Wednesday, September 18, 2019

தோடுடைய செவியன் மலைமகளின் பாதத்தில் விழுந்து வணங்கி, தன்னை ஏற்றுக்கொள் என்று கெஞ்சினாராம்! 😏



தோடுடைய செவியன் மலைமகளின் பாதத்தில் விழுந்து வணங்கி, தன்னை ஏற்றுக்கொள் என்று கெஞ்சினாராம்! 😏 ஆனைமுகனை கொஞ்சப் போய் இருவரது கைகளும் உரசினவாம்!! 😛 (இதற்குப் பின் டூயட் என்று எழுதாமல் போனார்களே என்று மனநிறைவு அடைய வேண்டியதுதான்!!! 😁)

தனது வயிற்றின் அல்லது அகந்தையின் பசி தீர்க்க சிலர் செய்யும் வேலைகள் இருக்கிறதே!! 🤢🤒🥵

#காணபத்யம் என்கிற மதத்திற்காக இந்த பிட்டை தயாரித்தார்கள் போலிருக்கிறது. இது பெண் தெய்வ வழிபாட்டிலிருந்து வந்திருக்கிறது என்பது கண்கூடு. அசைவற்றதை பெண்ணாகவும், அசைவதை ஆணாகவும் உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

உள்ளபொருள் (பரம்பொருள்) ஒன்றே. அதுவே யாதுமாகி இருக்கிறது. இதன் வெளிப்பாடுகளுக்கு மனித, விலங்கு உரு கொடுத்து, அந்த உருவங்களுக்கு நமக்கிருப்பது போல் ஆசை, பாசம், பிணக்கு என எல்லாம் காட்டியது ஒரு காலத்தில் ரசிக்கும் படியாக, வெற்றிகரமான விற்பனை உத்தியாக இருந்திருக்கும். இன்று?

இன்று என்ன, என்றோ இதற்கு பெரும் விலை கொடுக்க ஆரம்பித்துவிட்டோம். இந்த காரணத்தை வைத்து தான் காட்டுமிராண்டிகள் நம்மை தாக்க ஆரம்பித்தனர் ("காஃபிர்களிடம் இருக்கிறத லவட்டிக்க சொல்லுற டயலாக் எங்க பூரான்ல நெறைய இடத்துல டவுன்லோட் ஆகியிருக்கி" 👹).

மலைமகள் இங்கு உள்ளபொருள். தோடுடையசிவன் இங்கு சீவன். பரம்பொருளை அடைய (மெய்யறிவு பெற) சீவன் போராடுகிறது ("அவளின் காலில் விழுந்து தன்னை ஏற்கும்படி வேண்டினார்").  அடைய முடியாமல் தடுப்பது "நான் இன்னார்" என்ற பொய்யறிவு. ஒரு சமயத்தில் மெய்யறிவு வெளிப்பட்டு ("ஓடி வந்த பாலகணபதி"), பொய்யறிவை அழித்துவிடும் ("மூன்றாம் பிறையை பாலகணபதி இழுக்க முயன்றார்"). பொய்யறிவு அழிய, சீவன் பரம்பொருளோடு கலந்துவிடும். (அடைதல், கலத்தல் எல்லாம் விளக்குவதற்காக பயன்படுத்திய சொற்கள். உண்மையில், பொய்யறிவு - மாயை - விலக, நாம் என்றுமே உள்ளபொருள் தான் என்பது தெளிவாக விளங்கும்.)

(சைமன் கின்பெர்க்கிடம் மாட்டிய டார்க் பீனிக்ஸ் படத்தைப் போன்ற இந்த கதையை இதற்கு மேல் விளக்க முனைந்தால், என் தலை பேராசிரியர் எக்ஸ்-ஸின் தலை போலாகிவிடும். 😜)

(இணைப்பு: தினமலர் - ஆன்மிக மலர் - 14/09/2019)

🌸🏵️🌼🌻💮

திரு அண்ணாமலையானிடம் கெஞ்சும் பகவான் திரு ரமணர் 😀:

ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும் போது
அகத்தினில் நீ இ(ல்)லையோ அருணாசலா

ஒருவனாம் உன்னையொளித்து எவர் வருவார்
உன் சூதே இது அருணாசலா

சூது செய்து என்னை சோதியாது இனி உன்
சோதி உருக் காட்டு அருணாசலா

செப்படி வித்தைக் கற்று இப்படி மயக்கு விட்டு
உருப்படு வித்தைக் காட்டு அருணாசலா

🌺🙏🏼🌺🙏🏼🌺

No comments:

Post a Comment