இந்த இடுகையுடன் இணைக்கப்பட்டிருக்கும் படங்கள் சென்னை #வியாசர்பாடி #இரவீஸ்வரர் கோயிலினுடையது.
பாடி எனில் ஆநிரைகளை பாதுகாப்போர் / மேய்ப்போர் வாழ்ந்த இடம். ஆநிரைகளாகிய ஜீவன்கள் தறிகெட்டுச் செல்லாமல் இருக்க, பேருண்மைகளைத் திரட்டியும், பகுத்தும் (வியாசம்), போதித்தும் வந்த மகரிஷி வியாசரும் (#கிருஷ்ண #த்வைபாயனர் - தீவில் இருந்த/பிறந்த கருப்பர்) அவரது மாணவர்களும் மற்றும் அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவர்களும் வாழ்ந்த பகுதி என்பதால் இவ்விடத்திற்கு வியாசர்பாடி என்று பெயர்.
வியாசரின் காலம் மகாபாரத காலம். துவாபர யுகத்தின் இறுதி. சுமார் 5100 வருடங்களுக்கு முன்னர்.
"இது என்ன புதுக்கதை? #வியாசர் எப்போது இங்கு வந்தார்?" என்று கேட்போருக்கு ...
🔥 #வியாசர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர் என்பது அவரது பெயரிலேயே உள்ளது.
🔥 வியாசரின் மகன் #சுகபிரம்ம மகரிஷியின் (இவர் பிறவி-ஞானி) சமாதி தலம் தான் #சேலம் #சுகவனேஸ்வரர் திருக்கோயில்.
🔥 வியாசருக்கு மூத்தோரான #வால்மீகி, #வசிஷ்டர் மற்றும் #விஸ்வாமித்திர மகரிஷிகளின் சமாதி தலங்கள் முறையே சென்னை #திருவான்மியூரிலுள்ள #மருந்தீச்சுரம், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள #திட்டை #வசிட்டேச்சுரம் மற்றும் #வேதாரண்யம் எனும் திருமறைக்காட்டிலுள்ள #திருமறைக்காடர் ஆலயங்கள் ஆகும்.
🔥 இராமனின் மகன்களான லவ, குசர்கள் வளர்ந்த இடம் சென்னை #கோயம்பேடு (#லவகுசபுரி).
(தொண்டைமான் இளந்திரையன் ஆட்சி செய்ததால் மட்டுமல்லாது, தொன்மையான பகுதி என்ற காரணத்தினாலும் வியாசர்பாடி அடங்கிய சென்னைக்கு #தொண்டை #மண்டலம் என்று பெயரிட்டிருக்கலாம் என்பது என் கருத்து.)
🔥 இராம சகோதரர்களின் தந்தையாகிய மகரிஷி #ரிஷ்யசிருங்கரின் (தசரதர் வளர்த்தவர் மட்டுமே) சமாதி தலம் இருப்பது #சிருங்கேரியில். விஸ்வாமித்திர மகரிஷியின் மகளாகிய சகுந்தலையை வளர்த்த மகரிஷி #கௌதமரின் சமாதி தலம் மைசூரூவிற்கு அருகிலுள்ள #நஞ்சன்கூடு #நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில். ஆரியர் வருவதற்கு முன்னரும், அவர்கள் வடக்கை ஆக்ரமித்த பின்னரும் இப்பகுதிகளெல்லாம் நம்மிடமேயிருந்தன.
இப்படி இந்து சமயத்தின் பெரும் ரிஷிகளெல்லாம் தமிழகத்தில் குடிகொண்டிருக்க, மகரிஷி வியாசர், தான் குடியிருக்க வியாசர்பாடியைத் தேர்ந்தெடுத்ததில் வியப்பென்ன?
