Saturday, April 30, 2022

கூவங்கூட்டத்தோட பாணியில டான்ஸர் யேசு படத்த "வெச்சு செஞ்சா"? 😜


(முதலில், இந்து சமய இறையுருவங்களை நகலெடுத்து, உடன் மேற்கத்திய ஜாங்குசக்குப் பாணியைச் சேர்த்து, தகுந்த சமயம் வரும்போது, அவையே மூல உருவங்கள் என்று உரிமை கோரும் "சோத்துல பாறாங்கல்" திட்டங்களும் செயல்பாட்டிலுள்ளன என்பது அந்த ஈனர்களுக்கு தெரியுமா? 😏)

oOo

ஈன வெங்காயம் முதல் தற்போது குரைத்திருக்கும் இழிபிறவி வரை, இவர்களுக்கு பொரை வீசுபவர்கள் இவர்களை தேர்ந்தெடுக்க பயன்படுத்தும் ஏரணம்:

ஊருக்குள் சேர்க்கவேக் கூடாது, கண்களால் பார்க்கவேக் கூடாது, தவறிகூட எண்ணிவிடக் கூடாது என்னுமளவிற்கு கழிசடையாக இருக்கவேண்டும்!! 🤢

எல்லாம் இன்னும் சில காலம். காட்டுமிராண்டித்துவம் புவியிலிருந்தே தூக்கியெறியப்படும். எச்சில் பிஸ்கோத்துத்துவம் மண்ணோடு மண்ணாகும்.

oOo

நெற்றிவிழி கண்மூன்றும் நித்திரையோ சோணேசா
பற்றிமழு சூலம் பறிபோச்சோ - சற்றும்
அபிமான மின்றோ அடியார்க ளெல்லாம்
சபிமாண்டு போவதோ தான்

-- திரு குகைநமச்சிவாயர் 🌺🙏🏽🙇🏽‍♂️ 

பொருள்: சோணேசா, உனது நெற்றியிலுள்ள 3 கண்களும் உறங்கிவிட்டனவா? மழு, சூலம் ஆகிய உனது ஆயுதங்கள் எல்லாம் பறிபோய்விட்டனவா? உன்னையே நம்பியிருக்கும் உனது அன்பர்கள் எல்லோரும் நம்பிக்கையிழந்து மாண்டுபோக வேண்டியதுதானா?

இந்த வெண்பாவின் வரலாறு சுருக்கமாக...

ஏறக்குறைய 16ஆம் நூற்றாண்டின் நடுவில், அகித் என்ற ஒரு கோரி முகம்மது வகையறா (காட்டுமிராண்டி) திருவண்ணாமலை நகரைக் கைப்பற்றியது. அது அண்ணாமலையார் திருக்கோயிலை தனது கோட்டையாகவும், மூலவரின் கருவறையை தனது அந்தப்புரமாகவும் பயன்படுத்தியது. இவற்றுடன், பெண்களைக் கவர்தல், பால் சுரக்கும் மார்புகளை அறுத்தல், பொருட்களை கொள்ளையடித்தல், பயிர்களுக்கு தீ வைத்தல், நீர் நிலைகளை நஞ்சாக்குதல் முதலான "மார்க்கப் பணிகளை" செய்து வந்தது. இவற்றால் மனம் நொந்த ஊர் பெரியவர்கள், ஒன்று கூடி, குகை நமச்சிவாயரிடம் முறையிட்டனர். அவரும் மேற்கண்ட வெண்பாவைப் பாடினார்.

