இப்புருடாவிற்கு (தினமலர் - வாரமலர் - 01/09/2019) 'U' சான்றிதழும் தரமுடியாது. 'A' சான்றிதழும் தரமுடியாது. "உவே" 🤮 சான்றிதழ் வேண்டுமானால் கொடுக்கலாம்!! 😄 பெரிய கோயில், ஒரு தலைக் காதல், சாபம், மாயாஜாலம், வித்தியாசம் என்ற பெயரில் பைத்தியக்காரத்தனம், ... இவையெல்லாம் தான் ஆன்மிக / பக்திக்கதைகளின் மூலப்பொருட்கள் போலிருக்கிறது! 😏
#காணபத்யம் என்பது விநாயகரை முழுமுதற் கடவுளாகக் கொண்ட மதம். இம்மதத்திற்காக உருவாக்கப்பட்ட தனி அடையாளங்களில் ஒன்று தான் #உச்சிஷ்ட #கணபதி. எப்போது சைவத்தோடு காணபத்யம் இணைக்கப்பட்டதோ, அப்போதே அன்றிருந்த சீர்திருத்தவாதிகள் இவற்றையெல்லாம் அழித்திருக்கவேண்டும். சரியாக போடப்படாத மாவுக் கட்டினால் தவறாக இணைந்து விடும் எலும்புகளைப் போல இவை சைவத்துடன் ஒட்டிக் கொண்டுள்ளன!!
இணைப்புப் படத்தில் கட்டமிட்டுக் காட்டிய பகுதியில், "இதனாலேயே இப்படி ஒரு அமைப்பில் சிலை வடித்துள்ளனர்" என்ற வரி வருகிறது. அது என்ன அமைப்பு?
*விநாயகரின் துதிக்கை, பிறந்த மேனியாக உடனிருக்கும் அம்மனின் (விக்னேஷ்வரி) பெண்குறியை தொட்டுக் கொண்டிருப்பது அல்லது பெண் குறிக்குள் நுழைந்திருப்பது போன்ற அமைப்பு.*
எதற்கு இப்படியொரு அமைப்பு?
*உச்சிஷ்டம் என்ற ஆரிய சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு. இங்கு இதன் பொருள் எஞ்சியது.* என்ன எஞ்சியது?
*உடலுறவு முடியும் தருவாயில், ஆணிடமிருந்து விந்து நீர் வெளியேறும் அந்த கணப்பொழுதிற்கு அவன் தன் உடலுணர்வை இழக்கிறான். அச்சமயம் மனம், உலகம் என எல்லாம் தானாக விலகிவிடும். எல்லாம் விலக ஒன்று மட்டும் எஞ்சியிருக்கும். உச்சிஷ்டம். அந்த ஒன்று தான் உள்ளபொருள் - பரம்பொருள் - மெய்ப்பொருள்!! 🌺🙏🏼*
*எல்லாம் விலகியதைத் தான் பிறந்த மேனியாக உள்ள அம்மன் உணர்த்துகிறது. எல்லாம் விலகிய நிலையில் பரம்பொருள் தானே புலப்படும் என்பதை பெண்குறியைத் தொட்டுக் கொண்டிருக்கும் துதிக்கை உணர்த்துகிறது.* (இதை இப்படியே புரிந்து கொள்ள முயலவேண்டுமேயன்றி, இத்தோடு அத்வைதம், சைவம் என மற்றவற்றை ஒப்பிட்டால் குழப்பமே மிஞ்சும்.)
உள்ள பொருளை உணர்த்த / உணர எத்தனையோ வழிகள் இருக்க, உடலுறவை ஏன் தூக்கிப்பிடித்தார்கள்?
நம் நாட்டில் எதற்கு இத்தனை கட்சிகள், சங்கங்கள், "பொது நல" அமைப்புகள்? இதற்கான பதில் தான் மேலுள்ள கேள்விக்கும். தனக்கு 4 பேர் வேண்டும். நோகாமல் சம்பாதிக்கவேண்டும். எல்லோரும் தன்னைத் தேடி வரவேண்டும், சபையில் முன்னிலையில் இருக்கவேண்டும். இதற்கு அன்று சுலபமான வழி ஆன்மிகம். இன்று சமூக அநீதி, இந்து மதச்சார்பின்மை, பெண்ணியம், திராவிஷம், தேசத் துரோகம், பான்பராக்கிஸம்...
தனக்கு பெயர், புகழ், பணம், தனித்துவம் கிடைக்க வேண்டுமென்பதற்காக, சமூகத்தைப் பற்றி சிந்திக்காமல், ஒரு வீட்டு இளம்பெண், எதிர் வீட்டிலிருக்கும் தந்தையை ஒத்த கிழவரை விரும்புவது போன்றும், ஒரு வீட்டு மணமான நடுத்தர வயதுப்பெண் எதிர்வீட்டு மணமாகாத இளைஞனை விரும்புவது போன்றும் சித்தரிக்கும் படைப்பாளிகளைப் (?) போன்றவர்கள் தாம் இது போன்ற வடிவங்களை உருவாக்கியிருக்கிறார்கள். எதையாவது செய்து மன்னரிடம் பொன்முடிப்பை பெற்றுக் கொண்டு காலத்தை ஓட்டிவிட வேண்டும்.
இது போன்ற கோணல் புத்தி இங்கு மட்டுமில்லை. உலகெங்கும் இருந்துள்ளது. *எகிப்தில், ஆன்மிகத் தலங்களில் இறையுணர்வு பெறும் வழிமுறைகளில் ஒன்றாக உடலுறவு கொள்ளுதல் இருந்துள்ளது.* அங்கிருக்கும் தேவதாசிப் பெண்களை அனுபவிக்க மேல்தட்டு மக்கள் வரிசை கட்டி நின்றுள்ளனர். இதுவே, "இறையுணர்வு தானே? பின்னாடி போ. நம்ம கருவாயன் இருப்பான். அவன் கிட்ட போய் தலைய குனிஞ்சு ஒக்காரு. உன் தலையில ஒரு தேங்காய ஒடைப்பான். சில வாரத்துக்கு இறையுணர்வு நிக்கும்." என்று சொல்லியிருந்தால்... துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எல்லாம் ஓடியிருக்கும். 😝
*சைவத்துக்குள் வந்த பின் விநாயகரின் பொருள் அறிவு மட்டுமே!!*
🌸🏵️🌼🌻💮
உள்ளது அலது உள்ள உணர்வு உள்ளதோ?
#உள்ளபொருள் உள்ளல் அற உள்ளத்தே
உள்ளதால், உள்ளம் எனும் உள்ளபொருள்
உள்ளல் எவன்? உள்ளத்தே உள்ளபடி
உள்ளதே உள்ளல். உணர்.
*-- பகவான் ஸ்ரீரமணர், உள்ளது நாற்பது*
பரம்பொருளுக்கு "உள்ளபொருள்" என்று அழகிய தமிழ் பெயரிட்டு, அதை நிரூபித்து, அதை அடையும் வழியை இரத்தினச் சுருக்கமாக, வெகு அழகாக இப்பாடலில் வெளியிட்டிருக்கிறார் பகவான்!! 🌺🙏🏼
🌸🏵️🌼🌻💮
இறையுணர்வு பெற நமது முன்னோர்கள் உருவாக்கிய உத்திகளில் சிலவற்றைப் பற்றி இந்த இடுகையில் பதிவு செய்துள்ளேன்:
https://samicheenan.blogspot.com/2018/09/blog-post_20.html?m=1
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼
No comments:
Post a Comment