Showing posts with label Thamizhs. Show all posts
Showing posts with label Thamizhs. Show all posts

Saturday, July 16, 2016

☀ கரிநாள் - தமிழனின் அறிவியல் திறனுக்கு ஓர் சான்று 👊👊👊

கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்” என்பதே!

அதாவது, அன்றைய தேதியில் சூரிய கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும். நமது முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக ஆராய்ந்து முடிவு செய்து வைத்திருக்கும் நாட்கள் இவை. இந்நாட்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடாதவை. இது ‘அஷ்டமி, நவமி’ போன்றோ அல்லது ‘பரணி, கிருத்திகை’ போன்றோ திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல. தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் இந்நாட்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். உதாரணமாக தை மாதம் 1, 2, 3 ஆகிய நாட்கள் கரிநாட்கள். இவை வானவியல் ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாட்கள்.

சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும் பொழுது, நமது உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும், ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாக அதிக அளவில் தூண்டப்படுகின்றன. இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். இது போன்ற காரணங்களால் கரிநாட்களில் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்த்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு தமிழ் வருடமும் கரிநாட்களின் விவரம் :
சித்திரை - 6, 15,
வைகாசி - 7, 16, 17
ஆனி - 1, 6
ஆடி - 2, 10, 20
ஆவணி - 2, 9, 28
புரட்டாசி - 16, 29
ஐப்பசி - 6, 20
கார்த்திகை - 1, 10, 17
மார்கழி - 6, 9, 11
தை - 1, 2, 3, 11, 17
மாசி - 15, 16, 17
பங்குனி - 6, 15, 19

நம் உடல், மனம், நாம் வாழும் புவி, அது சுற்றும் ஞாயிறு என அனைத்தின் அறிவும் பெற்றிருந்தால் மட்டுமே இந்தத் தேதிகளை கணித்திருக்கமுடியும். 👏👌👍 இதை நினைக்கும் போது பிரமிப்படையும் மனம், அடுத்து "அந்த அறிவு இன்று என்னவாயிற்று?" என்ற கேள்வி எழும் போது கனக்கிறது. 😔

(மூலம்: https://m.facebook.com/story.php?story_fbid=1761894744083274&id=100007882965810)

💥 பி.கு: "கலீலியோ, கெப்ளர், நியுட்டன் போன்ற பெயர்கள் வராமல், ஏதேச்சையாக ஆப்பிள் மரத்திலிருந்து விழாமல், "யுரேகா" என்று குளியல் தொட்டியிலிருந்து திகம்பரனாக எழுந்து ஓடாமல், கண்டுபிடிப்புக்காக சர்ச் சிறை வைக்காமல் இதெல்லாம் என்ன பெரிய கண்டுபிடிப்பு?" எனும் ரீதியில் பேசும் கருங்காலிகளைக் கண்டால் பிய்ந்து போன பழைய செருப்பாலும், தேய்ந்து போன தென்னைமாராலும் விளாசவும்!! 😠

posted from Bloggeroid

Thursday, June 2, 2016

🌏🌊 திரைகடலோடிய தமிழனும் அவனுக்கு வழிகாட்டிய ஆமைகளும் 🐢

வாட்ஸ்அப்பில் கீழ்காணும் இடுகை கிடைத்தது. அதைப் படித்ததும் சில வருடங்களுக்கு முன்னர் தி ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்த ஒரு கட்டுரை ஞாபத்திற்கு வந்தது. அதை இதற்கு கீழே இணைத்துள்ளேன்.

💮 படியுங்கள்!
💮பெருமை கொள்ளுங்கள்!!
💮 மற்றவருடன் இத்தகவல்களையும் தங்களது உற்சாகத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!!

🔯 என்றும் வாய்மையே வெல்லும் 🔯

🌸🌹🍀🍁🌺🌻🌼

🐢 From WhatsApp:


பர்மாவில் தேக்குமரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?

தனுஷ்கோடிக்கு!! ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்!
தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய!

தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

கடல் ஆமைகள் கடலில் இருக்கும்
நீரோட்டத்தைப் பயன்படுத்தி 150 கி.மீ. வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல்
போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்! மத்திய தரைகடல், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான். பல நாடுகளையும் கைப்பற்றினான்.
கடலில் பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன் மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர்.

உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார். சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில் பொருளே இல்லை!!

சீனாவில் இருக்கும் கலைகள் அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான்! போதிதர்மர் நினைவுக்கு வருகிறாரா? அதுதான் உண்மை! கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழன் தொழில்நுட்பம் தான். அதாவது, கொலம்பஸ் கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட வழித்தடமும் ஒன்றுதான்! வாஸ்கோடகாமா முகம்மதியர்களின் தொல்லையில்லாமல் இந்தியாவுக்கு வந்துசேர உதவியது நம் மாலுமிகள் தான்!

ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க இது மட்டுமா காரணம்? இல்லை. நம் பண்பாட்டுக்கும் ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆம். தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம் உண்டு. தான் பிறந்த இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும். தமிழகத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு.

⚓ From The Hindu:


Historian Sivagnanam Balasubramani, popularly known as Orissa Balu, deciphers the sea trade routes used by ancient Tamil sailors through his research on sea turtles

‘Thirai kadal odiyum thiraviam thedu’ (Seek your fortune even by venturing overseas) -- Tamil poet Avvaiyar.

The Sangam literature is a rich repository of information on the ancient Tamil way of living. Amidst its chapters that vividly describe the beauty of nature, lifestyle and social structure of the old Tamil country, the Purananuru elicits the flourishing sea trade of those times. From ships, sea routes, daring maritime voyages to the merchandise that were traded and the expertise of the Tamil seafarers, it talks in detail of the mighty ocean and the strong bond the people shared with it.

For the past two decades, historian Orissa Balu, has been collecting real-life evidences and remnants from across the coast of Tamil Nadu and elsewhere in the world, correlating them with the references in Sangam literature. “The land expanse mentioned in the literary works is a much larger area than the present day Tamil Nadu state. Our ancestors had maintained trade links from Europe in the west to the Far East,” says Balu. “Excavations at Adichanalur have yielded skeletons of people belonging to five different races. It’s an indication that we have been a centre of international trade, paving way for exchange of culture and language.”

According to Balu, the root of the word ‘Tamilar’ comes from ‘Dramilar’, which in turn is a derivative of ‘Thirai Meelar’ – an expression to denote sea farers. “It was considered a science to be able to return from the sea. The Tamil seafarers had an advanced idea of direction, geography and weather. They were able to come back to their home turf after sea voyages spanning months and years covering millions of nautical miles. The word ‘Thirai Meelar’ is mentioned repeatedly in works like Manimekalai and Silapathikaram.”

Sea faring was such a thriving industry that the Tamil society is said to have had over 20 different communities working for sea trade. Literature talks about the Vathiriyars (people who weaved the sail), Odavis (men who built ships), Kuliyalis (Surfers) and Mugavaiyars (divers who fished pearl from the deep sea bed).

Balu who has done an extensive study on the ‘Paimara Kappal’ (sail boat), the indigenous vessel of ancient Tamils, says, “The sail cloth used in the Sangam age was 20 metres in width, 10 metres in height and could withstand a wind velocity of 250km/hr. It’s notable that even the women were experts in sailing and pearl fishing. Even today, we can find women diving into the sea in search of pearls along the coast of Tuticorin.”

He adds, “The mechanism of building the boat was unique as they used nearly 42 kinds of wood including the Karunkali wood for the central pole that withstood lightning. Today, the coastal Muslim community practices the age-old boat building technique. There are hardly 25 sail boats and five families of boat builders left in Kayalpatnam and Keezhakarai.”