அன்றிரவு, காட்டுமிராண்டியின் கனவில், ஒரு முதிய தவசி தோன்றி, ஒரு சிறு கூரான ஆயுதத்தால் அவனது முதுகில் குத்தினார். திடுக்கிட்டு விழித்தெழுந்தவன், பரிசோதித்துப் பார்த்ததில், கனவில் குத்து வாங்கிய இடத்தில் ஒரு சிறு வேர்க்குரு இருக்கக் கண்டான். அது நாளடைவில் வளர்ந்து, பிளவைக் கட்டியாக மாறி, அவனை மிகவும் துன்புறுத்தியது. கருவுற்ற மகளிரைக் கொன்று, கருவிலிருக்கும் பிண்டத்தை பிளவைக் கட்டிக்குள் வைத்துக் கட்டிப்பார்த்தான். குணமாகவில்லை. அவனது மதப்பெரியோர்கள் அவனை திருத்தலத்திலிருந்து வெளியேற அறிவுருத்தினார்கள். வேறு வழியின்றி அவனும் வெளியேறி, ஊருக்கு வெளியே கூடாரம் அமைத்துக் கொண்டான். ஆனாலும், குணமடையவில்லை. கட்டியில் புழுக்கள் தோன்றின. இறுதியில், மிகவும் துடிதுடித்து இறந்துபோனான். அவனது இறப்பை, திருவண்ணாமலை நகரத்தார் அனைவரும் வெகுவாகக் கொண்டாடியுள்ளனர். தலைமுழுகி, புத்தாடை அணிந்து, வாணவேடிக்கைகள் நடத்தி, விருந்துண்டு மகிழ்ந்துள்ளனர்!! 😍

இது போன்றொரு நிகழ்வு மீண்டும் நம் நாட்டில் நடக்கவேண்டும். குகை நமச்சிவாயர் போன்றொரு பெருமான் மனது வைக்கவேண்டும். நாசகார சதிகார நயவஞ்சக கருங்காலி ஈனப்பிறவிகள், ஒன்று, திருந்த வேண்டும்; அல்லது, மண்ணோடு மண்ணாக வேண்டும்!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Thursday, April 28, 2022

திரு அரங்கநாதரின் இராஜநடை என்பதென்ன?

காணொளி: https://youtube.com/shorts/VCl8enDHhUU?feature=share

இக்காணொளியுடன் வந்த உரை: திரு அரங்கத்து இராஜன் அழகிய மணவாளனின் இராஜநடை!

இங்கு நடை என்பதென்ன?

🌷 அசைவது - அசைவற்றது என்ற இரு பிரிவில், அசையும் பகுதியைக் குறிப்பவர் நம்பெருமாள் / அரங்கநாதர். இதுவே, காண்பான் - காட்சி என்ற கணக்கில் காட்சியைக் குறிப்பவர்.

🌷 காட்சி என்பது மாறிக்கொண்டேயிருக்கும். காணும் உலகமென்பது இயங்கிக் கொண்டேயிருக்கும். இவற்றைக் குறிக்கும் அரங்கநாதர் அசைந்தாடி எடுத்துச் செல்லப்படுகிறார். இதை அவரது இராஜநடை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இவை வைணவ நம்பிக்கையின் அடிப்படையில். வரலாற்றின் அடிப்படையில் ...

🌷 அரங்கநாதர் என்பது சட்டைமுனி சித்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️ திருநீற்று நிலையடைந்த (சமாதி) இடத்தைக் குறிக்கும் அடையாளச் சின்னமாகும். (இந்த சின்னத்தை வைத்துப் பார்த்தால் பெருமாள் அசைவற்ற பொருளாவார். நம்பெருமாளை அசைத்து ஆட்டி எடுத்துச் செல்வது பொருந்தாது. சிலையுணர்த்தும் உண்மை வேறு, வைணவர்களின் நம்பிக்கை வேறு என்ற கணக்கில்தான் காலம் போய்க்கொண்டிருக்கிறது.)

🌷 சட்டைமுனி சித்தர் இலங்கையிலிருந்து வந்தவர். உழவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர். கம்பளத்தால் மேலுடலை எப்போதும் மூடிக் கொண்டிருந்தவர்.

