Friday, December 22, 2023

வைகுண்ட ஏகாதசி



🌷 வைகுண்ட ஏகாதசி - திரு நம்மாழ்வாரின் திருநாள்

🌷 பரமபத வாயில் வழியாக நம்பெருமாள் வெளிவருவது - அவரதுடல் இறக்கும் தருவாயில் மண்டையோடு பிளந்தது. இதை, "மண்டையோடு பிளந்து, அவர் வெளியேறினார்" என்று மாற்றிச் சொல்கிறார்கள். இது தவறாகும். மெய்யறிவு பெற்று, நிலைபேற்றினை அடைந்த அவர், எங்ஙனம் வெளியேறுவார்? எங்கு போவார்? போக்கும் வரவும் அவருக்கில்லை.

🌷 பரமபத வாயில் வழியாக வெளிவரும் நம்பெருமாள் - நம்மாழ்வாரை குறிக்கும். பெருமாளை குறிக்காது. பெருமாள் என்பது மனம், உடல் & வையகம் ஆகிய அசையும் பொருட்களாகும். நம்மாழ்வார் அசையாப் பொருளாவார்.

🌷 பரமபத வாயில் வழியாக வெளிவருவது விடுதலையை (அசுரத்தில், மோட்சம்) கொடுக்கும் - நம்மாழ்வார் அறிவுருத்திய வழியை கடைபிடித்தால், நாமும் நிலைபேற்றினை அடையலாம்.

🌷 பரமபத விளையாட்டு - நமது அன்றாட வாழ்வு.

🌷 விளையாட்டை விளையாடுவது பெருமாளும் & தாயாரும் - வாழ்வென்பது மனமும் & அறிவும் ஆடும் விளையாட்டு.

🌷 இரவு முழுக்க விளையாடவேண்டும் - "காண்பவை யாவும் உண்மை" எனும் அறியாமை (இருள் / இரவு) இருக்கும் வரை, வாழ்க்கை எனும் விளையாட்டை ஆடியாகவேண்டும்.

🌷 நோன்பிருத்தல் (அசுரத்தில், விரதமிருத்தல்) - உண்ணாதிருத்தல். மனதில் தோன்றும் எண்ணங்களையும், காணும் காட்சிகளையும் சட்டை செய்யாதிருத்தல்.

🌷 நோன்பினிடையே தேவைப்பட்டால் துளசி நீர் குடித்தல் - மேற்சொன்னவாறு எண்ணங்களையும் காட்சிகளையும் சட்டை செய்யாதிருக்கும்போது, சில சமயம், "நாம் செய்வது சரியா?" என்ற ஐயம் தோன்றும். அச்சமயம், பகவான் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்பட்ட அறிவுரைகளை (துளசி நீர்) சிந்தித்து, தன்னிலையிழக்காமல் இருக்கவேண்டும்.

oOo

யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்றிருந்தேன்
யானே நீ என் உடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே

-- திரு நம்மாழ்வார்

இப்பாடல் முழுவதிலும் இரண்டன்மை (அசுரத்தில், அத்வைதம்) வெளிபடுகிறது. இது பற்றிய பகவான் திரு இரமண மாமுனிவரின் கருத்தை பின்வரும் திரைநகலில் காணலாம்:


oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

அனல் வாதம் புனல் வாதம்


தலைப்பை கண்டதும், திருஞானசம்பந்த பெருமானும் வடக்கிலிருந்து வந்த சமணப் படங்காட்டிகளும் நம் நினைவுக்கு வருவர்!! (வடக்கிலிருந்து வந்த எதுதான் படங்காட்டவில்லை? 😏)

வாதம் - அசுர பாஷா
வழக்காடல் - திருநெறியத் தமிழ்

🔸 தொன்ம கதை:

அனல் வழக்காடலின்போது, பெருமான் நெருப்பிலிட்ட ஏடு எரிந்து சாம்பலாகவில்லை. சமணர் இட்ட ஏடு சாம்பலாகியது. புனல் வழக்காடலின்போது, பெருமான் ஆற்றிலிட்ட ஏடு, நீரோட்டத்தை எதிர்த்துச் சென்றது. சமணர் இட்ட ஏடு, நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டது.

🔸 உட்பொருள்:

🌷 அனல் - நெருப்பு - தொடர்பு கொண்டதை சாம்பலாக்கும் - மெய்ப்பொருள்

நெருப்பை இறைவனாக காண்பது மரபாகும். "அடி முடி காணா அண்ணாமலையார்" உருவகத்தில், மெய்ப்பொருளை நெருப்பாக காண்பித்திருப்பார்கள்.

🌷 புனல் - நீர் - அசைவது - வையகம்

படைப்பை (வையகத்தை) நீராக கருதுவது மரபாகும். பள்ளி கொண்ட பெருமாள் உருவகத்தில், திருப்பாற்கடல் என்பது படைப்பை குறிக்கும்.

🌷 மெய்ப்பொருளைப் பற்றியும், வையகத்தை / வையக வாழ்வைப் பற்றியும் இருவரும் வழக்காடினர் என்பது உட்பொருளாகும். வேறு வகையாக சொல்லவேண்டுமானால், படைப்பைப் (புனல்) பற்றியும், படைத்தவனைப் (அனல்) பற்றியும் வழக்காடினர் எனலாம்.

🌷 நெருப்பிலிட்ட ஏடு...

🌟 பெருமானின் ஏடு எரிந்து சாம்பலாகவில்லை என்ற சொற்றொடரின் பொருள் என்னவெனில், மெய்ப்பொருளை பற்றிய பெருமானின் விளக்கம் அனைத்து ஆய்வுகளையும் & அனைத்து கேள்விகளையும் கடந்து நின்றது என்பது பொருளாகும். எனில், பெருமான் கடைபிடித்த / அறிவுறுத்திய சமயநெறி அன்பர்களை உய்விக்க வல்லது என்பது கண்கூடாகும்.

🔥 சமணரின் ஏடு எரிந்து சாம்பலானது எனில், மெய்பொருளை பற்றிய அவர்களது விளக்கம் பிழையானது என்பது பொருளாகும். மேலும், அவர்களது நெறியை கடைபிடித்தால்... கோவிந்தா என்பதும் கண்கூடாகும்.

(மெய்ப்பொருளை சரியாக உணர்வதென்பது ஒரு படியெனில், உணர்ந்ததை மற்றவர் புரிந்துகொள்ளும்படியாக விளக்குவதென்பது சில படிகளெனில், தீய எண்ணங்களுடன் சுற்றித் திரிந்த வடவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதென்பது... பல படிகளாகும்!! அன்று, மன்னரிடமும் மக்களிடமும் நீதியிருந்ததால், பெருமானால் வெற்றி கொள்ளமுடிந்தது. இன்றைய சூழல் அன்று நிலவியிருந்தால்...)

🌷 ஆற்றிலிட்ட ஏடு...

👎🏽 சமணரின் ஏடு நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டது என்ற சொற்றொடரின் பொருள் என்னவெனில், சமணர் அறிவறுத்திய வாழ்க்கைமுறையை வாழ்ந்தால் ஈடேற முடியாது என்பது பொருளாகும்.

👍🏽 பெருமானின் ஏடு நீரோட்டத்தை எதிர்த்துச் சென்றது எனில், பெருமான் அறிவறுத்திய வாழ்க்கைமுறையை வாழ்ந்தால் ஈடேற முடியும் என்பது பொருளாகும்.

அது எப்படிப்பட்ட வாழ்க்கைமுறை?

"நீரோட்டத்தை எதிர்த்து"!!

மனம் போன போக்கில், வையகம் போன போக்கில் செல்லாமல், அதற்கு எதிர்திசையில் செல்லவேண்டும். அதாவது, கண் முன்னே விரியும் வையகத்தை நோக்கி செல்லாமல், அதற்கு எதிரான நமது தன்மையுணர்வில் நிலைத்திருக்க முயற்சிக்கவேண்டும். இவ்வடிப்படையில்தான், நமது அன்றாட வாழ்க்கை முதல், பெரும் திருவிழாக்கள் வரை அனைத்தையும் நம் முன்னோர்கள் வடிவமைத்துள்ளனர். எங்கும் எதிலும் உள்ளபொருளை பற்றிய சிந்தனை நமக்கு தோன்றுமாறு செய்துள்ளனர்.

இங்கு, "இதிலென்ன தனிச்சிறப்பு இருக்கிறது? இப்படித்தானே எல்லா பண்பாடுகளும் இருக்கின்றன." என்று தோன்றலாம். இன்று வேண்டுமானால், எல்லா மதங்களிலும், எல்லா பண்பாடுகளிலும், மெய்யியில் கலந்த வாழ்க்கைமுறை இருக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட வாழ்க்கைமுறையை முதன் முதலில் உருவாக்கி, வாழ்ந்து, நிலைபேற்றினை அடைந்தது தமிழினமாகத்தான் இருக்கும்!! 💪🏽💪🏽 நம்மிடமிருந்தே, அசுரர்கள் முதற்கொண்டு, அனைவரும் தெரிந்துகொண்டனர் என உறுதியாகக் கூறலாம்.

oOo

பெரும் புகழ் பெற்ற அனல்-புனல் வழக்காடல் நிகழ்வை, 

பெருமான் x சமணர்
சைவம் x சமணம் 

ஆகிய வகைகளில் மட்டும் பார்க்குமாறு நம்மை பழக்கியிருக்கிறார்கள். இத்துடன்,

தமிழர் x வடவர்
தமிழர் x மற்றவர்

என்ற வகைகளிலும் பார்க்கவேண்டும். இப்படிப் பார்த்தால், தமிழின், தமிழரின் மேன்மையை, அருமையை இன்னும் நன்றாக உணரமுடியும்.

oOo

பெருமான் சமணரோடு மட்டும் வழக்காடினார். அன்று நாம மதம் இல்லை. பெருமானின் மறைவுக்குப் பின்னரே அது உருவாக்கப்பட்டது. ஒரு வேளை, அம்மதம் அன்றிருந்து, அவர்களும் வழக்காடியிருந்தால்...

நெருப்பிலிட்ட ஏடு எரியவேண்டும். ஆற்றிலிட்ட ஏடு நீரோட்டத்தோடு போகவேண்டும். அதுதான் இயற்கை. நீரோட்டத்தோடு போவதற்குத்தானே பிறந்தீர். பிறகு, ஏன் எதிர்க்கிறீர்?

என்று "அறிவாளித்தனமாக" வழக்காடியிருப்பார்கள். 😁

அதாவது, மனதை அலைபாய விடவேண்டும், ஆசைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும், பல விளைவுகளை உண்டாக்கவேண்டும், மீண்டும் மீண்டும் பிறக்கவேண்டும்... இவையெல்லாம், "அசைவு" என்பதை அடிப்படையாகக் கொண்ட, அம்மதம் அறிவுறுத்துபவையாகும்.

அக்கார அடிசிலை கவளம் கவளமாக உள்ளே தள்ளும் பிறவி வாய்த்திருக்கும்போது, மேற்கண்டவைதான் சரியென்று அடித்துப் பேசத்தோன்றும். அதே அக்கார அடிசில் கெட்டுப்போன பிறகு, அதில் உருவாகும் புழுவாக பிறக்கும்போது தெரியும், நீரோட்டத்தோடு போவதின் விளைவு!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, December 18, 2023

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிந்தது!!


பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிந்தது -- அனுமன் என்ற வடிவத்தின் மொத்த வரலாறும் இவ்வளவுதான்!

சைவத்தோடு இணைந்த பிள்ளையார் வடிவம் மக்களிடையே ஹிட் அடித்ததால், அதற்கு போட்டியாக நாம மதத்தினர் கொண்டுவந்ததுதான் அனுமன்.

🔸 குரங்காக முடிந்ததில் என்ன தவறிருக்கிறது?

பதில்: கொரோனாவை உருவாக்கி, பில்கேட்ஸ் கோடான கோடிகள் சம்பாதித்ததில் என்ன தவறிருக்கிறது?

இவ்வையகத்தில் நடக்கும் அத்தனை அநீதிகளுக்கும், அட்டூழியங்களுக்கும் வலுவான மனமே (அனுமன்) மாறலாகும் (அசுர மொழியில், காரணமாகும்). எல்லா மதங்களும் மனதை அழிப்பதையே அறிவுறுத்துகின்றன. போற்றச் சொல்லவில்லை.

🔸 விசுவரூப ஆஞ்சநேயன் - நம் கண் முன்னே விரியும் வையகம்.

🔸 ஐந்துமுக ஆஞ்சநேயன் - நினைத்தல், சிந்தித்தல் போன்ற மனதின் ஐந்தொழில்கள்.

🔸 உளுந்துவடை / வெற்றிலை மாலை - சுண்ணாம்பு சத்து மிகுந்தவை. "உடல் வலுவானால் மனம் வலுவாகும்" என்ற கருத்தை சொல்லும் ஒப்பனை.

ஆனால், நடைமுறையில், இது தவறு என்பது அனைவரும் அறிந்ததே. வலுவான உடலும், கோழையான மனதும் கொண்ட பலரையும், வலுவான மனமும், நோஞ்சானான உடலும் கொண்ட பலரையும், அன்றாட வாழ்வில் காண்கிறோம்.

மேலும், நாம மதத்தினர் அறிவுருத்தும் ஏகாதசி நோன்பு போன்ற நோன்புகள் இதற்கு எதிரானவையாகும். நோன்பின் போது உண்ணாதிருக்கவேண்டும். உண்ணாவிட்டால் உடல் வலுவிழக்கும். உடல் வலுவிழந்தால் மனம் வலுவிழக்கும். மனம் வலுவிழந்தால் உள்ளபொருளை எளிதில் உணரமுடியும்.

💥 நோன்பு = மனதை அழிக்கும் முயற்சி
💥 அனுமன் வழிபாடு = மனதை வளர்க்கும் முயற்சி 😏

மனதிற்கு வலு சேர்ப்பதும், மனதை போற்றுவதும், மனதை வணங்குவதும் மிக மிக தவறானதாகும்!!

மனதின் உருவை மறவாது உசாவ
மனமென ஒன்றில்லை உந்தீபற
மார்க்கம் நேர் யாவர்க்கும் இது உந்தீபற

-- பகவான் திரு இரமண மாமுனிவர்

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, December 17, 2023

தல புருடா, அல் புருடா, ஹோலி புருடா & உளுத்தறிவு புருடா!! 😄


👊🏽 அசுரர்கள் செய்தால் - அது முறை. திராவிடியாள்கள் செய்தால் - அது முறையற்றது. 😏

👊🏽 அசுரர் கூட்டம் "அவாளுக்கேற்ப" என்ற பூவை சுற்றியது. திராவிடியாள் கூட்டம் "காலத்திற்கேற்ப" என்ற பூவை சுற்றப்போகிறது. 

👊🏽 புராணம் என்பது புருடா. வரலாறல்ல.

👊🏽 காணொளியின் மேல்-இடது புறத்தில், குறி மதம் & எம்எல்எம் மதத்திற்கேற்ற சிலை திருட்டுத்துறையின் புதிய சின்னமுள்ளது. வலது புறத்தில், அசுரமொழி எழுத்துள்ளது. நிறைமொழி மாந்தர்களுக்கேற்ற குறியீடு எங்குள்ளது?

👊🏽 தலபுராணம் - ஸ்தல + புராணா. இதில் தென்தமிழ் எங்குள்ளது? இதையொற்றி, நாளை, குறி மதத்தான் "அல் கப்சா" எழுதுவான். எம்எல்எம் மதத்தான் "ஹோலி கப்சா" எழுதுவான்.

oOo

🔸 திருக்கோயில் குறிப்பேடுகள் எப்படியிருக்கவேண்டும்?

🌷 இறைவன் & இறைவியின் தமிழ்ப்பெயர்கள் (அசுரமொழிப் பெயர்கள் தூக்கி எறியப்படவேண்டும்)
🌷 உறுதியாக தெரிந்தால், உடையவரின் கீழிருக்கும் பெருமானைப் பற்றிய செய்திகள்
🌷 அப்பெயர்களும், இறையுருவங்களும், திருக்கோயிலின் அமைப்பும் உணர்த்தும் பேருண்மைகள்
🌷 வருகை புரிந்த அருளாளர்கள் & அவர்களது பாடல்களில் காணப்படும் குறிப்புகள்
🌷 சங்க & சமய இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகள்
🌷 கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் & செவிவழிச் செய்திகள்
🌷 இதர செய்திகள்

🔸 ஆனால், எப்படியிருக்கின்றன?

கங்கை, ஜடாமுடி, பிராமணன், தத்தன், பித்தன், தேவன், அசுரன், அமிர்தம், தேவலோக ஐயிட்டங்கள் மற்றும் பல தரமற்ற பொருட்களுடன், மயிர்கூச்செரியும் / வாயை பிளக்கவைக்கும் சிஜிஐ காட்சிகள் 🤭சேர்த்து கிண்டப்பட்ட பல(பொய்)காரமாக இருக்கின்றன!

🔸 இனி, "காலத்திற்கேற்ப" மாற்றிய பிறகு எப்படி இருக்கப்போகின்றன?

💩 எம்எல்எம் மதத்திற்கேற்றவாறு

அண்டத்தின் தொடக்கத்தில், பகலோனும் இரவோனும் உருவாக்கப்படுவதற்கு முன்னரே, எப்படியோ நாள் கணக்கை உருவாக்கிய பரமபிதா, 7 நாட்களில் எல்லாவற்றையும் படைத்துவிட்டு, வெக்கேசனுக்கு புறப்பட அணியமானார். 

அதற்கு முன்னர், சிவபெருமானை அழைத்து, "எனது மகன் வெக்கேசனில் இருக்கிறான். நான் சென்று, அவனை அனுப்புகிறேன். அதுவரை, நீர் போய் இரட்சிப்பீராக!" என்றார். அதற்கு சிவபெருமான், "பரமபிதாவே, தங்களது மகனுக்கு இன்னும் விவரம் போதாது. முந்திரி மரம் எப்போது காய்க்கும் என்பதைக்கூட அறியாதவர். காய்க்காத நேரத்தில், அதனிடம் போய், காய்க்கச் சொல்லுவார். அது காய்க்காவிட்டால், எரிந்து போகுமாறு சபித்துவிடுவார். இன்னும் சில காலம் போகட்டும். அல்லது, புரோபேசனில் என்னுடன் இருக்கட்டும்." என்றார். 

இதனால் வெகுண்ட பரமபிதா, சிவபெருமானை கல்லாகும்படி சபித்துவிட்டார். இவ்வடிப்படையில், இங்கு சிவபெருமான் கல்லாக, சிவலிங்க வடிவில் உறைகிறார்.

பரமபிதாவுக்கு தோத்திரம்!

💩 குறி மதத்திற்கேற்றவாறு

தொடக்கத்தில், "இறைவன் மிகப்பெரியவன்" புவியை படைத்து, அது உருண்டு போகாமலிருக்க, மலைகளை நட்டுக் காத்தார். பின்னர், சிவபெருமானை தோற்றுவித்து, புவியை பராமரிக்கச் சொன்னார். ஆனால், சிவபெருமான் சென்று, ஓர் ஆலமரத்தின் கீழே அமர்ந்துகொண்டார். அவரை தேடிச்சென்ற உலமாக்கள், அவரிடமிருந்து வெளிப்பட்ட பேரமைதியினால் ஈர்க்கப்பட்டு, அவருகிலேயே அமர்ந்துகொண்டார்கள். இக்காட்சிகள் "இறைவன் மிகப்பெரியவனுக்கு" அல்லு விட்டது: 

- இப்படியே போனால், இனப்பெருக்கம் நடக்காது.
- இனப்பெருக்கம் நடக்காவிட்டால், 2% வரும்படி வராது.
- வரும்படி வராவிட்டால், "ஒயின் ஆறு" ஓடும் சுவர்க்கத்தை கட்டமுடியாது.
- ஜிஹாத் செய்து புட்டுக்கொண்டு, மேலுலகம் வரும் பயல்களுக்கு, 72 "மேலாடையில்லாத" அழகிகளை கொடுக்கமுடியாது.
- அப்பயல்கள் துப்பும் எச்சிலை தாங்கி பிடிக்க, சிறார்களை வேலைக்கு வைக்கமுடியாது.

என்ன செய்வதென்று சிந்தித்த "இறைவன் மிகப்பெரியவன்", சிவபெருமானை கல்லாகும்படி சபித்துவிட்டு, "அருமை நபி" திட்டத்தை கையிலெடுத்தார்.

இவ்வடிப்படையில், இங்கு சிவபெருமான் கல்லாக, சிவலிங்க வடிவில் உறைகிறார்.

சைத்தான் மிகப்பெரியவன்!

💩 உளுத்தறிவுக்கு ஏற்றவாறு

ஆப்பிள் பழம் தலை மீது விழுந்தவுடன், ஈர்ப்பு விசையை உணர்ந்து கொண்ட, மேன்மையான வெள்ளைச் சாத்தான் இனத்தில் தோன்றிய மெக்காலேவின் கல்வித் திட்டத்தால் பயனடைந்து, பகுத்தறிவு பெற்றவர்களில் இறைவனும் ஒருவராவார். அதுவரை, நீதி, நேர்மை, தூய்மை, ஒழுக்கம் என்று குறுகிய கண்ணோட்டத்துடன் இருந்தவர், பகுத்தறிவு தாக்கத்தினால், மாறுபட்டும், பரந்த மனப்பான்மையுடனும் சிந்திக்கத் தொடங்கினார். பிளேடு போடும் பயல்கள் தொடங்கி, ஊருக்குள்ளேயே சேர்க்கக்கூடாது என்ற நற்பெயர் பெற்ற பயல்கள் வரை அனைவரையும் தூக்கிவிடத் திருவுள்ளம் கொண்டு, ஈன வெங்காயத்தை படைத்தார். அவ்விறைவன் உறையும் திருக்கோயிலே ஈரோடு கபாலீசுவரர் திருக்கோயிலாகும்.

ஒழுக்கமில்லை. 
ஒழுக்கமில்லை. 
ஒழுக்கம் என்பது இல்லவேயில்லை.

😝😝😄😄😆😆😂😂🤣🤣🥲

ஓர் இனத்தை அவ்வினத்தின் பண்பட்டோரே ஆளவேண்டும் & பராமரிக்கவேண்டும். இல்லையெனில், அவ்வினம் நோய் எதிர்ப்பாற்றலற்ற உடல் போலாகிவிடும். 

தமிழகத்தின் நோய் எதிர்ப்பாற்றல் 1,218ல் பெருத்த அடி வாங்கியது. அதன் பிறகு, அண்டையிலிருந்தும், வடக்கிலிருந்தும், வெளியிலிருந்தும் தீநுண்மிகள் ஊடுருவிய வண்ணமிருக்கின்றன. அவைகளால் உள்ளிருக்கும் கருங்காலித் தீநுண்மிகளும் வெகுவாக வளர்ந்துவிட்டன. 

இவ்வளவு நடந்த பிறகும், திருநெறியத் தமிழும், நமது அடையாளங்களும் ஓரளவேனும் உயிர்ப்புடனுள்ளன என்றால் அதற்கான மாறல்கள் (அசுர மொழியில், காரணங்கள்)

🙏🏽 அசுரர் உட்பட அனைத்து எதிரிகளும் மதித்து, போற்றி & ஏற்றுக்கொண்ட உரமேறிய நம் பண்பாடு
🙏🏽 "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற மேன்மையான கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த நம் முன்னோர்கள் செய்த அளப்பரிய நல்வினைப் பயன்கள் 
🙏🏽 எந்நாட்டவர்க்கும் இறைவனானவனின் அருள்

பொழுது இப்படியே போய்விடாது. என்றும் வாய்மையே இறுதியில் வெற்றி பெறும்.

oOOo

என்றுமுள திருநெறியத் தென்தமிழ் வாழ்க 🌺🙏🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, December 11, 2023

வருணாசிரமம் - இன்றைய இட ஒதுக்கீட்டிற்கு சமமான சொல்!!


திருமறைகளை பற்றிய அக்காலக் கட்டுப்பாடுகளை, அண்மையில், மீண்டும் கேட்க நேர்ந்தது:

🔸 பிராமணன் - திருமறைகளை பார்க்கலாம், படிக்கலாம் & கேட்கலாம்.

🔸 சத்திரியன் - திருமறைகளை பார்க்கலாம் & கேட்கலாம். படிக்கக்கூடாது.

🔸 வைசியன் - திருமறைகளை கேட்கலாம். பார்க்கவோ, படிக்கவோக் கூடாது.

🔸 சூத்திரன் - திருமறைகளை பார்க்கவோ, கேட்கவோ, படிக்கவோக் கூடாது.

தன்னையுணர்ந்த எந்த மெய்யறிவாளரும், மேற்கண்ட கட்டுப்பாடுகளை வகுத்திருக்கமாட்டார். அப்படி வகுத்திருந்தால் அதன் உட்பொருள் வேறாக இருக்கும்.

திருமறைகள் என்பது பகவான் திரு இரமண மாமுனிவர், திரு ஒளவையார், திருவள்ளுவர் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து படைப்பை பற்றியும், படைத்தவனை பற்றியும் வெளிப்பட்ட கருத்துக்களின் தொகுப்பாகும்.

திருமறைகள் = படைத்தவன் & படைப்பு.

படைத்தவன் (அப்பன்) = படைப்பு (அம்மை).

எனில், திருமறைகள் = படைத்தவன் என்று கொள்ளலாம். அல்லது, திருமறைகள் = படைப்பு என்றும் கொள்ளலாம். படைப்பு என்ற பொருளைக் கொண்டு சிந்தித்தால்... மலைக்க வைக்கின்றது!!!

oOo

மேற்கண்ட கட்டுப்பாடுகளிலுள்ள "திருமறைகள்" என்ற சொல்லுக்கு பதிலாக, "படைப்பு" என்ற சொல்லை பொருத்திப் பார்ப்போம்:

🔸 பிராமணன் - படைப்பை பார்க்கலாம். அது பற்றி படிக்கலாம் & கேட்கலாம்.

முதலில், பிராமணர் என்போர் யார்? இன்று, யாரை நாம் பிராமணரென்று கருதுகிறோமோ, அந்த அசுரர்கள் அல்லர். பகவான், வள்ளலார், தாயுமானவர், பட்டிணத்தார், ஒளவையார், திருஞானசம்பந்தர், காரைக்கால் அம்மையார், திருவள்ளுவர் போன்ற மெய்யறிவாளர்கள்.

பிரம்மம் = உள்ளபொருள்.
பிராமணர் = உள்ளபொருளை உணர்ந்தவர்கள் / உள்ளபொருளாய் உள்ளவர்கள்.

படைப்பினால் பாதிப்படையமாட்டார்கள். எனவே, இவர்கள் படைப்பை பார்க்கலாம், வரும் செய்திகளை கேட்கலாம். அது பற்றி ஆராயலாம் (படிக்கலாம்). அப்படி இவர்கள் ஆராய்ந்ததினால்தான் ஆத்திச்சூடி, திருக்குறள் போன்ற பொன்னான வழிகாட்டி நூல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

🔸 சத்திரியன் - படைப்பை பார்க்கலாம். அது பற்றி கேட்கலாம். அதை படிக்கக்கூடாது.

சத்திரியர் எனில் அரசர்கள் என்று பொருள் கொள்வதை விட, மறவர்கள் என்று பொருள் கொள்வது சிறப்பாகவிருக்கும்.

இவர்கள் மேற்கண்ட மெய்யறிவாளர்களுக்கு அடுத்த நிலையிலுள்ளவர்கள். "காண்பவை யாவும் பொய். காண்பவனே மெய்." என்ற அறிவை படிப்பறிவாக மட்டும் அறிந்தவர்கள். நிலைபேற்றினை அடைய போராடுபவர்கள் (எனவே, மறவர்கள்). மெய்யறிவாளர்களின் நிலையறிந்து, அவர்களுக்கு உதவுபவர்கள்; அவர்களது நிலையறியாத கூட்டத்திடமிருந்து அவர்களை காப்பவர்கள். (இதுவே, "மெய்யறிவாளரை மறவன் காக்கவேண்டும்" என்ற விதியின் உட்பொருளாகும்.)

இவர்கள் படைப்பைப் பற்றி அறிந்தவர்கள் என்பதாலும், நல்ல மனஉறுதி கொண்டவர்கள் என்பதாலும், இவர்கள் படைப்பை பார்க்கலாம்; வரும் செய்திகளுக்கு காதுகொடுக்கலாம். ஆனால், ஆராயக்கூடாது (படிக்கக்கூடாது). முழுகிணறும் தாண்டிய மெய்யறிவாளர்களே ஆராயவேண்டும். இவர்கள் ஆராய்ந்தால் மீண்டும் பிறவி சுழற்சிக்குள் சிக்கிக்கொள்வார்கள்; தவறுகளும் விளையும் (இவர்கள் திருக்குறள் எழுதியிருந்தால் எப்படியிருக்கும்?).

