Thursday, October 24, 2019

அச்சிறுபாக்கம் திருஆட்சீஸ்வரர் 🌸🙏🏼 திருக்கோயில்



(இடதுபுறமிருப்பது திரு ஆட்சீஸ்வர பெருமானின் கருவறை, வலதுபுறமிருப்பது திரு உமை ஆட்சீஸ்வர பெருமானின் கருவறை)

🌷 அச்சிறுபாக்கம் - அச்சு இறு பாக்கம். அச்சு முறிந்த இடம்.

🌷 எதன் அச்சு முறிந்தது? மனம் எனும் தேரின் அச்சு முறிந்த இடம்.

🌷 முறிந்தால் என்னவாகும்? தேர் நின்று போகும். நிலைத்து போகும். நிலைபேறு.

🌷 யாருக்கு நிலைபேறு கிட்டியது? மூலவர் திரு ஆட்சீஸ்வர அடையாளத்தின் (லிங்கத்தின்) கீழ் சமாதியாகி இருக்கும் பெருமானுக்கு.

🌷 யாரிவர்? இவரது சமாதி அடையாளத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் பெயர் (ஆட்சீஸ்வரர்), திருஞானசம்பந்தரின் 🌺🙏🏼 பதிகம் (ஆட்சி கொண்டார்) மற்றும் தல புருடா (1) (பாண்டிய மன்னன்) ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தால், இவர் மிக பழமையான காலத்தைச் சேர்ந்த அரசராக இருக்கலாம் என்று தோன்றுகிறது ("பாண்டிய" என்னும் சொல்லுக்கு பழமை என்றொரு பொருள் உண்டு). (2)

🌷 இவரை ஏன் #சுயம்பு என்று குறிப்பிட்டுள்ளனர்? சுயம்பு என்றவுடன் மூலவர் தானாக, நிலத்திலிருந்து வளர்ந்து வந்ததாக நாம் நினைத்துக் கொள்ளும் படி நமக்கு வேப்பிலை அடித்திருக்கிறார்கள்! 😛 உண்மை என்னவென்றால், இப்பெருமான் எந்த மெய்யாசிரியரின் உதவியின்றி, எந்த பயிற்சியுமின்றி தானாக நிலைபேற்றை அடைந்திருப்பார். இதற்கு மிக சரியான எடுத்துக் காட்டு: #பகவான் #திரு #ரமணர் 🌺🙏🏼. பெரிய புராணம் ஏற்படுத்திய தாக்கம் தவிர வேறெதுவும் அறிந்திராத தனது 16 வயதில், யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல், எந்த பயிற்சியும் செய்யாமல் நிலைபேறு பெற்றார். இப்படிப்பட்டவர்களைத் தான் சுயம்பு, #தான்தோன்றி என்று நம் முன்னோர்கள் அழைத்தார்கள்!!

#ஆளுடைய #பிள்ளையும் தனது பதிகத்தில் இத்தலத்து பெருமான் வடக்கிருக்காதவர், வேள்வி செய்யாதவர், பூசைகள் செய்யாதவர் என்று பாடியிருக்கிறார். மேலும், "இப்படிப்பட்டவர் என்று அறிய முடியாதவர்" என்றும் பாடியிருக்கிறார் (#சம்பந்தர் #தேவாரம் 1.77.9). (எனில், பிள்ளையார் வருகை தந்த போது இப்பெருமானார் உடல் தாங்கி இருந்தாரா; அல்லது, அவருக்கு கிடைத்த செவிவழிச் செய்திகள், ஓலைச்சுவடி குறிப்புகளைக் கொண்டு இவ்வாறு பாடினாரா என்று தெரியவில்லை.)

