Tuesday, October 1, 2019

"இரணியனுக்கு அசுர பலத்தைக் கொடுத்தது பிரம்மா" என்பதின் பொருள்...


(தினமலர் - ஆன்மீக மலர் - 28/09/2019)

☀️ இரணியன் - "நான் இன்னார்" என்னும் அகந்தை. இந்த அகந்தை தோன்றி, உரமேறி, மிகுந்த உறுதியுடன் நிலைத்து நிற்க காரணம் நம் உடல் முதற்கொண்டு, நாம் காணும் இவ்வுலகம் தான். நிலையற்றதும், இருப்பற்றதுமான இவ்வுலகம் திரையில் தோன்றும் காட்சிகள் போன்றவை. நாமோ திரை போன்றவர். திரை தான் உண்மை. காட்சிகள் உண்மையல்ல. ஆனால், இப்படி நாம் உணர்வதில்லை. காணும் நம்மை மறந்து, காட்சிகளை உண்மையென்று நம்புகிறோம். படைப்பின் திறன் அப்படி. 

படைப்பு அருமையாக இருப்பதால், காட்சிகள் கோர்வையாக இருப்பதால், புலன்களுக்கு வரும் தரவு மிகச் சரியாக இருப்பதால், இதெல்லாம் உண்மையென்று அகந்தை ஆணித்தரமாக நம்புகிறது. எனவே தான், அகந்தைக்கு அசுர பலம் கொடுத்தது படைப்பு (பிரம்மா) என்று உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

☀️ பிரம்மாவின் 4 தலைகள் - 4 திசைகள். எல்லாவிதமான படைப்புகளுக்கும் அடிப்படை 4 திசைகளில் இருந்து நாம் கண்டவை & கேட்டவை.

☀️ நரசிம்மம் - ந+ர+சிம்+ஹ - பற்றை விட்டால் பற்றற்றவன் பற்றுவான். பற்றற்றவன் - பரம்பொருள்.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼

No comments:

Post a Comment