Friday, December 31, 2021
ஆங்கிலப் புத்தாண்டு எனப்படும் சொதப்பல் புத்தாண்டு!!! 👊🏽
Friday, April 16, 2021
அனைவருக்கும் இனிய கீழறை (பிலவ) புத்தாண்டு¹ நல்வாழ்த்துகள்!! 💐🙏🏽
"பகுத்தறிவால்" நம் தமிழ்த்தாய் வாழ்த்தில் இடம் பெறாமல் போன மனோன்மணியச் செய்யுள்:
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!!
"முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பிறகும், முழுமை முழுமையாகவே இருக்கிறது" என்ற திருமறைக் கருத்தை பயன்படுத்தி, தமிழிலிருந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் துளு ஆகிய மொழிகள் தோன்றிய பின்னரும், ஆரியம் போன்று வழக்கொழியாமல், தமிழன்னை சீர் கெடாமல், இளமையாகவே இருப்பதைக்கண்டு வியந்து, செயல்மறந்து (நான் என்ற தன்மையுணர்வை எக்கணமும் மறக்க முடியாதல்லவா? எனவே, "தன்னை மறந்து" என்று குறிப்பிடாமல், "செயல்மறந்து" என்கிறார் 👏🏽👏🏽👌🏽) அன்னையைப் போற்றுகிறார் சுந்தரம் பிள்ளையவர்கள்! 🙏🏽
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽
oOOo
¹ ஆண்டு என்றாலே அது தமிழ் புத்தாண்டுத்தான்! இந்த அறிவியலை கண்டுணர்ந்து வெளிப்படுத்தியவர்கள் தமிழர்களே. இதன் பிறகே ஏனைய ஆண்டுகள் உருவாயின. எனவே, "தமிழ்" என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.
(ஆப்பிள் தலையில் விழுந்ததும் புவியீர்ப்பு விசையை உணர்ந்து கொண்ட அதிமேதாவிகளான (🤭) பரங்கியர்களின் ஆண்டு ஆண்டே அல்ல! அறிவியல், வரலாறு, இயற்கை, மதம் என்று எந்த அடிப்படையும் அதற்கில்லை. "காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது" என்ற கதையாக இருந்ததை, 500 ஆண்டுகளுக்கு முன், நம்முடன் மீண்டும் ஏற்பட்ட தொடர்பால் சரி செய்து கொண்டனர். கேட்டால், "கிரிகோரி உருவாக்கினார்" என்று பீலா விடுவார்கள்! 👊🏽👊🏽👊🏽)
Tuesday, December 31, 2019
ஆங்கில புத்தாண்டு எனப்படும் சொதப்பல் புத்தாண்டு!!! 😁😁 - மறுபகிர்வு (2020)
Friday, January 4, 2019
ஆங்கில புத்தாண்டு எனப்படும் சொதப்பல் புத்தாண்டு!!! 😁😁
சைஃபர்: இந்த இறைச்சித் துண்டு உண்மையில் இல்லை என்று எனக்குத் தெரியும். இதை வாயில் போடும் போது, இது மிருதுவாகவும் சுவையாகவும் இருப்பதாக மேட்ரிக்ஸ் (மாயை) எனது மூளைக்குத் தகவல் கொடுக்கிறது என்பது எனக்குத் தெரியும். கனவிலிருந்து விழித்த இந்த 9 ஆண்டுகளில் நான் உணர்ந்தது என்ன தெரியுமா? (இறைச்சித் துண்டை வாயில் போட்டு, சற்று மென்று, ரசித்து ருசித்து விட்டு) அறியாமையே சுகம்!!
