Showing posts with label கண்ணபிரான். Show all posts
Showing posts with label கண்ணபிரான். Show all posts

Monday, November 13, 2023

தீபாவளி எனும் உருவகத்தின் வெவ்வேறு வடிவங்கள்!!


🌷 திருவாரூரில் பிறக்க விடுதலை
🌷 தில்லையை காண விடுதலை
🌷 காசியில் இறக்க விடுதலை
🌷 திருவருணையை நினைக்க விடுதலை

மேலுள்ள புகழ்பெற்ற வரிகளின் பொருள்: மெய்யறிவு பெறுதல்!

இது போன்றதுதான் இணைப்புப் படத்திலுள்ள 5 வரிகள். வெவ்வேறு உருவகங்களாக இருந்தாலும் அவை மெய்யறிவு பெறுதலையே குறிப்பிடுகின்றன.

1. கண்ணபிரான் நரகாசுரனை கொன்றார்

🌷 நரகாசுரன் - "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம்.

கண்ணபிரான் - 5,125 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆரியரென்றும் கொள்ளலாம். அல்லது, நம் கண் முன்னே விரியும் வையகமென்றும் கொள்ளலாம். வையகத்தில் நாம் கண்ட / கேட்ட ஏதோவொன்று நமக்கு மெய்யறிவை கொடுக்கிறதென்று பொருள் கொள்ளலாம்.

(இணைப்புப் படத்திலுள்ள சொற்றொடர்களை எழுதியவர்கள் வைணவர்களாவர். இவர்களைப் பொருத்தவரை காண்பவனை விட காணப்படுவதே மேலானதாகும். இக்கண்ணோட்டத்தின் அடிப்படையில் பொருள் காணவேண்டும்.)

2. பாண்டவர்கள் 12 ஆண்டு கால காட்டு வாழ்விலிருந்து வெளிப்பட்டார்கள்

🌷 காடு - வையகம்
🌷 பாண்டவர்கள் - 5 பேர் - 5 புலன்கள்

மெய்யறிவு அடையும்வரை வையகத்திலிருந்து புலன்கள் வழியாக பெறப்படும் தரவுகளால் மனம் கட்டுண்டு கிடக்கும். மெய்யறிவு அடைந்த பிறகும், கண்கள் காணும், காதுகள் கேட்கும்... ஆனால், பாதிப்பிருக்காது. இதையே, "காட்டிலிருந்து புலன்கள் விடுபட்டன" என்ற உருவகப் படுத்தியுள்ளனர்.

3. இராமபிரான், இலக்குவன் & சீதையன்னை அயோத்திக்கு திரும்பினர்

🌷 இராமபிரான் - இருள். வைணவர்களுக்கு இருளே பெரிது. எனவே, முதலில் இடம் பெறுகிறது.
🌷 இலக்குவன் - ஒளி
🌷 சீதையன்னை - குளுமை
🌷 அயோத்தி - போர் நடக்காத இடம்

வையகம் என்பது போர் (அன்றாட வாழ்க்கை) நடக்குமிடம். இதற்கு எதிரான திருநீற்று நிலையென்பது போர் நடக்காத இடம் (அயோத்தி - அ+யுத்தா). அந்நிலைக்கு திரும்பும்போது, நாமிருப்போம் (ஒளி - இலக்குவன்); வெறுமையிருக்கும் (இருள்); ஜிஎஸ்டி-சூழ் வையகத்திலிருந்து தப்பினோம் என்ற குழுமையுமிருக்கும் (சீதை).

4. மன்னர் மகாபலியை ஒழித்து, அன்னை இலக்குமியை மீட்டார் குறளன் பெருமாள்

🌷 குறளன் பெருமாள் - வாமனர் - பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்பட்ட "நான் யார்?" போன்ற சின்னஞ்சிறு அறிவுரை.

🌷 மகாபலி - "நான் இன்னார்" என்ற நமது தனித்தன்மை

🌷 இலக்குமி - மெய்யறிவு

மெய்யாசிரியரின் அறிவுரையை தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால், ஒரு சமயத்தில், நமது தனித்தன்மை அழியும். மெய்யறிவு தானாக வெளிப்படும். இதையே மகாபலியை (நமது தனித்தன்மை) அழித்து, அன்னையை (மெய்யறிவு) மீட்டார் குறளன் பெருமாள் (அறிவுரை) என்று உருவகப்படுத்தியுள்ளனர்.

5. அன்னை இலக்குமி தோன்றிய நாள்

மெய்யறிவு தோன்றிய நாள்.

oOo

ஆக, உருவகங்கள் வெவ்வேறாக இருந்தாலும், அவையுணர்த்தும் பொருள் ஒன்றுதான்: தீபாவளி திருநாள் என்பது மெய்யறிவு கிடைத்த நாளாகும்!

