Friday, December 31, 2021

ஆங்கிலப் புத்தாண்டு எனப்படும் சொதப்பல் புத்தாண்டு!!! 👊🏽


வானவியலில் நம் முன்னோர்கள் முன்னோடிகள் என்பதற்கு சில சான்றுகள்:

💥 எந்நாளில் பகல் உச்சிப் பொழுதில், நம் தலைக்கு நேர் மேலே பகலவன் இருக்கும் போது, நம் நிழல் சிறிதும் சாயாமல் நம் மேலே விழுகிறதோ, அந்நாளே ஆண்டு பிறப்பாக எடுத்துக் கொண்டனர் நம் முன்னோர்கள்!! 👏🏽👏🏽 இது கடல் கொண்ட தென்மதுரையில் வைத்து கணக்கிடப்பட்டது. (ஆகையால், சித்திரை முதல் நாளன்று புவியின் எப்பகுதியில், உச்சிப் பொழுதில் ஒரு பொருளின் நிழல் சாயாமல் அதன் மீதே விழுகின்றதோ அப்பகுதியே தென்மதுரை!)

இந்த நுட்பமான முறையினால் ஒவ்வொரு ஆண்டும் முழுதாக முடிவடையும். ஆனால், பரங்கி ஆண்டு முழுமையாக முடிவடைவதில்லை. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 நாளை சேர்க்கின்றனர். இதற்கும் பல விதிகள் உண்டு (4ஆல் வகுபட வேண்டும், 100ஆல் வகுபட்டாலும் 400ஆல் வகுபட வேண்டும், 400ஆல் வகுபட்டாலும் 4000ஆல் வகுபடக்கூடாது, ...😲). இன்றைய நிலையில் மீண்டும் பரங்கி ஆண்டு சீராவது பொ.ஆ. 4000-த்தில்தான். (பரங்கி ஆண்டை "சொதப்பல் ஆண்டு" என்றழைப்பதற்கு இதை விட சிறந்த ஏது வேறென்ன வேண்டும்? 😛)

💥 நம் முன்னோர்களின் ஆண்டு கணக்கிற்கு, தன் தாவரக் குழந்தைகளை பூக்க விட்டு, இயற்கை அன்னையும் உடன்படுகின்றார்!! மழைக்காலத்திற்குப் பின்னர் அழுகிய வேர்களை செப்பனிட்டு, புதிய வேர்களை உருவாக்கி, புது சத்துக்களை உறிஞ்சி, அடுத்த சுழற்சிக்காக தாவர உலகம் புதிய பூக்களை பூப்பதும் நம் ஆண்டு பிறப்பு காலத்தில் தான்.

💥 உலகிலுள்ள பெரும்பாலான ஆண்டு பிறப்புகள் இந்தக் கணக்கையே அடிப்படையாகக் கொண்டவை. பரங்கியரின் ஆண்டும் சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஏப்ரல் 1 அன்று தான் தொடங்கியது. மீண்டும் நம்முடன் ஏற்பட்டத் தொடர்பினால் தங்களது ஆண்டு கணக்கை திருத்திக் கொண்ட பரங்கியர்கள், தங்களது மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்ளவும், கிறித்துவத்தை முன்னிறுத்துவதற்காகவும், இஸ்ரவேல் மெய்யியலாளர் இயேசு பிறந்தது சனவரி 1 என்று ஒரு நம்பிக்கை இருப்பதாலும், நம் பிள்ளையார் போல் கிரேக்கர்களின் ஜானஸ் கடவுள் அனைத்திற்கும் முதன்மையானவராக இருப்பதாலும் சனவரி 1-ற்கு மாற்றினர் (மாற்றியது அன்றைய போப் கிரிகோரியன்). அதை ஏற்றுக் கொள்ளாமல் ஏப்ரல் 1-ஐ ஆண்டு பிறப்பாக தொடர்ந்தவர்களை சம்பளத்திற்கு ஆள் வைத்து "முட்டாள்கள்" என்று ஏளனம் செய்ய வைத்தனர் பரங்கி மன்னர்கள்! (இங்கும் மன்னராட்சி இருந்திருந்து தை 1-க்கு மக்கள் மாறாமல் இருந்திருந்தால், அவர்களை முட்டாள்கள் என்று பறையறிவிக்க இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆட்களை சேர்த்திருப்பர்! 😏).

💥 சித்திரை 1-ஐ ஆண்டின் முதல் நாளாக நம் முன்னோர்கள் ஏற்றுக் கொண்டது அறிவின் அடிப்படையில். பகலவன் வருடை ராசிக்குள் நுழைந்ததாலோ, ஆரியர்கள் திணித்ததாலோ அல்ல. இன்னும் சொல்லப்போனால், நம்மிடமிருந்து தான் ஆரியரும் ஏனையோரும் கற்றுக் கொண்டனர் எனலாம்! ஆரியர்களின் உத்திராயண-தட்சிணாயன கணக்கும் நம்முடையது தான்!!

