Saturday, September 14, 2019

தமிழ் #விக்கிப்பீடியா இந்து சமய, சமூக, தேசவிரோத சக்திகளின் கூடாரமாக மாறிவிட்டதா?

சென்ற மாதம் 24ஆம் தேதி #திருவல்லம் - #வள்ளிமலை திருத்தல பயணத்தின் போது #அரிஞ்சய #சோழரின் #பள்ளிப்படை கோயிலைக் காண நேர்ந்தது (முழு பயணக் கட்டுரையை இவ்விடுகையின் இறுதியில் இணைத்துள்ளேன்). ஏற்கனவே, பஞ்சவன் மாதேவி மற்றும் பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழரின் பள்ளிப்படைகளை பற்றி படித்ததுண்டு. ஆனால், இது தான் நான் நேரில் கண்ட முதல் பள்ளிப்படை. ஆர்வ மிகுதியால் மேலும் தகவலறிய இணையத்தில் தேடிய போது தமிழ் விக்கிப்பீடியாவின் "பள்ளிப்படை" பக்கம் கிடைத்தது. அதிலிருந்த தகவல்கள் எனக்கு சற்று அதிர்ச்சியைத் தந்தது; எடுத்துக்காட்டு படங்களோ கோபத்தை மூட்டின. 😠 பக்கத்தை உருவாக்கியவரின் உள்நோக்கமும் புரிய ஆரம்பித்தது.

பள்ளிப்படைவழிபாட்டில் இருந்து தான் சிவ வழிபாடு தோன்றியதாம்! அதுவும் வெகு பிற்காலத்தில் தான் சிவ வழிபாடு தோன்றியதாம்!! பள்ளிப்படைகளுக்கு எடுத்துக்காட்டாக இணைக்கப்பட்டுள்ள எந்தப் படமும் தமிழ்நாட்டினுடையது அல்ல. தமிழர்களுடையதே அல்ல. ஒரு படம் வடநாட்டில் வாழ்ந்த காட்டுமிராண்டியினுடையது!!!

இப்போது உங்களுக்கும் புரிந்திருக்கும் இவர்களது உள்நோக்கமும், இவர்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதும்.

உடனடியாக விக்கிப்பீடியாவில் ஒரு கணக்கை ஆரம்பித்து தகவல்களை சீர் செய்தேன். அரிஞ்சய சோழரின் பள்ளிப்படை படங்களை பதிவேற்றினேன். மாற்றுவதற்கான காரணத்தையும் தெளிவாக பதிவு செய்தேன். இவற்றை ஒரு நாளின் பின்னிரவில் செய்தேன். மறுநாள் காலையில் (சுமார் 06:30 மணி நேரத்திற்கு பின்) பார்த்த போது, அனைத்தையும் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றி அமைத்திருந்தனர். அப்போதே மறுபடியும் சீர் செய்தேன். மீண்டும் பிற்பகலில் மாற்றி அமைத்திருந்தனர். மறுபடியும் சீர் செய்தேன். பின்னர், இரவு பார்க்கும் போது மீண்டும் மாற்றி அமைத்திருந்தனர். மேலும், நிர்வாகிகள் மட்டுமே மாற்றம் செய்யும் படி பக்கத்தின் உரிமையை மாற்றியிருந்தனர். இதற்கு அந்த நிர்வாகி பதிவு செய்துள்ள காரணம்: தேவையில்லாத போர்!! 😏

இதன் பிறகு, நடந்தவற்றை மேல் நிலைக்கு மின்னஞ்சல் வழியாக புகாரளித்தேன். இதற்கான பதில் சில நாட்கள் கழித்து வந்தது. இதற்கிடையில், இந்தக் கருங்காலிகளை புரிந்து கொள்வதற்காக, "அரிஞ்சய சோழரின் பள்ளிப்படை" என்ற பக்கத்தை திருத்தினேன். இந்தப் பக்கத்தில் ஊடகங்களே இல்லாமல் இருந்தது. எனவே, எனது ஊடகங்களை பதிவேற்றினேன். சற்று நேரம் கழித்து, அதே நிர்வாகி இங்கேயும் வந்தார். அதே ஊழியமும் செய்தார். இதன் பிறகு, மீண்டும் நாய் வாலை நிமிர்த்த முனைந்தேன் - அதாவது சீர் செய்தேன் - அந்த நிர்வாகிக்கு செய்தி அனுப்பவேண்டும் என்ற நோக்கத்துக்காக. சீர் செய்து, "விக்கிப்பீடியாவுக்குள் இந்து சமய, சமூக, தேச விரோத சக்திகள் ஊடுருவிவிட்டனர் என்று என்றோ கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று நேரடியாக பார்த்துவிட்டேன். நன்றி. வணக்கம்." என்று பதிவு செய்தேன் (தற்போது இந்த கருத்தையும் நீக்கி விட்டனர்). இம்முறை அந்த நிர்வாகி வரவில்லை. பதிலாக, பல ஆண்டுகளுக்கு முன் அந்த பக்கத்தை உருவாக்கியவரை வரவழைத்திருந்தனர். அவர் செய்திகளை மட்டும் பழைய நிலைக்கு மாற்றி விட்டு, எனது படங்களை வைத்துக் கொண்டார்.

சில நாட்களுக்கு பின், எனது மின்னஞ்சலுக்கு விக்கிப்பீடியாவிலிருந்து பதில் வந்தது: பள்ளிப்படை பக்கத்தில் உள்ள பேச்சு பகுதியின் மூலம் நிர்வாகிகளுடன் பேசி தீர்த்துக் கொள்ளவும்!! 🤭

உள்ளூர் நீதிமன்றத்தில் நீதி கிடைக்கவில்லை என உயர் நீதிமன்றத்திற்குப் போனால், அவர்கள் மீண்டும் உள்ளூருக்கே வழக்கை திருப்பியனுப்பியது போல இருக்கிறது இவர்களது பதில்!! 😁

சைவத்தமிழையும், தமிழர்களையும் இந்து சமயங்களிலிருந்து பிரித்து பாவாடை, காட்டுமிராண்டிகளுக்கு விருந்தாக்குவது என்பது நல்ல அழகான, பண்புடைய, கற்புடைய ஒரு இல்லத்தரசியைக் கடத்தி கொடூர காமுகர்களுக்கு விருந்தாக்கி வயிறு வளர்க்கும் படுபாதகமான ஈன செயலுக்கு சமம். இந்தச் செயலை செய்வதற்கேற்ற ஈன நஞ்சு ஒட்டுண்ணி இனம், வளர்த்த மகளை மணந்தவன் காலத்திலேயே தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. இன்று இந்த இனம் பல்கி, பெருகி அரசு, ஊடகம், கல்வி, நீதி, திரை, தமிழ் என யாதுமாகி உள்ளது. விக்கிப்பீடியாவை மட்டும் விட்டு வைக்குமா? அடுத்தவர் பொருள் மீதே காலை தூக்கி சிறுநீர் கழிக்கும் உயிரி பொதுப் பொருளை விட்டு வைக்குமா?

முடிந்த வரை தமிழ் விக்கிப்பீடியாவை தவிர்ப்போம். மாற்று தலங்களை ஆதரிப்போம்; உருவாக்குவோம். திருவருள் நமக்கு துணை நிற்கும்!

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼

இணைப்புகள்: 

1. விக்கிப்பீடியாவில் இருந்த / இப்போதும் இருக்கின்ற பிழையான தகவல் பக்கத்தின் திரைநகல்கள்




2. நான் சீர் செய்த பக்கத்தின் திரைநகல்


3. விக்கிப்பீடியாவில் இருந்த / இப்போதும் இருக்கின்ற தகவலுக்கு சம்பந்தமில்லாத படங்கள் 


4. நான் பதிவேற்றிய அரிஞ்சய சோழரின் பள்ளிப்படை படங்கள்



🌸🏵️🌻🌼💮

விக்கிப்பீடியாவுக்கு நான் அனுப்பிய மின்னஞ்சல்:

