Saturday, October 22, 2022

மாமன்னர் சடையவர்மன் சுந்தரபாண்டியர் பரங்கி ஆர்கிமிடிஸிடம் பாடங்கற்றவர்!! 🤭


திருவரங்கம் திருக்கோயிலுள்ள ஒரு கல்வெட்டும், அத்திருக்கோயிலின் கோயிலொழுகு நூலும் பாண்டிய மன்னர் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (தி.பி. 1,282-1,302) நிறைகோல் (துலாபாரம்) ஏறிய சடங்கைப் பற்றிக் தெரிவிக்கிறது.

தங்கத் தகடுகளால் போர்த்தப்பட்ட ஒரு பெரிய படகை காவிரியாற்றில் மிகத்தவிட்டு, தனது பட்டத்து யானையின் மீதேறி அமர்ந்தவாறு, அந்த படகில் ஏறினார். இப்போது, தண்ணீரில் எவ்வளவு ஆழம் அந்த படகு அமிழ்ந்தது என்பது குறித்துக்கொள்ளப்பட்டது. படகிலிருந்து மன்னர் வெளியேறிய பிறகு, அந்த படகு முழுவதும் தங்கத்தாலும், 9 வகை மணிகளாலும், குறித்து வைக்கப்பட்ட அளவு அமிழும் வரை நிரப்பப்பட்டது. இப்படி நிரப்பப்பட்ட பொருட்களைக் கொண்டு, அத்திருக்கோவிலின் கருவறை கோபுரம், முன்னுள்ள மன்றம் மற்றும் தூண்கள் ஆகியவற்றை தங்கத்தகடுகளால் போர்த்தி மிளிரச் செய்தார்.

இப்போது கேள்வி: தி.பி. 1,529-ல்தான் நம்மை போர்த்துகீசிய பொறுக்கி... மன்னிக்கவும்... மாலுமி வாஸ்கோடகாமா "கண்டுபிடித்தான்". அதற்கு முன்னர் நம்மை பற்றி நமக்கே தெரியாது! 😁 எனில், எப்படி பாண்டியருக்கு ஆர்கிமிடிஸின் "நீர்ம இடப்பெயர்ச்சி கோட்பாடு" பற்றி தெரிந்திருக்கும்? 🤔

பகுத்தறிவு பதில்: ஹாலிவுட் திரைப்படங்களில் வருவதுபோன்று, ஆர்கிமிடிஸ் காலப்பயணம் செய்து, பாண்டியரை சந்தித்து, அவருக்கு, முதலில், "ஏ பார் ஆப்பிள்" என்று பீட்டர் விட கற்றுக்கொடுத்து, பிறகு, தான் சுட்ட... மன்னிக்கவும்... "கண்டுபிடித்த" கோட்பாட்டை கற்றுக்கொடுத்திருக்கவேண்டும். 😜

மெய்ப்பொருள் காண்பது அறிவு! கிடைக்கும் பொரைக்கேற்றவாறு திரிப்பது பகுத்தறிவு!! 👊🏽

Wednesday, October 19, 2022

வடக்கத்தியரை பந்தாடிய நம் மூவேந்தர்கள்!! 😍


மூவேந்தர்களான சேர, சோழ & பாண்டியர்கள் எப்போதும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டேயிருந்த மாதிரி ஒரு கற்பிதம் இருக்கிறது.

சரி! அப்படியே முறைப்பு இருந்ததாக வைத்துக்கொண்டாலும், மூவேந்தர்களும் தங்களுக்குள் முறை வைத்து ஒரு வேலை செய்திருக்கிறார்கள்: வடக்கத்தியர்களுக்கு எதிரான போர்!!

சங்ககாலச் சோழ மன்னரான கரிகால் சோழர், தனது முறை வந்தவுடன், வடக்கத்தியர்களை மொத்தியெடுத்துவிட்டு, பந்தை பாண்டியர்களின் பக்கம் தள்ளிவிடுகிறார்.

இப்போது, பாண்டியர்களின் முறை.