அவர்களது பிறப்பிடமான ரிஷிவர்ஷாவில் (இன்றைய சைபீரியா போன்ற பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு ரஷ்யா) பகலவன் காட்சி தருவதே ஆண்டிற்கு சில நாட்கள் தான். குகைகளையும், கூடாரங்களையும் விட்டு தகுந்த பாதுகாப்பின்றி வெளிவந்தால் இரத்தம் உறைந்துவிடும் நிலை. இதில் எங்கிருந்து அயண ஆராய்ச்சி செய்திருக்க முடியும்? மேலும், உத்திராயணமும் தட்சிணாயனமும் சரியாக 6 மாதங்களாகப் பிரிவது நிலநடுக்கோட்டுப் பகுதியில் தான் - நம் முன்னோர்கள் வாழ்ந்த தென்மதுரையில் தான்!! நம்மிடமிருந்து கற்றுக் கொண்டு, தமது என்று முத்திரை குத்தி, மீண்டும் நம் தலையிலேயே கட்டிவிட்டார்கள் (கோல்கேட்காரன் கரியையும், உப்பையும் அன்று கிண்டல் செய்து விட்டு, இன்று அவற்றைக் கொண்டு பற்பசை தயாரித்து நம்மிடமே விற்பது போல).

💥 "இவ்வளவு தாென்மை, அறிவியல், வரலாறு இருந்தும் நம் மக்கள் ஏன் ஆங்கில புத்தாண்டன்று திருத்தலங்களுக்கு செல்கின்றனர்?" என்ற கேள்வி எழலாம். அன்று, சமூகத்தின் முக்கிய நபர்கள் ஒவ்வொருவரும்  அவரவர் பகுதிக் கொள்ளைக் கூட்டத்தலைவனை (பரங்கிப் பிரபு) சந்தித்து பூ மாலை, பழம், இனிப்பு போன்ற பரிசுகளை அளித்து வாழ்த்துச் சொல்ல / பெற வேண்டும். தலைக்கனமும் திமிரும் பிடித்த இந்த நச்சுப் பாம்புகளிடமிருந்து தப்பிக்க எண்ணிய நம் பெரியோர்கள் கண்டுபிடித்த வழிதான்... சாெதப்பல் புத்தாண்டன்று நம் திருத்தலங்களுக்கு செல்வது. திரு வள்ளிமலை சுவாமிகள் திருத்தணி படித்திருவிழாவை தாெடங்கியதும் இப்படித்தான். கொள்ளைக் கூட்டத் தலைவியும் (இங்கிலாந்து ராணி) நம் சமய நம்பிக்கைகளில் தலையிடக்கூடாது என்று ஆணையிட்டிருந்தாள். இதையும் பயன்படுத்தி பகுதி கொள்ளையர்களிடமிருந்து தப்பினர் நம் பெரியோர்கள்! 😎

"இன்றும் இவ்வழக்கம் தொடரவேண்டுமா?" என்று கேட்டால், உறுதியாகத் தொடரவேண்டும் என்பேன். பரங்கியரின் சொதப்பல் ஆண்டு பிறப்பைக் கொண்டாடும் கருங்காலி / அறிவிலித் தமிழர்கள் இருக்கும்வரை இவ்வழக்கமும் தொடரவேண்டும்!! 👊🏽

oOOo

மேற்சொன்ன யாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்னும் உயிரிகளும் ஏற்றுக் கொள்ளும் செய்தி ஒன்றுண்டு - மிகப் பழமையான மாந்தர்களான மாயன்களிடமும் எகிப்தியர்களிடமும் பகலவனை அடிப்படையாகக் கொண்ட நாள் மற்றும் நேரக் காட்டிகள் இருந்தன என்பதே அது. இந்த மாயன்களும் எகிப்தியர்களும் நம்மோடு நெருங்கிய தொடர்பிலிருந்தோர் என்பது அண்மை கால ஆராய்ச்சிகளின் முடிவு!!

oOOo

சொதப்பல் ஆண்டு பிறப்பு...

👊🏽 அறிவியல் & வானவியல் அடிப்படையற்றது
👊🏽 இயற்கை சுழற்சிக்கு மாறானது
👊🏽 சூழலுக்கு பொருந்தாத கொண்டாட்டங்களைக் கொண்டது
👊🏽 அடிமை மனப்பான்மையை வளர்ப்பது

சொதப்பல் ஆண்டு பிறப்பைக் கொண்டாடுவதை தவிர்ப்போம். நமது ஆண்டு பிறப்பைக் கொண்டாடி மகிழ்வோம். நமது தொன்மை, வரலாறு, அடையாளங்களைக் காப்போம். தமிழன் என்று பெருமை கொள்வோம். 👍🏽

"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே"

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Sunday, December 26, 2021

பரங்கி மதத்தினரின் "ஐ ஏம் தட் ஐ ஏம்" (I am that I am) சடங்கு!! 😁

என்னப்பா தசமபாக மதத்தின் தேவர்களே & உலகின் தற்போதைய தேவாதிதேவர்களே^, டிசம்பர் 25 முடிஞ்சிடுச்சு! இன்னும் உங்க "ஐ ஏம் தட் ஐ ஏம்" (I am that I am) சடங்கு நடக்கலையே! 🤔

😁

(^ - வேறு யார்? உலகக் கொல்லிகளான வெள்ளையர்கள்தாம். ஆனால், தற்போது இந்த இடத்தைப் பிடிக்க சீனர்கள் பெருமுயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.)