வணக்கம் ஐயா,

நேற்று இரவு தமிழகத்திலுள்ள பள்ளிப்படை கோயில்களைப் பற்றி தேடிக் கொண்டிருக்கும் போது தமிழ் விக்கிப்பீடியாவின் பள்ளிப்படை பக்கத்தைக் காண நேர்ந்தது. அதிலுருந்த செய்தி மிகவும் பிழையாகவும், தமிழரின் மற்றும் தமிழ் சமயத்தின் தொன்மையைக் குறைப்பதாகவும் இருந்தது. மேலும், ஊடகப் பகுதியிலிருந்த படங்கள் தமிழக பள்ளிப்படை கோயில்களாக இல்லாமல், வடநாடு மற்றும் அயல்நாட்டுப் பள்ளிப்படைகளை காண்பித்தன.

சற்று அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்த நான், பக்கத்தைத் திருத்த முடிவு செய்தேன். புதிய கணக்கையும் திறந்தேன். பக்கத்தை திருத்தினேன். என்னிடமிருந்த அரிஞ்சய சோழரின் படங்களை பதிவேற்றினேன்.

பின்னர், இன்று காலை பார்த்த போது, எல்லாம் பழைய பிழையான நிலைக்குத் திரும்பியிருந்தன. மீண்டும் சரி செய்தேன். மதியம் பார்க்கையில், அனைத்தையும் மீண்டும் பிழையான நிலைக்கு திருப்பியிருந்தனர். இதில் உள்நோக்கம் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. தயவு செய்து ஆய்வு செய்து, சரியான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுகிறேன்.

தங்களது ஆய்வுக்காக தற்போதுள்ள பிழையான பக்கத்தையும், நான் மாற்றியிருந்த பக்கத்தையும் திரைநகல் எடுத்து இணைத்துள்ளேன்.

நன்றி. வணக்கம்.

கோ சரவணன்

🌸🏵️🌻🌼💮

எனது #மேல்பாடி பயணக் கட்டுரை:

சென்ற மாதம் 24ஆம் தேதியன்று திருவல்லம்-வள்ளிமலை சென்று வந்தேன். வள்ளிமலை செல்லும் வழியில், பொன்னையாறு தாண்டியவுடன் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. பாதையின் வலதுபுறம் கலசமில்லாத பச்சைக் கற்களால் கட்டப்பட்ட விமானமும், பழுப்புக் கற்களால் கட்டப்பட்ட மதில்சுவரும் கண்களில் பட்டது. திருக்கோயில் வளாகத்தின்னுள்ளும், வெளிப்புறத்திலும் நெடிந்துயர்ந்திருந்த வயதான மரங்களின் பல வித பச்சை நிற இலைகள் கோயிலின் அழகை பன்மடங்கு கூட்டின. தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் இருந்ததால், கோயில் பளிச்சென்று சுத்தமாக இருந்தது. அன்று வரை மழை பெய்திருந்தமையாலும், அன்றும் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்திருந்ததாலும், அப்பகுதியே கண்களுக்கு குளிர்ச்சியாகவும், மனதிற்கு ரம்மியமாகவும் காட்சியளித்தது. அங்கேயிருந்த ஒருவரிடம் விசாரித்த போது இத்திருக்கோயிலின் பெயர் திருசோமநாதேஸ்வரர் ஆலயமென்றும், முதலாம் பராந்தக சோழரும், பேரரசர் முதலாம் இராஜராஜ சோழரும் திருப்பணி செய்த கோயில் என்றும் தகவல் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சியுடன் உள்ளே சென்றேன். 

வெளிச்சுற்றில் வலம் வரும் போது ஒரு சிவலிங்கம் பெயர்த்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். அதன் ஆவுடை உடைந்திருந்தது. விதிப்படி ஆங்காங்கே இருக்க வேண்டிய இறையுருவங்கள், ஓரிடத்திற்கு கொண்டு வரப்பட்டு, வலுவான இரும்புக்கம்பி கதவுகள் கொண்டு பூட்டி வைக்கப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் கவனித்தவாறு கோயிலுக்குள் சென்றேன். உள்ளே சென்றதும், "மிகவும் பழமையான திருத்தலத்தில் இருக்கிறோம்" என்று உள்ளுணர்வு உணர்த்தியது. என்ன ஒரு அமைதி!! 😍 வடக்கிருக்க (தவமிருக்க) அருமையான தலம்!! 😌

உள்ளே சென்று இடப்புறம் திரும்பியதும் மூலவர் #சோமநாதேஸ்வரர் காட்சி தருகிறார். 🌺🙏🏼 அன்று எனக்கு ஏகாந்த சேவை. அருகே சென்று, கண்களை மூடி, நான் என்னும் தன்மையுணர்வில்  (சிவஉணர்வில்) சற்றே "சும்மா இருந்து" விட்டு 😌, "வேலை சூழ் உலகில் நமக்கு இன்னும் எவ்வளவு காலமோ?" என்று எண்ணியவாறு வெளிப்பட்டு, மூலவரை மீண்டும் வணங்கி விட்டு உள் சுற்றில் வலம் வரலானேன். கருவறையின் வெளிச்சுவர் முழுவதையும் கல்வெட்டுக்கள் அலங்கரித்தன. இச்சுற்றில் இருக்கின்ற அனைத்து இறையுருவங்களும் சேதமாக்கப்பட்டிருந்தன! 😔 வலம் வந்து, மூலவரை மீண்டும் வணங்க முற்பட்ட போது, கருவறையின் முன்னுள்ள மண்டபத்தில், எங்கிருந்தோ பெயர்த்தெடுத்துக் கொண்டு வரப்பட்டிருந்த ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம் ஒன்று கண்ணில் பட்டது!!

கோயிலை விட்டு வெளிவந்த போது, நான் முதலில் சந்தித்த நபரே இன்னமும் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்து, பின்னர் விசாரித்து நான் தெரிந்து கொண்டது: பாரத - பன்றிஸ்தான் பிரிவினையின் போது, அப்பகுதி காட்டுமிராண்டிகள் திரண்டு வந்து (வேலூர் மாவட்டத்தில் காட்டுமிராண்டிகள் அதிகம்), நான் உள்ளே கண்ட அனைத்துச் சேதங்களையும் செய்துள்ளனர். இத்துடன் அவர் தெரிவித்த செய்தி, "இங்க மட்டும் இல்லீங்க. எதிர்ல இருக்குற பள்ளிப்படை கோயிலயும் செதச்சிருக்காங்க." இச்செய்தி என்னுடைய கோபத்தை தூண்டாமல் ஆர்வத்தைத் தூண்டியது!! பள்ளிப்படைக் கோயில்களைப் பற்றி படித்திருக்கிறேன். ஆனால், நேரில் சென்று பார்த்ததில்லை. யாருடைய பள்ளிப்படை என்று கேட்டது தான் தாமதம், இதற்கென்றே காத்திருந்தவர் போல அனைத்து மதகுகளையும் திறந்துவிட்டார்! 😀

எதிரில், மரங்களுக்கு பின்புறம் (இதனால் தான் சாலையிலிருந்து தெரியவில்லை), விளை நிலங்கள் சூழ அமைந்திருக்கும் அந்த பள்ளிப்படை கோயில் பேரரசர் முதலாம் இராஜராஜ சோழரின் தாத்தா அரிஞ்சய சோழருடையதாகும். இராட்டிரக் கூடர்களுடன் தக்கோலத்தில் நடந்த போரில், போர்களத்திலேயே வீரமரணம் அடைந்துள்ளார். அவருக்காக பேரரசரே இந்த பள்ளிப்படையை எழுப்பியுள்ளார். சோமநாதேஸ்வரர் கோயிலைப் போன்றே பச்சை & பழுப்பு நிறக்கற்களைக் கொண்டு கட்டியிருக்கிறார். எதிரிகளின் ஊடுருவல் இப்பகுதியில் அதிகம் இருந்ததால், சோழர்களது படைப்பிரிவு ஒன்று எப்போதும் இங்கு தங்கியிருந்திருக்கிறது. இதனாலேயே இன்றும் இக்கிராமத்திற்கு மேல்பாடி என்று பெயர் (பாடி - படைகள் தங்கும் பகுதி; மேல் - மேற்கு).