🌷 இது போன்ற உயிர்ப்புள்ள தலங்கள் இன்று பொருளாதாரத்துடன் இணைக்கப்பட்டு, சிலைத்திருடர்கள் கைகளில் அகப்பட்டு மதிப்பிழந்து கிடக்கின்றன! 😔 அன்று இருந்த நிலையே வேறு. மெய்யறிவுத் தாகம் கொண்ட அன்பர்கள் பலர் வடக்கிருந்த பகுதிகள் இவை! 😍 அவர்களில் சிலர் மெய்யறிவு பெற்று சமாதியும் அடைந்த புனிதமான பகுதிகள்!! கால வெள்ளத்தில் பல சமாதிகளை, அவற்றின் அடையாளங்களோடு (லிங்கங்களோடு) இழந்துவிட்டோம். தப்பிய சிலவற்றையும், அறிவை இழந்ததால், சமாதிகளை விட்டுவிட்டு, அவற்றின் மேல் வைக்கப்பட்ட அடையாளங்களை மட்டும் காப்பாற்றி, உள் சுற்றில் வைத்துக் கொண்டோம். சில மெய்யறிவாளர்களின் சமாதிகள் மட்டும் அவர்கள் பெற்றிருந்த பெரும் புகழ், செய்திருந்த செயற்கரிய செயல்கள், அவர்களிடமிருந்து வெளிப்பட்ட சிறந்த அறிவுரைகள் போன்று ஏதோ சில காரணங்களால் தனி கோயில்களாகவே மாறியுள்ளன. இந்த திருத்தல வளாகத்தில், திரு ஆட்சீஸ்வர உடையாரின் கருவறைக்கு பின்புறம் அமைந்துள்ள #திரு #உமை #ஆட்சீஸ்வரர் #கோயில் 🌺🙏🏼 அப்படி அமைந்த ஒன்றாகும் (சென்னையிலுள்ள #திருக்கச்சூர் #திரு #கச்சபேஸ்வரர் 🌺🙏🏼 ஆலய வளாகத்திலுள்ள #திரு #விருந்திட்ட #வரதரின் 🌺🙏🏼 - #சுந்தரமூர்த்தி #நாயனாருக்குக்காக 🌺🙏🏼 ஊருக்குள் சென்று உணவை இரந்து பெற்று வந்த மெய்யறிவாளரின் - சமாதி கோயிலும் இப்படிப்பட்டது தான்). (3)

இக்கோயிலின் கருவறையில் மூலவருக்கு பின்புறமுள்ள சுவற்றில் சிவ தத்துவமும் சக்தி தத்துவமும் அமர்ந்திருக்கும் புடைப்பு சிற்பத்தை வைத்திருக்கிறார்கள். இதை #திருமண #கோலம் அல்லது #திருக்கைலாய #காட்சி என்பர். இது போன்ற சிற்பம்/சுதை எந்தெந்த திருத்தலங்களில் உள்ளதோ, அங்கெல்லாம் தல புருடாக்களில், "அகத்திய மாமுனிவருக்கு இறைவன் திருமண காட்சி கொடுத்த தலம்" என்று பதிவு செய்திருப்பார்கள்! 😁 நாமும் நமக்கு தெரிந்த குள்ள முனிவர் இங்கு வந்தார் போலிருக்கிறது, இறைவனும் இறைவியும் காட்சி கொடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது என்று கற்பனை செய்து கொள்வோம். 🤭 இதில் உண்மையும் இருக்கிறது. ஏமாற்று வேலையும் இருக்கிறது.

மெய்யறிவு பெற்ற எல்லோருமே அகத்தியர்கள் தாம்! அவர்கள்து கவன ஆற்றல் எக்கணமும் அகத்தில் (நான் என்னும் தன்மையுணர்வில்) தான் இருக்கும். புறத்தே செல்லாது. புறத்தே எல்லா செயல்களையும் நம்மைப் போல் அவர்கள் செய்வது போலத் தோன்றினாலும், அவர்களது இருப்புணர்வில் எந்த மாற்றமும் இருக்காது. எனவே, அவர்கள் எல்லோருமே அகத்தியர்கள் தாம். ஆக, மேற்கண்ட தல புருடா சொற்றொடரில் அகத்தியர் என்ற சொல் சரியே. ஆனால், அச்சொல்லைக் கேட்டதும் குள்ளமான அகத்திய மாமுனிவர் நம் நினைவுக்கு வருவது போல் நம் மூளையை பதப்படுத்தியிருப்பது தான் ஏமாற்றுவேலை! 😉 (உண்மையில் அகத்திய மாமுனிவர் சமாதியாகி இருப்பது திருவனந்தபுரம் திரு அனந்தபத்மநாப உடையாரின் கீழே 🌺🙏🏼)

