(https://m.dinamalar.com/detail-amp.php?id=2833095)
ஒருவிதத்தில் கிறித்தவம் பைசா நகர சாய்கோபுரம் போன்றது. கட்டிடத்தைக் கட்டத் தெரியாமல் கட்டி, அது சாயத் தொடங்கியவுடன், உலக அதிசயம் என்று கதை விட்டு இன்று வரை காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பரங்கியர்கள். உண்மையில் அது "கட்டிடக்கலையின் அவமானம்" ஆகும்! 👊🏽
இது போன்றே, இஸ்ரவேலர் இயேசுவின் அறிவுரைகளை வைத்து ஒரு சமயத்தை வளர்த்தெடுக்கத் தெரியாமல், கூட்டம் சேர்த்து காசு பார்க்கும் தொழிலாக, அரசுகளை ஆட்டிப்படைக்கும் கருவியாக வளர்த்துவிட்டார்கள். மக்களை நெறிப்படுத்தும் சமயமாக இல்லாமல், மூளையை மழுங்க வைக்கும் மதமாக ஆக்கிவிட்டார்கள்! இதனால் ஏற்பட்ட பல மோசமான விளைவுகளில் ஒன்று: இணைக்கப்பட்டிருக்கும் படத்திலுள்ள நிகழ்வு - தேவையற்ற உயிர்பலி!!
கதைகளும் குறியீடுகளும் உணர்த்தும் உண்மைகளை உணராமல், அவற்றை உண்மை என்று நம்பி மக்கள் மோசம் போகிறார்கள்.
☀️ குறுக்கை - உயிரற்றதை, குறிப்பாக உடலைக், குறிக்கும். (வரலாற்றின் படி, இது ஒன்றும் மேன்மையான குறியீடு அல்ல. குற்றவாளிகளை தண்டிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கருவியாகும்.)
☀️ குறுக்கையில் அறையப்பட்டிருக்கும் இயேசு - குறுக்கை என்பது உடல். இயேசு என்பது மனம். பல காலம் பலவித உத்திகளைக் கையாண்டு (வடக்கிருந்து) பலவீனமாக்கப்பட்டு, அடக்கப்பட்ட மனம் என்பதைக் குறிக்கவே இயேசு குற்றுயிராக, தொங்கிக்கொண்டிருப்பது போன்று சித்தரித்துள்ளனர். அதாவது, இவ்வுருவைக் கண்டதும் "எப்பாடுபட்டேனும் மனதை அட(ழி)க்கவேண்டும்" என்ற எண்ணம் ஒரு கிறித்தவனுக்குத் தோன்றவேண்டும்.
(இவ்வுருவை உருவாக்கியவர், பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽♂️ போன்றொருவரை சந்தித்திருந்தால் சித்தரிப்பு இப்படி இருந்திருக்காது. "மனதின் உருவை மறவாது உசாவ (ஆராய) மனமென ஒன்றில்லை" என்பதை உணர்ந்து, அதற்கேற்றாற் போல் ஓர் உருவை உருவாக்கியிருப்பார்.)
☀️ உயிர்த்தெழுதல் - பல போராட்டங்களுக்குப் பின்னர் கிடைக்கும் சமாதி துய்ப்பின்போது கிடைக்கும் மெய்யறிவு. இதுவரை நம்மைப் பற்றி தவறாக புரிந்துகொண்டிருப்போம். இதன் பிறகே நாம் யாரென்று சரியாக உணர்ந்துகொள்வோம். மெய்யறிவு பெறுவதற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி நாம் நாம்தான். வேறுபாடு அறிவு மட்டும்தான். இதனால்தான் குறுக்கையில் அறையப்பட்டிருப்பதும் இயேசுவாகவும், உயிர்த்தெழுவதும் இயேசுவாகவும் சித்தரித்துள்ளனர். வேறுபாடு வெளிப்புறத் தோற்றம் மட்டும்தான்.
உயிர்த்தெழுதல் = மெய்யறிவு பெறுதல்.
(நல்ல வெள்ளிக்கும் உயிர்த்தெழுதல் ஞாயிறுக்கும் ஏன் 3 நாட்கள் இடைவெளி, இச்சடங்குகள் எங்கிருந்து வந்துள்ளன என்று ஆராய்ந்தால் "உயிர்த்தெழுதல்" என்பதன் பொருள் முற்றிலும் மாறுபடும். ஏன் கிறித்தவம் மேற்கண்ட பொருளில் பயன்படுத்துகிறது என்பதும் புரியும். இதை வேறொர் இடுகையில் பார்ப்போம்.)
oOOo
இஸ்ரவேலரின் இனம் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பியர்களிடம் அடிமையாக இருந்தது. கல்வி மறுக்கப்பட்டு பண்பாடற்று இருந்தது. இந்த இனத்தை உய்விக்கவே இயேசு பாரதம் வந்து மெய்யறிவியல் கற்றுத் திரும்பினார். பல பாடுகளும் பட்டார். ஆனால், தோல்வியடைந்தார். மீண்டும் பாரதத்திற்கே திரும்பி, காஷ்மீரத்தில் சமாதியடைந்தார். ஆனால், அவரது அறிவுரைகளோ தகுதியற்றவர்களிடம் சிக்கி உருத்தெறியாமல் போய்விட்டன.
தூக்கி எறியப்படவேண்டிய குறுக்கையை மதத்தின் சின்னமாக்கிவிட்டனர் (குறுக்கை = உயிரற்ற உடல் = பிணம் = பிணக்குறியீடு). அதில் அறையப்பட்டிருக்கும் இயேசுவைக் கண்டதும் "மனதை அழி" என்ற எண்ணம் தோன்றுவதற்குப் பதிலாக "2,000 வருசத்துக்கு முன்னாடி உன்னக் கொன்னுட்டாங்களேயா" என்று ஒப்பாரி வைக்கும்படி செய்துவிட்டனர்!!
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌼🌻🏵️💮
No comments:
Post a Comment