இந்த பள்ளிப்படையின் சாவி ஒரு முன்னாள் இராணுவ வீரரிடம் இருக்கிறது. அவருக்கு செய்தி சொல்லியனுப்பி விட்டு, இவர் கிளம்பினார். இவர் இன்று இங்கு இருந்திருக்காவிட்டால், பள்ளிப்படையை தவறவிட்டிருப்பேன். ஆகையால், பல முறை நன்றி கூறி அவரை வழியனுப்பி வைத்துவிட்டு, பள்ளிப்படை வளாகத்திற்குள் சென்றேன்.

சிறிய பள்ளிப்படை கோயில். அது அமைந்திருக்கும் இடமும் சிறியது தான் (இவ்விடத்தையாவது விட்டு வைத்தார்களே! 😏). கோயிலை அடையும் பாதை மட்டும் சுத்தம் செய்திருந்தார்கள். மீதப்பகுதி, தொடர்ந்த மழையால், புதர் மண்ட ஆரம்பித்திருந்தது. பள்ளிப்படையின் பின்புறத் தோட்டத்துக்காரர், தனது தோட்டத்திலிருந்து எடுத்த களைச் செடிகளை பள்ளிப்படை வளாகத்திற்குள் வீசி மன்னருக்கு "மரியாதை" செய்திருந்தார்! "யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே" என்ற கண்ணதாசன் பாடல் தான் நினைவுக்கு வந்தது. 😔 சாவியும் வந்து சேர்ந்தது.

கதவைத் திறந்தவுடன் நேர் எதிரில் மூலவர் (சிவலிங்கம்) தெரிகிறார். பெயருக்கு ஒரு வெள்ளைத் துண்டைக் கட்டியிருந்தார்கள். விளக்கெரித்து எத்தனை நாட்கள் ஆயிற்றோ? மரியாதைக்கு ஒரு பூ கூட வைக்கவில்லை. நம்மைப் போல் யாரேனும் வந்து கேட்டால் தான் கதவையே திறப்பார்கள் போலிருக்கிறது. மூலவரின் முன்னிருந்த சிவன்காளையின் காதுகள் வெட்டப்பட்டிருந்தன. காட்டுமிராண்டிகளின் திருப்பணி! 😑 மன்னருக்கு மரியாதை 🌹🙏🏼 செலுத்தி விட்டு உள்சுற்றில் வலம் வரலானேன். சிறிய கோயிலுக்கு ஏற்றவாறு சிறிய அழகான இறையுருவங்கள். அனைத்தும் காட்டுமிராண்டிகளின் "திருப்பணி" பெற்றிருந்தன. 😤 வலம் வந்து, மீண்டும் மன்னரை வணங்கி விட்டு, திறந்து காண்பித்தவருக்கு நன்றி தெரிவித்து விட்டு, சற்று வருத்தம் கலந்த மகிழ்ச்சியுடன் வெளிவந்தேன். சோமநாதேஸ்வரப் பெருமான் இருந்த திசை நோக்கி, "எம்பெருமானே, மேன்மை கொள் சைவநீதி என்றென்றும் உலகெங்கும் விளங்கவேண்டும்" என்ற ஒற்றைக் கோரிக்கையை வைத்து விட்டு வள்ளிமலை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தேன். எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யாலும் என்பதற்கு அறிகுறியாக வானிலை மிகவும் குளிர்ந்திருந்தது.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼

1 comment:

  1. please add a new page தமிழ்பள்ளிப்படை

    ReplyDelete