Tuesday, December 31, 2019
ஆங்கில புத்தாண்டு எனப்படும் சொதப்பல் புத்தாண்டு!!! 😁😁 - மறுபகிர்வு (2020)
Monday, December 30, 2019
அண்ணாமலை வெண்பா - காப்பு செய்யுள்
Saturday, December 28, 2019
ஒரு பேருண்மையை உணர்த்தும் உருவகத்தை கேலிக்கூத்தாக்கி உள்ளார்கள்!! 😡
ஏமாற்றுவதற்காக, விளையாட்டிற்காக இந்த காணொளியை எடுத்துள்ளார்கள்! எனக்கு தெரிந்தவரின் நண்பர் இந்த காணொளியை எடுக்கும்போது உடன் இருந்துள்ளார். குச்சியால் தட்டி தான் விழ வைத்திருக்கிறார்கள்!!
"பேருண்மைகளை உணர்ந்து, போற்றி, பாராட்டி, பகிர்ந்து, பாதுகாப்பவர்கள் நாங்கள்!!", என்று மார்தட்டிக் கொண்டவர்களே அவர்களது மூதாதையர்கள் உருவாக்கிய ஒரு உருவகத்தை இப்படி கேலிக்கூத்தாக்கி உள்ளார்கள்!!
அப்படியென்ன பேருண்மையை இந்த உலக்கை உணர்த்துகிறது? ...
உலக்கை மனித உடலைக் குறிக்கும். நிலவு மனதைக் குறிக்கும். பகலவன் ஆன்மாவைக் குறிக்கும். மனம் (நிலவு) ஆன்மாவில் (பகலவனில்) ஒன்றுவதே சமாதி (கிரகணம்/மறைப்பு) எனப்படும். இந்த சமாதி நிலையின் போது உடல் அசைவற்று இருக்கும் (உலக்கை அப்படியே நிற்பது போல்). சமாதி முடிந்த பின் (மனம் ஆன்மாவிலிருந்து வெளிப்பட்ட பின் - கிரகணம் முடிந்த பின்), மனம்-உடல் இயங்க ஆரம்பித்துவிடும். உலக இயக்கத்துக்குள் சென்றுவிடும். சமாதி என்னும் மேலான நிலையிலிருந்து, உலகம் என்னும் கீழான நிலைக்கு செல்வதை கீழே விழும் உலக்கை உணர்த்தும்.
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽
Saturday, November 30, 2019
"நம்மைக் கெடுத்தான் நம்மாழ்வான்"!!!
Sunday, November 24, 2019
"மகாவீர் சக்ரா" ஜஸ்வந்த் சிங் 🙏🏽💐
பாரத-சீன போரின்போது நவம்பர் 15, 1962 அன்று தனி ஒருவராக 72 மணிநேரம் போரிட்டு 300 சீன வீரர்களை கொன்று குவித்த மாவீரர் #ஜஸ்வந்த் #சிங் பற்றிய கட்டுரை...
#திருக்குறள் ஊழியத்திற்கு வ.உ.சி. கிடைத்துவிட்டார்!!
https://www.hindutamil.in/amp/news/opinion/columns/525736-voc.html
சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை அசோக்நகர் பகுதியில் இயங்கி வந்த ஒர் இந்து சமய-சமூக-தேசத் துரோக நிறுவனம் (கருங்காலி சாதி அரசியல் கட்சி), அது இயங்கி வந்த வாடகை இடத்திலிருந்து காலி செய்யச் சொல்லி உயர் நீதிமன்றம் ஆணையிட்டும், காலி செய்ய மறுத்தது. பின்னர், காவல்துறையைக் கொண்டு அவர்களை வெளியேற்றிய போது அப்பகுதியையே போர்களமாக்கினர். (முதலில் வாடகைக்கு குடி வந்து, பின்னர் மொத்தத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளலாம் என்ற அவர்களது "நியாயமான" கனவில் மண் விழுந்ததால் அவ்வளவு வயிற்றெரிச்சல், கோபம், ஆத்திரம்.) இதற்கு சமமான "அறப்போர்" தான் இன்று திருவள்ளுவரை வைத்து நடந்து கொண்டிருக்கின்றது. 😎
எத்தனை ஆண்டு கால "ஊழியம்"? வளர்ப்பு மகளை மணந்தவன் 🤢, தொழில் செய்தவளுக்கு பிறந்து அக்காள் மகளை வைத்து தொழில் செய்தவன் 🤮, திருட்டு ரயில் ஏறி வந்து மொத்த தமிழ்நாட்டையும் தன் குடும்பத்தாருக்கு கூறுபோட நினைத்தவன் 🥶 ... வளர்ப்பு மகளை அடைய நினைத்தவன் 🤯 என்று எத்தனை கருங்காலிகளின் "ஊழியங்கள்"? திருக்குறளில் டுபாக்கூர் புத்தகத்தின் கருத்துக்கள் உள்ளன என்றும், காலத்தால் முற்பட்ட திருவள்ளுவரை 🌺🙏🏽 பாரதத்திற்கு வந்தேயிராத தோமையரின் மாணவர் என்றும் பல வித விதைப் பந்துகளை உருவாக்கி, கல்வி, ஊடகம் போன்ற விமானங்கள் வாயிலாக மக்கள் என்னும் விளைநிலத்தில் வீசியெறிதல் போன்ற எத்தனை மெக்காலே "ஊழியத்" திட்டங்கள்? 🥵 அத்தனையும் வீணாக விடுவரா? 👻👹👺
சிவஞானபோதத்திற்கு உரை எழுதி, இறுதி வரை சைவ சமய வகுப்புகள் நடத்திக் கொண்டு, சுத்த சைவராக வாழ்ந்த வ உ சிதம்பரம் பிள்ளையவர்களை கேடயமாக்க முயற்சித்திருக்கிறார்கள் - பரிமேல்அழகரின் திருக்குறள் உரையில் பிழைகள் உள்ளனவாம்!! நம் சமய கருத்துக்கள் தெள்ளத் தெளிவாக காணப்படும் கடவுள் வாழ்த்து முதலான முதல் 4 திருக்குறள் அதிகாரங்களும் இடைச்செருகலாம்!!! இப்படி #வஉசி சொன்னார் என்று மட்டும் எழுதியிருக்கிறார்கள். இதற்கு பின்னர், தமிழறிஞர் வையாபுரி பிள்ளையவர்களின் விளக்கத்தைக் கேட்டு வஉசி அமைதியுற்றார் என்பதை எழுதவில்லை. "ஊழியத்திற்கு" உதவாததை ஒதுக்குவதும் / மறைப்பதும் சிறந்த ஊழியம் எனக் கருதியிருக்கலாம். 😒
தமிழையும், தமிழரையும் அவர்களது சொந்த சமயத்திலிருந்து பிரிக்க பல "ஊழியத்" திட்டங்கள் இயக்கத்தில் உள்ளன. தற்போது இயக்கத்திலுள்ள #சுமேரியா #திட்டம் வெற்றி பெற்றால் திருக்குறள் திட்டத்தின் பங்களிப்பு ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். அவ்வளவு பாதகமானது!! திருக்குறளை வைத்து நம்மை நம் சொந்த சமயத்திலிருந்து பிரித்து, நாம் சமணர்கள் என்று போக்கு காட்டி, நரித்துவத்தோடு இணைக்க முற்பட்டார்கள். சுமேரியா திட்டத்தின் மூலம் நமது தோற்றம், சமயம், மொழி, நாட்டுப்பற்று என அனைத்தையும் ஒரே நேரத்தில் குறி வைத்து, இஸ்ரவேல் அத்வைதியான யேசுவை நமது மாமன்-மச்சான் கடவுளாக கொண்டாட வைத்து, நரித்துவத்தை நமது சொந்த மதமாக காண வைத்து, தமிழகத்தை காஷ்மீரம் போன்று மாற்றி ஆள்வதே இவர்களது குறிக்கோள். 🤬😡
பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்
-- குறள் #319
வள்ளுவ நாயனாரின் சொற்படி உலகக் கொல்லிகளான பரங்கியரும், அவர்களது அடிவருடும் நம் நாட்டு கருங்காலிகளும் துன்பப்படும் காலம் விரைவில் வரும்!!
🌸🏵️🌼🌻💮
"#மனத்துக்கண் #மாசிலன் ..." என்ற திருக்குறளுக்கு வஉசியின் உரை: மனத்தின்கண் குற்றம் இல்லாதவனாய் செய்யப்படுவது அனைத்தும் அறம்; குற்றம் உள்ளவனாய் செய்யப்படுவன துன்பம் தருவன.
(மற்றவர்கள் "... மாசிலன் ஆதல்..." என்று பதம் பிரிக்க, இவர் மட்டும் "மாசிலன் ஆவது" என்று பிரித்துள்ளார்.)
"தன் மனத்தின்கண் குற்றமில்லாதவனாய் ஆகுக; அவ்வளவே அறம்", என்று உரை எழுதியவர்களை, "மனத்தின்கண் குற்றமில்லாதவனாய் ஆதல் ஓர் ஒழுக்கமேயன்றி அதுவே அறமாகாது.", என்று எதிர்க்கிறார். மேலும், "அறம் என்பது ஓர் உயிர்க்கு நன்மை பயக்கும் ஒரு செயல்", என்று பொருள் கூறுகிறார்.
🌸🏵️🌼🌻💮
அறம் என்பது அறு என்ற வினையோடு தொடர்பு கொண்டது. நல்லறம், இல்லறம், துறவறம். நல்வழி, இல்வழி, துறவு வழி. இந்த மாய உலகில் நல்லபடியாக பயணித்து கரையேற - மெய்யறிவு / நிலைபேறு பெற - நாம் தேர்ந்தெடுக்கும் / உருவாக்கி கொள்ளும் வழியே அறம்.
மெய்யறிவாளரை (இறைவனை) வாலறிவன், வேண்டுதல் வேண்டாமை இலான், இருவினையும் சேரா இறைவன், தனக்குவமை இல்லாதான், ஐந்தவித்தான் என்று பலவாறு அழைத்த நாயனார், இக்குறளில் மனத்துக்கண் மாசிலன் என்றழைக்கிறார். இப்படி பலவாறு அழைப்பதன் மூலம் மெய்யறிவாளர் என்பவர் யார், அந்நிலையை எப்படி அடைவது போன்ற கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார்.
மனத்துக்கண் மாசிலன் - மனதில் மாசு இல்லாதவன். மாசு எனில் தீய எண்ணங்கள் மட்டுமல்ல. நல்லெண்ணங்களும் மாசு தான். மாசற்று - எண்ணங்களற்று - இருத்தலே நிலைபேறாகும். சிவப்பரம்பொருளுக்கு #மாசிலாமணி என்றொரு அருமையான பெயர் இருப்பதும் இந்த அடிப்படையில் தான்.
எண்ணங்களற்று இருப்பது எவ்வாறு?
இக்கேள்விக்கு, நம் தமிழ் மண் உருவாக்கிய பெரும் மாமுனிவர்களில் ஒருவரான பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 கொடுத்த அருமையான பதில் ("நான் யார்?" என்ற நூலிலிருந்து, கேள்விகள் 10 & 11):
"நான் யார்?" என்னும் விசாரணையினாலேயே மனம் அடங்கும். "நான் யார்?" என்னும் நினைவு மற்ற நினைவுகளை எல்லாம் அழித்து, பிணம் சுடும் தடி போல் முடிவில் தானும் அழியும். பிற எண்ணங்கள் எழுந்தால் அவற்றை பூர்த்தி பண்ணுவதற்கு எத்தனியாமல், அவை "யாருக்கு உண்டாயின?" என்று விசாரிக்க வேண்டும். எத்தனை எண்ணங்கள் எழினும் என்ன? ஜாக்கிரதையாய் ஒவ்வொரு எண்ணமும் கிளம்பும் போதே "இது யாருக்கும் உண்டாயிற்று?" என்று விசாரித்தால் எனக்கு என்று தோன்றும். "நான் யார்?" என்று விசாரித்தால் மனம் தன் பிறப்பிடத்திற்குத் திரும்பி விடும்; எழுந்த எண்ணமும் அடங்கிவிடும். இப்படி பழகப்பழக மனதிற்கு தன் பிறப்பிடத்தில் தங்கி நிற்கும் சக்தி அதிகரிக்கின்றது.
(விசாரித்தல் / விசாரணை - தற்கவனம் - தன்னாட்டம் - தன்னை நாடுதல் - நான் என்னும் நம் தன்மையுணர்வின் மேல் நம் கவன ஆற்றலை வைத்திருத்தல்.)
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽
Wednesday, November 13, 2019
A Hindu's ignorance of his glorious past is deadlier than a dirty bomb!!
After the recent #Ayodhiyaa verdict, a person I know quipped that Hindhus should hand over their temples to Buddhists & Jains as he was under the impression that Hindhus built their temples upon the ruins of #Buddhist & #Jain temples. The following text was my reply to him:
There are 2 kinds of #Temples: alive & lifeless. Our #Annaamalaiyaar temple is a live temple. It's the samaadhi temple of Idaikkaattu Siddhar. Most of the ancient temples are such temples. In fact, before Buddishm & Jainism, only such places were called temples. Practice of constructing lifeless temples started with Buddhists & Jains. After the fall of these 2 religions, Hindhuism took over this practice because of growing population & unemployment (commercial reasons).
Worship, Temples, ... did not start with #Buddishm & #Jainism. Famous #Thirumalai temple is an example. Right now, it's maintained by Vaishnavites (a section of erstwhile Buddhists). Before that, it was maintained by Vedic Priests. Before that, Jains. Before everyone else, Saivites (Aadhi Saivam).
The famous practice of #Sallekhana of Jains (death by fasting) comes from Thamizhs. Research about the Thamizh word #Vadakkiruththal (#வடக்கிருத்தல்). It predates Jainism. Aadhi Saivam was the original religion of this land. Everything else comes from it.
In TN, Buddhists weren't as successful as their Jain siblings because of wrong marketing strategy. Thamizhs loved their language very much. Jains marketed their -ism in Thamizh and Buddhists in Sanskrit. After gaining control of TN, Jains started their atrocities (like the Buddhists did & doing in Sri Lanka) - converting Hindhu temples, etc., The famous #Mulaiyur incident from the life of Appar Swaamigal (one of the 4 major Saiva Naayanmaargal) is a proof. Jains took over the Siva temple in Mulaiyur, covered the Lingam with cloths, placed their deity in front of the Lingam. Appar & His disciples protested by fasting in front of the temple and made the ruler (probably a Chozhan ruling under Pallavan) remove the Jains and their deity.
Buddhists & Jains are welcome to take back all their lifeless temples. If it's a live temple and if they can prove that the Lord residing there in samadhi is one of their monks/followers, they are welcome to take over. Our ancient temples are enough to guide us. In fact, a person with correct knowledge of Thamizh does not require any temple or any other guidance. His language will show him the way. In Thamizh, both a person's place of living and 4th Purushaarthaa is called #Veedu (#வீடு). If he understands it's etymology, nothing else and no one else is required to realize his true Self!! 💪🏽
💥💥💥💥💥
This reply not only made him quiet. It made him accept his ignorance of our past. Like him, because of Communist & Periyaarist influenced education, movies & other media (funded by anti-Hindhu, anti-social & anti-national elements), most of us have wrong or little knowledge about our past resulting in very low respect for our glorious history, culture and knowledge. 😔
Monday, November 11, 2019
காட்டுமிராண்டிகள் பாரதத்தை சீரழித்ததற்கு காரணம் பரிணாம வளர்ச்சியாம்!! 😏
Thursday, November 7, 2019
🐷 #பன்றி #திருவிறக்கம் (#வராக #அவதாரம்)
🏵️🌼🌻
Saturday, November 2, 2019
நிறத்தை வைத்து ஊழியம்!! 😏
"வள்ளலார் ஏன் காவியை நிராகரித்தார்?" என்று கேள்வி கேட்டு விட்டு, "இந்து மதத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது காவி நிறம்" என்று கட்டுரையை ஆரம்பித்து, வள்ளலாரின் எழுத்துக்களில் இருந்து ஒரு விளக்கத்தைக் கொடுத்து விட்டு, கட்டுரையை கீழ்கண்டவாறு முடித்துள்ளார்கள்:
தத்துவங்களை கடக்க முடியாதவர்கள் அணிந்து கொள்வது காவி உடை. தத்துவங்களை கடந்து இறை அருளைப்பெற்றதால், வெற்றி அடைந்ததால், வெற்றியின் சின்னமான வெள்ளை உடையை தேர்ந்தெடுத்தார் வள்ளலார் என்று அவரின் உபதேசம் மூலம் அறியமுடிகிறது.
(https://www.nakkheeran.in/360-news/thodargal/vallalar-story)
இந்தக் கருங்காலி ஊடகங்களை அறிந்தவர்கள், இந்த கட்டுரை எதற்கு என்று இந்நேரம் உணர்ந்திருப்பார்கள்.
முதலில் இப்படி ஒரு பிட்டை போடுவார்கள். அடுத்து, பாவாடைகளின் நிறத்தோடு ஒப்பிடுவார்கள். இறுதியில், "இஸ்ரவேல் அத்வைதி யேசுவின் உடையின் நிறத்தால் வள்ளலார் கவரப்பட்டார்", என்று "ஆராய்ச்சிக் கட்டுரைகளை" வெளியிடுவார்கள். இந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை அவர்களது டுபாக்கூர் பல்கலைகழகங்களைக் கொண்டு அங்கீகரிப்பார்கள். பின்னர், இந்த ஆராய்வுகளை பரங்கிப் பல்கலைக்கழகங்களுக்கு கொண்டு செல்வார்கள். "இன்றைய உலகின் தேவர்களாகிய" பரங்கிகள் அங்கீகரித்த பின், நமது பாட நூல்களில் சேர்ப்பார்கள். "வாஸ்கோடகாமா பாரதத்தை கண்டுபிடித்தான்", என்ற பேருண்மையை நாம் படித்தது போல, நம் வருங்கால சந்ததியினர், "இஸ்ரவேல் அத்வைதியான யேசு அணிந்திருந்த உடையின் நிறத்தால் கவரப்பட்ட வள்ளலார் வெள்ளையாடை உடுத்தினார்", என்ற பேருண்மையை படிப்பார்கள். ஆமென்!! 😝
இது ஊழியத்தின் முதல் படி!
பட்டினத்தார், திரு அருணகிரிநாதர், வள்ளலார், திரு ரமணர் போன்றோர் வெள்ளையாடை உடுத்தியிருந்தவர்கள். யாரும் யேசுவுக்கு போட்டியாகி விடக்கூடாதல்லவா? வள்ளலாரை தாழ்த்தியாகி விட்டது (அதாவது, "யேசுவின் உடையைப் பார்த்துத்தான் பெருமானார் வெள்ளையாடையை தேர்ந்தெடுத்தார்" என்ற பிட்). மற்றவர்களையும் தாழ்த்த வேண்டுமே! மேலும், பொரைகள் தொடர்ந்து வந்து விழுந்து கொண்டிருக்க வேண்டுமே!!
இனி ஊழியத்தின் அடுத்த படி!!
"எவ்வளவு பெரிய வெள்ளையாடை உடுத்தியிருக்கிறார்களோ அவ்வளவு தூரம் அவர்கள் தத்துவங்களைக் கடந்தவர்கள்" என்ற பிட்டை வெளியிடுவார்கள். 😂 இதன் படி, யேசு முதலிடம் பெறுவார். பட்டினத்தார் 2ஆம் இடமும், திரு அருணகிரிநாதரும் திரு ரமணரும் 3ஆம் இடத்தை பெறுவார்கள். 🤣 இதனால் "யேசுவே மெய்யான தேவன்" என்ற வேதாகம வசனம் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்று திருச்சபைகள் தோறும் களிகூத்து 🥴 நடத்துவார்கள்.
"ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை" -- கொரிந்தியர் 4:16
😁😜🤪😝😂🤣
🙈 "காவி உடுத்திய திரு கௌதம புத்தர் எந்த தத்துவத்தையும் கடக்கவில்லையா?", என்று கேட்பவன் முட்டாள்!
🙉 "முழுவதுமாக வெள்ளைத் துணியில் சுற்றப்பட்டு பிணக்கிடங்கிலிருந்து வெளிவரும் பிணம் எல்லா தத்துவங்களையும் கடந்ததா?", என்று கேட்பவன் அயோக்கியன்!
🙊 "எல்லாவற்றையும் விட்டு தத்துவமாய் நிற்பது தான் குறிக்கோள். அதென்ன தத்துவங்களை கடப்பது?", என்று கேட்பவன் காட்டுமிராண்டி!
"நக்கீரனை நம்புகிறவனோ செழிப்பான்"
😂😂😂🤣
👊🏽👊🏽👊🏽👊🏽
Thursday, October 24, 2019
அச்சிறுபாக்கம் திருஆட்சீஸ்வரர் 🌸🙏🏼 திருக்கோயில்
(இடதுபுறமிருப்பது திரு ஆட்சீஸ்வர பெருமானின் கருவறை, வலதுபுறமிருப்பது திரு உமை ஆட்சீஸ்வர பெருமானின் கருவறை)
🌷 அச்சிறுபாக்கம் - அச்சு இறு பாக்கம். அச்சு முறிந்த இடம்.
🌷 எதன் அச்சு முறிந்தது? மனம் எனும் தேரின் அச்சு முறிந்த இடம்.
🌷 முறிந்தால் என்னவாகும்? தேர் நின்று போகும். நிலைத்து போகும். நிலைபேறு.
🌷 யாருக்கு நிலைபேறு கிட்டியது? மூலவர் திரு ஆட்சீஸ்வர அடையாளத்தின் (லிங்கத்தின்) கீழ் சமாதியாகி இருக்கும் பெருமானுக்கு.