கரிகாலர் காலத்துக்கு சற்று பிற்பட்ட பாண்டிய மன்னரான "ஆரியப்படை கடந்த" நெடுஞ்செழியன், வடவர்களுக்கு எதிராக ஒரு பரபரப்பான பந்தாட்டத்தை நடத்திக்காட்டுகிறார்.

அடுத்து, சேரர்களின் முறை. 

இம்முறை "வாளும் குடையும் வடதிசை பெயர" வைத்த பெருமைக்குரிய சேர மன்னர் கடற்பிறகோட்டிய வேல்கெழு குட்டுவன் ஆட்டத்தை முன்னிருந்து நடத்துகிறார்.

"என்ன? இப்படியொரு சேர மன்னரா? இப்பெயரை இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே!" என்று சிலர் முணுமுணுக்கலாம். 
"கடற்பிறகோட்டிய வேல்கெழு குட்டுவன்" என்றால் புரியாது. "சேரன் செங்குட்டுவன்" என்றால் சட்டென புரியும்! 😊

இமயத்தில் கல்லெடுத்து, கனக விசயர்களின் தலையிலேற்றிக் கொண்டுவந்து, கண்ணகித்தாய்க்கு ஓர் கோயில் கட்டி, மூவேந்தர்களின் எழுதப்படாத ஒப்பந்தத்தை இனிதே நிறைவேற்றி, ஒரு வட்டத்தை முழுமையாக்கியவர் சேரன் செங்குட்டுவன்.

சேரன் செங்குட்டுவனின் தந்தையான "இமயவரம்பன்" நெடுஞ்சேரலாதனின் பட்டப்பெயர் கூட இமயத்தை அவர் வரம்பாக (எல்லையாக) வைத்திருந்ததை சுட்டிக்காட்டுகிறது!

அன்று, இமயமலை தமிழர்களுக்கு பழக்கமான, நெருக்கமான ஒரு மலையாகவே இருந்திருக்கிறது என்பதை

- பொதியிலாயினும் இமயமாயினும்
- வில் எழுதிய இமயத்தோடு கொல்லியாண்ட குடவர் கோவே

போன்ற சிலப்பதிகார சொற்றொடர்கள் வாயிலாக உணரலாம்.

(மேற்கண்ட முகநூல் இடுகையின்: வேர் பதிவு - மோகன ரூபன், 06/10/2022. மறுபதிவு - லீலா வாணியர்)

oOo

இவ்வாறு பல காலம் நம்முடன் சண்டையிட்டு ஓய்ந்து போனபின், இனி கத்தியால் தென்னகத்தை வெல்லமுடியாது என்பதையுணர்ந்த வடக்கத்தியர்கள், அடுத்து கையிலெடுத்த போர்க்கருவிகள்: மொட்டை & அம்மணம்!

அதாவது, பெளத்தம் & சமணம்!!

ஒருவனை மதமாற்றிவிட்டால் போதும். தாய்மொழி, சமயம், வாழ்க்கை முறை என அனைத்து அடையாளங்களையும் இழந்துவிடுவான். இழப்பது மட்டுமில்லாமல் அவற்றிற்கு எதிராகவும் திரும்புவான். பிறந்த மண்ணின் எதிரியாவான். மாறிய மதத்தின் அடிமையாவான். மாற்றியவனின் கைகூலியாவான். (இன்றைய மதமாற்றத் தொழில்களை பார்த்தாலே இவையாவும் கண்கூடாக விளங்கும்.)

மதமாற்றம், ஆரியத் திணிப்பு (*), வளங்கொழிக்கும் தொழில்கள் பறிப்பு, வரிக் கொள்ளை... (அன்றும் இன்றும் ஒரே காட்சிதான்!) என சில நூற்றாண்டுகள் வசதியாக வாழ்ந்த வடக்கத்தான்களின் வாழ்வு திருஞானசம்பந்தப் பெருமானால் 🌺🙏🏽🙇🏽‍♂️ முடிவுக்கு வந்தது. அன்னைத் தமிழும், தமிழரது திருநெறியான சைவமும் மறுமலர்ச்சி கண்டது.

