Tuesday, October 13, 2020

கடவுளைக் காண்பதென்பது சங்கு, சக்கிரம், கதை போன்ற ஆயதங்களைத் தாங்கிய உருவத்தைக் காண்பதா? -- பகவான் திரு ரமணர்

பின்வரும் கேள்விகளும் கருத்துகளும் பகவான் திரு ரமணரிடமிருந்து 🌺🙏🏽 10/03/1968 அன்று வெளிப்பட்டவை:

💥 மெய்யறிவு பெறுதல் (ஞானமடைதல்) என்றால் என்ன?

💥 சங்கு, சக்கிரம், கதை போன்ற ஆயுதங்களைத் தாங்கிய 4 கைகளுடன் கூடிய உருவமாக கடவுளைக் காண்பதா?

💥 அப்படியே கடவுள் அவ்வடிவில் தோன்றினாலும் காண்பவனின் அறியாமை எவ்வாறு அழியும்?

💥 ஒரு கோடி பகலவன்களின் ஒளிப் பொருந்தி (கோடி சூரியப் பிரகாசம்) கடவுள் தோன்றினாலும் அது அவரை நேரடியாக காண்பதாகுமா (பிரத்யட்சம்)?

💥 எதையும் காண்பதற்கு கண்களும் மனமும் வேண்டும். புலன்களின் மூலம் பெறப்படும் யாவையும் மறைமுக அறிவாகும். இதை பெறுபவனே (காண்பவனே) என்றுமிருக்கும் உள்ளபொருளாகும். அவனே பிரத்யட்சமாகும்.

oOOo

உண்மை இவ்வளவு எளிதானதாக இருக்க, பிரத்யட்சம் என்ற சொல்லை வைத்து எவ்வளவு தூரம் நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம்! ("கடவுள் பிரத்யட்சமாகக் காட்சி கொடுத்தார்") திருவுருவங்கள் உணர்த்தும் பேருண்மைகளைப் புரிந்துகொள்ளாமல் செக்கு மாடுகள் போல் அவ்வுருவங்களை சுற்றி வருமாறு ஆக்கப்பட்டிருக்கிறோம்!!

இங்கு பகவான் குறிப்பிடும் சங்கு, சக்கிரம், கதை முதலானவற்றை தாங்கிய திருவுருவம் பெருமாளினுடையது. இந்த உருவம் உணர்த்துவது என்ன?

🌷 பெருமாளின் மேல் கைகளிலுள்ள சக்கிரம் & சங்கு ஒளி & ஒலியைக் குறிக்கும். இவ்வுலகம் என்பது வெறும் ஒலிஒளி மட்டுமே. காணப்படும் உலகம் தான் அசைகின்றது (சக்கிரம் சுழல்கிறது). காண்பவன் (பெருமாள்) அசைவதில்லை. கூத்தப்பெருமானின் மேல்கைகளிலுள்ள உடுக்கை & நெருப்பு (ஒலி & ஒளி) ஆகியவற்றின் கண்ணாடி பிரதிபலிப்பாக சக்கிரமும் & சங்கும் அமையும்.

🌷 சிவபெருமானின் கையிலுள்ள முத்தலைச்சூலம் பெருமாளின் கையில் கதையாக மாறியிருக்கிறது. பல காலம் வடக்கிருந்து, சரியான சமயம் வரும் போது நம்முள்ளிருந்து ஒரு தெளிவு / ஆற்றல் வெளிப்படும். இது வெளிப்படும் போதே "நாமே உள்ளபொருள்" என்று உணர்ந்து கொள்வோம். இது வெளிப்பட்டவுடன் கனவு, நனவு & தூக்கம் ஆகிய மூன்று நிலைகளும் முடிவுக்கு வந்துவிடும். இதை உணர்த்தவே சூலத்திற்கு 3 தலைகளைக் கொடுத்தனர் நம் முன்னோர்கள். இதிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக "தெளிவு வெளிப்பட்டவுடன் அறியாமை இருள் ஒரேடியாக விலகுகிறது" என்ற பொருளை உணர்த்தும் கதையை எடுத்துக்கொண்டனர் வைணவர்கள்.

