ஏமாற்றுவதற்காக, விளையாட்டிற்காக இந்த காணொளியை எடுத்துள்ளார்கள்! எனக்கு தெரிந்தவரின் நண்பர் இந்த காணொளியை எடுக்கும்போது உடன் இருந்துள்ளார். குச்சியால் தட்டி தான் விழ வைத்திருக்கிறார்கள்!!
"பேருண்மைகளை உணர்ந்து, போற்றி, பாராட்டி, பகிர்ந்து, பாதுகாப்பவர்கள் நாங்கள்!!", என்று மார்தட்டிக் கொண்டவர்களே அவர்களது மூதாதையர்கள் உருவாக்கிய ஒரு உருவகத்தை இப்படி கேலிக்கூத்தாக்கி உள்ளார்கள்!!
அப்படியென்ன பேருண்மையை இந்த உலக்கை உணர்த்துகிறது? ...
உலக்கை மனித உடலைக் குறிக்கும். நிலவு மனதைக் குறிக்கும். பகலவன் ஆன்மாவைக் குறிக்கும். மனம் (நிலவு) ஆன்மாவில் (பகலவனில்) ஒன்றுவதே சமாதி (கிரகணம்/மறைப்பு) எனப்படும். இந்த சமாதி நிலையின் போது உடல் அசைவற்று இருக்கும் (உலக்கை அப்படியே நிற்பது போல்). சமாதி முடிந்த பின் (மனம் ஆன்மாவிலிருந்து வெளிப்பட்ட பின் - கிரகணம் முடிந்த பின்), மனம்-உடல் இயங்க ஆரம்பித்துவிடும். உலக இயக்கத்துக்குள் சென்றுவிடும். சமாதி என்னும் மேலான நிலையிலிருந்து, உலகம் என்னும் கீழான நிலைக்கு செல்வதை கீழே விழும் உலக்கை உணர்த்தும்.
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽
No comments:
Post a Comment