🌷 யாரிவர்? இவரது சமாதி அடையாளத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் பெயர் (ஆட்சீஸ்வரர்), திருஞானசம்பந்தரின் 🌺🙏🏼 பதிகம் (ஆட்சி கொண்டார்) மற்றும் தல புருடா (1) (பாண்டிய மன்னன்) ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தால், இவர் மிக பழமையான காலத்தைச் சேர்ந்த அரசராக இருக்கலாம் என்று தோன்றுகிறது ("பாண்டிய" என்னும் சொல்லுக்கு பழமை என்றொரு பொருள் உண்டு). (2)
🌷 இவரை ஏன் #சுயம்பு என்று குறிப்பிட்டுள்ளனர்? சுயம்பு என்றவுடன் மூலவர் தானாக, நிலத்திலிருந்து வளர்ந்து வந்ததாக நாம் நினைத்துக் கொள்ளும் படி நமக்கு வேப்பிலை அடித்திருக்கிறார்கள்! 😛 உண்மை என்னவென்றால், இப்பெருமான் எந்த மெய்யாசிரியரின் உதவியின்றி, எந்த பயிற்சியுமின்றி தானாக நிலைபேற்றை அடைந்திருப்பார். இதற்கு மிக சரியான எடுத்துக் காட்டு: #பகவான் #திரு #ரமணர் 🌺🙏🏼. பெரிய புராணம் ஏற்படுத்திய தாக்கம் தவிர வேறெதுவும் அறிந்திராத தனது 16 வயதில், யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல், எந்த பயிற்சியும் செய்யாமல் நிலைபேறு பெற்றார். இப்படிப்பட்டவர்களைத் தான் சுயம்பு, #தான்தோன்றி என்று நம் முன்னோர்கள் அழைத்தார்கள்!!
#ஆளுடைய #பிள்ளையும் தனது பதிகத்தில் இத்தலத்து பெருமான் வடக்கிருக்காதவர், வேள்வி செய்யாதவர், பூசைகள் செய்யாதவர் என்று பாடியிருக்கிறார். மேலும், "இப்படிப்பட்டவர் என்று அறிய முடியாதவர்" என்றும் பாடியிருக்கிறார் (#சம்பந்தர் #தேவாரம் 1.77.9). (எனில், பிள்ளையார் வருகை தந்த போது இப்பெருமானார் உடல் தாங்கி இருந்தாரா; அல்லது, அவருக்கு கிடைத்த செவிவழிச் செய்திகள், ஓலைச்சுவடி குறிப்புகளைக் கொண்டு இவ்வாறு பாடினாரா என்று தெரியவில்லை.)
🌷 இது போன்ற உயிர்ப்புள்ள தலங்கள் இன்று பொருளாதாரத்துடன் இணைக்கப்பட்டு, சிலைத்திருடர்கள் கைகளில் அகப்பட்டு மதிப்பிழந்து கிடக்கின்றன! 😔 அன்று இருந்த நிலையே வேறு. மெய்யறிவுத் தாகம் கொண்ட அன்பர்கள் பலர் வடக்கிருந்த பகுதிகள் இவை! 😍 அவர்களில் சிலர் மெய்யறிவு பெற்று சமாதியும் அடைந்த புனிதமான பகுதிகள்!! கால வெள்ளத்தில் பல சமாதிகளை, அவற்றின் அடையாளங்களோடு (லிங்கங்களோடு) இழந்துவிட்டோம். தப்பிய சிலவற்றையும், அறிவை இழந்ததால், சமாதிகளை விட்டுவிட்டு, அவற்றின் மேல் வைக்கப்பட்ட அடையாளங்களை மட்டும் காப்பாற்றி, உள் சுற்றில் வைத்துக் கொண்டோம். சில மெய்யறிவாளர்களின் சமாதிகள் மட்டும் அவர்கள் பெற்றிருந்த பெரும் புகழ், செய்திருந்த செயற்கரிய செயல்கள், அவர்களிடமிருந்து வெளிப்பட்ட சிறந்த அறிவுரைகள் போன்று ஏதோ சில காரணங்களால் தனி கோயில்களாகவே மாறியுள்ளன. இந்த திருத்தல வளாகத்தில், திரு ஆட்சீஸ்வர உடையாரின் கருவறைக்கு பின்புறம் அமைந்துள்ள #திரு #உமை #ஆட்சீஸ்வரர் #கோயில் 🌺🙏🏼 அப்படி அமைந்த ஒன்றாகும் (சென்னையிலுள்ள #திருக்கச்சூர் #திரு #கச்சபேஸ்வரர் 🌺🙏🏼 ஆலய வளாகத்திலுள்ள #திரு #விருந்திட்ட #வரதரின் 🌺🙏🏼 - #சுந்தரமூர்த்தி #நாயனாருக்குக்காக 🌺🙏🏼 ஊருக்குள் சென்று உணவை இரந்து பெற்று வந்த மெய்யறிவாளரின் - சமாதி கோயிலும் இப்படிப்பட்டது தான்). (3)
இக்கோயிலின் கருவறையில் மூலவருக்கு பின்புறமுள்ள சுவற்றில் சிவ தத்துவமும் சக்தி தத்துவமும் அமர்ந்திருக்கும் புடைப்பு சிற்பத்தை வைத்திருக்கிறார்கள். இதை #திருமண #கோலம் அல்லது #திருக்கைலாய #காட்சி என்பர். இது போன்ற சிற்பம்/சுதை எந்தெந்த திருத்தலங்களில் உள்ளதோ, அங்கெல்லாம் தல புருடாக்களில், "அகத்திய மாமுனிவருக்கு இறைவன் திருமண காட்சி கொடுத்த தலம்" என்று பதிவு செய்திருப்பார்கள்! 😁 நாமும் நமக்கு தெரிந்த குள்ள முனிவர் இங்கு வந்தார் போலிருக்கிறது, இறைவனும் இறைவியும் காட்சி கொடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது என்று கற்பனை செய்து கொள்வோம். 🤭 இதில் உண்மையும் இருக்கிறது. ஏமாற்று வேலையும் இருக்கிறது.
மெய்யறிவு பெற்ற எல்லோருமே அகத்தியர்கள் தாம்! அவர்கள்து கவன ஆற்றல் எக்கணமும் அகத்தில் (நான் என்னும் தன்மையுணர்வில்) தான் இருக்கும். புறத்தே செல்லாது. புறத்தே எல்லா செயல்களையும் நம்மைப் போல் அவர்கள் செய்வது போலத் தோன்றினாலும், அவர்களது இருப்புணர்வில் எந்த மாற்றமும் இருக்காது. எனவே, அவர்கள் எல்லோருமே அகத்தியர்கள் தாம். ஆக, மேற்கண்ட தல புருடா சொற்றொடரில் அகத்தியர் என்ற சொல் சரியே. ஆனால், அச்சொல்லைக் கேட்டதும் குள்ளமான அகத்திய மாமுனிவர் நம் நினைவுக்கு வருவது போல் நம் மூளையை பதப்படுத்தியிருப்பது தான் ஏமாற்றுவேலை! 😉 (உண்மையில் அகத்திய மாமுனிவர் சமாதியாகி இருப்பது திருவனந்தபுரம் திரு அனந்தபத்மநாப உடையாரின் கீழே 🌺🙏🏼)
அடுத்தது திருமண கோலம்/திருக்கைலாய காட்சி. சாதாரண சீவர்களுக்கு உலகினுள் தாம் இருப்பது போன்று தோன்றும். மெய்யறிவாளர்களுக்கு, சமாதி நிலையில், பசு-பதி-பாசம் (கெளமாரத்தில் சேவல்-வேல்-மயில்) என மூன்றும் பிரிந்து தோன்றும் (பதி எனும் திரையில் பசுவும் பாசமும் காட்சிகள் போன்று தோன்றும்). இந்த பட்டறிவு விழிப்பு நிலையிலும் தொடர்வதால், பதியாகிய தம் இருப்பு நிலையை விடாதிருப்பர். மற்றவற்றை கானல் நீர் காட்சிகள் போன்று காண்பர் - அதாவது, இருப்பற்றவை என்று உணர்ந்திருப்பர். கொடுப்பினை இருந்தால், விழிப்பு நிலையில், சில சமயங்களில், அவர்கள் திரையாகவும், இவ்வுலகம் அதில் தோன்றும் காட்சிகளாகவும் காண்பிக்கப்படும். அதாவது இருப்புள்ளதும் (சிவம்) இருப்பற்றதும் (சக்தி) ஒரு சேரக் காண்பிக்கப்படுகிறது. இதுவே திருமணக் கோலம் என்றும், திருக்கைலாய காட்சி என்றும் அழைக்கப்படுகிறது. 🙏🏼 (4)
(கவனிக்கவும், இங்கு "காண்பிக்கப்படும்" என்று எழுதியுள்ளேன். மேலே, "காண்பர்" என்று எழுதியுள்ளேன். இது முயன்று அடைவதல்ல. கொடுப்பினை இருந்தால் தானாக வருவது. இதனால் தான் தல புருடாவில் அகத்திய மாமுனிவருக்கு இறைவன் திருமண கோலம் / திருக்கைலாய காட்சி "காட்டிய தலம்" என்று பதிவு செய்தார்கள்.)
இதில், "உண்மையும் இருக்கிறது. ஏமாற்று வேலையும் இருக்கிறது." என்று மேலே எழுதியிருந்தேன். திருமணக் கோலம் என்பது உண்மை. ஆனால், திருமணக்கோலம் என்றதும் கைலாயத்தில் சிவபெருமானுக்கும் சக்தி அன்னைக்கும் திருமணம் நடந்ததாக நம்மை கற்பனை செய்துகொள்ள வைத்திருக்கிறார்களே... அது ஏமாற்று வேலை! 😏
இனி, ஒரு பழமையான திருத்தலத்தின் கருவறையில் மூலவருக்கு பின்புறம் திருக்கைலாய காட்சியைக் காண நேர்ந்தால், "மூலவரின் கீழே சமாதியில் இருக்கும் பெருமான், உடல் தாங்கியிருந்த காலத்தில் திருக்கைலாய காட்சியைக் காணும் பேறு பெற்றவர்" என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
🌷 இத்தலத்திற்கு வள்ளற் பெருமான் என்றழைக்கப்படும் திரு இராமலிங்க அடிகளாரும் வருகை தந்திருக்கிறார்.
🏵️🌼🌻
இவ்வளவு பழமை, அருமை, பெருமைகள் கொண்ட இந்த புனிதத் தலத்தின் இன்றைய நிலை...
🤬 திருத்தலத்தைச் சுற்றிலும் திறந்த வெளி சாக்கடை கால்வாய்கள் கொண்ட "மேன்மையான" பகுதி.
😤 "இறை தொடர்பில் எக்கணமும் இருக்க வேண்டும்" என்பதற்காக திருக்கோயிலின் ஒரு பக்க மதில் சுவரை, தங்களது ஒரு பக்க சுவராக பாவித்து சிலர் கட்டிக் கொண்டுள்ள கட்டிடங்கள்.
😡 திரு உமை ஆட்சீஸ்வரப் பெருமானின் கருவறையை வலம் வரும் போது மேற்கத்திய தொழில் நுட்பத்தின் மேன்மையை பறை சாற்றும் சான்றுகள் (மக்காத குப்பைகள் என்று கூட இவை அழைக்கப்படுவதுண்டு 😁).
😠 சில தலங்களில் ஆரியப்பன் (ஐயப்பன் - ஆரியர்கள் உருவாக்கியதால் ஆரியப்பன்), சீரடி சாய்பாபா என காலத்திற்கேற்றவாறு, தொழில் ஓடுவதற்காக சேர்த்துக் கொள்ளப்பட்ட "ஜன ஆகர்ஷ்ண யந்திரங்களைக்" 🤑 காணலாம். இத்திருத்தலத்தின் வெளிச் சுற்றில் வைக்கப்பட்டுள்ள 7 கன்னியர் சிலைகள் அவ்வாறு வைக்கப்பட்டவையாக இருக்கும்.
💥 அடுத்து, "பெசல் அயிட்டம்".
இராஜகோபுரத்தைக் கடந்து முதன்மை வாயிலுக்குள் நுழைந்ததுமே, விநாயகரை காப்பியடிக்க முயற்சித்து நாமப்பேர்வழிகள் உருவாக்கின அனுமார் கூப்பிய கைகளுடன் நிற்கிறார் ("பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிந்தது" என்பது பழமொழி). யாரை வணங்குகிறார் என்று பார்த்தால், தூரத்தில் "திருமலையில் சமாதியான கொங்கணவ சித்தரின் சமாதி அடையாளமாக வைக்கப்பட்டுள்ள" ஏழுமலையான் நிற்கிறார். இவ்விரண்டு சிலைகளுக்கும் உள்ள இடைவெளியைப் பார்த்தாலே புரியும் என்ன "கைங்கர்யம்" இங்கே நடந்திருக்கிறது என்று. அருகிலுள்ள மதுராந்தகம், நாமப்பேர்வழிகளின் ஆதிக்கம் இருந்த பகுதி. அவர்களின் வால் இங்கேயும் நீண்டிருக்கிறது. (நாயக்க மன்னர்களின் ஆட்சி காலத்தின் நாமம் உயர்வு பெற்றது. உடன் பெண் தெய்வ வழிபாடும் மீண்டும் புத்துயிர் பெற்றது. இவர்கள் எந்த தத்துவத்தை பெண்ணாக தூக்கிப் பிடிக்கிறார்களோ அதையே ஆணாக மாற்றி தூக்கிப் பிடிக்கிறது நாமம்.) அனுமாரை பார்த்து விட்டுத்தான் நாம் திரு ஆட்சீஸ்வர உடையாரை பார்க்க வேண்டுமாம். 🤬
அனுமார் நிற்குமிடத்தில் பிணக்குறியீட்டை வைத்து விட்டு, பெருமாள் நிற்குமிடத்தில் இஸ்ரவேல் அத்வைதியான இயேசுவை வைத்தால் சும்மா இருப்போமா? 😡 அல்லது, பெருமாள் நிற்குமிடத்தில் ஒரு குட்டிச் சுவரை கட்டி வைத்து, அனுமார் நிற்குமிடத்தில் ஒரு காட்டுமிராண்டி பஸ்கி எடுத்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் நமக்கு? 😠
மீண்டும் உண்மைக்கு ஒரு காலம் வந்து விடாமலா போய்விடும்!
(தேவையில்லாமல் சைவத்தையும், அத்வைதத்தையும் வம்பிழுக்கும் நாமப்பேர்வழிகளைத் தான் எதிர்க்கிறேன். பெருமாள்களை அல்ல. திருமலைப் பெருமாள் 🌺🙏🏼 சுமார் 2,300 ஆண்டுகள் பழமையானவர். நாம மதம் சுமார் 1,300 ஆண்டுகள் பழமையானது. நாமமோ சுமார் 900 ஆண்டுகளே ஆனது. நாமம் என்றால் ஏமாற்று வேலை. "நாமம் போட்டுட்டாங்களா?" - ஏமாத்திட்டாங்களா? "நாமம் போட்டுட்டியா?" - ஏமாத்திட்டியா? வைணவம் என்பது ஏமாற்று வேலை. பெண்குறியைத் தான் நாமமாக அறிவித்தார் இராமானுஜர்.)
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்!! 💪🏽💪🏽💪🏽
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼
🌸🏵️🌼🌻💮
குறிப்புகள்:
1. தல புருடா: "மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு" என்பதைப் போல, "தல புருடாக்களை அப்படியே ஏற்று கொள்வது நமக்கும் நம் சமயத்திற்கும் கேடு"!! 😁 தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு, மீதத்தை ஒதுக்குவதே இந்து சமய - சமூக - தேசத் துரோக கூட்டங்கள் பெருகாமல் இருப்பதற்கான உபாயம். 😇
2. "அரியணையில் இருந்து கொண்டு, அரச சுகங்களை துய்த்துக் கொண்டு ஒருவரால் எப்படி நிலைபேற்றை அடையமுடியும்?" என்ற கேள்வி எழலாம். அப்படியே நிலைபேற்றை அடைந்தாலும், "எவ்வாறு அதில் தொடர்ந்து நிலைத்திருக்க முடியும்?" என்ற கேள்வியும் எழலாம்.
பண்டைய ஆட்சியாளர்கள் இன்றைய கொள்ளையர்களைப் போன்று பயிரை மேயும் வேலிகளா? "#ஓர்ந்து #கண்ணோடாது #இறை #புரிந்தவர்கள்" (#திருக்குறள் - #செங்கோன்மை - #541) - ஓருமையாம் தனதியல்பில் நின்று (ஓர்ந்து), மனதை சிதறவிடாது (கண்ணோடாது), செல்வமும் ஏனைய வளங்களும் ஓரிடத்திலேயே தங்கியிருக்காது அனைவரிடமும் பரவச் செய்து, தேவையான காலத்தில் கொடுப்பதற்காக முன்னமே ஒரு பகுதியை வரியாக பெற்று காத்து நின்றவர்கள் (இறை புரிதல்). 👏🏽👏🏽👌🏽😍 (திருக்குறளின் உரைகளை வைத்து இந்த விளக்கத்தை நான் எழுதவில்லை. ஓர்ந்து என்ற சொல்லை பகவான் திரு ரமணரிடமிருந்தும், கண்ணோடாது என்பதற்கு நான் படித்த ஆன்மிக நூல்களிலிருந்தும், இறை என்பதற்கு சொற்பிறப்பியலில் இருந்தும் பொருள் எடுத்துள்ளேன்.)
ஆரிய நூல்களில் (வால்மீகி இராமாயணம், அஷ்டாவக்ர கீதை) வரும் மன்னர் #சனகர் இவரைப் போன்றவரே. மன்னராக வாழ்ந்து கொண்டே, நிலைபேற்றிலும் வழுவாமல் இருந்தார். நமது பாண்டிய மன்னர் #வரகுணப் #பாண்டியரும் நிறைந்த மெய்யறிவாளர் ஆவார். #திருவிடைமருதூர் #திரு #மகாலிங்கேசுவர #உடையார் திருக்கோயிலின் உள்சுற்றில் வலம் வரும் போது திருக்கைலாயக் காட்சி காணும் பேறு பெற்றவர் (இக்காட்சி பற்றி பின்னர் பார்க்கலாம்). இவர்களைப் போன்று இன்னும் எத்தனையோ மெய்யறிவாளர்கள் அரசர்களாக, வியாபாரிகளாக, இல்லறத்தவர்களாக, பல வித வேலையாட்களாக இருந்துள்ளனர். இது எப்படி முடிந்தது? பக்குவப்பட்ட மேன்மையான சமுதாயமே இதற்கு அடிப்படை!!
3. திரு உமை ஆட்சீஸ்வரப் பெருமானைப் பற்றி #காழியூர் #பிள்ளை தனது பதிகத்தில் ஏதும் குறிப்பிடவில்லை. அல்லது, அவர் பாடிய பதிகம் நமக்கு கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை (பிள்ளையார் பாடியது 16,000 பதிகங்கள் என்று பதிவு செய்கிறார் நம்பியாண்டார் நம்பி. ஆனால், நமக்கு கிடைத்தது வெறும் 384 பதிகங்கள் மட்டுமே.) ஆகையால், இவரின் காலம் பிள்ளையாருக்கு பின் என்று கணித்து விட முடியாது. இவர் பெயரில் உமை என்னும் பெண்பால் பெயர் வருவதாலும், பெருமானின் பெயர் (ஆட்சீஸ்வரர்) தொடர்வதாலும், இவர் திரு ஆட்சீஸ்வர பெருமானின் மனைவியாக இருப்பாரோ என்று எனக்கு ஒரு ஐயம் உள்ளது. மெய்யறிவு பெற்ற பின் பாலினம், உறவு முறை என எல்லாம் நம்மை விட்டு கழண்டு விடும். மெய்யறிவு பெற்ற பின் அனைவரும் ஒன்றே. "அனைவரும்" என்பது கூட தவறு. அங்கே அவர், இவர் என்று யாருமில்லை. இருப்பது ஒன்றே. (பகவான் திரு ரமணரின் விளக்கம்) எனினும், வரலாற்றை காப்பதற்காக பெயரில் ஒரு சிறு குறிப்பை விட்டு வைத்தனர். ஆனால், எல்லோரையும் ஒரு இறைவனாக - சிவபெருமானாக - நம்மை காண வைத்தனர். ஏனெனில், "#எல்லாம் #ஒன்றே"!! 😌
4. "நாயைக் கண்டால் கல்லைக் காணோம். கல்லைக் கண்டால் நாயைக் காணோம்." என்பது பெரும்பாலோனோர் அறிந்த பழமொழி. சிலர், இத்துடன் இன்னொரு வரியையும் சேர்ப்பர்: இரண்டையும் கண்டால் அடிப்பவனைக் காணோம்.
☀️ நாயைக் கண்டால் கல்லைக் காணோம் - நாம் காணும் உலக காட்சி. உலகை காண்கிறோம். ஆனால், அதற்கு ஆதாரமான நம்மை நாம் உணர்வதில்லை.
☀️ கல்லைக் கண்டால் நாயைக் காணோம் - மெய்யறிவாளர்கள் காணும் காட்சி. எக்கணமும் தாமாகவே இருப்பவர்கள். தம்மை மட்டுமே பார்ப்பவர்கள். மற்றவை இருப்பற்றவை என்பதை உணர்ந்தவர்கள். எரிந்து முடிந்து, உருக்கலையாத சாம்பல் போன்று காண்பவர்கள். இதனால் தான் மெய்யறிவாளர்களை - சிவனை - சுடுகாட்டில் வசிப்பவர் (காடுடைய சுடலை) என்றழைத்தனர்.
☀️ இரண்டையும் கண்டால் அடிப்பவனைக் காணோம் - திருக்கைலாய காட்சி காணும் போது (இருப்புள்ளதும் இருப்பற்றதும் ஒருசேர காணும் போது), அங்கு சீவன்/மனம் (அடிப்பவன்) இருப்பதில்லை.