ஆனால், தீநுண்மிகள் என்றுமே முழுவதுமாக மடிவதில்லை. விரைவில் உருமாற்றம் கொள்கின்றன. அம்மணம் கோவிந்தாவானாலும், மொட்டை நாமமாக மாறியது. சமூக & சமய சீரழிவு தொடர்ந்தது.

oOo

* ஆரியத் திணிப்பு என்றதும் பலருக்கு இன்னமும் ஆரியப் பூசாரிகள்தாம் நினைவுக்கு வருகிறார்கள். இது தவறாகும். ஆரியத் திணிப்பை தொடங்கியது சமண-பெளத்தர்கள். பின்னர், பிழைப்புக்காகவும், பாதுகாப்புக்காகவும் தெற்கு நோக்கி வந்த பூசாரிகள், ஏற்கனவேயிருந்த கட்டமைப்பை பயன்படுத்தி முன்னேறி, நிலைபெற்றுக் கொண்டனர். இவர்கள் வந்த பிறகு நடந்த நிகழ்வு: கருவறையிலிருந்து அன்னைத்தமிழ் வெளியேற்றப்பட்டது!

ஒரு வகையில் சமண, பௌத்த & பூசாரிக் கூட்டங்கள் ஒன்றுபடுகின்றன: எல்லோரும் வடக்கத்தியர்கள் / ஆரியர்கள்.

oOOo

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே 🌹🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Friday, October 14, 2022

புவி சுழற்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் உஜ்ஜயினி திரு மகாகாலேசுவரர்!!


கடந்த அக்-11 அன்று, உஜ்ஜயினி திரு மகாகாலேசுவரர் 🌺🙏🏽🙇🏽‍♂️ திருக்கோயிலின் மேம்படுத்தப்பட்ட நடைபாதையின் முதல் பகுதி திறக்கப்பட்டது.

பெரும் புகழ் பெற்றதும், மிகவும் பழமையானதுமான இத்திருக்கோயிலைப் பற்றிய பலரும் அறிந்திராத ஒரு தகவல்:

இன்று, வெள்ளை ஓநாய்களின் நகரமான கிரீன்விச் வழியாக பாயும் 0° நெடுவரை (தீர்க்கரேகை, Longitude), இதற்கு முன்னர், காலகாலமாக இத்திருக்கோயிலின் வழியாக பாய்ந்து சென்றது! இத்திருக்கோயில் உடையவரான திரு மகாகாலேசுவரர்தான் புவி சுழற்சியின் தொடக்கமாக (0°) அறியப்பட்டார்.

🌷 ஏன் இப்படிப்பட்ட சிறப்பு அந்த உடையவருக்கு கொடுக்கப்பட்டது?

அந்த உடையவரின் கீழே, திருநீற்று நிலையிலிருக்கும் பெருமானின் பங்களிப்பு வானவியலுக்கு இன்றியமையாததாக இருந்திருக்கும். எனவே, அந்த பங்களிப்பை, அதை வழங்கிய அப்பெருமானை மக்கள் என்றும் நினைவு கூறவே, இந்த ஏற்பாட்டை நம் முன்னோர்கள் செய்திருக்கிறார்கள்.

(மகாகாலேசுவரர் என்ற திருப்பெயரில் வரும் "கால்" என்ற ஆரியச்சொல் நேரத்தையும், வானவியலின் அடிப்படையான கணிதத்தையும் குறிக்கும்.)

💥 பின்னக் கணக்கையே (Fraction) அறிந்திராத கிரேக்க-உரோமானிய பண்பாடுகளிலிருந்து வரும் உலகக்கொல்லிகளான வெள்ளையர்களால், உஜ்ஜயினியிலிருந்து கிரீன்விச்சிற்கு தொடக்க நெடுவரையை, ஒருவரும் அறியாமல் எப்படி மாற்றியிருக்க முடியும்?

