், கவன ஆற்றலை நான் எனும் தன்மையுணர்வின் மேல் வைப்பது. கவன ஆற்றல் எதன் மீது செலுத்தப்படுகிறதோ அதுவாக மாறிவிடுவோம். தன்மையுணர்வின் மீது செலுத்தும் போது அவ்வுணர்வாக, அவ்வுணர்வு மாத்திரமாக நிற்போம். இதைத் தான், "எதை நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்" என்று சொன்னார்கள்!!

(வழக்கம் போலவே, பரங்கியன் நம்மிடமிருந்து இதை தவறாக கற்றுக் கொண்டு போய், "நீ சூப்பர்மேன் ஆக வேண்டும் என்று உறுதியாகவும் தொடர்ந்தும் எண்ணிக் கொண்டிருந்தால் சூப்பர்மேன் ஆகிவிடுவாய்" என்று சுய முன்னேற்ற நூல்கள் எழுதி, உலகத்துக்கே நாமம் போட்டு, காசு பார்த்துவிட்டான். சூப்பர்மேன் ஆக வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தால் சூப்பர்மேன் ஆகிவிடுவோம் - எதாவது ஒரு பிறவியில் - அதற்கான விலையை கொடுத்த பிறகு. சூப்பர்மேன் ஆன பிறகு தான் தோன்றும், "இது நமக்குத் தேவையா?" என்று 😛. இதிலேயும் நிம்மதி கிடைக்கவில்லையே என்று போய் நின்றால், "நீ தேடும் நிம்மதி எங்க ஓனர் தர்றாரு" என்று அடுத்த பிட்டைப் போட்டுக் காசு பார்ப்பான் பரங்கியன்!! 😂)

🌸 சற்குரு பாதத்தை நம்பு

"மெய்ப்பொருளை உணர்ந்த மாமுனிவரின் அறிவுரைகளை / வழிகாட்டுதலை நம்பு", என்று பெரும்பாலும் பொருள் கொள்வோம். இதில் தவறு இல்லையெனினும், இதற்கு வேறொரு அருமையான விளக்கத்தை பகவான் திரு #ரமண #மாமுனிவர் 🌺🙏🏽 தந்தருளியிருக்கிறார்.

தினமும் பகவானிடம் வந்து, சிரமப்பட்டு அவர் முன் விழுந்து வணங்கிவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் ஒரு நாள் பகவான், "உண்மையான சற்குருவின் பாதம் உனக்குள்ளே தன்மையுணர்வாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அதை இறுகப் பற்றிக் கொள். எதற்கு இந்த சர்க்கஸ் வேலையெல்லாம்?" என்று அறிவுறுத்தினார். ☺️

தன்மையுணர்வை இறுகப் பற்றுதல் என்பது நமது கவன ஆற்றலை நம் மீதே திருப்புவதாகும். இத்தன்மையுணர்வே #சற்குரு, #இறைவன், #கடவுள், #பரம்பொருள், #மெய்ப்பொருள் என எல்லாமாகும். இப்பொருள் மட்டுமே என்றும் நிலைத்திருக்கக் கூடிய உண்மை. இப்பொருளை நம்பினால் மட்டுமே கரையேற முடியும்.

🏵️ பொம்மலாட்டம் என்றே இரு

மொத்த உலக வாழ்க்கையும் பொம்மலாட்டம் தான். இன்செப்ஸன் (Inception) என்ற அமெரிக்க திரைப்படத்தில், ஒருவரது கனவுலகை மற்றவருடன் பகிரக் கூடிய கருவியின் உதவியுடன், தானே தோற்றுவித்த தனது கற்பனை-கனவுலகத்தில், தனது ஆழ்மனது தோற்றுவித்த தனது இறந்து போன மனைவியின் உருவத்தைக் கண்டு நாயகன் டாம் காப் (Dom Cobb) அல்லல்படுவது போன்றது தான் இந்த வாழ்க்கை. இன்று நாம் காண்பவை, துய்ப்பவை யாவும் ஏதோ ஒரு பிறவியில் நாம் விரும்பியவையே (கெளதம புத்தர் 🌺🙏🏽). நாம் விரும்பியவை, அதற்காக செய்த செயல்கள், அவற்றின் விளைவுகள் என எல்லாவற்றையும் விரும்பிய கணக்கில் சேர்த்துவிட்டார் புத்தர். "தீதும் நன்றும் பிறர் தர வாரா'' என்ற நம் முன்னோரின் வாக்கும் இதற்கு உரம் சேர்க்கிறது.