🌺🌺🌺
கடந்த 20+ வருடங்களில் ஆரிய, ஆங்கிலேய, போலி திராவிடப் போர்வைகளைக் கிழித்துக் கொண்டு எத்தனையோ உண்மைகள் வெளிவந்துவிட்டன. இவற்றில் சிலவற்றையோ அனைத்தையுமோ அறிந்து கொண்டும், பரங்கியரின் சொதப்பல் ஆண்டு பிறப்பைக் கொண்டாடும் தமிழர்கள் மேற்கண்ட சைஃபருக்கு சமமானவர்கள் - இழிவானவர்கள்! துரோகிகள்!! 👊👊👊
🏵🏵🏵
வானவியலில் நம் முன்னோர்கள் முன்னோடிகள் என்பதற்கு சில சான்றுகள்:
🌋 எந்நாளில் பகல் உச்சிப் பொழுதில், பகலவன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது, நம் நிழல் சிறிதும் சாயாமல் நம் மேலே விழுகிறதோ, அந்நாளே வருட பிறப்பாக எடுத்துக் கொண்டனர் நம் முன்னோர்கள்!! 👏👏 இது கடல் கொண்ட தென்மதுரையில் வைத்து கணக்கிடப்பட்டது. (ஆகையால், சித்திரை முதல் நாளன்று பூமியின் எப்பகுதியில், உச்சிப் பொழுதில் ஒரு பொருளின் நிழல் சாயாமல் அதன் மீதே விழுகின்றதோ அப்பகுதியே #தென்மதுரை!)
இந்த துல்லியமான முறையினால் ஒவ்வொரு ஆண்டும் முழுதாக முடிவடையும். ஆனால், பரங்கி ஆண்டு முழுமையாக முடிவடைவதில்லை. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 நாளை சேர்க்கின்றனர். இதற்கும் பல விதிகள் உண்டு (4ஆல் வகுபட வேண்டும், 100ஆல் வகுபட்டாலும் 400ஆல் வகுபட வேண்டும், 400ஆல் வகுபட்டாலும் 4000ஆல் வகுபடக்கூடாது, ...😲). இன்றைய நிலையில் மீண்டும் பரங்கி ஆண்டு சீராவது கி.பி. 4000 வருடத்தில் தான். (பரங்கி ஆண்டை "சொதப்பல் ஆண்டு" என்று அழைப்பதற்கு இதை விட வேறு என்ன சிறந்த காரணம் வேண்டும்? 😛)
🌋 நம் முன்னோர்களின் ஆண்டு கணக்கிற்கு, தன் தாவர குழந்தைகளை பூக்க விட்டு, இயற்கை அன்னையும் ஆமோதிக்கின்றார்!! 😄 மழைக்காலத்திற்குப் பின்னர் அழுகிய வேர்களை செப்பனிட்டு, புதிய வேர்களை உருவாக்கி, புது சத்துக்களை உறிஞ்சி, அடுத்த சுழற்சிக்காக தாவர உலகம் புதிய பூக்களை பூப்பதும் நம் வருட பிறப்பு காலத்தில் தான்.
🌋 உலகிலுள்ள பெரும்பாலான வருட பிறப்புகள் இந்தக் கணக்கையே அடிப்படையாகக் கொண்டவை. பரங்கியரின் வருடமும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஏப்ரல் 1 அன்று தான் தொடங்கியது. மீண்டும் நம்முடன் ஏற்பட்டத் தொடர்பினால் தங்களது ஆண்டு கணக்கை திருத்திக் கொண்ட பரங்கியர்கள், தங்களது மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்ளவும், கிறித்துவத்தை முன்னிறுத்துவதற்காகவும், ஞானி யேசு பிறந்தது ஜனவரி 1 என்று ஒரு நம்பிக்கை இருப்பதாலும், நம் பிள்ளையார் போல் கிரேக்கர்களின் ஜானஸ் கடவுள் அனைத்திற்கும் முதன்மையானவராக இருப்பதாலும் ஜனவரி 1-ற்கு மாற்றினர் (மாற்றியது அன்றைய போப் கிரிகோரியன்). அதை ஏற்றுக் கொள்ளாமல் ஏப்ரல் 1-ஐ வருட பிறப்பாக தொடர்ந்தவர்களை சம்பளத்திற்கு ஆள் வைத்து "முட்டாள்கள்" என்று ஏளனம் செய்ய வைத்தனர் பரங்கி மன்னர்கள்! 😂 (இங்கும் மன்னராட்சி இருந்திருந்து தை 1-க்கு மக்கள் மாறாமல் இருந்திருந்தால், அவர்களை முட்டாள்கள் என்று பறையறிவிக்க இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆட்களை சேர்த்திருப்பர்!! 😉).