🔸 யாருக்கு மெய்யறிவு கிடைத்த நாள்?

5,125 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கண்ணன் என்ற ஆரியப் பெருமானுக்கு மெய்யறிவு கிடைத்த நாள்.

🔸 இத்திருநாளுக்கும் வைணவத்திற்கும் தொடர்புண்டா?

சிறிதளவு கூட கிடையாது. வைணவம் மெய்யறிவுக்கு எதிரானது. தீபாவளித் திருநாளோ மெய்யறிவைப் போற்றுவது. மேலும், கண்ணபிரான் வாழ்ந்த காலத்தில் வைணவமே கிடையாது!

🔸 எனில், ஏன் அனைத்து உருவகங்களும் வைணவர்களுடையதாக உள்ளன?

கண்ணபிரான் ஓர் ஆரியர் என்பதைத்தவிர வேறு பதில் கிடையாது.

எவ்வாறு அரேபியர்களை குறிமதத்தான்கள் கொண்டாடுகிறார்களோ, ஐரோப்பியர்களை எம்எல்எம் மதத்தினர் கொண்டாடுகிறார்களோ, அவ்வாறே கண்ணபிரானை ஆரியர்கள் கொண்டாடுகிறார்கள். ("அவரு எங்க ஆளு!")

oOOo

கண்ணனே காண்பித்தான். கண்ணனே எழுதினான். 🌺🙏🏽🙇🏽‍♂️ (இங்கு கண்ணன் என்பது மாயையாகும். 5,125 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெருமானல்ல.)

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, July 16, 2023

பூரி ஜெகந்நாதர் திருக்கோயில் இறையுருவங்கள்!


வையகக் காட்சி விலகி, திருநீற்று நிலை (ஆரியத்தில், சமாதி) தொடங்கியதும், சில தெளிவில்லாத காட்சிகளை அன்னை மாயை (அல்லது, மாயக்கண்ணன்) தோற்றுவித்து, நம்மை மீண்டும் வையகத்திற்குள் தள்ள முயற்சிப்பார். அந்த தெளிவில்லாத காட்சிகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவைதாம் இந்த இறையுருவங்கள்.

இப்போது நாம் காணும் முத்திரட்சிக் (ஆரியத்தில், முப்பரிமாணம்) காட்சிகளை போலல்லாது, திருநீற்று நிலைக் காட்சிகள் இருதிரட்சிக் காட்சிகளாக இருக்கும். பழைய கருப்பு-வெள்ளைத் திரைப்படங்களை காணும்போது, படச்சுருள் முடியும் தருவாயில், சில கீறல்கள் தெளிவில்லாமல் திரையில் ஓடுவதைப் பார்த்திருப்போம். இவ்வண்ணமே திருநீற்று நிலைக் காட்சிகள் இருக்கும். இக்காட்சிகளே பூரி இறையுருவங்களின் அடிப்படையாகும்.

திருநீற்று நிலையின் தொடக்கமே இறுதிநிலை என்று கணக்கிட்டு, அப்போதுள்ள காட்சியை படம்பிடிப்பது போன்று கருவறை இறையுருவங்களை உருவாக்கியுள்ளனர். உடன், அவர்களது வைணவ நம்பிக்கைகளையும் சேர்த்துள்ளனர்:

🔸 இருளே பெரிது. எக்கணமும் இடைவிடாது இருப்பது.

திரு கண்ணபிரான் - கருப்பு நிறம். பெரிய உருவம். வட்டவடிவக் கண்கள். இடைவிடாது எக்கணமும் இருப்பதைக் குறிக்கும்.

🔸 இருளிலிருந்து ஒளி பிறந்தது. ஒளி தோன்றி மறையக்கூடியது.

திரு பலராமர் - வெள்ளை நிறம். கண்ணபிரானை விட சற்று சிறிய உருவம். முட்டைவடிவக் கண்கள். ஒரு புறம் குவிந்தும், மறுபுறம் விரிந்துமிருக்கும். தோன்றி மறைவதைக் குறிக்கும்.

🔸 இறுதியாக காட்சிகள் பிறந்தன. காட்சிகளும் தோன்றி மறையக்கூடியவை.

திரு சுபத்திரை - மஞ்சள் நிறம். விளையாட்டுப் பிள்ளையை நினைவுபடுத்தும் சிறிய உருவம். பலராமரைப் போன்ற முட்டைவடிவக் கண்கள்.

