Wednesday, July 1, 2026

முருகப்பெருமான் வடக்கத்திய கடவுள்தான்!! 😉


> தமிழர்: முருகப்பெருமான் வடக்கத்திய கடவுளா?
> அரவம்: அவுனு நைனா!
> தமிழர்: இப்புடு சூடு!! 😎

🔸 முதல் சங்கம் - 4,440 ஆண்டுகள்
🔸 2வது சங்கம் - 3,700 ஆண்டுகள்
🔸 3வது சங்கம் - 1,850 ஆண்டுகள்
🔸 சங்கப் பொழுது முடிவடைந்தது - பொஆ 3ம் நூற்றாண்டு

எனில், இன்றிலிருந்து 7,250 ஆண்டுகளுக்கு முன்னர் 2வது சங்கம் தொடங்கியுள்ளது என்று கொள்ளலாம். 2வது சங்கத்தின் தலைவராக முருகப்பெருமான் இருந்துள்ளார். அதாவது, முருகன் என்ற பெயரும், வடிவமும் உணர்த்தும் மெய்ம்மை (அசுரத்தில், தத்துவம்) 7,250 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழரிடையே தோன்றிவிட்டது என்பது பொருளாகும்.

🔸 ஸ்டெப்பி புல்வெளியிலிருந்து ஈரானுக்கு வந்து, தொழில் கற்றுக் கொண்டு, நம் நாட்டிற்குள் அசுரர் நுழைந்தது - 3,600 ஆண்டுகளுக்கு முன்னர்.

எனில், அசுரரது வருகைக்கு 3,650 ஆண்டுகளுக்கு முன்னரே முருக மெய்ம்மை இங்கு இருந்திருக்கிறது. அப்போது வடக்கிலிருந்த தமிழர், முருக மெய்ம்மையை பற்றி சிந்தித்து, கட்டமைத்தனர் என்று கொண்டால், "முருகப் பெருமான் வடக்கில் தோன்றியவர்" என்ற கூற்று 100% உண்மையாகிறது!

அசுரர்-அரவக் கூட்டணி: 😵‍💫😫

oOo

அடுத்து, வடக்கில் தோற்றுவிக்கப்பட்டு, நடுவில் வளர்க்கப்பட்டு, தெற்கில் வழிபடப்பட்டவர் என்ற கூற்றை பார்ப்போம்.

இக்கூற்று முருக மெய்ம்மைக்கு மட்டுமல்ல; அனைத்து மெய்ம்மைகளுக்கும் பொருந்தும்!

நாட்டை வடக்கு, நடு & தெற்கு என்று பிரிப்பது போன்று, ஒரு மனிதரையும் பிரிக்கலாம்.

ஒரு மனிதனுக்கு சிந்தனை எங்கு தோன்றுகிறது? தலையிலுள்ள மூளையில். அதாவது, வடக்கில்!

தோன்றிய சிந்தனையை, அவன் போற்றி, பேணி & பாதுகாப்பது எங்கு? நெஞ்சில். அதாவது, நடுவில்!

அப்படி போற்றி, பாதுகாத்த சிந்தனையை அவன் என்ன செய்கிறான்? தனது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறான். பிள்ளைகள் எங்கிருந்து தோன்றுகின்றனர்? பிறப்புறுப்பிலிருந்து. பிறப்புறுப்பு எங்கிருக்கிறது? உடலின் தெற்கில்! அதாவது, அந்த சிந்தனை தெற்கில் வழி-படுகிறது!!

இவ்வளவுதான் வடக்கு-நடு-தெற்கு என்ற கூற்றின் பின்னாலிருக்கும் ஏரணம் (பீட்டரில், இலாஜிக்).

அசுரர்-அரவக் கூட்டணி: 😵

oOo

ஓர் உயிர்ப்புள்ள திருக்கோவிலின் கருவறையில்:

🌷 வேல் மட்டுமிருந்தால்

எல்லா பற்றுகளும் நீங்கிய பின்னர், இறுதியில், "நானே உள்ளபொருள்" என்ற மெய்யறிவு மட்டும் மிஞ்சுகிறது என்பது, அவ்வேலின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் (அசுரத்தில், சமாதியிலிருக்கும்) பெருமானின் கருத்தாகும்.

🌷 கையில் கோலுடன் நிற்கும் ஆண்டி முருகன்

"எல்லாவற்றையும் துறந்த மனம், 'நானே உள்ளபொருள்' என்ற நிலையான அறிவை மட்டும் இறுக பிடித்துக் கொண்டிருக்கிறது" என்பது அங்கு உறையும் பெருமானின் கருத்தாகும்.

🌷 வள்ளி, முருகன் & தெய்வானை இருந்தால்

🔸 முருகன் - நான் என்ற தன்மையுணர்வு
🔸 தெய்வானை - "நானே உள்ளபொருள்" என்ற மெய்யறிவு
🔸 வள்ளி - கனிந்த, இரக்கமுள்ள மனம்

அதாவது, அங்கு உறையும் பெருமான், தான் யாரென்பதை உணர்ந்து கொண்டு, தன்னை நாடி வருவோரையும் தன் நிலைக்கு உயர்த்தும் மனநிலை கொண்டவர் என்பது பொருளாகும்.

(மெய்யறிவு வள்ளலாகிய திரு அருட்கடல் பெருமான் (அசுரத்தில், பகவான் இரமணர்) இந்நிலையில் இருக்கிறார் என்பது அடியேனின் தாழ்மையான கருத்தாகும். 🙏🏽🙏🏽)

oOo

முருக மெய்ம்மை மட்டுமல்ல, சிவம், அன்னை என உருப்படியான யாவும் தமிழருடையதே! 💪🏽

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment