Wednesday, April 24, 2024

அயோத்தியின் பட்டை நாமங்கள்!!

|/ இராமனுக்கு பருத்தியாடை

தெலுங்கர் இராமானுஜர், 8-9 நூற்றாண்டுகளுக்கு முன்னர், "மார்கழி திங்கள் குளிரிலிருந்து திருவரங்கம் பெருமாளை காக்க வெந்நீரால் குளிப்பாட்டுவோம்; கம்பளியாடை போர்த்துவோம்" என்று தொழிலை தொடங்கிவைத்தார். இன்றுவரை அந்த நுட்பத்தின் (டெக்னிக்) "மவுசு" குறையவில்லை! 😏 அதன் தொடர்ச்சிதான், "இராமனுக்கு வெயில் நேரத்தில் பருத்தியாடை அணிவித்தல்" என்பது.

மண்சிலைக்கு (திருவரங்கம் பெருமாள்) குளிருமா? கற்சிலைக்குதான் (அயோத்தி இராமன்) வியர்க்குமா?

திருவரங்கமாவது உயிர்ப்புள்ள திருக்கோயில். பெருமாள் சிலைக்கு கீழே, திரு சட்டைமுனி சித்தர் திருநீற்று நிலையிலுள்ளார். அயோத்தியிலிருப்பது உயிரற்ற கோயில். அங்கு எப்பெருமானும் திருவிடம் (அசுரத்தில், சமாதி) கொள்ளவில்லை. அப்படியே ஒரு பெருமான் திருவிடம் கொண்டிருந்தாலும், மேலே வைக்கப்பட்டிருக்கும் அடையாளச் சிலைக்கு செய்யும் எதுவும், கீழேயுள்ள பெருமானை பாதிக்காது.

பருவத்திற்கேற்ற ஆடையணிவிப்பது என்பது மக்களை கவர்ந்திழுப்பதற்கான ஒரு விற்பனை நுட்பம் மட்டுமேயாகும். அதை காண்பதால் அன்பர்களுக்கு ஒரு மெய்யியல் (அசுரத்தில், ஆன்மிகம்) பயனும் கிட்டாது.

|/ இராமன் மீது படும் பகலவனின் ஒளி

அன்று, பகலவனின் நகர்வைக் கணக்கிட்டு, அதற்கேற்றவாறு கட்டடங்களை கட்டி, ஒரு குறிப்பிட்ட நாளில் / குறிப்பிட்ட வேளையில் பகலவனின் ஒளி இறைவடிவத்தின் மீது படும்படி செய்தார்கள். இன்று, கண்ணாடி & ஆடிகளை (லென்ஸ்) பயன்படுத்தி, குழாய்கள் வழியாக ஒளியை, தேவையான இடத்திற்கு கொண்டுவருகிறார்கள். எது கடினமான தொழிற்நுட்பம்? எதற்கு அதிக மூளைத்திறன் வேண்டும்? எது பெரிதும் போற்றப்பட வேண்டும்?

மேலும், பகலவனின் ஒளி இறைவடிவத்தின் மீது பட்டாலென்ன? படாவிட்டாலென்ன? இதற்கும் மெய்யியலுக்கும் என்ன தொடர்புள்ளது? 

|/ இராமனுக்கு 1 மணி நேரம் ஓய்வு

அசுரர்கள் ஒரு கற்சிலைக்கு உயிரூட்டினார்கள் என்பது ஒரு மடங்கு நகைச்சுவை எனில், பல ஆண்டுகள் வாழ்ந்த ஒருவருடைய 5 வயது ஆதனை (அசுரத்தில், ஆன்மா) பிடித்து, அக்கற்சிலைக்குள் செலுத்தியுள்ளனர் என்பது பல மடங்கு நகைச்சுவையாகும்!! 😄 பராமரிப்பு பணிகளுக்காக இவர்களுக்கு ஒரு மணி நேரம் தேவைப்படலாம். அதை இராமனின் தலையில் சுமத்திவிட்டார்கள்.

பகவான் திரு இரமண மாமுனிவரின் உடல் இறக்கும் போது அதற்கு 70 வயது. பகவான் நிலைபேற்றினை அடைந்தவர். இன்றும் அங்கேயே இருப்புவர். இனியும் அங்கேயே இருப்பார். அன்பர்களின் வேண்டுகோள்களுக்கு செவிசாய்க்கும் அண்ணலான அவரது அருளைப் பெறும் நல்வினைப்பயன் நமக்கிருந்து, இன்று அவரை வேண்டினோம் என்றால், 144 ஆண்டுகள் முதிர்ச்சி கண்ட ஆதனாக வந்து ஆட்கொள்வார். 5 வயது ஆதனாக மீண்டும் வரமுடியாது.

இதே கணக்கு இராமனுக்கும் பொருந்தும் - அவரும் நிலைபேற்றினை அடைந்தவராக இருந்தால்!

oOOo

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, April 23, 2024

பொருள் புரியாமல் இறைபெயர்களை உருட்டுவதால் எந்த பயனுமில்லை!!

எனக்குத் தெரிந்த நபரொருவர், பின்வரும் அசுரச்செய்யுளை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் உருட்டிக் கொண்டிருப்பார்: 

ஓம் நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்

அவருக்கு நான் கொடுத்த விளக்கங்களின் ஒரு பகுதியை இச்சிறு இடுகையாக மாற்றியுள்ளேன்.

oOo

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொன்னால்தான் பயனளிக்கும் என்பது திரு மணிவாசகப் பெருமானின் வாக்காகும்.

🌷 நாராயணன் -> நீராய் இருப்பவன். நீர் -> பாற்கடல் -> மாறிக்கொண்டேயிருப்பது -> நமதுடல். நமதுடலாக இருப்பவன்.

🌷 வாசுதேவன் -> வசுதேவனின் மகன். வசு - ஒளி, நெருப்பு போன்ற 8 பொருட்களை குறிக்கும். அதாவது, நாம் காணும் யாவுமானவன்.

🌷 விஷ்ணு - எங்கும் நிறைந்திருப்பவன். காட்சிகள் தோன்றாத பகுதியென்று வையகத்தில் ஏதேனுமுள்ளதா? இல்லையல்லவா? எனவே, எங்கும் நிறைந்திருப்பவன்.

நாம் இவ்வுடல் என்பது பொய்யறிவு. நாம் இவ்வுடலல்ல என்பது மெய்யறிவு. இந்த மெய்யறிவை விடாது இறுகப் பற்றுவது நிலைபேறு (அசுரத்தில், சமாதி). இந்நிலையை அடையும்போது, மேற்கண்ட யாவும் பொய்த்துப் போகும். காட்சிகள் தோன்றாது. தோன்றினாலும் நம்மை பாதிக்காது. மாற்றம் என்பது இருக்காது. அதாவது, நாராயணனாகவும், வாசுதேவனாகவும் & விஷ்ணுவாகவும் இருக்கும் மாயைக்கு அங்கு வேலையிருக்காது.

✨ காண்பான் - சிவம் - நாம்.
✨ காணப்படுவது - அன்னை / பெருமாள் - நம்மை தவிர மீதமனைத்தும்.

நம்மை நாமுணர, நாம் செய்ய வேண்டியதெல்லாம்: சும்மா இருத்தலே!!

oOo

இராமன் என்பவன் தன்னை இராமனென்று உணர கண்ணாடி வேண்டுமோ?

