மேலுள்ள கட்டுரையை படித்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது கரகாட்டக்காரன் படத்தில் வரும் ஒரு சிரிப்புக் காட்சி:
அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்ஸன் கூப்டாகோ... ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாகோ... என்னடி கலர்கலரா ரீல் உடரே?
😝😂😂🤣
சைவ-வைணவ பகைமையின் போது பகைவர்களிடமிருந்து (1) காப்பதற்காக குழி தோண்டி அத்திவரதரை புதைத்தார்களாம்! அவ்வாறே, மொகலாயரிடமிருந்தும் பரங்கியரிடமிருந்தும் காப்பாற்றினார்களாம்!!
இந்த அத்தி மரத்தாலான ஆதிமூலவரை மணவாள மாமுனிகள் வரை வணங்கியிருக்கிறார்கள். இவர் காலம் 1446 வரை. இதற்குள் மெய்-பொய் சண்டையெல்லாம் பெரும்பாலும் முடிவுக்கு வந்துவிட்டது. பொய் நன்றாக வேரூன்றிவிட்டது. காரணம் தமிழர்களின் நேரடி ஆட்சி சோழர்களோடு முடிந்துவிட்டது (குறிப்பாக, முதலாம் இராஜேந்திர சோழரின் மகன்களின் வீரமரணத்தோடு). விஜயநகர காலத்திலிருந்து தமிழ்நாட்டை ஆண்டவர்கள் அனைவரும் வைணவர்களே.
காட்டுமிராண்டி மாலிக்காபூரும் 1312க்குள் சீரழித்து விட்டு திரும்பிவிட்டான். விஜயநகரம் தோன்றிய பின் இங்கு எஞ்சியிருந்த காட்டுமிராண்டிகளும் விரட்டப்பட்டுவிட்டனர். மீதமிருப்பது உலகக்கொல்லிகளான பரங்கியர்கள் மட்டும் தான். அவர்களும் இந்த சிலையை நாடு கடத்த முயற்சித்திருப்பரா என்பது ஐயமே.
பின்னர் ஏன் இந்த சிலை வழிபாட்டிலிருந்து விளக்கப்பட்டது?
கருவறையில் எப்போதும் நிலவும் வெப்பத்தாலோ, பல நூறு வருட தொடர் வழிபாட்டின் காரணமாகவோ, வழிபாடு செய்து வைப்போரின் கவனக்குறைவாலோ சிலையில் பழுது ஏற்பட்டிருக்கிறது. மேற்கொண்டு வழிபாட்டில் வைத்திருக்க அவர்களது வழிபாட்டு நூல்கள் இடம் கொடுத்திருக்காது. ஆகையால், குளத்திற்குள் விட்டுவிட்டார்கள். நிலத்தை விட நீருக்குள் மரம் பாதுகாப்பாகவும் வலுவாகவும் இருக்கும். ஐரோப்பிய நகரிங்களில் சில நீரோட்டத்திலேயே, மரத்தால் அடித்தளமிட்டு கட்டப்பட்டவை. 200-300 ஆண்டுகளாகியும் இன்றும் அடித்தள மரங்கள் வலுவாகவுள்ளன.
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிலையை வெளிக்கொணரக் காரணம் - குளத்து நீர்!! மேற்சொன்ன ஐரோப்பிய நகரங்கள் ஓடும் நீரில் கட்டப்பட்டவை. நீரிலுள்ள உயிர்வளி குறைய வாய்ப்பில்லை. சேறும் சேர வாய்ப்பில்லை. ஆனால், குளத்து நீரில் உயிர்வளி குறைவாகவும், சேறு மிகுதியாகவும் இருக்கும். ஆகையால், இத்தனை வருடங்களுக்கு ஒரு முறை எனக் கணக்கு வைத்து சுத்தம் செய்துவிடுகிறார்கள்.
திருத்தலங்கள் என்பது வடக்கிருக்க (தவமியற்ற) வேண்டிய புனிதமான பகுதிகள். ஆனால், இன்று வடக்கிருத்தலை தவிர மற்றனைத்தும் அங்கு நடைபெறுகின்றன. வடக்கிருத்தல் என்றால் என்ன என்று கேட்கும் நிலையில்தான் நம்மை வைத்திருக்கிறார்கள். சிலைகள் உணர்த்தும் பேருண்மைகளை உணராது, மூலவர்கள் அடையாளபடுத்தும் மகான்களை வணங்காது சிலை வணங்கிகளாகவே நம்மை வைத்திருக்கிறார்கள். திருத்தலங்கள் இன்று சுற்றுலாத் தலங்களாகவும், பொருளாதாரத் தலங்களாகவும் தான் உள்ளன. மக்களை மாக்கள் ஆக்கியதன் விளைவு, ஏதாவது படம் காட்டித்தான் மக்களைக் கவர வேண்டியுள்ளது.
யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்றிருந்தேன்
யானே நீ என் உடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே
-- அத்வைதம் மிளிரும் நம்மாழ்வாரின் 🌺🙏🏼 பாடல்
💮🏵️🌼🌻🌸
குறிப்புகள்:
1. திருடனுக்கும் காவல்காரன் பகைவன் தான். பொய்க்கும் உண்மை பகை தான். இன்று நமது அடையாளங்களை எம்.எல்.எம் மதம் திருடுவதைக் கண்டு எவ்வாறு கோபப்படுகிறமோ, அவ்வாறே அன்று சைவத்திலிருந்து வைணவர்கள் திருடுவதைக் கண்டு நம் தமிழ் முன்னோர்கள் பொங்கி எழுந்திருப்பார்கள். இந்த தலத்தில் கூட ஆதி சங்கரரின் கனகதாரா தோத்திர வரலாறு, சீர்காழி கோயிலமைப்பு, தில்லைக் கோயிலுள்ள காலக் கணக்கு, சிதம்பர மறைபொருள் என பல விடயங்கள் "பயன்படுத்த"ப்பட்டுள்ளன. 😏
No comments:
Post a Comment