Sunday, May 31, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #33: கனபொருள், அடியினை - சிறு விளக்கம்

கரத்தில் இனிய கனபொருளைத் தந்தும்
சிரத்தில் அடிஇணையைச் சேர்த்தும் - பரத்தும்
இகத்தும்அலை வாராமல் என்குருவாய் ஆண்ட
மகத்துமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #33

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

"அக வாழ்க்கையிலும், புற வாழ்க்கையிலும் தடுமாறாமல் இருக்கும் பொருட்டு இரண்டு பொருட்களை என்னிடம் கொடுத்து என்னைக் காப்பாற்றினார் பெருமதிப்பிற்குரிய எனது மெய்யாசிரியர் குகைநமச்சிவாயர் 🌺🙏🏽" என்கிறார் குரு நமச்சிவாயர் 🌺🙏🏽. அவை என்ன பொருட்கள்?

🔸சிரத்தில் அடிஇணையைச் சேர்த்தும் - தலையில் திருவடிகளை வைத்து என்பது நேரான பொருள்.

ஒரு முறை, பருமனான உடலைக் கொண்ட சற்று வயதான பெண் ஒருவர் பகவானின் 🌺🙏🏽 முன் 108 முறை விழுந்து வணங்க முற்பட்டார். அவரது சிரமத்தைக் கண்ட பகவான, "எதற்கு இந்த சர்க்கஸ் வேலை? பகவானின் உண்மையான திருவடி உனக்குள்ளே இருக்கிறது. அதை இறுகப் பிடித்துக் கொள்." என்று அறிவுறுத்தினார்.

ஆக, திருவடி என்பது நம்முள்ளே இருக்கிறது - நான் என்ற தன்மையுணர்வே அது! அவ்வுணர்வில் நிற்பதே அதை இறுகப்பிடிப்பது!! இதுவே "அடிஇணையச் சேர்த்து" என்பது. இதுவே நிலைபேறு. மற்றதெல்லாம் அலைபேறு. 😊

🔸கரத்தில் இனிய கனபொருளைத் தந்தும் - புற வாழ்க்கையில் தடுமாறாமல் - ஆணவம் தலை தூக்காமல் இருக்க - ஒரு கனமான பொருளைக் கொடுத்திருக்கிறார் குகை நமச்சிவாயர். என்னவாக இருக்கும்?

எனது சிற்றறிவிற்கு 2 பொருள்கள் தோன்றுகின்றன:

1. திருவோடு - பிச்சையெடுத்து உண் என்று அறிவுறுத்தியிருப்பார். பகவானும் திரு முருகனார் சுவாமிகளுக்கு 🌺🙏🏽 இந்த அறிவுரையைக் கொடுத்துள்ளார். ஆடி மாதங்களில் அம்மனுக்கும், புரட்டாசி மாதங்களில் பெருமாளுக்கும் பிச்சையெடுப்பதின் உள்நோக்கம் ஆணவமழிப்பதே. ஆக, திருவோடு ஆணவத்தை அடக்கும் ஒரு கனமான பொருளானாலும், "இனிய" என்ற அடைமொழி திருவோட்டிற்கு பொருந்துமா? அடுத்த பொருளைப் பார்ப்போம்.

2. தமிழ் - ஆம். அன்னைத் தமிழ் ஒரு கனமான பொருளே!

தனது இழிந்த நிலையை எண்ணி கண்ணீர் சிந்தி, தற்கொலை செய்து கொள்ள முயன்ற அருணகிரிநாத சுவாமிகளை 🌺🙏🏽 தடுத்தாட்கொண்ட அவரது மெய்யாசிரியர் 🌺🙏🏽 (கோபுரத்து இளையனார் திருக்கோயில் இவரது சமாதி), மேற்கொண்டு அருணகிரிநாதர் நிலை தடுமாறாமல் இருக்க பயன்படுத்திய கனபொருள் - நமது நிறைமொழி! விளைவு: திருப்புகழ்!!

சமண மதத்தின் பக்கம் சாய முயன்ற பேரரசர் முதலாம் குலோத்துங்க சோழனைக் கட்டியிழுத்து நிலைபெறச் செய்து, அவரையும், சைவத்தையும், தமிழரையும் காப்பாற்றிய கனபொருள் தெய்வத் தமிழ்!! உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரிய கூத்தபிரான் 🌺🙏🏽 அடியெடுத்துக் கொடுத்து, சேக்கிழார் நாயனார் 🌺🙏🏽 பெற்றெடுத்த பெரியபுராணத் தமிழ்!!

புறவாழ்க்கையில் தடுமாறாமல் இருக்க குகை நமச்சிவாயருக்கு கொடுக்கப்பட்ட இனிய கனபொருள் "தன் நேர் இலாத" தமிழ் தான் என்பது எனது கருத்து! 🙏🏽 தமிழை முறையாக ஆறுமுக நாவலர், மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உவேசா, பரிதிமாற்கலைஞர், கதிரைவேற் பிள்ளை போன்ற திருவுடையோரிடம் கற்றாலே போதும் நிலைபேற்றினை அடைந்துவிடுவோம். (இன்று தமிழ்துறை பெரும்பாலும் இந்து சமய, சமூக, பாரத எதிரிகளால் நிறைந்திருக்கிறது. இவர்களிடம் தமிழ் கற்பதை விட கூகுளில் வடக்கிருக்கலாம். 😁)

🔸மகத்துமலை - மகத் என்ற ஆரியச் சொல் பெருமதிப்பிற்குரிய, மிக உயர்ந்த, வலிமையான, பெரிய போன்ற பொருள்களைத் தரும். மகான் என்ற ஆரியச் சொல்லும் இதிலிருந்துதான் வருகிறது.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Friday, May 29, 2020

காசியில் இறப்பது, இராமாயணத்தில் நடு எழுத்துக்கள் ரா,ம - விளக்கம்

"ராம" என்ற பெயர்ச்சொல்லின் மேன்மையைக் கூறுவதற்காக இரு வெவ்வேறு செய்திகளை இணைத்து ஒரு பெட்டிச் செய்தியை உருவாக்கியிருக்கிறார்கள் (தினமலர் - ஆன்மிகமலர் - 03/04/2020)

#ராம என்பது மரா என்ற ஆரியச் சொல்லின் எதிர் உருவமாகும். மரா என்றால் இறப்பு. எனில், ராம என்பது இறப்பற்றதாகும். உடன், இனிமை, இன்பம், குதூகலம் போன்ற பொருள்களையும் குறிக்கும்.

🌷 "காசியில் இறப்பவர்களின் காதில் ராமநாமத்தை சிவபெருமானே ஓதுகிறார்"

🔥 கமலாலயத்தில் (திருவாரூர்) பிறக்க முக்தி
🔥 தில்லையைக் காண முக்தி
🔥 காசியில் இறக்க முக்தி
🔥 அண்ணாமலையை நினைக்கவே முக்தி

இவையனைத்தும் ஒன்றையே குறிக்கின்றன!

#காசி எனில் காசி மாநகரம் அல்ல. புருவ மத்தியும் அல்ல. காசி எனில் ஒளிமயமான இடம்! அறியாமை என்ற இருள் சிறிதும் இல்லாத இடம். மெய்ப்பொருளே அவ்விடம். (பொருள் எவ்வாறு இடமாகும்? துய்த்தால் தான் புரியும்! 😊) அவ்விடத்தில் இறப்பது என்பது நமது தனித்துவத்தை இழப்பது. "நான் இன்னார்" என்பதிலுள்ள இன்னார் தொலைந்து, நாம் நாமாக இருப்பது. இதுவே கமலாலயத்தில் பிறப்பது, தில்லையைக் காண்பது மற்றும் அண்ணாமலையை நினைப்பது!! (பகவான் திரு ரமணரது 🌺🙏🏽 வாக்கு)

காசியில் இறந்த பின்னர் - அறியாமை இருள் விலகிய பின்னர் - நான் என்ற தன்மையுணர்வை அடைந்த பின்னர், நாம் துய்ப்பது எல்லையில்லா, முடிவில்லா பேரின்பத்தை!! இந்தப் பேரின்பத்தையே "#ராமநாமம்" என்றும், இந்தப் பேரின்பம் தன்மையுணர்வை அடைந்த அடுத்த கணம் வெளிப்படுவதால், "சிவபெருமான் ஓதினார்" என்றும் உருவகப் படுத்தியிருக்கிறார்கள்.

🌷 "இராமாயணத்தை எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு மீதமிருந்த இரண்டு எழுத்துக்களை சிவபெருமான் எடுத்துக்கொண்டார்"

இதுவும் மேற்சொன்னது போலத்தான்!!

இங்கு இராமாயணம் குறிப்பது நமது பற்றுகளை - பற்றுகளால் நிறைந்த வாழ்க்கையை!! அனைத்தையும் விட்டால் தான் நிலைபேறு கிட்டும் - சிவமாக முடியும். சிவமானால் தான் ராமநாமம் உச்சரிக்க முடியும் - பேரின்பத்தை துய்க்கமுடியும். இந்த பேரின்பத்தை (ராமனை) சிவத்திலிருந்து (தன்மையுணர்விலிருந்து) பிரிக்கமுடியாது. எனவே தான், "மீதமிருந்த இரண்டு எழுத்துகளை சிவபெருமான் வைத்துக் கொண்டார்" என்று உருவகப்படுத்தி இருக்கிறார்கள்.

அனைத்து பற்றுகளையும் துறந்து, சிவநிலையை அடையும் போது தான் உணருவோம் "நாம் என்றுமே சிவம் தான்" என்று!! எனவே தான் சிவபெருமான் இராமாயண சுவடிகளையும், எழுத்துகளையும் பிரித்துக் கொடுத்தார் என்று உருவகப்படுத்தி இருக்கிறார்கள்.

"பற்றுகளை விடுவது", "அனைத்தையும் துறப்பது" என்பது பாடுபட்டு பல காலம் சேர்த்ததை எல்லோருக்கும் தூக்கிக் கொடுத்து, நாமே நமக்கு நாமம் போட்டுக்கொள்வதல்ல! இதோ, இதற்கும் உள்ளது பகவானது அருமையான விளக்கம்: ஆத்மாவோடு அநாத்மாவை சேர்க்காமல் இருப்பதே துறவு!! 👌🏽👏🏽🙏🏽

"நான் இன்னார்" என்பதிலுள்ள நான் என்பது ஆத்மா, இன்னார் என்பது அநாத்மா - உயிரற்றது - நமது விருப்பு, வெறுப்பு, நம்பிக்கை, குறிக்கோள், அடையாளம் என அனைத்தும். இவற்றைத் துறந்தாலே போதும்.

கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

வட பாரதத்திலிருந்து வந்த சமண, பௌத்த மொட்டைகள் காலத்திலிருந்து இன்றைய பகல் கொள்ளை... 🤭 மன்னிக்கவும்... மக்களாட்சி & உலகமயமாக்கம் வரை நாம் பறி கொடுத்தது & பறி கொடுத்துக் கொண்டிருப்பது ஏராளம்!! சாங்கியம், சடங்கு, சம்பிரதாயம், கடமை, நியாயம், தானம், தர்மம், உறவுகள், தீர்த்த யாத்திரை, மெக்காலே கல்வி, சொந்தக் காசில் சூனியம் (இட ஒதுக்கீடு, 100 நாள் திட்டம்), வழிப்பறி (வரிகள், எரிபொருள், நெடுஞ்சாலை சுங்கம்) 🥵... இவையெல்லாம் போதாது என்று இருக்கும் கோவணத்தை தேவர்கள், முனிவர்கள், அசுரர்களுக்கு பிரித்து தர வேண்டுமாம்!!

👊🏽 அனைத்தையும் துறந்தவர்களே முனிவர்கள். அவர்களுக்கு மேலும் எதற்கு?
👊🏽 முப்பத்து முக்கோடி தேவர்களில் பெரும்பாலானவை நுண்ணுயிரிகள் மற்றும் உடலையும் உலகையும் இயக்கும் தத்துவங்கள். இவைகளுக்கு ஏன் காசு தேவைப்படுகிறது?
👊🏽 அசுரர்கள் தான் இன்று அரசியல்வியாதிகளாக ஆட்சியில் உள்ளனர். சங்க நிதி, பதும நிதி தோற்றுப்போகும் அளவிற்கு பணம் வைத்திருப்பவர்களுக்கு எதற்கு இந்த சில்லறை?

மேற்சொன்ன முடி இறக்குதல், காது குத்துதல், காதுல பூ சேவைகள் எல்லாம் நடக்கும் என்பதாலோ என்னவோ துறவுக்கு, அருமையான துல்லியமான விளக்கத்தை கொடுத்திருக்கிறார் பகவான்!!

(பாலைவன மதங்களிலும் இதே கோவணத்தை உருவும் கதைதான்!! நம் சமயத்தில் நம்மவர்களின் கோவணத்திற்கு மட்டும் குறி வைப்பார்கள். பாலைவன மதங்களில், அவர்களது கோவணத்தை கையில் வைத்துக் கொண்டு, மற்றவர்களின் கோவணத்திற்கு குறி வைப்பார்கள். ஊரான் கோவணத்தை உருவுவதற்கு அவர்களுடைய டுபாக்கூர் கையேடுகளில் இருந்து மேற்கொள் வேறு காட்டுவார்கள்!! 😁)

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #32: மேன்மைபுனை, தோன்றாமலே ஒளிக்கும் - சிறு விளக்கம்

செகம்மருவும் ஐம்புலனில் சேராமல் ஞானச்
சுகம்மருவ மேன்மைபுனை தொண்டர் - அகம்மருவும்
தூயமலை வஞ்சகர்க்குத் தோன்றாம லேஒளிக்கும்
மாயமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #32

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸செகம்மருவும்...தூயமலை - உலகை விரும்பும் ஐம்புலன்களோடு சேராமல், மெய்யறிவு தரும் சுகத்தை அடைய முயலும் தொண்டர்களின் அகத்தை விரும்பும் எம்பெருமான். (இது பாடல் வரிகளுக்கான நேரடி பொருள்)

🔹ஞானம், மெய்யறிவு, நிலைபேறு, ஆன்மா எல்லாம் ஒரே மெய்பொருளையேக் குறிக்கின்றன. சுகம் எனில் இணக்கம். மெய்ப்பொருளுடன் இணக்கம். "ஞானச்சுகம் மருவ" எனில் "மெய்ப்பொருளுடன் இணைய விரும்பி" என்று பொருள்.

🔹மேன்மைபுனை - சிந்திக்க வேண்டிய சொற்கள்!! மேன்மை - மேலான, உயர்ந்த. ஒரு செயலின் விளைவு அழகுடன் நயத்துடன் இருந்தால் அச்செயல் புனைவு எனப்படும் (கவிதை புனைதல்). எனில், மேன்மைபுனை - மேன்மையான செயல் எது? வடக்கிருத்தல்!! இறைவனின் திருநாமத்தை சொல்வது முதல் தன்னாட்டம் வரை அனைத்துமே வடக்கிருத்தல் தான். #மேன்மைபுனை தான். ஏனெனில், இவற்றின் விளைவால் வெளிப்படும் மெய்யறிவே உண்மையான அழகாகும். எனவே தான் எம்பெருமான் சுந்தரன் 🌺🙏🏽 என்றும் அழைக்கப்படுகிறார்.

🔹அகம் மருவும் தூயமலை - அகம் - மனம். மருவும் - விரும்பும். இறைவன் விரும்பும் பொருள் திரும்புமா? கோவிந்தா தான்!! (#கோவிந்தா எனில் போனால் திரும்ப வராது ☺️) மெய்ப்பொருளுடன் இணைய வேண்டி, வடக்கிருக்கும் தொண்டர்களின் மனதை அழித்திடுவார் எம்பெருமான்.

🔸வஞ்சகர்க்குத் தோன்றாமலே ஒளிக்கும் மாயமலை - அனைவருள்ளிருந்தும் ஒளிர்வது மெய்ப்பொருளே. வஞ்சகர்கள் இதை உணர்வதில்லை. இந்த உண்மை அவர்களுக்குத் தோன்றுவது கூட இல்லை. இப்படி தோன்றாமலே ஒளிர்வது எப்படி நடக்கிறது? மாயை என்னும் இறையாற்றலால். மாயமலை.

நமக்கும் தான் இந்த உண்மை தோன்றுவதில்லை. நமக்குள்ளிருந்தும் தான் மெய்ப்பொருள் ஒளிர்கிறது. எனில், நாமும் வஞ்சகர்களா? 😛 ஆம். நாமும் வஞ்சகர்களே. இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டுவது, இல்லாத ஒருவனாகக் காட்டிக்கொள்வது, இருள் நிறைந்திருப்பது எல்லாம் வஞ்சகம் தான். இவற்றில் நம்மிடம் இல்லாதது எது? 😄

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #31: "இருளும் அலை மாறாமல் எப்போதும் காட்சி அருளுமலை" - சிறு விளக்கம்

துன்பப் பசிதீர்க்கும் சுத்த சிவஞான
இன்பப் பசும்தேன் இருக்குமலை - அன்பர்க்கு
இருளும்அலை வாராமல் எப்போதும் காட்சி
அருளுமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #31

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

#இருளும் #அலை வாராமல் எப்போதும் காட்சி அருளுமலை - எண்ணங்களே இருளும் அலை! கடல் அலைகள் போன்று ஓயாமலும், சற்று விட்டுவிட்டும் நம்மை வந்து தாக்குவதால் எண்ணங்களை அலை என்று அழைக்கிறார் குரு நமச்சிவாயர் 🌺🙏🏽. வந்து வந்து தாக்கி நம் மீது அறியாமை என்னும் இருளை மீண்டும் மீண்டும் போர்த்திவிட்டுப் போகின்றன.

இது எப்போது ஓயும்? பகவானின் 🌺🙏🏽 பதில்: கோட்டைக்குள் எத்தனை வீரர்கள் இருந்தால் என்ன? அவர்கள் வெளியே வர வர வெட்டிக் கொண்டே இருந்தால், ஒரு சமயம் கோட்டை நம் வசப்படும்.

எத்தனை பிறவிகளாக எவ்வளவு வினைகளை சேமித்து வைத்திருக்கிறோமோ? இவைத் தீரும் வரை என்ன செய்வது? எப்படி நம்மை காத்துக் கொள்வது?

வெளியே செல்லும் போது, காணக் கூடாத காட்சி ஏதேனும் நாம் முதலில் கண்டால், பிள்ளைகளை வேறுபக்கம் பார்க்கச் சொல்கிறோம். அதாவது, ஒரு தீய காட்சிக்கு தீர்வு... இன்னொரு நல்ல காட்சி! உலகு எனும் அறியாமை இருளுக்குத் தீர்வு சுத்த அறிவு ஒளியான மெய்ப்பொருள்!!

இருளானது அலையலையாகத்தான் நம்மைத் தாக்குகிறது. மெய்ப்பொருளோ எப்போதும் காட்சி கொடுத்து நம்மைக் காக்கிறது!!! எவ்வாறு?

நாம் எப்போதுமே நாமாகத்தான் - நான் எனும் தன்மையுணர்வாகத்தான் - இருக்கிறோம். இதை நாம் உணர்வதில்லை. நாம் ஒரு திரைக்கு சமம். நம் உடல் முதல் நாம் காணும் யாவும் திரையில் தோன்றும் காட்சிகளுக்கு சமம். இதே போன்று, கனவு, நனவு, தூக்கம் ஆகிய 3 நிலைகளும் நமக்கல்ல. மனதிற்குத்தான். இவையும் திரையில் தோன்றும் காட்சிகள் போன்றவைதான். நனவில், ஒரேயொரு முறை இறையாற்றல் காணும் காட்சியை விலக்கினால் போதும். நாம் யாரென்று உணர்ந்து கொள்வோம். நாமே தீயகாட்சிக்கு தீர்வான நல்ல காட்சி! நாமே எப்போதும் உள்ளபொருள்!!! நாமே எப்போதும் காட்சி தரும் அண்ணாமலை!!!

"கடவுளைக் காண்பது என்பது கடவுளை அறிவது. கடவுளை அறிவது என்பது கடவுளாய் ஆவது. கடவுளாய் ஆவது என்பது இருப்பது!! (To see God is to know God. To know God is to be God. To be God is to BE!!)" (பகவான்/சாதுஓம் சுவாமிகள் 🌺🙏🏽) நம்மைக் காண்பது என்பது நாமாய் இருப்பது!!

நாம் யாரென்று உணர்ந்தபின் இருளும் அலையென்ன, இருளும் ஆழிப்பேரலையே வந்தாலும் புன்முறுவலுடன் எதிர்கொள்வோம்!! (அலை எனும் காட்சி தோன்றி திரையை நனைக்கவாப் போகிறது? ☺️)

oOOo

ஒருநாள், ஒரு அன்பர் பகவானிடம், " பகவானே! உலகில் இவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் உள்ளனவே!" என்று கேட்டார். அதற்கு, பகவான், "ஆம். காண்பவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை உணர்த்தவே இந்த ஏற்றத்தாழ்வுகள்" என்று பதிலளித்தார்!! 👏🏽👏🏽👏🏽👌🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Tuesday, May 26, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #30: பிரான், வானவர், தேவர் - சிறு விளக்கம்

கண்டம் இருளக் கடுவிடத்தை வானவர்க்கா
உண்டுபிரான் ஆகி உதவுமலை - தொண்டர்
இணங்குமலை வானோரும் ஏனோரும் போற்றி
வணங்குமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #30

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

பிரான் என்று சொல்லை குரு நமச்சிவாயர் 🌺🙏🏽 பயன்படுத்திய விதம் சிந்திக்க வேண்டியது!

#பிரான் என்ற சொல்லுக்கு எல்லோருக்கும் இறைவன், அரசன், தலைவன் மற்றும் தந்தை ஆகிய பொருள்கள் உண்டு. இன்று பல தெய்வங்களைக் குறிக்க பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், ஆதியில் இது சிவபரம்பொருளை மட்டுமே குறிக்க பயன்படுத்தப்பட்டது.

🔹பிரான் ஆகி - எப்படி ஒருவர் பிரான் ஆக முடியும்? கொடிய விடத்தை வானவர்க்காக உண்டு.

🔹யார் #வானவர்? #தேவர்கள். முப்பத்து முக்கோடி தேவர்களில் பெரும்பாலானோர் நுண்ணுயிரிகளே!! நாம் இல்லாமல் இவ்வுலகு இயங்கும். ஆனால், நுண்ணுயிர்கள் இல்லாமல் இவ்வுலகு இயங்காது. மீதமுள்ளவை, உடலிலும் உலகிலும் இயங்கும் இயற்கை விதிகள் (ஈர்ப்பு விசை...), ஐம்பூதங்கள், பகலவன், நிலவு போன்ற கோள்கள். இவை எல்லாவற்றையும் சேர்த்தால் என்ன கிடைக்கும்? மொத்த உலகம்! 😊 வானவர்க்காக எனில் உலகுக்காக!! (மனிதர்களின் எண்ணிக்கை ஒரு பொருட்டே இல்லை. மொத்த உலக மக்கள் தொகையைவிட ஒரு கையளவு மண்ணில் அதிக நுண்ணுயிரிகள் இருக்கும்!)

🔹தன்னை பாதித்தாலும், தான் இறந்தே போனாலும் பரவாயில்லை என்று, தனது உலகுக்காக, கொடிய விடத்தைக்கூட அருந்தத் தயங்காதவரே பிரான் என அழைக்கப்பெறும் தகுதி பெற்றவர். இங்ஙனமே அரசன், தலைவன், தந்தை என விரித்துப் பொருள் கொள்ளலாம். (இவ்விதி இன்றைய ஆட்சியாளர்களுக்கு பொருந்தாது என்பது சிறு பிள்ளையும் அறிந்ததே. 😛)

🔹இவ்வளவு பாடுகளையும் பட்டு பிரான் நிலையை அடைவது எதற்காக? உதவுவதற்காக!! ("பிரான் ஆகி உதவுமலை")

🔹யாருக்கு உதவுவதற்காக? தன்னை நாடி வரும் அன்பர்களுக்காக.

🌷"ஐயே! அதிசுலபம் ஆன்ம வித்தை" என்று ஊக்குவித்து,
🌷 "மனத்தின் உருவை மறவாது உசாவு" என்று வழிகாட்டி,
🌷"தானாயிருத்தலே தன்னை அறிதலாம்" என்று இருத்துவதற்காக!! (இருத்து - நிலைபெறு - நிலைபேறு)

(எல்லாம் பகவான் திரு ரமணரது 🌺🙏🏽 பாடல் வரிகள்!!)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

பக்திக்கு தேவை குருட்டு நம்பிக்கை!! 😁

முதலில் வாட்ஸ்அப் வழியாக கிடைத்த பிட்:

ஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன?

