#திருவரங்கம் மூலவர் அணியும் சாலக்கிராம மாலை அகற்றப்பட்டு விட்டதாம்! மூலவரின் தோற்றத்தில் மாற்றங்கள் தெரிகிறதாம்!! உற்சவர் நம்பெருமாளும் மாறிவிட்டதாம்!!! புருஷோத்தம பெருமாள் காணவில்லையாம்!!!! இந்தப் புகார்களுக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டிய நிலையில் ஐயர்கள் (1). இந்த நிலைக்கு காரணமென்ன?
இவர்களின் வாழ்வாதாரத்திற்காக சிலைகள் தான் கடவுள் என்ற மாயப் போர்வையை பல நூற்றாண்டுகளாக தூக்கிப் பிடித்ததும், ஒவ்வொரு சீவனும் இறைவனை அடைய அதனதன் சொந்த முயற்சி ஒன்று தான் வழி என்ற உண்மையை மறைத்து தாங்கள் நடத்தும் வழிபாடு தான் வழி என்று கோயிலை பொருளாதாரத்தோடு இணைத்ததும் தான் காரணங்கள். (2)
உண்மையை உணர்ந்த அன்பர்களுக்கு சாலக்கிராம மாலை, மூலவரின் தோற்றம் ... என எவையும் ஒரு பொருட்டல்ல. அவை இருந்தாலும் இல்லையென்றாலும் அவர்கள் வணங்க வருவது மூலவரின் கீழ் சமாதியாகியிருக்கும் #சட்டைமுனி #சித்தர் பெருமானைத்தான். 🌸🔥🙏 சமாதியின் மேல் வைக்கப்பட்டிருக்கும் அடையாளத்தின் (#ஸ்ரீரங்கநாதர்) ஒப்பனை, அமைப்பு சற்று மாறுபட்டதால் சமாதியில் இருக்கும் பெருமானின் நிலை மாறப்போவதில்லை. அடையாளத்திற்கு செய்யப்படும் எதுவும் பெருமானைப் போய் சேரப்போவதுமில்லை. எதுவுமே செய்யாவிட்டாலும் அவர் குறைந்து விடப்போவதில்லை.
🌺🌺🌺
சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்ச்சி...
அது ஒரு குக்கிராமத்திற்கு அடுத்த நிலையிலுள்ள கிராமம். அங்கு ஒரு பலசரக்கு கடையில் நான் பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு 40 வயது தக்க கிராமத்தவர் வந்தார். அம்ருதாஞ்சன் வேண்டுமென்று கேட்டார். கடைக்காரர் அம்ருதாஞ்சன் ஸ்ட்ராங் என்ற பொருளைக் கொடுத்தார். கிராமத்தவர் அதை நான்கு பக்கமும் திருப்பிப் பார்த்துவிட்டு, திறந்தும் பார்த்துவிட்டு, "இது மஞ்சளா இல்ல. வேணாம்.", என்று திருப்பிக் கொடுத்தார். கடைக்காரர், "எல்லாம் என் தலையெமுத்து" என்ற பார்வையோடு, கிராமத்தவரிடமிருந்து ஸ்ட்ராங்-ஐ திரும்ப பெற்றுக் கொண்டு, வெறும் அம்ருதாஞ்சனைக் கொடுத்தார். கிராமத்தவரும் ஏதோ பெரிய மோசடியிலிருந்து தப்பியது போல பெருமிதத்துடன் சென்றார். கடைக்காரர் சங்கடத்துடன் என்னைப் பார்த்து புன்னகைக்க, நானோ "மஸ்தானின் டிஜிட்டல் இந்தியா வித்தைகளால் பாதிக்கப்படாத மனிதர் ஒருவர் உண்டெனில் அவர் இவரே" என்ற பேருண்மை விளங்கப் பெற்ற பிரமிப்புடன் நின்று கொண்டிருந்தேன்!! 😁