பட்டினத்தார் பொம்மலாட்டம் என்று குறிப்பிட்டதை, பகவான், "திரையில் தோன்றும் காட்சிகள்" என்றும், திருவரங்கத்து மூலவரான திரு அரங்கநாத அடையாளத்தின் கீழ் சமாதியாகியிருக்கும் சட்டைமுனி சித்தர் 🌺🙏🏽, "அரங்கனின் (இறைவனின்) அணிகலன்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளனர். (ஏனெனில், தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ விடுதலை (சமாதி) கிடைக்கும் தருணம், தோன்றும் காட்சிகள் நம்மை விட்டு விலகும் விதம் ஒருவர் அணிந்திருக்கும் அணிகலன்களை கழட்டும் விதமாக இருக்கும். இதனால், அணிகலன்கள் என்று  வர்ணித்திருக்கிறார் அரங்கர் (சித்தர்).)

🌻 பொல்லா உடலை அடர்ந்த சந்தைக்
கூட்டம் என்றே இரு

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நம் உடலின் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல்லாயிரம் கோடி நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. இவையில்லா விட்டால் நம்மால் வாழவும் இயலாது. இத்தனை கோடி உயிர்கள் வாழும் / கூடும் நம்முடலை சந்தைக் கூட்டமாக பார்த்திருக்கிறார் பட்டினத்தார்! 😊

(இது இருக்கட்டும். 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தாருக்கு, 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராபர்ட் ஹூக் மற்றும் அந்தோனி லீயுவென்ஹோயெக் என்ற பரங்கியன்களால் "கண்டுபிடிக்கப்பட்ட" நுண்ணுயிரிகள் பற்றி எப்படி தெரிந்தது? 🤔 சில பரங்கிப் படங்களில் வருவது போன்று பட்டினத்தார் 17ஆம் நூற்றாண்டிற்கு நேரப்பயணம் செய்து, ராபர்ட்டும் அந்தோணியும் "பாடுபட்டுக் கண்டுபிடித்ததை" தெரிந்து கொண்டு, அவரது காலத்திற்கு திரும்பிச் சென்று, அவரது பாட்டில் பதிவு செய்து விட்டு போயிருக்கிறார் என்று கருதுகிறேன். பரங்கியன்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னால் பட்டினத்தார் நுண்ணுயிர்கள் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை! என்ன ஒரு அநியாயம் செய்திருக்கிறார் பட்டினத்தார்!! 😤😠) 😛😝😆😂😂🤣

💮 சுற்றத்தை வாழ்வை குடங்கவிழ்நீர்
ஓட்டம் என்றே இரு

இதைப் பற்றி பேசவே தேவையில்லை. 😏 நம்மில் பலருக்கு இந்த பட்டறிவு நிறையவே இருக்கும். மாடு போட்டுவிட்டுச் செல்லும் சாணியில் கூட, பசை இருக்கும் வரை தான் புழுக்கள் இருக்கும். காட்டுமிராண்டிகள், உலக கொல்லிகளான பாவாடைப் பரங்கியர்கள், அவர்களின் அடிப்பொடிகள் என இன்று வரை சுரண்டலையும் பகல் கொள்ளையையும் தவிர வேறெதையும் கண்டிராத நம்மிடம் உயர்ந்த குணங்கள் நலிந்தும், பிச்சைக்காரத்தனம் மிகுந்தும் காணப்படுவதில் வியப்பில்லை. ஆனால், நிலைத்த வலுவான நியாயமான ஆட்சி நடந்து கொண்டிருந்த 11ஆம் நூற்றாண்டிலும் மக்கள் நம்மைப் போலவே குடங்கவிழ்நீர் ஓட்டமாக இருந்துள்ளனர் என்பது மிகுந்த வியப்பைத் தருகிறது!!

