Saturday, October 22, 2022

மாமன்னர் சடையவர்மன் சுந்தரபாண்டியர் பரங்கி ஆர்கிமிடிஸிடம் பாடங்கற்றவர்!! 🤭


திருவரங்கம் திருக்கோயிலுள்ள ஒரு கல்வெட்டும், அத்திருக்கோயிலின் கோயிலொழுகு நூலும் பாண்டிய மன்னர் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (தி.பி. 1,282-1,302) நிறைகோல் (துலாபாரம்) ஏறிய சடங்கைப் பற்றிக் தெரிவிக்கிறது.

தங்கத் தகடுகளால் போர்த்தப்பட்ட ஒரு பெரிய படகை காவிரியாற்றில் மிகத்தவிட்டு, தனது பட்டத்து யானையின் மீதேறி அமர்ந்தவாறு, அந்த படகில் ஏறினார். இப்போது, தண்ணீரில் எவ்வளவு ஆழம் அந்த படகு அமிழ்ந்தது என்பது குறித்துக்கொள்ளப்பட்டது. படகிலிருந்து மன்னர் வெளியேறிய பிறகு, அந்த படகு முழுவதும் தங்கத்தாலும், 9 வகை மணிகளாலும், குறித்து வைக்கப்பட்ட அளவு அமிழும் வரை நிரப்பப்பட்டது. இப்படி நிரப்பப்பட்ட பொருட்களைக் கொண்டு, அத்திருக்கோவிலின் கருவறை கோபுரம், முன்னுள்ள மன்றம் மற்றும் தூண்கள் ஆகியவற்றை தங்கத்தகடுகளால் போர்த்தி மிளிரச் செய்தார்.

இப்போது கேள்வி: தி.பி. 1,529-ல்தான் நம்மை போர்த்துகீசிய பொறுக்கி... மன்னிக்கவும்... மாலுமி வாஸ்கோடகாமா "கண்டுபிடித்தான்". அதற்கு முன்னர் நம்மை பற்றி நமக்கே தெரியாது! 😁 எனில், எப்படி பாண்டியருக்கு ஆர்கிமிடிஸின் "நீர்ம இடப்பெயர்ச்சி கோட்பாடு" பற்றி தெரிந்திருக்கும்? 🤔

பகுத்தறிவு பதில்: ஹாலிவுட் திரைப்படங்களில் வருவதுபோன்று, ஆர்கிமிடிஸ் காலப்பயணம் செய்து, பாண்டியரை சந்தித்து, அவருக்கு, முதலில், "ஏ பார் ஆப்பிள்" என்று பீட்டர் விட கற்றுக்கொடுத்து, பிறகு, தான் சுட்ட... மன்னிக்கவும்... "கண்டுபிடித்த" கோட்பாட்டை கற்றுக்கொடுத்திருக்கவேண்டும். 😜

மெய்ப்பொருள் காண்பது அறிவு! கிடைக்கும் பொரைக்கேற்றவாறு திரிப்பது பகுத்தறிவு!! 👊🏽

No comments:

Post a Comment