-- பகவான் திரு இரமண மாமுனிவர்

இந்த "நெத்தியடி" அறிவுரையை கேட்டவுடன் அவரது மனம் அமைதியடைந்தது! 😌

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Saturday, April 20, 2024

வாசுகிப் பாம்புக்கு போதாத நேரம்! 😃

வாசுகியின் படிமம் கிடைத்துள்ளதெனில், அது இங்கு வந்து, வாழ்ந்து & இறந்துவிட்டது என்பது உறுதியாகிறது. எனில், அச்சமயத்தில் சிவபெருமானின் கழுத்தை யார் அணி செய்தார்கள்? வாசுகியின் பாடி-டபுளா? அல்லது, உடன் பிறந்த ஆதிசேஷனே பெருமாளுக்கும் சிவபெருமானுக்கும் ஓவர்டைம் பார்த்தாரா? 😆

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

திருட்டுப்பயல்களே!! இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள்?

🌷 வாசுகி - மனம் / மூச்சுக்காற்று

🌷 சிவபெருமானின் கழுத்தை அணி செய்யும்போது - மனம்

🌷 மந்தார மலையை கடையும் போது - மூச்சுக்காற்று

இனி, மந்தார மலையை கடைதலின் உட்பொருளை பார்ப்போம்:

🌷 பாற்கடல் - நமதுடல் / வையகம். மாறிக்கொண்டேயிருப்பதை குறிக்கும்.

🌷 மந்தாரமலை - பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து பெறப்படும் அறிவுரை.

🌷 மலையை தாங்கும் ஆமை - புலனடக்கம்

🌷 தேவர்கள் - நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி

🌷 அசுரர்கள் - நாம் வெளிவிடும் கரியமிலம்

🌷 கடைதல் - மெய்யாசிரியரிடமிருந்து பெறப்பட்ட அறிவுரையை செயல்படுத்துதல்.

🌷 முதலில் வெளிப்படும் நஞ்சு (தவ்வை / மூத்தவள் / மூதேவி) - அவரவர் வினைப்பயன்களின் படி வெளிவரும் எண்ணங்கள், அரிய அறிவு & திறமைகள். அசுரத்தில், சித்திகள்.

🌷 இறுதியில் வெளிப்படும் அமுது (மலர்மகள் / இளையவள் / ஶ்ரீதேவி) - நாமே உள்ளபொருள் என்ற மெய்யறிவு.

மொத்தத்தில், இக்கடைதல் நிகழ்வு வடக்கிருந்து, மெய்யறிவு பெறுதலை குறிக்கும்.

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Wednesday, April 17, 2024

மோடிக்காக சுண்டு விரலை இழக்கலாமா?

செந்நீரை காணிக்கையாக கொடுத்து, மோடி வெற்றி பெறவேண்டுமென்று வேண்ட வந்தவர், பெருக்கெடுக்கும் செந்நீரை அப்படியே காணிக்கையாக பயன்படுத்தி, தனது சுண்டுவிரல் மீண்டும் இணையவேண்டும், அல்லது, புதிய சுண்டுவிரல் முளைக்கவேண்டும் என்று வேண்டியிருக்கலாமே? 😏

மெய்யியலின் அடிப்படைகளை பற்றிய தெளிவில்லாததால் இது போன்ற முட்டாள்தனமான செயல்கள் நிகழ்கின்றன!

🌷 காளியன்னை - நான் எனும் நமது தன்மையுணர்வைத் தவிர மீதமனைத்தும். அல்லது, அசையும் யாவும் / தோன்றி மறையும் யாவும் / படைக்கப்பட்டது யாவும்.

🌷 காணிக்கை - செந்நீரை காணிக்கையாக்குதல், உடலின் ஒரு பகுதியை காணிக்கையாக்குதல், தனது தலையை தானே வெட்டிக்கொண்டு, மொத்த உடலையும் காணிக்கையாக்குதல் என யாவும் "உடலை விட்டுவிடு" என்ற சொற்றொடரிலிருந்து தோன்றியவையாகும்.