ஒவ்வொரு ஆண்டும், இஸ்ரவேல் மெய்யியலளார் யேசு பிறந்ததாகக் கருதப்படும் டிசம்பர் 25 சமயத்தில், பகவான் திரு ரமண மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ சொற்களை "பயன்படுத்தி" 😉, தங்களது டுபாக்கூர் மதமே மேலானதென்று பிட் தயாரித்து வெளியிடுவார்கள். இந்த முறை அப்படியேதும் தென்படவில்லை. சுமார் 400 ஆண்டுகளுக்கு மேலாக உலகை, குறிப்பாக பாரதத்தை, சுரண்டி, பிழிந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். ருசி கண்ட பூனைகள். சற்று தாமதமாகக்கூட ஊழியம் நடக்கலாம். பார்ப்போம்.

26/11/1935 அன்று சுவாமி யோகானந்தா பகவானை சந்தித்தார். உடன் வந்த சுவாமியின் பரங்கிச் செயலாளர் சி ஆர் ரைட் (C R Right) பகவானிடம் சில கேள்விகளைக் கேட்டார். பதிலளிக்கும் போது, பகவான், "பைபிளில் வரும் 'ஐ ஏம் தட் ஐ ஏம்' தான் உள்ளபொருளை மிகச்சரியாக சுட்டிக்காட்டுகிறது" என்று கூறிவிட்டார். இது தான் பரங்கியரின் "வருடாந்திர 'ஐ ஏம் தட் ஐ ஏம்' சடங்கிற்கு" அடிப்படை!

எந்த சூழ்நிலையில் இந்த பதிலை பகவான் கூறினார் என்ற குறிப்பில்லை. ரைட் எப்படிப்பட்டவர் என்ற குறிப்புமில்லை. எல்லா சமயங்களிலும் பகவான், தான் கூற விரும்பியதை கூறியதில்லை. சில சமயம், அமைதியாக இருப்பார். சில சமயம், தனது பதிலைக் கூறுவார். சில சமயம், வந்தவர் கேட்க விரும்பிய பதிலைக் கூறி இடத்தை காலி செய்யவைப்பார். ☺️ சில சமயம், "கீதையும் பைபிளும் குர்ரானும் ஒன்றுதான்" என்று நகைச்சுவையும் செய்வார்!! 😂

குர்ரானைப் பொருத்தவரை, புவிப்பந்தை நிலை நிறுத்துவதற்காகத்தான் மலைகளை இறைவன் தோற்றுவித்திருக்கிறார். 🤣 பைபிளை பொருத்தவரை, உலகத்தை தப்பும் தவறுமாக படைத்த இறைவன், பின்னர், அதை சீர் செய்ய அவரது ஒரே மகனை அனுப்பிவைத்தார். 🤦

இந்த குபீர் காமெடிகளை அறியாதவரா பகவான்? வந்தவர், "இவையெல்லாம் கீதைக்கு சமம்" என்று பகவான் வாயால் கேட்க விரும்பியிருப்பார். பகவானும் அவர் விரும்பியதைக் கூறி, இடத்தை காலி செய்ய வைத்திருப்பார். பகவானைத் தேடி வந்த பெரும்பாலான பரங்கியர்கள், தங்களது டுபாக்கூரே பெரிது என்று நிலைநாட்டவும், பகவானை மட்டம் தட்டவும், ஆழம் பார்க்கவும், இதர "ஊழியங்களை" செய்யவும் வந்தவர்களே! வெகு சிலரே பகவானின் வழிகாட்டுதலுக்காக வந்தவர்கள்.

இன்றும் திருவருணைக்கு வரும் பரங்கியர்களில் ஓரிருவர்தாம் பகவானுக்காக வருபவர்கள். மீதமனைத்தும் "ஊழியம்" செய்வதற்குத்தான் வருகின்றன. இதில் ஒரு கூட்டம் பகவானிடம் குறை காண்பதற்காக, நம்மூர் கருங்காலிகளின் துணையுடன், வெகுவாக உழைத்துக் கொண்டிருக்கிறது. எதற்காக? என்றைக்காவது தேவைப்பட்டால் பகவான் மீது கல்லெறிவதற்காக! அவர்களது நிறுவனர்தான் உலகின் தலைசிறந்த மெய்யறிவாளர் என்று காட்டுவதற்காக!! (தேவைப்பட்டால், மெய்யறிவாளர். இல்லையெனில், பரலோகத் தந்தையின் ஒரே மகன். ஆமென்.)