🔸 வைசியன் - படைப்பை பற்றி கேட்கலாம். அதை பார்க்கவோ, அது பற்றி படிக்கவோக் கூடாது.

இங்கு, வைசியன் எனில் "பயிர் செய்பவர்" என்று பொருள் கொள்ளவேண்டும்.

எதை பயிர் செய்பவர்? வினைகளை பயிர் செய்பவர். வினைகளை பயிர் செய்தால் என்ன விளையும்? பற்றுகள், தளைகள், பிறவிகள்... அதாவது, மறவர்களைப் போன்று மனக்கட்டுப்பாடு இவர்களிடமிருக்காது; எளிதில் வினைப்பயன்களை சேர்த்துக்கொண்டு, பிறவி சுழற்சிக்குள் போய்விடுவர். எனவே, மறவர்களை விட கூடுதலான கட்டுப்பாடுகள் இவர்களுக்கு அறிவுருத்தப்பட்டன.

வைசியன் எனில் வணிகன் என்பது எல்லோரும் அறிந்த பொருளாகும். வணிகன் என்பவர் யார்? ஒன்றை கொடுத்து ஒன்றை பெறுபவர். தன்னிலையை விட்டுக்கொடுத்து பிறவிகளை பெறுவதால், இவர்களுக்கு வணிகர்கள் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

🔸 சூத்திரன் - படைப்பை பார்க்கவோ, அது பற்றி கேட்கவோ, அதை படிக்கவோக் கூடாது.

சூத்திரன் எனில் "எப்போதும் கவலையில் இருப்பவன்" என்பது பொருளாகும். மனம், உடல் & வையகம் ஆகியவை உண்மையென்று கருதுவதால் இப்பிரிவினருக்கு கவலை ஏற்படுகிறது. இதை போக்க என்ன செய்யவேண்டும்?

"காய்ச்சல் நீங்கும்வரை இன்னின்ன உணவுகளை உட்கொள்ளாதே" என்று மருத்துவர் அறிவுறுத்துவது போன்று, இவர்களுக்கு "காண்பவை யாவும் பொய்" என்ற அறிவு சிறிதளவேணும் தோன்றும்வரை, "படைப்பை பார்க்காதே, அதிலிருந்து வரும் செய்திகளை கேட்காதே மற்றும் அதை ஆராயாதே" என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

சில சமயம், குறைவான மதிப்பெண்கள் பெரும் மாணவர்களை, நல்ல மதிப்பெண்கள் பெரும் மாணவர்களோடு அமர வைத்து, வகுப்பை மேம்படுத்த ஆயர்கள் (ஆசிரியர் - கா(ஆ)ரியம்) முயற்சிப்பதை பார்த்திருக்கலாம். இது போன்று, தன்னை உடலாக மட்டும் கருதும் இப்பிரிவினரை, தெளிந்த அறிவு பெற்ற பிற பிரிவினரோடு சேர்ந்து வாழ்ந்து, மேம்பட அறிவுறுத்தியிருக்கிறார்கள். (இவ்வறிவுரை காலப்போக்கில் திரிந்து, இப்பிரிவினர் மற்றவர்களுக்கு பணிவிடை செய்யவேண்டும் என்றாகிவிட்டது!)

oOo

பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் பிறவாநிலையை அடையவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, பரந்த மனப்பான்மை கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட இக்கட்டமைப்பு, காலப்போக்கில், குறுகிய மனப்பான்மை கொண்டவர்களின் கைகளுக்கு சென்றதால், தலைகீழாக, நேரெதிராக திரிக்கப்பட்டு, இன்றைய இட ஒதுக்கீடு எனும் கேட்டிற்க்கு வித்தாகிவிட்டது!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, December 8, 2023

பசு மாட்டின் பின்புறத்தில் மலர்மகள் குடியிருக்கிறாராம்!!

(மேலுள்ள, மாட்டின் பின்புறத்தை தொட முயற்சிப்பது துர்கா இசுடாலினாம்! 🤭)

🤦🏽 கொஞ்சமாவது அறிவு என்று ஒன்றிருந்தால்...

அசுரனோ, உளுத்தறிவனோ, மெக்காலே மண்டையனோ யார் சொன்னாலும், சிந்திக்கவேண்டும்.

பசு மாட்டின் பின்புறம் சிறுநீரும் & சாணியும் வெளிப்படும். அவை நிலத்தில் விழுந்தால், நிலம் வளமாகும். நிலம் வளமானால் விளைச்சல் பெருகும். விளைச்சல் பெருகினால் வருமானம் வளரும். எனில், வருமானம் வளரவேண்டுமானால் பசு மாட்டின் சிறுநீரையும் & சாணியையும் பயன்படுத்தவேண்டும்.

சாணி & சிறுநீர் = வருமானம் = செல்வம் = மலர்மகள்!!

பொருளாதாரத்தில் உழவுத்தொழில் பெரும் பங்கு வகித்த சமயத்தில் உருவான வினைமுறையாகும் (ஆரியத்தில், சடங்காகும்). இன்றைய பொருளாதாரத்திற்கு பொருந்தாது. இன்று, இந்த வினைமுறையை செய்வதாலோ, பார்ப்பதாலோ எந்த பயனும் கிடையாது. மலர்மகள் குறிப்பிடும் செல்வமென்பது எதென்று தெரிந்தால், பலர் இதை மதிக்கக்கூட மாட்டார்கள்! 😏

மலர்மகள் குறிப்பிடும் செல்வமானது மெய்யறிவாகும். காசு, பணம், துட்டு, பிட்காயின்... இல்லை!

இவ்வினைமுறையை உருவாக்கியது ஆரிய->பௌத்த->நாமப்பேர்வழிகளாகும். சைவம் காளையை போற்றுவதால், அதற்கு போட்டியாக, பசுமாட்டை நாமம் போற்றுகிறது. சைவம், கல்லாலான காளையை உடையவருக்கு முன்னே வைத்தால், நாமம், உயிருள்ள பசுமாட்டை பெருமாளுக்கு முன் கொண்டுவந்து, திருப்பி நிறுத்துகிறது.

பெருமாள் சிலைகள் மட்டும் உயிர்பெற்று நகருமானால்... மீண்டும் கோளரி உருவமெடுத்து (ஆரியத்தில், சிங்கம்), "அடேய், என் பொஞ்சாதி குடியிருக்கிற இடமாடா அது?" என்று முழங்கியவாறு (ஆரியத்தில், கர்ஜித்தவாறு), நாமப்பேர்வழிகளின் மீது பாய்வார்!!!

😆😂😂🤣😍

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, December 7, 2023

பேமானியாகலாம்! ஞானியாக முடியாது. 😏


இயேசுவே மெய்யானத் தேவன். ஞானியாக முயற்சிக்காதீர்கள். அது சாத்தானின் வேலையாகும்.


😆😆😂🤣🤣


(மேற்கண்ட வரிகளை, சில நாட்களுக்கு முன்னர், ஒரு ஆட்டோவின் பின்புறம் பார்த்தேன். மழை பெய்துகொண்டிருந்ததால் படமெடுக்க இயலவில்லை.)


அவனவன், இயேசு அடைந்த நிலையை அடைந்துவிட்டால், பாவமன்னிப்புத் தொழில் எப்படி நடக்கும்? ஒப்பாரி நிலையங்களை எப்படி தொடர்ந்து நடத்துவது?


குறி மதத்தை பொருத்தவரை, இந்த வம்பே வேண்டாமென்று தொடக்கத்திலிருந்தே கட்டுப்படுத்தியுள்ளனர். இறுதிவரை பஸ்கி, தண்டால்தான்! இம்மதத்தின் நிறுவனர் இறந்தபிறகு, அவனவன் தன்னை இறைத்தூதனாக அறிவித்துக்கொண்டு, தொழில் தொடங்கியுள்ளான். எல்லோரையும் அடக்கி, கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பெரும் பாடுபட்டுள்ளனர். எனவே, ஒருவரும் விழித்துக்கொள்ளாதவாறு பார்த்துக்கொள்கின்றனர்.


(இங்கு சில கேள்விகள் எழவேண்டும்:


- திருஞானசம்பந்தருக்கு பிறகு, எத்தனை பேர் தங்களை அடுத்த திருஞானசம்பந்தராக அறிவித்துக்கொண்டனர்?

- அப்பர் பெருமானுக்கு பிறகு, எத்தனை பேர் தங்களை அடுத்த அப்பர் பெருமானாக அறிவித்துக்கொண்டனர்?

- பகவான் திரு இரமண மாமுனிவருக்குப் பிறகு, எத்தனை பேர் தங்களை அடுத்த பகவானாக அறிவித்துக்கொண்டனர்?


எனில், ஏன் மெக்காவில் மட்டும் அவனவன் தன்னை இறைத்தூதனாக அறிவித்துக்கொண்டான்? 😉)


அடுத்து, நம் சமயத்திற்கு வருவோம்.


இங்கும் மற்ற மதங்களின் நிலைதான். ஒரு பயலும் விழித்துக்கொள்ளக்கூடாது என்பதில் அசுரக்கூட்டம் தெளிவாக & உறுதியாக இருக்கிறது.


கேட்டதும் சிந்தனையை தூண்டவேண்டுமென்ற கண்ணோக்கத்தில், நம் முன்னோர்கள் வைத்த இறைவனின் திருப்பெயர்களாகட்டும், பார்த்ததும் சிந்தனையை தூண்டவேண்டுமென்ற கண்ணோக்கத்தில், அவர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய இறைதிருவுருவங்களாகட்டும், திருக்கோயில்களின் வடிவமைப்புகளாகட்டும், எதுவும் எவ்வகையிலும் நம் சிந்தனையை தூண்டாதவாறு பார்த்துக்கொண்டுள்ளனர்!


நமது வேலையென்ன? கோயிலுக்கு செல்லவேண்டும். வரிசையில் நிற்கவேண்டும். ஓட்டைப் பானைக்குள் ஈ நுழைந்தது போன்று, அசுரர்கள் ஒப்பிக்கும் கா(ஆ)ரியச் செய்யுள்களை கேட்டுவிட்டு, அவர்கள் தட்டுவிளக்கை சுழற்றும் போது, ஏதோ கிடைத்தது / புரிந்தது போன்று கன்னங்களில் போட்டுக்கொண்டு, தட்டு அருகில் வரும்போது காசை போட்டுவிட்டு, விளக்கொளியை தொட்டு, கண்களில் ஒற்றிக்கொண்டு, திருநீறு பெற்றுக்கொண்டு, நமக்கு நாமே திருநீறு அடித்துக்கொண்டு வெளியே வந்துவிடவேண்டும். சுபமஸ்து! 🤣


இந்த மாயவலைகளையெல்லாம் தாண்டி, யாராவது விழித்துக்கொண்டால், அவருக்கு கட்டம் கட்டிவிடுவார்கள். (இதுவே 1,000 ஆண்டுகளுக்கு முன்னரெனில், எல்லோருக்கும் ஒரே நீதியென்ற நிலைப்பாட்டை கொண்டிருந்ததற்காக, மன்னர் ஆதித்த கரிகாலச் சோழரை போட்டுத்தள்ளியது போல போட்டுத்தள்ளுவார்கள். இன்று, இம்மியளவு பண்பட்டு, கட்டம் கட்டுகிறார்கள்). ஆனால், அப்படி விழித்துக்கொண்டவர் உடல் உகுத்த பின்னர், அவரது திருவிடம் (கா(ஆ)ரியத்தில், சமாதி) புகழ்பெறத்தொடங்கினால், உரிமையுடன் உள்ளே நுழைந்து, கல்லா கட்டத்தொடங்கிவிடுவார்கள்.


அண்மை காலத்தில், இவர்களது அசுரக் கண்காணிப்பையும் தாண்டி, பெரும் புகழ்பெற்று, பலரது உள்ள விளக்கைத் தூண்டிவிட்ட ஒரே பெருமான் பகவான் திரு இரமண மாமுனிவராவார்! உள்ளபொருளை தெளிவாக காட்டியதற்காக, இன்றும், சில அசுரர்கள் அவரை வெறுத்து ஒதுக்குவதை நானறிவேன்.


எப்படியோ பகவானிடம் கோட்டைவிட்டாலும், இந்நேரம், "இன்னொரு பகவான் உருவானால், எப்படி கட்டம் கட்டுவது?" என்று ஆய்வு செய்து, அவர்களது "எப்படி மக்களை முட்டாளாக்கி, Safe-அ, Comfort-அ, Secured-அ, நன்னா & வாழையடி வாழையாக வாழ்வது?" என்ற கையேட்டுப் புத்தகத்தில் சேர்த்திருப்பார்கள். 👊🏽👊🏽


குறிமதமும், ஒப்பாரி மதமும் வையகத்தை பிடித்த பீடைகளெனில், இவ்வசுரக் கூட்டம் நம்மை பிடித்த பீடையாகும்! 😞


பொழுது இப்படியே போய்விடாது. அல்லவை இல்லாமல் போகும் சமயம் வரும். நல்லது வெளிப்படும். "ஓர்ந்து கண்ணோடாது இறை புரியும்" ஆட்சியாளர்கள் மீண்டும் தோன்றுவார்கள். எல்லாம் நலமாகும்.


oOOo


கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️


திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻

Friday, December 1, 2023

கூடம், திருமணக்காட்சி, திருக்கயிலாயக் காட்சி, சூழ்ச்சியில்லாக் காட்சி - சிறு விளக்கம்


🌺🙏🏽🙇🏽‍♂️
திரு இரத்தினக்கூடம் (ஆரியத்தில், சபை), திருவாலங்காடு

🌷 இம்மதில் சுவருக்குப் பின்னால், திரு காரைக்கால் அம்மையாரும், மற்றுமொரு பெருமானும் திருநீற்று நிலையிலுள்ளனர்.

🌷 அவர்களது நிலையை குறிக்கும் இறையுருவம்தான் படத்தில் காணப்படும் திரு ஆடலரசன் ஆவார்.

🌷 அவர்களது நிலையென்ன? 

இதற்கு பதில்: அவ்விடத்தின் பெயரன்ன?

கூடம் (சபை)!!

கூடம் எப்படியிருக்கும்? பார்வையாளர்கள் ஒரு புறம் அமர்ந்திருக்க, காட்சிகள் ஒரு புறம் அரங்கேறிக் கொண்டிருக்கும். இதையொத்த நிலையில் அப்பெருமான்கள் இருக்கிறார்கள் என்பது பொருளாகும். அதாவது, அவர்களுக்கு இன்னமும் காட்சிகள் தோன்றிக்கொண்டிருக்கின்றன.

🌷 இதனால் அவர்களுக்கென்ன பயன்?

