மொழி, சமயம் ஆகிய இவ்விரண்டுத் துறைகளை தவிர மற்றனைத்திலும், "நாம் ஒன்றுமில்லை. முட்டாள்கள். பரங்கி மத தேவர்களாகிய வெள்ளையர்கள் வந்த பின்னர் தான் நமக்கு பல் துலக்கவே தெரிந்தது." என்று தானே நம் தலையில் ஏற்றியிருக்கிறார்கள். 😠 இன்னமும் "பரங்கி பொறுக்கி வாஸ்கோட காமா தான் இந்தியாவைக் கண்டு பிடித்தான்" என்று ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். 😡 சட்டத்துறை மட்டும் விதிவிலக்கா என்ன?
சிறு வயதிலேயே சிறப்பான தீர்ப்பை அளித்த கரிகாலனோ, "தவறாக தீர்ப்பை அளித்துவிட்டோம்" என்றுணர்ந்த உடனேயே உயிரை விட்ட ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனோ, புறாவிற்காக தொடையின் சதையை அறுத்துக் கொடுத்த சிபி சக்ரவர்த்தியோ, பசுவிற்கு செவி மடுத்த மனுநீதி சோழனோ இந்த லார்ட் லபக்குதாஸுகளுக்கு (#) முன் எம்மாத்திரம்? 😛😜😝
(# - லபக்குதாஸ் என்ற பரங்கி ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம். கண்டதையும் தெரிந்து வைத்திருப்பான். குத்திக் காட்டவும், எதுகை மோனைக்காகவும் இவன் பெயரை உபயோகப்படுத்தினேன்.)
(இணைப்பு: தினமலர் - சென்னை - 19/03/2017)
No comments:
Post a Comment