மீண்டும் பகவானிடம் திரும்புவோம்.

"ஐ ஏம் தட் ஐ ஏம்" என்ற சொற்றொடர்தான் பரம்பொருளை மிகச்சரியாக குறிக்கிறதென்று பகவான் நினைத்திருந்தால் தனது பாடல்களில், பேச்சில் இந்த சொற்றொடரையே பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், பகவான் பயன்படுத்தியது: "நான்" & "உள்ளபொருள்"!! இவற்றிலும், "உள்ளபொருள்" எனும் சொல் பகவானது தனி பங்களிப்பாகும். எனவே, "ஐ ஏம் தட் ஐ ஏம்" என்பது கிறித்தவர்களுக்கானது. உலக மக்கள் யாவருக்குமானதல்ல.

இறுதியாக, எல்லாவற்றையும் அரைகுறையாக, தலைகீழாக புரிந்துகொண்டு, புரிந்துகொண்டதை வைத்து நோவாமல் கொள்ளைக் காசு பார்த்து, எந்த இடரிலும் மாட்டிக் கொள்ளாமல், வானவர்களாக வலம் வரவேண்டுமென்று விரும்பும் பரங்கியர்களின் மத நம்பிக்கைகளைப் பற்றி சற்று பார்ப்போம்.

🔸 குறுக்கை: இது அழியும் உடலைக் குறிக்கும். அழியும் பொருளை வணங்கலாமா? ஆனால், இதைக் கண்டால் உள்ளம் உருகுவார்கள்! ☺️

🔸 குறுக்கையில் அறையப்பட்டிருக்கும் இயேசு: இங்கு இயேசு என்பது மனமாகும். அறையப்பட்ட இயேசு என்பது பல காலம் வடக்கிருந்து சிதைக்கப்பட்ட / ஒடுக்கப்பட்ட / அடக்கப்பட்ட மனமாகும். மொத்தத்தில், ஒரு கிறித்தவன் இவ்வுலகில் எவ்வாறு வாழவேண்டும் என்பதை சித்தரிக்கும் உருவமாகும். இதைக் கண்டதும் அவர்களுக்கு பெருமகிழ்ச்சி தோன்றவேண்டும். ஆனால், கண்களில் நீர் தளும்புவது முதல் "2,000 வருசத்துக்கு முன்னாடி உன்னக் கொன்னுட்டாங்களேயா!" என்று ஒப்பாரி வரை பலவித சோக உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள்!! 🤦

இந்த கேடு கெட்டவர்களைப் பற்றி எழுத வேண்டுமானால் இணையதள சர்வர்கள் சூடாகுமளவிற்கு எழுதலாம். ஆனால், இவர்களின் தரத்தை உணர்வதற்கு இந்த இரு குறிப்புகள் போதுமானதாகும்.

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

Tuesday, December 21, 2021

திருநீறு பூசுவதின் மெய்யியல் அடிப்படை - சிறு விளக்கம்


திருநீற்றின் 3 கோடுகள் நனவு, கனவு & தூக்கம் ஆகிய 3 நிலைகளைக் குறிக்கும். இக்கோடுகளை பூசுவதற்கு எவ்வாறு நம் நெற்றி பற்றுக்கோடாக அமைகிறதோ, இவ்வாறே நனவு முதலான 3 நிலைகள் தோன்றி மறைவதற்கு நாம் (நமது தன்மையுணர்வு - உள்ளபொருள் - சிவம்) பற்றுக்கோடாக அமைகிறோம்.

பூசுப்படும் திருநீறு இருந்தாலும், அழிந்தாலும் நெற்றிக்கு குறையில்லை. இவ்வாறே நனவு முதலான நிலைகள் தோன்றினாலும், மறைந்தாலும் நமக்கு எந்த குறையுமில்லை. இதை உணரவேண்டும்.

🌷 "நீறில்லா நெற்றி பாழ்" - மேற்கண்ட அறிவு இல்லாதவரின் சிந்தனையோட்டம் புறமுகமாகச் சென்று, கிடைத்தற்கரிய மனிதப்பிறவி வீணாகிவிடும்.

🌷  "திருநீற்றை சிந்தாதே / கீழே விடாதே" - அரும்பாடுபட்டு பெற்ற இறையுணர்வை (மெய்யறிவை) இழந்துவிடாதே.

oOo

ஒரு சைவர் தரித்திருக்க வேண்டிய சின்னங்கள் இரண்டு: திருநீறு & உருத்திராக்கம்.

🌷  திருநீறு 3 கோடாக பூசப்படும்போது மேற்சொன்ன பொருளைக் குறிக்கும். நெற்றி முழுதும் பூசும்போது அல்லது சிறு கீற்றாக பூசும்போது அதன் பொருள்: இந்த உலகை "எரிந்து உருக்கலையாத" சாம்பல் போன்று அவர் காண்கிறார் (அல்லது, காணவேண்டும்).