🌷 உடல், உலகம் மற்றும் இவற்றின் மூலம் கிடைக்கும் இன்பதுன்பம் யாவும் ஆதனுக்கு (ஆன்மாவுக்கு) அணிவிக்கப்படும் அணிகலன்கள் என்ற உருவகம் இவரிடமிருந்து வெளிப்பட்டதாகும். சுருங்கக் கூறின்: பெருமாள் ஒப்பனைப்பிரியர்!!

oOo

அண்மையில், மதுரையில் நடந்த திரு மீனாட்சியம்மன் திருமண நிகழ்வின் போது, "மாசறு பொன்னே வருக" என்ற அருமையான பாடல் பின்னணியில் ஒலிக்க, அம்மனை மணப்பெண் திருக்கோலத்தில் எடுத்துச்சென்ற காணொளி சமூகவலைதளங்களில் பெரிதும் பகிரப்பட்டு, அன்பர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டது. வைணவ அம்பிகள் சும்மாவிருப்பரா? நம்பெருமாளை தூக்கிக்கொண்டு வந்துவிட்டனர்! 😊

திரு அண்ணாமலையாரின் இராஜகோபுரத்தை, 450 அடி நீளமுள்ள பூ மாலை ஒரு விளக்கீடு திருவிழாவின்போது அழகு செய்தால், அதற்கடுத்து வரும் வைகுண்ட பதிற்றொருமையின் போது, திரு அரங்கநாதரின் இராஜகோபுரத்தை 495 அடி நீளமுள்ள பூ மாலை அழகு செய்தால்தானே நீதியாகும்? 😉

(அம்பிகள் எனில் தம்பிகள் அல்ல. பேருயிர் எனும் கடலில் மிதக்கும் சிற்றுயிர் தோணிகளாகும்.)

oOOo

சட்டைமுனி சித்தர் பொற்பாதம் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Monday, April 25, 2022

"இதான் நம்ம பொளப்பு, சாமி!"


(தயவு செய்து பொறுமையாகப் படிக்கவும். சில சொற்களையே திரும்பத் திரும்ப பயன்படுத்தியுள்ளதுபோலத் தோன்றும். மேலோட்டமாக படித்தால் கிறிஸ்டோபர் நோலானின் "டெனட்" திரைப்படம் பார்த்தது போலிருக்கும்! 😊)

1. பொளப்பு - வேலை / தொழிலைக் குறிக்க பாமர மக்கள் பயன்படுத்தும் ஒரு சொல். பிழைப்பு என்ற சொல்லின் மருவு. இந்த பிழைப்பு "பிழை"-யிலிருந்து வருகிறது. பிழை எனில் தவறு என்று பொருள். அதாவது, வேலை / தொழில் என்பது தவறு செய்வதற்கு சமம் என்றாகிறது. இது சரியா?

2. அடுத்து, திருப்பேரெயில் தேவாரப் பாடலைப் பார்ப்போம் (இத்தலம் திருவாரூருக்கு அருகிலுள்ளது; அப்பர் பெருமானால் 🌺🙏🏽🙇🏽‍♂️ பாடப்பெற்றது):

உழைத்துந் துள்ளியு முள்ளத்து ளேயுரு
இழைத்து மெந்தை பிரானென் றிராப்பகல்
அழைக்கு மன்பின ராய அடியவர்
பிழைப்பு நீக்குவர் பேரெயி லாளரே

"திருப்பேரெயில் பெருமானை வணங்கினால் பிழைப்பு (வேலை / தொழில்) போய்விடும்" என்பது நேரடி பொருள். இது சரியா?

3. அடுத்து, ஒருவர் உயிர் போகும் நிலையிலிருந்து மீண்டு வந்தால் என்ன சொல்கிறோம்? "அவரு பொளச்சிகிட்டாருங்க". "பிழைத்துக் கொண்டார்" என்பதன் மருவு. இங்கும் தவறு என்ற பொருள் தரும் பிழை என்ற சொல்லையே பயன்படுத்துகிறோம். உயிர் பிழைப்பது தவறா?

"பொளச்சிகிட்டாருங்க" என்பதற்கு பதில் "தப்பிச்சுட்டாருங்க" என்றும் கூறுவோம். தவறு என்பது தெரியாமல் செய்யும் குற்றம். தப்பு என்பது தெரிந்து செய்யும் குற்றம். எனில், உயிர் பிழைப்பது என்பது தெரிந்தே செய்யப்படும் குற்றமா?