இம்மூன்று உருவங்களையும் சற்று மாற்றி சிந்தித்தால்... இறை-உயிர்-தளை (ஆரியத்தில், பசு-பதி-பாசம்கிடைத்துவிடும்! ☺️

மேலும், பூரி இறையுருவங்கள் வைக்கப்பட்டிருக்கும் வரிசையை சிந்தித்தால்... உமைமுருகுஈசர் (ஆரியத்தில், சோமாஸ்கந்தர்) கிடைத்துவிடுவார்! 😏

🌷 உமைமுருகுஈசர்: கணவன் + விளையாட்டுப் பிள்ளை + மனைவி

🌷 பூரி: அண்ணன் + விளையாட்டுத் தங்கை + தம்பி

ஆனால், ஒரு பெரிய வேறுபாடுள்ளது. நம் பெரியவர்கள் இறை-உயிர்-தளை என்று மூன்று முடிவில்லாத பொருட்களை வரையறுத்திருந்தாலும், உமைமுருகுஈசர் என்ற இறையுருவை வடித்திருந்தாலும், கருவறையில் வைத்தது சிவலிங்கமென்ற ஓர் இறையுருவை மட்டுமே! ஏனெனில், இருப்பது ஒரு பொருளேயாகும். திருநீற்று நிலையின் தொடக்கத்தில் வேண்டுமானால் 2 அல்லது 3 பொருட்கள் இருப்பதுபோன்று தோன்றலாம். ஆனால், அந்நிலை தொடரும்போது, இருப்பது ஒரு பொருளே என்பது தெளிவாகும்.

🌷 சிவலிங்கத்தின் வளைந்த மேல்பகுதி - உள்ளபொருள் முடிவற்றது

🌷 சிவலிங்கத்தின் சீரான தண்டுப்பகுதி - உள்ளபொருள் மாற்றமடையாதது

oOo


வைணவத்தின் சின்னமாக பெண்குறியை மட்டும் இராமானுஜர் அறிவித்தார். ஆனால், மற்ற பகுதிகளில் வாழ்ந்த வைணவர்கள், தங்களது தனித்தன்மையை காட்டுவதற்காக அதில் சில மாற்றங்களை செய்துகொண்டனர். பூரி பகுதியில் வாழ்ந்தோர், பெண்ணுறுப்பின் வெளித்தோற்றத்தோடு, பெண்ணுடலின் உட்புறத்தில், இரு பக்கங்களிலுமுள்ள கருமுட்டைப் பைகளையும் சேர்த்துக்கொண்டனர். கருமுட்டைப் பைகளை இறையுருவின் காதணிகளாகவும், பெண்ணுறுப்பின் வெளிப்புறத்தோற்றத்தை கழுத்தணியாகவும் காட்டியுள்ளனர்.

குருவாயூர் பகுதியில் வாழ்ந்தோர், பெண்ணுறுப்பின் உட்புறத்தோற்றத்தை, குறிப்பாக கருப்பையையும், கருமுட்டைப் பைகளையும் எடுத்துக்கொண்டுள்ளனர். இவற்றை குருவாயூர் உடையவரை சுற்றியுள்ள ஒப்பனையில் காட்டியுள்ளனர்.

oOo

இராமானுஜருக்கு முன்னர் நாமச்சின்னம் கிடையாது. 1,300 ஆண்டுகளுக்கு முன்னர் வைணவமே கிடையாது. ஆனால், பூரி திருக்கோயில் வெகு பழமையானதாக கருதப்படுகிறது. எனில், 1,300 ஆண்டுகளுக்கு முன்னர் அக்கருவறையில் இருந்த இறையுரு எது?

வடக்கிலிருந்து வந்த பெளத்தம் போனியாகாத நிலை ஏற்பட்ட பிறகு, அதிலிருந்து ஒரு பகுதியினர் வைணவத்தை உருவாக்கி, தொழிலைத் தொடர்ந்தனர் என்பது வரலாறு. எனில், 1,300 ஆண்டுகளுக்கு முன்னர் பூரி திருக்கோயில் பௌத்தக் கோயிலாக இருந்ததா?

ஆனால், அத்திருக்கோயிலின் கருவறை பல்லாயிரமாண்டுகள் பழமையானது என்கிறார்கள். பௌத்தத்தின் வயதோ 2,500 ஆண்டுகள் மட்டுமே. இதிலும், 500-700 ஆண்டுகள் கழித்தே அது தெற்கில் பரவத்தொடங்கியது. எனில், பௌத்தத்திற்கு முன்னர் அக்கருவறையில் இருந்த இறையுரு எது? அக்கருவறையின் கீழ் திருநீற்று நிலையிலிருக்கும் பெருமானின் கண்ணோட்டம்தான் யாது?