கண்ணபிரானும், அர்ஜுனனும் சென்று கொண்டிருந்தபோது, மேலே பறந்த பறவையை அது புறா தானே, என்றார் கண்ணன். அர்ஜுனனும் ஆம் என்றான். இல்லையில்லை....கழுகு மாதிரி தெரிகிறது, என்றார் கண்ணன்.ரொம்ப சரி...அது கழுகே தான், என்றான் அர்ஜுனன்.மைத்துனா! சரியாகப் பார், அது கிளி மாதிரி பச்சையாக இல்லை... என்றதும், அதிலென்ன சந்தேகம், அது கிளி தான், கிளிதான், கிளிதான் என்றுமூன்று முறை அடித்துச் சொன்னான் அர்ஜுனன். என்னடா நீ!நான் என்ன சொன்னாலும், ஆமாம் சாமி போடுகிறாயே...!அது என்ன பறவை என தெளிவாகச் சொல், என்ற
கண்ணனிடம்,கண்ணா! என்பார்வையை விட உன்வார்த்தையில் எனக்கு நம்பிக்கைஅதிகம். மேலும், அந்தப்பறவையை நான் புறா என்று அடித்துச் சொன்னால், அதை கிளியாகவோ, கழுகாகவோ மாற்றிவிட, உனக்கு எவ்வளவு நேரமாகி விடும்! நீயே எல்லாம் என்றான பிறகு, எந்தப்பொருளும் எப்படி வேண்டுமானாலும் மாறுமே...! உன் சக்தியை மட்டுமே நான் நம்புகிறேன், என்றான்.

பார்த்தீர்களா! பக்திக்கு தேவை நம்பிக்கை தான்! புராணங்களில் அப்படி சொல்லியிருக்கிறதே... இப்படி சொல்லியிருக்கிறதே... நம்புகிற மாதிரி இல்லையே... என்று வாதம் செய்தால், பக்தி என்ற ஏணியின், முதல் படிக்கட்டில் கூட காலை வைக்க முடியாது.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !

oOOo

இது போன்ற கதைகள் ஆபத்தானவை! இப்படிப்பட்ட கதைகளை வைத்துத்தான் மோகன்தாஸ் முதல் அனைத்து இந்து எதிரிகளும் நம்மை அடக்கி, ஏமாற்றி, மோசம் செய்துள்ளனர். செய்து வருகின்றனர்.

குருட்டு நம்பிக்கைகளினால் விளைந்தவை தான் பாலைவன மதங்கள். நம் மண்ணில் விளைந்த சமயங்களும் மதங்களும் அறிவை அடிப்படையாகக் கொண்டவை.

நம்பிக்கை என்பது துய்ப்பினால், உள்ளுணர்வினால் ஏற்படவேண்டும். குருட்டுத்தனத்தினால் ஏற்படக்கூடாது. பகவான் திரு ரமணரும் 🌺🙏🏽, "நானே நேரில் தோன்றினாலும் நம்பாதே. உன் மீது மட்டுமே கவனம் செலுத்து." என்கிறார்.

"அறம் செய்ய விரும்பு" என்று மாணவர்களுக்கு பாடம் நடத்திவிட்டு, தான் மட்டும் பணம் செய்ய விரும்பும் ஆசிரியரின் நிலை ஒரு நாள் என்னவாகுமோ அது தான் இது போன்ற மூளைச்சலவை பிட்டுகளை கிண்டியவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

இவர்களால் நமது மதிப்பற்ற ரத்தினங்களும் மதிப்பிழந்து கொண்டிருக்கின்றன!! 😔

oOOo

தன்மையுணர்வில் அமிழ்ந்திருப்பதே பக்தி

-- ஆதிசங்கரர் 🌺🙏🏽

தானாக இருப்பதே #பக்தி. ஒருவன் எப்போதுமே அந்த நிலையில் தான் இருக்கிறான். அவன் உணர்வதில்லை. எண்ணங்களற்று இருப்பதே பக்தி. அதுவே முக்தியும் (விடுதலையும்) கூட.

-- பகவான் (அவரைத் தவிர வேறு யார் இவ்வளவு தெளிவாக, அழகாக விளக்கியிருக்க முடியும்!! 🌺🙏🏽)

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

oOOo

பி.கு.: அடுத்த முறை கிண்டும் போது அந்தந்தப் பகுதிகளில் தோன்றிய மாமுனிவர்களை, பெரியோர்களை, மன்னர்களை வைத்துக் கிண்டவும். இதே கதையை மறைஞான சம்பந்தர் - உமாபதி சிவாச்சாரியார், தாயுமான சுவாமிகள் - அவர்தம் மாணவர், குகை நமச்சிவாயர் - குரு நமச்சிவாயர், தத்துவராய சுவாமிகள் - தாண்டவராய சுவாமிகள் போன்ற மாமுனிவர்களை 🌺🙏🏽 வைத்து எழுதியிருந்தால் சற்று மதிப்பு கூடியிருக்கும்.

Monday, May 25, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #28: வாலமதி, வாலறிவு, வாலறிவன் - சிறு விளக்கம்

வால மதியை மவுலியின்மேல் வைத்தமலை
சீலமுனி வோர்கள் செறியுமலை - காலம்
கடந்தமலை சீறிவரும் காலனைக்கா லாலே
அடர்ந்தமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #28

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸சீல முனிவோர்கள் செறியும் மலை - ஒழுக்கம் நிறைந்த துறவியர்களால் நிறைந்த மலை. ஒழுக்கம் எனில் ஒழுங்கு, நல்லொழுக்கம் போன்ற பொதுவான பொருள்கள் அல்ல. "விட்டுக் கருதலின் ஆறு நெய் வீழ்ச்சி போல்" என்று பகவான் 🌺🙏🏽 பாடியது போன்ற ஒழுகலாறு! நான் என்ற தன்மையுணர்வை விட்டுவிட்டுக் கருதாமல், ஆற்றின் ஓட்டத்தைப் போல், உருக்கிய நெய்யின் வீழ்ச்சியை போல், விடாது கருதுபவர்கள் என்று பொருள்!!

🔸காலம் கடந்த மலை - நேரம், இடம் போன்ற யோசனைகள் எல்லாம் நமக்கே. இறைவனுக்கு அல்ல. அவர் எல்லாவற்றையும் தாண்டியவர். என்றும் இருப்பவர்.

🔸காலனைக் காலாலே அடர்ந்த மலை - திருக்கடவூர் மார்கண்டேய மாமுனிவரின் 🌺🙏🏽 வரலாறு. மரண பயம் போக்குதல். எனில், மெய்யறிவு வழங்குதல்.

🔸வால மதியை மவுலியின் மேல் வைத்த மலை - பிறைநிலவை தனது முடிமேல் வைத்திருப்பவர். சிவபெருமானின் (மெய்யறிவாளர்களின்) அடையாளங்களில் ஒன்று. #வாலமதி, #வாலறிவு, #வாலறிவன் ("கற்றதனால் ஆய பயனெனன்..." - திருக்குறள், திருவள்ளுவ நாயனார் 🌺🙏🏽) எல்லாம் அவர்களது உள்ள நிலையைக் குறிக்கும் சொற்களாகும். அது என்ன நிலை?

வா என்பது வெளியே வருவதைக் குறிக்கும். வால் என்பது ஒன்றிலிருந்து முளைத்த இன்னொன்றைக் குறிக்கும். முளைத்தது இல்லாமல் ஒன்று தனியாக இருக்க முடியும். ஆனால், அந்த ஒன்று இல்லாமல் முளைத்தது தனியாக இருக்க முடியாது. நாம் காணும் இவ்வுலகம் மெய்ப்பொருளில் இருந்து முளைத்தது. மெய்ப்பொருள் இல்லாமல் உலகம் இல்லை. ஆனால், உலகம் இல்லாமல் மெய்ப்பொருள் இருக்கும். இந்த உலகம் மெய்ப்பொருளில் இருந்து முளைப்பதை அறிந்தவரே வாலமதியன் - வாலறிவன் - மெய்யறிவாளன் - சிவபெருமான்!!

இந்த வாலமதி/வாலறிவு பலவிதமாக நமது சமயத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. சிலவற்றை இங்கு பார்ப்போம்:

🔹"நாம் காணும் இவ்வுலகம் நமக்குள் இருந்து தோன்றுவது" என்ற செய்தியை ஆன்மிக நூல்களில் படித்திருப்போம். சொற்பொழிவுகளில் கேட்டிருப்போம். இதன் சொந்தக்காரர் #ஜம்பு #மாமுனிவர் 🌺🙏🏽. #திருச்சி #திருவானைக்கா திருத்தலத்தில் மூலவருக்கு கீழ் சமாதியாகி உள்ளார். இவர் உணர்ந்து வெளியிட்டதை தலவரலாற்று சிற்பமாக, ஓவியமாக அத்திருத்தலத்தில் பல இடங்களில் வைத்திருப்பார்கள். அதில், மாமுனிவர் கூப்பிய கைகளுடன் அமர்ந்திருப்பார். அவரது தலையிலிருந்து ஒரு நாவல் மரம் வெளிப்பட்டிருக்கும். மாமுனிவர் - மெய்ப்பொருள். நாவல் மரம் - காணப்படும் உலகம். (சிற்பத்தில் மீதமிருக்கும் விடயங்கள், மெய்யறிவு கிடைத்த பின்னரும் நடக்கும் போராட்டத்தைக் குறிக்கும்.)

🔹அடுத்து, பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் 🌺🙏🏽. பெருமாள் படுத்திருக்கும் பாம்பணை, அவரை சுற்றியிருக்கும் அன்னையர், முனிவர்கள், கருடன், அனுமன் என அனைவரையும் ஒதுக்கிவிட்டு, பெருமாளையும் அவர் தொப்புளிலிருந்து முளைத்துள்ள நான்முகனை மட்டும் எடுத்துக் கொள்வோம். இப்போது, பெருமாள் மெய்ப்பொருளாவார். அவரிடமிருந்து முளைத்துள்ள தாமரையில் அமர்ந்திருக்கும் நான்முகன் உலகமாவார். ஜம்பு மாமுனிவர் நாவல் மரமாக சித்தரித்ததை, வைணவர்கள் தொப்புள்கொடி நான்முகனாக சித்தரித்துள்ளனர்.

🔹உமையன்னை நடனமாடுவது போன்றும், சிவபெருமான் காண்பது / வடக்கிருப்பது போன்றும் உள்ள ஓவியங்களும் இதே வாலறிவைத் தான் குறிக்கின்றன.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Sunday, May 24, 2020

மாதொருபாகன் - திரு உண்ணாமுலையம்மன் இறைவனின் இடப்பாகம் பெற்ற பழங்கதையின் உண்மைப் பொருள்!!



🔸பழங்கதை

ஒரு சமயம், திருக்கயிலையில் இறைவனும், இறைவியும் வீற்றிருக்கும் போது, இறைவி விளையாட்டாக இறைவனின் கண்களை கணப்பொழுது மூடினார். அந்த கணப்பொழுதில் உலகை இருள் சூழ்ந்தது; உயிர்கள் எல்லாம் வாடிப் போயின. இதனால், இறைவியும் பூவுலகில் பிறக்க வேண்டியதாயிற்று. இதையெண்ணி இறைவி வருத்தப்பட்டாலும், செய்த குற்றத்திற்கான தண்டனையை துய்த்துத்தான் ஆக வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். முதலில், காஞ்சி மாநகரையடைந்து, மண்ணால் சிவஅடையாளத்தை உருவாக்கி, வழிபட்டு, வடக்கிருந்து வந்தார். சில காலம் சென்ற பின், அவரது முயற்சிகளில் மகிழ்ச்சியடைந்த இறைவன் அவர் முன் தோன்றி, அவரை வாழ்த்தி, திருவருணை சென்று வடக்கிருக்க அறிவுருத்தினார். இறைவியும் திருவருணை வந்து, கெளதம மாமுனிவரின் 🌺🙏🏽 குடிலில் தங்கினார். அவரிடம் அண்ணாமலையாரின் பெருமையைக் கேட்டறிந்தார். அவரது உதவியுடன் மலைவலம் வந்தார்; அவரது அறிவுரையின்படி பவளக்குன்றில் வடக்கிருந்தார். ஒரு கார்த்திகை திங்கள் விளக்கீடு திருநாளன்று, இறைவன் தோன்றி, தனது இடப்பாகத்தை தந்தருளி, மாதொருபாகனாக காட்சியளித்தார்!! 🌺🙏🏽

oOOo

ஒரே கதைக்குள் பல செய்திகளை பதிவு செய்திருப்பார்கள். தத்துவம், வரலாறு, மருத்துவம், உடலியக்கம், வானவியல் என பல செய்திகள் இருக்கும்.

🔸இந்தக் கதையை தத்துவரீதியாக அணுகும் போது...

🔹திருக்கயிலாயத்தில் இறைவனும் இறைவியும் வீற்றிருத்தல் என்பது நிலைபேற்றினைக் குறிக்கும். பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 போன்ற மெய்யறிவாளர்களின் உள்ள நிலையை குறிக்கும்.

🔹இறைவனின் கண்களை இறைவி விளையாட்டாக மூடியதால்... - மெய்யறிவு பெற்ற பின்னும் வெகு எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். இல்லாவிட்டால், மீண்டும் உலக வாழ்க்கைக்குள் (பூவுலகில் பிறப்பது) சிக்கிக் கொள்ள வேண்டும். இப்படி சிக்கிக் கொண்டால், மீண்டும் ஆரம்பத்திலிருந்து வரவேண்டியிருக்கும்.