4. அடுத்து, ஒருவர் இறந்துபோனால் "அவரு தவறிட்டாருங்க" என்போம். இறப்பது தவறாகுமா? அல்லது, இறப்பது என்பது தெரியாமல் செய்யும் குற்றமா?

மேலே, உயிர் பிழைப்பதையும் (பொளச்சிகிட்டாருங்க) தவறு என்று கண்டோம்! இப்போது, இறப்பதையும் (தவறிட்டாருங்க) தவறு என்று காண்கிறோம்!! 😁 எது சரி?

oOo

நம்மைப் பற்றிய உண்மையான அறிவைப்  (மெய்யறிவு) பெற்று, நமது தன்மையுணர்வில் நிலைபெறுவதை பிறப்பென்றும், தன்மையுணர்விலிருந்து விலகுவதை இறப்பென்றும் விளக்கியிருக்கிறார் பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️. இதே பார்வை நமது முன்னோர்களிடமும் இருந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே பிழை, தவறு & தப்பு ஆகிய சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர். தன்மையுணர்வில் நிற்பதை சரியென்றும், அதிலிருந்து விலகுவதை தவறென்றும் கருதியுள்ளனர்.

இனி, முதலில் பார்த்த கேள்விகளை மறுபடியும் பார்ப்போம்.

oOo

1. ஒரு வேலையை செய்ய முனையும் போது, நமது தன்மையுணர்வை விட்டு விலக வேண்டியிருக்கும். அப்படி விலகுவதென்பது நம்மையும் அறியாமல் நடக்கும். அறியாமல் செய்யும் குற்றம் தவறாகும். எனவே, விலகுதல் - தவறுதல் - தவறு - பிழை - பிழைப்பு - பொளப்பு!

"இதான் என் பொளப்பு" - "இதுதான் என் பிழைப்பு" - "இதுதான் என்னை எனது தன்மையுணர்விலிருந்து விலகச் செய்கிறது."

2. தன்னை வணங்குபவரின் பிழைப்பை நீக்கிவிடுவார் திருப்பேரெயில் பெருமான் - தன்மையுணர்விலிருந்து விலகவேண்டிய தேவையை நீக்குவார். அல்லது, திருநீற்று நிலையை (சமாதி) வழங்குவார்.

3. பொளச்சிகிட்டாருங்க & தப்பிச்சுட்டாருங்க

இறப்பைக் கொண்டாடும் ஓர் இனம் உலகில் உண்டெனில் அது தமிழினம்தான்!! மற்ற இனங்கள் அழுது புலம்பிக்கொண்டிருக்க (நயவஞ்சக உலகக்கொல்லிகளான பரங்கியர்கள் சிறப்பு உடை உடுத்திக்கொண்டு அழுவார்கள்! ☺️), இவர்கள் மட்டும் தாரை, தப்பட்டை, வெடி & ஆட்டம் என்று கொண்டாடுவார்கள்.

இறப்பென்றால் என்ன? "உடல் இறந்துவிட்டது" என்பது காண்பவரின் பார்வையில். இறந்தவரின் பார்வையில்? உடல் நீங்கிவிட்டது. உலகக்காட்சிகள் தொடர்ந்து தோன்றலாம்; தோன்றாமலும் இருக்கலாம். ஆனால், அவர் மட்டுமிருக்கிறார். தெள்ளத் தெளிவாக தன்னை உணர்கிறார். இது நாள் வரையில், அவர் தூக்கிய காவடியின் ஒரு பகுதியான உடல் தானாக கழன்றுவிட்டது. மீதமிருக்கும் பகுதியான பற்றுகளை கழற்றிக் கொள்ளும் அரிய வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. ஆனால், கழற்றுவாரா?