உடலாக (பூரி) உலகைக் (ஜெகம்) கொண்ட தலைவனாக (நாதன்) வைணவர்கள் போற்றும் அந்த பூரி பெருமானுக்கே வெளிச்சம்! 🙏🏽

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼

Sunday, October 23, 2022

தீபாவளி திருநாள் - சில குறிப்புகள்


அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!!

🙏🏽✨🎁🍥🍡🎊🎉

oOo

☀️ தீபாவளி - திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️ மெய்யறிவு பெற்ற நாள்

☀️ நரகாசுரன் - "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம். இவ்வெண்ணத்தை ஒழிக்கும் நாளே தீபாவளி.

☀️ கங்கையில் குளித்தீரா? - மெய்யறிவு பெற்றீரா?

☀️ வைணவத்தை முன்னிறுத்தவும், கார் காலத்தில் அடங்கிப்போகும் பொருளாதாரத்தை தூண்டிவிடுவதற்காகவும், வடக்கத்தியரின் திருநாளான தீபாவளியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார் மன்னர் திருமலை நாயக்கர்.

அறிமுகம்தான் அன்று நடந்தது. ஆனால், இத்திருவிழா பற்றி என்றோ நாம் அறிந்திருந்தோம். உலகின் பல பகுதிகளுக்கு சென்றுவந்தவர்கள் நாம். வடக்கோடு பல காலம் போர் புரிந்திருக்கிறோம். ஆரியப்படை கடந்திருக்கிறோம். இமயத்தில் கொடி நட்டிருக்கிறோம். கங்கை நீர் கொண்டுவந்திருக்கிறோம். ஆகையால், வடக்கைப் பற்றி நாம் அறிந்திருந்தோம். நமக்கு தேவையானவை நம்மிடம் ஏற்கனவேயிருந்ததால், தீபாவளியை நம் மன்னர்கள் இங்கு கொண்டுவரவில்லை. நம்மால்தான் ஏனையோர் செம்மையானார்களே தவிர, ஏனையோரால் நாம் செம்மையாகும் நிலையில் நம்மை எப்பெருமான் படைக்கவில்லை! 💪🏽

☀️ கடகத் திங்களில் (ஆடி) அம்மன் கோவில்களில் நடத்தப்படும் கூழ் வார்த்தலும், நிறைகோல் திங்களில் (ஐப்பசி) கொண்டாடப்படும் தீபாவளியும், பொருளாதாரத்தை தூண்டிவிடுதல் என்ற வகையில், ஒன்றுதான். கூழ் வார்த்தலின்போது, அனைவரது பணமும் கோயிலுக்கு சென்று, கூழாக மாறி, மீண்டும் அனைவரையும் வந்தடையும். தீபாவளியின்போது, அவரவர் பணத்தை அவரவரே செலவு செய்து மகிழ்ந்து கொள்வர்.

☀️ தீபாவளி என்ற பெயருக்கும், கண்ணபிரான் மெய்யறிவு பெற்ற நிகழ்வுக்கும் எந்த தொடர்புமில்லை. தீபாவளி எனில் விளக்குகளின் வரிசை. எத்தனை விளக்குகள் ஏற்றினாலும், எத்தனை வகையான விளக்குகள் ஏற்றினாலும், அவற்றில் எரியும் நெருப்பு ஒன்றுதான். இதுபோன்றே, எத்தனை கோடி உயிரிகள் வாழ்ந்தாலும், அவர்களின் தன்மையுணர்வு ஒன்றுதான். இந்த பேருண்மை உணரப்பட்டது திருவண்ணாமலையில். உணர்ந்த நாளை திருக்கார்த்திகை திருநாளாக இன்றுவரை கொண்டாடி வருகிறோம். இந்த விளக்கீடு திருவிழாவால் கவரப்பட்ட வடக்கத்தியர், இதனை கண்ணபிரானோடு இணைத்துவிட்டார்கள்.

