நேற்று துலாக்கோல் திங்களின் நிறைமதி திருநாள் - நமது திருநெறியத் திருக்கோயில்களில் சோற்று முழுக்கு கொண்டாடப்படும் நன்னாள்!
🌷 தாயின் கருவறை முதல் தற்போது வரை நமதுடல் எதனால் ஆகியிருக்கிறது? உணவால்.
🌷 நாம் இறந்த பிறகு நமதுடல் என்னவாகிறது? தீக்கு உணவாகிறது. அல்லது, மண்ணுக்கு உணவாகிறது.
🌷 ஒரு நுண்ணோக்கி வழியாக நம்மைச் சுற்றியுள்ள காற்றுவெளியை பார்க்க நேர்ந்தால், அங்கு என்ன நடந்து கொண்டிருக்கும்? கோடானகோடி உயிரிகள் சுற்றிக் கொண்டிருக்கும்; ஒன்று இன்னொன்றிற்கு உணவாகி கொண்டிருக்கும்.
மொத்தத்தில், படைப்பு = உணவாகும் / சோறாகும்!
இதையுணர்த்தவே, இன்று, நம் சுடர்நெறி திருக்கோயில்களில் சோற்று முழுக்கு திருவிழாவை நடத்துகிறார்கள்.
> உடையவர் = மொத்த படைப்பு.
> ஒரு பருக்கை = ஓர் உயிரினம் / ஒரு விண்மீன் குடும்பம் / ஒரு விண்மீன் கூட்டம்.
இத்திருவிழாவை காண்பதால், மேற்சொன்னதை உணர்வதால், என்ன பயன் கிட்டும்? நமது செருக்கு அடங்கும்.
இத்திருவிழா நம் தமிழ்நாட்டுக்கே உரியதாகும். எனில், மேற்கண்ட பேருண்மையை உணர்ந்த பெருமான் ஒரு தென்தமிழராவார். அல்லது, அப்பெருமான் தொல் தமிழ்நாட்டில் திருவிடம் கொண்டுள்ளார் என்று கருதலாம். அவர் யாரென்று தெரிந்திருந்தால், இத்திருவிழாவை அப்பெருமானின் திருவிடத்தோடு தொடர்பு படுத்தியிருப்பார்கள். தெரியாததனால், பொதுவாக, அனைத்து திருக்கோயில்களிலும் கொண்டாடுகிறார்கள்.
oOOo
கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻
No comments:
Post a Comment