Tuesday, September 17, 2019

தேங்காய் உடைத்தால் #திருவரங்கம் பெருமாளின் உறக்கம் பாதிக்குமாம்! 😛 ஆகையால் #தேங்காய் #துருவல் படைக்கிறார்களாம்!! 😝


(தினமலர் - ஆன்மீகமலர் - 14-09-2019)

இப்படி படங்காட்டி படங்காட்டியே, கோபுரத்தில் இருக்கவேண்டிய பேருண்மைகளையெல்லாம் வீதிக்கு இறக்கி வந்து, சாக்கடை உயிரிகள் கூட கைகொட்டி சிரிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டனர். 🤬 இன்னும் எவ்வளவு காலம்தான் இப்படி படம் காட்டுவார்களோ?

இவர்களது விளக்கத்தை எடுத்துக் கொண்டால்கூட பெருமாள் அறி-துயிலில் இருப்பவர். எப்படி அவரது உறக்கம் கெடும்?

பாம்பணை ஐம்பூதங்களால் ஆன உடலைக் குறிக்கும். அழிவதை, மாறுவதை, நிலையில்லாததை, இருப்பற்றதைக் குறிக்கும். பெருமாள் இவ்வுடலில் என்றும் அழியாமல், மாறாமல், நிலையாகவுள்ள இருப்பை - உள்ளபொருளை - பரம்பொருளைக் குறிக்கும். மொத்தத்தில், இவ்வுருவம் அரவு அணிகலனுடன் கூடிய சிவலிங்கத்துக்கு சமமானதாகும். 🌺🙏🏼 பரம்பொருளுக்கு அந்நியமாக ஏதும் இருக்கிறதா? பரம்பொருளுக்குத் தெரியாமல் ஏதும் நிகழ்ந்துவிடுமா? ஏதும் நிகழ்ந்தாலும் பரம்பொருள் தான் பாதிக்கப்படுமா? அப்படி பாதிக்கப்படுவதற்கு பரம்பொருள் என்ன "உலகை முதலில் தவறாக படைத்து விட்டு, பின்னர் அதை சீர் செய்ய தனது மகனை அனுப்பும்" கூமுட்டை 🥴 வகையறாவா?

தேங்காய் உடைப்பது என்பது அகந்தை அழிவதைக் குறிக்கும். ஓடு உடைந்து வெளிப்படும் தேங்காய், அகந்தை அழிந்து வெளிப்படும் மெய்யறிவைக் குறிக்கும். உடைத்த தேங்காய் அப்படியே அனைவருக்கும் பயன்படாது. முனிவர்கள் வெளிப்படுத்திய மெய்யறிவை அப்படியே பெறும் பக்குவம் அனைவரிடமும் இருக்காது. துருவிய தேங்காய் அனைவருக்கும் பயன்படும். இவ்வாறே மெய்யறிவையும் அனைவருக்கும் பயன்படும் படி எளிமையாக்கி கொடுக்க வேண்டும்.

இது தான், தேங்காயை படைக்காமல், துருவலை படைக்கும் சடங்கு உணர்த்தும் பொருள். திருவரங்க மூலவர் திரு அரங்கநாதப் பெருமாளின் கீழ் சமாதியாகி இருக்கும் சட்டைமுனி சித்தர் 🌺🙏🏼 இவ்வாறு அறிவுருத்தினாரா? அல்லது, அவர் வழித்தோன்றல்கள், திருராமானுஜர் போன்ற வைணவப் பெரியோர்கள் யாரேனும் அறிவுருத்தினரா என்று தெரியவில்லை.

அன்று பாமரரும் பேருண்மைகளை எளிதில் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இத்தகைய சடங்குகளை, இன்று கற்றவரும் புரிந்து கொள்ள முடியாதபடி செய்துவிட்டனர். 😔

🏵️🌼🌻

எனக்கு பிடித்த தேங்காய் துருவல்களில் 😀 ஒன்று:

தன்னை உபாதி விட்டு ஓர்வது தான் ஈசன்
தன்னை உணர்வதாம் உந்தீபற
தானாய் ஒளிர்வதால் உந்தீபற

-- பகவான் திரு ரமணர் 🌺🙏🏼, உபதேச உந்தியார்

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼

No comments:

Post a Comment