Showing posts with label Self reliance. Show all posts
Showing posts with label Self reliance. Show all posts

Tuesday, March 15, 2016

நமக்கு நாமமே!!


பரங்கி நாடுகளில் மருத்துவ செலவு அதிகம் என்பதால், மருத்துவ சுற்றுலா என்னும் பெயரில் சிகிச்சைக்காக நம் நாட்டிற்கு வரும் பரங்கியர்களின் ஏண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது. அதாவது, பரங்கியனின் பணம் நமக்கு வருகிறது.

இது, அவனை ரூம் போட்டு யோசிக்க வைத்திருக்கும்: "கருப்பனின் பணம் தான் நமக்கு வரவேண்டும். நம் பணம் அவனுக்குச் செல்வதா?". 😕

🌋 விளைவு புகழ் பெற்ற (எதற்கு புகழ்? நமது அறிவுச் செல்வங்களை சுடுவதிலா? 😀) கிங்ஸ் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக வருகிறது.
🌋 அடுத்துப் புகழ் பெறாததும் வரும்.
🌋 பரங்கி பணம் இனி அங்கே செல்லும்.
🌋 அடுத்து, ஒண்டிய பிடாரி ஊர் பிடாரியை விரட்டும்.
🌋 கருப்பனின் பணமும் அங்கேயே செல்லும்.
🌋 அடுத்தக் கட்டமாக, சென்ற காலனியாதிக்கக் காலத்தில் மிச்சம் வைத்ததை திருடும் படலம் ஆரம்பிக்கும்.
🌋 இறுதியாக, மிச்சமிருக்கும் நமது கலாச்சாரம், மொழி, சமயம், அறிவு என அனைத்தையும் அழிக்க முற்படுவர்.
🌋 போராட்டங்கள் சமாளிக்க முடியாமல் போகும் போது, உள்ளூர் கருங்காலிகளிடம் நாட்டை விற்றுச் செல்வர். நாமும் அவர்களை அன்னை, தந்தை, மாமா என்றெல்லாம் அழைத்துக் கொண்டாடி மகிழ்வோம்!! 😠😡😬

இது அதீத கற்பனை என்று சிலர் நினைக்கலாம். இது மேற்சொன்ன படிகளில் எதுவரைச் சென்றாலும், நமக்கு நாமமே!!

இது எதுவும் நடக்காமல் இருக்க வேண்டுமானால், ஒரே தீர்வு ஒவ்வொரு இந்தியனும் சுயசார்புடன் வாழ்வதே!!!

posted from Bloggeroid

Monday, March 14, 2016

தற்சார்புடன் வாழ்வோம்

இப்படியேச் சென்றால் Wall-E படத்தில் காண்பிக்கப்படும் கதி தான் நம் பூமித்தாய்க்கு ஏற்படும்!!

எவ்வளக்கு எவ்வளவு நமது தேவைகளுக்கும் வேலைகளுக்கும் மற்றவரைச் சார்ந்து இருக்கிறோமோ அவ்வளக்கு அவ்வளவு புவி வெப்பமடையும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், விலைவாசி உயரும், அதிகம் உழைக்க வேண்டியிருக்கும், அதன் விளைவாக உடல் வீணாகும், .... சுருங்கக் கூறின் வாழ்க்கை துன்பமயமாகும்.

எவ்வளக்கு எவ்வளவு தன் வேலைகளை வேலையாட்கள் வைத்து ஒருவன் முடிக்கிறானோ அவ்வளக்கு அவ்வளவு அவன் பெரிய மனிதன் என அளவுகோல் வைத்துள்ள இந்நாட்டில் இப்படியெல்லாம் எழுதிக்கொண்டு...... என்கிறீர்களா? 😂😂

posted from Bloggeroid

Sunday, March 13, 2016

குமரி கண்டமா? சுமேரியமா?

தினமலர் - சென்னை - 13/03/2016

இன்றைய சூழலில் JNU-விலிருந்து தேசத்துரோகி திரு. கன்னையாகுமார் அவர்கள் இப்புத்தகத்தை வெளியிட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்!! 😉

எவ்வளவோ வழிகளில் நம் நாட்டை, நம் கலாச்சாரத்தை, நம் சமயத்தை அழிக்க முயலும் பரங்கியர்களின், பரங்கி-அடிவருடிகளின் யுக்திகளில் ஒன்று: உள்ளிருந்து தாக்கும் கருங்காலிகளை உருவாக்குவது மற்றும் ஆதரிப்பது!!

சிந்து சமவெளி நாகரிகம் தமிழனுடையது. இந்திய கலாச்சாரம் தமிழனுடையது. இந்து சமயத்திற்கும் ஏனைய பர மதங்களுக்கும் தமிழனின் ஆதிசைவமே அடிப்படை. முருக தத்துவம் தோன்றியதெல்லாம் வெகு காலங்களுக்குப் பின்னரே. ஆசிரியர் குறிக்கும் கடற்கோளாலும், அந்நிய இன மற்றும் மதப் படையெடுப்புகளாலும், கடந்த ஆயிரமாண்டுகளாக நடந்த தமிழரல்லாத ஆட்சியாலும் இதற்கான தடயங்களை முற்றிலும் இழந்துவிட்டோம்.

ஒரு பக்கம் தமிழனின் சமயமாக சமணத்தை காண்பிக்கும் கருங்காலி வேலை நடந்து கொண்டிருக்கிறது. "வடக்கிலிருந்து வந்தது தானே சமணம்? அதற்கு முன் தமிழன் காட்டுமிராண்டியாக இருந்தானா?" என்பன போன்ற அடிப்படை கேள்விகள் கூட நமக்கு தோன்றாவண்ணம் காய்கள் நகர்த்தப்படுகின்றன.

இன்னொரு பக்கம் தமிழர்கள் சுமேரியர்கள் என்ற புது 'பிட்'டைப் போடுகிறார்கள். எதற்கு இப்படி சுற்றி வளைக்கவேண்டும்? இறுதியில் 'சு'-வை கழட்டுவார்கள். இப்போதே கழட்டி விடவேண்டியது தானே? 😂

மொத்த உலகையும் மேரியர்களாக்கிய பின்னர் பரங்கியர் அடங்குவரா? வெள்ளை மேரியர்கள், கருப்பு மேரியர்கள், மஞ்சள் மேரியர்கள் என அனைவரும் பிரிக்கப்படுவர். வெள்ளை மேரியர்கள் தேவர்கள் என அழைக்கப்படுவர். மற்ற மேரியர்கள் அசுரர்கள் என அழைக்கப்படுவர். உலக 'நலனுக்காக' வெள்ளை மேரியர்கள் மண்டியிட்டு தேவனை வேண்டுவார்கள். அவர்களின் 'நலனுக்காக' கருப்பு மேரியர்கள் உழைத்துக் கொண்டிருப்பார்கள். 😂😂

காட்சிகள் மாறப் போகின்றனவா என்ன? 😕

எல்லாவற்றிற்கும் தீர்வு நம் முன்னோர்களின் வழியான சுயசார்பு தான். பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் உணவு, உடை, இருப்பிடம், எரிபொருள், கழிவு மேலாண்மை, தற்காப்பு, ம

ருத்துவம் மற்றும் வீடுபேறு ஆகிய அனைத்திலும் யாரையும் சாராமல் தன்னைச் சார்ந்து இருப்பதும், பிறவியின் குறிக்கோளாக பிறவாமையைக் கொள்வதும் தான் இன்று நாம் காணும் அனைத்து அவலங்களுக்கும் தீர்வு!!

posted from Bloggeroid