அடுத்தது திருமண கோலம்/திருக்கைலாய காட்சி. சாதாரண சீவர்களுக்கு உலகினுள் தாம் இருப்பது போன்று தோன்றும். மெய்யறிவாளர்களுக்கு, சமாதி நிலையில், பசு-பதி-பாசம் (கெளமாரத்தில் சேவல்-வேல்-மயில்) என மூன்றும் பிரிந்து தோன்றும் (பதி எனும் திரையில் பசுவும் பாசமும் காட்சிகள் போன்று தோன்றும்). இந்த பட்டறிவு விழிப்பு நிலையிலும் தொடர்வதால், பதியாகிய தம் இருப்பு நிலையை விடாதிருப்பர். மற்றவற்றை கானல் நீர் காட்சிகள் போன்று காண்பர் - அதாவது, இருப்பற்றவை என்று உணர்ந்திருப்பர். கொடுப்பினை இருந்தால், விழிப்பு நிலையில், சில சமயங்களில், அவர்கள் திரையாகவும், இவ்வுலகம் அதில் தோன்றும் காட்சிகளாகவும் காண்பிக்கப்படும். அதாவது இருப்புள்ளதும் (சிவம்) இருப்பற்றதும் (சக்தி) ஒரு சேரக் காண்பிக்கப்படுகிறது. இதுவே திருமணக் கோலம் என்றும், திருக்கைலாய காட்சி என்றும் அழைக்கப்படுகிறது. 🙏🏼 (4)

(கவனிக்கவும், இங்கு "காண்பிக்கப்படும்" என்று எழுதியுள்ளேன். மேலே, "காண்பர்" என்று எழுதியுள்ளேன். இது முயன்று அடைவதல்ல. கொடுப்பினை இருந்தால் தானாக வருவது. இதனால் தான் தல புருடாவில் அகத்திய மாமுனிவருக்கு இறைவன் திருமண கோலம் / திருக்கைலாய காட்சி "காட்டிய தலம்" என்று பதிவு செய்தார்கள்.)

இதில், "உண்மையும் இருக்கிறது. ஏமாற்று வேலையும் இருக்கிறது." என்று மேலே எழுதியிருந்தேன். திருமணக் கோலம் என்பது உண்மை. ஆனால், திருமணக்கோலம் என்றதும் கைலாயத்தில் சிவபெருமானுக்கும் சக்தி அன்னைக்கும் திருமணம் நடந்ததாக நம்மை கற்பனை செய்துகொள்ள வைத்திருக்கிறார்களே... அது ஏமாற்று வேலை! 😏

இனி, ஒரு பழமையான திருத்தலத்தின் கருவறையில் மூலவருக்கு பின்புறம் திருக்கைலாய காட்சியைக் காண நேர்ந்தால், "மூலவரின் கீழே சமாதியில் இருக்கும் பெருமான், உடல் தாங்கியிருந்த காலத்தில் திருக்கைலாய காட்சியைக் காணும் பேறு பெற்றவர்" என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

🌷 இத்தலத்திற்கு வள்ளற் பெருமான் என்றழைக்கப்படும் திரு இராமலிங்க அடிகளாரும் வருகை தந்திருக்கிறார்.

🏵️🌼🌻

இவ்வளவு பழமை, அருமை, பெருமைகள் கொண்ட இந்த புனிதத் தலத்தின் இன்றைய நிலை...

🤬 திருத்தலத்தைச் சுற்றிலும் திறந்த வெளி சாக்கடை கால்வாய்கள் கொண்ட "மேன்மையான" பகுதி.