தீபாவளியன்று விளக்கிடுதலை வடக்கத்தியர் வைத்துக்கொள்ளட்டும். நம் திருஞானசம்பந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️ பாடியதுபோன்று "தொல் கார்த்திகை நாளன்று" நாம் விளக்கேற்றுவோம். நமது தொன்மையான மரபைக் காப்போம்.

oOo


தீபாவளி பற்றி பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ எழுதிய ஒரு பாடல்:

நர குடல் நானா நர குலகு ஆளும்
நரகன் எங்கென்று உசாவின்ஞானத் திகிரியால்
நரகனைக் கொன்றவன் நாரணன் அன்றே
நரக சதுர்த்தசி நல் தினமாமே

பொருள்: "இவ்வுடலே நான்" என்ற தவறான எண்ணமே (மனமே) நம்மையாளும் நரகாசுரன். "இந்த எண்ணம் (அசுரன்) எங்கிருந்து தோன்றுகிறது?", அல்லது, "யாருக்கு தோன்றுகிறது?" என்று நோக்கினால் (நோக்கம் - ஞானத்திகிரி - அறிவெனும் சக்கிராயுதம்), எழுந்த எண்ணம் காணாமல் போகும் (கொல்லுதல்). இவ்வாறு செய்பவனே (மனதை கொல்பவனே / மனதென்பது இன்னது என்று உணர்ந்து கொள்பவனே) நாராயணன். இது நடக்கும் நாளே தீபாவளி.

oOOo

சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்
கண்ணனே காட்டினான் கண்ணனே தாக்கினான்
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Wednesday, November 3, 2021

அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!! 🙏🏽✨🎁🍥🍡🎊🎉


☀️ தீபாவளி - திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️ நரகாசுரனை கொன்ற நாள். அதாவது, கண்ணபிரான் மெய்யறிவு பெற்ற நாள்.

☀️ நரகாசுரன் - "நான் இந்த உடல்" என்ற தவறான எண்ணம். இந்த தவறான எண்ணத்தை விட்டொழிக்க வேண்டுமெனில் நம்மைப் பற்றிய சரியான அறிவு துய்ப்பாக மலரவேண்டும். இது கண்ணபிரானுக்கு நடந்த நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.

☀️ கங்கை குளியல் - தீபாவளியன்று சந்திக்கும் நபர்களிடம் கேட்கப்படும் கேள்வி: கங்கையில் குளித்தீரா? (கங்கா ஸ்நானம் ஆச்சா?) இதன் பொருள்: மெய்யறிவு கிடைத்ததா?

மெய்யறிவில் திளைக்கும்போது நம் தலையிலுள்ள பிட்டியூட்டரி சுரப்பி சிறப்பாக வேலை செய்யும். இதனால் உடலிலுள்ள மற்ற சுரப்பிகள் தூண்டப்பட்டு, அவையும் சிறப்பாக வேலை செய்யும். இதையே குளியல் என்று குறிப்பிட்டுள்ளனர். பிட்டியூட்டரி சுரப்பியிலிருந்து வெளிப்படும் நீர் வெள்ளை (கங்கை) நிறத்தில் இருப்பதால் "கங்கை குளியல்" என்று பெயரிட்டுள்ளனர். இதையே "சிவபெருமானின் தலையிலிருந்து கங்கை நீர் வெளிப்படுவதாக" உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

☀️ தமிழகத்தில் தீபாவளியை அறிமுகப்படுத்தியது தெலுங்கு வைணவ மன்னரான திருமலை நாயக்கராவார். வைணவம் பரவுவதற்காகவும், அடைமழை காலத்தில் அடங்கிப் போகும் பொருளாதாரத்தை தூண்டிவிடுவதற்காகவும் அறிமுகப்படுத்தினார். இன்றும் கூட, பெரும்பாலான கிராமப்புற தமிழர்கள் தீபாவளியை கொண்டாடுவதில்லை. பொங்கலே தமிழர் திருநாளாகும்.

☀️ கண்ணபிரான் உணர்ந்து வெளிப்படுத்திய பேருண்மை மெய்யறிவைப் பற்றியது. ஆனால், தீபாவளி என்ற சொல் உணர்த்தும் பேருண்மை வேறு: விளக்குகள் பலவானாலும் எரியும் நெருப்பு ஒன்றுதான். இது போன்று, உயிரிகள் பலவானாலும் எல்லோருள்ளும் உள்ள தன்மையுணர்வு ஒன்றுதான்.

இந்த உண்மை உணரப்பட்ட திருத்தலம் நமது திருவண்ணாமலை (உணரப்பட்ட திருநாள் - திருக்கார்த்திகை). சில சமயம், ஒரு திரைப்படம் தமிழிலிருந்து வடக்கிற்கு சென்று, மீண்டும் வடக்கிலிருந்து தமிழுக்கு வரும். இது போன்று, திருக்கார்த்திகை வடக்கிற்கு சென்று கண்ணபிரானின் திருநாளோடு இணைந்து தீபாவளியாகி, பின்னர், மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. ஆனாலும், நம்மவர்கள் விளக்கிடுதலை மட்டும் திருக்கார்த்திகையன்றே தொடர்ந்துள்ளனர்.

