Showing posts with label சிவகுடும்பம். Show all posts
Showing posts with label சிவகுடும்பம். Show all posts

Friday, February 4, 2022

சிவகுடும்பம் - சிறு விளக்கம்


🌷 காண்பான் - அப்பன்
🌷 காணப்படும் காட்சி - அம்மை
🌷 அறிவு - பிள்ளையார்
🌷 மனம் - முருகர்

🔸 காண்பானில்லாமல் காட்சியில்லை. அப்பனில்லாமல் அம்மையில்லை.

🔸 காட்சியில்லாமல் காண்பான் உண்டு. ஆழ்ந்த உறக்கத்தில் காட்சிகள் தோன்றாவிட்டாலும், நாமிருக்கிறோம்.

🔸 நம்மிடமிருக்கும் அறிவு அத்தனையும் உலகிலிருந்து கிடைத்தவைதான். இதனால்தான், பிள்ளையார் அம்மையிடமிருந்து பிறந்தவராகிறார்.

🔸 "நான் என்ற எண்ணம் தோன்றிய பிறகே உடலுலக காட்சிகள் தோன்றுகின்றன" என்று அருளியிருக்கிறார் பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️. இந்த நான் என்ற எண்ணமே மனம் எனப்படும். இதனால்தான், முருகர், அம்மையின் தொடர்பின்றி, அப்பனிடமிருந்து பிறந்தவராகிறார்.

நான்கில் தொடங்கும் மெய்யியல் பயணம், அடுத்து உமைமுருகுஈசன் என மூன்றாக குறைந்து, மேலும் அம்மையப்பர் என இரண்டாக சுருங்கி, இறுதியில், சிவத்தில் ஒன்றாகிவிடும்!

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே

-- திருமந்திரம்

🌺🙏🏽🙇🏽‍♂️

(இணைப்பு படம் முகநூலில் கிடைத்தது)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