கருத்து: திராவிட கட்சிகள் ஜாதி அரசியல் நடத்துகின்றன!
எதிர்வாதம்: ஆவணி அவிட்டத்திற்கு பூணூல் போடுவது ஜாதி ஒழிப்புக்கான ஏற்பாடா?
😂😂😂😂😂
கருத்துச் சொன்ன இதழ் ஐயங்காருடையதாகிப் போனதால் இப்படிப்பட்ட குண்டக்க மண்டக்க வாதம். இதுவே முதலியார், தேவர், வன்னியர், பரையர், பல்லர், முகம்மதியர், கிறித்துவர் என்று யாராவது நடத்துபவராக இருந்திருந்தால் எதிர்வாதம் எப்படியிடுந்திருக்கும்? 😉
திராவிட இயக்கங்களால் அன்று பயன்கள் இருந்தாலும், இன்று?
ஜாதி அரசியல், எங்கும் எதிலும் ஊழல், தரமற்றவர்களால் நிறைந்த அரசாங்கம், இலவசங்களாலும் மதுவாலும் சீரழியும் சமூகம் .... 😬
அரசாங்கத்தை அன்று ஒரு கூட்டம் ஆக்ரமித்திருந்தது. தங்களுக்குத் தேவையானதை செய்து கொண்டது. இன்று வேறு ஒரு கூட்டம் ஆக்ரமத்திருக்கிறது. தங்களுக்குத் தேவையானதை செய்து கொள்கிறது. அவ்வளவே.
எல்லா அவலங்களுக்கும் தீர்வு: அளவான மக்கள் தொகை & சுயசார்பான வாழ்க்கை முறை.
இப்போதிருக்கும் எந்த அரசியல் கட்சியும் தீர்வு காணப் போவதில்லை. கண்டுவிட்டால், அவர்களின் தலைவர்களின் பிறந்தநாள் விழா அன்னதானக் கூட்டத்திற்கு யார் வருவர்? 😕
(இணைப்பு: தினமலர் - சென்னை - 05/06/2016)
posted from Bloggeroid
No comments:
Post a Comment