🔸 தேவையான முதிர்ச்சியிருந்தால் அப்படியே நிலைபெற்றுவிடுவார். அன்னை மாயையோ (அல்லது, மாயக்கண்ணனோ) இனி ஏதும் செய்துவிட முடியாது.

🔸 தேவையான முதிர்ச்சியில்லையெனில் ... கோவிந்தா! அந்த நிலையிலிருந்து விலகி / தவறி மீண்டும் உடல்-உலக மாய உலகிற்கு திரும்பிவிடுவார். விலகுதல் - தவறுதல் - பிழைத்தல் - பிழைத்துக்கொண்டார் - பொளச்சிகிட்டாருங்க.

🔸 தேவையான முதிர்ச்சியிருந்தும், பற்றுகளை விடும் துணிவில்லாமல் போனாலும் அவ்வளவுதான். மீண்டும் உலகிற்கு திரும்பிவிடுவார். தெரிந்தே திரும்புவார். தெரிந்து செய்யும் குற்றம்... தப்பு - தப்பித்தல் - தப்பிச்சுட்டாருங்க.

4. தவறிட்டாருங்க

நமதியல்பான தன்மையுணர்விலிருந்து விலகுவதே தவறாகும். வெறும் தோற்றமாத்திரமேயான இந்த உடல்-உலகிலிருந்து நமது இயல்பு நிலைக்கு மீள்வது (அதாவது, இங்கு இறப்பது) எவ்வாறு தவறாகும்?

அம்மன் வழிபாட்டினருக்கு அது தவறாகும்! அவர்களுக்கு திருநீற்று நிலையென்பது (சமாதி) பித்துப் பிடித்தலாகும்!! 

ஒரு பக்கம், தங்களது தல புனைவுக்கதைகளில் மெய்யறிவாளரை (சிவனை) பித்தனென்றும், திருநீற்று நிலையை பித்துப் பிடித்தலென்றும் சித்தரித்துவிட்டு, இன்னொரு பக்கம், தீ மிதித்தல், பால்குடம் சுமத்தல் போன்ற திருநீற்று நிலையை அடைய உதவும் சடங்குகளையும் நடத்திக் கொண்டிருப்பார்கள். 😊

இறந்தவரை "தவறிட்டாருங்க" என்றழைப்பது தவறாகும்.

(இன்றைய நிலையில், நியாயம், தர்மம், சடங்கு, சம்பிரதாயம், கடமை, குடும்பம், சாதி, சனம், சமூகம், நாடு, மக்களாட்சி, மெக்காலே கல்வி, கொள்ளை (வரி), வழிப்பறி (நெடுஞ்சாலை சுங்கவரி), எரிபொருள் என பல காதுகுத்துகள், பட்டை நாமங்கள் மூலம் நம்மிடமிருப்பதை உருவ முயற்சிக்கும் இவ்வுலகை நல்லது என்று நினைப்பவன்தான் பித்துப் பிடித்தவன்!!)

oOo

வேலை என்ற சொல் கடலையும் குறிக்கும். கடலானது எப்போதும் சலித்துக் கொண்டேயிருக்கும். இதுபோன்று, மனதை சலிக்கவிடுவதற்குப் பெயர் வேலையாகும்!

வேலை செய்யாமல் - மனதை சலிக்கவிடாமல் - இருப்பதற்கு பெயர் ... ஓய்வு! இதில் வரும் "ஓய்" என்ற பகுதிக்கு சுருங்குதல் என்ற பொருளுண்டு. மனதை விரியவிடுவது வேலையென்றும், சுருக்கிக்கொள்வது ஓய்வென்றும் கொள்ளலாம்.

oOo

பகவானை சந்தித்த பலருக்கு, தன்மையுணர்வில் இருந்துகொண்டு ஒரு வேலையை எவ்வாறு செய்வது என்ற குழப்பம் இருந்துள்ளது. அவர்களுள் திரு அண்ணாமலை சுவாமிகளும் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஒருவராவார். ஒரு சமயம் இது பற்றி கேள்வியும் கேட்டுள்ளார். பகவான் பதிலளிக்கவில்லை. ஒரு 10 மணித்துளிகள் கழிந்த பிறகு, சிறு பெண்பிள்ளைகள் அடங்கிய ஒரு குழு வந்து, பகவானை வணங்கிவிட்டு, ஆடிப் பாடியது. அவர்களது பாடலின் உட்கரு: கண்ணனைப் பற்றிய சிந்தனையை விடாமல் பால் கறப்போமே!