😤 "இறை தொடர்பில் எக்கணமும் இருக்க வேண்டும்" என்பதற்காக திருக்கோயிலின் ஒரு பக்க மதில் சுவரை, தங்களது ஒரு பக்க சுவராக பாவித்து சிலர் கட்டிக் கொண்டுள்ள கட்டிடங்கள்.

😡 திரு உமை ஆட்சீஸ்வரப் பெருமானின் கருவறையை வலம் வரும் போது மேற்கத்திய தொழில் நுட்பத்தின் மேன்மையை பறை சாற்றும் சான்றுகள் (மக்காத குப்பைகள் என்று கூட இவை அழைக்கப்படுவதுண்டு 😁).

😠 சில தலங்களில் ஆரியப்பன் (ஐயப்பன் - ஆரியர்கள் உருவாக்கியதால் ஆரியப்பன்), சீரடி சாய்பாபா என காலத்திற்கேற்றவாறு, தொழில் ஓடுவதற்காக சேர்த்துக் கொள்ளப்பட்ட "ஜன ஆகர்ஷ்ண யந்திரங்களைக்" 🤑 காணலாம். இத்திருத்தலத்தின் வெளிச் சுற்றில் வைக்கப்பட்டுள்ள 7 கன்னியர் சிலைகள்  அவ்வாறு வைக்கப்பட்டவையாக இருக்கும்.

💥 அடுத்து, "பெசல் அயிட்டம்".

இராஜகோபுரத்தைக் கடந்து முதன்மை வாயிலுக்குள் நுழைந்ததுமே, விநாயகரை காப்பியடிக்க முயற்சித்து நாமப்பேர்வழிகள் உருவாக்கின அனுமார் கூப்பிய கைகளுடன் நிற்கிறார் ("பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிந்தது" என்பது பழமொழி). யாரை வணங்குகிறார் என்று பார்த்தால், தூரத்தில் "திருமலையில் சமாதியான கொங்கணவ சித்தரின் சமாதி அடையாளமாக வைக்கப்பட்டுள்ள" ஏழுமலையான் நிற்கிறார். இவ்விரண்டு சிலைகளுக்கும் உள்ள இடைவெளியைப் பார்த்தாலே புரியும் என்ன "கைங்கர்யம்" இங்கே நடந்திருக்கிறது என்று. அருகிலுள்ள மதுராந்தகம், நாமப்பேர்வழிகளின் ஆதிக்கம் இருந்த பகுதி. அவர்களின் வால் இங்கேயும் நீண்டிருக்கிறது. (நாயக்க மன்னர்களின் ஆட்சி காலத்தின் நாமம் உயர்வு பெற்றது. உடன் பெண் தெய்வ வழிபாடும் மீண்டும் புத்துயிர் பெற்றது. இவர்கள் எந்த தத்துவத்தை பெண்ணாக தூக்கிப் பிடிக்கிறார்களோ அதையே ஆணாக மாற்றி தூக்கிப் பிடிக்கிறது நாமம்.) அனுமாரை பார்த்து விட்டுத்தான் நாம் திரு ஆட்சீஸ்வர உடையாரை பார்க்க வேண்டுமாம். 🤬

அனுமார் நிற்குமிடத்தில் பிணக்குறியீட்டை வைத்து விட்டு, பெருமாள் நிற்குமிடத்தில் இஸ்ரவேல் அத்வைதியான இயேசுவை வைத்தால் சும்மா இருப்போமா? 😡 அல்லது, பெருமாள் நிற்குமிடத்தில் ஒரு குட்டிச் சுவரை கட்டி வைத்து, அனுமார் நிற்குமிடத்தில் ஒரு காட்டுமிராண்டி பஸ்கி எடுத்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் நமக்கு? 😠

மீண்டும் உண்மைக்கு ஒரு காலம் வந்து விடாமலா போய்விடும்!