முடியாது. சோதிடத்தை சொந்தம் கொண்டாடிய / சோதிடர்களை கட்டுப்படுத்தியப் பிரிவினருக்கு தெரியாமல் இப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது. காலகாலமாக தங்களது மொழி, தொன்மை மற்றும் இதர அடையாளங்களை காப்பாற்றிக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் தெரிந்த அப்பிரிவினர் நினைத்திருந்தால், மேற்கண்ட உண்மையை இன்று வரை காப்பாற்றி, மக்களின் மனதில் பசுமரத்தாணியாக்கி இருக்கமுடியும்.

இன்று உண்மை வெளிவந்தும் பரவலாகவில்லை. அதற்கு என்று திருவுளமோ? 😔

oOOo

உஞ்சேனை மாகாளப் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Sunday, October 2, 2022

திருச்செந்தூர் கருவறையின் பின்புறமுள்ள ஐந்து இலிங்கத் திருமேனி 🌺🙏🏽🙇🏽‍♂️ - தெரிந்த செய்தி. தெரியாத பொருள்.


மேலுள்ள படத்துடன் சுற்றிவரும் தொன்ம வழி செய்தி:

இந்த ஐந்து இலிங்க திருவுருவம் திருச்செந்தூர் கருவறையின் பின்புறமுள்ளது. இத்திருவுருவை வணங்கிய பின்னரே முருகப்பெருமான் சூரபதுமனை அழிக்கப் புறப்பட்டார்.

இதன் உட்பொருள்:

திரு செந்திலாண்டவர் எனப்படும் திருச்செந்தூர் மூலவரின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் மாமுனிவர், வடக்கிருந்து மெய்யறிவு பெறுவதற்கு முன்னர் இந்த ஐந்து இலிங்கத் திருவுருவை வழிபட்டார்.

🌷 முருகப்பெருமான் - மாமுனிவர்
🌷 சூரசம்ஹாரம் - மெய்யறிவு பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் யாவும்
🌷 தெய்வானை - மெய்யறிவு
🌷 யானை முகாசுரன் - நமது நினைவுகள்
🌷 கோளரி (சிங்க) முகாசுரன் - நமது முயற்சி
🌷 சூரபதுமன் - நமது செருக்கு / "நான் இன்னார்" எனும் பொய்யறிவு

oOo

அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி

மேலுள்ள பாடல் வரி திருச்செந்தூர் கந்த சஷ்டி கவசத்தில் இடம்பெறுகிறது.

🌷 அமரர் - இறப்பற்ற பரம்பொருளாகிய நாமே! நமதுடல்தான் பிறந்திருக்கிறது. இறப்பதும் அதுதான். நாம் பிறக்கவில்லை. இறப்பும் நமக்கில்லை.

🌷 இடர் - உடலல்லாத நம்மை உடலாகக் காண்கிறோம். நிலையான பொருளாகிய நம்மை நிலையற்றதாக உணர்கிறோம். நிலையற்ற உலகை நிலையானதாக காண்கிறோம். இந்த தவறுகள்தாம் நாம் படும் அனைத்து இடர்களுக்கும் அடிப்படையாகின்றன.

🌷 அமரம் - திருப்புதல் / திரும்புதல். வெளிப்புறமாக செல்லும் நோக்கத்தை தன் மீது - தனது தன்மையுணர்வின் மீது - திருப்புதல் / திரும்புதல். இது எப்போது நடக்கும்?