(இந்நேரம் இந்த இடுகையை படிப்போர் ஓர் பேருண்மையை உணர்ந்திக்க வேண்டும். "இம்மகரிஷிகள் அனைவரும் தமிழரே" என்பதே அது. எனில், அவர்கள் உணர்ந்து உரைத்த, வகுத்துக் கொடுத்த பேருண்மைகளின் தொகுப்பான, உலகிலுள்ள அனைத்து மதங்களின் தாயாகிய, இந்து சமயம் தமிழனுடையதே. காரணமில்லாமல், ஆரியர்கள் ரஷ்யாவிலிருந்து இங்கு வரவில்லை. நம்மிடம் அத்தனை ஆன்மிக & லௌகிக செல்வங்கள் இருந்தன. வரும் போது காட்டுமிராண்டிகளாக இருந்தாலும், நம்மால், நம்மிடமிருந்த விஷயங்களால் பக்குவமடைந்தனர். நமதை தமதாக்கினர். கோஹினூர் வைரம் இங்கிலாந்தில் இருக்கிறது என்பதற்காக, அது இந்தியாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டது என்ற உண்மை மாறிவிடுமா? அது போல் தான், இந்து சமயமும். எல்லாம் ஆரியத்தில் இருக்கிறது என்பதற்காக, அவர்களுடையதாகிவிடுமா? ஆனால், இன்று நம் செல்வங்களை நாமே எள்ளி நகையாட முக்கிய காரணம் நம் சுயநல, நயவஞ்சக, துரோக, அந்நிய கைகூலிகளான, கருங்காலி திராவிட அரசியல் வியாதிகளே காரணம். 😤😠😡)
ஒரு காலத்தில் புகழ் பெற்ற பகுதியாக இருந்திருக்கும் வியாசர்பாடியின் இன்றைய நிலை...
😔 மூலவர் (வியாச பகவானின் சமாதியின் மேலிருக்கும் அடையாளம் - லிங்கம்) இன்று தரை மட்டத்திலிருந்து 2 அடிகள் கீழேயுள்ளது. ஒரு காலத்தில் தரைமட்டத்திலிருந்து 15 அடிகள் மேலிருந்ததாம். கருவறையின் சுற்றுப்புர சுவரை பார்த்தாலே தெரியும். அதன் இடுப்புபகுதி வரை புதைந்துள்ளது. இது எத்தனையாவது முறைக் கட்டபட்ட கருவறை என்று தெரியவில்லை. மூலவரைக் காண தெற்குபுரமாக உள்ளே நுழைவது என்பது விஜயநகர காலத்துப் பாணியாகும். அன்று கடைசியாக திருத்தியமைக்கப்பட்ட வடிவமைப்பின் மேலேயே மீண்டும் மீண்டும் கட்டியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
🙁 அன்று இப்பூமியில் வழிப்பாட்டுத் தலங்களில் மூலவர் மட்டுமே இருந்தார். மற்ற அனைத்தும் (நந்தி, அம்மன், கோஷ்ட தேவதைகள்) பின்னாளில் சேர்க்கப்பட்டவை. அப்படி சேர்க்கக்கூட இடமில்லாத அளவிற்கு ஆக்ரமிப்புகள். பெயருக்கு கோஷ்ட தேவதைகள். இப்படி ஸ்தாபிப்பதற்கு பதில் அவைகளை எடுத்துவிடலாம். மூலவர் மட்டுமே போதும். வணங்கப்படவேண்டியவர் அவர் ஒருவர் மட்டுமே.
😡 மண்டபம் கட்ட தலமரத்தை வெட்டி விட்டார்கள் புண்ணியவான்கள். தலமரம் கமிஷன் கொடுக்குமா? மண்டபம் கட்டினால் கமிஷன் கிடைக்குமே. கட்ட, பராமரிக்க, இடித்துவிட்டு மீண்டும் கட்ட என்று வாழையடி வாழையாக "தொழிலு" கிடைக்குமே.
😞 இன்றைய நிலையில், ஒரு சாமான்ய பக்தனால் முடிந்தது கோயிலுக்குச் சென்றுவருவது, கருவறை விளக்கெரியத் தேவையான பொருட்களை வாங்கித் தருவது, தரிசனம் செய்து வைக்கும் கடைசி தலைமுறை குருக்களுக்கு தட்சிணை கொடுப்பது, இந்நிலை மாற மீண்டும் ஞானசம்பந்த பெருமான் அவதரிக்க இறைவனை வேண்டுவது மற்றும் முடிந்தால் கோயிலை சுத்தம் செய்வது மட்டுமே.
🙏 எக்காரணம் கொண்டும் தயவு செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தாதீர்கள். கருங்காலி அரசியல்வியாதிகளும், அரசாங்கமும் தின்று ஏப்பம் விட்டது போக, ஒரு பகுதி நம் எதிரிகளுக்கே போகிறது. சொந்தக்காசில் சூன்யம் ஏன் வைத்துக் கொள்ளவேண்டும்? 😕
🔯 திருச்சிற்றம்பலம் 🕉
No comments:
Post a Comment