Showing posts with label Platform_Scale. Show all posts
Showing posts with label Platform_Scale. Show all posts

Saturday, June 18, 2016

💥 தமிழனின் துலாக்கோல் தொழில்நுட்பம் 💥


இந்தப் படத்தில் இடதுபுறத்திலிருப்பது 2000 ஆண்டுகள் பழைமையான ஒரு சிற்பம். பக்கத்தில் இந்நாளைய புகைப்படம். இந்தக் கால இடைவெளியை கரைத்து இரண்டையும் இணைக்கும் ஒத்த அம்சம் ஒன்று இரண்டிலும் உண்டு! பொருளை நிறுக்க பயன்படும் துலாக்கோல் தான் அது!!

சிற்பம் சொல்லும் கதை: இருக்கையில் அமர்ந்திருப்பது சிபி சக்கரவர்த்தி. காலடியில் புறா. அடுத்து அமர்ந்த நிலையில் தொடைக்கறியை அறுத்தெடுக்கும் பணியாள். துலாக்கோலை கையில் பிடித்து தொடைக்கறியை எடைபோடுபவன். பின்புலத்தில் சிலர். இது தான் இந்த சிற்பம் விவரிக்கும் காட்சி.

எடைக்கல் இல்லாமல் பொருளை எடை போடும் ஒத்தத்தட்டு தராசு தொழிற்நுட்பத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்ததற்கு சாட்சியம் இந்த சிற்பம்!!

இந்தத் தொழிற்நுட்பம் தான் இன்றைய ரயில் நிலையம், சரக்குப் பதிவு அலுவலகங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் Platform Scale தயாரிப்புக்கு மூலம்! இதன் நீட்சி தான் முழு லாரியையே எடைபோடும் Weighbridge!
இன்றும் நமது கிராமங்களில் தோட்டதுக் காய்கறிகளை எடைபோடவும், கடப்புறத்தில் கருவாடு மீன் நிறுத்தவும், தேரிக்காட்டில் கருப்பட்டி தூக்கவும் இந்த துலாக்கோல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. 2000 ஆண்டுகளுக்கு மேலாக கண்ணி அறுபடாமல் நமது வாழ்வுமுறையில் தொடர்ந்து கொண்டிருக்கும் துலாக்கோல் ஓரு விந்தை தான்!!

இதைப் பற்றி இன்றைய மெக்காலே படிப்பு படித்த மேதாவிகளிடம் கேட்டுப்பாருங்கள்: "இந்தப் பரங்கிதாசிமகன் கண்டுபிடித்தான்", "அந்தப் பரங்கிதாசிமகன் கண்டுபிடித்தான்" என "மொழிகளில் தாசியாகிய" ஆங்கிலத்தில் "பீலா" (அல்லது "பீட்டர்") விடுவார்கள். 😛😜😝

(மூலம்: https://plus.google.com/+DWARAKANATHREDDYK/posts/ecxWN8c9ggj)

posted from Bloggeroid