இறையருள் (இறைவனும் மெய்யாசிரியரும் வேறுவேறல்லர்), முன்வினைப்பயன், நம் முயற்சி என அனைத்தும் கூடியிருக்கும் ஒரு சமயத்தில், நமக்குள்ளிருந்து ஒரு தெளிவு / அறிவு (குமரன்) தோன்றி, நமதுண்மையை நமக்கு உணரவைக்கும். அதுவரை புறமுகமாகவிருந்த நமது கண்ணோக்கம் அகமுகமாக நம் மீது திரும்பும் (அமரம்). இவ்வாறு "அமரம் புரிந்த" (கண்ணோக்கத்தை திருப்பிய) "குமரனடியை" (உள்ளிருந்து வெளிப்பட்ட அறிவை) இறுகப் பற்றிக்கொண்டிருத்தலே ("நெஞ்சே குறி") நிலைபேறாகும்!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Wednesday, September 7, 2022

பொன்னியின் செல்வன் பொன்னியின் செல்வனாக இருக்குமா? 🤔


அண்மை காலமாக தமிழ் திரைப்படங்கள் சில வரையறைகளுக்கு உட்பட்டு எடுக்கப்படுகின்றன:

🔸 குறி மதத்தினரை நல்லவர்களாக காட்டவேண்டும். நல்லவர்களாக காட்டமுடியாவிட்டாலும், கெட்டவர்களாக காட்டக்கூடாது. இதுவும் முடியாவிட்டால், காட்சிகள் நகரும்போது சில ஆண் & பெண்குறிகளையாவது காட்டவேண்டும் (அம்மதத்தில் ஆண்கள் ஆண்குறிகளுக்கும், பெண்கள் பெண்குறிகளுக்கும் சமமானவர்கள்).

🔸 இவை தசமபாக மதத்தினருக்கும் பொருந்தும். குறைந்தது, அவர்களது ஒப்பாரி நிலையங்களையாவது காட்டவேண்டும்.

🔸 திரைப்படத்தின் கொடூரன் இந்துவாக இருக்கவேண்டும்.

🔸 நமது திருத்தலங்களை காட்டக்கூடாது. அப்படி காட்டவேண்டியிருந்தால், அதற்கு சமமாக, தசமபாக & குறி மதக்கட்டிடங்களை காட்டவேண்டும்.

🔸 முடிந்தவரை திரையில் தோன்றும் யாரும் திருநீறு, மஞ்சள், சிவப்பு என எந்த இந்து சமய சின்னங்களும் தரித்திருக்கக்கூடாது. மற்றும், இந்து சமயத்துடன் தொடர்புடைய எதையும் (கோயில்கள், திருவிழாக்கள்...) காட்டக்கூடாது. அப்படி காட்டினால், அதற்கு சமமாக குறி / தசமபாக மதத்தினருடையதையும் காட்டவேண்டும்.

இப்போது கேள்வி: எவ்வாறு "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தை மேற்கண்ட வரையறைகளுக்கு உட்படுத்தியெடுக்க முடியும்? 🤔

💥 சில ஆண்டுகளுக்கு முன்னர், குறி மதத்தினரின் கூட்டமைவுகளுக்குள் மட்டும் சுற்றிவரவேண்டிய ஒரு குபீர் செய்தி பொதுவெளிக்கு வந்தது: பேரரசர் இராஜராஜனின் தமக்கையான குந்தவை பிராட்டியார் குறி மதத்தையேற்று, பெண்குறி தோற்றத்திற்கு மாறி, மார்க்கப் பற்றாளராக வாழ்ந்தவர்!! 😂😂

அதில் சொல்லப்படாத செய்தி: குந்தவை பேகத்தை மணப்பதற்காக, வந்தியத்தேவன் குறி மதத்தையேற்று, ஆண்குறி தோற்றத்திற்கு மாறினார்! 🤣🤣

இந்த "வரலாற்று" 🤭 செய்தியை அடிப்படையாகக் கொண்டு காட்சிகளை அமைக்கலாம். "ஆண்குறியும் & பெண்குறியும் துணையிருந்ததால்தான் பேரரசரால் பெரும் புகழ் பெறமுடிந்தது" என்ற வசனம் வானத்திலிருந்து இறங்குவது போன்றொரு காட்சியை வைக்கலாம். 😁

💥 இதை பார்த்துக்கொண்டு சமாதான விரும்பிகளான தசமபாக ஊழியக்காரர்கள் சும்மாவிருப்பார்களா? ஏற்கனவே, 8-9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு தெற்கில் "கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" 😉. அதை அடிப்படையாகக் கொண்டு, ஒப்பாரி நிலையத்திற்கு சென்று, முழங்காலிட்டு, கண்களில் நீர் வழிய மனமுருகி ஜெபம் செய்துவிட்டு, எச்சில் பிஸ்கோத்தை தின்றுவிட்டு புறப்பட்டதால்தான் பேரரசரால் காந்தளூர் போரில் வெற்றிவாகை சூட முடிந்தது என்ற சுவிக்ஷேக் காட்சியை இடம் பெற வைத்திருப்பார்களென்று எதிர்பார்க்கலாம். 😄

💥 இவ்விரு கூட்டத்திடம் பொரை பார்க்கும் பான்பராக் & கூவஞ்சட்டைகள் சும்மாவிருக்குமா? தங்களுக்கேற்றவாறு சில காட்சிகளை வைக்கச் சொல்வர்.

பான்பராக் சட்டைகளின் கொள்கைகள் என்ன?

- எந்த நிறுவனமும் உருப்படியாக இயங்கக்கூடாது
- தகுதியுள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடாது. அல்லது, அவர்கள் கடைநிலையில் இருக்கவேண்டும்.
- எப்போது பார்த்தாலும் "ஒழிக" என்று கூப்பாடு போடவேண்டும்

பாசறைகளை காட்டும்போது, வாயில்களில், சில கொம்பு சீவப்பட்ட, மறை கழன்ற, மூளைச்சூடு கேசுகள் நின்றுகொண்டு "ஒழிக" என்று கூப்பாடு போட்டுக்கொண்டு, உண்டியல் குலுக்கிக்கொண்டிருப்பது போன்று சில காட்சிகளை வைத்தால் வேலை முடிந்தது. 😝

💥 அடுத்தது, கூவஞ்சட்டைகள்.

இவர்களது கொள்கைகள் என்ன?

- மக்களிடம் ஒழுக்கம் என்பது அறவேயிருக்கக்கூடாது
- "கற்பு என்றால் என்ன?" என்று கேட்கும் நிலையில் பெண்கள் இருக்கவேண்டும்
- மக்கள் எல்லோரும் ஈன வெங்காயத்தைப் போன்று 10-15 நாட்களுக்கொரு முறை மட்டுமே குளிக்கவேண்டும்

இதற்கேற்றவாறு காட்சிகள் அமைத்து, படத்தை ஓட்டுவதென்பது கடினம். எனவே, "எப்போதெல்லாம் நாட்டில் நீதி, நேர்மை, ஒழுக்கம், இறை சிந்தனை உச்சம் பெறுகிறதோ, அப்போதெல்லாம் ஈன வெங்காயம் தோன்றுவான்" என்ற பகுத்தறிவு நம்பிக்கைக்கு 😜 ஏற்றவாறு காட்சியமைக்கலாம்: அக்கால திண்ணைப் பள்ளியில் படிக்குமொரு 10 வயது மாணவன், ஆசிரியரின் மனைவியின் இடுப்பைக் கிள்ளி, துடைப்பக்கட்டையால் தரும அடிவாங்குவது போன்றொரு காட்சியை வைத்து, ஈன வெங்காயத்திற்கு மரியாதை செய்யலாம். 😂

இப்படி அனைத்து தரப்பினரையும் அரவணைத்து படமெடுத்த பின்னர், இயக்குனர் செய்ய வேண்டிய வேலை ஒன்றேயொன்றுதான்: படத்தின் பெயரை "கூவத்தின் செல்வன்" என்று மாற்றுவது!! 😂😂🤣

Tuesday, September 6, 2022

மாமுனி மயன் பற்றிய சில தகவல்கள்


🌷 இனத்தால் தமிழரான இவர் மயன், மயாசுரன், விசுவகர்மா, மாமுனி மயன் என பல பெயர்களால் அறியப்படுகிறார்.