🌷 நெஞ்சே உனக்கு உபதேசம் இதே

இந்தப் பாடலில் வரும் இரண்டாவது ஆரியச் சொல்லான உபதேசம் (முதல் சொல் சற்குரு - சத்+குரு), அறிவுரை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அடிகளார் தன் நெஞ்சுக்கு கூறிக்கொள்ளும் அறிவுரைகள் இவை என்று எடுத்துக் கொண்டால், அடிகளார் வேறு, அவரது நெஞ்சம் வேறு என்றாகிறது. ஒரு ஆன்ம பயிற்சியாளர் தனது நெஞ்சுக்கு கூறிக்கொள்வது போல அடிகளார் பாடியிருக்கிறார் என்று எடுத்துக் கொண்டால், பயிற்சியாளர் வேறு, அவரது நெஞ்சம் வேறு என்றாகிறது. நாமே அந்த பயிற்சியாளன் என்று எடுத்துக் கொண்டால், நாம் வேறு, நமது நெஞ்சம் வேறு என்றாகிறது. எனில், நாம் யார்? நான் யார்?

(நம்மில் பலர், "நாம் யார்?" என்பதை உணர்ந்து விட்டால் எல்லாம் முடிந்துவிடும் என்று தவறான கருத்து கொண்டுள்ளனர். நம்மை உணர்ந்த பிறகு தான் போராட்டம் அதிகமாகும். அப்போது இப்பாடலின் அருமை புரியும்.)

🌷🌷🌷🌷🌷

பாரனைத்தும் பொய்யெனவே
பட்டினத்துப் பிள்ளையைப் போல்
ஆரும் துறக்கை அரிது

-- தாயுமானவர் 🌺🙏🏽, பாடல் #516

கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Thursday, January 16, 2020

தை 2 - திருவள்ளுவ நாயனார் நாள் 🌺🙏🏽

(1950களில் கூட புழக்கத்திலிருந்த திருவள்ளுவ நாயனாரின் திருவுருவம்)

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறுஎனின்அன்றென்ப ஆறு சமயத்தார் – நன்றுஎனஎப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்முப்பால் மொழிந்த மொழி

-- கல்லாடர்

👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

கல்லாடர் குறிப்பிடும் ஆறு சமயங்களில் நம் நாட்டை கொள்ளையடித்த, சீரழித்த, நம் முன்னோர்களைக் கொன்று குவித்த காட்டுமிராண்டித்துவமோ, நயவஞ்சக பரங்கியனின் நரித்துவமோ, இந்து சமய, சமூக, தேச விரோத & துரோக கூட்டங்களின் தாயகமான சிறியாரித்துவமோ இல்லை!! ஆதிசங்கரர் பிரித்து முறைப்படுத்திய சிவம், உமை, கணபதி, முருகன், பெருமாள் மற்றும் பகலவன் வழிபாடுகளையே சமயங்களாகக் குறிக்கிறார்.

Tuesday, January 14, 2020

அனைவருக்கும் எனது உளங்கனிந்த "🌧️☀️🐂🌾👳" வாழ்த்துக்கள்!!! 🙏🏽

"நிறைமொழி மாந்தர்" எனும் பெயர் பெற்ற உலகின் மூத்தக் குடியோனான தமிழனின் இயற்கையைப் பற்றிய பேரறிவின் விளைவே பொங்கல் விழாக்காலமாகும்!! அம்மூத்தோன் காட்டிய வழிச் சென்று, நல்லது - அல்லது என அனைத்தையும் அரவணைத்துச் செல்லும் போகியாகி, உள்ளம் எனும் பானையில் ஆனந்தம் எனும் பொங்கல் என்றும் பொங்கிட, வான்புகழ் பெற்ற வள்ளுவம் கூறும் உழவனைப் போல் வாழ்ந்து, மனிதப் பிறவியின் குறிக்கோளாகிய பிறவாமையை அடைந்திடுவோம் என இத்திருவிழாக் காலத்தில் உறுதி ஏற்போம்!!!

பிறப்பறுக்கும் அந்தப் பிஞ்ஞகன் 🌺🙏🏽 நமக்கு திருவருள் புரிந்து துணை நிற்கட்டும்!!!