அவர்களுக்கு ஒரு பயனுமில்லை. நமக்குத்தான் கொள்ளைப் பயன்கள்!

கருவறை அமைப்பிலிருக்கும் திரு ஆலங்காட்டு அப்பர் தெருமுனையிலிருக்கும் நண்பரெனில், கூடத்திலிருக்கும் திரு காரைக்கால் அம்மையார் பக்கத்து வீட்டிலிருக்கும் நண்பராவார்!!

🌷 கூடத்தின் உள்ளிருக்கும் பெருமான்களின் நிலையை குறிப்பது மட்டுமில்லாது, எந்த நுட்பத்தை (Technique) கடைபிடித்தால் அவர்களது நிலையை நாமும் அடையலாமென்பதையும் ஆடலரசன் திருவுருவம் குறிப்பிடுகிறது!

🌷 அதென்ன நுட்பம்?

அம்மையுடன் நடக்கும் ஆடல் போட்டியில், பல வகையான நுட்பங்களை பயன்படுத்திய பின்னர், இறுதியில், பெருமான் தனது இடதுகாலைத் தூக்கி, தனது இடது காதில் மாட்டப்பட்டிருக்கும் அணிகலனை கழட்டுவார். இதை செய்யமுடியாமல் அன்னை தோற்றுப்போவார். 

அம்மை - மனம், உடல் & வையகக் காட்சிகள்.

பெருமான் - நாமே.

தூக்கிய இடதுகால் - புறமுகமாக செல்லும் நமது கண்ணோக்கத்தை (ஆரியத்தில், கவனத்தை) நம் மீது - நமது தன்மையுணர்வின் மீது - திருப்புதல்.

காதணி - "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம். இதிலிருந்தே அனைத்து பற்றுகளும் தோன்றுகின்றன.

இந்நுட்பத்திற்கு பகவான் திரு இரமண மாமுனிவரிட்ட பெயர்: தன்னாட்டம்!!

oOo

இரத்தினம், பொன், வெள்ளி, தாமிரம் & சித்திரம் ஆகிய கூடங்களிலுள்ள பெருமான்கள் எந்நிலையில் உள்ளனரோ, அதே நிலையில்தான் பின்வரும் பெருமான்களும் உள்ளனர்:

🌷 சென்னை திருவொற்றியூரிலுள்ள திரு படம்பக்கப் பெருமான் என்ற உடையவரின் கீழுள்ள பெருமான்

🌷 மதுரையிலுள்ள, பெரும் புகழ்பெற்ற, திரு சொக்கநாதர் என்ற உடையவரின் கீழுள்ள திரு சுந்தரானந்த சித்தர்

🌷 அகத்தியர் திருமணக்காட்சி கண்ட திருவிடமென்று சொல்லப்படும் அனைத்து திருக்கோயில்களிலுள்ள உடையவர்களின் கீழுள்ள பெருமான்கள்

🌷 திருக்கயிலாயக் காட்சி கண்ட திரு அப்பர் பெருமான்

🌷 சூழ்ச்சியில்லாக் காட்சி கண்ட திரு மணிவாசகப் பெருமான்

🌷 நடக்கும் சில நிகழ்வுகளைக் கண்டால் பகவானும் இந்நிலையில் இருக்கலாமென்று தோன்றுகிறது.

ஆக, கூடம், திருமணக்காட்சி, திருக்கயிலாயக் காட்சி, சூழ்ச்சியில்லாக் காட்சி என அழைக்கப்படும் யாவும் ஒரே காட்சிதான்: அம்மையப்பர் காட்சி!!

காண்பவர் - அப்பன்
காட்சி - அம்மை

oOo

இவ்வாறு, இறையுருவின் பெயர், திருக்கோயிலின் பெயர், ஊரின் பெயர், இறையுருவம், கோயிலின் அமைப்பு, புனைவுக்கதைகள் என வாய்ப்பு கிடைத்த அனைத்திலும் பேருண்மைகளை பதிவு செய்துவிட்டுச் சென்றுள்ளனர் நம் முன்னோர்கள். ஆனால், கேடுகெட்ட, நன்றிகெட்ட, தன்னலமே வடிவான, பித்தலாட்ட, நயவஞ்சக, நச்சு அசுர இனம் உள்நுழைந்ததால், அனைத்தும் வீணாகிவிட்டன. குருடர்களாக, செவிடர்களாக, "மம" சொல்லும் மரமண்டைகளாக ஆக்கப்பட்டுவிட்டோம்!! 🤬😡

இதுவும் அம்மையின் கூத்துத்தான். இதையும் தென்னாடுடைய தமிழீசன் வெற்றிக்கொள்வான்.

oOOo

செயற்கரிய செயல் செய்த பேயார்க்கும் அடியேன் 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, November 30, 2023

அடிமுடி காணா அண்ணாமலையார் - உட்பொருள்


🌷 கல்வியாலும் (அன்னம்) (குறிப்பாக, மெக்காலே கல்வியால் 😊) செல்வத்தாலும் (பன்றி) இறைவனை உணரமுடியாது.

அன்னம் கலைமகளின் ஊர்தியாகும். கலைமகள் கல்விக் கடவுளாவார். எனவே, இங்கு, அன்னம் கல்வியை குறிக்கிறது.

பன்றியானது பெருமாளின் திருவிறக்கங்களில் ஒன்றாகும். பெருமாள் மலர்மகளின் கணவராவார். மலர்மகள் செல்வத்தின் கடவுளாவார். எனவே, இங்கு, பன்றி செல்வத்தை குறிக்கிறது.

🌷 அறிவாலும் (அன்னம்) மனதாலும் (பன்றி) இறைவனை உணரமுடியாது.

சமயக் குறியீடுகளில், அன்னம் கெட்டதிலிருந்து நல்லதை மட்டும் பிரித்தறிவதை குறிக்கும். எனவே, இங்கு, அறிவை குறிக்கிறது.

பன்றியானது சேற்றில் உழலும். இன்னொருவரின் கழிவை உண்ணும். வதவதவென்று குட்டிகள் ஈனும். இவையெல்லாம் மனதிற்கும் பொருந்தும் - மனமே ஒரு சாக்கடை, இன்னொருவரின் சாக்கடையை அறிய விரும்பும், எண்ணங்களை தோற்றுவித்துக் கொண்டேயிருக்கும். எனவே, இங்கு, பன்றி மனதை குறிக்கிறது.

🌷 இறைவனை உடலுக்குள்ளேயும் (பன்றி) காணமுடியாது; வெளியேயும் (அன்னம்) காணமுடியாது.

அன்னம் பறந்துசெல்லும். வெளிப்புறத்தை குறிக்கும். பன்றி மண்ணை பறிக்கும்; சேற்றை கிளறும். உட்புறத்தை குறிக்கும்.

oOo

கல்வியாலும், செல்வத்தாலும், அறிவாலும் & மனதாலும் இறைவனை உணரமுடியாது. இறைவனை நமக்குள்ளும் தேடமுடியாது. நமக்கு வெளியேயும் தேடமுடியாது. எனில், எப்படித்தான் உணருவது?

பகவான் திரு இரமண மாமுனிவர் கூறும் பதில்: தானாய் இருத்தலே தன்னையறிதலாம்!!

நாம் நாமாக - நமது தன்மையுணர்வாக - மட்டுமிருப்பதுதான் இறைவனை உணருவதாகும்! இதையே நெருப்பாக உருவகப்படுத்தியுள்ளனர். நெருப்பு தன்னொளி கொண்டது. நாமும் தன்னொளி பொருந்தியவர்கள். நாம் இருக்கிறோம் என்பதையுணர இன்னொருவரின் / இன்னொன்றின் உதவி தேவையில்லை.

நம் மீது போர்த்தப்பட்டிருக்கும் உடலுக்குதான் தோற்றமும் முடிவுமுண்டு. நமக்கில்லை. இதையே அடிமுடி காணமுடியாத நெருப்பாக உருவகப்படுத்தியுள்ளனர்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Tuesday, November 28, 2023

மாதம் மும்மாரி பொழியட்டும்!!


இவ்வாழ்த்துரை உண்மையானால், அதாவது, மாதம் மூன்று முறை மழை பெய்தால்... அப்பகுதி சதுப்பு நிலமாகிவிடும்! 😃 மனிதர் வாழத் தகுதியற்றதாகிவிடும்!! எனில், இதன் உட்பொருளென்ன?

மாதம் + 3 மாரி + பொழி + அட்டும் என்று பிரிக்கலாம்.

🔸 மாதம் - புவியின் நகர்வு. பகலவனை புவி சுற்றிவர, மாதங்கள் உருண்டோடும்.

🔸 3 மாரி - இங்கு மாரி என்பது மழையை குறிக்காது. இறப்பை குறிக்கும்! மாரி என்ற சொல்லின் பல பொருட்களுள் ஒன்று இறப்பாகும்.

3 இறப்புகள் - கனவு, நனவு, தூக்கம். ஆரியத்தில், இவற்றை அவஸ்தைகள் என்பர். நமது சமயம் இவற்றை இறப்பாக காண்கிறது.

கனவு, நனவு, தூக்கம் எப்போது வரும்? ஒவ்வொரு நாளும் வரும். எனில்,

கனவு, நனவு, தூக்கம் = 1 நாள்.

🔸 பொழி - கடலருகேயுள்ள சிறு தீவு.

கடல் - மாயை / வையகம் / படைப்பு. 
தீவு - மாயையிலிருந்து மீண்டவர்.

🔸 அட்டும் - நடக்கட்டும். ஆணையிடுதல்.

இப்போது எல்லாவற்றையும் இணைப்போம்:

🌷 மாதம் - காலங்கள் உருண்டோடட்டும் / இயற்கையின் சுழற்சி நிற்காது நடக்கட்டும்.

🌷 மும்மாரி - நாட்கள் உருண்டோடட்டும்.

🌷 பொழி - நீ அவற்றில் சிக்கிக் கொள்ளாமல், பார்வையாளனாக மட்டுமிரு.

இன்னும் எளிமையாக்கினால்:

பிறவியுள்ளவரை இயற்கை நன்கு இயங்கட்டும். பிறவி முடிந்த பிறகு, பிறவாமை கிட்டட்டும்.

இவ்வளவுதானே உருப்படியான பிறவியெடுத்த ஒவ்வொருவருக்கும் வேண்டும்?

oOOo

என்றுமுள தென்தமிழ் வாழ்க 🌺🙏🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

ஆரியப் படங்காட்டிகளின் கைங்கரியங்களில் சில...



💥 சோழர் காலத்தில் வெகுவாக தண்டிக்கப்பட்டவர்கள் ஆரியப்புருடர்களாம்!

💥 அப்போது இந்த "நஞ்சில்லா, நயவஞ்சகமில்லா & நன்றியுள்ள" கூட்டம் தற்குறிகளாக சுற்றிக் கொண்டிருந்ததாம்!! 😄

💥 ஆதித்த காரிகாலனை கொன்ற... தப்பு தப்பு... அவருக்கு முக்தி கொடுத்தவர்களாம்!!

💥 சங்கரமடம்தான் தமிழக தொல்லியல் துறையின் தலைமையகமாம்!!

oOo

தெலுங்கில் இக்கூட்டத்தை "பாவனவாலு" என்றழைக்கிறார்கள்.

பாவனவாலு - பாவனை செய்பவர்கள் - படம் காட்டுபவர்கள் - படங்காட்டிகள்!! 👌🏽

"நீதியுள்ள" இப்படங்காட்டிக் கூட்டம் மேலெழுந்த பின்னர், நம்மவர்கள் மீண்டும் மேலெழ முடியாமல்போனது. ஒரு வேளை, இவர்களைப் போன்று நம் முன்னோர்கள் "நீதியுள்ளவர்களாக" இருந்திருந்தால், இவர்களால் முன்னேறியிருக்க முடியுமா?

oOo

திரு ஸ்ரீதர ஐயவாள் காலத்தில், இவர்கள் வைத்ததுதான் சட்டமாக இருந்தது. அவ்வளவு வலுவுடனிருந்தனர். அப்போது, தும்மினால் பரிகாரம், இருமினால் பரிகாரம், நின்றால் பரிகாரம், உட்கார்ந்தால் பரிகாரம் என்று செல்வந்தர்களிடமிருந்து கறந்துள்ளனர். அன்றாட இறைவழிபாட்டிற்கும் பல கட்டுப்பாடுகளை, கடினமான நெறிமுறைகளை விதித்துள்ளனர். இவர்களது தொல்லை தாங்காத பலர், பாவாடை மதத்திற்கு மாறியுள்ளனர். இதை தடுக்கவும், இப்பீடைக் கூட்டத்திடமிருந்து நம் சமயத்தை காக்கவும், திரு ஸ்ரீதர ஐயவாள், திரு நாமப்போதேந்திராள் போன்ற பெரியோர்களால் தோற்றுவிக்கப்பட்டதுதான் நாம சங்கீர்த்தன இயக்கம்!!

பகவான், பாரதியார், உவேசா, பரிதிமாற்கலைஞர் என அவ்வப்போது சில முத்துகள் தோன்றியுள்ளன. மீதமனைத்தும் சொத்தைகள்தாம்!

அவா க்ஷேமா டப்பு பவந்து!

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

Monday, November 27, 2023

விளக்கீடு!! 🪔🪔🪔


🪔 நமது தொன்மையானத் திருவிழாக்களில் ஒன்றாகும். பூம்பாவை பதிகத்தில், "விளக்கீடு காணாமல் சென்றுவிட்டாயே?" என்று பாடி, பூம்பாவையை உயிர்ப்பிக்கிறார் காழியூர் பிள்ளை.

🪔 பரணி விளக்கு

பரணி நாள்மீனன்று காலையில், திரு அண்ணாமலையார் கருவறையிலிருந்து ஒரு விளக்கை வெளியே எடுத்துவந்து, 5 விளக்குகளை ஏற்றுவர். அன்று மாலை, இவ்வைந்து விளக்குகளையும் மீண்டும் ஒரு விளக்காக்கி, கருவறைக்குள் எடுத்துச் செல்வர்.

இதன் பொருள்: படைப்பென்பது ஐம்பொருட்களாகும் (பஞ்சபூதங்கள்). இவ்வைந்தும் உள்ளபொருளிலிருந்து (பரம்பொருள்) தோன்றியவையாகும். படைப்பின் முடிவில், ஐம்பொருட்களும் மீண்டும் தோன்றிய பொருளிலேயே ஒடுங்கிவிடுகின்றன.

🪔 திருக்கார்த்திகை விளக்கு

கார்த்திகை நாள்மீனன்று மாலையில், திருவண்ணாமலையின் முகட்டில் (ஆரியத்தில், உச்சி) விளக்கேற்றியதும், இல்லங்கள்தோறும் விளக்கேற்றுவர்.

இதன் பொருள்: விளக்குகள் எண்ணற்றவையாக, பல வகையாக இருந்தாலும் எரியும் நெருப்பு ஒன்றுதான். இதுபோன்று, உயிரிகள் கோடான கோடியாக இருந்தாலும், ஊர்வன, பறப்பன, நடப்பன என பலவகையாக இருந்தாலும், அவற்றினுள் இருக்கும் தன்மையுணர்வு ஒன்றுதான்!!

மேற்கண்ட பேருண்மைகளை திரு இடைக்காட்டுச் சித்தரோ, அல்லது, அவருக்கு பின் அங்கு வாழ்ந்த பெருமான்களோ உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கவேண்டும். எனவேதான், இத்திருவிழாவை திருவண்ணாமலையில் மிகச்சிறப்பாகவும், திருவண்ணாமலையை தொடர்புபடுத்தி ஏனைய இடங்களிலும் கொண்டாடுகிறோம்.

oOo

🌷 விளக்கு (அகல், மாவு, எலுமிச்சை, தேங்காய் … ) என்பது நம் உடலுக்கு சமம். அதில் எரியும் நெருப்பு என்பது நம் உயிருக்கு சமம். ஒரு விளக்கு எரிவதால் அதற்கு எந்த பயனும் கிடையாது. ஆனால், அதிலிருந்து வெளிப்படும் வெளிச்சம், வெப்பம், நற்புகை மற்றவர்களுக்கு பயனளிக்கிறது. அதாவது, எரியும் விளக்கு என்பது தன்னலமற்று வாழ்வதைக் குறிக்கிறது!

விளக்கேற்றுதல் = தன்னலமற்று வாழ்தல்!!

🌷 சிலருக்கு முயற்சி செய்யாமலேயே அல்லது சிறு முயற்சி செய்தவுடனேயே எல்லாம் கிட்டிவிடும். சிலருக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் எதுவும் கிட்டாது. எதிர்மறை விளைவுகள்கூட கிட்டும். எல்லாம் அவரவர் விதிப்படி நடக்கும். தனக்கு கிட்டாது என்பதை ஏற்றுக் கொள்ளும் முதிர்ச்சி அனைவரிடமும் இருக்காது. முயற்சியற்று அமைதியாக இருக்கவும் முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கு நம் பெரியவர்கள் காட்டிய வழி: கோயில்களில் விளக்கேற்று!

இதற்கு இரண்டு பொருட்கள் உள்ளன:

🔸 இறைபணியில் தன்னலமற்று ஈடுபடு
🔸 தன்னலமற்று ஊருக்காக உழை 

அக்காலத்தில் கல்விச்சாலை, நீதிமன்றம், நெற்களஞ்சியம் என ஊரே திருக்கோயிலிலிருந்து இயங்கியது. எனவே, "ஊருக்காக உழை" என்று சொல்லாமல் "கோயிலில் விளக்கேற்று" என்று சொல்லியிருக்கிறார்கள்.

பயன் கருதி எதையும் செய்தால்தான் பின்விளைவுகள் நம்மை பாதிக்கும். பயனை எதிர்பார்க்காவிட்டால் (தன்னலமற்று பணி செய்தால்) எதுவும் நம்மை பாதிக்காது.

கடமையை செய். பயனை எதிர்பார்க்காதே. — திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️_

🌷 “சாயங்காலம் வீட்டுல விளக்கேத்துமா” என்று பெண்களுக்கு பெரியவர்கள் அறிவுரை சொல்வதைக் கேட்டிருப்போம்.

சாயங்காலம் – இரவுக்கு முந்தைய – இருள் சூழ்வதற்கு முந்தைய பொழுது. குடும்பத்திற்கு இடர்பொழுது வருவதற்கு முன், தன்னலமற்று வாழும் மனப்பான்மையை குடும்பத்தலைவி வளர்த்துக் கொள்ளவேண்டும்.

ஓர் இல்லத்தில், கணவன்-மனைவி இடையே முறையான காதலும், பெற்றோர்-பிள்ளைகள் இடையே முறையான அன்புமிருந்து, இல்லத்தரசி தன்னலமற்று, குடும்பத்தின் நலனுக்காக பாடுபடுபவராக அமைந்துவிட்டால் அந்த இல்லத்தில் மனநிறைவுக்கும், மகிழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் குறைவிருக்குமா?

oOo

ஆழ்ந்த பொருளும், கண்கவர் காட்சிகளும் நிறைந்த நமது விளக்கீடுத் திருவிழாவினால் மிகவும் கவரப்பட்ட வடவர்கள், விளக்கேற்றுதலை அவர்களது தீபாவளி திருநாளோடு (திரு கண்ணபிரான் மெய்யறிவு பெற்ற நாள்) இணைத்துக்கொண்டார்கள்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, November 21, 2023

மடியிலே கனம் வழியிலே பயம்


(இதற்கு முந்தைய இடுகையில், ஒரு சிறு பகுதியாக எழுதியிருந்ததை, சற்று விரித்து, தனி இடுகையாக மாற்றியிருக்கிறேன். 🙏🏽)

இப்பழமொழியின் புறப்பொருள் அனைவரும் அறிந்ததே. இதன் உட்பொருளை பார்ப்போம்.

🔸 மடியில் - மடி+இல் - மடித்து வைக்கக்கூடிய வீடு - கூடாரம் - நமது தலைக்கு சமம்

🔸 கனம் - சுமை - செருக்கு - நான் இவ்வுடலென்ற தவறான எண்ணம். இவ்வெண்ணமே எல்லாவகையான பற்றுகளுக்கும் (சுமைகளுக்கும்) ஆணிவேராகும்.

🔸 வழியில் - வழி+இல்

   - இல் - வீடு - இருப்பிடம் - தற்போதைய நமது வாழ்க்கை
     - எனில், முற்பிறவியின் போது?
       அப்போதும், வழி+இல்-தான்.
     - அடுத்த பிறவியின் போது?
       அப்போதும், வழி+இல்-தான்.
     - இல் என்பது கிடைக்கும் பிறவியை குறித்தால், வழி என்பது... பிறவிகள் மாறினாலும் மாறாமலிருக்கும் நம்மை குறிக்கும்!!
     - இதனால்தான், நம்மில் நாமாக இருக்கும் முயற்சியை வழி+பாடு என்கிறோம். பாடு என்பது ஆரியத்தில் அனுபவமாகும். வழியாகிய அனுபவம்!

🔸 மீண்டும், தற்போதைய வழி+இல்-லுக்கு திரும்புவோம்:

நம்மை நாம் உடலாக காணும்வரை, வாழ்க்கையை கண்டு அச்சமடைந்து கொண்டுதானிருப்போம்:

- இன்று தொழில் நன்றாக நடக்குமா?
- நமது வேலை நிலைக்குமா?
- கடன் கிடைக்குமா?
- கொடுத்த கடன் திரும்பவருமா?
- பிள்ளைகளுக்கு நல்வாழ்க்கை அமையுமா?
...

அச்சம் நீங்கவேண்டுமெனில், சுமை நீங்கவேண்டும். சுமை நீங்கவேண்டுமெனில் நமதுண்மையை நாம் உணரவேண்டும். அதாவது, வழி+பாடாக (வழி என்ற அனுபவமாக) மட்டும் இருக்கவேண்டும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, November 17, 2023

இரும்பை மாகாளம் & மடியிலே கனம் வழியிலே பயம்


🌺🙏🏽🙇🏽‍♂️

🌷 திரு இரும்பை மாகாளம் உடையவர்
🌷 தேவாரப் பாடல் பெற்ற திருக்கோயில்
🌷 இத்திருவுருவின் கீழே திருநீற்று நிலையிலிருப்பது திரு கடுவெளி சித்தராவார்.
🌷 இப்பெருமானின் வாழ்வில் நடந்த நிகழ்வொன்றை மேற்கோள் காட்டி பகவான் திரு இரமண மாமுனிவர் பேசியுள்ளார்.

oOo

கருவறைத் திருவுருவின் கீழேயிருப்பது யாரென்று கேட்டால்,

- பெரும்பாலான ஆரியப்பூசாரிகள் குழம்பிப்போவார்கள் ("இவன் என்ன கேட்கிறான்?")

- சிலர் மழுப்பிவிட்டு ("அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே!"), அத்திருக்கோயிலின் புனைவுக்கதையை சொல்லி, "அந்த சுவாமிதான் இவர்" என்று சமாளிப்பார்கள்

- வெகுசிலர் திடுக்கிடுவார்கள் / திருட்டுமுழி முழிப்பார்கள் ("இவன் எப்படி கண்டுபிடித்தான்?", "இச்செய்தி எப்படி வெளியே வந்தது?", "இப்போது என்ன செய்வது?"...)

- ஒரு திருக்கோயிலிலிருந்த 50+ வயதான பூசாரி, "ஓகோ, உனக்கு அவ்வளவு தெரியுமா? எனக்கு எவ்வளவு தெரியுமென்று பார்!" என்ற வகையில், மறைக்கப்பட்ட உண்மைகளை வெளியே விடத்தொடங்கினார். 😈 ஜாப் செக்கியூரிட்டி கோவிந்தா-ஆவதைக் கண்டு, பதைபதைத்த அருகிலிருந்த இளம் பூசாரி, "மாமா!!" என்று அதட்டி, அவரை தன்னிலைக்கு திருப்பினார். 🤭

- ஆனால், இரும்பை திருக்கோயிலில் இருந்தவர் மட்டும், எவ்வித கலக்கமின்றி, தயக்கமின்றி, தெளிவாக, உள்ளேயிருப்பது திரு கடுவெளி சித்தரென்று சொன்னார். மடியில் கனமில்லாதவரென்று நினைக்கிறேன். 👏🏽👍🏽🙏🏽

oOo

மடியிலே கனம் வழியிலே பயம்

இப்பழமொழியின் புறப்பொருள் அனைவரும் அறிந்ததே. இதன் உட்பொருளை பார்ப்போம்.

🔸 மடி+இல் - மடித்து வைக்கக்கூடிய வீடு - கூடாரம் - நமது தலைக்கு சமம்
🔸 கனம் - செருக்கு - நான் இவ்வுடலென்ற தவறான எண்ணம். இவ்வெண்ணமே எல்லாவகையான பற்றுகளுக்கும் (கனங்களுக்கும்) ஆணிவேராகும்.
🔸 வழி - அன்றாட வாழ்க்கை

நம்மை நாம் உடலாக காணும்வரை, வாழ்க்கையை கண்டு அச்சமிருந்து கொண்டுதானிருக்கும்:

- இன்று தொழில் நன்றாக நடக்குமா?
- நமது வேலை நிலைக்குமா?
- கடன் கிடைக்குமா?
- கொடுத்த கடன் திரும்பவருமா?
- பிள்ளைகளுக்கு நல்வாழ்க்கை அமையுமா?
...

அச்சம் நீங்கவேண்டுமெனில், கனம் நீங்கவேண்டும். கனம் நீங்கவேண்டுமெனில் நமதுண்மையை நாம் உணரவேண்டும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, November 13, 2023

தீபாவளி எனும் உருவகத்தின் வெவ்வேறு வடிவங்கள்!!


🌷 திருவாரூரில் பிறக்க விடுதலை
🌷 தில்லையை காண விடுதலை
🌷 காசியில் இறக்க விடுதலை
🌷 திருவருணையை நினைக்க விடுதலை

மேலுள்ள புகழ்பெற்ற வரிகளின் பொருள்: மெய்யறிவு பெறுதல்!

இது போன்றதுதான் இணைப்புப் படத்திலுள்ள 5 வரிகள். வெவ்வேறு உருவகங்களாக இருந்தாலும் அவை மெய்யறிவு பெறுதலையே குறிப்பிடுகின்றன.

1. கண்ணபிரான் நரகாசுரனை கொன்றார்

🌷 நரகாசுரன் - "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம்.

கண்ணபிரான் - 5,125 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆரியரென்றும் கொள்ளலாம். அல்லது, நம் கண் முன்னே விரியும் வையகமென்றும் கொள்ளலாம். வையகத்தில் நாம் கண்ட / கேட்ட ஏதோவொன்று நமக்கு மெய்யறிவை கொடுக்கிறதென்று பொருள் கொள்ளலாம்.

(இணைப்புப் படத்திலுள்ள சொற்றொடர்களை எழுதியவர்கள் வைணவர்களாவர். இவர்களைப் பொருத்தவரை காண்பவனை விட காணப்படுவதே மேலானதாகும். இக்கண்ணோட்டத்தின் அடிப்படையில் பொருள் காணவேண்டும்.)

2. பாண்டவர்கள் 12 ஆண்டு கால காட்டு வாழ்விலிருந்து வெளிப்பட்டார்கள்

🌷 காடு - வையகம்
🌷 பாண்டவர்கள் - 5 பேர் - 5 புலன்கள்

மெய்யறிவு அடையும்வரை வையகத்திலிருந்து புலன்கள் வழியாக பெறப்படும் தரவுகளால் மனம் கட்டுண்டு கிடக்கும். மெய்யறிவு அடைந்த பிறகும், கண்கள் காணும், காதுகள் கேட்கும்... ஆனால், பாதிப்பிருக்காது. இதையே, "காட்டிலிருந்து புலன்கள் விடுபட்டன" என்ற உருவகப் படுத்தியுள்ளனர்.

3. இராமபிரான், இலக்குவன் & சீதையன்னை அயோத்திக்கு திரும்பினர்

🌷 இராமபிரான் - இருள். வைணவர்களுக்கு இருளே பெரிது. எனவே, முதலில் இடம் பெறுகிறது.
🌷 இலக்குவன் - ஒளி
🌷 சீதையன்னை - குளுமை
🌷 அயோத்தி - போர் நடக்காத இடம்

வையகம் என்பது போர் (அன்றாட வாழ்க்கை) நடக்குமிடம். இதற்கு எதிரான திருநீற்று நிலையென்பது போர் நடக்காத இடம் (அயோத்தி - அ+யுத்தா). அந்நிலைக்கு திரும்பும்போது, நாமிருப்போம் (ஒளி - இலக்குவன்); வெறுமையிருக்கும் (இருள்); ஜிஎஸ்டி-சூழ் வையகத்திலிருந்து தப்பினோம் என்ற குழுமையுமிருக்கும் (சீதை).

4. மன்னர் மகாபலியை ஒழித்து, அன்னை இலக்குமியை மீட்டார் குறளன் பெருமாள்

🌷 குறளன் பெருமாள் - வாமனர் - பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்பட்ட "நான் யார்?" போன்ற சின்னஞ்சிறு அறிவுரை.

🌷 மகாபலி - "நான் இன்னார்" என்ற நமது தனித்தன்மை

🌷 இலக்குமி - மெய்யறிவு

மெய்யாசிரியரின் அறிவுரையை தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால், ஒரு சமயத்தில், நமது தனித்தன்மை அழியும். மெய்யறிவு தானாக வெளிப்படும். இதையே மகாபலியை (நமது தனித்தன்மை) அழித்து, அன்னையை (மெய்யறிவு) மீட்டார் குறளன் பெருமாள் (அறிவுரை) என்று உருவகப்படுத்தியுள்ளனர்.

5. அன்னை இலக்குமி தோன்றிய நாள்

மெய்யறிவு தோன்றிய நாள்.

oOo

ஆக, உருவகங்கள் வெவ்வேறாக இருந்தாலும், அவையுணர்த்தும் பொருள் ஒன்றுதான்: தீபாவளி திருநாள் என்பது மெய்யறிவு கிடைத்த நாளாகும்!

🔸 யாருக்கு மெய்யறிவு கிடைத்த நாள்?

5,125 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கண்ணன் என்ற ஆரியப் பெருமானுக்கு மெய்யறிவு கிடைத்த நாள்.

🔸 இத்திருநாளுக்கும் வைணவத்திற்கும் தொடர்புண்டா?

சிறிதளவு கூட கிடையாது. வைணவம் மெய்யறிவுக்கு எதிரானது. தீபாவளித் திருநாளோ மெய்யறிவைப் போற்றுவது. மேலும், கண்ணபிரான் வாழ்ந்த காலத்தில் வைணவமே கிடையாது!

🔸 எனில், ஏன் அனைத்து உருவகங்களும் வைணவர்களுடையதாக உள்ளன?

கண்ணபிரான் ஓர் ஆரியர் என்பதைத்தவிர வேறு பதில் கிடையாது.

எவ்வாறு அரேபியர்களை குறிமதத்தான்கள் கொண்டாடுகிறார்களோ, ஐரோப்பியர்களை எம்எல்எம் மதத்தினர் கொண்டாடுகிறார்களோ, அவ்வாறே கண்ணபிரானை ஆரியர்கள் கொண்டாடுகிறார்கள். ("அவரு எங்க ஆளு!")

oOOo

கண்ணனே காண்பித்தான். கண்ணனே எழுதினான். 🌺🙏🏽🙇🏽‍♂️ (இங்கு கண்ணன் என்பது மாயையாகும். 5,125 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெருமானல்ல.)

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Saturday, November 11, 2023

அனைவருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!!!


💦👕🍥💥🎉🎊🪔

தீபாவளி என்றதும் நம் நினைவுக்கு வர வேண்டியவை நரகாசுரன் மற்றும் கங்கைக் குளியலாகும் ("கங்கா ஸ்நானம் ஆச்சா?"):

🪔 நம் உடலே நரகம். நாம் இவ்வுடல் என்ற தவறான எண்ணமே நரகாசுரன். இத்தவறான எண்ணத்தை விட்டொழித்தலே தீபாவளி - கொண்டாட்டம் - பெருமகிழ்ச்சி - மரணமில்லாப் பெருவாழ்வு - நிலைபேறு / வீடுபேறு!!

🪔 சிவபெருமானின் திருவுருவத்தில், அவரது முடிமேல் அமர்ந்திருக்கும் கங்கையன்னை என்பவர் நமது மனமாகும். அவரிடமிருந்து வெளிப்படும் நீரானது, ஓயாமல் நம் மனதில் தோன்றிக்கொண்டேயிருக்கும் எண்ணங்களாகும். இப்படிப்பட்ட ஓயாத வெளிப்பாடு, மெய்யறிவு பெறுவதற்கு முன், நமக்கு தொல்லையாக, நம்மை அலைக்கழிப்பது போன்று தோன்றும். மெய்யறிவு பெற்றபின், நம் மீது வீசும் தென்றல் காற்று போன்று, சாரல் மழை போன்று, இன்பமான அருவிநீர் போன்றாகிவிடும்.

கங்கையில் குளித்தீரா? = மெய்யறிவு பெற்றீரா?

ஒருவரைப் பார்த்து, "நீங்கள் நலமா?", "நன்றாக இருக்கிறீர்களா?" என்று கேட்கப்படும் கேள்விகளின் உட்பொருளென்ன? "நீங்கள் நலமுடன் இருக்கவேண்டும்", "நன்றாக இருக்கவேண்டும்" என்ற நலம் விரும்புதலேயாகும். இதுபோன்று, "கங்கையில் குளித்தீரா? (மெய்யறிவு பெற்றீரா?)" என்று கேட்பதின் உட்பொருள், "நீங்கள் மெய்யறிவு பெறவேண்டும்" என்ற நல்லெண்ணமேயாகும். இவையெல்லாம் "யாதும் ஊரே யாவரும் கேளிர்", "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற நமது முதிர்ந்த, மேன்மையான பண்பாட்டின் ஒரு வெளிப்பாடாகும்! 💪🏽💪🏽

oOo

🪔 கண்ணபிரான் உடல் உகுத்ததிலிருந்து தற்போதைய கலியுகம் தொடங்குவதாக கூறுகிறார்கள். தற்போதைய கலியுக ஆண்டு 5,125. அவர் 120 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தவர். எனில், ஏறக்குறைய 5,250 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவராவார்.

🪔 அவர் மெய்யறிவு பெற்ற நாளையே தீபாவளித் திருநாளாக கொண்டாடுகிறார்கள்.

🪔 மெய்யறிவு பற்றிய அவரது கண்ணோட்டத்தை, அல்லது, மெய்யறிவு அடைய அவர் காட்டிய வழியை, நரகாசுரனுடன் கண்ணபிரான் நடத்திய போராக உருவகப்படுத்தியுள்ளனர்.

🪔 ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்னர், தீபாவளியை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது மன்னர் திருமலை நாயக்கராவார். நாயக்க மன்னர்களின் ஆட்சி காலத்தில்தான் வைணவம் இங்கு நிலைபெற்றது. அன்னை மீனாட்சி, காமாட்சி... வகை அம்மன் வழிபாடு வளரத் தொடங்கியது. நவராத்திரி திருவிழாவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

(மன்னரோ ஒரு தெலுங்கு-வைணவர். அவரை வழி நடத்தியவர்களோ வடக்கத்திய பௌத்த-வைணவர்கள். அப்போதிருந்த பண்பட்ட மக்கள்திரளோ தமிழ்-சைவர்கள்! அறிமுகப்படுத்தப்பட்ட நகரமோ வடவரிடமிருந்து தமிழையும், தமிழரது சமயத்தையும் திருஞானசம்பந்தப் பெருமான் மீட்டெடுத்த மதுரை!! மன்னர் வழி மக்கள் செல்லாவிட்டால் கடும் தொல்லைகள் விளையும். இந்த இக்கட்டிலிருந்து மக்களை எப்படி காப்பாற்றலாமென்று நம் பெரியவர்கள் சிந்தித்ததின் விளைவுதான்... "கங்கையில் குளித்தீரா?"!!! ஒரு வைணவத் திருவிழாவிற்குள் சைவக்கூறு புகுந்ததின் பின்புலம் இதுதான்.)

🪔 தீபாவளியன்று வடவர்கள் விளக்கேற்றுவதை பார்க்கலாம். இதற்கும் கண்ணபிரானுக்கும் எந்த தொடர்புமில்லை. பிரான் உணர்ந்து வெளிப்படுத்திய பேருண்மை வேறு. விளக்கு வரிசை உணர்த்தும் பேருண்மை வேறு.

நளித் திங்களில் வரும் நிறைமதியன்று (கார்த்திகை - பெளர்ணமி) மாலையில், திருவண்ணாமலையின் உச்சியில் ஏற்றப்படும் பெரிய விளக்கை தொடர்ந்து, இல்லந்தோறும், ஊர்தோறும் விளக்குகள் ஏற்றப்படும். திருவண்ணாமலை / செஞ்சி போன்ற உயரமான மலையிலிருந்து பார்க்கும்போது, விளக்கொளி அலை அலையாக பரவுவது போன்றிருக்கும். இக்காட்சியினால் பெரிதும் கவரப்பட்ட வடவர்கள், கண்ணபிரானின் திருநாளோடு விளக்கிடுதலை சேர்த்துக்கொண்டனர்.

oOo


ஒரு தீபாவளி திருநாளுக்காக பகவான் திரு இரமண மாமுனிவர் எழுதிய பாடல்:

நர குடல் நானா நர குலகு ஆளும்
நரகன் எங்கென்று உசாவின்ஞானத் திகிரியால்
நரகனைக் கொன்றவன் நாரணன் அன்றே
நரக சதுர்த்தசி நல் தினமாமே

பொருள்: அழியும் இவ்வுடலா நான்? "இவ்வுடலை ஆளும் நரகாசூரன் எங்குள்ளான்?" என்று ஆராய்ந்து, தானே உள்ளபொருள் என்று தெளிந்து, அந்த மெய்யறிவினால் (ஞானத்திகிரி - பெருமாளின் கையிலுள்ள சக்கிராயுதம்) தான் இவ்வுடல் என்ற தவறான எண்ணத்தை (நரகாசூரனை) விட்டொழித்தவனே (கொன்றவனே) நாராயணன். அப்படி விட்டொழித்த நாளே நரகசதுர்த்தசி எனும் தீபாவளி நன்னாளாம்.

oOOo

கண்ணனே காண்பித்தான். கண்ணனே எழுதினான். 🌺🙏🏽🙇🏽‍♂️ (இங்கு கண்ணன் என்பது மாயையாகும். 5,125 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெருமானல்ல.)

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, November 9, 2023

கேதார கௌரி விரதம் & கேதார்நாத் - சிறு விளக்கம்


கேதார கௌரி விரதம் - சிறு விளக்கம்:

🌷 கேதாரம் - நிலம்

🌷 கௌரி - நல்ல / சிறந்த ஒளி

🌷 விரதம் - விலகியிருத்தல்

🔸 நல்ல நிலத்தில் என்ன செய்வார்கள்?

உழுது, செம்மையாக்கி, பயிர் செய்து, நல்ல விளைச்சல் பார்ப்பார்கள். இதுபோன்று, "என்னை செம்மையாக்கி, நல்லெண்ணங்களை பயிர்செய்து, நல்விளைவுகளை அறுவடை செய்துகொள், இறைவா!" என்று இறைஞ்சுவதுதான் இந்நோன்பின் நோக்கமாகும்!

🔸 அடுத்து, விரதமென்றால் விலகியிருத்தலென்று பார்த்தோம். எதிலிருந்து விலகியிருத்தல்?

படைப்பிலிருந்து விலகியிருத்தல்.

🔸 அடுத்து, படைப்பு என்றாலென்ன?

நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், நமதுடல் மற்றும் நம் கண் முன்னே விரியும் வையகக் காட்சி. அதாவது, தோன்றி மறையும் யாவும் படைப்பாகும்!

🔸 மேற்சொன்னவற்றையெல்லாம் விலக்கிவிட்டால், மீதமென்ன இருக்கும்?

"நான்" என்ற தன்மையுணர்வு மட்டும் மீதமிருக்கும்! வகை வகையாக பெயர்களை வைத்துக் கொண்டாலும், இந்நிலையை அடைவதுதான் எல்லா விரதங்களின் நோக்கமாகும். விரதமென்ற ஆரியச்சொல்லுக்கு சமமான தமிழ் சொல் "நோன்பு" ஆகும்.

oOo

அடுத்து, கேதார்நாத் என்ற பெயரின் உட்பொருளை சற்று சிந்திப்போம்.

கேதார்நாத் -> கேதாரம் + நாதன் -> நிலம் + தலைவன்.

🔸 எந்த நிலத்தின் தலைவன்?

வையகம் எனும் நிலத்தின் தலைவன்.

🔸 நிலத்தில் என்னென்ன நிகழ்கின்றன?

செடி கொடிகள் முளைக்கின்றன. அவற்றை பல்லுயிரிகள் உண்கின்றன. அவற்றை வேறுயிரிகள் உண்கின்றன. பிறகு, உயிரிகள் இறக்கின்றன. அவற்றின் உடல்கள் மண்ணோடு மண்ணாகின்றன. மீண்டும் அடுத்த சுழற்சி தொடங்குகிறது. இதற்கு சமமான நிகழ்வுகள்தாம் வையகத்தில் நிகழ்கின்றன.

பிறத்தல், வளர்தல், வாழ்தல், இறத்தல் என்ற சுழற்சி தொடர்ந்தவண்ணம் இருப்பதால், வையகம் எனும் அன்னையை நிலமாக கணக்கிட்டு, இவ்வையகம் தோன்றி, இருந்து, மறைய இடங்கொடுத்திருக்கும் உள்ளபொருளை (சிவத்தை) தலைவனாக கணக்கிட்டுள்ளனர். அந்த சிவமாக சமைந்த ஒரு பெருமான் குடியிருக்கும் (ஆரியத்தில், சமாதியாகியிருக்கும்) இடமே கேதார்நாத் ஆகும்!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, November 6, 2023

திரு மாகறல் பெருமான் - பெயர் விளக்கம்


(மாகறல், காஞ்சிபுரம் - திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற திருக்கோயில்)

கறல் - விறகு / கட்டை
மாகறல் - பெருங்கட்டை / சிறந்த விறகு

மெய்யறிவாளர்கள் என்பவர்கள் வருவதை வரவிட்டு, போவதை போகவிட்டு, முனைப்பற்று அப்படியேயிருப்பார்கள். அப்படிப்பட்ட மெய்யறிவாளர்களுள் தலைசிறந்தவர் இவ்வுடையவருக்கு கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான் என்பது பொருளாகும்.

இதே பொருளிலிருந்து உருவாக்கப்பட்டதுதான் தாணு (ஸ்தாணு) என்ற ஆரியப்பெயருமாகும்.

இவருக்கு அடைக்கலங்காத்தப் பெருமான் என்ற பெயருமிருக்கிறது.

அடைக்கலம் - புகலிடம் - பாதுகாப்பான இடம். எது அப்படிப்பட்ட இடம்? அவர் அடைந்திருக்கும் திருநீற்று நிலையே அப்படிப்பட்ட இடமாகும்! அடைக்கலங்காத்தவர் எனில்...

- தனது நிலையை காத்துக் கொண்டவர்
- தனது நிலையை விடாப்பிடியாக பற்றிக் கொண்டவர்
- தனது நிலையில் உறுதியாக இருந்தவர் 

என பொருள் கொள்ளலாம். இப்பொருளும், மாகறல் பெருமான் என்ற பெயரின் பொருளும் ஒன்றுதான்.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Sunday, November 5, 2023

ஒரு சொலவடைக்குள் நம் சமயம் மொத்தமும் அடக்கம்!! 😍


அண்மையில், பின்வரும் பழமொழி / சொலவடை கிடைத்தது:

அறியாதெனவெல்லாம் நிலையானவை
அறியும்தோறும், அறியாதன விலகும்
காட்டை திருத்த வயல்
மலையை திருத்த வீடு

இது முழுக்க முழுக்க மெய்யியல் சார்ந்ததாகும்! மிகவும் பண்பட்ட ஒருவரே இதை எழுதியிருக்கமுடியும்.

🌷 காட்டை திருத்த வயல்

ஒரு பகுதி காடாக இருக்குமானால், அதனால் மனிதர்களுக்கு பயனில்லை. அக்காட்டை சீர்திருத்தி, வயலாக மாற்றினால், குடியானவன் முதல் அரசன் வரை எல்லோருக்கும் பயனளிக்கும். (இன்று, காட்டை அழிப்பது குற்றமாகும் / தவறாகும். இதை அக்கால கண்ணோட்டத்தில் காணவேண்டும். தொண்டை மண்டலக் காடுகளை வெட்டி, சீர்திருத்தி வயல் நிலங்களாக மாற்றியதால்தான், கரிகாலச் சோழருக்கு "காடுவெட்டி" என்ற பட்டப்பெயர் சேர்ந்தது.)

மெய்யியலில், காடு என்பது வையகத்தை குறிக்கும். வையகம் என்பது மக்கள் திரள். பண்படாத மக்கள் திரளைக் கொண்ட வையகம் எப்படியிருக்கும்? அசல் காட்டுமிராண்டிகள் வாழும் பகுதிகளை (கொடிய காடுகளை) போன்றிருக்கும். இதுவே, பண்பட்ட மக்கள் திரளைக் கொண்ட வையகம் எப்படியிருக்கும்? நிலத்தை உழுது, பண்படுத்தி, விதைநேர்த்தி செய்து, நேர்ந்தெடுக்கப்பட்ட விதைகளை இட்டு, சரியான நேரத்தில் நீர் பாய்ச்சி, களையெடுத்த நெல் வயலைப் போன்றிருக்கும்!!

🌷 மலையை திருத்த வீடு

மனித உடலில் மலையென்பது தலையை குறிக்கும். ஐம்புலன்களில் 4 புலன்கள் தலையிலுள்ளன. விழிப்பு நேரத்தில் நாம் இயங்குவது தலையிலிருந்துதான். எல்லா எண்ணங்களும் தோன்றுவது தலைக்குள்தான். மனமானது விழிப்பு நேரத்தில் தலையிலிருந்து செயல்படுவதாக கணக்கு (உறக்கத்தில், அது இதயத்திற்குள் ஒடுங்கிவிடுகிறது).

மலையை திருத்த -> தலையை திருத்த -> மனதை திருத்த -> வீடுபேறு கிட்டும்.

🌷 அறியாதெனவெல்லாம் நிலையானவை

தற்போது, நம் கண் முன்னே விரியும் வையகத்தை நிலையானதாகவும், நம்மை நாம் நிலையற்றதாகவும் காண்கிறோம். ஆனால், நாம்தான் நிலையான பொருள்! அசைவும், அழிவும் நமக்கில்லை. இதை நாம் உணர்வதில்லை. இதையே, "அறியாதனவெல்லாம் நிலையானவை" என்று சொல்லியிருக்கிறார்கள்.

🌷 அறியும்தோறும், அறியாதன விலகும்

🔸 அறியும்தோறும் - நம்மைப் பற்றிய உண்மையை நாம் உணரும்போது.

🔸 அறியாதன விலகும் - வெகுநேரம், இச்சொற்றொடர் பொருந்தி வராமல், தகராறு செய்து கொண்டிருந்தது. பின்னர், "அறி" என்பதை "அரி" என்று மாற்றிப்பார்த்தேன். பொருந்திவிட்டது!

அரி என்ற சொல்லுக்கு பல பொருட்களுண்டு. இங்கு பெருமாள் & வண்டு ஆகிய பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதலில், பெருமாள்.

பெருமாளுக்கு ஆரியத்தில் ஹரி என்றொரு பெயருண்டு. இந்த ஹரி தமிழில் அரி என்று மாறும்.

பெருமாள் என்பதென்ன? நம்மை தவிர மீதமனைத்தும். மனம், உடல் & வையகக் காட்சிகள் யாவும் பெருமாளாகும்.

🔅 அறியும்தோறும், அரியாதன விலகும் - நம்மைப் பற்றிய உண்மையை நாம் உணரும்போது, மனம், உடல் & வையகக் காட்சிகள் விலகிப்போகும். அதாவது, அவற்றின் உண்மைத்தன்மையை நாம் உணர்ந்துகொள்வதால், அவற்றினால் பாதிப்படையமாட்டோம் என்பது பொருளாகும்.

அடுத்தது, வண்டு.

மெய்யியலில், வண்டு என்பது மனதைக் குறிக்கும். ஏனெனில், வண்டிற்கு ஐந்து கண்களுள்ளன. ஐந்து கண்கள் = ஐம்புலன்கள். ஐம்புலன்களின் வழியாக இயங்குவது... மனமாகும். வண்டானது ஒரு பூவில் நிற்காது. ஒவ்வொரு பூவாக தாவிக்கொண்டேயிருக்கும். இதுபோன்று, மனமும் ஓர் எண்ணத்தில் நிற்காது. எண்ணம் விட்டு எண்ணம் தாவிக்கொண்டேயிருக்கும்.

🔅 அறியும்தோறும், அரியாதன விலகும் - நம்மைப் பற்றிய உண்மையை நாம் உணரும்போது, மனமானது அதன் வலுவை இழந்துவிடும். ஓயாமல் எண்ணங்களை தோற்றுவித்து, நம்மை பாடாய்படுத்திக் கொண்டிருந்த மனமானது, அதன் வலுவை இழந்து, ஒடுங்கிவிடும்.

இவ்வகையில், பெருமாள் & வண்டு ஆகிய இரு சொற்களுமே ஒரே பொருளைதான் கொடுக்கின்றன!

இனி, எழுத்துப்பிழை இல்லாத பழமொழியை / சொலவடையை மீண்டுமொரு முறை பார்ப்போம்:

அறியாதெனவெல்லாம் நிலையானவை
அறியும்தோறும், அரியாதன விலகும்
காட்டை திருத்த வயல் 
மலையை திருத்த வீடு

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, October 31, 2023

பரிகாரம் - சிறு விளக்கம்


(எனக்குத் தெரிந்த பெரியவரொருவர் பரிகாரத்தின் மீது தனக்கிருந்த நம்பிக்கையையும், தனது பெற்றோர் செய்த பரிகாரத்தினால்தான் தான் பிறந்ததாகவும் சொன்னார். அவருக்கு நான் கொடுத்த பதிலே இவ்விடுகையாகும்.)

பரிகாரம் பற்றி அடியேனுக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு பதிவு செய்கிறேன்.

பரிஹார என்ற ஆரியச்சொல்லின் தமிழாக்கமே பரிகாரம் ஆகும். இச்சொல்லிற்கு "ஒதுக்கி வைப்பது", "தள்ளி வைப்பது", "விட்டு விடுவது" என்று பொருள் கொண்டு, எதையெதையோ செய்கிறார்கள். இவையனைத்தும் தவறாகும்!

பரிஹார - பரி + ஹார - சுற்றி + நகை / காப்பு. நம்மைச் சுற்றியுள்ள ஒரு பாதுகாப்பு வளையம் என்று பொருள் கொள்ளலாம். நடைமுறை என்று வரும்போது, இந்த பாதுகாப்பு வளையத்தை தாங்குதிறன் என்று மாற்றிக்கொள்ளலாம்.

பழமையான திருக்கோயில்களுக்கு சென்றுவருவதினாலும், முதிர்ந்த சமயப் பெரியவர்களிடம் வாழ்த்துகளை பெறுவதினாலும், கொடுப்பினை இருப்பின், தேவையான தாங்குதிறன் கிடைக்கலாம். ஆனால், வருவதை மாற்றவோ / தடுக்கவோ முடியாது. அப்படியொரு கோயிலுக்கு சென்று வந்தபின், அல்லது, ஒரு பெரியவரிடம் வாழ்த்து பெற்றபின், நமது இடர் களைகிறதெனில், அதுவும் கொடுப்பினையில் இருக்கவேண்டும். இல்லையெனில், நிகழாது.

தங்களது பெற்றோர் திருப்புல்லாணிக்கு சென்றதும், அங்கு ஒரு சிங்களவரை சந்தித்ததும், அவர் தங்களது பிறப்பை முன்கூட்டியே தெரிவித்ததும் தங்களது பெற்றோரின் கொடுப்பினையில் இருந்திருக்கவேண்டும். இல்லையெனில், நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

மெய்யறிவு அடைந்தபின் பகவான் திரு இரமண மாமுனிவரிடமிருந்து வெளிப்பட்ட முதல் அறிவுரை:

அவரவர் பிராரப்தம் பிரகாரம், அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆகலின், மௌனமாய் இருக்கை நன்று.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Tuesday, October 24, 2023

ஆக்கம் பெருக்கும் மடந்தையின் (ஆரியத்தில், சரசுவதி) திருநாள்!


அன்னையின் தமிழ் பெயர்கள்: பேச்சாயி, வெள்ளாயி, சொற்கிழத்தி, கலைமகள், நாமகள், பாமகள்...

அன்னையின் ஆரியப் பெயர்கள்: சரசுவதி, சாரதா, வாக்தேவி, பாரதி, வாணி, ஹம்சவாகினி...

சரசுவதி என்ற பெயரைப் பற்றி மட்டும் சிந்திப்போம்: சரஸ் + வதி - நீர் நிலையில் இருப்பவர்.

உடன், அவரது நிறத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்: நீர் நிலையில் இருப்பவர் + வெள்ளையாக இருப்பவர்.

எது இப்படிப்பட்ட பொருள்? நமது மூளை!!

(பலர் நாக்கை மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள். இது தவறாகும். பேச்சுக்கலைக்கு மட்டும் அவர் கடவுளில்லை. அனைத்து கலைகளுக்கும் கடவுளாவார். எனவே, மூளையென்று எடுத்துக் கொள்வதே சரியாகும்.)

மூளையை அறிவின் இருப்பிடமாக கருதுவது மரபாகும். (மூளையிருக்கா? - அறிவிருக்கா?)

அறிவை எப்படி வளர்க்கலாம் & பாதுகாக்கலாம்?

இதற்கு விடையாக, அன்னையின் திருவுருவைப் பற்றி சிந்திக்கலாம்.

🌷 அன்னையின் கையிலுள்ள ஏடுகள் - நல்ல நூல்களை கற்கவேண்டும்.

🌷 ஜெபமாலை - கற்றதை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்தி பார்க்கவேண்டும்.

🌷 வீணை மீட்டுதல் - கற்பதோடு நிற்காமல், கற்றதை செய்துபார்க்கவேண்டும்.

🌷 அன்னப்பறவை - தேவையற்றதை ஒதுக்கிவிட்டு, தேவையானதை கொள்ளும் பகுத்தறிவு.

🌷 மயில் - இப்பிறவியில் கற்பது இனி வரும் பிறவிகளிலும் உதவும். மயிலின் தோகையிலுள்ள கண்கள் பிறவிகளுக்கு சமம்.

🌷 நீர்நிலை (ஆறு / குளம்) - அசைவது / மாறிக்கொண்டேயிருப்பது - வையகத்தை குறிக்கும். நாம் கற்கும் யாவும் வையகத்திலிருந்து கிடைத்தவையே.

🌷 வெள்ளை நிற ஆடை - அகத்தூய்மை.

🌷 மடித்திருக்கும் வலதுகால் - கற்றதைக் கொண்டு வாழ்க்கையை வாழ்.

(இடதுகால் மடிந்திருந்தால் - மெய்யறிவை நோக்கி பயணி. இரு கால்களையும் மடித்து, சம்மணமிட்டிருந்தால் - வாழ்க்கையையும் வாழ் & மெய்யறிவின் மீதும் ஒரு கண்ணை வை.)

🌷 அன்னையின் கணவரான நான்முகன் - நான்கு திசைகளை குறிக்கும். அத்திசைகளிலிருந்து வரும் செய்திகளையும், தரவுகளையும் குறிக்கும்.

oOo

மெய்யியலில் பெண்ணுருவமும், நீர்நிலையும் நிலையற்றதை குறிக்கும். எனில், நிலையற்ற வையகத்திலிருந்து பெறப்படும் நிலையற்ற அறிவை நாமகள் குறிக்கிறார் என்று கொள்ளலாம். எனில், நிலையான அறிவு என்பதெது? அது எங்கிருந்து கிடைக்கிறது? யார் தருகிறார்கள்? இது பற்றி வேறோர் இடுகையில் அலசுவோம். 🙏🏽

oOo

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் நல்லம்மை - தூய
உருப் பளிங்கு போல்வாள் நம் உள்ளத்தின் உள்ளே
இருப்பாள் அங்கு வாரா திடர்!

அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆற்றங்கரை சொற்கிழத்தி திருநாள் நல்வாழ்த்துகள்!! 🙏🏽🙏🏽

📖🦢🪔☀️

(கம்பர் பெருமானின் பாடலை சற்று மாற்றியுள்ளேன். 🙏🏽)

(ஆக்கம் பெருக்கும் மடந்தை, ஆற்றங்கரை சொற்கிழத்தி -- ஒட்டக்கூத்தர் பயன்படுத்திய பெயர்களாகும். 🙏🏽)

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, October 22, 2023

தட்சிண கயிலாயமா? உத்திர திருவண்ணாமலையா?


👊🏽 பாரதத்தின் மான்செஸ்டர்
👊🏽 பாரதத்தின் டெட்ராயிட்
👊🏽 பாரதத்தின் நெப்போலியன்

சமுத்திர குப்தர் வாழ்ந்தது 4ஆம் நூற்றாண்டில். நெப்போலியன் வாழ்ந்தது 18ஆம் நூற்றாண்டில். சமுத்திர குப்தர் ஒரு பேரரசர். நெப்போலியன் ஒரு சிற்றரசன். சமுத்திர குப்தர் வெற்றிவாகை சூடியவர். நெப்போலியன் தோற்று மடிந்தவன். இவ்வளவு வேறுபாடுகளிருந்தும், நயவஞ்சக வெள்ளையர்களை உயர்த்திக் காட்டுவதற்காகவும், நம்மை தாழ்த்துவதற்காகவும், நம் மனதில் அடிமை மனப்பான்மையை வளர்ப்பதற்காகவும் சமுத்திர குப்தரை நெப்போலியனோடு ஒப்பிட்டு சிறுமைபடுத்தியிருப்பார்கள்.