🌷 இவர் பேரரசர் இராவணனின் மாமானாராவார் (மண்டோதரியின் தந்தை).

🌷 இவரை பற்றி முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த விட்ருவியஸ் என்ற உரோமானிய கட்டிட வடிவமைப்பாளர் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

🌷 இவர் எழுதிய ஸ்தாபத்ய வேதம் எனும் நூல் அனைத்து வேதங்களுக்கும் காலத்தால் முந்தையதாகும்.

🌷 இவரது ஐந்திரம் எனும் நூல் உலகின் முதல் அறிவியல் நூலாகும். இந்நூலை கற்றுத் தெளிந்த பின்னரே சைவ சிந்தாந்தம் மற்றும் ஏனைய சமய நூல்களை கற்றிருக்கிறார் வள்ளலார் 🌺🙏🏽🙇🏽‍♂️. இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள "தொலைதூர கோள்களுக்கான பயணம்" பற்றி மேலை நாடுகளில் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.

(இத்தகவல்கள் யாவும் மறைந்த முனை. கணபதி ஸ்தபதி அவர்களின் பேச்சு & எழுத்துக்களிலிருந்து தொகுக்கப்பட்டது. மேலே குறிப்பிட்டுள்ள இரு நூல்களையும் ஸ்தபதி அவர்கள் தனது இறுதி காலம் வரை ஆராய்ந்து கொண்டிருந்தார். மாயன்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு சென்று, ஆராய்ந்து, மாயன் நாகரிகமும் தமிழர் நாகரிகமும் ஒன்றேயென்று அறுதியிட்டுக் கூறினார். இறப்பதற்கு முன், மாமுனி மயனுக்காக ஒரு பெரிய கோவிலை, மாமல்லைக்கு அருகிலுள்ள தனது சிற்பக்கூட வளாகத்தில் கட்டத்தொடங்கியிருந்தார்.)

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Saturday, September 3, 2022

புத்தர்தான் பிள்ளையாராம்! பௌத்தத்திலிருந்து வந்ததுதான் பிள்ளையார் வழிபாடாம்!! 🤦🏽‍♂️

(பான்பராக் / கூவஞ்சட்டைகள் கூலிக்கு மாரடித்த (அதாவது, எழுதிய) ஓர் இடுகைக்கு நான் கொடுத்த 👊🏽)

பான்பராக் & கூவஞ்சட்டைகளுக்கு இதே வேலை. பொரை கிடைத்ததும், ஏன் குலைக்கிறோம், எதற்கு குலைக்கிறோம், யாரை நோக்கி குலைக்கிறோம் என்ற சிந்தனையற்று, கண்டபடி குலைத்து கல்லடி வாங்குவதே இவர்களது பிழைப்பாகவுள்ளது. 🤬


- பௌத்த மதத்திலும் பிள்ளையார் வழிபாடு இருந்ததே தவிர, இது அவர்களுடையது என்று சொல்வதற்கு எந்த பற்றுக்கோடும் இதுவரை கிடைக்கவில்லை. பிள்ளையார் பௌத்தத்திலிருந்து வந்திருந்தால், வைணவம் தோன்றும்போதே அதில் இருந்திருப்பார். "பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்தது" என்பது பழமொழி. சைவர்களின் பிள்ளையாருக்கு போட்டியாக உருவாக்கப்பட்டவர் வைணவத்தின் அனுமன். பௌத்தத்தில் ஏற்கனவே பிள்ளையார் இருந்திருந்தால், இந்த பழமொழி தோன்றியிருக்க வாய்ப்பில்லை. அனுமனை உருவாக்கிய பின்னரும், பிள்ளையார் வழிபாட்டை ஒன்றும் செய்ய முடியாததால், வேறு வழியின்றி, பிள்ளையாருக்கு "தும்பிக்கையாழ்வார்" என்று பெயரிட்டு தங்களது மதத்திற்குள் சேர்த்துக்கொண்டனர்.