🎆 🎉 🎊 🌈 ✨ 

Tuesday, December 31, 2019

ஆங்கில புத்தாண்டு எனப்படும் சொதப்பல் புத்தாண்டு!!! 😁😁 - மறுபகிர்வு (2020)

ஆங்கில ஆண்டு பிறப்பு...

👊🏽 அறிவியல் & வானவியல் அடிப்படை அற்றது,
👊🏽 இயற்கை சுழற்சிக்கு மாறானது, 
👊🏽 சூழலுக்கு பொருந்தாத கொண்டாட்டங்களைக் கொண்டது,
👊🏽 அடிமை மனப்பான்மையை வளர்ப்பது

ஆங்கில ஆண்டு பிறப்பை தவிர்ப்போம். நமது ஆண்டு பிறப்பைக் கொண்டாடி மகிழ்வோம். நமது பாரம்பரியம், வரலாறு, அடையாளங்களைக் காப்போம். தமிழன் என்று பெருமை கொள்வோம். 👍🏽

"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே"

🌸🏵️🌼🌻💮

சென்றமுறை (2019) சற்று தாமதமாக சில தினங்களுக்குப் பின் நான் எழுதிய இடுகையை, இம்முறை (2020) ஒரு நாள் முன்பாகவே மீண்டும் பதிவிடுகிறேன். நன்றி!! 🙏🏽

🌸🏵️🌼🌻💮

ஆங்கில புத்தாண்டு எனப்படும் சொதப்பல் புத்தாண்டு!!! 😁😁


தி #மேட்ரிக்ஸ் (#The #Matrix) என்ற படத்தில் ஒரு காட்சி. சைஃபர் என்பவரும் ஏஜென்ட் ஸ்மித் என்பவரும் கனவுலக உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருப்பார்கள். சைஃபர் கனவுலகத்திலிருந்து எழுப்பப்பட்டவர். மீண்டும் கனவுலகத்திற்கு திரும்ப முயல்பவர். ஸ்மித், கனவுலகத்திலிருந்து யாரும் எழாமலும், எழுப்ப முயல்வர்களை தடுக்கவும் செய்பவர்.

சைஃபர்: இந்த இறைச்சித் துண்டு உண்மையில் இல்லை என்று எனக்குத் தெரியும். இதை வாயில் போடும் போது, இது மிருதுவாகவும் சுவையாகவும் இருப்பதாக மேட்ரிக்ஸ் (மாயை) எனது மூளைக்குத் தகவல் கொடுக்கிறது என்பது எனக்குத் தெரியும். கனவிலிருந்து விழித்த இந்த 9 ஆண்டுகளில் நான் உணர்ந்தது என்ன தெரியுமா? (இறைச்சித் துண்டை வாயில் போட்டு, சற்று மென்று, ரசித்து ருசித்து விட்டு) அறியாமையே சுகம்!!

🏵️🌼🌻

கடந்த 20+ வருடங்களில் ஆரிய, ஆங்கிலேய, போலி திராவிடப் போர்வைகளைக் கிழித்துக் கொண்டு எத்தனையோ உண்மைகள் வெளிவந்துவிட்டன. இவற்றில் சிலவற்றையோ அனைத்தையுமோ அறிந்து கொண்டும், பரங்கியரின் சொதப்பல் #ஆண்டு பிறப்பைக் கொண்டாடும் தமிழர்கள் மேற்கண்ட சைஃபருக்கு சமமானவர்கள் - இழிவானவர்கள்! துரோகிகள்!! 👊👊👊

🏵️🌼🌻

வானவியலில் நம் முன்னோர்கள் முன்னோடிகள் என்பதற்கு சில சான்றுகள்:

🌋 எந்நாளில் பகல் உச்சிப் பொழுதில்,  பகலவன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது, நம் நிழல் சிறிதும் சாயாமல் நம் மேலே விழுகிறதோ, அந்நாளே வருட பிறப்பாக எடுத்துக் கொண்டனர் நம் முன்னோர்கள்!! 👏👏 இது கடல் கொண்ட தென்மதுரையில் வைத்து கணக்கிடப்பட்டது. (ஆகையால், சித்திரை முதல் நாளன்று பூமியின் எப்பகுதியில், உச்சிப் பொழுதில் ஒரு பொருளின் நிழல் சாயாமல் அதன் மீதே விழுகின்றதோ அப்பகுதியே #தென்மதுரை!) 

