(சில ஏமாற்றுக்கார நாம பேர்வழிகளைத் தான் திட்டி தீர்க்கிறேனே தவிர அவர்கள் வசம் மாட்டிக் கொண்டுள்ள பெருமாள்களை 🌺🙏🏼 அல்ல. (1))
நாடாளுமன்ற தேர்தல், புல்வாமா தாக்குதல், அதற்கு பாரதத்தின் பதிலடி, ஏ-சாட், பொள்ளாச்சி விவகாரம், கண்ணபிரானை கிண்டலடிக்கும் ஓசி சோறு என எதுவும் இவர்களை பாதிக்காது போலிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், இது போன்றொரு சூழ்நிலைக்கு காத்திருப்பார்கள் போலிருக்கிறது. சரியான சூழ்நிலை அமைந்தவுடன், இங்கி-பிங்கி-பாங்கி போட்டு, சைவத்திலிருந்தோ அத்வைதத்திலிருந்தோ ஒரு நிகழ்வை / கதையை உருவி, இவர்களுக்கு ஏற்றவாறு எடிட்டிங் செய்து வெளியிட்டு விடுவார்கள் போலிருக்கிறது!! 😏
இன்று இவர்கள் உருவியிருப்பது திருச்சி மலைக்கோட்டையில் உறையும் #ஸ்ரீதாயுமான #பெருமானின் (#செவ்வந்தி #நாதர்) 🌺🙏🏼 தல வரலாற்றை. இதை வைத்து இவர்கள் எழுதியுள்ள திரைகதையை இடுகையின் கீழே இணைத்துள்ளேன். அதை படிக்கும் முன், ஸ்ரீதாயுமான பெருமானின் தல வரலாற்றை இணையத்தில் தேடி படித்துக் கொள்ளவும் (தினமலர் இணையதளத்தில் கிடைக்கும்).
💥💥💥💥💥
விழாநாதர் (உற்சவர்) #நம்பெருமாள் வருடத்திற்கு ஒரு முறை ஜீயர்புரத்திற்கு செல்வது உண்மையே. அங்கு அவரது கண்ணாடி பிரதிபலிப்பிற்கு நாவிதர் சவரம் செய்வதும் உண்மையே. அதற்கு பின்புலமாக அவர்கள் சொல்லும் ரங்கன் - பாட்டி கதை மட்டும் தான் பிட். ஸ்ரீதாயுமான பெருமானின் தல வரலாற்றில் வரும் "செட்டிப்பெண் - நிறைமாத கர்ப்பிணி மகள்" கதையை உருவி இவர்களது "பிட்"டை தயார் செய்திருக்கிறார்கள்.
இதற்கு முன்னர் ஆதி சங்கரரது 🌺🙏🏼 வரலாற்றில் வரும் சண்டாளன் நிகழ்வை வைத்து ஒரு திரைக்கதை எழுதியிருந்தார்கள். #ஆதி #சங்கரர், காசி நகரின் ஒரு குறுகிய தெருவின் வழியாக செல்லும் போது எதிரே ஒரு அசுத்தமான சண்டாளன் தனது குடும்பம், நாய்கள் சகிதம் வருவான். சங்கரர் அவனை ஒதுங்கச் சொல்ல, அவன், "எதை ஒதுங்கச் சொல்கிறீர்கள்? இந்த உடலையா அல்லது இதனுள் இருக்கும் இமைப்பொழுதும் நீங்காதவனையா?" என்று பதில் கேள்வி கேட்பான். இதனால் அதிர்ச்சியடைந்து, எதிரே வந்தது யார் என்பதை உணர்ந்து, அகந்தை எழுச்சி அடங்கிய ஆதி சங்கரர், தனது பிறவியின் மீதமுள்ள குறிக்கோளை உணர்ந்து, மறைநூல்களுக்கு உரை எழுதும் பணியைத் தொடங்குவார். ("சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?" என்று கேட்டு முருகப்பெருமான், ஒளவைப் பாட்டியின் 