Friday, October 31, 2025

வெள்ளையா இருக்கிறவங்க எல்லாம் நல்லவங்களாம்! கருப்பா இருக்கிறவங்க எல்லாம் கெட்டவங்களாம்! 🤭


தீயவர் திருநீறு மட்டும் தரித்திருப்பாராம். அடர்நிறத்தில் இருப்பாராம். கருப்பு ஆடை அணிந்திருப்பாராம். நல்லவர் திருநீறுடன் சிவப்பும் தரித்திருப்பாராம். வெள்ளை நிறத்தில் இருப்பாராம். வெள்ளையாடை அணிந்திருப்பாராம். 😏

இங்கு முருகப்பெருமானை சிறுபிள்ளையாக காட்டியுள்ளனர். இல்லையெனில், இன்னொன்றும் எழுத வேண்டியிருக்கும்: தீயவர் மீசை வைத்திருப்பாராம். நல்லவர் மீசையில்லாமல் இருப்பாராம். ☺️

அசுரர் செய்து கொண்டிருந்த இத்தகைய இழி வேலையை இப்போது தமிழரே, அறியாமையினால் செய்கின்றனர்.

வெள்ளை / மஞ்சள் (உள்ளபொருள்), சிவப்பு / கருப்பு / நீலம் (அல்லாத பொருள்), வேல் (மெய்யறிவு), மயில் (மனம் / பிறவி / படைப்பு) என யாவற்றையும் வையகத்திற்கு வழங்கியவர் தமிழரே. யாவற்றையும் வழங்கியிருந்தாலும், மூத்தகுடி தரித்திருந்தது திருநீறாகும். திருநீறு தமிழினத்தின் அடையாளமாகும். எனவேதான் தீயவராக காட்டப்படும் தமிழர், திருநீறு மட்டும் தரித்திருப்பது போன்று காட்டியுள்ளனர்.

சமயம் என்ற சொல்லுக்கு காப்புரிமை கொடுக்க வேண்டுமானால், அதற்கு தகுதியானவர் தமிழரேயாவர்! அப்படிப்பட்ட தமிழினம் மிதிபடுகிறது. மிதி படவேண்டிய வெள்ளையினம் (அசுரர், ஐரோப்பியர், அமெரிக்கர்...) போற்றப்படுகிறது! 😒

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

No comments:

Post a Comment