நம்மை நாம் எவ்வாறு காணமுடியும்? ஒரு பிரதிபலிக்கும் பொருளைக் கொண்டு காணமுடியும். இவ்வாறே, மெய்யறிவு பெறாத உயிர்களுக்கு உலகக்காட்சி என்பது கண்ணாடியாகிறது.
"படைப்பு என்பது எதற்காக?" என்று ஓர் அன்பர் கேட்டதற்கு, "காண்பான் என்றொருவன் இருக்கிறான் என்பதை உணர்வதற்காக" என்று பதிலளித்தார் பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽♂️.
காண்பவன் தன்னைப் பற்றிய உண்மையை உணர்வதற்கு படைப்பு எனும் கண்ணாடி தேவைப்படுகிறது. அந்த தேவையின் முதல் படி உடலாகிறது. உடலின்றி அலையும் உயிர்களுக்கு உடல் கிடைக்க உதவும் சடங்கே தர்ப்பணமாகும். இச்சடங்கு முழுக்க முழுக்க நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகும்.
🔸 எள்ளு-தண்ணீரை மண்ணில் விடுவது: இது கண்ணாடி கொடுக்கும் சடங்கின் முகமையான படியாகும். இங்கு மண் என்பது பெண்; எள்ளு-நீர் என்பது ஆணிடமிருந்து வெளியேறும் விந்துநீர். அதாவது, யாருக்கு கண்ணாடி கொடுக்க நினைக்கிறோமோ அவரை நினைத்து, மனைவியை புணரவேண்டும். கண்ணாடி தேவைப்படுபவர், வாய்ப்பிருப்பின், கருவில் வந்து சேருவார்.
முதலில், இறந்தவர் இன்னும் நம்முடன் இருக்கிறார் என்பதை உணரவேண்டும். அவர் மீண்டும் நம்மிடையே வந்து பிறக்க விரும்புகிறார் என்பதையும் நாம் உணரவேண்டும். பிறகே, அவரை நினைத்து, நம்பிக்கையுடன், புணரவேண்டும்.
🔸 வாழைக்காய் கொடுப்பது: ஆண்கள் இல்லாத அல்லது வயது முதிர்ந்த ஆண்களை உடைய குடும்பத்துப் பெண்களை, அக்குடும்பத்து ஆண்கள் சார்பாக, புணருவது. கர்ப்பதானம் எனப்படுவதும் இதுவேயாகும். இரண்டிற்கும் வேறுபாடு புணரும் போது கொள்ளும் நினைப்பாகும்.
🔸 பரங்கிக்காய் கொடுப்பது: வாழைக்காயின் எதிர்மறை. பெண்கள் இல்லாத அல்லது வயது முதிர்ந்த பெண்களை உடைய குடும்பத்து ஆண்கள் புணருவதற்கு தன் வீட்டுப் பெண்களை கொடுப்பது.
இவையெல்லாம் அக்கால ஆரியர்களிடையே இருந்த நம்பிக்கைகளாகும். இச்சடங்கு உருவாக்கப்பட்ட காலம் வேறு. இன்றைய காலம் வேறு. அன்றிருந்ததுபோன்று திடம் குறையாமல் இன்று கடைபிடிப்பதென்பது முடியாத செயல். சட்டத்திற்குப் புறம்பானதும்கூட!
ஒரு வகையில், தெரிந்த இடத்தில், தெரிந்த குடும்பத்தில் மீண்டும் பிறந்து, தெரிந்த தொழில் / வேலை செய்து, தெரிந்த வாழ்க்கையை வாழ்வதற்கு வழிவகை செய்வதே இந்த சடங்கின் நோக்கமாகும். இதனால்தான், சில சமூகங்களில், மகன் இல்லாமல் இறக்கக்கூடாது என்ற நம்பிக்கையுள்ளது. மகன் இருப்பின், அவன் இந்த சடங்கைச் செய்து, தன்னை மீண்டும் இதே இடத்திற்கு வரச் செய்திடுவான் என்ற நம்பிக்கையே ஏதுவாம்.
இன்று உலகம் இருக்கும் நிலையை, செல்லும் பாதையை கருத்தில் கொண்டால், தெரிந்தவிடம் தெரியாதவிடம் என்பதைவிட பிறவாதவிடத்தை சென்றடைவதுதான் சரி! ☺️
யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் போது, மொத்த அண்டமும் இறைவனின் படைப்பே (அல்லது, இறைவனே) எனும் போது எங்கு பிறந்தாலென்ன? எப்படிப் பிறந்தாலென்ன? தெரிந்த வாழ்க்கையையே ஏன் மீண்டும் மீண்டும் வாழவேண்டும்? தெரிந்த நூலையோ / திரைப்படத்தையோ எத்தனைமுறை மீண்டும் மீண்டும் படிக்க / பார்க்க விரும்புவோம்?
இறுதியாக, பிறவி கிடைக்காமலிருக்கும் முன்னோர்கள் பசியாற வருவார்கள் என்பது ஓரளவு உண்மையானாலும் இதற்கு ஏது: இங்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவு! உடல் உலகக் காட்சிகளைப் பற்றிய சரியான அறிவைப் பெற்றிருப்போர் மீண்டும் இங்கு வர விரும்புவார்களா? அப்படியே வருபவர்களுக்கு என்ன கொடுக்கப்படவேண்டும்? சரியான அறிவு!
பிறவி எடுப்பதே பிறவாதிருக்கத்தான்! வாழ் என்ற சொல்லைப் பிரித்து ஆராய்ந்தால் "நுழைந்து + வருதல்" என்ற பொருள் கிடைக்கும். உலகக் காட்சிகளுக்குள் நுழைந்து தன் இயல்பு நிலைக்கு திரும்புதல். "பூங்காவைவிட்டு வரமாட்டேன். விளையாடிக் கொண்டேயிருப்பேன்." என்று அடம்பிடிக்கும் குழந்தைக்குத் தேவை: முதலில், அறிவுரை; அடுத்தது, அடி!! 😄
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌼🌻🏵️💮
No comments:
Post a Comment