Thursday, February 10, 2022

திருக்குறள் #1017: நாண் என்ற சொல்லுக்கு எது சிறப்பாக பொருந்துகிறது? வெட்கமா? பற்றா?


நாணால் உயிரைத் துறப்பர் உயிர்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்

-- திருக்குறள் #1017 (நாணுடைமை)

தொன்மவழி பொருள்: நாணத்தைத் தமக்குரிய பண்பாகக் கொள்பவர், நாணத்தால் உயிரை விடுவார்; உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விடமாட்டார். (மு.வ.)

இனி, சொற்களை சற்று மாற்றிப்பார்ப்போம்!

நாண் என்ற சொல்லுக்கு கயிறு என்றும் பொருளுண்டு. கயிறு என்ற சொல்லுக்கு பற்று (பாசம்) என்றும் பொருளுண்டு.

நாண் -> கயிறு -> பற்று

பற்றால் உயிரைத் துறப்பர் உயிர்பொருட்டால்
பற்றுதுறவார் பற்றாள் பவர்

இப்போது கிடைக்கும் பொருள் நம்மில் பெரும்பாலானோர்க்கு பொருந்தும்: கொண்ட பற்றினால் / கொண்ட பற்றுக்காக உயிரையும் விடுவோம். உயிர்போகும் தருவாயிலும் பற்றை விடமாட்டோம். ஏனெனில், பற்றே நம்மையாள்கிறது / பற்றால் நாம் ஆட்கொள்ளப்பட்டுவிட்டோம்.

இவ்வகையில், மேற்கண்ட குறளிலுள்ள 'நாண்' என்ற சொல்லுக்கு 'வெட்கம்' என்ற பொருளைவிட, 'பற்று' என்ற பொருள்தான் நன்கு பொருந்துவதாகத் தோன்றுகிறது.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment