Friday, October 7, 2016

செவ்வாய் கிரகமானது பௌர்ணமி நாளில் புலப்படுமா?

*ஆம் என்கிறது புறநானூறு!!*

பண்டைய காலங்களில் இப்போது போல் அல்லாமல் நமது #தமிழர்கள் இயற்கையின் வழிகாட்டுதலிலேயே வாழ்ந்து வந்தனர் என்பதற்கு பல்வேறு உதாரணங்களை சுட்டிக் காட்டலாம் அவற்றில் பல ஆச்சரியமூட்டுபவை. கோள்கள் ஆராய்ச்சியில் நம்மை விஞ்சியவர் எவரும் இல்லை என்றே கூறலாம். அதற்கு புறநானூரின் இந்த பாடலே செம்மையான ஆதாரம்:

*முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்*
*செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்*
*உச்சி நின்ற உவவுமதி கண்டு*
*கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த*

*(#புறநானூறு 60:5)*

பொருள்:

கடலின் நடுவே உள்ள மரக்கலங்களிலுள்ள (திமில்) விளக்குப் போல, சிவந்த #செவ்வாய் வீண்மீன் ஒளிறும் ஆகாயத்தின் உச்சியில் முழு நிலவு இருந்தது. அதைக் கண்டு அந்தச் சுரவழியில் வந்து கொண்டிருந்த, மயில் போன்ற, சில வளையல்களே அணிந்த விறலியும் நானும் விரைந்து பலமுறை தொழுதோம் அல்லவோ? 👏👍👌

அறிவியல்:

பூமியானது தன்னைத்தானே சுற்றிக் கொண்டும் சூரியனைச் சுற்றியும் வலம் வரக்கூடியது. அதனால் பூமிக்கு பின்னால் இருக்கும் கிரகங்களை நாம் இரவு நேரங்களில் வெறும் கண்ணால் காணலாம். அந்த வகையில் செவ்வாய் கிரகத்தை பௌர்ணமி காலத்தில் மிகத் துள்ளியமாக காணலாம். கடல் மட்டத்திலிருந்து ஒரு சில அங்குலத்திற்கு மேலாக செவ்வாய் கிரகத்தை நம்மால் காண முடியும். இதைத்தான் புறநானூறிலும் கூறியிருக்கிறார்கள்.

#கிரகங்கள் பற்றிய அறிவு நம் முன்னோர்களுக்கு கிடையாது என்று உளறும் அறிவுஜீவிகள் இந்த துள்ளியமான பாடலுக்கு என்ன சொல்லப் போகிறார்கள்? 👊😉

(மூலம்: https://m.facebook.com/story.php?story_fbid=1604049039900118&id=100008851127026)

No comments:

Post a Comment