Thursday, July 29, 2021

பாதங்களை நன்கு பார்க்கவேண்டுமாம்! உலகில் வேறெங்கும் இப்படியொரு அமைப்பு கிடையாதாம்!! 🤦



இந்த சிலைகள் என்ன தாமாகவே முளைத்தவையா? பாதங்கள் சற்று மாறியிருக்கும்படியான சிலைகளை இவர்களே செய்து வைத்து விட்டு, "இப்படி இருக்கிறது, பார்", "அப்படி இருக்கிறது, பார்" என்று கதைவிடுகிறார்கள்!!

கருவறையில் இருக்கும் திரு சீதை-ராம-லட்சுமணர் திருவுருவங்கள் உணர்த்துவது:

🌷 ராமர் - மரா எனில் இறப்பு. ராம எனில் இறப்பற்றது. பரம்பொருள்.
🌷 லட்சுமணர் - பரம்பொருளுடன் என்றுமே இருக்கும் அறிவு
🌷 சீதை - மெய்யறிவு கிடைத்த பின்னர் கிடைக்கும் குளுமை

அது சமாதித்தலமெனில், அங்கு சமாதியாகி இருக்கும் பெருமானின் நிலையை இவ்வுருவங்கள் உணர்த்துகின்றன.

இங்கு ராமர் (இருள்) முதலில் தோன்றியவர். லட்சுமணர் (ஒளி) பின்னர் தோன்றியவர். மெய்யறிவு கிடைத்தவுடன் துய்க்கப்படும் குளுமை (சீதை) ராமரின் மனைவியாகிறார். இங்கு அண்ணன்-அண்ணி & தம்பி என்பது பூரி திரு ஜெகந்நாதர் திருக்கோயிலில் சகோதர சகோதரியாகிவிடும். மேலும், அங்கு ஒளி (பலராமர்) முதலில் தோன்றியதாகவும், இருள் (கண்ணபிரான்) பின்னர் தோன்றியதாகவும், மெய்யறிவு கிடைத்தவுடன் துய்க்கப்படும் மகிழ்ச்சி தங்கையாகவும் (சுபத்ரை) கருதப்படுகிறது.

ஒரே வைணவத்திற்குள் ஏன் இவ்வளவு மாறுபாடுகள் என்று சிந்தித்தால் நாமும் ராம பிரானாகலாம் அல்லது கண்ண பிரானாகலாம். இதை விட்டு, மாறுபட்ட கால்களை நன்கு உற்றுப்பார்த்து 😳, உற்றுப்பார்த்ததை அவ்வப்போது நினைவிலும் நிறுத்திக்கொண்டிருந்தால் 😖, எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் என்ற விதியின் படி நாமும் அம்மாறுபட்ட கற்பாதங்களாக ஆகலாம்!! 🥴

("அன்பே வா" நாகேஷ் பாணியில்) எப்படி நம்ம வசதி? 😁

No comments:

Post a Comment