The Sangam literature also documents the presence of over 20,000 islands in the Indo-Pacific Ocean, says Balu. ‘Muziris Papyrus is a document on the evolved sea trade of Tamils. It shows how advanced and strategically planned were the supply chain network and management policies of Tamil traders.” Balu postulates that ancient Tamil seafarers followed sea turtles and thus chalked maritime trade routes. For over 21 years, he has been doing research on sea turtles, mapping their migration routes.

“The turtle has the ability of returning to its home turf even after migrating thousands of miles in the sea. They float along sea currents and don’t swim in the ocean. The technique used by Tamil sailors must have been inspired from this,” he says. “There’s a proper documentation of the life cycle of sea turtles in Sangam literature.”

Balu is researching on the migration routes of Olive Ridleys, Green Turtles and Leatherbacks which visit the Tamil Nadu coast.

“My idea is to use historical facts for sustainable living in the present times,” says Balu, who runs the Integrated Ocean Culture Research Foundation, based in Chennai. “We have people from over 72 sea-related fields researching on various subjects. We have created a link between the stakeholders of the sea, from marine engineers and ship builders to fishermen.” Orissa Balu delivered a lecture at a programme organised by INATCH Madurai Chapter.

(Source: m.thehindu.com/features/metroplus/society/sailing-in-search-of-history/article8537040.ece)

posted from Bloggeroid

Thursday, April 14, 2016

தமிழ் & தமிழரின் புத்தாண்டு பற்றிய அறிவியல்

💐💐 💐 அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!! 🍏🍈🍌

🌾🌺🌻🌹🌷🌼🌸🌾

ஆண்டு என்றாலே தமிழாண்டு தான். இதை வைத்து தான் உலகின் அனைத்து ஆண்டுகளும். ஆகையால், தமிழ் என்ற வார்த்தை சேர்க்கவில்லை!!

🌾🌺🌻🌹🌷🌼🌸🌾

வானவியலில் முன்னோடிகளான நம் முன்னோர்கள் ஆண்டு பிறப்பை எவ்வாறு கண்டறிந்தனர் என்பதைப் பற்றிய ஒரு அருமையாக கட்டுரையை சுமார் 12-13 ஆண்டுகளுக்கு முன்னர் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்போது எவ்வளவு தேடியும் அக்கட்டுரை கிடைக்கவில்லை. ஆகையால், நான் படித்ததின் சாரத்தை இங்கே தந்துள்ளேன்:

🌋 எந்நாளில் பகல் உச்சிப் பொழுதில், பகலவன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது, நம் நிழல் சிறிதும் சாயாமல் நம் மேலே விழுகிறதோ, அந்நாளே வருட பிறப்பாக எடுத்துக் கொண்டனர் நம் முன்னோர்கள்.

🌋 இது கடல் கொண்ட தென்மதுரையில் வைத்து கணக்கிடப்பட்டது. ஆகையால், சித்திரை முதல் நாளன்று பூமியின் எப்பகுதியில், உச்சிப் பொழுதில் ஒரு பொருளின் நிழல் சாயாமல் அதன் மீதே விழுகின்றதோ அப்பகுதியே தென்மதுரை.

🌋 இக்கணக்கிற்கு இயற்கை அன்னையும் ஆமோதிக்கின்றாள் தன் தாவர குழந்தைகளை பூக்க விட்டு - மழைக்காலத்திற்குப் பின்னர் அழுகிய வேர்க்களை செப்பனிட்டு, புதிய வேர்களை உருவாக்கி புது சத்துக்களை உறிஞ்சி, அடுத்த சுழற்சிக்காக தாவர உலகம் புதிய பூக்களை பூப்பதும் நம் வருட பிறப்பு காலத்தில் தான்.

