Saturday, October 12, 2019

திருமாகறல் - உடும்பு சிவலிங்கம்



இணைப்புத் தலபுருடாவை படித்தவுடன் யாருக்கும் தோன்றுவது, "பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழரிடம் இந்த புருடா பார்ட்டிகள் சரியாக டின் வாங்கியிருக்கிறார்கள்" என்பதே!! 😛

👊🏽 தினமும் காய்க்கும் 🥴 பலா பழத்தை ஒருவர் தலைச்சுமையாக மாகறலிலிருந்து தில்லைக்கு கொண்டு வர வேண்டுமாம்! நம் பேரரசர் என்ன தேவேந்திரனைப் போல கூமுட்டையா இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்க? 😁

👊🏽 தில்லை கூத்தப் பெருமானுக்கு படையல் செய்து விட்டு, கங்கைகொண்ட சோழபுரத்திற்கு பழம் வந்து சேர வேண்டுமாம். அதை தினம் பேரரசர் புசிப்பாராம். எதற்கு? நாள் பூராவும் கழிவறையிலேயே அமர்ந்து இருப்பதற்காகவா? 🤭 அவரென்ன பரங்கி அலெக்ஸாண்டரைப் போல பேட்டை தாதாவா? உண்மையான மாவீரன்! 💪🏽 மாலத்தீவுகள் முதல் ஆரியக் காட்டுமிராண்டிகளின் தாயகமான ரிஷிவர்ஷாவின் (இன்றைய ரஷ்யா) கீழ் பகுதிகள் வரை கோலோச்சியவர். வங்காள விரிகுடாவை அவரது கப்பல்கள் நிறுத்தும் ஏரியாக பயன்படுத்தியவர். 😍🤩

👊🏽 ஒவ்வொருவர் முறை வரும் போதும் அவரவரே பழத்தை சுமந்து சென்றார்கள் என்று ரீல் சுற்றியவர்கள், அந்தணச் சிறுவன் முறை வரும் போது மட்டும் "ஊரே சுமந்து சென்றது" என்று ஓவராக ரீல் சுற்றி விட்டார்கள்! (எடிட்டிங்கில் கோட்டை விட்டுவிட்டனர் போலும்!! 😜) அந்தணன் - எவ்வுயிரையும் தன்னுயிர் போலக் கருதுபவர்; அறவழி நடப்பவர்; பற்றுகளை விட்டவர்; ஈர மனம் கொண்டவர். ஆரியனல்ல.

👊🏽 ஒரு பிஸ்கோத்துப் பயலை நாடு கடத்த பேரரசர் உடன் சென்றாராம். திரும்பும் வழியில் பொன் நிற உடும்பை பார்த்தாராம். அதைப் பிடிக்க முயலும் போது புற்றுக்குள் புகுந்து கொண்டதாம். புற்றை கலைக்கும் போது வால் பகுதியில் கோடரி பட்டு இரத்தம் வந்ததாம். சிவபெருமான் Bosch ஸ்பீக்கர் வழியாக பேசினாராம். கோயில் கட்டச் சொன்னாராம். இதனால் தான் மூலவர், உடும்பின் வால் போலத் தோற்றமளிக்கிறாராம். 😂😂🤣

நோனி என்றொரு மருந்து உண்டு (நுணா பழரசம்). நமது செல் நிலைக்குச் சென்று பணி செய்ய வல்லது. இதனால் எத்தனையோ பயன்கள் இருந்தாலும், சிறு நகரங்களில் இப்படி விளம்பரம் செய்திருப்பர்: ஆண்மை குறைப்பாட்டை முழுவதுமாக தீர்க்க வல்லது!! 😝 இது போன்றது தான் மேற்கண்ட உடும்பு புருடா. எவ்வளவு உயர்ந்த செய்தியை இவ்வளவு தரம் தாழ்த்தி வழங்குகிறார்கள். 🤬

🌷 தினமும் காய்க்கும் பலாப்பழம் என்பது நமது மனதைக் குறிக்கும். தினமும் காலையில் கண் விழித்ததும் தனது வேலையை தொடங்கி விடும். மொத்த மனதும் ஒரு பழம் எனில், அதிலுள்ள ஒவ்வொரு சுளையும் ஒரு எண்ணமாகும். ஒவ்வொரு எண்ணமும் பல பின் விளைவுகளை உருவாக்கவல்லது - சுளையினுள் உள்ள விதைக் கொட்டை மீண்டும் ஒரு மரத்தை உருவாக்க வல்லது போல.

எவ்வளவு அருமையான உவமானம்!! 👌🏽 பேரரசரை மட்டம் தட்ட முயன்று, உவமானத்தை மட்டமாக்கி விட்டார்கள். 😔

🌷 #மாகறல் = மா + கறல் = பெரிய விறகு! சிவப்பரம்பொருளுக்கு ஆரியத்தில் #தாணு என்றொரு பெயருண்டு. இதற்கு சமமான தமிழ் சொல் தான் கறல். நிலையானது, அசைவற்றது, மாறாதது என பல பொருள் உண்டு. மெய்யறிவாளரைக் குறிக்கும். உடன் "மா" சேர்த்ததற்கு காரணம், இந்த உடும்பு அடையாளத்தின் கீழ் சமாதியாகி இருக்கும் மெய்யறிவாளர் 🌺🙏🏼, மிகவும் புகழ் பெற்றவராக அல்லது அவர் காண்பித்த வழி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்திருக்கும். ரிஷி மற்றும் மகரிஷி எனும் ஆரிய சொற்களுக்கும் இடையிலான வேறுபாட்டை போன்றது.

🌷 இத்தலம் மிகவும் தொன்மையான தலங்களுள் ஒன்றாகும். அன்று கையில் கிடைத்த பொருளை சமாதியின் அடையாளமாக வைத்தனர். இதனால்தான் பழமையான சிவலிங்கங்கள் சீராக இல்லாமல், வித விதமான தோற்றங்களில் இருக்கும். நமது சமயம் மிகமிகப் பழமையானது என்பதற்கு, காட்டுமிராண்டிகளின் படையெடுப்புகளில் இருந்து தப்பித்த இது போன்ற சில சிவ அடையாளங்கள் (சிவ லிங்கங்கள்) ஒரு சான்றாகும்!! 👏🏽👌🏽

🌷 இத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் 🌺🙏🏼 வருகை புரிந்து, பதிகம் பாடியிருக்கிறார். பதிகம் முழுவதும் இத்தலத்து இறைவனை தொழுதால் எல்லா வினைகளும் (வினை, தொல்வினை, வருவினை) கனளந்து போகும் எனப் பாடியுள்ளார். இதனாலேயே இப்பதிகத்துக்கு #வினை #களையும் #பதிகம் எனப் பெயரிட்டுள்ளனர். மேலும், சேலம் சுப்பராயப் பிள்ளை என்பவர் தம் உடலில் இடுப்பின் கீழ் செயலற்றுப் போக, எல்லாவித மருத்துவமும் செய்து பலனின்றிப்போக, திருமுறையில் கயிறுசார்த்திப் பார்த்து, இத்தலப்பதிகம் வர, இங்கு வந்து தங்கி, நாடொறும் இறைவனை வழிபட்டு, இப்பதிகத்தை ஓதி, சிலகாலம் வாழ்ந்து, இப்பெருமானருளால் முழுகுணம் பெற்றுத் திரும்பினார். இந்நிகழ்ச்சி அண்மைக் காலத்தில் நிகழ்ந்ததாகும் (சான்று: Shaivam.org). இப்படிப்பட்ட பதிகம் பாடிய ஆளுடையபிள்ளையாரின் காலம் பேரரசரின் காலத்தை விட 400 வருடங்கள் முந்தையது (7ஆம்  நூற்றாண்டின் ஆரம்ப காலம்). பின்னாளில், பேரரசர் திருப்பணி செய்திருக்கலாம். ஆக, குறைந்தபட்சம் இத்தலத்தின் வயது 1400 ஆண்டுகள் இருக்கும். ஆனால், அதற்கும் வெகு காலத்திற்கு முன்னரே மூலவர் சமாதி உருவாகியிருக்கும். இப்படிப்பட்ட சிறப்புகளை எடுத்துக் கூறாமல் உடும்பு லிங்கம், யானைமீது முருகன், வீணை மீட்டும் தென்திசைக் கடவுள் என அஜினமோட்டோக்களை 🤮 பயன்படுத்தியுள்ளனர்!! 😡

🌸🏵️🌼🌻💮

இத்தலப்பதிகத்தில் பிள்ளையார், சிவன்காளையை திருமால் எனக் குறிப்பிடுகிறார் (#செங்கண்விடை #யண்ணலடி). நாம மதம் உருவாகி, பெருமாளை கடத்திக் கொண்டு போனதெல்லாம் இவர் காலத்திற்கு பின்னர் தான். எனவே, பெருமாளை மட்டம் தட்டினார் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. "நிலையற்றது" என்ற தத்துவத்தை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்  என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

🌸🏵️🌼🌻💮

...மாகறலுளான் அடியையே
உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும் உடனே

-- சம்பந்தர் தேவாரம் 3.72.11

பொருள்: திருமாகறலில் உறையும் பெருமானைப் போற்றும் இப்பதிகத்தை உணர்ந்து ஓதுபவர்களின் தொல்வினைகள் உடனே நசிந்து போகும்.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼

No comments:

Post a Comment