🌷 கழுத்தில் உருத்திராக்கம் அணிவதன் பொருள்: புறமுகமாகவே ஓட எத்தனிக்கும் மனதை, எக்கணமும் தனது தன்மையுணர்வின் மீது நிலைபெறச் செய்திருப்பவர் (அல்லது, செய்யவேண்டும்). (புறமுகமாக பல பொருட்களின் மீது செல்லும் மனம் வலுவில்லாமல் இருக்கும். அதை ஒன்று திரட்டி, அகமுகமாக, தன் மீது நிலைநிறுத்தும் போது உருத்திராக்கம் போன்று திரண்டு, வலுப்பெற்று விடும்.)

oOo

திருநீறு தரிப்பதாலும் & உருத்திராக்கம் அணிவதாலும் விளையும் இதர பயன்கள் யாவும் மிகைப்படி கணக்கில்தான் சேரும்.

காழியூர் பிள்ளை 🌺🙏🏽🙇🏽‍♂️ பாடிய புகழ்பெற்ற "மந்திரமாவது நீறு ..." எனும் பதிகத்தில் "உண்மையில் உள்ளது நீறு" என்ற சொற்றொடர் வருகிறது. இதில், அழியும் திடப்பொருளான சாம்பலை பெருமான் குறிக்கவில்லை. காணும் காட்சிகள் நீங்கிய பிறகு - பிறவிநோய் தீர்ந்த பிறகு - மீதமிருக்கும் நமது தன்மையுணர்வையே திருநீறு என்றழைக்கிறார்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

கோளறு பதிகம் - பாடல் #6 - கோளரி உழுவை - சிறு விளக்கம்

(ஓவியம்: திரு பத்மவாசன். தினமலர், சென்னை, 21/12/2021.)

வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடு உடனாய்

நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்

கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி

ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

-- கோளறு பதிகம் - பாடல் #6

oOo

கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி ...

🔸 கோளரி - சிங்கம் - கோபம்

🔸 உழுவை - புலி - பற்றுகள் / தற்பெருமை

🔸 யானை - நினைவுகள், பழக்கவழக்கங்கள்

🔸 கேழல் - பன்றி - ஆராய்தல் / சிந்தித்தல்

🔸 நாகம் - மனம், மாயை

🔸 கரடி - கலக்கம்

🔸 ஆளரி - குரங்கு - அலைபாய்தல் / நிலையற்றத் தன்மை

பொருள்: ஏற்கனவே நான் நிலைபேற்றை அடைந்துவிட்டதால் (வந்தென் உளமே புகுந்த அதனால்), மேற்சொன்ன யாவும் என்னை ஏதும் செய்துவிடாது. அவற்றாலும் நன்மையே விளையும்.

நுட்பங்கள்:

> சிவமாய் சமைந்த பின்னரும் மேற்சொன்ன விலங்குகள் (குணங்கள், பழக்கவழக்கங்கள்...) நம்மை விட்டகலமால் இருக்க வாய்ப்புள்ளது
> அப்படி அகலாவிட்டாலும், அவற்றால் நிலைபேற்றை அடைந்தவருக்கு எந்த கேடும் விளையாது

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Monday, December 20, 2021

கோளறு பதிகம் - பாடல் #4 - கொதியுறு காலன் - சிறு விளக்கம்


மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன்

நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்

கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்

அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

-- கோளறு பதிகம் - பாடல் #4

(ஓவியம்: திரு பத்மவாசன். தினமலர், சென்னை. 19/12/2021)

oOo

கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்

மேலுள்ள பாடலில் இடம்பெறும் இந்த வரிகளை படிக்கும் போதே ஒரு நெருடல் தோன்றியது: ஒரே வரியில் ஏன் காலன் & நமன் என்று இருமுறை கூற்றுவரை (யமன்) குறிப்பிடுகிறார்?

தொன்ம வழியில் இச்சொற்றொடரின் பொருள்: கோபம் கொண்ட காலன், அக்கினி, யமன், யமதூதர் மற்றும் கொடு நோய்கள் பலவும்.

சொற்களைப் பிரித்து, வேறு பொருள்களை பொருத்திப் பார்ப்போம்:

🔸 கொதி - கோபம்

🔸 உறு - வலி / வருத்தம். "கண் உறுத்துகிறது" / "மனம் உறுத்துகிறது".

🔸 காலன் - சோம்பல். எருமை மாடு காலனின் ஊர்தியாகும். எருமை சோம்பலின் அடையாளம். சோம்பலினால் தன்மையுணர்விலிருந்து சற்றே விலகினாலும் மீண்டும் பிறவி சுழற்சிக்குள் சென்றுவிடுவோம். அதாவது, இறந்துவிடுவோம். மெய்யறிவில் நிலைபெறுவது - பிறப்பு. அதிலிருந்து விலகுவது - இறப்பு. விலகுவதற்கு ஏதுவாகும் சோம்பல் காலனாகிறது.