🌋 சித்திரை 1-ஐ வருடத்தின் முதல் நாளாக நம் முன்னோர்கள் ஏற்றுக் கொண்டது அறிவின் அடிப்படையில். சூரியன் மேஷ ராசிக்குள் நுழைந்ததாலோ, ஆரியர்கள் திணித்ததாலோ அல்ல. இன்னும் சொல்லப்போனால், நம்மிடமிருந்து தான் ஆரியரும் ஏனையோரும் கற்றுக் கொண்டனர் எனலாம்! ஆரியர்களின் உத்திராயண-தட்சிணாயன கணக்கும் நம்முடையது தான்!!
அவர்களது பூர்விகமான ரிஷிவர்ஷாவில் (இன்றைய சைபீரியா போன்ற பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு ரஷ்யா) பகலவன் காட்சி தருவதே வருடத்திற்கு சில நாட்கள் தான். குகைகளையும், கூடாரங்களையும் விட்டு தகுந்த பாதுகாப்பின்றி வெளிவந்தால் இரத்தம் உறைந்துவிடும் நிலை. இதில் எங்கிருந்து அயண ஆராய்ச்சி செய்திருக்க முடியும்? மேலும், உத்திராயணமும் தட்சிணாயனமும் சரியாக 6 மாதங்களாகப் பிரிவது பூமத்தியரேகைப் பகுதியில் தான் - நம் முன்னோர்கள் வாழ்ந்த தென்மதுரையில் தான்!! நம்மிடமிருந்து கற்றுக் கொண்டு, தமது என்று முத்திரை குத்தி, மீண்டும் நம் தலையிலேயே கட்டிவிட்டார்கள் (கோல்கேட்காரன் கரியையும், உப்பையும் அன்று கிண்டல் செய்து விட்டு, இன்று அவற்றைக் கொண்டே பற்பசை தயாரித்து நம்மிடம் விற்பது போல 😝).
🌋 "இவ்வளவு பாரம்பரியம், அறிவியல், வரலாறு இருந்தும் நம் மக்கள் ஏன் ஆங்கில புத்தாண்டன்று நம் திருத்தலங்களுக்கு செல்கின்றனர்?" என்ற கேள்வி எழலாம். அன்று, சமூகத்தின் முக்கிய நபர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பகுதிக் கொள்ளைக் கூட்ட தலைவனை (பரங்கிப் பிரபு) சந்தித்து பூ மாலை, பழம், இனிப்பு போன்ற பரிசுகளை அளித்து வாழ்த்து சொல்ல / பெற வேண்டும். இந்த நச்சுப் பாம்புகளிடமிருந்து தப்பிக்க எண்ணிய நம் பெரியோர்கள் கண்டுபிடித்த வழி தான் ஆங்கில புத்தாண்டன்று நம் திருத்தலங்களுக்கு செல்வது. திருவள்ளிமலை சுவாமிகள் திருத்தணி படித்திருவிழாவை ஆரம்பித்ததும் இப்படித் தான். நம் சமய நம்பிக்கைகளில் தலையிடக் கூடாது என்பது கொள்ளைக் கூட்டத் தலைவியின் (இங்கிலாந்து ராணி) ஆணை. இதைப் பயன்படுத்தி பகுதி கொள்ளையர்களிடமிருந்து தப்பினர் நம் பெரியோர்கள்! 😎
"இன்றும் இது தொடரவேண்டுமா?" என்று கேட்டால், உறுதியாகத் தொடரவேண்டும் என்பேன். பரங்கியரின் சொதப்பல் ஆண்டு பிறப்பைக் கொண்டாடும் கருங்காலி / அறிவிலித் தமிழர்கள் இருக்கும் வரை இவ்வழக்கமும் தொடரவேண்டும்!! 👊👊
🌹🌹🌹
மேற்சொன்ன யாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்னும் பார்ட்டிகளும் ஏற்றுக் கொள்ளும் செய்தி ஒன்றுண்டு - மிகப் பழமையான மாந்தர்களான மாயன்களிடமும் எகிப்தியர்களிடமும் சூரியனை அடிப்படையாகக் கொண்ட நாள் மற்றும் நேரக் காட்டிகள் இருந்தன என்பதே அது. இந்த மாயன்களும் எகிப்தியர்களும் நம் தமிழினத்தைச் சேர்ந்தோர் என்பது அண்மை கால ஆராய்ச்சிகளின் முடிவு!! 👍😘
posted from Bloggeroid
Thursday, April 13, 2017
💐💐 💐 *அனைவருக்கும் இனிய #புத்தாண்டு வாழ்த்துகள்!!* 🍏🍈🍌
ஆண்டு என்றாலே #தமிழ் ஆண்டு தான். இதை வைத்து தான் உலகின் அனைத்து ஆண்டுகளும். ஆகையால், தமிழ் என்ற வார்த்தை சேர்க்கவில்லை!! 👏
🌾🌺🌻🌹🌷🌼🌸🌾
வானவியலில் முன்னோடிகளான நம் முன்னோர்கள் ஆண்டு பிறப்பை எவ்வாறு கண்டறிந்தனர் என்பதைப் பற்றிய ஒரு அருமையான கட்டுரையை 2003/4 ஆண்டு வாக்கில் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்போது எவ்வளவு தேடியும் அக்கட்டுரை கிடைக்கவில்லை. ஆகையால், நான் படித்ததின் சாரத்தை இங்கே தந்துள்ளேன்:
🌋 எந்நாளில் பகல் உச்சிப் பொழுதில், பகலவன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது, நம் நிழல் சிறிதும் சாயாமல் நம் மேலே விழுகிறதோ, அந்நாளே வருட பிறப்பாக எடுத்துக் கொண்டனர் நம் முன்னோர்கள்.