தீபாவளியன்று விளக்கிடுதலை வடக்கத்தியர் வைத்துக்கொள்ளட்டும். நாம் "தொல் கார்த்திகை நாளன்று" (காழியூர் பிள்ளையாரின் சொற்கள் 🌺🙏🏽🙇🏽‍♂️) விளக்கேற்றுவோம். நமது தொன்மையான மரபைக் காப்போம்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Wednesday, January 6, 2021

தீபாவளி - திரு கண்ணபிரான் 🌺🙏🏽 மெய்யறிவு பெற்ற நாள்!!


🪔 நம் உடலே நரகம். நாம் இவ்வுடல் என்ற தவறான எண்ணமே நரகாசுரன். இத்தவறான எண்ணத்தை விட்டொழித்தலே தீபாவளி - கொண்டாட்டம் - பெருமகிழ்ச்சி - மரணமில்லாப் பெருவாழ்வு!

🪔 நரகாசூரன் பன்றிப் பெருமாளுக்கும் நிலமகளுக்கும் பிறந்தவர் - நிலமகள் என்பது நமது உடல். பன்றிப்பெருமாள் என்பது மெய்யறிவு பெறாத நாமே.

(பன்றித்திருவிறக்க கதையில் பன்றிப்பெருமாள் கடலுக்குள் சென்று பூமாதேவியை மீட்டு வருவார். இவ்வுருவகக் கதையில் வரும் பூமாதேவி மெய்யறிவைக் குறிக்கும். பூமா எனில் முழுமை. ஆனால், பூமி என்று தவறாகப் பொருள் கொண்டுவிட்டனர். இக்கதையில் வரும் கடல் என்பது நமது உடல். கடலுக்குள் செல்லும் பெருமாள் என்பது மெய்யறிவுக்காக வடக்கிருக்கும் நாம். பூமாதேவியுடன் திரும்ப வரும் பெருமாள் என்பது மெய்யறிவு பெற்று உலக வாழ்க்கைக்கு திரும்பும் நாம். கடலுக்குள் செல்லும் போதும், பூமாதேவியுடன் வெளிப்படும் போதும் பெருமாள் பெருமாள் தான். வேறுபாடு பூமாதேவி மட்டுமே. இவ்வாறே, மெய்யறிவு பெறுவதற்கு முன்னும், பெற்ற பின்னும் நாம் நாம் தான். வேறுபாடு நம்மைப் பற்றிய மெய்யறிவு மட்டும் தான்.)

நம்மைப் பற்றிய தெளிவு இல்லாததால் அழிவற்ற நம்மை (பெருமாள்) அழியும் உடலுடன் (நிலமகள்) இணைத்துக் கொள்கிறோம். விளைவு... "நாம் இவ்வுடல்" என்ற நரகாசூரன்!!

🪔 நரகாசூரனின் இறப்பு. தனது இறப்பு தன் தாயின் மூலமாக மட்டுமே நிகழ வேண்டும் என்ற பேறுபெற்று வந்தவன் நரகாசூரன். இதன்படி, கண்ணபிரான் திருவிறக்கத்தில் கண்ணபிரான் (தந்தை) போராடி அயர்ந்த பின்னர், சத்யபாமா (தாய்) போராடி நரகாசூரனைக் கொல்லுவார்.

இக்கதையில் வரும் கண்ணபிரான் நாமே. எவ்வளவு முட்டிமோதினாலும் "நாம் இவ்வுடல்" என்ற பொய்யறிவு நம்மைவிட்டு விலகாது. இது விலக 2 வழிகள் உண்டு: 1. பல காலம் வடக்கிருந்து, மிகவும் முதிர்ந்த (பக்குவமடைந்த) பின்னர் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 போன்ற மெய்யாசிரியர்களின் அறிவுரைகளால் நமதுண்மையை உணர்தல், 2. மொத்த அண்டமும் நமக்குள் இருந்தாலும், நாம் அதற்குள் இருப்பது போல் கண்கட்டு வித்தைக் காட்டிக்கொண்டிருக்கும் அன்னை மாயை (சத்யபாமா) சில கணங்கள் காட்சிகளைத் தவிர்த்து நமதுண்மையை நாம் உணர வழிவிடுதல்.

இரண்டாவது வழியில் அன்னையால்தான் "நாம் இவ்வுடல்" என்ற எண்ணம் (நரகாசூரன்) அழிகிறது என்றால் ஏற்றுக் கொள்வோம். முதலாவது வழியிலும் அன்னை தான் கொல்கிறார். அறிவுரையை வெளிவிட்ட மெய்யாசிரியர் சிவப்பரம்பொருளில் நிலைபெற்றவராய் இருந்தாலும், அவரிடமிருந்து வெளிப்பட்ட அறிவுரை உயிரற்ற பொருளாகிறது - அன்னையின் கூறாகிவிடுகிறது (அம்சமாகிவிடுகிறது).