🌺🙏🏼🌺🙏🏼 அகந்தை எழுச்சியை அடக்கியதற்கு சமமான நிகழ்வு.) இந்நிகழ்வை அப்படியே #ஸ்ரீராமானுஜர் வாழ்வில் நடந்ததாக மாற்றி எழுதியிருந்தார்கள். ஆதி சங்கரருக்கு பதில் ராமானுஜர், சண்டாளனுக்கு பதில் ஒரு பெண், காசிக்கு பதில் திருபெரும்புதூர். பெண் கொடுக்கும் பதில் கேள்வி மட்டும் சற்று மாறுகிறது (ஒவ்வொரு திசையிலுள்ள வைணவ தலத்தை சொல்லி, அதில் உறையும் பெருமாள் பெயரைச் சொல்லி, எப்படி அப்பக்கம் நகர்வது என்று கேட்பது போல் எழுதியிருந்தார்கள்). ஆதி சங்கரர் நிகழ்வில், தன்னைக் காப்பாற்றிய சண்டாளனை சங்கரர் வணங்கி விட்டு செல்வதாக வரும். இங்கு, ராமானுஜர் அந்தப் பெண்ணின் மேன்மையை உணர்ந்து தனது குழுவில் சேர்த்துக் கொண்டதாக எழுதியிருந்தார்கள் (மனித மேலாண்மையை நன்கு அறிந்தவர்கள்!! 😉).
நாம மதம் உருவாக்கப்பட்ட காலத்தில் இவர்களிடம் போதிய பணம், ஆட்கள் இருந்திருக்கமாட்டார்கள். அப்போது மேற்சொன்ன உல்டா வேலைகளை செய்து வண்டி ஓட்டினார்கள் என்றால் கூட சற்று ஏற்றுக் கொள்ளலாம். இன்று இவர்களிடம் என்ன குறை? இன்றும் உல்டா வேலைகளைத் தொடர என்ன காரணம்? சைவத்தையும் அத்வைதத்தையும் மிஞ்சுவதல்ல இவர்களது நோக்கம். "சைவமும் அத்வைதமும் எங்களிடமிருந்து தான் தோன்றின", என்று மார்தட்டி பெருமைபட்டுக் கொள்ளுவேண்டும். ஒருவரின் உதவியால் உயர்ந்த பின்னர், "என்னால் தான் அவரே உயர்ந்தார்", என்று பொய் பேசி, தற்பெருமை கொள்ளும் பிறவிகளை என்னவென்று அழைத்தால் தகுமோ அது இவர்களுக்குப் பொருந்தும். இவர்களை இவர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கும் பெருமாள்கள் தாம் பார்த்துக் கொள்ளவேண்டும். (பரங்கி மதத்தினரும் இதே வேலையைத் தான் செய்கின்றனர். நமது #திருக்குறள் மற்றும் ஏனைய மறைநூல்களை வைத்து தங்களது புத்தகத்தை மேம்படுத்திக் கொண்டு, அவர்களால் தான் #திருவள்ளுவர் மெய்யறிவு பெற்றார், அவர்களிடமிருந்து கற்றதைத் தான் திருக்குறளில் பதிவு செய்தார் என்று பீலா விட்டு, பெருமை கொள்ளும் அற்பத்தனமும் இதே வகை தான்.)
இனி நாம் அரங்கநாதரிடம் திரும்புவோம்.
திருவரங்க மூலவர் அரங்கநாத பெருமாள் என்பது ஒரு அடையாளம் மட்டுமே. அந்த அடையாளம் குறிப்பது ஒருவரது சமாதியை. அந்த ஒருவர் - 18 சித்தர்களில் ஒருவரான #சட்டைமுனி #சித்தர். 🌺🙏🏼
ஆம். சட்டைமுனி சித்தரின் சமாதியின் மேல், அடையாளமாக பானை மண்ணால் செய்யப்பட்ட சிலை தான் அரங்கநாத பெருமாள்.
சித்தர் உடல் தாங்கியிருந்த போது அவருக்கு ஜீயர்புரத்து நாவிதர் சமூகம் பணிவிடை செய்திருக்கக் கூடும். இதன் பொருட்டு, வருடத்தில் ஒரு நாள் விழாநாதர் (பெருமாளைக் குறிப்பவர்; பெருமாள் சித்தரைக் குறிப்பவர்; ஆகையால், விழாநாதர் சித்தரைக் குறிக்கிறார்) அங்கு சென்று, அவர்களிடம் மரியாதை பெற்றுக் கொண்டு, ஆசிர்வதித்து விட்டுத் திரும்புகிறார்.
இதை வெளிப்படையாக சொல்வதால் பெருமாளின் புகழ் எந்த விதத்தில் குறைந்து விடப்போகிறது? இதற்குள் ஏன் தாயுமானப் பெருமானின் தல வரலாற்றைக் கொண்டு வர வேண்டும்?
🏵️🌸🌹💮🌷🌼🌻
சித்த வேட்கை கொண்டு சிறந்து விளங்கிய சீலரே
அரங்கனிடத்தில் அணிகலன்கள் பெற்ற (2) அற்புத மூர்த்தியே
எம் அறியாமை நீக்கி ஞானவரம் அருள்வாய் ஸ்ரீசட்டைமுனி சுவாமியே!
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
போற்றுவார் போற்றலும்
தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே
சொன்னவன் கண்ணன்
சொல்பவன் கண்ணன்
கண்ணனே காட்டினான்
கண்ணனே சாற்றினான்
(ஸ்ரீபகவத்கீதையில் கண்ண பிரான்)
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
பாழான மாய்கைசென் றொழிவ தெப்போ?
பரந் தமனஞ் செவ்வையாய் வருவ தெப்போ?
வாளான விழியுடைய பெண்ணைச் சேரும்
மயக்கமற்று நிற்பதெப்போ? மனமே ஐயோ?
காழான உலகமத னாசை யெல்லாங்
கருவறுத்து நிற்பதெப்போ? கருதி நின்ற
கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக்
கூடுவது மேதனென்றால் மூலம்பாரே
(சட்டைமுனி ஞானம்)
🏵️🌸🌹💮🌷🌼🌻
குறிப்புகள்:
#1 - #மாயோன் என்ற சொல் தொல்காப்பியத்திலேயே இருந்தாலும், நாம மதம் உருவானது 700களில் தான். திருஞானசம்பந்தரின் மறைவுப் பின்னர் தான். அதிலும், நாமம் என்ற அடையாளம் உருவானது 1100களில் தான். ஆனால், இவர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கும் சில பெருமாள்கள் மிக பழமையானவர்கள். (எ.கா.: #திருமலை மூலவர் ஸ்ரீபாலாஜி பெருமாள் என்னும் அடையாளத்தின் கீழ் சமாதியாகியிருக்கும் #கொங்கணவ #சித்தர் 2300 ஆண்டுகளுக்கு முந்தையவர்.)
வடபாரத மொட்டை மதங்களை திருஞானசம்பந்தரும், ஆதி சங்கரரும் வேரறுத்து ஒழித்துக்கட்ட, அதிலிருந்து தப்பித்த ஒரு கூட்டம் பெண் தெய்வ வழிபாட்டு கூடாரத்திற்குள் புகுந்து கொண்டது. சைவத்தாலும், அத்வைதத்தாலும் "வடை போச்சே" என்ற வயிற்றெரிச்சலில் அக்கூட்டம், அவ்விரண்டு சமயத்திலும் உள்ளவற்றை எடுத்து, அவற்றை தலைகீழ், எதிர்மறை, மேல்கீழ், முன்பின் என்று எல்லாவிதமாகவும் மாற்றி, திரைக்கதை, வசனம் எல்லாம் சேர்த்து, அவ்வப்போது பறந்து வந்த அழுகின தக்காளிகளுக்கு ஏற்ப வெட்டி ஒட்டி உருவாக்கிய "யேசு நல்லவர். ருசித்துப் பாரும்." வகை பண்டம் தான் வைணவம். சைவ-அத்வைதங்களை மிஞ்ச வேண்டும் என்று 1300 ஆண்டுகளாக போராடியும் இவர்களுக்கு கிடைத்த பேறு என்னவோ: நாமம் என்றால் ஏமாற்று வேலை!! (அதாவது, வைணவம் என்றால் ஏமாற்று வேலை) 😏
வைணவத்தை ஆதி பரங்கி மதம் என்றும், பரங்கி மதத்தை நவீன நாம மதம் என்றும் அழைத்தால் மிகையாகாது!! இருவரது தில்லாலங்கடி வேலைகளிலும் அவ்வளவு ஒற்றுமை உண்டு!!!
#2 - "அரங்கனிடத்தில் அணிகலன்கள் பெற்ற" என்றவுடன் அரங்கநாதரிடமிருந்து அணிகலன்கள் பறந்து வந்து சித்தரிடம் ஒட்டிக் கொண்டன என்று எழுதிவிட்டார்கள். 😁 உண்மை என்னவெனில், "சிவன் அபிஷேகப்பிரியர். பெருமாள் அலங்காரப்பிரியர்." என்ற முதுமொழியில் வரும் "பெருமாள் அலங்காரப்பிரியர்" என்ற பேருண்மையை உணர்ந்து வெளிப்படுத்தியது இச்சித்தராகும்.
சிவன் - காண்பான்
பெருமாள் - காணப்படுவது
காணப்படுவது யாவும் (நல்லது, கெட்டது, உயர்ந்தது, தாழ்ந்தது...) அண்டம் என்னும் இறைத் திருமேனியின் அணிகலன்கள். இந்த கண்ணோட்டத்தால் உலகின் மீதுள்ள வெறுப்பு அகலும். உலகம் தொடர்ந்து செவ்வனே இயங்கும்.
🏵️🌸🌹💮🌷🌼🌻
வாட்ஸ் அப் மூலம் கிடைத்தது:
*#பழையமுதும்... #மாவடுவும்!!!*
ரங்கநாத பெருமான் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தில் எல்லா நாளுமே திருநாள் தான். அதில் வித்தியாசமான, ஆனால் எல்லோரையும் நெகிழ வைக்கும் திருவிழா ஒன்று பங்குனி பிரம்மோற்ஸவத்தின் மூன்றாம் நாள் நடைபெறுகிறது. _*பழைய சோறும், மாவடுவும்*_ என்று புகழப்படும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள ரங்கநாத பெருமான் ஶ்ரீரங்கம் விட்டு ஜீயர்புரம் என்ற ஊருக்கு கிளம்பி செல்கிறார். அங்கு சவரத் தொழிலாளர்களின் மண்டகப்படி பெருமாளுக்கு நடைபெறுகிறது. அந்த விழாவில் முகம் திருத்தும் தொழிலாளி ஒருவர் ரங்கநாத பெருமாளுக்கு எதிரே கண்ணாடி காட்டி கண்ணாடியில் தெரியும் ஆண்டவரின் பிம்பத்திற்கு முகம் திருத்தம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. அதன்பிறகு முகம் திருத்தும் தொழிலாளிக்கு மரியாதை செய்யப்படுகிறது.
இந்த திருவிழாவில் ரங்கநாதருக்கு நைவேத்தியமாக பழைய சோறும், மாவடுவும் அளிக்கப்படுகிறது. வெண்ணையும் மண்ணையும் உண்ட அந்த ஆதிமூல பெருமானுக்கு பழைய சோறு, மாவடுவும் ஒரு பொருட்டா என்ன...
இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. .
ஜீயர்புரம் என்பது காவிரிக்கரை அருகே உள்ள அழகான கிராமம். அந்த ஊரில் ரங்கநாதரையே சர்வகாலமும் நினைத்து வாழும் ஒரு பாட்டி இருந்து வந்தாள். இளமையிலேயே கணவனை இழந்த அவளுக்கு இரண்டே உறவுகள் தான். ஒருவர் ரங்கநாத பெருமாள், மற்றொருவர் அவளின் பெயரன் ரங்கன். ஏழ்மையிலும் இறைவனை மறக்காத அந்த பாட்டி, உட்கார்ந்தால் 'ரங்கா' எழுந்தால் 'ரங்கா' என்றே வாழ்ந்தவள்.