🌋 உலகிலுள்ள பெரும்பாலான வருட பிறப்புகள் இந்தக் கணக்கையே அடிப்படையாகக் கொண்டவை. பரங்கியரின் ஆங்கில வருடமும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஏப்ரல் 1 அன்று தான் தொடங்கியது. கிரகோரியன் கணக்கிற்கு மாற்றியதாலும், யேசுநாதர் பிறந்தது ஜனவரி 1 என்று ஒரு கணக்கு இருப்பதாலும், நம் பிள்ளையார் போல் கிரேக்கர்களின் ஜானஸ் கடவுள் அனைத்திற்கும் முதன்மையானவராக இருப்பதாலும் ஜனவரி 1-ற்கு மாற்றினர். அதை ஏற்றுக் கொள்ளாமல் ஏப்ரல் 1-ஐ வருட பிறப்பாக தொடர்ந்தவர்களை சம்பளத்திற்கு ஆள் வைத்து "முட்டாள்கள் " என்று ஏளனம் செய்ய வைத்தனர் பரங்கி மன்னர்கள்! 😂 (இங்கும் மன்னராட்சி இருந்திருந்து தை 1-க்கு மக்கள் மாறாமல் இருந்திருந்தால், அவர்களை முட்டாள்கள் என்று பறையறிவிக்க இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆட்களை சேர்த்திருப்பர்!! 😉).

சித்திரை 1-ஐ வருடத்தின் முதல் நாளாக நம் முன்னோர்கள் ஏற்றுக் கொண்டது அறிவின் அடிப்படையில். சூரியன் மேஷ ராசிக்குள் நுழைந்ததாலோ, ஆரியர்கள் திணித்ததாலோ அல்ல. இன்னும் சொல்லப்போனால், நம்மிடமிருந்து தான் ஆரியரும் ஏனையோரும் அறிந்து கொண்டனர் எனலாம்!! வருட பிறப்பும், சூரியன் மேஷ ராசிக்குள் புகுவதும் இயற்கையாக ஒன்றாய் அமைந்துவிட்டது எனலாம்.

🌾🌺🌻🌹🌷🌼🌸🌾

On this auspicious day, I am proud to present the following definition of the word தமிழ் by Thiru. Ganapathi Sthapathi, one of the very very few grand persons I have met so far in my life:

As per ‘Aintiram’ written by Mamuni Mayan, at this early stage of manifestation of universe there are five stages. They are அமிழ்தல் (Amizhdal – Withdrawal), இமிழ்தல் (Imizhdal – Overflowing), குமிழ்தல் (Kumizhdal – Clustering round in an order), உமிழ்தல் (Umizhdal – Emitting), தமிழ்தல் (Tamizhdal – Resulting into a well-defined form).

First the throbbing Consciousness withdraws into itself. Moolam (Originating Source) consolidates itself through withdrawal called Amizhdal or converging to a point. Minute Cubical tip This Moolam then gushes or explodes outward and emerges and spreads (Imizhdal) and consolidates itself (Kumizhdal). The movement of energy in self spin (kalavisai) propels and projects this energy (Umizhdal) so that it comes out into form (Tamizdhal).

Interestingly enough, for the experience to merge into word-form the inner being has to undergo or travel through these five levels states, namely Amizhdal (“converging to a point”…withdrawal), Imizhdal (‘emerging and spreading’), Kumizhdal (coming together an consolidating’), Umizhdal (projecting or delivering) and Tamizdhal (“coming out into form”). Hence a language as rich with the sweetness of inherent order, originating from the luminosity of the Source is called Tamil. Tamil is the word based on the final resultant state called Tamizhdal (தமிழ்தல்).

posted from Bloggeroid

Saturday, April 9, 2016

வளிமண்டலம் பற்றிய தமிழரின் அறிவியல்



💮 கூகுள்+ - லிருந்து.....