🌷 "உடலை விட்டுவிடு" எனில் "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணத்தை விட்டுவிடுதலாகும். உடலை வெட்டிக்கொண்டு துன்புறுவதோ / மாண்டு போவதோ அல்ல!

oOo

திருவிழா சமயங்களில் எல்லா அம்மன் கோயில்களிலும், சமயபுரம் போன்ற புகழ் பெற்ற திருக்கோயில்களில் எப்போதும், உடலுறுப்புகள் பொறிக்கப்பட்ட வெள்ளீயத் தகடுகள் விற்கப்படும். அன்பர்கள் அவரவர் வேண்டுதல்களுக்கு ஏற்ப அத்தகடுகளை 
வாங்கி, உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துவர். 

இன்று, உடலிலுள்ள குறையோ, அல்லது, பிடித்திருக்கும் நோயோ நீங்குவதற்காக அம்மனிடம் வேண்டிக்கொண்டு, அது நீங்கிய பின்னர், அவ்வுறுப்பை குறிக்கும் தகடை வாங்கி காணிக்கையாக செலுத்திவிடுகின்றனர். ஆனால், இதற்காக தோன்றியதல்ல இவ்வினைமுறை (அசுரத்தில், சடங்கு)! தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்வதற்காக தோன்றியது. பின்னர் மருவி, "தனக்குத்தானே தண்டனை வழங்கிக் கொள்வதற்காக" என்று மாறியது. பிறகு இன்னும் மருவி, இன்று, மேற்கண்ட வேண்டுதலாகிவிட்டது!

தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளல் என்ற கணக்கில்:

🌷 கண்ணை கொடுத்தல் - புறமுகப் பார்வையை விட்டு விடுதல். அதை விட்டுவிட்டால், மீதமிருப்பது "நான்" எனும் தன்மையுணர்வு மட்டுமே.

🌷 நாக்கை கொடுத்தல் - பேசுவதை விட்டு விடுதல். அதாவது, பேசாமலிருத்தல்.

🌷 காலை கொடுத்தல் - நகர்வை / அசைவை விட்டு விடுதல். அதாவது, மனதை அசையவிடாதிருத்தல்.

🌷 கையை கொடுத்தல் - "செயலை செய்பவன் நான்" என்ற எண்ணத்தை விட்டு விடுதல்.

🌷 தலையை கொடுத்தல் - "நான் இன்னார்" என்ற எண்ணத்தை விட்டு விடுதல்.

oOo

என்ன நடக்கிறது என்பதை மிக சுருக்கமாக, அழகாக, எளிமையாக விளக்கியருக்கிறார் நம் முப்பால் முனிவர்:

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும் 

-- திருக்குறள் #364

தூய்மை & வாய்மை ஆகிய இரு சொற்களும் உள்ளபொருளை (கடவுளை) குறிக்கும்.

வேண்டினால் வேண்டியது கிட்டும் (அதற்கான கூலியை கொடுத்த பிறகு). ஆனால், வேண்டாதிருந்தால் - அவா (ஆசை) அற்றிருந்தால் - மனதை அசைய விடாதிருந்தால்... நாமே உள்ளபொருளாவோம்!

"மோடி வெற்றி பெறவேண்டும்" என்று வேண்டினால் வேண்டியது நடக்கலாம். ஆனால், அப்படி வேண்டுவதினால் - அவா அடைவதால் - ஆசைப்படுவதினால் - மனதை அசைய விடுவதால் - நாம் மாசடைவோம். பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற மாசற்ற ஒருவருக்காக நாம் மாசடையலாம். ஆனால், மாசே வடிவான ஒரு அரசியல்வியாதிக்காக நாம் மாசடைவது... ஒரு சூதாட்டத்திற்காக வாழும் வீட்டையே பந்தயப் பொருளாக்குவதற்கு இணையாகும்!!

🌷 காலை கொடுத்தல் - நகர்வை / அசைவை விட்டு விடுதல். அதாவது, அசைவற்றிருத்தல்.