🔹முதலில், உடல் முதலானவற்றைப் பேணவேண்டும் (காஞ்சிபுரம் - மண் தலம் - உடல் முதலானவை. "மண்ணினாய விகாரமும் மண்ணே" - கண்ணபிரான் 🌺🙏🏽).

🔹பிறகு, பேணியவற்றை ஒதுக்கித் தள்ள வேண்டும் (திருவருணை - நெருப்பு - எரித்தல். "கற்றவை யாவற்றையும் ஒரு நாள் மறக்க வேண்டியிருக்கும்" -  பகவான்).

🔹அடுத்து, மெய்யாசிரியரைத் தேடியடைந்து, கடைத்தேறும் வழியை அறிந்து கொள்ள வேண்டும் (கௌதம மாமுனிவரிடம் அண்ணாமலையாரின் பெருமையைக் கேட்டறிதல்)

🔹பின்னர், மெய்யாசிரியர் காட்டிய வழியில் நம்பிக்கையுடன், உறுதியுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் (பவளக்குன்றில் இறைவி வடக்கிருந்தது. உலகியலில் ஈடுபடும்போது, உடல் என்பது "சோறிடும் தோல் பை" என்றாகிறது. மெய்யியலில் ஈடுபடும்போது அதே உடல் பவளக்குன்றாகிறது!)

🔹முடிவில், மீண்டும் மெய்யறிவு கிட்டும் (இறைவனின் இடப்பாகம், இறைவன் திருவடி, கயிலாய பதவி... என எல்லாம் இதுவே!!)

🔸கதையை வரலாற்று ரீதியாக அணுகும் போது...

(இறைவனின் கண்களை இறைவி மூடியதிலிருந்து பூவுலகு வருவது வரை விலக்கிவிட்டு, இறைவி காஞ்சிக்கு வருவதிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.)

உலகம் திரையில் தோன்றும் காட்சி போன்றது. திரை-அசைவற்றது-சிவம். காட்சி-அசைவது-சக்தி-இறைவனின் ஆற்றல். ஆதாரமான திரைக்கு வலப்பகுதியையும், அதில் தோன்றும் காட்சிக்கு இடப்பகுதியையும் கொடுத்துள்ளனர் நம் முன்னோர்கள். அணு முதல் அண்டம் வரை ஆராய்ந்து இம்முடிவுகளை எடுத்துள்ளனர். இந்த ஆராய்ச்சி முதலில் காஞ்சிபுரத்தில் நடந்திருக்கவேண்டும். பின்னர், திருவருணையில் முடிவு பெற்றிருக்கவேண்டும்.

கதையில், கெளதம மாமுனிவர் இடம் பெறுவதால், இந்த ஆராய்ச்சியில் அவரது பங்களிப்பு உள்ளது என்று கருதலாம்.

(இங்கு, இறைவி என்பது ஒரு சீவனையும் குறிக்கும்; பல சீவர்களையும் குறிக்கும். அதாவது, ஆராய்ந்தவர் தனி நபராகவும் இருக்கலாம். ஒரு குழுவாகவும் இருக்கலாம்.)

oOOo

எல்லாம் பகவான் திருவடிக்கே!! 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Friday, May 22, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #25 - "முன்நின்று முக்தி வழங்குமலை" - சிறு விளக்கம்



(அண்ணாமலையார் திருப்பாதம் 🌺🙏🏽, திருவண்ணாமலை உச்சி)

ஆதி நெடுமால் அயன்காண அன்றுபரஞ்
சோதிச் செழும்சுடராய்த் தோன்றுமலை - வேதம்
முழங்குமலை சிந்திப்பார் முன்நின்று முத்தி
வழங்குமலை அண்ணா மலை

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸நெடுமால் அயன் - மாயோன் & நான்முகன். அடிமுடிக் காணா அண்ணாமலை படலம். மாயோன் - அகந்தை/செல்வம். நான்முகன் - புத்தி/கல்வி. கல்வியாலும் செல்வத்தாலும் இறைவனை அடைய முடியாது என்று பொருள் கொள்ளலாம். அல்லது, புத்திக்கும் அகந்தைக்கும் அப்பாற்பட்டவர் இறைவன் என்று பொருள் கொள்ளலாம்.

🔸வேதம் முழங்குமலை - வேதம் என்ற ஆரியச் சொல்லின் சரியான பொருள் அறிவு. ஆனால், பொதுவான பொருள் மிக உயர்ந்த ஆன்ம அறிவு. இடைக்காட்டு சித்தர் (அண்ணாமலையார்) 🌺🙏🏽 முதல் இன்று வரை எண்ணற்ற மாமுனிவர்களை ஈர்த்து வைத்துக் கொண்ட தலம் திருவண்ணாமலை. இங்கு ஆன்ம அறிவு முழங்காமல் வேறெங்கு முழங்கும்? பகவான் திரு ரமணரின் 🌺🙏🏽 "நான் யார்?" என்ற 2 இரத்தினங்கள் போதுமே! கண்ணபிரான் 🌺🙏🏽 அமர்ந்த தராசுத் தட்டை, தான் வைத்த ஒரு துளசி இலையால் அன்னை ருக்மணி மேலெழுப்பியது போல், ஆரிய திருமறை நூல்கள் அனைத்தையும் ஒரு தட்டில் வைத்தாலும், பகவானது "நான் யார்?" என்ற 2 இரத்தினங்கள் போதும் தராசை சமமாக்க!! 💪🏽

🔸சிந்திப்பார் முன்நின்று முத்தி வழங்குமலை -
🔹முதலில், முக்தி (விடுதலை) என்றால் என்ன? பகவானது பதில்: "பந்தத்தில் இருக்கும் தான் யாரென்று விசாரித்து தனது யதார்த்த சொரூபத்தை தெரிந்து கொள்வதே முக்தி!"
🔹அடுத்து, பற்று (பந்தம்) என்றால் என்ன? உடலல்லாத நாம், நம்மை அழியும் உடலாக எண்ணிக் கொண்டிருப்பதே பற்று.
🔹இந்த பற்று எப்போது விலகும்? அதிபக்குவிகளாக இருந்தோமானால் மெய்யாசிரியரின் அறிவுரையைக் கேட்ட உடனே விலகிவிடும். இல்லையெனில், ஒரு சிறிய வெள்ளோட்டம் காட்டினால் தான் விலகும்.
🔹இந்த வெள்ளோட்டத்தை யார் காட்ட முடியும்? இறைவன் தான்!!

சரியான சமயம் வரும் போது, நாம் காணும் காட்சிகள் யாவும் மறைந்து நாம் நாமாக இருப்போம்!! 😍 இந்த ஒரு துய்ப்பில் அனைத்தும் புரிந்து போகும். 😌 இதுவரை கண் முன்னே காட்சிகளைக் காண்பித்த அதே ஆற்றல், இப்போது அவற்றை மறைத்து நம்மை - நான் என்ற தன்மையுணர்வை - நமக்கு காட்டுகிறது. இதைத் தான் "முன்நின்று முத்தி" என்று குரு நமச்சிவாயர் 🌺🙏🏽 பாடியுள்ளார்!!

கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

Thursday, May 21, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #24 - நீலகண்டன், தியாகராஜர், தாராதேவி - சிறு விளக்கம்



ஓலம்இடும் தேவர்குழாம் உய்யத் திருமிடற்றில் 
ஆலவிடம் தன்னை அடக்குமலை - நாலுமறை 
அந்தமலை நாயேனை ஆளக் குருவாகி 
வந்தமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #24

🔸நாலுமறை அந்தமலை - நான்கு மறைநூல்கள் முழுவதிலும் பலவிதமாக போற்றிப் பாதுகாக்கப்படும் பொருள் அந்த  சிவப்பரம்பொருளே.

🔸ஓலமிடும் ... அடக்குமலை - ஆமை திருவிறக்கக் (கூர்ம அவதாரக்) கதையில் வரும் நிகழ்வு. (இதை விளக்குவதற்கு தனி நூலே வேண்டும்! முதன் முதலில் படிப்பவர்களால் சிறிதும் நம்பமுடியாது!! கோபம் & வெறுப்பு கூடத் தோன்றலாம்!!!)

🔹ஆமை - புலனடக்கம்
🔹மந்தார மலை - மெய்யாசிரியர் காட்டிய வழி/உத்தி
🔹வாசுகி பாம்பு - நமது மூச்சுக்காற்று
🔹உள்ளே செல்லும் உயிர்வளி - தேவர்கள்
🔹வெளிவரும் கரியமிலம் - அசுரர்கள்
🔹கடையப்படும் கடல் - நமது உடல் 
🔹ஆலகால விடம் - நிர்விகற்ப சமாதி
🔹அன்னை பார்வதி - சமாதியிலிருந்து வெளிவரச் செய்யும் ஆற்றல்
🔹அன்னை தாரா - சமாதி துய்ப்பைத் திரும்ப திரும்ப நினைவு கூறச் செய்யும் ஆற்றல்

புலனடக்கத்துடன் ஆன்ம பயிற்சியில் ஈடுபடும் போது, அவரவர் முன்வினைப்படி, பல சித்திகள் முதலில் கைகூடும். இவையெல்லாம் வெறும் விடம் தான். தொடர்ந்து முன்னேறினால் நிர்விகற்ப சமாதி கைகூடும். இதுவே ஆலகாலம் எனப்படும் கொடிய விடமாகும்!! 

(தாகத்திற்காக தண்ணீர் கேட்டுவிட்டு, பல ஆண்டுகள் நிர்விகற்ப சமாதியில் இருந்து விட்டு, வெளிப்பட்டவுடன் ஒரு முனிவர் கேட்ட கேள்வி: தண்ணீர் எங்கே? ☺️ அதாவது, மனம் இறக்கவில்லை!! எனவே தான் இந்த சமாதி கொடிய விடம் எனப்பட்டது.)

நிர்விகற்ப சமாதியில் ஒருவர் (முனிவர் என்று கொள்க) இருக்கும் போது, அவரிடம் மீதமிருக்கும் பற்று ஏதேனும் ஒன்றை வைத்து, மாயை அவரை வெளியேத் தள்ள முயலும். இந்த மகாமாயையே பெருமானின் கழுத்தைப் பிடித்து, விடம் இறங்காமல் காத்த அன்னையாகிறார். மாயை முயன்றாலும், முனிவர் விரும்பினால் மட்டுமே வெளிவருவார். "சரி, விட்டுத்தான் கொடுப்போமே. இந்த பற்றையும் முடித்து விட்டு திரும்பவோமே." என்று விட்டுக் கொடுப்பார். உலக வாழ்க்கைக்கு திரும்புவார். "உலகம் காப்பாற்றப்பட்டது" என்பது இதுவே.

தனது பேரின்ப நிலையை விட்டுக் கொடுத்ததால் முனிவர் தியாகராஜர் ஆகிறார். ஆனால், இந்த துய்ப்பு அவரை விட்டகலாது. அதே சமயம், அவரது உடலின் இயக்கத்தைப் (உலக வாழ்க்கையை) பாதிக்காது. எனவேதான் விடம் கழுத்துடனே நின்றது என்றார்கள். இந்நிலையில் அவர் நீலகண்டன் எனப்படுகிறார். உலக வாழ்க்கைக்குத் திரும்பிய பிறகும் தனக்கு கிடைத்த துய்ப்பை அடிக்கடி நினைவில் கொள்வார். இந்த செயலை செய்யத் தூண்டும் ஆற்றலே அன்னை தாரா எனப்படுகிறார். 

பகவான் திரு ரமணரும் 🌺🙏🏽 திரும்ப திரும்பக் கூறும் அறிவுரைகளில் ஒன்று: உன் சொரூபத்தை நினைவில் கொள்!! 

பேயாரும் 🌺🙏🏽 இறைவனிடம் வைக்கும் இறுதி வேண்டுகோள்: உன்னை என்றும் மறவாதிருக்க வேண்டும்!!

கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

Tuesday, May 19, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #23 - "சிம்புள்" - சிறு விளக்கம்



நீற்றை அணிந்தமலை நீள்சுடராய் நின்றமலை
ஏற்றைப் பரியாக ஏறுமலை - கூற்றை
உதைத்தமலை அன்றுஅரியை ஓர்சிம்புள் ஆகி
வதைத்தமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #23

🔸ஏற்றைப் பரியாக ஏறுமலை - ஏறு-எருது-சிவன்காளை-மனம். பரி-குதிரை. மனதை வேகமாக விரட்டுபவர். மனதை இயக்குபவர். மனதின் தலைவனுமாகிய எம்பெருமான்.