இந்த நிகழ்வில் வரும் கிராமத்தவர் போன்று தான் நம்மில் பலர் ஆன்மிகத்தைப் பொறுத்தவரை இருக்கின்றோம். இறைவன், கோயில், வணங்குதல், வழிபாடு போன்றவற்றின் உண்மை பொருள் தெரியாமல், இறை உருவத்திற்கு ஒப்பனை நன்றாக செய்யப்பட்டிருக்கிறதா? ஐயர் பலமாக, தெளிவாக, நீண்ட நேரம் மந்திரம் சொன்னாரா? இறை உருவத்திற்கு அருகில் செல்ல தனக்கு (சிலருக்கு: தனக்கு மட்டுமே) வாய்ப்பு கிடைத்ததா? இன்று அக்கார அடிசில் கிடைக்குமா? என்று கண்காணிப்பாளராக, நீதிபதியாக, உளவாளியாக, சாப்பாட்டு ராமனாக... சென்று வருகிறோமே தவிர, கோயிலுக்குச் சென்று வருவதன் உண்மையான குறிக்கோள் இறையுணர்வைப் பெறுதல் என்பதைக் கூட தெரிந்து கொள்ளாத கேவல நிலையில் (3) தாம் நாம் உள்ளோம். யாரும் எடுத்துச் சொன்னாலும் நாம் கேட்கப்போவதில்லை. அம்ருதாஞ்சன் என்றால் மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும் என்று நமக்கு நன்றாகத் தெரியும்! 😂
🌷🌷🌷
68 வருடங்களுக்கு முன் சமாதியான #பகவான் #ஸ்ரீரமண மகரிஷிகளின் சமாதித் தலத்திற்குச் செல்வோம். 🌸🔥🙏 பகவானைப் பற்றி அறிந்த அன்பர்கள் எப்படி வணங்குகிறார்கள் என்று கவனிப்போம். பகவானின் சமாதி அடையாளத்திற்கு (ஸ்ரீரமணேஸ்வர லிங்கம்) எப்படிப்பட்ட ஒப்பனைகள் செய்யப்பட்டுள்ளன என்பதை அவர்கள் கவனிப்பதில்லை. தலம் அசுத்தமாக இருந்தால் மட்டுமே அவர்களது முகத்தில் வருத்தம் தெரியும். மற்றபடி, ஒப்பனை, ஓதுதல் என எதற்கும் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை வணங்குதல் என்பது மரியாதை செலுத்துதல். உரிய மரியாதை செலுத்தி விட்டு, கிடைத்த இடத்தில் அமர்ந்து பகவான் உணர்ந்து உலகுக்குத் தெரிவித்த தன்னாட்டப் பயிற்சியை மேற்கொள்வர். அல்லது, ஏதாவது படித்துக் கொண்டிருப்பர். அல்லது, மூத்த அன்பர் யாரேனும் பகவானது அறிவுரைகளுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தால், அதைக் கேட்டுக் கொண்டிருப்பர். பகவானைப் பற்றி சற்றும் தெரியாத வெளியூர்/வெளிமாநில அன்பர் எவரேனும் வந்து வணங்கும் போது, அது பகவானின் சமாதி என்ற அறிவு இருப்பதால், அவரும் பாரம்பரிய முறையில் வணங்கி விட்டுச் செல்வார். வணங்கும் போது பகவானை வணங்குகிறோம் என்ற உணர்வு அவரிடம் இருக்கும்.
இனி, திருவண்ணாமலையின் பெரிய கோயிலான #திருஅண்ணாமலையார் கோயிலுக்குச் செல்வோம். இதுவும் ஒரு மகானின் சமாதியே. மூல அடையாளமான ஸ்ரீஅருணாச்சலேஸ்வர லிங்கத்தின் கீழ் சமாதியாகி இருப்பது #இடைக்காட்டு #சித்தர் ஆவார். 🌸🔥🙏 ஆனால், பெரும்பாலானோர்க்கு இவ்வறிவு இல்லை. ஆகையால், ஜடாமுடி, கங்கை, பிறைச் சந்திரன், புலித்தோல், திரிசூலம் ஏந்திய சிவபெருமான் என்று எண்ணிக் கொண்டு, வணங்குதல் என்ற பெயரில் ஒப்பந்தம் செய்து கொண்டு செல்வர். 😀 இதுவே சமாதியில் இருப்பது இடைக்காட்டு சித்தர் என்ற உண்மைத் தெரிந்திருப்பின், குறைந்தது வணங்கும் தொழிலாவது சரியாக நடக்கும்.