இதுபோன்றொரு நயவஞ்சக செயல்தான் திருவருணையை "தட்சிண கயிலாயம்" என்றழைப்பதாகும்!! 👊🏽👊🏽

💥 திருக்கயிலாயத்தின் வயது இலட்சங்களில். திருவருணையின் வயது கோடிகளில்.

💥 புவிப்பந்தின் வயதில் மூன்றிலொரு பங்கு வயதுடையது திருவருணை. ஒப்பிடுகையில், திருக்கயிலாயமோ அண்மையில் தோன்றியது. 

💥 இருவிடங்களிலும் பல பெருமான்கள் வடக்கிருந்து (ஆரியத்தில், தவமிருந்து) திருநீற்று நிலையை (ஆரியத்தில், சமாதி) அடைந்துள்ளனர். ஆனாலும், "அடிக்கொரு இலிங்கம்" என்ற புகழ் திருவருணைக்குத்தான் உண்டு (அத்தனை பெருமான்கள் திருநீற்று நிலையிலுள்ளனர் என்பது பொருளாகும்!).

💥 இயக்கமற்ற உள்ளபொருளுக்கு (சிவம்) வலப்புறத்தையும், எண்ணங்கள் & காட்சிகளை தோற்றுவிக்கும் ஆற்றலுக்கு (அன்னை) இடப்புறத்தையும் ஒதுக்கலாமென்று முடிவு செய்யப்பட்டது திருவருணையில்தான்!

🙏🏽 "திருக்கயிலாயம் சிவன் குடியிருக்கும் இடம் மட்டுமே. திருவண்ணாமலையோ சிவனேயாவார்!" என்பது பகவான் திரு இரமண மாமுனிவரின் வாக்காகும்.

🙏🏽 செயற்கரிய செயல்கள் புரிந்து, தம்மை நாடி வந்த திரு காரைக்கால் அம்மையாரையும், திரு அப்பர் பெருமானையும் தமிழகத்திற்கே திருப்பியனுப்பி வைத்து, திருவாலங்காட்டிலும், திருவையாறிலும் குடியிருக்கும் பெருமான்களை சிறப்பித்தனர் அன்று திருக்கயிலையில் உடல் தாங்கியிருந்த பெருமான்கள்.

ஆனால், வயிற்றுப் பிழைப்பிற்காகவும், குறி மதத்தான்களிடமிருந்து உயிர் தப்புவதற்காகவும் இங்கு வந்து தஞ்சமடைந்த புல்லுருவிகள், காரியம் செய்யப்பட வேண்டிய ஆரியத்தையும், சிறு பிள்ளைகள் வைத்து விளையாட வேண்டிய உயிரற்ற பொம்மைகளையும், நெருப்புக்குழிகளையும் வைத்துக்கொண்டு, "தட்சிண கயிலாயம்", "தட்சிண கங்கை" என்று வாழ்வளித்த மண்ணின் அடையாளங்களை சிறுமை படுத்திக்கொண்டிருக்கின்றன!!! 👊🏽👊🏽👊🏽🤬😡

திருக்கயிலாயத்தை திருக்கயிலாயமாக பார்ப்போம். திருவருணையை திருவருணையாக பார்ப்போம்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, October 13, 2023

ஆங்கில மொழி பெயர்ப்பில் ஆரியம் கலக்காதபோது, தமிழில் மட்டும் ஏன் ஆரியம் கலந்திருக்கவேண்டும்?


👆🏽 பகவான் திரு இரமண மாமுனிவரிடமிருந்து வெளிப்பட்ட ஒரு பொன் மொழி.


அப்பொன்மொழியின் ஆங்கில மொழி பெயர்ப்பு 👆🏽.

ஆங்கில மொழி பெயர்ப்பில் ஆரியம் கலக்காதபோது, தமிழில் மட்டும் ஏன் ஆரியம் கலந்திருக்கவேண்டும்?

கேட்டால், பகவான் அப்படித்தான் பேசினார் என்பார்கள். பிறப்பால் மட்டுமே பகவான் ஆரியராவார். மனதளவில் அவர் தமிழராவார். திருநெறிய தமிழை அவர் விரும்பினார் என்பதற்கு அவர் வாழ்விலிருந்தே பல சான்றுகளை கொடுக்கமுடியும். அவர் வளர்ந்த & வாழ்ந்த சூழ்நிலையால் ஆரியம் கலந்து பேசினார். இரண்டன்மையை (ஆரியத்தில், அத்வைதம்) பற்றிய தூயத்தமிழ் நூல் இல்லையென்ற குறையை போக்கியவர். ஆரியத்தை கலந்து அன்னைத்தமிழை குறையாக்கும் பணியை தெரிந்து செய்திருக்கமாட்டார்.

இன்று பகவான் உடல் தாங்கியிருந்து, அவரிடம் நாம், "பகவானே, தாங்கள் இப்படி பேசினால் எங்களுக்கு சரியாக புரிவதில்லை. தயவு செய்து, ஆரியம் கலக்காமல் விளக்க வேண்டுகிறோம்." என்று வேண்டினால், மகிழ்ச்சியுடன் தூயத்தமிழில் விளக்குவார்; அல்லது, முயற்சியாவது செய்வாரென்று உறுதியாகக் கூறலாம்.

oOo

பகவானின் பொன்மொழி என்றுமுள தென்தமிழில் - சற்று விரிவாக:

மனமானது நமது தன்மையுணர்வில் ஒருமுகப்பட்டிருக்கவேண்டும். எண்ணங்கள் எழுந்து, மனதின் ஒருமுகம் சிதறுமானால், "அந்த எண்ணங்கள் யாருக்காக தோன்றின?" என்று ஆராயவேண்டும். இப்படி ஆராய்வதால், எழுந்த எண்ணங்கள் அடங்கிவிடும்; மனமும் மீண்டும் தனது வேரான தன்மையுணர்விற்கு திரும்பிவிடும்.

சற்று சுருக்கி:

மனதின் ஒருமுகம் சிதறுமானால், ஏன் சிதறியதென்று ஆராய வேண்டும். இப்படி ஆராய்வதால், அது தனது வேரில் ஒடுங்கிவிடும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Wednesday, October 4, 2023

நாகபஞ்சமி - புனைவுக்கதையும் உட்பொருளும்


🔸 புனைவுக்கதை:

அர்ஜூனனின் பேரனான மன்னர் பரிட்சித்து, தட்சகன் என்ற பாம்பு கடித்து இறந்துவிட, அவரது மகன் ஜனமேஜயன், 7 நாட்களுக்குள் அந்த பாம்பை கொல்ல உறுதி பூண்டு, "பாம்பு வேள்வி" நடத்துகிறார். பார் எங்குமிருக்கும் பாம்புகள் தாமாக வந்து வேள்வித்தீயில் விழுந்து மாண்டுபோகின்றன. மீதமிருப்பது தட்சகன் மட்டுமே. அப்பாம்பு இந்திரனின் அரியணையை இறுகப் பற்றிக்கொண்டுவிடுகிறது. இதையறிந்த வேள்வி நடத்துவோர், முன்னைவிட மிகுந்த முனைப்புடன் வேள்வியை நடத்துகின்றனர். ஒரு சமயத்தில், இந்திரனின் அரியணை ஆட்டம் காணத் தொடங்குகிறது. இது கண்ட இமையார் (ஆரியத்தில், தேவர்) மானசாதேவி என்ற பாம்புகளின் கடவுளை வேண்டுகிறார்கள். அவர் தனது மகனான ஆஸ்திக முனிவரை ஜனமேஜயனிடம் அனுப்பி, வேள்வியை நிறுத்தச் செய்கிறார்.

🔸 உட்பொருள்:

🌷 ஜனமேஜயன் - மெய்யறிவு தேடி, வடக்கிருப்பவர் (ஆரியத்தில், தவமிருப்பவர்)

🌷 வேள்விக்குழி - நமதுடல்

🌷 வேள்வித்தீ - நான் எனும் நமது தன்மையுணர்வு

🌷 வேள்வி செய்யும் முனிவர்கள் - மெய்யாசிரியர்களின் அறிவுரைகள். "மிகுந்த முனைப்புடன் வேள்வியை நடத்துதல்" எனில் அவ்வறிவுரைகளை முனைப்புடன், இடைவிடாது சிந்தித்தல் & கடைபிடித்தலாகும்.

🌷 தீயில் வந்துவிழும் பாம்புகள் - எண்ணங்கள், தளைகள், பற்றுகள். எண்ணங்கள் தாமாகத் தோன்றுகின்றன என்பதை குறிக்கவே, பாம்புகள் தாமாக வந்து தீயில் விழுந்தனவென்று உருவகப்படுத்தியுள்ளனர்.

🌷 தட்சகன் எனும் பாம்புகளின் தலைவன் - "நான் இவ்வுடல்" என்ற எண்ணம். இவ்வெண்ணமே மற்றெல்லா எண்ணங்களுக்கும், பற்றுகளுக்கும் அடிப்படையாவதால், இதை பாம்புகளின் தலைவனாக உருவகப்படுத்தியுள்ளனர்.

🌷 இறுதியாக வரும் ஆஸ்திக முனிவர் - "நீயே உள்ளபொருள்" என்ற வாலறிவு / மெய்யறிவு. இவ்வறிவு கிடைத்ததும் எல்லாம் நின்று போகும். இதையே ஆஸ்திக முனிவர் வேள்வியை தடுத்து நிறுத்தினார் என்று பதிவு செய்துள்ளனர்.

oOo

👎🏽 பாம்புகள் எனில் எண்ணங்கள், தளைகள் & பற்றுகள் என்று முன்னமே பார்த்தோம். எண்ணங்கள் எங்கிருந்து தோன்றுகின்றன? மனதிலிருந்து. எனில், பாம்புகளின் தலைவி = மானசாதேவி = மனம் = மாயை / பெருமாள்!

மானசாதேவியை வேண்ட, அதாவது, மனதை வேண்ட மெய்யறிவு (ஆஸ்திக முனிவர்) கிடைக்குமென்று உருவகப்படுத்தி இருக்கிறார்கள்!! இது முற்றிலும் தவறாகும். (சிங்கம் திரைப்படத்தில், லாரியை கடத்திக் கொண்டுவரும் கிட்நாப் சிங்கிடம், மோட்டார் வண்டியை கொடுத்துனுப்பிவிட்டு, அவர் கொண்டுபோய் சேர்த்துவிடுவார் என்று ஏட்டு எரிமலை நம்புவதற்கு சமமாகும். 😃)

அடைந்து கிடக்கும் ஓர் அறையில், இடத்தை உருவாக்க, அவ்விடத்தை அடைத்துக்கொண்டிருக்கும் பொருட்களை அகற்றினால் போதும். இங்ஙனமே, நம் மனதை அடைத்துக்கொண்டிருக்கும் பற்றுகளை, தளைகளை ஒழித்தால் போதும். நம்மை பற்றிய அறிவு - மெய்யறிவு - தானாக ஒளிரும். அதாவது, மானசாதேவியை (மனதை) விட்டொழிக்கவேண்டும்! அவரிடம் வேண்டக்கூடாது!!

👎🏽 "முன்னைவிட மிகுந்த முனைப்புடன் செய்யப்பட்ட வேள்வியால் இந்திரனின் அரியணையே ஆட்டங்கண்டது. அச்சமடைந்த இமையார் மானசாதேவியை வணங்கினர்."

இப்பகுதியை ஆராயத் தேவையேயில்லை. ஆரியப் பூசாரிகளையும், அவர்களது விருப்பத் தொழிலான வேள்வி செய்தலையும் உயர்த்திக் காட்டுவதற்காக எழுதப்பட்டப் பகுதியாகும்.

oOo

மொத்தத்தில், இந்த புனைவுக்கதையிலிருந்து நமக்கு கிடைக்கும் செய்தி: முனைப்புடன், நம்பிக்கையுடன் & இடைவிடாது வடக்கிருந்தால் மெய்யறிவு பெறலாம்!!

oOo

அடுத்து, ஜனமேஜயனின் தந்தையை பற்றி சற்று பார்ப்போம்.

ஜனமேஜயனின் தந்தை பரிட்சித்து மன்னர், பாம்புக்கடியிலிருந்து தப்பிப்பதற்காக, குறிப்பிட்ட காலம் கடக்கும்வரை, பாதுகாக்கப்பட்ட ஓர் உயரமான கட்டிடத்தில் உண்ணாநோன்பிருப்பார். ஆனால், காலம் கடப்பதற்குள், தான் ஆபத்திலிருந்து தப்பிவிட்டதாக எண்ணி, ஒரு பழத்தை உண்ணத் தொடங்குவார். அதற்குள்ளிருந்த தட்சகன் அவரை கடித்துவிட, மாண்டு போவார்.

🌷 உயரமான கட்டிடம் - நமதுடல்

🌷 பாதுகாக்கப்பட்ட கட்டிடத்திலிருந்தார் - புலன்களை வென்றிருந்தார்

🌷 உண்ணாநோன்பிருந்தார் - மனதில் தோன்றும் எண்ணங்களையும், கண் முன்னே விரியும் காட்சிகளையும் ஒதுக்கித் தள்ளினார்

🌷 பழத்தை உண்ணுதல் - ஆசைக்கு இடங்கொடுத்தல் / மனதின் எழுச்சிக்கு இடங்கொடுத்தல் / தன்மையுணர்விலிருந்து விலகுதல்

🌷 தட்சகன் கடித்தல் - உடல்-வையகச் சிறையின் தொடக்கமான "நான் இவ்வுடல்" என்ற தப்பெண்ணத்திற்கு இடங்கொடுத்தல்

மொத்தத்தில், இப்புனைவுக்கதை தரும் செய்தி: புலன்களை வென்று, எவ்வளவு கடுமையாக வடக்கிருந்து, மெய்யறிவு பெற்றிருந்தாலும் தன்மையுணர்விலிருந்து சற்றே விலகினாலும் அவ்வளவுதான்... கோவிந்தா!! உடல்-வையகச் சிறைக்குள் மீண்டும் சிக்கிக்கொள்வோம்.

oOo

🌷 நாக சதுர்த்தி - மனதை போற்றும் திருநாள்

🌷 கருட பஞ்சமி - அறிவை போற்றும் திருநாள்

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