🔸கூற்றை உதைத்தமலை - எமனை உதைத்த படலம். மார்கண்டேய மாமுனிவர் 🌺🙏🏽 மெய்யறிவு பெற்ற விதம். முதல் இறப்பு துய்ப்பு கிடைத்த பின்னர் என்ன நடந்தது என்பதை பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 விளக்குகிறார்: அத்தோடு மரணபயம் என்னை விட்டு விலகியது!! ஆக, கூற்றை உதைத்தல் என்பது மரணபயம் போதல். எனில், மெய்யறிவு பெறுதல் ஆகும்!!

🔸அரியை ஓர்சிம்புள் ஆகி வதைத்தமலை - சிம்புள்-எண்காற்புள்-நடுக்கந்தீர்த்த பெருமான்-சரபேசுவரர் 🌺🙏🏽 அரி-நரசிங்கம். இரணியனைக் கொல்ல தூணிலிருந்து வெளிப்பட்டவர். இரணியன்-ஆணவம். தூண்-தாணு-சிவம். ஆணவத்தை அழிக்க இறை வெளிவிட்ட தெளிவே நரசிங்கம் 🌺🙏🏽 இந்த தெளிவு கிடைத்த பின், இதுவே இறுதி நிலை என்று முடிவு செய்து விடுவோம். இது தவறு. இதற்கும் மேல் உள்ளும் புறமும் இணைந்த நிலையொன்று (சகஜ நிலை) உள்ளது என்பதைக் குறிப்பதே சிம்புள். சைவம் என்ற சொல்லின் பொருளும் "உள்ளும் புறமும் இணைந்தது" என்பதாகும்!!


🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

நாரதரின் வீணாகானம்!!



(தினமலர் - ஆன்மிக மலர் - 08/05/2020)

சீன தயாரிப்பான கொரோனா தொற்றுக்கிருமிகளால் அமெரிக்கா படும்பாடு பெரும்பாலும் உலகம் அறிந்ததே. உலகம் அறியாத ஒரு பாடாவிதியையும் அமெரிக்கா பட்டுக்கொண்டிருக்கிறது (சில களப்பணியாளர்களுக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம்): தொற்றால் இறந்துபோன உடல்களை மண்ணில் புதைத்தாலும் மக்குவதில்லையாம்!! இதற்கு காரணம்: அளவுக்கதிகமான மேற்கத்திய மருந்துகள்!! உடலினுள்ளும் நுண்ணுயிர்கள் இறந்துவிடுகின்றன. மண்ணிலுள்ள நுண்ணுயிர்களும் உடலை அணுகுவதில்லை.

இதற்கும் இணைப்புக் கட்டுரைக்கும் என்ன தொடர்பு? 

இணைப்புக் கட்டுரையைப் படித்தால், மேற்சொன்னபடி மண்ணில் புதைத்தாலும் மக்காத உடல் போலாகி விடுவோம்! கபாலம் காலியாகி எதற்கும் பயன்படாமல் போய்விடுவோம்!! 😂

தூங்கும் போதும் ஜபிக்கும் பழக்கம் வேண்டுமாம். 🙄 இந்த அறிவுரையை சிவபெருமான் கொடுத்தாராம். அவர் என்ன 23ஆம் புலிகேசியா? 😝 ஒரு வேலையை செய்வதற்கு மனமோ உடலோ வேண்டும். இரண்டு இல்லாத தூக்கத்தில் எப்படி ஜபிப்பதாம்?

கயிலாயத்திற்கே நேரில் சென்று எம்பெருமானை வணங்கும் பேறு பெற்றவர் ஏன் இலங்கை மாதையூருக்கு செல்லவேண்டும்? யார் ஒரிஜினல் சிவபெருமான்? யார் பாடிடபுள்? 😁

"ஒரு பயலையும் மெய்யறிவு பெற விடமாட்டோம்" என்று காப்புக்கயிறு கட்டிக்கொண்டு கிளம்பி வந்தார்கள் போலிருக்கிறது!! 😏

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

🔥 #நாரதர் சென்று வரும் மூவுலகங்கள் - கனவு, நனவு, தூக்கம். இவைகளுக்கு மூன்று உலகங்கள், நிலைகள், கோட்டைகள், நகரங்கள், விமானங்கள் என பல பெயர்கள் உண்டு. இந்த மூன்று நிலைகளுக்கும் மாறி மாறிச் சென்று வருபவர் - நாமே!

ஆம். நாமே நாரதர்!!

🔥 நாரதர் நினைத்த உடன் எங்கும் செல்பவர்

உடல் என்பது கருவி தான். மனம் தான் வினையாற்றுகிறது. நமது உடல் சென்னையில் இருந்தாலும், மனதால் திருவருணையை நினைத்தால் அங்கு இருப்பதாகத் தான் கணக்கு. உடலால் நாம் ஏதும் செய்யாவிட்டாலும், மனதால் ஒருத்தருக்கு தீங்கு நினைத்தால், தீங்கு செய்த கணக்கு தான். ஆக, நினைத்த உடன் எங்கும் செல்லும் நாரதர் எதைக் குறிக்கிறார்? நமது மனம்.

நாரதர் என்பது நாமே. நாரதர் என்பது மனமும் கூட. எனில், நாம் என்பது மனமே (சீவன்). மெய்யறிவு பெறும் வரை.

🔥 நாரதர் மீட்டும் வீணையின் பெயர் #மகதி

மகதி எனில் பெருமதிப்பிற்குரியது / குதூகலமானது என்று பொருள். எது அப்படிப்பட்ட கருவி? நமது உடல். நாரதர் எனும் மனம் மீட்டும் கருவி நமது உடலாகும். வீணையை மீட்டினால் ஒலி வெளிப்படும். நமது உடலை இயக்கினால் விளைவுகள் உண்டாகும்.

நாரதர்-வீணை (மனம்-உடல்) என்ற உருவகம் மெய்யறிவு பெறும் வரை பொருந்தும். பின்னர், கண்ணபிரான்-குழல் 🌺🙏🏽 (உயிர்-உயிரற்றது; உயிரே உயிரற்றதை இயக்குகிறது) என்று மாறும் (இந்த விளக்கத்திற்கும் வைணவத்திற்கும்  தொடர்பில்லை. வைணவம் கண்ணபிரானைக் காப்புரிமை கொண்டாடினாலும், கண்ணபிரான் வைணவத்தைச் சேர்ந்தவரல்லர். பிரானின் காலம் சுமார் 5000+ ஆண்டுகள். வைணவத்தின் வயது 1300+ ஆண்டுகள். வைணவக் குறியீடான நாமத்தின் வயதோ வெறும் 900+ ஆண்டுகள் தான்!).

🔥 நாரதர் கலகம் நன்மையில் முடியும்

நமது செயல்கள் யாவும் இறுதியில் - ஏதாவது ஒரு பிறவியில் - நிலைபேற்றில் முடியும்.

🔥 நாரதர் எப்பொழுதும் மாயோனின் எட்டெழுத்துப் பெயரை உச்சரித்துக் கொண்டேயிருப்பார்

பின்னே, மனம் உள்ளபொருளையாத் (சிவம்) தேடிப் போகும்? ☺️ இல்லாததின் பின் தான் ஓடும்! இன்றைய நிலையில் பணம், முகநூல் பக்கத்துக்கு லைக்ஸ், புகழ், விலையுயர்ந்த திறன்பேசி, ஒரு கட்டையை இழுத்துச் செல்ல 100 குதிரைத்திறன் கொண்ட எஸ்.யு.வி. என்ற மாயோன்களைத் (நாராயணர்களைத்) தான் தேடி ஓடும்!! 😁

#நாராயணா - மாயோன் - மயக்குபவர் - உள்ளபொருளை மறைத்து, இல்லாததை உள்ளது போல் காட்டுபவர்!

🔥 #மாதையூர் - #மாந்தையூர் - #மாந்தை - #மாதோட்டம் (மன்னார்) - #திருக்கேதீச்சரம்

தேவார பாடல் பெற்ற மிகப்பழமையான தலம். ஆளுடையபிள்ளையாராலும் 🌺🙏🏽, தம்பிரான் தோழராலும் 🌺🙏🏽 பாடப்பெற்ற தலம். இலங்கையில் உள்ள மிக முக்கியமான சிவதலங்களில் ஒன்று. உலகிலுள்ள மிக முக்கியமான சிவதலங்களில் ஒன்றும் கூட.

மாதையூர் சிவபெருமான் - இங்கு சமாதியாகி இருக்கும் மாமுனிவர் 🌺🙏🏽

இவர், மனதின் குணங்களை ஆராய்ந்து, குறிப்பாக அதன் உலா வரும் தன்மையை ஆராய்ந்து, "அது உலவும் இடமே நாம் இருக்குமிடம்" என்ற கருத்தை வெளியிட்டிருப்பார். எனவே மனதைப் பற்றிய உருவகக்கதையில் இப்பெருமானுக்கு சிறப்பிடம் கொடுத்துள்ளனர்.

பாடல் வீணையர் பலபல சரிதையர் எருதுகைத் தருநட்டம்
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ் சுண்டிருள் கண்டத்தர்
ஈட மாவது விருங்கடற் கரையினில் எழில்திகழ் மாதோட்டம்
கேடி லாதகே தீச்சரந் தொழுதெழக் கெடுமிடர் வினைதானே.

-- சம்பந்தர் தேவாரம் 2.107.2

இங்கு சமாதியாகி இருக்கும் பெருமானை "பாடல் வீணையர்" என்றழைக்கிறார் பிள்ளையார். எனில், பாடிக் கொண்டே வீணை மீட்டுபவர் என்று பொருள். ஒரு வேளை, இவர் தான் நாரதர்-வீணை என்ற  உருவகத்தை உருவாக்கினாரோ? அல்லது, இவரை / இவரது அறிவுரைகளை வைத்துத்தான் அந்த உருவகமே உருவாக்கப்பட்டதா? 😯

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Sunday, May 17, 2020

திருநீறு பூசுதல், உருத்திராக்கம் அணிதல் - சிறு விளக்கம்



(தினமலர் - ஆன்மீகமலர் - 05/05/20)

சிவனடியார்களின் கடமைகளுள் திருநீறு பூசுதலையும், உருத்திராக்கம் அணிவதையும் மிக முக்கியமானதாக குறிப்பிட்டுள்ளார்கள். எவ்வளவு பொருள் பொதிந்த சொற்கள்!! 👏🏽👌🏽 சிவனடியார்களிடம் மட்டுமல்ல. இவை உலகிலுள்ள எல்லோராலும்  கடைபிடிக்கப்பட வேண்டியவை!!

🏵️ #திருநீறு #பூசுதல் - பசுஞ்சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் சாம்பலை விதவிதமாக உடல் முழுவதும் பூசிக் கொள்வதல்ல. "நமக்குள் தோன்றும் எண்ணங்கள் முதல் நாம் காணும் நமது உடல், நாம் வாழும் இவ்வுலகம் என எல்லாம் இருப்பற்றது, பொய்யானது, முழுதும் எரிந்து உருக்கலையாமலிருக்கும் சாம்பல் போன்றது" என்ற இந்த உண்மை (திருநீறு) எக்கணமும் நம் கவனத்திலிருக்க வேண்டும் (பூசுதல்). ஆரம்பத்தில், இந்த திருநீற்றை (உண்மையை) சதா பூசிக்கொண்டே (கவனத்தில் தக்க வைத்துக்கொண்டே) இருப்பது என்பது கடினமான வேலையாகத் தோன்றும், ஆனால், பழக பழக சுலபமாகி விடும். ஒரு சமயத்தில், இது நமது இயற்கையாகி விடும். மனமும் கட்டுப்பட ஆரம்பித்து, இறுதியில் இறந்தே போகும்.

(இந்த விளக்கத்தை வைத்து சம்பந்த பெருமானின் 🌺🙏🏽 திருநீற்றுப் பதிகத்தை ஆராய்ந்தால் அது எவ்வளவு பொருள் பொதிந்த பதிகம் என்பது விளங்கும்!! 😍)

🏵️ #உருத்திராக்கம் #அணிதல் - மேற்சொன்னபடி திருநீறு பூசுவது பாதி கடமை எனில் மீதி உருத்திராக்கம் அணிதலாகும். தோன்றும் எண்ணங்கள் முதல் காணும் உலகம் வரை அனைத்தும் பொய் - இருப்பற்றது - எனில் எது தான் உண்மை? இவற்றையெல்லாம் காணும் நாம் மட்டுமே உண்மை! நாம் எனில் நமது தன்மையுணர்வு. இது மட்டுமே உள்ளபொருள் - மெய்பொருள் - சிவம். இந்த தன்மையுணர்வை விடாது இறுகப் பிடிப்பது - தன்மையுணர்வில் நிலைத்திருப்பது / அசைவற்றிருப்பது - தான் உருத்திராக்கம் அணிவது என்பது. இந்த உணர்வை விடாது இறுகப் பிடிப்பது எவ்வாறு? அதாவது, உருத்திராக்கத்தை எவ்வாறு தொடர்ந்து அணிவது?