அண்ணாமலை சுவாமிகளை திரும்பிப் பார்த்து பகவான் கூறினார், "நீ கேட்ட கேள்வியின் பதில் இதுதான்"!

(கண்ணன் - உள்ளபொருள் - தன்மையுணர்வு. பால் கறத்தல் - வேலை செய்தல். எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும், தன்மையுணர்விலிருந்து விலகாமல் இருக்கவேண்டும் என்பது பொருள்.)

oOo

மெய்யியலே அன்னைத் தமிழின் மூலக்கூறுகளில் தலையாயதாகும் என்ற கூற்றுக்கு, மிகச்சிறிய எடுத்துக்காட்டுத்தான் இந்த இடுகை. 🙏🏽

oOOo

என்றுமுள தென்தமிழ் வாழ்க 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Sunday, April 17, 2022

பருவாயில்லை / பரவாயில்லை என்பது தமிழ்ச் சொல்லே!!

கேள்வி: 'பரவாயில்லை' என்பது தமிழ்ச் சொல் அல்ல. இதற்கு சரியான தமிழ்ச் சொல் எது?

பதில்: உண்மையில் பரவாயில்லை என்பது அழகிய தமிழ்ச்சொல்லே.
இதிலிருந்துதான் பர்வாநகி என்ற பிறமொழிச் சொல் பிறக்கிறது.

பரு, பருவரல் ஆகிய தமிழ்ச்சொற்கள் துன்பம் / துன்புறுதல் என்னும் பொருளைத் தருபவை. இவை சங்க இலக்கியத்திலும் திருக்குறளிலும் பயின்று வருபவையே. சில சான்றுகள் மட்டும் கீழே:

🔸 பருவரல் எவ்வம் களை மாயோய் என - முல் 21

🔸 இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே - நற் 70/9 

🔸 நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம் - நற் 78/6 

🔸 இடும்பை கொள் பருவரல் தீர கடும் திறல் - புறம் 174/4 

🔸 இமைப்பின் பருவரார் - குறள்: 1126

🔸 பருவந்து பாழ்படுதல் இன்று - குறள்: 83.

பரு + ஆய் + இல்லை = பருவாயில்லை = துன்பமாக இல்லை.

பருவாயில்லை என்பதே சரி. பரவாயில்லை என்பது மருவு.

"உங்களுக்குக் கடினமாக இருந்தால் விட்டுவிடுங்கள்"என்று ஒருவர் கூற,

"இல்லை, இது எனக்குத் துன்பமாக / கடினமாக இல்லை" என்று நாம் கூறுவதற்காக,

"பருவாயில்லை / பரவாயில்லை" என்று கூறுவது நம் வழக்கம். இதில் வரும் "இல்லை" என்னும் சொல்லானது பிறமொழியில் "நகி" என்று மாறி, பருவாநகி / பர்வாநகி என்றாகிவிட்டது. எனவே, பருவாயில்லை என்பது தமிழ்ச்சொல்லே! இனிமேல்,

பருவாயில்லை என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறுங்கள்.

-- 'திருத்தம்' பொன். சரவணன்

Thursday, April 14, 2022

அண்மையில், உலக நன்மைக்காக, சிருங்கேரியில் 10,008 தாமரை மலர்கள் கொண்டு சிவப்பரம்பொருளை பூசித்தனர் -- செய்தி

பூசைக் காணொளி: https://youtube.com/shorts/yk5NybOTgxg?feature=share

10,008 தாமரை மலர்கள் என்ன, 10,00,00,008 மலர்கள் கொண்டு பூசித்தாலும், பூசையின் பொருள் புரியாவிட்டால் எந்த பயனுமில்லை!