இந்த துல்லியமான முறையினால் ஒவ்வொரு ஆண்டும் முழுதாக முடிவடையும். ஆனால், பரங்கி ஆண்டு முழுமையாக முடிவடைவதில்லை. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 நாளை சேர்க்கின்றனர். இதற்கும் பல விதிகள் உண்டு (4ஆல் வகுபட வேண்டும், 100ஆல் வகுபட்டாலும் 400ஆல் வகுபட வேண்டும், 400ஆல் வகுபட்டாலும் 4000ஆல் வகுபடக்கூடாது, ...😲). இன்றைய நிலையில் மீண்டும் பரங்கி ஆண்டு சீராவது கி.பி. 4000 வருடத்தில் தான். (பரங்கி ஆண்டை "சொதப்பல் ஆண்டு" என்று அழைப்பதற்கு இதை விட வேறு என்ன சிறந்த காரணம் வேண்டும்? 😛)

🌋 நம் முன்னோர்களின் ஆண்டு கணக்கிற்கு, தன் தாவர குழந்தைகளை பூக்க விட்டு, இயற்கை அன்னையும் ஆமோதிக்கின்றார்!! 😄 மழைக்காலத்திற்குப் பின்னர் அழுகிய வேர்க்களை செப்பனிட்டு, புதிய வேர்களை உருவாக்கி, புது சத்துக்களை உறிஞ்சி, அடுத்த சுழற்சிக்காக தாவர உலகம் புதிய பூக்களை பூப்பதும் நம் ஆண்டு பிறப்பு காலத்தில் தான்.

🌋 உலகிலுள்ள பெரும்பாலான ஆண்டு பிறப்புகள் இந்தக் கணக்கையே அடிப்படையாகக் கொண்டவை. பரங்கியரின் ஆண்டும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஏப்ரல் 1 அன்று தான் தொடங்கியது. மீண்டும் நம்முடன் ஏற்பட்டத் தொடர்பினால் தங்களது ஆண்டு கணக்கை திருத்திக் கொண்ட பரங்கியர்கள், தங்களது மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்ளவும், கிறித்துவத்தை முன்னிறுத்துவதற்காகவும், இஸ்ரவேல் அத்வைதி யேசு பிறந்தது ஜனவரி 1 என்று ஒரு நம்பிக்கை இருப்பதாலும், நம் பிள்ளையார் போல் கிரேக்கர்களின் ஜானஸ் கடவுள் அனைத்திற்கும் முதன்மையானவராக இருப்பதாலும் ஜனவரி 1-ற்கு மாற்றினர் (மாற்றியது அன்றைய போப் கிரிகோரியன்). அதை ஏற்றுக் கொள்ளாமல் ஏப்ரல் 1-ஐ ஆண்டு பிறப்பாக தொடர்ந்தவர்களை சம்பளத்திற்கு ஆள் வைத்து "முட்டாள்கள்" என்று ஏளனம் செய்ய வைத்தனர் பரங்கி மன்னர்கள்! 😂 (இங்கும் மன்னராட்சி இருந்திருந்து தை 1-க்கு மக்கள் மாறாமல் இருந்திருந்தால், அவர்களை முட்டாள்கள் என்று பறையறிவிக்க இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆட்களை சேர்த்திருப்பர்!! 😉).

🌋 சித்திரை 1-ஐ ஆண்டின் முதல் நாளாக நம் முன்னோர்கள் ஏற்றுக் கொண்டது அறிவின் அடிப்படையில். சூரியன் மேஷ ராசிக்குள் நுழைந்ததாலோ, ஆரியர்கள் திணித்ததாலோ அல்ல. இன்னும் சொல்லப்போனால், நம்மிடமிருந்து தான் ஆரியரும் ஏனையோரும் கற்றுக் கொண்டனர் எனலாம்! ஆரியர்களின் உத்திராயண-தட்சிணாயன கணக்கும் நம்முடையது தான்!!