🌋 இது கடல் கொண்ட தென்மதுரையில் வைத்து கணக்கிடப்பட்டது. ஆகையால், சித்திரை முதல் நாளன்று பூமியின் எப்பகுதியில், உச்சிப் பொழுதில் ஒரு பொருளின் நிழல் சாயாமல் அதன் மீதே விழுகின்றதோ அப்பகுதியே #தென்மதுரை!
🌋 இக்கணக்கிற்கு இயற்கை அன்னையும் ஆமோதிக்கின்றாள் தன் தாவர குழந்தைகளை பூக்க விட்டு - மழைக்காலத்திற்குப் பின்னர் அழுகிய வேர்க்களை செப்பனிட்டு, புதிய வேர்களை உருவாக்கி புது சத்துக்களை உறிஞ்சி, அடுத்த சுழற்சிக்காக தாவர உலகம் புதிய பூக்களை பூப்பதும் நம் வருட பிறப்பு காலத்தில் தான்.
🌋 உலகிலுள்ள பெரும்பாலான வருட பிறப்புகள் இந்தக் கணக்கையே அடிப்படையாகக் கொண்டவை. பரங்கியரின் ஆங்கில வருடமும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஏப்ரல் 1 அன்று தான் தொடங்கியது. மீண்டும் நம்முடன் ஏற்பட்டத் தொடர்பினால் தங்களது ஆண்டு கணக்கை திருத்திக் கொண்ட பரங்கியர்கள், தங்களது மேதாவித் தனத்தைக் காட்டிக் கொள்ளவும், கிறித்துவத்தை முன்னிறுத்துவதற்காகவும், ஞானி யேசு பிறந்தது ஜனவரி 1 என்று ஒரு கணக்கு இருப்பதாலும், நம் பிள்ளையார் போல் கிரேக்கர்களின் ஜானஸ் கடவுள் அனைத்திற்கும் முதன்மையானவராக இருப்பதாலும் ஜனவரி 1-ற்கு மாற்றினர் (மாற்றியது அன்றைய போப் கிரிகோரியன்). அதை ஏற்றுக் கொள்ளாமல் ஏப்ரல் 1-ஐ வருட பிறப்பாக தொடர்ந்தவர்களை சம்பளத்திற்கு ஆள் வைத்து "முட்டாள்கள்" என்று ஏளனம் செய்ய வைத்தனர் பரங்கி மன்னர்கள்! 😂 (இங்கும் மன்னராட்சி இருந்திருந்து தை 1-க்கு மக்கள் மாறாமல் இருந்திருந்தால், அவர்களை முட்டாள்கள் என்று பறையறிவிக்க இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆட்களை சேர்த்திருப்பர்!! 😉).
சித்திரை 1-ஐ வருடத்தின் முதல் நாளாக நம் முன்னோர்கள் ஏற்றுக் கொண்டது அறிவின் அடிப்படையில். சூரியன் மேஷ ராசிக்குள் நுழைந்ததாலோ, ஆரியர்கள் திணித்ததாலோ அல்ல. இன்னும் சொல்லப்போனால், நம்மிடமிருந்து தான் ஆரியரும் ஏனையோரும் அறிந்து கொண்டனர் எனலாம்!! வருட பிறப்பும், சூரியன் மேஷ ராசிக்குள் புகுவதும் இயற்கையாக ஒன்றாய் அமைந்துவிட்டது எனலாம்.
இவையாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாது எனும் பார்ட்டிகளும் ஏற்றுக் கொள்ளும் செய்தி ஒன்றுண்டு: மிகப் பழமையான மாந்தர்களான மாயன்களிடமும் எகிப்தியர்களிடமும் சூரியனை அடிப்படையாகக் கொண்ட நாள் மற்றும் நேரக் காட்டிகள் இருந்தன.
*இந்த மாயன்களும் எகிப்தியர்களும் நம் தமிழினத்தைச் சேர்ந்தோர் என்பது அண்மை கால ஆராய்ச்சிகளின் முடிவு!!* 👍👍
🌾🌺🌻🌹🌷🌼🌸🌾
On this auspicious day, I am proud to present the following *definition of the word தமிழ் by Thiru. #Ganapathi #Sthapathi*, one of the very very few grand persons I have met so far in my life:
*As per ‘#Aintiram’ written by #Mamuni #Mayan, at this early stage of manifestation of universe there are five stages. They are அமிழ்தல் (Amizhdal – Withdrawal), இமிழ்தல் (Imizhdal – Overflowing), குமிழ்தல் (Kumizhdal – Clustering round in an order), உமிழ்தல் (Umizhdal – Emitting), தமிழ்தல் (Tamizhdal – Resulting into a well-defined form).*
First the throbbing Consciousness withdraws into itself. Moolam (Originating Source) consolidates itself through withdrawal called Amizhdal or converging to a point. Minute Cubical tip This Moolam then gushes or explodes outward and emerges and spreads (Imizhdal) and consolidates itself (Kumizhdal). The movement of energy in self spin (kalavisai) propels and projects this energy (Umizhdal) so that it comes out into form (Tamizdhal).
Interestingly enough, for the experience to merge into word-form the inner being has to undergo or travel through these five levels states, namely Amizhdal (“converging to a point”…withdrawal), Imizhdal (‘emerging and spreading’), Kumizhdal (coming together an consolidating’), Umizhdal (projecting or delivering) and Tamizdhal (“coming out into form”). *Hence a language as rich with the sweetness of inherent order, originating from the luminosity of the Source is called Tamil. Tamil is the word based on the final resultant state called Tamizhdal (தமிழ்தல்).*
🌾🌺🌻🌹🌷🌼🌸🌾
(மூலம்: 2016-ஆம் ஆண்டு இதே நாளில் நான் எழுதிய இடுகை)
Thursday, April 14, 2016
தமிழ் & தமிழரின் புத்தாண்டு பற்றிய அறிவியல்
🌾🌺🌻🌹🌷🌼🌸🌾
ஆண்டு என்றாலே தமிழாண்டு தான். இதை வைத்து தான் உலகின் அனைத்து ஆண்டுகளும். ஆகையால், தமிழ் என்ற வார்த்தை சேர்க்கவில்லை!!
🌾🌺🌻🌹🌷🌼🌸🌾
வானவியலில் முன்னோடிகளான நம் முன்னோர்கள் ஆண்டு பிறப்பை எவ்வாறு கண்டறிந்தனர் என்பதைப் பற்றிய ஒரு அருமையாக கட்டுரையை சுமார் 12-13 ஆண்டுகளுக்கு முன்னர் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்போது எவ்வளவு தேடியும் அக்கட்டுரை கிடைக்கவில்லை. ஆகையால், நான் படித்ததின் சாரத்தை இங்கே தந்துள்ளேன்:
🌋 எந்நாளில் பகல் உச்சிப் பொழுதில், பகலவன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது, நம் நிழல் சிறிதும் சாயாமல் நம் மேலே விழுகிறதோ, அந்நாளே வருட பிறப்பாக எடுத்துக் கொண்டனர் நம் முன்னோர்கள்.
🌋 இது கடல் கொண்ட தென்மதுரையில் வைத்து கணக்கிடப்பட்டது. ஆகையால், சித்திரை முதல் நாளன்று பூமியின் எப்பகுதியில், உச்சிப் பொழுதில் ஒரு பொருளின் நிழல் சாயாமல் அதன் மீதே விழுகின்றதோ அப்பகுதியே தென்மதுரை.
