Showing posts with label இந்து_ஆன்மீக_மற்றும்_சேவை_கண்காட்சி. Show all posts
Showing posts with label இந்து_ஆன்மீக_மற்றும்_சேவை_கண்காட்சி. Show all posts

Thursday, August 11, 2016

சில முக்கிய தகவல்தாள்கள் - இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சியிலிருந்து

நடந்து முடிந்த இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சிக்கு சென்றிருந்த போது எனக்கு கிடைத்த விளம்பர மற்றும் தகவல் தாள்களில் சில முக்கியமானவற்றை இங்கே இணைத்துள்ளேன்:



🌼 ஸ்ரீஸ்ரீ-யில் கிடைத்த Ecozyme தயாரிப்பு மற்றும் உபயோகிப்பு பற்றிய தகவல் தாள். எனக்கு கிடைத்த தகவல்களிலேயே மிக முக்கியமானதாக நான் கருதுவது இதைத் தான். 👌 இதைக் கொண்டுதான் ஸ்ரீஸ்ரீ சேவைக் குழுமம் டில்லியில் ஓடும் யமுனை நதியினை சுத்தப்படுத்திக் கொண்டிடுக்கிறது எனக் கேள்விப்பட்டேன்.



🌼 ஈஷாவின் பசுமைக்கரங்கள் திட்டம் பற்றிய தகவல்தாள். இவர்களிடம் எங்கும் மலிந்து கிடைக்கும் தாவரவகைகள் முதல் மிகவும் அரிதான தாவரவகைகள் வரை பல்வேறு வகையான தரமான கன்றுகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன. சென்னையில் மாதவரம் பால் பண்ணைக்கருகில் அவர்களது விற்பனையகம் உள்ளது. செங்கல்பட்டில் அவர்களது பெரிய விற்பனையகம் இருக்கிறது.

இன்று இப்புவியில் வாழும் ஒவ்வொரு மனிதனின் தலையாய கடமை நம் புவியின் வெப்பத்தையும் & மாசையும் குறைப்பதாகும். நகர (நரக) வாழ்க்கையில் வாழ்ந்துகொண்டு, "தனது வேலைகளை எவ்வளவு தூரம் தானே செய்யாமல் மற்றவர்களை வைத்து செய்கிறானோ அவனே பெரிய ஆள்" என்ற கொள்கை உடைய சமூகத்தில் வாழ்ந்துகொண்டு நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் மரங்களை நட்டு வளர்ப்பதே! 😔


🌼 திருவெண்காட்டிலிருந்து செயல்படும் சிவா நர்சரி கார்டனின் தகவல்தாள். "மேற்சொன்ன பரந்த கொள்கைகள் எல்லாம் எனக்கில்லை. மரம் வைப்பதால் எனக்கென்ன லாபம்?" எனக் கேட்கும் சுயநல பார்ட்டிகளையும் மரம் வைக்கத்தூண்டும் ஒரு வழிதான் நட்சத்திரம், ராசி, கோள், திசை முதலிய தூண்டில்கள். 😀 எப்படியாவது புவிப்பந்தின் பசுமைப் போர்வை வளர்ந்தால் நல்லது!


🌼 "இணையத்தில் சிவபெருமானுக்கு ஒரு திருக்கோயில்" - என்ன ஒரு கம்பீரமான எழுச்சித்தரும் வாசகம். 👏👍 இந்த வாசகத்துக்குரிய இணையதளம் (இணைய கோயில்) - www.shaivam.org. இதற்குப் பின்னணியில் இருப்போர் பாராட்டப்பட வேண்டியவர்கள். அதற்கு நாம் செய்யவேண்டியதெல்லாம் அவர்களது உழைப்பை (இணையதளத்தை) உபயோகப்படுத்துவதே! 🙏

🔯 திருச்சிற்றம்பலம் 🔯

posted from Bloggeroid