அவர்களது பூர்விகமான ரிஷிவர்ஷாவில் (இன்றைய சைபீரியா போன்ற பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு ரஷ்யா) பகலவன் காட்சி தருவதே ஆண்டிற்கு சில நாட்கள் தான். குகைகளையும், கூடாரங்களையும் விட்டு தகுந்த பாதுகாப்பின்றி வெளிவந்தால் இரத்தம் உறைந்துவிடும் நிலை. இதில் எங்கிருந்து அயண ஆராய்ச்சி செய்திருக்க முடியும்? மேலும், உத்திராயணமும் தட்சிணாயனமும் சரியாக 6 மாதங்களாகப் பிரிவது பூமத்தியரேகைப் பகுதியில் தான் - நம் முன்னோர்கள் வாழ்ந்த தென்மதுரையில் தான்!! நம்மிடமிருந்து கற்றுக் கொண்டு, தமது என்று முத்திரை குத்தி, மீண்டும் நம் தலையிலேயே கட்டிவிட்டார்கள் (கோல்கேட்காரன் கரியையும், உப்பையும் அன்று கிண்டல் செய்து விட்டு, இன்று அவற்றைக் கொண்டே பற்பசை தயாரித்து நம்மிடம் விற்பது போல 😝).

🌋 "இவ்வளவு பாரம்பரியம், அறிவியல், வரலாறு இருந்தும் நம் மக்கள் ஏன் ஆங்கில புத்தாண்டன்று நம் திருத்தலங்களுக்கு செல்கின்றனர்?" என்ற கேள்வி எழலாம். அன்று, சமூகத்தின் முக்கிய நபர்கள் ஒவ்வொருவரும்  அவரவர் பகுதிக் கொள்ளைக் கூட்ட தலைவனை (பரங்கிப் பிரபு) சந்தித்து பூ மாலை, பழம், இனிப்பு போன்ற பரிசுகளை அளித்து வாழ்த்து சொல்ல / பெற வேண்டும். இந்த நச்சுப் பாம்புகளிடமிருந்து தப்பிக்க எண்ணிய நம் பெரியோர்கள் கண்டுபிடித்த வழி தான் ஆங்கில புத்தாண்டன்று நம் திருத்தலங்களுக்கு செல்வது. திருவள்ளிமலை சுவாமிகள் திருத்தணி படித்திருவிழாவை ஆரம்பித்ததும் இப்படித் தான். நம் சமய நம்பிக்கைகளில் தலையிடக் கூடாது என்பது கொள்ளைக் கூட்டத் தலைவியின் (இங்கிலாந்து ராணி) ஆணை. இதைப் பயன்படுத்தி பகுதி கொள்ளையர்களிடமிருந்து தப்பினர் நம் பெரியோர்கள்! 😎

"இன்றும் இவ்வழக்கம் தொடரவேண்டுமா?" என்று கேட்டால், உறுதியாகத் தொடரவேண்டும் என்பேன். பரங்கியரின் சொதப்பல் ஆண்டு பிறப்பைக் கொண்டாடும் கருங்காலி / அறிவிலித் தமிழர்கள் இருக்கும் வரை இவ்வழக்கமும் தொடரவேண்டும்!! 👊👊

🏵️🌼🌻

மேற்சொன்ன யாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்னும் பார்ட்டிகளும் ஏற்றுக் கொள்ளும் செய்தி ஒன்றுண்டு - மிகப் பழமையான மாந்தர்களான மாயன்களிடமும் எகிப்தியர்களிடமும் சூரியனை அடிப்படையாகக் கொண்ட நாள் மற்றும் நேரக் காட்டிகள் இருந்தன என்பதே அது. இந்த மாயன்களும் எகிப்தியர்களும் நம் தமிழினத்தைச் சேர்ந்தோர் என்பது அண்மை கால ஆராய்ச்சிகளின் முடிவு!! 👍😘

Monday, December 30, 2019

அண்ணாமலை வெண்பா - காப்பு செய்யுள்

மன்னுதிரு அண்ணா மலைமாலை நாய்அடியேன்
பன்னுதமிழ் வெண்பாவில் பாடவே - துன்னுமலர்ப்
பாதனே மூடிகத்தின் பால்ஏறும் தேவகண
நாதனே நீமுன் நட

