Saturday, July 16, 2016

☀ கரிநாள் - தமிழனின் அறிவியல் திறனுக்கு ஓர் சான்று 👊👊👊

கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்” என்பதே!

அதாவது, அன்றைய தேதியில் சூரிய கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும். நமது முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக ஆராய்ந்து முடிவு செய்து வைத்திருக்கும் நாட்கள் இவை. இந்நாட்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடாதவை. இது ‘அஷ்டமி, நவமி’ போன்றோ அல்லது ‘பரணி, கிருத்திகை’ போன்றோ திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல. தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் இந்நாட்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். உதாரணமாக தை மாதம் 1, 2, 3 ஆகிய நாட்கள் கரிநாட்கள். இவை வானவியல் ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாட்கள்.

சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும் பொழுது, நமது உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும், ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாக அதிக அளவில் தூண்டப்படுகின்றன. இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். இது போன்ற காரணங்களால் கரிநாட்களில் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்த்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு தமிழ் வருடமும் கரிநாட்களின் விவரம் :
சித்திரை - 6, 15,
வைகாசி - 7, 16, 17
ஆனி - 1, 6
ஆடி - 2, 10, 20
ஆவணி - 2, 9, 28
புரட்டாசி - 16, 29
ஐப்பசி - 6, 20
கார்த்திகை - 1, 10, 17
மார்கழி - 6, 9, 11
தை - 1, 2, 3, 11, 17
மாசி - 15, 16, 17
பங்குனி - 6, 15, 19

நம் உடல், மனம், நாம் வாழும் புவி, அது சுற்றும் ஞாயிறு என அனைத்தின் அறிவும் பெற்றிருந்தால் மட்டுமே இந்தத் தேதிகளை கணித்திருக்கமுடியும். 👏👌👍 இதை நினைக்கும் போது பிரமிப்படையும் மனம், அடுத்து "அந்த அறிவு இன்று என்னவாயிற்று?" என்ற கேள்வி எழும் போது கனக்கிறது. 😔

(மூலம்: https://m.facebook.com/story.php?story_fbid=1761894744083274&id=100007882965810)

💥 பி.கு: "கலீலியோ, கெப்ளர், நியுட்டன் போன்ற பெயர்கள் வராமல், ஏதேச்சையாக ஆப்பிள் மரத்திலிருந்து விழாமல், "யுரேகா" என்று குளியல் தொட்டியிலிருந்து திகம்பரனாக எழுந்து ஓடாமல், கண்டுபிடிப்புக்காக சர்ச் சிறை வைக்காமல் இதெல்லாம் என்ன பெரிய கண்டுபிடிப்பு?" எனும் ரீதியில் பேசும் கருங்காலிகளைக் கண்டால் பிய்ந்து போன பழைய செருப்பாலும், தேய்ந்து போன தென்னைமாராலும் விளாசவும்!! 😠

posted from Bloggeroid

No comments:

Post a Comment