அவளுக்கும் ஒருநாள் சோதனை வந்தது. அந்த சோதனை வழியே அவளை ஆட்கொள்ள எண்ணினார் கார்வண்ணன். அன்று பாட்டியின் பெயரன் முகம் திருத்திக்கொண்டு வருவதாக சொல்லிக்கொண்டு காவிரிக்கரைக்கு சென்றான். அங்கு முகம் திருத்தி விட்டு காவிரியில் இறங்கி குளித்தான். மென்மையாக ஓடிக்கொண்டிருந்த காவிரி ஊழி வெள்ளம் பாய்ந்ததைப் போல பெருகி வரத்தொடங்கியது. பெருகிய வெள்ளத்தில் பாட்டியின் பெயரன் ரங்கன் இழுத்துச் செல்லப்பட்டான். நேரமாகியும் திரும்பாத பெயரனை எண்ணி பாட்டி கவலைப்பட்டாள். ரங்கநாத பெருமாளை தொழுது அழுது காவிரிக்கரைக்கு சென்றாள். அதே வேளையில் காவிரி இழுத்துச் சென்ற ரங்கன் ஸ்ரீரங்கத்தின் அம்மா மண்டபத்துக்கு அருகே கரை ஒதுங்கினான். உயிர் பிழைத்த ரங்கன், ஸ்ரீரங்கத்து ஆண்டவனை தரிசித்து காப்பாற்றியதற்கு நன்றி சொன்னான். தன்னை எண்ணி இந்நேரம் பாட்டி அழுவாளோ என்று பதறி ரங்கநாதரிடம் முறையிட்டான். உடனே கிளம்பினான். பெயரன் செல்லும் வரை பாட்டி துடிப்பாளே என்று பரந்தாமனும் எண்ணினார். பக்தரை காக்கும் பரந்தாமன் பொறுப்பாரா? காவிரியின் வெள்ளம் கண்டு அழுது புலம்பிக்கொண்டிருந்த பாட்டியை ஆற்றுதல் படுத்த கிளம்பினார் பரந்தாமன். ஆம், பாட்டி அழுது கொண்டிருந்த ஜீயர்புரத்து காவிரி கரையருகே முகத்திருத்தம் செய்த முகத்தோடு குளித்து எழுந்த நிலையில் பாட்டியின் பெயரன் ரங்கனாகவே வந்தார் பெருமாள். பாட்டி மகிழ்ந்தாள். பெயரனை கட்டி அணைத்து வீட்டுக்கு கூட்டி சென்றாள். பசித்திருந்த பெயரனுக்கு பழைய சோறும் மாவடுவும் அளித்து சாப்பிட சொன்னாள். பரந்தாமன் சாப்பிட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் உண்மையான பெயரன் ரங்கன் வந்து விட்டான். பாட்டி திகைத்தாள். அடியவருக்கு அடைக்கலம் தரும் பெருமான் சிரித்தபடியே மறைந்தான். பாட்டியும் பெயரனும் ரங்கநாத பெருமானின் அருளை எண்ணி தொழுதார்கள். அவரின் திருவுளம் எண்ணி அழுதார்கள். .
அன்று பக்தையை ஆறுதல் படுத்த வந்து பழைய சோறும், மாவடுவும் உண்ட ரங்கநாத பெருமாள் இன்றும் அதை நினைவூட்ட ஆண்டுதோறும் பிரம்மோற்ஸவ விழாவில் இதை நடத்தி வருகிறார். ஏழைக்கு ஏழையான நம்பெருமாள் என்றுமே நம்மை காப்பார் என்பதையே இந்த நிகழ்ச்சி காட்டுகிறது.
இன்றும் ஸ்ரீரங்கத்தில்... _*பழையமுதும் மாவடும் பிரபலம்..*_
🙏🙏🙏🙏🙏