இதற்கு மிக அருமையாக பதிலளிக்கிறார் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽: இராமன் என்பவன் தன்னை இராமனென்று உணர்வதற்கு கண்ணாடி தேவையோ? 👏🏽👏🏽👏🏽👌🏽🙏🏽

(பகவானது பதில் தலையில் ஒரு குட்டு வைத்தது போலிருக்கும்!! 😁 இந்த குட்டுப் பெற்ற உணர்வை அப்படியே இறுகப் பிடியுங்கள். உருத்திராக்கம் அணிந்தவராவீர்.)

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

(தினமலர் - ஆன்மீகமலர் - 05/05/20)

🌸🌼🌻🏵️💮

மோகன்தாஸ் போன்ற நயவஞ்சகர்கள் இந்த விளக்கங்களை வைத்தே நமக்கு கொம்பு சீவும் வாய்ப்புள்ளது!! "காட்டுமிராண்டிகளது மத தர்மம் இந்துக்களைக் கொள்வது, இந்து பெண்களை கற்பழிப்பது, இந்துக்களின் உடமைகளை பறித்துக் கொள்வது. இந்துக்களின் தர்மமோ திருநீறு பூசுவது மற்றும் உருத்திராக்கம் அணிவது. அவர்களது தர்மங்களை அவர்கள் கடைப்பிடிக்கட்டும். உங்களது தர்மங்களை நீங்கள் கடைபிடியுங்கள். பிறவிப் பெருங்கடலில் இருந்து சீக்கிரமே விடுபடுவீர்கள்." என்று மலபார், நவகாளி, பஞ்சாப் இந்து இனப்படுகொலைகளின்போது அவன் உளறியது போல் உளறுவதற்கும் வாய்ப்புள்ளது.

இதற்கான பதிலை அண்ணாமலை சுவாமிகள் 🌺🙏🏽 அளிக்கிறார்: ரமணாச்சிரமத்திற்கு அருகில் சாக்கடை ஓடுகிறது. அதுவும் இறைவனின் படைப்பே என்பதற்காக அதனருகில் சென்று வாழ முடியாது. அந்நீரை குடிக்கவும் முடியாது. அங்கு செல்லக்கூடாது என்ற அறிவையும் படைத்தது இறைவன்தான். ஆகையால், மெய்யறிவு கிடைக்கும்வரை இறைவன் கொடுத்த அறிவை பயன்படுத்துங்கள். மெய்யறிவு கிடைத்தபின் நமது உடலின் இயக்கம் நம்மிடம் இருக்காது. வேறொரு ஆற்றல் அதை வழிநடத்தும்.

மெய்யறிவு கிடைத்தபின் வேண்டுமானால் யாவரும் கேளிர். அதுவரை இந்த உளறுவாயன்களை கைபுள்ளகளாகத் தான் காணவேண்டும். ✊🏽👊🏽🤜🏽👊🏽🤛🏽👊🏽😂

Friday, May 15, 2020

காசி அன்னை அன்னபூரணி 🌺🙏🏽 - சிறு விளக்கம்



முன் குறிப்புகள்:

1. சிவபெருமான் 🌺🙏🏽 தனது கபாலத்தைக் கொண்டு அன்னை அன்னபூரணியிடம் பிச்சை பெறுவது போன்ற படத்தைத் தான் தேடினேன். ஏதேச்சையாக, இணைப்பு படம் கிடைத்தது. சிவபெருமான் அமர்ந்திருப்பது போன்றும், கபாலத்திற்கு பதில் அவர் முன் இலையில் உணவு பரிமாறப்பட்டு இருப்பது போன்றும், அவருக்கு அன்னை அன்னபூரணி கொற்றவை கோலத்துடன் பரிமாறுவது போன்றும் காட்சிபடுத்தி இருக்கிறார்கள். ஆனால், பொருள் ஒன்று தான்.

2. அண்ணாமலை வெண்பா திரட்டின் 17வது பாடலுக்கு நான் எழுதிய விளக்கத்தை சற்று மாற்றியும், இன்னொரு விளக்கத்தை சேர்த்தும் இந்த இடுகையை உருவாக்கியிருக்கிறேன்.

🌸🌼🌻🏵️💮

இந்த இணைப்பு படத்தில் இல்லாவிட்டாலும், அன்னை அன்னபூரணியுடன் இணைந்து பெருமான் உள்ள படங்களில் கையில் திருவோடு வைத்திருப்பார். அத்திருவோடு பிரம்மகபாலம் எனப்படும். அது நான்முகனிடமிருந்து பறிக்கப்பட்ட ஒரு தலை (இது தனி கதை). அதில் எவ்வளவு போட்டாலும் நிறையாது! அதாவது, எவ்வளவு எண்ணங்களைப் போட்டாலும், எத்தனை பிறவிகளாகப் போட்டாலும் நிறையாது. எனில், வாழ்வு முடிவற்றது என்று பொருள்!!

அதை முடிவுக்கு கொண்டு வர - கபாலத்தை நிரப்ப - ஒரே வழிதான் உண்டு: புறமுகமாகச் சென்று கொண்டேயிருக்கும் கவன ஆற்றலை நம் மீது - தான் என்ற இருப்புணர்வின் மீது - திருப்புவது ஒன்றே வழி! இதைத்தான் #பகவான் திரு #ரமணர் 🌺🙏🏽 #தன்னாட்டம் (#ஆத்மவிசாரம்) என்றழைத்தார்!

இப்பேருண்மையை காசி மாநகரிலிருந்த பெரியோர்கள் உணர்ந்து உலகிற்கு வெளிப்படுத்திய விதம் தான் அன்னை அன்னபூரணி!! அன்னையின் கையிலுள்ள கரண்டியிலிருக்கும் உணவு சிவபரம்பொருளுக்கானது - "நீயே அது!" என்பது!!! "உன் மீதே கவனத்தை திருப்பு" என்பது!!! தன்னாட்டம் எனப்படுவது!!!

பல்லாயிரம் பிறவிகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் வாழ்வு என்னும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதால், அன்னையின் கரண்டியிலிருக்கும் உணவை (தன்னாட்ட எண்ணத்தை) "பூர்த்தி செய்யும் உணவு" என்றனர்! உணவு+பூர்த்தி - அன்னம்+பூரணம் - அன்னபூரணி!! 😍

🌸🌼🌻🏵️💮

இன்னொரு விளக்கம்.

சிவமென்பது உயிர். சக்தி என்பது உயிரற்றது. எண்ணம் முதற்கொண்டு காணும் அண்டம் வரை அனைத்தும் உயிரற்றவையே. எனில், உயிரற்றது எவ்வாறு உயிருக்கு உணவிடும்?

நாம் இன்னார் என்பது நமது கருத்து. இன்னாருக்குள் பாலினம், வயது, மெக்காலே படிப்பு, வேலை, சொத்து, பதவி, புகழ் என அனைத்து காற்றடைத்த பந்துகளும் அடங்கும். கொடுப்பினை இருந்து, தேடுதல் வேட்கைத் தோன்றி, பகவான் திரு ரமணர் போன்ற மாமுனிவர்களின் தொடர்பு ஏற்பட்டு (நேரடியாகவோ அல்லது அவர்களது அறிவுரைகளுடனோ), தவமாய் தவமிருந்து, இறுதியில் அவர்களது சொல், செயல், பார்வை என ஏதேனும் ஒன்று நமது அறியாமையை அழித்துவிடும். அந்த ஒன்று - உயிரற்ற ஒன்று - நமது மெய்யறிவை வெளிப்படுத்திய ஒன்று - அன்னை அன்னபூரணி எனப்படும்!!

இப்போது கேள்வி எழும்: மெய்யறிவை வெளிப்படுத்தியது அன்னை எனில், பெற்றுக் கொண்ட நாம் எப்படி சிவமாவோம்? பெறும் போது நாம் பொய்யறிவினர் தானே. பெற்று, மெய்யறிவு வெளிப்பட்ட பின்னர் தானே சிவமானோம்.

இதற்கு பதில் பகவான் அளித்திருக்கிறார்: நாம் எப்போதுமே ஆன்மாவாகத் (சிவமாக) தான் இருக்கிறோம்!! 

(இங்கே, பாம்பு போல தோன்றிய கயிறு, ஆற்றைக் கடந்த 10 பேர், தனது தோளிலேயே கிடந்த ஆட்டுக்குட்டியைத் தேடியவன் போன்ற கதைகளை நினைவு கூர்ந்தால் பகவான் சொல்வது விளங்கும்.)

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே

-- திருமந்திரம் 8:21

கருணாகர முனி ரமணாரியன் அடிபோற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Wednesday, May 13, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #17



முக்கோணம் ஆக முளைத்தமலை முண்டகன்மால் 
அக்கோடு நாகம் அணிந்தமலை - திக்கோடு 
துன்னுமலை தன்னைத் துதிக்கும்அடி யார்உளத்தில் 
மன்னுமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #17

🔸முண்டகன்மால் அக்கோடு நாகம் அணிந்தமலை - நான்முகன், மாயோன், சங்குமணிகள் மற்றும் பாம்புகளை அணிந்த மலை.

- நான்முகன் எனில் நான்முகனிடமிருந்து பறிக்கப்பட்ட ஒரு தலை - பிரம்மகபாலம். சிவபெருமானின் கையிலிருப்பது. எவ்வளவு போட்டாலும் நிறையாது! எவ்வளவு எண்ணங்களைப் போட்டாலும், எத்தனை பிறவிகளாகப் போட்டாலும் நிறையாது. அதாவது, வாழ்வு முடிவற்றது!! 

இதை முடிவுக்கு கொண்டு வர - கபாலத்தை நிரப்ப - ஒரே வழிதான் உண்டு: புறமுகமாகச் சென்று கொண்டேயிருக்கும் கவன ஆற்றலை நம் மீதே - தான் என்ற இருப்புணர்வின் மீது - திருப்புவது ஒன்றே வழி! இதைத்தான் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 தன்னாட்டம் (ஆத்மவிசாரம்) என்றழைத்தார்!! இதைத்தான் திரு அன்னபூரணி அன்னையாக 🌺🙏🏽 வடிவமைத்தனர்!!! அன்னையின் கையிலுள்ள கரண்டியிலிருக்கும் உணவு சிவபரம்பொருளுக்கானது - "நீயே அது!" என்பது. தன் மீதே கவனத்தை திருப்புவது!! தன்னாட்டம் எனப்படுவது!!! இப்பேருண்மையை காசி மாநகரிலிருந்த பெரியோர்கள் முதலில் உணர்ந்து உலகிற்கு வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எனவே தான், தாம் உணர்ந்த பேருண்மைக்கு அன்னபூரணி என்ற வடிவத்தை கொடுத்து, காசி மாநகரின் அன்னையாக்கி இருக்கிறார்கள்.

(அன்னபூரணி - பல்லாயிரம் பிறவிகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் வாழ்வு என்னும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதால் தன்னாட்ட எண்ணத்தை "பூர்த்தி செய்யும் உணவு" என்றனர்! உணவு+பூர்த்தி - அன்னம்+பூரணம் - அன்னபூரணி!!)

- மாயோன் எனில் மாயை - இல்லாததைக் குறிக்கும். திருமால் என்ற பெயரிலுள்ள மால் என்ற சொல்லின் சரியான பொருள் குழப்பம்!! இல்லாத உலகை இருப்பது போல் காட்டி நம்மைக் குழப்புவது என்று பொருள். மாயையை தன்னுடலாகவே கொண்டிருக்கிறார் எம்பெருமான்.

🔸திக்கோடு துன்னுமலை - எல்லா திசைகளிலும் பரவியுள்ள மலை

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்

அண்ணாமலை வெண்பா பாடல் #16 - "மாதுடனே வெள்ளிமலை வீடாக" - விளக்கம்



இன்று (13/05/20) காலை #அண்ணாமலை #வெண்பா திரட்டிலிருந்து பாடல் 16ஐ பதிவிட்டிருந்தேன். இப்பாடலில் வரும் "#மாதுடனே #வெள்ளிமலை #வீடாக" என்ற சொற்றொடருக்கு நான் கொடுத்த விளக்கத்திற்கு ஒரு ரமணடியார் பின் வரும் கருத்தை அனுப்பியிருந்தார்:

அருணாசலமே சிவன். திருக்கைலாயம் சிவபெருமானின் இருப்பிடம் மட்டும் தான். இது பகவான் வாக்கு.

அவருக்கு நான் கொடுத்த விளக்கம் பின்வருமாறு (பாடலும், அதற்கான எனது விளக்கத்தையும் இறுதியில் இணைத்துள்ளேன்):

இது பகவானது 🌺🙏🏽 வாக்கு என்பதை அறிவேன், ஐயா! குரு நமச்சிவாயரும் 🌺🙏🏽 வெள்ளிமலையை (திருக்கைலாயத்தை) வீடு என்றே குறிப்பிடுகிறார். பேயாரும் 🌺🙏🏽 #திருக்கைலாயம் சென்ற போது இறைவன் உமையன்னையுடன் இருந்ததாகவே பாடியிருக்கிறார்.