(தேவையில்லாமல் சைவத்தையும், அத்வைதத்தையும் வம்பிழுக்கும் நாமப்பேர்வழிகளைத் தான் எதிர்க்கிறேன். பெருமாள்களை அல்ல. திருமலைப் பெருமாள் 🌺🙏🏼 சுமார் 2,300 ஆண்டுகள் பழமையானவர். நாம மதம் சுமார் 1,300 ஆண்டுகள் பழமையானது. நாமமோ சுமார் 900 ஆண்டுகளே ஆனது. நாமம் என்றால் ஏமாற்று வேலை. "நாமம் போட்டுட்டாங்களா?" - ஏமாத்திட்டாங்களா? "நாமம் போட்டுட்டியா?" - ஏமாத்திட்டியா? வைணவம் என்பது ஏமாற்று வேலை. பெண்குறியைத் தான் நாமமாக அறிவித்தார் இராமானுஜர்.)

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்!! 💪🏽💪🏽💪🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼

🌸🏵️🌼🌻💮

குறிப்புகள்:

1. தல புருடா: "மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு" என்பதைப் போல, "தல புருடாக்களை அப்படியே ஏற்று கொள்வது நமக்கும் நம் சமயத்திற்கும் கேடு"!! 😁 தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு, மீதத்தை ஒதுக்குவதே இந்து சமய - சமூக - தேசத் துரோக கூட்டங்கள் பெருகாமல் இருப்பதற்கான உபாயம். 😇

2. "அரியணையில் இருந்து கொண்டு, அரச சுகங்களை துய்த்துக் கொண்டு ஒருவரால் எப்படி நிலைபேற்றை அடையமுடியும்?" என்ற கேள்வி எழலாம். அப்படியே நிலைபேற்றை அடைந்தாலும், "எவ்வாறு அதில் தொடர்ந்து நிலைத்திருக்க முடியும்?" என்ற கேள்வியும் எழலாம்.

பண்டைய ஆட்சியாளர்கள் இன்றைய கொள்ளையர்களைப் போன்று பயிரை மேயும் வேலிகளா? "#ஓர்ந்து #கண்ணோடாது #இறை #புரிந்தவர்கள்" (#திருக்குறள் - #செங்கோன்மை - #541) - ஓருமையாம் தனதியல்பில் நின்று (ஓர்ந்து), மனதை சிதறவிடாது (கண்ணோடாது), செல்வமும் ஏனைய வளங்களும் ஓரிடத்திலேயே தங்கியிருக்காது அனைவரிடமும் பரவச் செய்து, தேவையான காலத்தில் கொடுப்பதற்காக முன்னமே ஒரு பகுதியை வரியாக பெற்று காத்து நின்றவர்கள் (இறை புரிதல்). 👏🏽👏🏽👌🏽😍 (திருக்குறளின் உரைகளை வைத்து இந்த விளக்கத்தை நான் எழுதவில்லை. ஓர்ந்து என்ற சொல்லை பகவான் திரு ரமணரிடமிருந்தும், கண்ணோடாது என்பதற்கு நான் படித்த ஆன்மிக நூல்களிலிருந்தும், இறை என்பதற்கு சொற்பிறப்பியலில் இருந்தும் பொருள் எடுத்துள்ளேன்.)

ஆரிய நூல்களில் (வால்மீகி இராமாயணம், அஷ்டாவக்ர கீதை) வரும் மன்னர் #சனகர் இவரைப் போன்றவரே. மன்னராக வாழ்ந்து கொண்டே, நிலைபேற்றிலும் வழுவாமல் இருந்தார். நமது பாண்டிய மன்னர் #வரகுணப் #பாண்டியரும் நிறைந்த மெய்யறிவாளர் ஆவார். #திருவிடைமருதூர் #திரு #மகாலிங்கேசுவர #உடையார் திருக்கோயிலின் உள்சுற்றில் வலம் வரும் போது திருக்கைலாயக் காட்சி காணும் பேறு பெற்றவர் (இக்காட்சி பற்றி பின்னர் பார்க்கலாம்). இவர்களைப் போன்று இன்னும் எத்தனையோ மெய்யறிவாளர்கள் அரசர்களாக, வியாபாரிகளாக, இல்லறத்தவர்களாக, பல வித வேலையாட்களாக இருந்துள்ளனர். இது எப்படி முடிந்தது? பக்குவப்பட்ட மேன்மையான சமுதாயமே இதற்கு அடிப்படை!!