🌋 இக்கணக்கிற்கு இயற்கை அன்னையும் ஆமோதிக்கின்றாள் தன் தாவர குழந்தைகளை பூக்க விட்டு - மழைக்காலத்திற்குப் பின்னர் அழுகிய வேர்க்களை செப்பனிட்டு, புதிய வேர்களை உருவாக்கி புது சத்துக்களை உறிஞ்சி, அடுத்த சுழற்சிக்காக தாவர உலகம் புதிய பூக்களை பூப்பதும் நம் வருட பிறப்பு காலத்தில் தான்.
🌋 உலகிலுள்ள பெரும்பாலான வருட பிறப்புகள் இந்தக் கணக்கையே அடிப்படையாகக் கொண்டவை. பரங்கியரின் ஆங்கில வருடமும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஏப்ரல் 1 அன்று தான் தொடங்கியது. கிரகோரியன் கணக்கிற்கு மாற்றியதாலும், யேசுநாதர் பிறந்தது ஜனவரி 1 என்று ஒரு கணக்கு இருப்பதாலும், நம் பிள்ளையார் போல் கிரேக்கர்களின் ஜானஸ் கடவுள் அனைத்திற்கும் முதன்மையானவராக இருப்பதாலும் ஜனவரி 1-ற்கு மாற்றினர். அதை ஏற்றுக் கொள்ளாமல் ஏப்ரல் 1-ஐ வருட பிறப்பாக தொடர்ந்தவர்களை சம்பளத்திற்கு ஆள் வைத்து "முட்டாள்கள் " என்று ஏளனம் செய்ய வைத்தனர் பரங்கி மன்னர்கள்! 😂 (இங்கும் மன்னராட்சி இருந்திருந்து தை 1-க்கு மக்கள் மாறாமல் இருந்திருந்தால், அவர்களை முட்டாள்கள் என்று பறையறிவிக்க இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆட்களை சேர்த்திருப்பர்!! 😉).
சித்திரை 1-ஐ வருடத்தின் முதல் நாளாக நம் முன்னோர்கள் ஏற்றுக் கொண்டது அறிவின் அடிப்படையில். சூரியன் மேஷ ராசிக்குள் நுழைந்ததாலோ, ஆரியர்கள் திணித்ததாலோ அல்ல. இன்னும் சொல்லப்போனால், நம்மிடமிருந்து தான் ஆரியரும் ஏனையோரும் அறிந்து கொண்டனர் எனலாம்!! வருட பிறப்பும், சூரியன் மேஷ ராசிக்குள் புகுவதும் இயற்கையாக ஒன்றாய் அமைந்துவிட்டது எனலாம்.
🌾🌺🌻🌹🌷🌼🌸🌾
On this auspicious day, I am proud to present the following definition of the word தமிழ் by Thiru. Ganapathi Sthapathi, one of the very very few grand persons I have met so far in my life:
As per ‘Aintiram’ written by Mamuni Mayan, at this early stage of manifestation of universe there are five stages. They are அமிழ்தல் (Amizhdal – Withdrawal), இமிழ்தல் (Imizhdal – Overflowing), குமிழ்தல் (Kumizhdal – Clustering round in an order), உமிழ்தல் (Umizhdal – Emitting), தமிழ்தல் (Tamizhdal – Resulting into a well-defined form).
First the throbbing Consciousness withdraws into itself. Moolam (Originating Source) consolidates itself through withdrawal called Amizhdal or converging to a point. Minute Cubical tip This Moolam then gushes or explodes outward and emerges and spreads (Imizhdal) and consolidates itself (Kumizhdal). The movement of energy in self spin (kalavisai) propels and projects this energy (Umizhdal) so that it comes out into form (Tamizdhal).
Interestingly enough, for the experience to merge into word-form the inner being has to undergo or travel through these five levels states, namely Amizhdal (“converging to a point”…withdrawal), Imizhdal (‘emerging and spreading’), Kumizhdal (coming together an consolidating’), Umizhdal (projecting or delivering) and Tamizdhal (“coming out into form”). Hence a language as rich with the sweetness of inherent order, originating from the luminosity of the Source is called Tamil. Tamil is the word based on the final resultant state called Tamizhdal (தமிழ்தல்).
posted from Bloggeroid