🔸 அங்கி - பசி

🔸 நமன் - அச்சம். மேலே "காலன்" என்ற சொல்லிற்கு கண்ட அதே விளக்கம்தான் இங்கும். தன்னிலையிலிருந்து விலகச் செய்யும் யாவும் கூற்றுவர்களே. எனிலும், நமது முன்னோர்கள் அச்சம் (கரிய உருவம்), சோம்பல் (எருமை), பற்றுகள் (சாட்டை) ஆகியவற்றை கூற்றுவர் பற்றுவதற்கான முகமை ஏதுக்களாக கருதியுள்ளனர்.

🔸 தூதர் ... - மேற்கண்டவற்றின் தூதர்களாக வரும் கொடு நோய்கள்

இனி, அனைத்தையும் இணைத்துப் பார்ப்போம்.

கோபம், வருத்தம், சோம்பல், பசி, அச்சம் மற்றும் இவற்றை விளைவிக்கும் கொடிய உடல் & மன நோய்கள் வந்தாலும், இவற்றால் பெருமானின் அடியார்களுக்கு கேடு விளையாது. ஏனெனில், அவர்களது உள்ளத்தில் ஏற்கனவே பெருமான் குடிகொண்டுள்ளார்! (அதாவது, ஏற்கனவே அவர்கள் நிலைபேற்றினை அடைந்தவர்கள்.)

(காெதி + உறு - கொதியுறு - கொதித்து இருத்தல் என்றும் கொள்ளலாம்)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

திருவாதிரைத் திருநாள்!!

இன்று மார்கழி - திருவாதிரை (20/12/2021).

(திருவருணை கூத்தபிரான்)

🔸உண்மையில் நாம் எவ்வாறு இயங்குகிறோம் என்பதையும், இந்த இயக்கத்திலிருந்து விடுபட நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் பதஞ்சலி & புலிக்கால் மாமுனிவர்கள் உணர்ந்த திருநாள். 🌺🙏🏽🙇🏽‍♂️🌺🙏🏽🙇🏽‍♂️

🔸பிறவித்தளைகளிலிருந்து விடுபட நாம் செய்யவேண்டியதெல்லாம் ... எதுவும் செய்யாதிருத்தலே! தானாக சமைந்து நம் முன் வருவதை அப்படியே ஏற்றுக்கொண்டு களித்திருக்கவேண்டும். இதை சேந்தனார் பெருமான் உணர்ந்த திருநாளும் இன்றே. 🌺🙏🏽🙇🏽‍♂️

(அன்று "சமைந்து வருவதை களித்திரு" என்று சேந்தனார் உணர்ந்தது இன்று "சமைத்து களி தின்னு" என்றாகிவிட்டது! 😂)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, December 18, 2021

காசி விசுவநாதப் பெருமானை ஏன் & எவ்வாறு வணங்கவேண்டும்?

காசி 

விசுவ நாதனைப், பசுவ தேறியைக்

கசிவி னோதிட, அசைவு தீருமே

-- திரு வ சு செங்கல்வராயப் பிள்ளை

> அசைவு தீருமே - அசைவை தீர்த்தலே மனிதப்பிறவியின் குறிக்கோள். அசைவு என்பது மனதின் அசைவை - நிலையற்ற மனதைக் குறிக்கும்.

> மனதை எப்படி நிலைகொள்ளச் செய்வது?

கசிவினோதிட - கசி + வினோதிட.
கசி - உள்ளம் உருகி (காதலாகி "கசிந்து" கண்ணீர் மல்கி...).
வினோதிட - ஒன்றையே இறுகப்பற்றிட.

> எதை / யாரை உள்ளம் உருகி, இறுகப்பற்றிட வேண்டும்?

பசுவதேறியை - பசு + அது + ஏறியை - பசுவின் மேல் பயணிப்பவரை.
சிவபெருமான் + விடை.
பரம்பொருள் + சீவன் / மனம்.
நான் + இன்னார்.

> நான் எனும் நமது தன்மையுணர்வை விரும்பி, இடைவிடாது இறுகப்பற்றினால் அலைபேறு ஒழிந்து, நிலைபேறு கிட்டும்! 🙏🏽

இப்படி எளிமையாக புரிந்துகொள்ளவேண்டியதை ஞானம், முத்தி, மோட்சம் என்று அயல்மொழியைக் கலந்து, கடினமானதாக தோன்ற செய்து, எட்டாக்கனி போலாக்கிவிட்டனர். 😔

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Monday, December 13, 2021

கோவில்களுக்கு சென்றுதிரும்பும் முன்னர் சற்று நேரம் அமர்ந்திருந்துவிட்டு வருவது எதற்காக?

