மேலுள்ள படத்தில் வட்டமிட்டப் பகுதியை படித்ததும், கிராம / கீழ்தட்டு மக்களின் தொடர்பில்லாதவர்களுக்கு சிரிப்பு வரும்! சில்லறைத்தனம் என்று கூடத் தோன்றும்!! தொடர்புள்ளவர்களுக்கு இது ஒரு பெரிய செய்தியாகத் தோன்றாது. இன்னும் சொல்லப் போனால், இவர்களுக்கு இது நியாயமானதாகத் தோன்றும்.
தம்மால் முடிந்ததை, தாம் விரும்பியதை கொடுக்காமல், அன்பளிப்பை வட்டியில்லா வைப்பு நிதியாக அவர்கள் பார்ப்பது ஏன்?
நம் நாட்டின் மீது பன்னெடுங்காலமாக நடந்த படையெடுப்புகளே முதன்மையான காரணம். தமிழகத்தை பொருத்தவரை கடந்த 1000 வருடங்களாக (சுமார் 1060லிருந்து) தமிழரல்லாதோர் தான் ஆட்சி செய்துள்ளனர். அதிலும், காட்டுமிராண்டிகளும், பாவாடைகளும் ஆட்சி செய்தனர் என்று சொல்வதை விட கொள்ளையடித்தனர், சீரழித்தனர் என்று சொல்வதே சரி. இத்துடன், இன்று போல் அன்று வங்கியமைப்புகளும் இல்லை என்ற உண்மையையும் நினைவில் கொள்ளவேண்டும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் எவ்வாறு ஒருவரால் பணத்தை சேர்த்து வைக்க முடியும்?
தனது சேமிப்பை தன்னிடத்திலேயே வைத்துக்கொள்ளாமல் பல ஊர்களிலுள்ள பலரிடம் பிரித்துக் கொடுத்துவிட்டால் ஓரளவேனும் பாதுகாப்பாக இருக்குமல்லவா?
(#மொய் என்ற சொல்லுக்கு கொடுத்தல் என்ற பொருளோடு, நெருங்குதல் என்ற பொருளும் உண்டு.)
🎁🎁🎁🎁🎁
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
-- திருக்குறள் #549
பொருள்:
குடிமக்களைப் பிறர் வருத்தாமல் காத்து, தானும் வருத்தாமல் காத்து, குற்றம் செய்தவர்களை தக்க தண்டனையின் மூலம் ஒழித்தல் அரசனது தொழிலாகும். அஃது அவனுக்குப் பழியன்று.
இன்று வள்ளுவப் பெருந்தகை 🌺🙏🏼 இருந்திருப்பின், மேற்கண்ட குறளை, "குடிமக்களைப் பிறர் வருத்த விட்டு, தானும் வருத்தி, குற்றம் செய்தவர்களுக்கு தக்க பதவி/ஒப்பந்தம் அளித்துக் காப்பது அரசனது தொழிலாகும். அஃது அவனுக்கு இழுக்கன்று." என்ற பொருளில் அமைத்திருப்பார்!! 😁
No comments:
Post a Comment