🏵️🌼🌻
இனியோம் நாம்உய்ந்தோம் இறைவன்தாள் சேர்ந்தோம்
இனியோர் இடரில்லோம் நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண்
-- காரைக்கால் அம்மையார் 🌺🙏🏼, அற்புதத் திருவந்தாதி, திருமுறை 11.004
Saturday, October 12, 2019
திருமாகறல் - உடும்பு சிவலிங்கம்
இணைப்புத் தலபுருடாவை படித்தவுடன் யாருக்கும் தோன்றுவது, "பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழரிடம் இந்த புருடா பார்ட்டிகள் சரியாக டின் வாங்கியிருக்கிறார்கள்" என்பதே!! 😛
👊🏽 தினமும் காய்க்கும் 🥴 பலா பழத்தை ஒருவர் தலைச்சுமையாக மாகறலிலிருந்து தில்லைக்கு கொண்டு வர வேண்டுமாம்! நம் பேரரசர் என்ன தேவேந்திரனைப் போல கூமுட்டையா இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்க? 😁
👊🏽 தில்லை கூத்தப் பெருமானுக்கு படையல் செய்து விட்டு, கங்கைகொண்ட சோழபுரத்திற்கு பழம் வந்து சேர வேண்டுமாம். அதை தினம் பேரரசர் புசிப்பாராம். எதற்கு? நாள் பூராவும் கழிவறையிலேயே அமர்ந்து இருப்பதற்காகவா? 🤭 அவரென்ன பரங்கி அலெக்ஸாண்டரைப் போல பேட்டை தாதாவா? உண்மையான மாவீரன்! 💪🏽 மாலத்தீவுகள் முதல் ஆரியக் காட்டுமிராண்டிகளின் தாயகமான ரிஷிவர்ஷாவின் (இன்றைய ரஷ்யா) கீழ் பகுதிகள் வரை கோலோச்சியவர். வங்காள விரிகுடாவை அவரது கப்பல்கள் நிறுத்தும் ஏரியாக பயன்படுத்தியவர். 😍🤩
👊🏽 ஒவ்வொருவர் முறை வரும் போதும் அவரவரே பழத்தை சுமந்து சென்றார்கள் என்று ரீல் சுற்றியவர்கள், அந்தணச் சிறுவன் முறை வரும் போது மட்டும் "ஊரே சுமந்து சென்றது" என்று ஓவராக ரீல் சுற்றி விட்டார்கள்! (எடிட்டிங்கில் கோட்டை விட்டுவிட்டனர் போலும்!! 😜) அந்தணன் - எவ்வுயிரையும் தன்னுயிர் போலக் கருதுபவர்; அறவழி நடப்பவர்; பற்றுகளை விட்டவர்; ஈர மனம் கொண்டவர். ஆரியனல்ல.
👊🏽 ஒரு பிஸ்கோத்துப் பயலை நாடு கடத்த பேரரசர் உடன் சென்றாராம். திரும்பும் வழியில் பொன் நிற உடும்பை பார்த்தாராம். அதைப் பிடிக்க முயலும் போது புற்றுக்குள் புகுந்து கொண்டதாம். புற்றை கலைக்கும் போது வால் பகுதியில் கோடரி பட்டு இரத்தம் வந்ததாம். சிவபெருமான் Bosch ஸ்பீக்கர் வழியாக பேசினாராம். கோயில் கட்டச் சொன்னாராம். இதனால் தான் மூலவர், உடும்பின் வால் போலத் தோற்றமளிக்கிறாராம். 😂😂🤣
நோனி என்றொரு மருந்து உண்டு (நுணா பழரசம்). நமது செல் நிலைக்குச் சென்று பணி செய்ய வல்லது. இதனால் எத்தனையோ பயன்கள் இருந்தாலும், சிறு நகரங்களில் இப்படி விளம்பரம் செய்திருப்பர்: ஆண்மை குறைப்பாட்டை முழுவதுமாக தீர்க்க வல்லது!! 😝 இது போன்றது தான் மேற்கண்ட உடும்பு புருடா. எவ்வளவு உயர்ந்த செய்தியை இவ்வளவு தரம் தாழ்த்தி வழங்குகிறார்கள். 🤬
🌷 தினமும் காய்க்கும் பலாப்பழம் என்பது நமது மனதைக் குறிக்கும். தினமும் காலையில் கண் விழித்ததும் தனது வேலையை தொடங்கி விடும். மொத்த மனதும் ஒரு பழம் எனில், அதிலுள்ள ஒவ்வொரு சுளையும் ஒரு எண்ணமாகும். ஒவ்வொரு எண்ணமும் பல பின் விளைவுகளை உருவாக்கவல்லது - சுளையினுள் உள்ள விதைக் கொட்டை மீண்டும் ஒரு மரத்தை உருவாக்க வல்லது போல.
எவ்வளவு அருமையான உவமானம்!! 👌🏽 பேரரசரை மட்டம் தட்ட முயன்று, உவமானத்தை மட்டமாக்கி விட்டார்கள். 😔
🌷 #மாகறல் = மா + கறல் = பெரிய விறகு! சிவப்பரம்பொருளுக்கு ஆரியத்தில் #தாணு என்றொரு பெயருண்டு. இதற்கு சமமான தமிழ் சொல் தான் கறல். நிலையானது, அசைவற்றது, மாறாதது என பல பொருள் உண்டு. மெய்யறிவாளரைக் குறிக்கும். உடன் "மா" சேர்த்ததற்கு காரணம், இந்த உடும்பு அடையாளத்தின் கீழ் சமாதியாகி இருக்கும் மெய்யறிவாளர் 🌺🙏🏼, மிகவும் புகழ் பெற்றவராக அல்லது அவர் காண்பித்த வழி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்திருக்கும். ரிஷி மற்றும் மகரிஷி எனும் ஆரிய சொற்களுக்கும் இடையிலான வேறுபாட்டை போன்றது.
🌷 இத்தலம் மிகவும் தொன்மையான தலங்களுள் ஒன்றாகும். அன்று கையில் கிடைத்த பொருளை சமாதியின் அடையாளமாக வைத்தனர். இதனால்தான் பழமையான சிவலிங்கங்கள் சீராக இல்லாமல், வித விதமான தோற்றங்களில் இருக்கும். நமது சமயம் மிகமிகப் பழமையானது என்பதற்கு, காட்டுமிராண்டிகளின் படையெடுப்புகளில் இருந்து தப்பித்த இது போன்ற சில சிவ அடையாளங்கள் (சிவ லிங்கங்கள்) ஒரு சான்றாகும்!! 👏🏽👌🏽
🌷 இத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் 🌺🙏🏼 வருகை புரிந்து, பதிகம் பாடியிருக்கிறார். பதிகம் முழுவதும் இத்தலத்து இறைவனை தொழுதால் எல்லா வினைகளும் (வினை, தொல்வினை, வருவினை) கனளந்து போகும் எனப் பாடியுள்ளார். இதனாலேயே இப்பதிகத்துக்கு #வினை #களையும் #பதிகம் எனப் பெயரிட்டுள்ளனர். மேலும், சேலம் சுப்பராயப் பிள்ளை என்பவர் தம் உடலில் இடுப்பின் கீழ் செயலற்றுப் போக, எல்லாவித மருத்துவமும் செய்து பலனின்றிப்போக, திருமுறையில் கயிறுசார்த்திப் பார்த்து, இத்தலப்பதிகம் வர, இங்கு வந்து தங்கி, நாடொறும் இறைவனை வழிபட்டு, இப்பதிகத்தை ஓதி, சிலகாலம் வாழ்ந்து, இப்பெருமானருளால் முழுகுணம் பெற்றுத் திரும்பினார். இந்நிகழ்ச்சி அண்மைக் காலத்தில் நிகழ்ந்ததாகும் (சான்று: Shaivam.org). இப்படிப்பட்ட பதிகம் பாடிய ஆளுடையபிள்ளையாரின் காலம் பேரரசரின் காலத்தை விட 400 வருடங்கள் முந்தையது (7ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம்). பின்னாளில், பேரரசர் திருப்பணி செய்திருக்கலாம். ஆக, குறைந்தபட்சம் இத்தலத்தின் வயது 1400 ஆண்டுகள் இருக்கும். ஆனால், அதற்கும் வெகு காலத்திற்கு முன்னரே மூலவர் சமாதி உருவாகியிருக்கும். இப்படிப்பட்ட சிறப்புகளை எடுத்துக் கூறாமல் உடும்பு லிங்கம், யானைமீது முருகன், வீணை மீட்டும் தென்திசைக் கடவுள் என அஜினமோட்டோக்களை 🤮 பயன்படுத்தியுள்ளனர்!! 😡
🌸🏵️🌼🌻💮
இத்தலப்பதிகத்தில் பிள்ளையார், சிவன்காளையை திருமால் எனக் குறிப்பிடுகிறார் (#செங்கண்விடை #யண்ணலடி). நாம மதம் உருவாகி, பெருமாளை கடத்திக் கொண்டு போனதெல்லாம் இவர் காலத்திற்கு பின்னர் தான். எனவே, பெருமாளை மட்டம் தட்டினார் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. "நிலையற்றது" என்ற தத்துவத்தை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
🌸🏵️🌼🌻💮
...மாகறலுளான் அடியையே
உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும் உடனே
-- சம்பந்தர் தேவாரம் 3.72.11
பொருள்: திருமாகறலில் உறையும் பெருமானைப் போற்றும் இப்பதிகத்தை உணர்ந்து ஓதுபவர்களின் தொல்வினைகள் உடனே நசிந்து போகும்.
