Showing posts with label இறைவரிசை. Show all posts
Showing posts with label இறைவரிசை. Show all posts

Tuesday, May 12, 2020

ஒரு இறைவரிசையை கொண்டு சாதித்த நம் பெரியோர்கள்!!



சென்னையில் ஒரு இந்து அண்ணாச்சிக் கடையில் மேலேயுள்ள 🤢🤮-வியை நேற்று கண்டேன்!!

நம்மைக் கொன்று குவித்தவர்களின், சீரழித்தவர்களின், சூறையாடியவர்களின், கொள்ளையடித்தவர்களின் ஏமாற்றுவேலைகளுக்கு பேருண்மைகளை பிரதிபலிக்கும் நமது இறையுருவங்களுடன் சமமான இடம்!! 😡

மதச்சார்பின்மை!! 🤬
எம்மதமும் சம்மதம்!!! 🤬🤬

இது போன்ற காது குத்துகள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் உணவையும் சாக்கடைகளையும் சமமாகக் காணும் பகுத்தறிவு. "எரிகின்ற வீட்டில் பிடுங்கிய வரை லாபம்" என்ற வழியில் நம்மை வழிநடத்திச் செல்லும் ஆட்சியாளர்கள். எங்கிருந்து பேருண்மைகளைப் பற்றிய சிந்தனை முளைக்கும்?

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

ஒரு வியாபாரம் நடக்குமிடத்தில் முதலாளிக்கு பின்புறம் அவரது தலைக்கு மேல், இடமிருந்து வலமாக, 5 இறையுருவங்கள் இருக்கும்: 

🌺 முருகப்பெருமான்
🌺 நாமகள்
🌺 பிள்ளையார்
🌺 செல்வமகள்
🌺 திருமலைப் பெருமாள்

இது தான் சரியான வரிசை. பகுத்தறிவு பெருகும் வரை இப்படித் தான் இருந்தது. இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. இன்றுள்ள வரிசையும், அதற்கு மக்கள் கற்பிக்கும் பொருளும்... 🤢 இன்று பட விற்பனையாளர்களிடம் சென்று கேட்டால் கூட மேற்சொன்ன வரிசையில் படங்கள் இருக்காது!! செய்து தரச் சொன்னால் மட்டும் தான் கிடைக்கும். 😔

மேற்சொன்ன இறையுருவங்கள் யாவும் இவ்விடத்தில் பேருண்மைகளை உணர்த்தவில்லை!!! பின்னர் எதை உணர்த்துகின்றன?

🙏🏽 முருகப்பெருமான் - நல்ல மனம்
🙏🏽 நாமகள் - சரியான கல்வி
🙏🏽 பிள்ளையார் - நல்லறிவு
🙏🏽 செல்வமகள் - நல்ல செல்வம்
🙏🏽 திருமலைப் பெருமாள் - போதுமென்ற மனது

கெட்ட மனம் கொண்டவனோ, சரியான கல்வி இல்லாதவனோ, முட்டாளோ / கெட்ட புத்தி உள்ளவனோ தொழில்களை நடத்தினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது நாமெல்லோரும் அறிந்ததே. அநியாயமான செல்வமும் இறுதியில் பெரும் துன்பத்தில் தான் முடியும்.

இறுதியாக, பெருமாள். உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்தாலும், கருவறைக்குள் அவரது உணவாக செல்வது... உடைந்த பானையில் சிறிதளவு தயிர்சாதம்!! அவ்வளவே. "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து"! பெருமாள் உணர்த்தும் இந்த குணம் மணிமுடியில் பதிக்கப்பட்ட இரத்தினம் போன்றது!! 👏🏽👏🏽👏🏽😍😌

உலகில் தொழில் முனைவோர் அனைவரிடமும் இந்த இறைவரிசை உணர்த்தும் குணங்கள் இருந்திருப்பின் உலகம் இன்று இறந்து கொண்டிருக்காது. 

இந்த இறைவரிசை, தொழில்முனைவோருக்கு மட்டுமல்ல. தனிக்குடும்பம் முதல் அரசு வரை அனைத்து அமைப்புகளுக்கும் பொருந்தும். பெற்றோர் சரியில்லாத குடும்பமும், பரம்பரையும் இறுதியில் என்னவாகின்றன? அநியாயமான ஆட்சியாளனைக் கொண்ட நாடு என்னவாகிறது? உலகை ஆளவேண்டும் என்ற சீனாவின் பேராசையால் இன்று உலகம் என்னவாயிற்று?

💥💥💥💥💥

நாம் எல்லோரும் ஏதாவதொரு அமைப்புக்குள் வருவோம், குறைந்த பட்சம் குடும்பம் என்ற அமைப்புக்காவது தலைமை தாங்குவோம். அனைவருக்கும் தனித்தனியாக பாடம் நடத்திக் கொண்டிருக்க முடியாது. அனைவரையும் எல்லா நேரங்களிலும் கண்காணித்து கொண்டிருக்கவும் முடியாது. எனவே தான் சொல்ல வேண்டியதை இறையுருவங்களை வைத்து சொல்லியிருக்கிறார்கள் நம் பெரியோர்கள். இறைவரிசை வைக்கப்பட வேண்டிய இடத்தில் வைக்கப்பட்டது. அனைவராலும் பார்க்கப்பட்டது. அவை உணர்த்தும் செய்திகள் ஒவ்வொரு தலைமுறையிலும் சிலரால் உணரப்பட்டது. அப்படி உணர்ந்தவர்களால் மற்றவர்களுடன் பகிரப்பட்டது. எல்லாம் ஒரு ஒழுங்கில் சென்றது. 👏🏽👍🏽👌🏽

ஒருபட வரிசையைக் கொண்டு எவ்வளவு சாதித்திருக்கிறார்கள் நம் பெரியவர்கள்!! 🙏🏽 அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்த பட்ச நன்றிக்கடன்... இவ்வரிசையுடன் கண்டதையும் சேர்த்து குப்பையாக்காமல் இருப்பதே! 👊🏽

கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