-- குரு நமச்சிவாயர் 🌺🙏🏽

🌸🏵️🌼🌻💮

மன்னு - நிலை பெற்ற

பன்னு - திரிக்கப்பட்ட. திரிக்கப்படாத பஞ்சுத்திரி விளக்கெரிக்க உதவாது. இங்ஙனமே செம்மையாகாத மொழி அஞ்ஞானத்தை எரிக்க உதவாது. அனைத்து மொழிகளுக்கும் தாயாகியதும், பன்னெடுங்காலமாக மெய்ப்பொருளை உணர்ந்த மெய்யறிவாளர்களாலும், ஆன்றோர்களாலும், சான்றோர்களாலும் தொடர்ந்து செம்மை படுத்தப்பட்டதும், மெய்ப்பொருளை அடிப்படையாக கொண்டதும், வீடு பேற்றினை குறிக்கோளாக கொண்டதும், அண்டத்தின் இயக்கத்தோடு ஒத்துப்போவதுமாகிய அன்னைத் தமிழை ஒருவர் செம்மையாக கற்றாலே போதும், எந்த மெய்யாசிரியரின் வழிகாட்டுதல் இல்லாமல், பொய்யறிவாகிய உலகறிவை எரித்து வீடு பேற்றினை அளித்துவிடும். எனவே, "பன்னு தமிழ்".

துன்னு - அழகிய

🌸🏵️🌼🌻💮

சிவப்பரம்பொருளில் என்றும் நிலைபெற்று உயர்ந்த அண்ணாமலையாருக்கு, இழிந்த பிறவியான நான், பன்னுதமிழ் வெண்பா மாலையொன்று பாடி சாத்த விரும்புகிறேன். இச்செயலை, அழகிய மலர் போன்ற பாதங்களைக் கொண்டவரும், ஆசை என்னும் மூஞ்சுறுவை அடக்கி வாகனமாகக் கொண்டவருமாகிய உயர்ந்த விநாயகப் பெருமானே, நீ உடனிருந்து காத்தருள வேண்டும்!!

🌺🙏🏽🌺🙏🏽🌺🙏🏽🌺

Saturday, December 28, 2019

ஒரு பேருண்மையை உணர்த்தும் உருவகத்தை கேலிக்கூத்தாக்கி உள்ளார்கள்!! 😡

https://youtu.be/5jkpGv0vG3c

ஏமாற்றுவதற்காக, விளையாட்டிற்காக இந்த காணொளியை எடுத்துள்ளார்கள்! எனக்கு தெரிந்தவரின் நண்பர் இந்த காணொளியை எடுக்கும்போது உடன் இருந்துள்ளார். குச்சியால் தட்டி தான் விழ வைத்திருக்கிறார்கள்!!

"பேருண்மைகளை உணர்ந்து, போற்றி, பாராட்டி, பகிர்ந்து, பாதுகாப்பவர்கள் நாங்கள்!!", என்று மார்தட்டிக் கொண்டவர்களே அவர்களது மூதாதையர்கள் உருவாக்கிய ஒரு உருவகத்தை இப்படி கேலிக்கூத்தாக்கி உள்ளார்கள்!!

அப்படியென்ன பேருண்மையை இந்த உலக்கை உணர்த்துகிறது? ...

உலக்கை மனித உடலைக் குறிக்கும். நிலவு மனதைக் குறிக்கும். பகலவன் ஆன்மாவைக் குறிக்கும். மனம் (நிலவு) ஆன்மாவில் (பகலவனில்) ஒன்றுவதே சமாதி (கிரகணம்/மறைப்பு) எனப்படும். இந்த சமாதி நிலையின் போது உடல் அசைவற்று இருக்கும் (உலக்கை அப்படியே நிற்பது போல்). சமாதி முடிந்த பின் (மனம் ஆன்மாவிலிருந்து வெளிப்பட்ட பின் - கிரகணம் முடிந்த பின்), மனம்-உடல் இயங்க ஆரம்பித்துவிடும். உலக இயக்கத்துக்குள் சென்றுவிடும். சமாதி என்னும் மேலான நிலையிலிருந்து, உலகம் என்னும் கீழான நிலைக்கு செல்வதை கீழே விழும் உலக்கை உணர்த்தும்.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