ஆக, இரு வழிகளிலும் அன்னை தான் "நாம் இவ்வுடல்" என்ற தவறான எண்ணத்தை அழிக்கிறார். இதையே அன்னை சத்யபாமாவால் நரகாசூரன் இறப்பதாக உருவகப்படுத்தியுள்ளனர்.

🪔 "கங்கை நீரில் குளித்தீரா?" - தீபாவளியன்று கேட்கப்படும் பாரம்பரிய கேள்வி. நலம் விசாரிப்பது போல.

மெய்யறிவில் நிலைபெறும்போது நம் உச்சந்தலையிலுள்ள பிடியுட்டரி சுரப்பி நன்கு சுரக்கும். அதன் வெள்ளை நீர் (கங்கை நீர்; கங்கை - வெள்ளை) உடலெங்கும் பரவி, மற்ற சுரப்பிகளைத் தூண்டி உடலை சீராக்கி, மகிழ்ச்சியைக் கொடுக்கும். இதை, சிவபெருமானின் ஓவியத்தில் அவரது தலையிலிருந்து கங்கை நீர் வெளிப்படுவது போல் வரைந்திருப்பார்கள்.

"கங்கை நீரில் குளித்தீரா?" என்ற கேள்வியின் உட்பொருள்:

- மெய்யறிவு பெற்றீரா?
- உமதுண்மையை உணர்ந்தீரா?
- சிவப்பரம்பொருளாய் சமைந்தீரா?
- தன்மையுணர்வில் நிலைபெற்றீரா?

🪔 இவ்வளவு பொருள் பொதிந்த திருவிழாவாக இருந்தாலும், வடக்கத்திய தீபாவளி நம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் திருமலை நாயக்கர் காலத்தில்தான். இந்நாளன்று வடகத்தியர் தீபங்களை ஏற்றுவதற்கு அடிப்படை நமது கார்த்திகை திருநாள்! இடைக்காட்டுச் சித்தர் உணர்ந்து உணர்த்திய "ஏகன் அநேகன்" என்ற பேருண்மையைக் கொண்டாடும் கார்த்திகை திருநாள் திருவிழா அவ்வளவு தாக்கத்தை ஆரியர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

oOOo

ஒரு தீபாவளி திருநாளுக்காக பகவான் எழுதிய பாடல்:

நர குடல் நானா நர குலகு ஆளும்
நரகன் எங்கென்று உசாவின்ஞானத் திகிரியால்
நரகனைக் கொன்றவன் நாரணன் அன்றே
நரக சதுர்த்தசி நல் தினமாமே

பொருள்: அழியும் இவ்வுடலா நான்? இவ்வுடலை ஆளும் நரகாசூரன் எங்கு உள்ளான்? என்று ஆராய்ந்து, தானே உள்ளபொருள் என்று தெளிந்து, அந்த மெய்யறிவினால் (ஞானத்திகிரி - பெருமாளின் கையிலுள்ள சக்கிராயுதம்) தான் இவ்வுடல் என்ற தவறான எண்ணத்தை (நரகாசூரனை) விட்டொழித்தவனே (கொன்றவனே) நாராயணன். அப்படி விட்டொழித்த நாளே நரகசதுர்த்தசி எனும் தீபாவளி நன்னாளாம்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

பி.கு.: வைணவத்திற்கும் கண்ணபிரானுக்கும் எந்த தொடர்புமில்லை. வைணவம் தோன்றியது பொது ஆண்டு 700களில். நிலைபெற்றதோ 1500களில் (விஜயநகர & நாயக்க மன்னர்களின் காலத்தில்). ஆனால், கண்ணபிரான் வாழ்ந்ததோ சுமார் 5,100 ஆண்டுகளுக்கு முன்னர்!

Thursday, July 23, 2020

இன்று கண்ணில் பட்ட சுவிசேஷ ஊழியம்: கண்ணாலுயா!! 😝

நாறோடு பூவைச் சேர்த்து பூவையும் நாற வைத்திருக்கிறார்கள்!!

திரு #கண்ணபிரான் 🌺🙏🏽 உணர்த்துவது எல்லையில்லாப் பெருமகிழ்ச்சி: உலகம் மகிழ்ச்சியின் வடிவு. வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டியது.

#இஸ்ரவேலரை வைத்து பாவாடைப் பரங்கிப் பன்னாடைகள் உணர்த்துவது ஒப்பாரி: 2000 வருசத்துக்கு முன்னாடி
உன்ன கொன்னுட்டாங்களேயா!!