🌷 பூ - நமக்கு தோன்றும் எண்ணம்

🌷 மலர்ந்து விரிந்த தாமரைப்பூ - பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்படும் "நான் யார்?" போன்ற நுட்பம் / அவர்கள் காட்டிய வழி

பகவான் போன்ற எண்ணற்ற மெய்யறிவாளர்கள் தோன்றி, இறைவனை அடைய எண்ணற்ற வழிகளை காண்பித்துள்ளனர். அவை யாவும் நம்மை அழைத்துச் செல்வது ஓர் இறையிடமே! இதுவே, 10,008 தாமரை மலர்களால் சிவப்பரம்பொருளுக்கு நடத்தப்படும் பூசையின் உட்பொருளாகும்.

எல்லா வழிகளும் ஓர் இறையிடமே அழைத்துச் செல்லும் என்பதை புரிந்துகொண்ட பின்னர், நமக்கேற்ற மெய்யாசிரியரிடம் தஞ்சமடைந்த பின்னர், அவர் காட்டிய வழியில் நம்பிக்கையுடன் பயணிப்பதே இந்த பூசையின் உட்பொருளை உணர்வதால் விளையக்கூடிய பயனாகும்.

oOOo

ஏன் இந்த பூசையை "உலக நன்மைக்காக" நடத்தியுள்ளனர்?

மதங்களின் பெயரால், குறிப்பாக பாலைவனப் பகுதியில் தோன்றிய 2 மதங்களால், உலகம் பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அதை தடுத்து, உலகை அமைதிப் பாதைக்கு திருப்பும் முயற்சியே இந்த பூசை. இறையுருவத்தின் மேல் விழும் ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு வழியைக் குறிக்கும். "எல்லா வழிகளும், இறுதியில், அழிவற்ற பரம்பொருளிடம் கொண்டுசேர்ப்பதால், எல்லோரும் அவரவர் வழியில், நம்பிக்கையுடன், அமைதியாக பயணிப்பதே எல்லோருக்கும் சிறந்தது" என்ற செய்தி எல்லோரையும் சென்றடைந்திடவே இந்த பூசையை நடத்தியுள்ளனர்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Monday, April 11, 2022

அசோக மரக்காட்டில் இருந்தபோது அன்னை சீதை அமர்ந்திருந்த கல்!!


இலங்கையிலிருந்த அசோக மரக்காட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தபோது, திரு சீதை அன்னை இக்கல்லின் மீது அமர்ந்திருந்தார் என்பது தொன்நம்பிக்கை. பன்னெடுங்காலமாக, இலங்கையில் வழிபாட்டிலிருந்த இந்த கல் தற்போது அயோத்திக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. திரு இராமர் கோயில் கட்டி முடித்தபின், அங்கு இந்த கல் நிறுவுப்படும்.

oOOo

மெய்யியல் கணக்கில்:

🌷 இராவணன் என்பது நம் மனம். அவரது பத்து தலைகள் என்பது ஐம்புலன்களையும், ஐங்கருவிகளையும் குறிக்கும். இவற்றை மேற்கொண்டு விரித்தால், நமதுடல், நாம் காணும் உலகம் என்று விரியும்.

🌷 இராமன் என்பது நாமே - நமது தன்மையுணர்வே.

🌷 நம்மைப் பற்றிய மெய்யறிவு கிடைத்தவுடன் என்ன நடக்கிறது என்பதை நமது மாமுனிவர்கள் பலவிதமாக பதிவு செய்துள்ளனர். இராம காதையை எழுதியவர், "[வேட்கை] தணிதல்" என்று உருவகப்படுத்தியுள்ளார்.

பல காலம், தேடியலைந்த பொருள் கிடைக்கும்போது நமக்கு எப்படியிருக்கும்? "அப்பாடி" என்றிருக்கும்.