தமிழுக்காக, தமிழர்களு க்காக ஒரு பக்கம்.
Page Liked • August 28, 2012 •

இரண்டாயிரம்
வருடங்களுக்கு முன்னர்
வந்த தமிழ் இலக்கியங்களில்
ஓசோன் !.
தற்கால அறிவியல்
அறிஞர்களால்
புவிக்கு மேலே இருக்கும்
வான்வெளி ஆறு பகுதிகளாகப்
பகுக்கப்பட்டுள்ளது.
புவியில் இருந்து ஒன்றன்
மேல் ஒன்றாக
ட்ரோபோஸ்பியர்
(troposphere)
ஸ்ட்ரோட்ஸ்பியர்
(stratosphere)
மீஸோஸ்பியர் (mesosphere)
தெர்மாஸ்பியர்
(thermosphere)
எக்ஸோஸ்பியர் (exosphere)
நத்திங்னஸ் (nothingness)
என
அவை அமைந்துள்ளன.
இவற்றுள்
புவிக்கு மேலே முதலில்
அமைந்திருப்பது ட்ரோபோஸ்பியர்.
இது வான்வெளியின்
மொத்த கன அளவில்
பதினேழில்
ஒரு பங்குதான். ஆனால்,
வான்வெளியில் உள்ள
மொத்தக் காற்றின் அளவில்
ஐந்தில்
நான்கு பகுதி இங்கு தான்
இருக்கிறது.
இன்றைக்கு ஏறத்தாழ 2,000
ஆண்டுகளுக்கு முன்
வாழ்ந்த தமிழர்கள்
வான்வெளியை ஐந்து கூறுகளாகப்
பிரித்துக்
கூறி இருப்பதை அறியும்போது வியப்பும்
மகிழ்வும், பெருமிதமும்
ஒருங்கே உண்டாகின்றன.
"இருமுந்நீர்க் குட்டமும்
வியன் ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய
ஆகாயமும்." (புறநா - 20)
என்னும் வரிகளில்
புவிக்கு மேல் உள்ள
மூன்று பகுதிகள்
கூறப்பட்டுள்ளன.
"செஞ்ஞாயிற்றுச்
செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
சூழ்ந்த மண்டிலமும்
வளிதரு திசையும்
வறிதுநிலை காயமும்." (புறநா -
30)
என்னும் வரிகளால்
புவிக்கு மேல்
ஐந்து பகுதிகள்
குறிப்பிடப்பட்டுள்ளன.
"மயங்கிருங் கருவிய
விசும்பு முகனாக
இயங்கிய இருசுடர்
கண்ணெனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கறு நீத்தம்." (புறநா -
365)
என்னும் வரிகளில்
இரண்டு பகுதிகள்
குறிப்பிடப்பட்டுள்ளன.
இவற்றுள் "திசை"
என்னும் பகுதியில்
காற்று இருக்கும்.
"ஆகாயம்", "நீத்தம்" என்னும்
பகுதிகளில் எதுவும்
இருக்காது எனவும்
கூறப்பட்டுள்ளது. "நீத்தம்"
என்பது இன்றைய
அறிவியலார் கூறும்
"வெறுமை" (நத்திங்னஸ்)
என்னும் பகுதி.
புவிக்கு மேல்
இருக்கின்ற
இரண்டாவது பகுதியான
"ஸ்ட்ரோட்ஸ்பியர்" என்னும்
பகுதியில் தான் "ஓசோன்"
எனப்படும் காற்றுப்படலம்
அமைந்துள்ளது.
இப்படலம் கதிரவனிடம்
இருந்து வரும் கடும்
வெப்பத்தை, தான்
தாங்கிக்கொண்டு புவியில்
உள்ள உயிர்கள் துன்பம்
உறாமல்
காத்துவருகிறது. 20ஆம்
நூற்றாண்டின்
பிற்பகுதியில்
கண்டுபிடிக்கப்பட்ட இந்த
ஓசோன் படலத்தைப்
பற்றி 2ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள்
குறிப்பிட்டிருப
்பது வியப்பை அளிக்கிறது அல்லவா?
"நிலமிசை வாழ்வர் அலமரல்
தீர
தெறுகதிர்
வெம்மை கனலி தாங்கி
காலுண வாக
சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும்
மருள." (புறநா - 43)
என்னும் பாடல் வரிகளின்
கருத்து, "புவியில்
வாழும் மக்களின் துன்பம்
தீர கதிரவனின் வெப்பம்
மிக்க கனலைத்
தாங்கிக்கொண்டு கதிரவனோடு சேர்ந்து சுழல்கின்ற
முனிவர்கள்" என்பதாகும்.
மேலும், முருகக்
கடவுளின் ஒரு கை,
"விண்செலல் மரபின்
ஐயர்க்கு ஏந்தியது" என்று
திருமுருகாற்றுப
்படை (107) யிலும்,
"சுடரொடு திரிதரும்
முனிவரும், அமரரும்
இடர்கெட அருளி நின்
இணையடி தொழுதோம்"
என சிலப்பதிகாரத்திலும்
(வேட்டுவ வரி - 18)
இக்கருத்து கூறப்பட்டுள்ளது
.
முனிவர்கள்
என்று கூறப்பட்டதாலேயே
, மற்ற மதத்தினரும்
பகுத்தறிவுவாதிகளும்
இது அறிவியல்
கருத்தன்று; கற்பகமரம்,
காமதேனு போன்ற
கற்பனைகளுள்
ஒன்று தான்
என்று சொல்லக் கூடும்.
முனிவர்கள் என்றாலும்
சரி அல்லது பிறவற்றைச்
சுட்டினாலும்
சரி அது ஒரு பொருட்டன்று.
கதிரவனின் வெப்பத்தைத்
தாங்கிக் கொள்ளும்
ஒரு சக்தியைப் பற்றித்
தமிழர்கள் (சங்கப்
புலவர்கள்) சிந்தித்திருக்க
ிறார்கள் என்னும்
செய்தி நாம் இரண்டாயிரம்
வருடங்களுக்கு முன்னரே கூறிவிட்டோம்
என்று நினைக்கும்
போது, இந்த
செந்தமிழ்நாட்டில்
பிறந்ததை எண்ணி நாம்
பெருமை கொள்ளவேண்டும் !