தமிழகத்தில் பல திருத்தலங்களில் "அகத்தியருக்கு திருக்கைலாயக் காட்சி கிடைத்தவிடம் " என்று எழுதியிருப்பதைக் காணலாம். இது ஒரு நிலை. கயிற்றை பாம்பாகக் காண்பது ஒரு நிலை. கயிற்றை கயிறாகவே காண்பது ஒரு நிலை. பாம்பாக தோன்றிய தோற்றம் மறைந்து, உண்மையான கயிறு தோன்றும் தருவாயில் இரண்டுமே தோன்றும். இந்நிலையை அவ்வப்போது மாமுனிவர்கள் (அகத்தியர்கள்) பெற்றிருக்கிறார்கள். திரு ரிஷபதேவரோ 🌺🙏🏽 இந்நிலையிலேயே நிலைபெற்றிருக்கவேண்டும். எனவே, "மாதுடனே" (பாம்புடனே) என்று குரு நமச்சிவாயர் பாடியிருக்கிறார். பகவானும், "திருக்கைலாயம் ஈசனது வீடு" என்று கூறிவிட்டார். திரு இடைக்காடரோ (அண்ணாமலையார்) கயிறு என்ற நிலையிலேயே (சிவமாக) இருந்திருக்கவேண்டும். எனவே, "அருணாசலமே சிவன்", என்று கூறிவிட்டார் பகவான்.

நன்றி, ஐயா!

🌸🌼🌻🏵️💮

வெண்பா #16:

வைத்தநிதி ஓம்நமச்சி வாயகுரு நாள்தோறும்
மெய்த்தமிழி னால்புகழ்ந்து மேவுமலை - எத்திசையும்
மின்னுமலை மாதுடனே வெள்ளிமலை வீடாக
மன்னுமலை அண்ணா மலை

🔸#வைத்தநிதி - வைத்த என்பது நிலைபேற்றினைக் குறிக்கும். நிதி என்பது அபரிமிதமான / பொங்குகின்ற என்ற பொருளைக் குறிக்கும். நிலைபேறு என்பது ஒரு நிலை தான். அதெப்படி பொங்கும்? எனில், நிலைபேற்றில் விடாப்பிடியாக, சற்றும் அசையாமல் நிலை பெற்றிருப்பவர் என்று பொருள். மாமுனிவர். 🌺🙏🏽

🔸மெய்தமிழ் - தொல்காப்பியர் நிறைமொழி என்றழைத்தது போல குரு நமச்சிவாயர் மெய்தமிழ் என்றழைக்கிறார். தமிழைச் சரியாக கற்றாலே மெய்யறிவு கிடைத்துவிடும்.

🔸#மாதுடனே #வெள்ளிமலை #வீடாக - இரண்டு பொருள்கள். ஒரு பொருள், திபெத்திலுள்ள திருக்கைலாயத்தில் சமாதியான திரு #ரிஷபதேவர். 🌺🙏🏽 இன்னொரு பொருள், நமது மூளையைக் குறிக்கும். விழிப்பு நிலையில் பரமனும் சீவனும் (ஆரியத்தில், விஸ்வம் & விராட்) மூளையிலிருந்து இயங்குவதாகக் கணக்கு.

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்

Tuesday, May 12, 2020

ஒரு இறைவரிசையை கொண்டு சாதித்த நம் பெரியோர்கள்!!



சென்னையில் ஒரு இந்து அண்ணாச்சிக் கடையில் மேலேயுள்ள 🤢🤮-வியை நேற்று கண்டேன்!!

நம்மைக் கொன்று குவித்தவர்களின், சீரழித்தவர்களின், சூறையாடியவர்களின், கொள்ளையடித்தவர்களின் ஏமாற்றுவேலைகளுக்கு பேருண்மைகளை பிரதிபலிக்கும் நமது இறையுருவங்களுடன் சமமான இடம்!! 😡

மதச்சார்பின்மை!! 🤬
எம்மதமும் சம்மதம்!!! 🤬🤬

இது போன்ற காது குத்துகள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் உணவையும் சாக்கடைகளையும் சமமாகக் காணும் பகுத்தறிவு. "எரிகின்ற வீட்டில் பிடுங்கிய வரை லாபம்" என்ற வழியில் நம்மை வழிநடத்திச் செல்லும் ஆட்சியாளர்கள். எங்கிருந்து பேருண்மைகளைப் பற்றிய சிந்தனை முளைக்கும்?

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

ஒரு வியாபாரம் நடக்குமிடத்தில் முதலாளிக்கு பின்புறம் அவரது தலைக்கு மேல், இடமிருந்து வலமாக, 5 இறையுருவங்கள் இருக்கும்: 

🌺 முருகப்பெருமான்
🌺 நாமகள்
🌺 பிள்ளையார்
🌺 செல்வமகள்
🌺 திருமலைப் பெருமாள்

இது தான் சரியான வரிசை. பகுத்தறிவு பெருகும் வரை இப்படித் தான் இருந்தது. இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. இன்றுள்ள வரிசையும், அதற்கு மக்கள் கற்பிக்கும் பொருளும்... 🤢 இன்று பட விற்பனையாளர்களிடம் சென்று கேட்டால் கூட மேற்சொன்ன வரிசையில் படங்கள் இருக்காது!! செய்து தரச் சொன்னால் மட்டும் தான் கிடைக்கும். 😔

மேற்சொன்ன இறையுருவங்கள் யாவும் இவ்விடத்தில் பேருண்மைகளை உணர்த்தவில்லை!!! பின்னர் எதை உணர்த்துகின்றன?

🙏🏽 முருகப்பெருமான் - நல்ல மனம்
🙏🏽 நாமகள் - சரியான கல்வி
🙏🏽 பிள்ளையார் - நல்லறிவு
🙏🏽 செல்வமகள் - நல்ல செல்வம்
🙏🏽 திருமலைப் பெருமாள் - போதுமென்ற மனது

கெட்ட மனம் கொண்டவனோ, சரியான கல்வி இல்லாதவனோ, முட்டாளோ / கெட்ட புத்தி உள்ளவனோ தொழில்களை நடத்தினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது நாமெல்லோரும் அறிந்ததே. அநியாயமான செல்வமும் இறுதியில் பெரும் துன்பத்தில் தான் முடியும்.

இறுதியாக, பெருமாள். உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்தாலும், கருவறைக்குள் அவரது உணவாக செல்வது... உடைந்த பானையில் சிறிதளவு தயிர்சாதம்!! அவ்வளவே. "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து"! பெருமாள் உணர்த்தும் இந்த குணம் மணிமுடியில் பதிக்கப்பட்ட இரத்தினம் போன்றது!! 👏🏽👏🏽👏🏽😍😌

உலகில் தொழில் முனைவோர் அனைவரிடமும் இந்த இறைவரிசை உணர்த்தும் குணங்கள் இருந்திருப்பின் உலகம் இன்று இறந்து கொண்டிருக்காது. 

இந்த இறைவரிசை, தொழில்முனைவோருக்கு மட்டுமல்ல. தனிக்குடும்பம் முதல் அரசு வரை அனைத்து அமைப்புகளுக்கும் பொருந்தும். பெற்றோர் சரியில்லாத குடும்பமும், பரம்பரையும் இறுதியில் என்னவாகின்றன? அநியாயமான ஆட்சியாளனைக் கொண்ட நாடு என்னவாகிறது? உலகை ஆளவேண்டும் என்ற சீனாவின் பேராசையால் இன்று உலகம் என்னவாயிற்று?

💥💥💥💥💥

நாம் எல்லோரும் ஏதாவதொரு அமைப்புக்குள் வருவோம், குறைந்த பட்சம் குடும்பம் என்ற அமைப்புக்காவது தலைமை தாங்குவோம். அனைவருக்கும் தனித்தனியாக பாடம் நடத்திக் கொண்டிருக்க முடியாது. அனைவரையும் எல்லா நேரங்களிலும் கண்காணித்து கொண்டிருக்கவும் முடியாது. எனவே தான் சொல்ல வேண்டியதை இறையுருவங்களை வைத்து சொல்லியிருக்கிறார்கள் நம் பெரியோர்கள். இறைவரிசை வைக்கப்பட வேண்டிய இடத்தில் வைக்கப்பட்டது. அனைவராலும் பார்க்கப்பட்டது. அவை உணர்த்தும் செய்திகள் ஒவ்வொரு தலைமுறையிலும் சிலரால் உணரப்பட்டது. அப்படி உணர்ந்தவர்களால் மற்றவர்களுடன் பகிரப்பட்டது. எல்லாம் ஒரு ஒழுங்கில் சென்றது. 👏🏽👍🏽👌🏽

ஒருபட வரிசையைக் கொண்டு எவ்வளவு சாதித்திருக்கிறார்கள் நம் பெரியவர்கள்!! 🙏🏽 அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்த பட்ச நன்றிக்கடன்... இவ்வரிசையுடன் கண்டதையும் சேர்த்து குப்பையாக்காமல் இருப்பதே! 👊🏽

கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Friday, May 8, 2020

கடவுள் குளிப்பதைக் காட்டலாம். உடை மாற்றுவதை மட்டும் ஏன் மறைக்கவேண்டும்? - பாவாடை நடிகர்



அந்த பாவாடை நடிகரிடம் தசமபாகம் பெறும் பாவாடை பூசாரி, தனது தொழிலை மேம்படுத்துவதற்காக கேட்டிருப்பான். காமாட்சியம்மன் விளக்கிலிருந்து "ஸ்ரீகுமராய நமஹ" வரை காப்பியடித்தாகிவிட்டது. மேற்கொண்டு தொழில் வளரவேண்டுமென்பதால், நடிகரிடம் பூசாரி கேட்டிருப்பான். இவருக்கு தெரியாது என்பதற்காக பொதுமக்களிடம் கேட்டிருக்கிறார். இதற்கு ஏன் கோபப்படவேண்டும்? 😜

அப்படியே தெரிந்து கொண்டாலும் எப்படி நடத்துவார்களாம்? கருவறை என்ற அமைப்பெல்லாம் இவர்களுக்கு கிடையாதே? 🤔 ஒரு வேளை, பரங்கியரின கலாச்சாரம் நாய் கலாச்சாரம் என்பதால் அப்படியே "ஓபனா... காத்தாட... ஜாலியா..." 🤢🤮🤒 நடத்துவார்களா? 😝

✊🏽👊🏽🤜🏽👊🏽🤛🏽👊🏽👊🏽👊🏽 😌

கருவறையில் இருக்கும் இறையுருவங்கள் மொத்த அண்டத்தைக் குறிக்கும். அபிடேகம் என்பது இறையுருவத்தை சுத்தப்படுத்துவதோடு குளிர்விக்கவும் செய்யும். இதனால் மொத்த அண்டமும் சுத்தமாவதகாகவும் குளிர்வதாகவும் எண்ணவேண்டும். அண்டம் என்பது என்ன? அசையும் மற்றும் அசையாப் பொருட்களின் கூட்டு. அசையாதது ஏதும் செய்யாது. நம்மைப் போன்று அசைவது செய்யும் "திருவிளையாடல்கள்" தான் எல்லாம். ☺️ அண்டத்தில் இருப்பதெல்லாம் பிண்டத்தில் உள்ளது. நாம் ஒவ்வொருவரும் சுத்தமானால் (உடலும் மனமும்), நாம் குளிர்ந்தால் எல்லாம் சுத்தமாகும். குளிர்ந்துவிடும். அமைதி நிலவும்.

சுத்தப்படுத்தும் வேலைகள் முடிந்து, திரைச்சீலையால் கருவறை வாயிலை மூடி, எல்லா அலங்கரிப்பும் முடிந்த பின், தீபமும் ஏற்றித் தயாராக இருக்கும் போது, படீரென திரைச்சீலையை விளக்குவார்கள். இசைக்கருவிகள் முழங்கும். அப்போது வெளிப்படும் காட்சி (இறையுருவம், அணிவிக்கப்பட்டிருக்கும் ஆடை அணிகலன்கள், பூக்கள், நிறைந்த தீப ஒளி) மற்றும் இசையொலிகளால் நாம் ஒரு கணம் நமது மூல நிலைக்கு (பரம்பொருளின் நிலைக்கு) சென்று திரும்புவோம். பரவசமடைதல் (பரத்தின் வசம் - பரவசம்) என்பதும் இதுவே.

