"என்னுடைய மதம்தான் சிறந்தது என்பவன் அசுரன்"
"மற்ற மதத்தின் மேல் உனக்கு அன்பு தோன்றவில்லையென்றால் நீ சைவனல்ல"
சில நாட்களாக இப்படிப்பட்ட செய்திகளே எந்த சமூக வலைதளத்திற்குள் சென்றாலும் என் கண்ணில் படுகிறது. இவை யாருடைய திருப்பணி, கைங்கர்யம், சேவை, ஊழியம், இறைத்தொண்டு என்று தெரியவில்லை. அல்லது, எதேச்சையாக தோன்றுகின்றனவா என்றும் தெரியவில்லை.
எப்படியானாலும் எனது பதில் பின்வருமாறு:
🔹அசுரன் எனும் ஆரியச் சொல்லின் பொருள்: காணும் உலகை உண்மை என்று கருதுபவன்.
🔹சைவன் எனும் தமிழ்ச் சொல்லின் பொருள்: உள்ளும் புறமும் இணைந்தவன். அதாவது, தான் வேறு தான் காணும் உலகம் வேறு என்று காணாதவன். உலகம் என்பது திரை போன்ற தன்னில் தோன்றும் காட்சி போன்றது என்பதை உணர்ந்தவன்.
இந்த விளக்கங்களைக் கொண்டு பார்த்தால் மெய்யறிவு பெற்றோர் மட்டுமே சைவர்களாவர்! மீதமுள்ள அனைவரும் அசுரர்கள் ஆவர்!! ☺️
சைவம் = சிவம் = உள்ள பொருள் = உண்மை. இதை வைத்து தொடக்கத்தில் கண்ட செய்திகளை மாற்றியமைத்தால்...
> உண்மைதான் சிறந்தது என்பவன் அசுரன்!
> பொய்களின் மேல் உனக்கு அன்பு தோன்றவில்லையென்றால் நீ சைவனல்ல!!
😂
அடுத்து, திருஞானசம்பந்தப் பெருமானை 🌺🙏🏽🙇🏽♂️ எடுத்துக்கொள்ளவும். அன்று அவர் வடக்கிலிருந்து வந்த வெட்கங்கெட்ட சமணர்களையும், நம்மை மொட்டையடித்துக் கொழுத்துக் கிடந்த பெளத்த மொட்டைகளையும் விரட்டியடிக்காமல் போயிருந்தால் இன்று நம் தமிழ், சைவம், ஏனைய அடையாளங்கள் மற்றும் நமது வளங்களை என்றோ இழந்திருப்போம். நம்மைக் காப்பாற்றிய பெருமான் அசுரரா? அன்பில்லாதவரா?
(பெருமானோடு என்னை ஒப்பிட்டுக்கொள்ளவில்லை. அவரது கால் தூசியில் ஒரு இம்மியளவு பங்கிற்குக் கூட நான் சமமாகமாட்டேன். பொய்களை, பொய்யர்களை எதிர்ப்பது சரி என்பதை உணர்த்தவே பெருமானது திருப்பணியைப் பற்றிக் குறிப்பிட்டேன்.)
oOo
பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽♂️ உடல் தாங்கியிருந்த ஒரு சமயம், அவரது ஆச்சிரமத்தில் அமர்ந்திருந்த அன்பர்களிடையே, இவ்வுலகத்திற்கு பகவானது தேவையைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அங்கிருந்த திரு முருகனார் சுவாமிகள் 🌺🙏🏽🙇🏽♂️, "இன்னும் 300 ஆண்டுகள் கழித்து இவ்வுலகத்திற்கு பகவான் இன்றியமையாதவராகிவிடுவார்" என்று அருளினார்!
இந்நிகழ்வு என்று நடந்தது என்று எனக்கு நினைவில்லை. இறுதி காலத்தில் என்று வைத்துக்கொண்டால் கூட, பகவானது உடல் மறைந்து இன்று 71 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் 229 ஆண்டுகள் உள்ளன.
இன்னொரு சமயம், பகவான், "எதிர் காலத்தில், திருவண்ணாமலை பெருநகரமாக மாறிவிடும். வானளாவிய கட்டிடங்கள் தோன்றிவிடும்." என்று அருளினார்.
திரு ராமச்சந்திர மகராஜ் என்ற மெய்யறிவாளர் 🌺🙏🏽🙇🏽♂️, "இன்னும் சில நூற்றாண்டுகளில் பாலைவன மதங்களில் ஒன்று முற்றிலுமாக வேரறுக்கப்பட்டு பூமியிலிருந்து தூக்கி எறியப்படும்." என்று அருளியிருக்கிறார். (அம்மதத்தின் பெயரை அவர் நேரடியாக குறிப்பிட்டுள்ளார். நான் இங்கு எழுதவில்லை.)
இந்நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது, இன்னும் மோசமான காலங்கள் வரும். பாலைவன மதங்களின் அட்டூழியம் பெருகும். பின்னர், ஒரு திருப்புமுனையும் வரும். ஒன்று அழிந்துபோகும். இன்னொன்று நம் சைவத்திற்குள் அடங்கிவிடும். இங்கு மண்டியிருக்கும் நச்சு முட்புதர்களும், பதர்களும் காணாமற்போகும். எல்லா மலங்களும் நீக்கப்பெற்ற தமிழும் (அன்னையும்) சைவமும் (அப்பனும்) நம் முன்னோரை வழிநடத்திக் காத்தது போன்று நம்மையும் காத்திடுவர்.
oOOo
என்றும் வாய்மையே வெல்லும்! 💪🏽
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம் 🌺🙏🏽🙇🏽♂️
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌼🌻🏵️💮
No comments:
Post a Comment