🌷 கூத்தப்பெருமானின் திருவுருவத்தில் உள்ள திருவாசி (உயிரற்றவை), பெருமாளின் பின்புறம் குடை போன்ற அமைப்பில் படமெடுத்து நிற்கும் 5 தலை பாம்பாகியிருக்கிறது. உலகில் காணும் உயிரற்றவை யாவும் ஐம்பூதங்களால் ஆனவை என்பதால் 5 தலைகளும், இந்த ஐம்பூதங்களால் ஆனவை தான் (மண், பெண், பொன் போன்று) எல்லாத் தொல்லைகளுக்கும் காரணம் என்பதால் நச்சு உயிரியான பாம்பையும் எடுத்துக்கொண்டுள்ளனர்.

(ஓவியத்தில் பாற்கடல் இருப்பின் பாற்கடல் உடலையும், பாம்புக்குடை ஐம்புலன்களையும் குறிக்கும். பாற்கடல் இல்லையெனில் பாம்புக்குடை மேற்சொன்னவாறு ஐம்பூதக் கலவையான உடலைக் குறிக்கும்.)

🌷 பெருமாளுக்கு கொடுக்கப்படும் பாம்பணையும், பாம்பு குடையும் வைணவர்களின் தாய்மதமான பௌத்தத்திலிருந்து வருகின்றன. பௌத்தத்தில் கெளதம புத்தரை 🌺🙏🏽 பாம்பணையில் அமர்ந்திருப்பது போன்றும், பாம்புக் குடையின் கீழ் நிற்பது போன்றும் சித்தரித்திருப்பார்கள்.

🌷 மொத்தத்தில் பெருமாளின் திருவுருவம் மெய்யறிவு பெற்று பரம்பொருளாய் சமைந்த ஒரு மெய்யறிவாளரைக் குறிக்கும்.

ஆனால், இப்படி புரிந்துகொள்ளாமல், இப்படியொருவர் வைகுண்டம் எனுமிடத்தில் இருப்பதாகவும், அவரை வேண்டி வடக்கிருப்போருக்கு காட்சித் தருவார் என்றும், "புண்ணியங்கள்" சேர்த்துக்கொண்டால், "கைங்கர்யங்கள்" செய்தால் இப்பிறவிக்குப் பின்னர் அங்கு போய் சேரலாம் என்றும் ஏமாற்றப்பட்டிருக்கிறோம்!!

(வைணவத்தை வைத்து இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், இருப்பற்ற படைப்பு உயர்ந்தது என்றும் (பெருமாள் உருவத்தின் மேல்பாதி, நாமச்சின்னத்தின் வெளிகோடுகள்), என்றும் மாறாத அழியாத பரம்பொருள் தாழ்ந்தது என்றும் (பெருமாள் உருவத்தின் கீழ்பாதி, நாமச்சின்னத்தின் நடுகோடு) புரிந்துகொண்டு நமக்கு நாமே நாமம் போட்டுக்கொள்ளவேண்டும். 😁)

oOOo

பகவான் பேசியதின் ஆங்கில மூலம் (Talk #469 from Talks with Maharishi):

What is Realisation? Is it to see God with four hands, bearing conch, wheel, club, etc.? Even if God should appear in that form, how is the disciple's ignorance wiped out? The truth must be eternal realisation. The direct perception is ever-present Experience. God Himself is known as directly perceived. It does not mean that He appears before the devotee as said above. Unless the Realisation be eternal it cannot serve any useful purpose. Can the appearance with four hands be eternal realisation? It is phenomenal and illusory. There must be a seer. The seer alone is real and eternal.

Let God appear as the light of a million suns: Is it pratyaksha?

To see it, the eyes, the mind, etc. are necessary. It is indirect knowledge, whereas the seer is direct experience. The seer alone is pratyaksha. All other perceptions are only secondary knowledge. The present super-imposition of the body as I' is so deep-rooted, that the vision before the eyes is considered pratyaksha but not the seer himself. No one wants realisation because there is no one who is not realised. Can anyone say that he is not already realised or that he is apart from the Self? No. Evidently all are realised. What makes him unhappy is the desire to exercise extraordinary powers. He knows that he cannot do so. Therefore he wants God to appear before him, confer all His powers on the devotee, and keep Himself in the background. In short, God should abdicate His powers in favour of the man.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment