(தினமலர் - சென்னை - 28/07/2016)
எதில் தான் நாம் முன்னோடிகள் இல்லை? உலகில் உள்ள அனைத்து உருப்படியான விஷயங்களுக்கும் நாம் தான் முன்னோடிகள். இறை, அண்டம், பிண்டம், நாகரீகம், மொழி, உணவு, கடல், மருத்துவம், கலைகள், சமூக அமைப்பு என பட்டியல் நீண்டு கொண்டே தான் போகிறது (நேற்று தான் "வைசேஷிகம் என்பது தமிழரின் அளவையியல்" என்றும், இது பற்றிய குறிப்புகள் சிவஞானசித்தியாரில் உள்ளது என ஒரு வேர்சொல் ஆராய்ச்சியாளர் எழுதியதை படிக்க நேர்ந்தது). 👏
நாம் முன்னோடிகளாக, செழிப்பாக, வளமாக இருந்ததால் தான் அத்தனை படையெடுப்புகளைக் கண்டோம்! ஆனால், வந்த ஒவ்வொரு ஜந்துவும் நம்மை வளமாக்க வந்ததாகக் கதை விடும்:
😛 ஆரியர்கள் - தேவர்கள்; அனைத்தும் அறிந்தவர்கள்; அறிவு வங்கிகள்; சமூக காவலர்கள் மற்றும் பல அரும்பணிகளை செய்தவர்கள். 😁
😜 சமண & பெளத்தர்கள் - நமது "போலி திராவிட அரசியல்வியாதிகளை" பொறுத்தவரையில், இவர்கள் வந்து தான் நாம் சமைந்தோம் (பக்குவமானோம்). கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே நாம் தோன்றியிருந்தாலும் இவர்கள் வரும்வரை காளகேயர்களைப் (பாகுபலி படத்தில் வருவோர்) போல் வாழ்ந்தோம் போலிருக்கிறது. 😀
😯 முகம்மதியர்கள் - இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்! அன்பு மார்க்கம்!! 😂😂 (நம்புங்கள்)
😝 பரங்கிகள் - இவர்களைப் பற்றி பேசினால், "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா" என்ற கர்ணன் படப்பாடல் வரிகள் தான் நினைவுக்கு வரும். 😀 உலகம் அழியவேண்டி ஓயாது உழைப்பவர்கள். புவியை சூடாக்கியுள்ளார்கள். இயற்கையை அழித்துக்கொண்டே வருகிறார்கள். புதிது புதிதாக வியாதிகளையும் அதற்கான தடுப்பு மருந்துகளையும் உடனுக்குடன் கண்டுபிடிப்பார்கள். நுனிக்கிளையில் அமர்ந்து கொண்டு அடிக்கிளையை வெட்டும் அறிவுஜீவிகள். பாரபட்சமின்றி அரசுகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் ஆயுதம் விற்பார்கள். சமாதான விரும்பிகள். நமது தேசியக் கொடியிலுள்ள வெள்ளை நிறம், ஒரு விதத்தில், இவர்களைக் குறிக்கும். அதாவது, நமக்கும் (காவி) முகம்மதியர்களுக்கும் (பச்சை) இடையில் நின்று நாட்டை காப்பவர்களாம்! (வெட்கக்கேடு) 😤
"தாவரங்களை இருபெயர் கொண்டு தொல்காப்பியர் தான் முதன்முதலில் குறிப்பிட்டார்" என்பதை அறிஞர்கள் அரங்கில் அறிவிப்பதோடு மட்டும் நில்லாமல், இத்தகைய செய்திகளை இப்போது பிறந்துள்ள குழந்தை முதல் நாளை இறக்கவிருக்கும் முதியவர் வரை எடுத்துச் செல்லவேண்டும். இல்லையேல், நாளைய தலைமுறையும் "தமிழர்கள் திரைகடலோடி திரவியம் தேடியவர்கள்" என்பதை மனனம் செய்து தேர்வில் எழுதி மதிப்பெண் பெற்றுவிட்டு, "வாஸ்கோடகாமா தான் இந்தியாவைக் கண்டுபிடித்தான்" என்றும் மனனம் செய்து தேர்வில் எழுதி மதிப்பெண் பெற்றுவிட்டு.... 😒
ஆனால், விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது சுலபமான காரியமில்லை. வெளியிலிருந்து கொடுக்கப்படும் தொல்லைகள் ஒரு புறமிருந்தாலும், இங்கேயே நிறைய கருங்காலிகள் உள்ளனர். இறையருள் தான் துணைபுரிய வேண்டும். 🙏
posted from Bloggeroid
No comments:
Post a Comment