(இந்த ஒப்பாரி உத்தி வருவது கிரேக்க-ரோமானியர்களிடமிருந்து. நமது முன்னோர் விரும்பியது நீதி, நியாயம், தர்மம், வீரக் கதைகளை. கிரேக்க-ரோமானியர் விரும்பியது அழுகையை. ஒரு நாடகம் எவ்வளவு தூரம் அவர்களுக்கு அழுகையை வரவழைக்கிறதோ, அவ்வளவு தூரம் அது அவர்களுக்கு பிடித்துப்போகும். இது தான் ஒப்பாரி உத்திக்கு அடிப்படை.)

கண்ணபிரானை இவர்களது இஸ்ரவேலரோடு சேர்த்து, பிரானையும் வருத்தப்பட வைத்திருக்கிறார்கள்! பூவை நாற வைத்திருக்கிறார்கள்!! ("எங்களோடு சேர்ந்தால் உங்களுக்கும் இந்த நிலைமைதான்" என்று சொல்ல வருகிறார்கள் போலிருக்கிறது! 😜)

"#வருத்தப்பட்டு #பாரம் #சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள். இளைப்பாறுதல் தருகிறேன்." என்பது இஸ்ரவேலர் சொன்னது. இஸ்ரவேலர் பாரதம் வந்தது அத்வைதம் & பௌத்தம் கற்க. ஒப்பாரிக்காக அல்ல.

நாம் காணும் உலகம் தோற்ற மாத்திரம்தான். உண்மையல்ல. கனவு போன்றது. கனவு காண்பவனுக்கு, தான் காண்பது கனவு என்ற அறிவு இருந்தால் எவ்வாறு கனவால் பாதிப்படையமாட்டானோ, அவ்வாறே நமது உடல், உலகம் எல்லாம் தோற்ற மாத்திரம் என்ற அறிவு இருந்தால் போதும். எதுவும் நம்மை பாதிக்காது. இவ்வறிவு கிடைக்கும் வரை வாழ்க்கை என்பது வருத்தப்பட்டு பாரம் சுமப்பது போன்றது. அறிவு கிடைத்த பின், வாழ்க்கை என்பது இளைப்பாறுவது போன்றது!!

இஸ்ரவேலரின் இனம் நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டிருந்த இனம். கல்வியறிவு இல்லாதது. பண்படாதது. இதனால்தான் இஸ்ரவேலரின் அறிவுரைகள் மிகவும் திரிந்துபோயின. இன்றோ... அது ஒரு பன்னாட்டு MLM தொழில்!!!

💥💥💥💥💥

இந்த ஊழியப் படத்தை நான் கண்டெடுத்தது திரு. #ஸ்டான்லி #ராஜனின் முகநூல் பக்கத்தில். இதற்கு அவர் செய்த எதிர்ஊழியத்தை கீழே இணைத்துள்ளேன். படித்துப் பரவசமடையவும். #கண்ணாலுயா... 😜

💥💥💥💥💥

ஆக பகவான் கண்ணன் சிலுவை சுமந்து, சிலுவையில் செத்து உலக மக்களை பாவத்தில் இருந்து மீட்டெடுத்திருக்கின்றார், ஆனால் கிறிஸ்தவ இம்சைகள், சும்மா கூட நடந்து சென்ற இயேசுவினை கடவுளாக்கிவிட்டன‌!

இந்த உண்மையினை உலகுக்கு சொல்லிவிட்ட கிறிஸ்தவர்களுக்கு நன்றி

இனி சிலுவைகளெல்லாம் சங்கு சக்கரமாகட்டும், தேவாலயங்களெல்லாம் விஷ்ணு ஆலயமாகட்டும். பைபிளுக்கு பதில் கீதை முழங்கட்டும்

ஓயினும் அப்பமும் என்பது பொங்கலும் தயிர்சாதமுமாக மாறட்டும்

தேவமாதா என்பவர் யசோதா எனும் உண்மை வெளிவரட்டும், ஏரோது என்பவன் கம்சன் என்பதும், பீட்டர் என்பவர் பலராமன் என்பதும் இனி நிலைபெறட்டும்

பிரைஸ் த கிருஷ்ணா. கண்ணாலூயா..

#இயேசு இரண்டாம் வருகை என்பது இதுதான், ஆம் அவர் இப்போது கிருஷ்ணனாக வந்துவிட்டார் அவ்வளவுதான்..

✊🏽👊🏽🤜🏽👊🏽🤛🏽👊🏽👊🏽👊🏽😌