சில நாட்களுக்கு முன் வாட்ஸ்அப் மூலம் ஓர் இடுகை கிடைத்தது. அதில், ஒரு கோவிலுக்கு சென்று மூலவரை வணங்கிவிட்டு, வெளியேவந்து சற்று நேரம் அமர்ந்துவிட்டு செல்வதற்கான ஏதுவை விளக்குவதாகக் கூறி ஓர் ஆரியச் செய்யுளை ("அனாயாசேன மரணம் ...") பகிர்ந்திருந்தனர். ஆனால், ஏதுவை விளக்காமல் செய்யுளின் பொருளை உருகி உருகி விளக்கியிருந்தனர்! (இந்த இடுகை ஏற்கனவே ஒலி வடிவில் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது)

கோவிலில் சற்றுநேரம் அமர்ந்திருந்துவிட்டு வெளியேறுவதுடன், வீட்டிற்கு திரும்பிய பிறகும், சற்று நேரம் அமர்ந்திருந்துவிட்டு, பிற்பாடு இதர வேலைகளை செய்யச் சொல்லியிருப்பார்கள் நம் பெரியோர்கள். இவற்றின் பொருள்களைப் பார்ப்போம்.

oOo

(இப்படத்தைப் பற்றிய சிறு குறிப்பை இறுதியில் இணைத்துள்ளேன்)

நமது பழமையான காேவில்கள் யாவும் மெய்யறிவில் நிலைபெற்ற மாமுனிவர்களின் சமாதிகளாகும். அம்முனிவர்கள் உடலுடன் இருந்த காலத்தில், அவர்களை தேடி பல அன்பர்கள் வந்திருப்பர். முனிவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டும், சிந்தித்துக்கொண்டும், அவர்கள் அறிவுருத்திய உத்தியை பயின்று கொண்டுமிருப்பர். முனிவர்களின் உடல்கள் இறந்த பின்னரும் (சமாதியான பின்னரும்) இந்த வழக்கம் (கேட்டல், படித்தல், சிந்தித்தல், பயிலுதல்) தொடர்ந்திருக்கும். இதற்கு இன்னொரு பெயரும் இருக்கிறது - வடக்கிருத்தல் (ஆரியத்தில், தவமியற்றுதல்)

(நமது அகந்தையை வேரறுக்க உதவும் உத்தி எதுவோ அதைப் பயிலுதலே தவம் என்கிறார் பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️. எல்லாப் பொருள்களுக்கும் திசைகள் இருப்பது போன்று நமதுடலுக்கும் திசைகள் உண்டு. நமது தலை உடலின் வடக்குப் பகுதியாகும். நமது நாட்டத்தை உடலின் வேறு பகுதிகளுக்கும், வெளிப்புறத்திற்கும் செல்லவிடாமல் நமது முகம்/தலையிலேயே வைத்திருப்பதற்கு பெயர்தான் வடக்கிருத்தல் - வடக்குப் பகுதியில் நாட்டத்தை வைத்திருத்தல்.)

இப்படி வடக்கிருந்தோரில் சிலர் அங்கேயே சமாதியும் அடைந்தனர். அச்சமாதிகளைக் குறிப்பதற்காக அவற்றின் மேல் சிவலிங்கங்களை அடையாளமாக வைத்தனர் (ஏனைய இறையுருவங்களை அடையாளமாக பயன்படுத்தியது பிற்காலத்தில்தான்). ஒரு சமாதியில் தொடங்கிய நமது கோவில்கள், ஒரு காலத்தில் சமாதித் தொகுப்புகளாக விளங்கின. தொடர்ந்து நடந்த அரசியல் & மத படையெடுப்புகளால், ஒரு சமயத்தில், அறிவையிழந்து, சமாதிகளை மறந்து, அடையாளங்களை (சிவலிங்கங்களை) மட்டும் திருச்சுற்றுகளில் வைத்துவிட்டனர். மேலும், கோவில்களுக்குள் நீதிமன்றம், கல்விச்சாலை, நெற்களஞ்சியம், கருவூலம் என அனைத்தையும் நுழையவிட்டனர். விளைவு: கோவில்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களாக மாறிப்போயின! 

இவையெல்லாம் காலத்தின் தவிர்க்க முடியாத கோலங்கள் என்பதை உணர்ந்திருந்த நம் பெரியோர்கள், கோவிலுக்குச் செல்வதின் அடிப்படை நோக்கத்தைக் காப்பாற்றுவதற்காக கோவிலைவிட்டு வெளியேறும் முன் சிறிது நேரம் வடக்கிருந்துவிட்டு வெளியேறச் சொன்னார்கள். இதுவே நாளடைவில் சிதைந்து "சிறிது நேரம் அமர்ந்துவிட்டு" என்றாகிவிட்டது!!

oOo

வடக்கிருத்தல் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் செய்யப்படும் செயலன்று. ஆற்றின் நீரோட்டத்தைப் போன்று, உருக்கிய நெய்யை ஊற்றியது போன்று இடைவிடாது இருக்கவேண்டுமென்று அறிவுருத்துகிறார் பகவான்.