3. திரு உமை ஆட்சீஸ்வரப் பெருமானைப் பற்றி #காழியூர் #பிள்ளை தனது பதிகத்தில் ஏதும் குறிப்பிடவில்லை. அல்லது, அவர் பாடிய பதிகம் நமக்கு கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை (பிள்ளையார் பாடியது 16,000 பதிகங்கள் என்று பதிவு செய்கிறார் நம்பியாண்டார் நம்பி. ஆனால், நமக்கு கிடைத்தது வெறும் 384 பதிகங்கள் மட்டுமே.) ஆகையால், இவரின் காலம் பிள்ளையாருக்கு பின் என்று கணித்து விட முடியாது. இவர் பெயரில் உமை என்னும் பெண்பால் பெயர் வருவதாலும், பெருமானின் பெயர் (ஆட்சீஸ்வரர்) தொடர்வதாலும், இவர் திரு ஆட்சீஸ்வர பெருமானின் மனைவியாக இருப்பாரோ என்று எனக்கு ஒரு ஐயம் உள்ளது. மெய்யறிவு பெற்ற பின் பாலினம், உறவு முறை என எல்லாம் நம்மை விட்டு கழண்டு விடும். மெய்யறிவு பெற்ற பின் அனைவரும் ஒன்றே. "அனைவரும்" என்பது கூட தவறு. அங்கே அவர், இவர் என்று யாருமில்லை. இருப்பது ஒன்றே. (பகவான் திரு ரமணரின் விளக்கம்) எனினும், வரலாற்றை காப்பதற்காக பெயரில் ஒரு சிறு குறிப்பை விட்டு வைத்தனர். ஆனால், எல்லோரையும் ஒரு இறைவனாக - சிவபெருமானாக - நம்மை காண வைத்தனர். ஏனெனில், "#எல்லாம் #ஒன்றே"!! 😌

4. "நாயைக் கண்டால் கல்லைக் காணோம். கல்லைக் கண்டால் நாயைக் காணோம்." என்பது பெரும்பாலோனோர் அறிந்த பழமொழி. சிலர், இத்துடன் இன்னொரு வரியையும் சேர்ப்பர்: இரண்டையும் கண்டால் அடிப்பவனைக் காணோம்.

☀️ நாயைக் கண்டால் கல்லைக் காணோம் - நாம் காணும் உலக காட்சி. உலகை காண்கிறோம். ஆனால், அதற்கு ஆதாரமான நம்மை நாம் உணர்வதில்லை.

☀️ கல்லைக் கண்டால் நாயைக் காணோம் -  மெய்யறிவாளர்கள் காணும் காட்சி. எக்கணமும் தாமாகவே இருப்பவர்கள். தம்மை மட்டுமே பார்ப்பவர்கள். மற்றவை இருப்பற்றவை என்பதை உணர்ந்தவர்கள். எரிந்து முடிந்து, உருக்கலையாத சாம்பல் போன்று காண்பவர்கள். இதனால் தான் மெய்யறிவாளர்களை - சிவனை - சுடுகாட்டில் வசிப்பவர் (காடுடைய சுடலை) என்றழைத்தனர்.

☀️ இரண்டையும் கண்டால் அடிப்பவனைக் காணோம் - திருக்கைலாய காட்சி காணும் போது (இருப்புள்ளதும் இருப்பற்றதும் ஒருசேர காணும் போது), அங்கு சீவன்/மனம் (அடிப்பவன்) இருப்பதில்லை.

🏵️🌼🌻

இனியோம் நாம்உய்ந்தோம் இறைவன்தாள் சேர்ந்தோம்
இனியோர் இடரில்லோம் நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண்⁠

-- காரைக்கால் அம்மையார் 🌺🙏🏼, அற்புதத் திருவந்தாதி, திருமுறை 11.004

No comments:

Post a Comment