இந்த அப்பாடி என்ற உணர்வுதான் தணிதல் - சீதை - எனப்படுகிறது!

oOOo

இராமர்-சீதை வாழ்ந்தது திருத காலம். ஏறக்குறைய 17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர். இதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், பன்னெடுங்காலத்திற்கு முன்னர் என்று எடுத்துக் கொள்ளலாம்.

வைணவம் உருவாக்கப்பட்டது ஏறக்குறைய 1,300 ஆண்டுகளுக்கு முன்னர். அவர்களது நாமச்சின்னம் உருவாக்கப்பட்டது ஏறக்குறைய 850 ஆண்டுகளுக்கு முன்னர். எனில், அன்னை அமர்ந்திருந்த கல்லுக்கு எப்படி வைணவச்சின்னத்தை அணிவிக்கலாம்?

இராம பிரானுக்கும் திரு வசிட்ட மாமுனிவருக்கும் 🌺🙏🏽🙇🏽‍♂️ இடையே நடந்த உரையாடல் "யோகா வாசிட்டம்" என்ற அத்வைத நூலாகியுள்ளது. வைணவமே இல்லாத காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு எப்படி வைணவச்சின்னத்தை அணிவிக்கலாம்?

oOOo

கைப்புள்ள கட்டதுரை போன்று "இராவணன் இப்படி அழுதான்", "அப்படி பயந்தான்" என்று இன்றுவரை ஆரியர்கள் புனைவதைப் பார்த்தால், பேரரசர் இராவணன் அவர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்திருக்கிறார் என்பது உறுதியாகிறது!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, April 9, 2022

குழந்தைகளுக்கு அழகு தமிழில் பெயர் சூட்ட உதவும் நூல்: நடுவண் தமிழாய்வு நிறுவனம் விரைவில் வெளியிடுகிறது!



👏🏽👏🏽👌🏽👍🏽🙏🏽

oOOo

வடக்கிலிருந்தும், வெளியிலிருந்தும் ஊடுருவிய கூட்டங்களினால் நம் தமிழ் பெயர்கள் அழிந்துபோயின. வடக்கிலிருந்து வந்த கூட்டத்தின் "தமிழ் பெயர்கள் அழிப்பு" கைங்கரியத்தின் தோற்றுவாய்:

ஒருவரை இன்னொருவர் தேடி வருவாராம். வருபவர் வருவதற்குள் காத்திருந்தவர் இறந்துவிடுவாராம். தேடி வந்தவர் வந்து பார்க்கும்போது, இறந்தவரின் கை விரல்களில் மூன்று மடங்கியிருக்குமாம். வந்தவர் ஏனென்று கேட்பாராம். அவை அவரின் நிறைவேறாத ஆசைகள் என்று அந்த ஆசைகளை பட்டியலிடுவாராம் அருகிலிருப்பவர். அவர் சொல்ல சொல்ல, இறந்த உடலின் விரல்கள் ஒவ்வொன்றாக நிமிருமாம். அதிலொன்று, அழிந்து கொண்டிருக்கும் அவர்களது இன முனிவர்களின் பெயர்களை மக்களுக்கு சூட்டி, அவற்றை அழியாவிடாமல் காப்பதாம். இவற்றையெல்லாம் கேட்டு, "எல்லாவற்றையும் நிறைவேற்றி, தொழிலை பன்மடங்கு வளர்த்து, P&L அக்கவுண்டை கருப்பிற்கு மாற்றுவேன்!" என்று வந்தவர் உறுதிபூணுவாராம்! 🥱

இப்படி உருக்கமான பிட்டுகளைத் தயாரித்து, மக்களின் மதி மயக்கி, வாழ்வளித்த மண்ணின் அடையாளங்களை அழிக்கும் ஈனச்செயல்களை எந்த தமிழனும் (சைவனும்) என்றும் செய்யமாட்டான். அவனுக்குள் அவனது பெரியோர்கள் விட்டுச்சென்றுள்ள அடித்தளம் அப்படிப்பட்டது! 💪🏽