கோவிலிலிருந்து வீடு திரும்பி, வேறு வேலைகளில் ஈடுபடும் முன், சற்று நேரம் அமர்ந்திருக்க (வடக்கிருக்க) சொன்ன நமது பெரியோர்களின் அறிவுரையும் பகவானது அறிவுரையைப் போன்ற ஒன்றுதான். இது கோவிலில் கிடைத்த துய்ப்பை (அனுபவத்தை) மேலும் உறுதிப்படுத்த உதவும். இவ்வாறு விட்டுவிட்டு செய்யப்படும் வடக்கிருத்தல், ஒரு சமயத்தில், நமது இயல்பாகிவிடும். விழிப்பு நிலையில் ஒன்றை இறுகப்பற்றினால் அந்த உணர்வு தூக்க நிலையிலும் தொடரும் என்கிறார் பகவான். விழிப்பையும் தூக்கத்தையும் வெற்றி கொண்ட பிறகு, இடைப்பட்ட கனவு மட்டும் எம்மாத்திரம்?

நனவு, கனவு, தூக்கம் என அனைத்து நிலைகளிலும் நமது தன்மையுணர்வை விடாது பற்றினால்... நிலைபேறு கிட்டும்!!

oOo

"சற்று நேரம் அமர்ந்திருந்துவிட்டு செல்" என்ற எளிய உத்தியின் மூலம் வீடுபேற்றையே அடையச் செய்த நம் முன்னோர்களின் நுண்ணறிவு எங்கே? பத்து வயதில் ஆசிரியையின் இடுப்பைக் கிள்ளியவனை பெரியார் என்றழைக்க வைத்திருக்கும் இன்றைய பகுத்தறிவு எங்கே? 👊🏽

oOo

"வடக்கிருத்தல், தன்மையுணர்வு, நிலைபேறு ... இவையெல்லாம் எனக்கு புரியவில்லை. இறைவனின் திருப்பெயர், மாமுனிவர்களின் அறிவுரை, செய்யுள், பாடல் என ஏதாவதொன்றை உருப்போடவே விரும்புகிறேன்" என்போருக்காக:

🌷 குடும்ப வாழ்க்கையிலுள்ள அன்பருக்கு

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத [துணையும்]
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!

-- அபிராமி பட்டர் 🌺🙏🏽🙇🏽‍♂️

(இருபாலரும் துதிப்பதற்கேற்ப "மனைவியும்" என்ற சொல்லை "துணையும்" என்று மாற்றியுள்ளேன்)

🌷 மெய்யியலில் நாட்டமுள்ள அன்பருக்கு

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவு [உடலாசையை] மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்

-- வள்ளற்பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️

(இருபாலரும் துதிப்பதற்கேற்ப "பெண்ணாசையை" என்ற சொல்லை "உடலாசையை" என்று மாற்றியுள்ளேன்)

🌷 "வேண்டுதல் வேண்டாமை" என்ற நிலைக்கு ஒரு படி முன்னுள்ள அன்பருக்கு

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல்
உன்னையென்றும் மறவாமை வேண்டும்

-- பேயார் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌷 பொதுநலன் வேண்டும் அன்பருக்கு

வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
[திருமுறை] அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்.

-- கச்சியப்ப சிவாச்சாரியார் 🌺🙏🏽🙇🏽‍♂️

(நமது திருமுறைகளின் பெருமையை முன்னிறுத்துவதற்காக "திருமறை" எனும் சொல்லை "திருமுறை" என்று மாற்றியுள்ளேன்.

வேள்வி என்பது மனதில் நற்சிந்தனையை விதைத்தல், பசித்த வயிற்றுக்கு சோறிடுதல் என பலவற்றைக் குறிக்கும்.)

oOo

ஒன்றை ஆரியத்தில் சொல்லிவிட்டால் அது மேன்மையாகிவிடாது. பீட்டரில் சொன்னால் அறிவாளித்தனமாகாது. எதில் சொல்லப்பட்டது என்பதை விட என்ன சொல்லப்பட்டது என்று சிந்திப்பதே சிறந்தது.

பரம்பொருளின் மொழி: அமைதி (மவுனம்).

oOo

இணைப்பு படம்: இது சிருங்கேரி திரு சாரதாம்பாள் திருக்கோயிலின் ஒரு பகுதியாகும். சிவப்பு குறியிட்ட கோவில்கள் யாவும் ஆச்சார்யார்கள் மற்றும் ஏனையோரின் சமாதிகளாகும். இது போன்றே ஆற்றின் எதிர்கரையிலும், திருத்தல வளாகத்தின் இதர பகுதிகளிலும் சமாதிகளைக் காணலாம். 🌺🙏🏽🙇🏽‍♂️

ஒரு காலத்தில், இத்தலம் போன்றே நமது திருத்தலங்கள் யாவும் காட்சியளித்தன. 

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