🌸🏵️🌻🌼💮

சரி. விளக்கம் கிடைத்தாயிற்று. இதை எப்படி தங்களுக்கேற்றவாறு மாற்றுவார்களாம்? ஆத்மா ஆதாமாகவும், சீவன் ஏவாளாகவும் ஆனது போன்றா? 😁 உயிரற்றதை வணங்காதே என்றால் அதைத் தான் முதலில் வணங்குவது போன்றா? 😆 (குறுக்கை - பிணக்குறியீடு) மனதின் அழிவைக் கொண்டாடு என்றால் அதைக் கண்டு ஒப்பாரி வைப்பது போன்றா? 😂🤣 (பிணக்குறியீட்டில் அறையப்பட்டிருக்கும் இஸ்ரவேலர் யேசு: பிணக்குறியீடு - உடல், அதில் அறையப்பட்டிருக்கும் யேசு - தவமாய் தவமிருந்து அழிக்கப்பட்ட மனம்)

✊🏽👊🏽🤜🏽👊🏽🤛🏽👊🏽👊🏽👊🏽

Monday, May 4, 2020

அண்ணாமலை வெண்பா - பாடல் 6 - சொன்னம், அங்கி சொற்களுக்கு விளக்கம்



நேற்று முகநூலில் நான் பதிவிட்டிருந்த அண்ணாமலை வெண்பா பாடல் #6லில் வரும் "சொன்னம்" என்ற சொல் தங்கத்தையும், "அங்கி" என்ற சொல் தீயையும் குறிக்கும் என்று ஒரு ரமணடியார் கூறினார். அவருக்கு நான் கொடுத்த விளக்கத்தை இங்கு பதிவிடுகிறேன்.

🔷 முதலில், பாடல்:

அன்னமுடன் சொன்னம் அளிக்குமலை ஆதரிப்போர்
உன்னுவரம் எல்லாம் உதவுமலை - துன்னுபுகழ்
கொண்டமலை அங்கிக் கொழுந்துஆகி அண்டம்உற
மண்டுமலை அண்ணா மலை

🔸 சொன்னம் - பொருள்
🔸 உன்னுவரம் - நினைத்ததெல்லாம்
🔸 துன்னுபுகழ் - நெருங்க வாய்ப்பு கொடுக்கும்
🔸 அங்கி... - நம் உடலெனும் சட்டை முதல் அண்டம் முழுவதுமாகிய

🔷 திரு ரமணடியாருக்கு எனது விளக்கம்:

வணக்கம், ஐயா! 🙏🏽

🔸 சொன்னம் என்பதற்கு சொர்ணம், சுவர்ணம் (பொன்) என்ற பொருளும் இருப்பதை அறிவேன்.

இக்காலத்தில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கையடக்கத்தில் வைத்துக் கொள்ளலாம். அக்காலத்தில் இன்றைய வசதிகள் இல்லை. பெரும் பொருளை கையிலேயே வைத்திருக்க சுலபமான வழி தங்க அணிகலன்களை செய்து உடலில் மாட்டிக் கொள்வது தான். நடமாடும் வங்கிகணக்காக வலம் வந்தார்கள். எவ்வளவு அணிகலன்கள் உங்கள் உடலை அலங்கரிக்கின்றனவோ அவ்வளவு தூரம் நீங்கள் பெரிய ஆள்!! பொன் சேர்த்து விட்டால் மீதமுள்ள பாரங்கள் (வீடு, வேலையாட்கள், அழகான மனைவி, சமூக அந்தஸ்து, "உயர்ந்த" மனிதர்களின் தொடர்புகள், இதனால் கிடைக்கும் பாதுகாப்பு,...) தானாக அமைந்து/சேர்ந்து விடும்.

இன்று நிலைமையே வேறு. பொன்னை விட பணம் தான் வசதி. ஆகையால், பணத்தைக் குறிக்கும் பொருளை எடுத்துக் கொண்டேன்.

🔸 அங்கி என்பதற்கு மேலாடை, நெருப்பு, கார்த்திகை திருநாள் என்று பொருள்கள் இருப்பதைப் பார்த்தேன்.

அங்கி என்ற சொல்லுக்கு மேலாடை என்ற பொருள் பிரபலமாக இருப்பதாலும், மண்டு என்று இந்த சொற்றொடர் முடிவதாலும் (எ.கா.: புதர் மண்டிய இடம்), கொழுந்து என்பதற்கு இளம் / முதல் என்று பொருள் இருப்பதாலும், ஆன்மாவை போர்த்தியிருக்கும் முதல் ஆடை உடல் என்பதாலும் அங்கி என்று சொல்லுக்கு உடல் என்றெ பொருள் கொண்டேன்.

"உடல் முதல் அண்டம் வரையிலான பல்வேறு சட்டைகளாக மண்டியிருக்கும் மலை"

மாமுனிவர்கள் தங்களது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் போது பெரும்பாலும் பின்வரும் 3 நிலைப்பாடுகளிலிருந்து வெளிப்படுத்துகிறார்கள்:

- எல்லாம் ஒன்றே,
- நாமே உள்ளபொருள் (மற்றவை பொய்பொருள்),
- எல்லாம் அவன் செயல் (நாம் ஒன்றுமேயில்லை)

"அங்கிக் கொழுந்து..." 3வது நிலைப்பாடு என்பது என் கருத்து.

பேயாரின் 🌺🙏🏽 பாடல்களை எடுத்துக் கொண்டால் ஒரே பாடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிலைப்பாடுகள் இருப்பதைக் காணலாம்.

எனது விளக்கங்களில் குறைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.

நன்றி, ஐயா! 🙏🏽அண்ணாமல 

Saturday, May 2, 2020

இந்து சமயத்தை அழித்துக் கொண்டே இந்து சமயப் பிரிவுகளுள் ஒன்றாகத் துடிக்கும் நரித்தவம்!! 😏

தினமலர் ஆன்மிகமலரின் 01/05, 24/04, 27/03 இதழ்களிலிருந்து 6 பக்கங்களை இவ்விடுகையுடன் இணைத்துள்ளேன். இவை உலகப் பெரும்பான்மை மதங்களான பாலைவன மதங்களுக்கு ஒதுக்கப்பட்டவை. (மோகன்தாஸும் மாமாப்பயலும் செய்த நயவஞ்சகத்திற்கும் துரோகத்திற்கும், உலக சிறுபான்மையின இந்துக்கள் இன்னும் எவ்வளவு காலம் பக்கங்களை ஒதுக்கி விலை கொடுக்கவேண்டுமோ? 🤬)

பின் வரும் 3 பக்கங்கள், பொது ஆண்டு 700 முதல் 1700 வரை பாரதத்தின் மீது படையெடுத்து கொள்ளை, கற்பழிப்பு, பயிர் மற்றும் கால்நடைகளுக்கு தீ வைப்பு, நீர் நிலைகளில் நஞ்சு கலப்பு போன்ற "சேவைகளைச்" செய்த "அன்பு" மதத்தினர், அவர்களது பக்கங்களில், தங்களது மதத்தை "இனிய" என்ற அடைமொழியுடன் குறித்துள்ளனர்.





ஆனால், உலகக்கொல்லிகளான பரங்கியரின் நரித்தவ மதத்தினர், அடுத்து வரும் 3 பக்கங்களில், தங்களது மதத்தினை குறிப்பிடவேயில்லை (ஒரு பக்கத்தில் ஏதுமில்லை; இரண்டு பக்கங்களில் "ஆலய மணி" என்றுள்ளது)!! அவர்களது புருடாசெய்திகளின் மொழியமைப்பு, அதிலுள்ள சில சொற்கள் (ஆலயமணி, ஆண்டவர்...), அதிலுள்ள படங்கள் (பிணக்குறியீடு, பரங்கி கட்டிட அமைப்பு, பரங்கி சாத்தான் உருவங்கள்...) போன்றவற்றிலிருந்து தான் இவை நரித்தவ மதத்தினரது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.




ஏன் இந்த ஏமாற்றுவேலை?

சுமார் 10-15 வருடங்களுக்கு முன்னர் வரை அவர்களுக்கு என்று தனி அடையாளங்கள் வைத்திருந்தனர் (பெயர், உடை, மொழிகளில் பரத்தை எனப்படும் ஆங்கிலம், ...). அவற்றை பெருமையுடன் காட்டிக்கொள்வர். அவர்களது தொழில் நடக்குமிடங்களுக்கு செல்வதை "ச'ச்சுக்கு போறோம்" (ர்-ரை அழுத்தாமல்) என்று ஸ்டைலாகச் சொல்வர். பின்னர் "கோயிலுக்குப் போறோம்" என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்களது பெயர்களிலிருந்து பரங்கிப் பெயர்களை மறைக்க / நீக்க ஆரம்பித்தார்கள். இதன் தொடர்ச்சியாக, தற்போது, நரித்தவம் என்ற அவர்களது தொழில் பெயரைத் தூக்கியிருக்கிறார்கள். 

பெளத்தத்திலிருந்து வந்த வைணவம் நாமம், பெருமாள், தாயார், சம்ப்ரோக்ஷணம் என தனி அடையாளங்களை வைத்திருந்தாலும், அதை நம் சமயத்திற்குள் ஒன்றாக பார்க்க பழக்கிவிட்டார்கள். பாடல்பெற்ற திருத்தலமான அச்சிறுப்பாக்கம் திரு ஆட்சீசுவரப்பெருமான் 🌺🙏🏽 திருக்கோயிலின் உள்நுழைவாயிலில் ஆஞ்சநேயர் தான் இருக்கிறார். இவரை பார்த்து எத்தனை பேருக்கு கோபம் வருகிறது? நெஞ்சு துடிக்கிறது? ஒரு பக்கம் நாமம் என்றால் ஏமாற்றுவேலை என்று தெரிந்திருந்தும், இன்னொரு பக்கம் நாமம் போட்ட உருவங்களை ஏற்றுக்கொள்ள, வணங்க வைத்திருக்கிறார்கள்!! 😠

இந்த உத்தியைத் தான் இப்போது நரித்தவ மதத்தினர் கையிலெடுத்திருக்கிறார்கள்! இன்னும் சில காலங்களில் நம் திருத்தலங்களில் பிணக்குறியீடு, பிணக்குறியீட்டில் அறையப்பட்டிருக்கும் இஸ்ரவேலர் யேசு போன்ற உருவங்களைக் காணும் வாய்ப்புள்ளது. நாமும், "2000 வருசத்துக்கு முன்ன உன்ன கொன்னுட்டாங்களேய்யா!!" என்று அழுது புலம்பி விட்டு (அதாவது வணங்கி விட்டு! 😁), எச்சில் பிஸ்கோத்தை சற்று ருசித்து விட்டு (பிரசாதம்!! 🤢), அப்போது நம் கையிலிருப்பதில் தசமபாகத்தை பாவாடைப் பூசாரியிடம் கொடுத்து விட்டு (மிக முக்கியமான சடங்கு! 2000 வருட தில்லாலங்கடியும் 🤑 இதற்கு தான்!!) நாம உருவங்களை நோக்கி நகருவோம்.

யாரும் எதிர்த்தால்? போர் முரசு முழங்கும் (அதாவது, ஊடகங்கள் 🐍 மதச்சார்பின்மை, சமூக அநீதி என்று அலறும்)! நாய்ப்படைகள் (திராவிடியாள்கள் 👽, பான்பராக் 👹 & கூவம் சட்டைகள் 👺) அவிழ்த்து விடப்படும். மோகன்தாஸ் போன்ற கருங்காலி எவனேனும் இருந்தால், அவனை, "இந்துக்களின் தர்மம் வருவதை அப்படியே ஏற்றுக்கொள்வது. எதிர்ப்பதல்ல." என்று உளறவைத்து கொம்பு சீவப்படும்.

நாறுகளோடு சேர்ந்து பூவும் என்றோ நாறிவிட்டது. இனி சாக்கடைகளோடு சேருவதால் புதிதாகவா நாறப்போகிறது? 😔

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

அருஞ்சொற்பொருள் 😜:

💥 மதச்சார்பின்மை - மெய்ப்பொருளையும், பொய் பொருட்களையும் ஒன்றாகக் காணுதல்

💥 உணவுச் சார்பின்மை - உணவு, சாக்கடை, வாந்தி, மலம் என அனைத்தையும் உணவாகக் காணுதல்

💥 பொருள் சார்பின்மை - தரமான பொருட்களையும், கலப்பட பொருட்களையும் ஒன்றாகக் காணுதல்

💥 தரச் சார்பின்மை - 35 மதிப்பெண்களுக்கு முன்னுரிமையும், 90 மதிப்பெண்களுக்கு பின்னுரிமையும் வழங்குவது. இதற்கு வேறு பெயரும் உண்டு.

💥 மக்களாட்சி - தகுதியற்றோருக்கு நிரந்தர வேலை, கை கொள்ளத அளவு சம்பளம், பாதுகாப்பான வாழ்க்கை, அனைத்திலும் முன்னுரிமை. தகுதியுள்ளோருக்கு... எல்லாமே தலைகீழ்!!

😆😝😂🤣