( https://plus.google.com/109513550946853878864/posts/8zVmzDGxL4W)

🌸🌹🍀🍁🌺🌻🌼

💮 எனது கருத்துப் பதிவு:

அருமையான இடுகை! வாழ்த்துகள்!!

செய்யுள்களின் பதம் பிரித்திருந்தால் இன்னும் பலரை சென்றடைந்திருக்கும்.

ஆரியர், முகம்மதியர், வெள்ளையர், கிறித்துவர், இன்றைய பலமுனை தாக்குதல்கள் என அனைத்திற்குப் பிறகும் இது போன்ற உண்மைகள் வெளிவருகின்றன என்றால் "வாய்மையே வெல்லும்" என்ற விதி மீண்டும் மெய்ப்பிக்கப்படுகிறது.

அழித்ததும் அழிந்ததும் போக இருப்பதை வைத்துக் கொண்டு "2000-ஆம் ஆண்டுகளுக்கு முன்னரே" என்று கூறுவது நம் பெருமையை நாமே குறைத்துக் கூறுவது போலாகும். ஏற்கனவே, ஒரு கூட்டம் உலக வரலாற்றை 2000 ஆண்டுகளுக்குள் குறுக்கிவிட பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது.

இன்றைய இணைய உலகில் ஒரு செய்தி தோன்றினால் சில மணி நேரங்களில் உலகம் முழுதும் சென்றடைந்து விடுகிறது. அன்று அப்படியல்ல.

ஒலி தோன்றி, மொழி தோன்றி, அறிவு முதிர்ந்து, இயற்கையை உணர்ந்து.... என ஒரு உண்மையை உணர்வதற்கே பல்லாயிரம் வருடங்களும், அது அனைவரையும் சாரம் மாறாமல் சென்றடைய மேலும் பல்லாயிரம் ஆண்டுகளும் ஆகியிருக்கும் என்று எடுத்துக்கொள்வதே சிறந்தது மற்றும் பாதுகாப்பானது.

posted from Bloggeroid