Wednesday, July 17, 2024

இறைவடிவத்திற்கு நன்னீராட்டு & இறைவடிவத்தை கட்டிப்பிடித்தல் - உட்பொருள்


சிறு அகவையிலிருந்து கண்ட கண்ட புருடாக்களை கேட்டும், மெய்யியல் என்ற பெயரில் வகை வகையாக காட்டப்படும் படங்களை பார்த்தும் வளர்ந்ததின் விளைவு... இறை சின்னத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு, தனக்கும் நன்னீராட்டு நடக்கும் படி செய்துள்ளார் லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜ்! 🤦🏽


எளிமையாக சிந்தித்தால்:


🌷 இறைச்சின்னம் - நாம்


🌷 நன்னீராட்டு - அன்றாட வாழ்வின் வழியாக நமக்கு கிடைக்கும் நுகர்ச்சிகள் (அசுரத்தில், அனுபவங்கள்)


இறைச்சின்னத்திற்கு நடக்கும் நன்னீராட்டினால், அதன் மேல் படிந்திருக்கும் அழுக்கு நீங்கும். இது போன்று, நமக்கு கிடைக்கும் நுகர்ச்சிகளால், நம் மனதில் மண்டியிருக்கும் பற்றுகள் (அழுக்கு) நீங்கும்.


பல பிறவிகளாக, பன்நெடுங்காலமாக பற்றுகளை சேர்த்துக்கொண்டே வருவது போல் தோன்றினாலும், இறுதியில், "போதுமடா, சாமி!" என்ற எண்ணம் தோன்றி, வீடுபேற்றில் முடிந்துவிடும். (இன்று, பிறவி முடிவதற்குள், இவ்வெண்ணம் தோன்றாத மனிதர் இருக்கமுடியுமா? 😀)


மேற்கண்ட விளக்கத்தோடு ஒரு நன்னீராட்டை பார்க்க நேர்ந்தால், நமக்கு தோன்ற வேண்டியது:


- வாழ்க்கை வாழ்வதற்கே

- எல்லாம் நல்லதற்கே

- யாவும் நலமாக முடியும்

- நம்பிக்கையுடன் இரு

...


oOo


அடுத்து, நன்னீராட்டின் போது இறை சின்னத்தை கட்டிப்பிடித்துக் கொள்ளுதலை பற்றி பார்ப்போம்.



இப்படத்தில் அன்னை செம்பொருளை கட்டிப்பிடிப்பது போல, தேஜ் கட்டிப்பிடித்துள்ளார்.


🌷 இறை சின்னம் - செம்பொருள் - நமது தன்மையுணர்வு


🌷 கட்டிப்பிடிப்பவர் - அறியாமையிலிருக்கும் நாம்


🌷 நன்னீராட்டு - அன்றாட வாழ்வின் வழியாக நமக்கு கிடைக்கும் நுகர்ச்சிகள்


எந்தவொரு நுகர்ச்சியின் (அ) போதும் (அசுரத்தில், அனுபவத்தின் போதும்), நமதுண்மையை (ஆ) நாம் இறுகப்பற்றிக் கொண்டிருக்கவேண்டும் (இ).


அ. நுகர்ச்சி - நன்னீராட்டு


ஆ. நமதுண்மை - நாம் உடலல்ல. உணர்வே நாம். இதுவே செம்பொருள். தென்னாடுடையவனின் சின்னம் (அசுரத்தில், சிவலிங்கம்) குறிப்பிடுவது இதையே.


இ. நமதுண்மையை இறுகப்பற்றுதல் - நமது தன்மையுணர்வை மறவாதிருத்தல் - இறை சின்னத்தை கட்டிப்பிடித்தல்.


oOo


🌷 நன்னீராட்டு - அன்றாட வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் நுகர்ச்சிகள்

🌷 கட்டிப்பிடித்தல் - அவற்றால் பாதிப்படையாமல் இருப்பதற்கான வழி


oOo


வகுப்பறையில், சில சமயங்களில், பாடத்தை புரிய வைக்க, ஆயர் (#) கதை சொல்லி, நடித்துக் காட்டுவார். அச்செயல்களை அப்படியே எடுத்துக் கொள்ளமாட்டோம். அவர் சொல்லவந்ததை புரிந்துகொள்ள முயற்சிப்போம். அவ்வாறே மெய்யியலையும் அணுகவேண்டும். அப்படியே எடுத்துக் கொள்ளக்கூடாது.


(# - ஆசிரியர் என்பது ஆச்சாரியார் என்ற அசுரச்சொல்லின் தமிழாக்கமாகும். எனவே, ஆயர் என்ற தென்தமிழ் சொல்லை பயன்படுத்தியுள்ளேன்.)


oOOo


கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

No comments:

Post a Comment