- சங்க காலத்தில் பிள்ளையார் வழிபாடு இல்லை என்பது பொய். இதை உடைக்க அதியமான் காலத்து ஒளவையாரின் பாடல்களே போதும்.

- எத்தனையோ வகை வழிபாடுகள் நம் மண்ணிலிருந்தன. அவற்றில், பிள்ளையார் வழிபாடும் ஒன்றாகும். சிந்திப்பதற்கு எளிதாக இருந்ததால் மக்களிடையே பெரும் புகழ் பெற்றுவிட்டது. எனவே, அனைத்து மதத்தினரும் தங்களது மதத்திற்குள் சேர்த்துக் கொண்டனர்.

- பிள்ளையார் வழிபாடு ஒருவரை மெய்யறிவிற்கு (ஒளி) கொண்டுபோகும். பௌத்தர்களின் குறிக்கோள் பாழ் (சூனியம் / இருள்). இரண்டும் எப்படி ஒன்றாகும்?

- விநாயகர் என்பது ஆரியப் பெயர். இதற்கு ஆரியத்தில் பொருள் காணவேண்டுமே தவிர, "வினா நாயகர்" என்று பிரித்து, தமிழில் பொருள் காண முற்படுவது பெரியார்தனமாகும் = முட்டாள்தனமாகும் = பகுத்தறிவாகும்!! 👊🏽

oOOo

அடுத்து, பிள்ளையாரின் திருவுருவம் உணர்த்தும் மெய்மைகளைப் பார்ப்போம்:

🌷 யானை உருவம் - "நினைவுகளே நாம்" என்பதை குறிப்பதற்காக நினைவாற்றலுக்கு பெயர் போன யானை உருவைக் கொடுத்துள்ளனர்.

🌷 பாசம் - உடல்-உலக சிறைக்குள் சிக்கிக்கொள்வதும் நாமே

🌷 அங்குசம் - அச்சிறையிலிருந்து விடுபட்டுக்கொள்வதும் நாமே

🌷 அங்குசத்திற்கு பதில் மழு இருப்பின் - பற்றுகளை அறுத்தெரிந்துவிட்டு, உடல்-உலக சிறையிலிருந்து விடுபட்டுக்கொள்வதும் நாமே

🌷 ஒடித்த தந்தம் - நம் வாழ்க்கை எனும் மகாபாரதத்தை எழுதுவது நாமே

🌷 சிவலிங்கம் / இனிப்பு / கொழுக்கட்டை - மெய்யறிவும் நம்மிடமே உள்ளது. இருந்தாலும், நம் நோக்கம் மகாபாரதத்தின் (நம் வாழ்க்கையின்) மேலிருப்பதால், தந்தத்திற்கு வலது கையும், மெய்யறிவிற்கு இடது கையும் கொடுத்துள்ளனர்.

🌷 மூஞ்சுறு - அறியாமை எனும் இருள். அது கொறிக்கும் இனிப்பு / கொழுக்கட்டை - நமது மெய்யறிவு. எக்கணமும் தன்மையுணர்வை விடாது பிடிக்கவேண்டும். சற்றே விட்டாலும், இருளின் (அறியாமையின்) பிடிக்குள் மாட்டிக்கொள்வோம். மெய்யறிவை இழந்துவிடுவோம்.

oOo

இப்போது கேள்விகள்

- மேற்கண்ட விளக்கம் எந்த வகையில் பெளத்தத்திற்கு பொருந்துகிறது? 

- தம்மிடம் வருபவர்களை நன்கு "மொட்டையடித்து", தின்று, கொழுத்துக் கிடப்பதே வடக்கிலிருந்து வந்த பெளத்தர்களின் கொள்கையாகும் (வடக்கிலிருந்து வருவதெல்லாம் வேறெதற்கு வருகின்றன?) இவர்களுக்கும் பிள்ளையாருக்குமுள்ள ஒரேயொரு ஒற்றுமை: கொழுத்த உருவம்! எனில், பிள்ளையார் எப்படி புத்தராகிறார்? 👊🏽👊🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