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼
Wednesday, October 9, 2019
மொத்தத்தில் வகாண்டா, கோவிந்தா!! 😁
Black Panther (கருஞ்சிறுத்தை) என்ற பெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் படத்தின் ஆரம்பத்தில் ஒரு அருங்காட்சியகத்தில் பின்வரும் வசனங்கள் இடைபெறுகிறது (ஆங்கில காணொளி: https://youtu.be/pfBWPhsiN_w):
அருங்காட்சியக இயக்குனர்: வணக்கம். நான் உங்களுக்கு எப்படி உதவலாம்?
கில்மோங்கர்: நான் இந்த காட்சி பொருள்களை பார்த்துக் கொண்டிருந்தேன். தாங்கள் இதில் வல்லுனர் என்று கேள்விப்பட்டேன்.
இயக்குனர்: ஆம்
கில்மோங்கர்: இவை மிக அழகாக இருக்கின்றன. (ஒன்றை குறிப்பிட்டு) இது எங்கிருந்து கிடைத்தது?
இயக்குனர்: இன்று காணா என்று அறியப்படும் நாட்டிலுள்ள போபோ அஷாந்தி பழங்குடியினரிடமிருந்து. 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
கில்மோங்கர்: உண்மையாகவா? (இன்னொன்றை குறிப்பிட்டு) இது எங்கிருந்து கிடைத்தது?
இயக்குனர்: பெனின் நாட்டின் எடோ மக்களிடமிருந்து. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
கில்மோங்கர்: (மரம் வெட்டி போன்ற ஒரு கருவியை காண்பித்து) இப்பொழுது இதைப் பற்றி கூறுங்கள்.
இயக்குனர்: இதுவும் பெனின் நாட்டைச் சேர்ந்தது. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஃப்யுலா பழங்குடியினர் என்று நினைக்கிறேன்.
கில்மோங்கர்: இல்லை
இயக்குனர்: (தன்னைவிட இவனுக்கு என்ன தெரிந்து விடப்போகிறது என்ற அகந்தையால் - சற்று ஏளனமாக) என்ன சொன்னீர்கள்?
கில்மோங்கர்: ஆங்கிலேயப் படை வீரர்களால் பெனின் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது. ஆனால், இது வகாண்டா நாட்டைச் சேர்ந்தது. வைப்ரேனியம் என்ற பொருளால் ஆனது. (சற்று திமிருடன்) பதற வேண்டாம். இதை எடுத்துக் கொள்ளப் போகிறேன்.
இயக்குனர்: ("இவன் என்ன கிறுக்கனா?" என்ற ரீதியில் பார்த்துவிட்டு) இந்தப் பொருள்கள் விற்பனைக்கு அல்ல.
கில்மோங்கர்: உங்களது மூதாதையர் இவற்றை எப்படி எடுத்தனர் என்று நினைக்கிறீர்கள்? சரியான விலை கொடுத்து எடுத்தனர் என்றா? இல்லை, எல்லாவற்றையும் கொள்ளையடித்தது போல் இவற்றையும் கொள்ளையடித்தனர் என்றா?
இதன் பிறகு கொலை & கொள்ளைக் காட்சியக மாறுகிறது. இந்த காட்சியை வேறு எத்தனையோ விதமாக படமாக்கியிருக்கலாம். ஆனால், ஒரு பரங்கிப் பெண்ணை வைத்து, இப்படி படமாக்கி, தனது உள்ளக் கனலை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். இக்காட்சி, பரங்கியர்களால் சீரழிக்கப்பட்ட எந்த நாட்டைச் சேர்ந்தவருக்கும் (அவர் தேசத் துரோகியாக இல்லாதபட்சத்தில்) மகிழ்ச்சியைக் கொடுக்கும்! 😍
இப்படத்தின் இறுதியில் வகாண்டாவின் மன்னர், அந்நாட்டின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவதாக முடிக்கிறார்கள். (தொழில்நுட்பத்தில் மற்றனைத்து நாடுகளைக் காட்டிலும் வெகுதூரம் முன்னேறி இருந்தாலும், அவை மறைக்கப்பட்டு, சாதாரண பழங்குடி மக்களால் நிறைந்த உழவு நாடு போன்ற மாயை இது நாள் வரை தோற்றுவிக்கப்பட்டிருந்தது.) இதன் பின்னர் என்னவாகியிருக்கும்...
👊🏽 முதலில், ஒரு கூட்டம் போயிறங்கி, "பாவிகளே... பாவிகளே..." என்று கூவிக் கொண்டே கடையை விரிக்கும்.
👊🏽 "இன்னுமா கரிய வெச்சு பல் வெளக்குறீங்க?" என்று அடுத்தக் கூட்டம் போயிறங்கும்.
👊🏽 அடுத்து, "ராஸ்கோலு மாமா தான் வகாண்டாவை கண்டுபிடித்தான்" என்று ஒரு கூட்டம் பூக்கூடையுடன் போய் சேரும்.
👊🏽 பின்னர், "ஓபியடிப்பவரே உயர்ந்தவர்" என்று ஒரு கரையான் கூட்டம் உருவாகும்.
👊🏽 பின்னர், அந்த சமூகத்தில் காலகாலமாக களையெடுக்கப்பட்டு, ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட நச்சு உயிரிகளை, "சமூக அநீதி காப்போம்" என்று ரீல் விட்டு, ஊருக்குள் விட்டு, நாட்டின் அடிப்படை கட்டமைப்புக்கு உலை வைத்து, எதிரிகளிடம் பொரை பொறுக்கும் தேசத்துரோக கூட்டங்கள் உருவாகும்.
👊🏽 இறுதியாக, பயிரை மேயும் வேலியாக இருந்தால் மட்டுமே ஆட்சிக் கட்டிலை அலங்கரிக்க முடியும் என்ற நிலை உருவாகும்.
மொத்தத்தில் வகாண்டா, கோவிந்தா!! 😁