அடுத்தது, சென்னை #திருவொற்றியூரில் உள்ள #பட்டினத்தாரின் திருக்கோயிலுக்குச் செல்வோம். 🌸🔥🙏 இது அவரின் சமாதித்தலம் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, இங்கு வரும் அன்பர்கள் வணங்கும் போது பட்டினத்தாரை வணங்குகிறோம் என்ற உணர்வோடு வணங்குவர். அடுத்தது, அருகிலுள்ள பழம்பெரும் திருத்தலமான #திருஆதிபுரீஸ்வரர் திருக்கோயிலுக்குச் செல்வோம். இதுவும் ஒரு பெரும் ஞானியின் (சிவனின்) சமாதித்தலமே. 🌸🔥🙏 பன்னெடுங்காலத்திற்கு முன்னர் சமாதியானவர் என்பதனால் தான் ஆதி (பழமை, முதல்) என்ற அடைமொழி சேர்ந்துள்ளது. இவர் சமாதியான பின், இவரது உடலைச் சுற்றி புற்று வளர்ந்திருக்கும். புற்று வளர்ந்த பின்னரே இச்சமாதி கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். இவரைப் பற்றிய விபரம் ஏதும் கிடைக்காமல் போயிருக்கும். ஆகையால், பொதுவாக புற்றை இடமாகக் கொண்ட ஞானி / சிவன் என்ற பொருளில் #புற்றிடங்கொண்டார் என்று பெயரிட்டிருக்கிறார்கள். எண்ணற்ற அன்பர்கள் தவமியற்றி நிலைபேறு பெற்ற தலம். பல அருளாளர்கள் வந்து சென்ற தலம். 🙏🙏🙏
அருகிலுள்ள பட்டினத்தாரின் சமாதியை வணங்கும் போது மட்டும் பட்டினத்தாரை வணங்குகிறோம் என்ற உணர்வோடு வணங்கும் அன்பர்கள், இங்கு வந்து வணங்கும் போது மட்டும் ஜடாமுடி, கங்கை, பிறைச் சந்திரன்... என்று தங்களை ஏமாற்றிக் கொள்வர். ஏனெனில், இது ஒரு ஞானியின் (சிவனின்) சமாதி என்ற உண்மை தெரியாததால்!!
இனி, திருவரங்கத்திற்குச் செல்வோம். திருக்கோயில் வளாகத்தினுள்ளேயே #ஸ்ரீராமானுஜர் எரியூட்டப்பட்ட தலமுள்ளது. இங்கு வந்து வணங்கும் அன்பர்கள் ஸ்ரீராமானுஜரை வணங்குகிறோம் என்ற உணர்வோடு வணங்குவார்கள். இறுதியாக, திருவரங்க மூலவரைக் காண்போம். ஸ்ரீரங்கநாதர் என்னும் அடையாளத்தின் கீழ் சமாதியாகியிருப்பது சட்டைமுனி சித்தர் ஆவார். இவ்வுண்மைத் தெரியாததால் பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள் என்று யாரையோ கற்பனை செய்து கொண்டு, உடையவரை நன்றாக பார்ப்பது (சிறு வயதிலிருந்து "சாமிய நல்லா பாரு" என்று தானே வளர்த்தார்கள்! 😁) (4), வேண்டுவது, ஒப்பந்தம் செய்வது போன்ற தொழில்களில் சிலவற்றை செய்து விட்டுக் கிளம்புவர். இதுவே உண்மைத் தெரிந்திருந்தால், சித்தரை வணங்குவர். அவரது பாடல்களில் உள்ள கருத்துக்களைப் பற்றி சிந்திப்பர். நாம் இவ்வுடல் என்ற தவறான எண்ணத்தை (இவ்வெண்ணமே #நரகாசுரன்; இதன் அழிவே #தீபாவளி) விட்டொளிக்க முயற்சிப்பர். இத்தவறான எண்ணம் அழிய, என்றும் அழியாத மாறாத சுயஒளி கொண்ட உள்ளிருக்கும் உண்மை உணரப்படும். இவ்வுண்மைக்கே இறை(வன்) என்று பெயர். இவ்வுணர்வே இறையுணர்வு எனப்படும். இவ்வுணர்வு நிலைபெறும் போது நிலைபேறு எனப்படும். இந்நிலையின் வேறு பெயர்கள் ஞானம், முக்தி, சிவப்பதம் மற்றும் பல. இவ்வுணர்வை தற்காலிகமாகவாவது பெறுவதே திருத்தலங்களுக்குச் சென்று வருவதன் அடிப்படை நோக்கம்.
புகழ் பெற்ற மகிமை வாய்ந்த சில உடையவர்களின் பெயர்களைப் பார்ப்போம். ஆலங்காட்டு அப்பர், காளத்தி அப்பர், நெல்லையப்பர், முல்லைவன நாதர், வைத்தீஸ்வரர், கபாலீஸ்வரர், ஏகாம்பரநாதர் மற்றும் வீரட்டானேஸ்வரர். 🙏🙏🙏 உடையவர் பெயரிலேயே சமாதியான ஞானியைப் பற்றிய குறிப்பு இருக்கும். இன்ன பகுதியில் இருப்பவர், இன்ன இனத்தால் வணங்கப்படுபவர், இன்ன திருச்செயல் புரிந்தவர் என தேவையான தகவல்களை மட்டும் பதிவு செய்திருப்பார்கள். ஆனால், எல்லா ஞானிகளையும் ஒருவராக - சிவனாக - சிவமாக - சிவம் எனும் தத்துவமாக - நம்மை வணங்க வைத்திருப்பர்! ஏன்?
மீண்டும் பகவான் ஸ்ரீரமணரிடம் வருவோம். ஒரு அன்பர் பகவான் மீது அதீத அன்பு, மரியாதை வைத்து சதா தொழுது கொண்டேயிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இதன் விளைவாக அவருக்கு நிலைபேறு (ஞானம்) கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், ஒரு விளைவு உறுதியாக ஏற்படும்: பகவானது உருவத்தை, குணங்களைப் பெறுவார்!! இதற்கு ஆரியத்தில் #சாரூபம் என்று பெயர். பகவானைப் போன்ற உருவத்தைப் பெறுவதற்காகவா அந்த அன்பர் இவ்வளவு பாடுபட்டிருப்பார்? யாரை வணங்குகிறோம் என்று தெரியாமல் வணங்கினால் முட்டாள்தனத்தில் முடிகிறது. தெரிந்துகொண்டு ஆழ்ந்து வணங்கினால் சாரூபத்தில் முடிகிறது. .. இதற்கு விடையாகத் தான் நம் முன்னோர் ஞானியைப் பற்றிய குறிப்புகளை குறைவாகவும் (முட்டாள்தனம் விளையாத அளவிற்கு), வணங்குவதற்குப் பொதுவான தத்துவங்களையும் (சாரூபத்தில் முடியாமல், சாயுச்சியத்தில் முடியும் வண்ணம்) விட்டுச் சென்றுள்ளனர்! 👏👌👍😍
எடுத்துக் காட்டாக திருவரங்கநாதப் பெருமானைக் காண்போம். இவ்வடையாளத்தின் கீழ் சமாதியாகி இருப்பது சட்டைமுனி சித்தர் என்று பார்த்தோம். முதலில் நாம் மரியாதை செலுத்த வேண்டியது இந்த சித்தருக்கே. அடுத்து, நாம் சிந்திக்க வேண்டியது சித்தர் காட்டிய வழியை & வெளிப்படுத்திய உண்மைகளை (5). இவைப் பற்றி தெரியாவிட்டால், சிந்தனைப் பொருளாக எடுத்துக் கொள்ள வேண்டியது மூலவர் திருவரங்கநாதரின் திருஉருவத்தை. இது பற்றியும் ஏதும் தெரியாவிட்டால், இத்தலத்திற்கு வந்து சென்ற அருளாளர்கள், அவர்கள் காட்டிய வழிகளைப் பற்றி சிந்திக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, நமக்கு ஏற்கனவே ஞானாசிரியர் அமைந்திருப்பின், அவர் காட்டிய வழியைப் பற்றி சிந்திக்கலாம்; பயிற்சி மேற்கொள்ளலாம். இவையெல்லாம் ஆரம்ப நிலைகள் தாம். ஒரு நிலைக்கு மேல் எங்கு சென்றாலும் ஒரு இறையையே வணங்குவோம். இறுதியில் அவ்வோர் இறையும் நாமே என்று உணர்ந்து, இவ்வண்ட காட்சிகள் அரங்கேறும் அரங்கமாக - அரங்கம் எனும் நாதனாக - அரங்கநாதனாக அறிதுயிலில் கிடப்போம்! 😍
🌹🌹🌹
இதுவரை நாம் பார்த்தது திருத்தலத்திற்கு வரும் அன்பர்களைப் பற்றி. இனி ஐயர்களின் பங்கைப் பார்ப்போம்.
இவர்களது முக்கிய பணி, தங்களது செயல்பாடுகளால் (இறையுருவை சுத்தம் செய்து, ஒப்பனை செய்து, சிந்தனையைத் தூண்டும் செய்யுள்களை ஓதுதல் (மந்திரம் ஓதுதல்; மந்திரம் - சிந்தனையைத் தூண்டும் கருவி)) வரும் அன்பர்களின் மெய் மறக்கச் செய்தல் (அ) பரவசமடையச் செய்தல். (6) இது நடக்க வேண்டுமெனில் அன்பர்களாகிய நமக்கு, ஐயர்களின் செயல்பாடுகளின் பொருள் தெரிந்திருக்க வேண்டும். நமக்கு அம்ருதாஞ்சன் மஞ்சள் நிறத்தில் தான் இருக்குமென்று தெரியும். அவர்களுக்கு, வருபவர்கள் மஞ்சள் நிற அம்ருதாஞ்சன் தான் கேட்பார்கள் என்று தெரியும். 😛😜😂
ஐயர்கள் செய்யும் 16 படி வழிபாடு என்பது இறையுருவை ஒரு மாமன்னராக பாவித்து, அனைத்து மரியாதைகளையும் செய்விப்பது. அதிக பொருளும் உழைப்பும் தேவைப்படும் இம்முறை மன்னர்கள், சமூகப் பெரியோர்கள் போன்றோருக்காக உருவாக்கப்பட்டது. பின்னாளில் பொருளாதாரத்தோடு இணைந்துவிட்டது. பல பேருக்கு வாழ்வு அளித்திருக்கிறது. இன்றும் அளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்று பொருளாதாரம் கோயில்களை நம்பி இல்லை. இன்னும் சொல்லப் போனால், பொருளாதாரத்திலிருந்து நமது திருத்தலங்களைப் பிரிக்கவேண்டும். இதற்குத் தனியாக ஏதும் செய்ய வேண்டியதில்லை. அன்பர்கள் தவமியற்றவும், தமது சொந்த முயற்சியால் இறையுணர்வைப் பெறவேண்டும் என்ற நோக்கங்களோடு வரவேண்டும். பணிபுரியும் ஐயர்கள் திருத்தலங்களை தூய்மையாகவும், எளிமையாகவும் வைத்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் அன்பர்களது ஐயங்களை தீர்த்து உதவிடவேண்டும். இவை நடந்தால் பல ஒட்டுண்ணிகள், நச்சுப்பிறப்புக்கள் விலகிச் சென்றுவிடும். "பெருமாளின் சாலக்கிராம மாலை சற்று விலகிவிட்டது" போன்ற தேவையற்ற புகார்கள் எழாது. உண்மையான அன்பர்களிடம் திருத்தலங்கள் சென்று சேரும். "இந்துக்கள் சிலைகளை வணங்குபவர்கள்" என்று கேலி செய்து பிழைப்பு நடத்தும் உலகப் பெருபான்மை மதத்தினருக்கும் (7), சீனாவின் கைகூலிகளான பான்பராக் சட்டைகளுக்கும், வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுத் தருவதின் மூலம் கமிஷன் பார்க்கும் தொழிலை பின்புறமாகவும், "இந்துக் கடவுள்கள் மட்டும் இல்லை" என்று முன்புறமாகவும் தொழில் நடத்தும் சாக்கடை பிறப்புகளுக்கும் பிழைப்பு அறுந்துபோகும். எந்த நோக்கங்களோடு நம் முன்னோர்கள் கோயில் என்னும் அமைப்பை ஏற்படுத்தினரோ அவை நிறைவேறும்.
🌼🌼🌼
இவ்விடுகையில் சைவமும் இல்லை, வைணவமும் இல்லை என்போருக்கு...
வைணவம் என்பது திருஞானசம்பந்தரும், ஆதிசங்கரரும் கொடுத்த அடி தாங்காமல், உயிர் பிழைப்பதற்காகவும் வயிற்றுப் பிழைப்பிற்காகவும் அன்றிருந்த பெண்தெய்வ வழிபாட்டு கூடாரத்திற்குள் புகுந்து கொண்ட பெளத்தர்களின் தொழிலாகும். வைணவம் உருபெற ஆரம்பித்தது 7ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தான். அவர்களது சின்னமான நாமம் உருவானது 12ஆம் நூற்றாண்டின் முன்பகுதியில் தான். அதற்கு முன்னர் திருப்பதி பெருமாள் முதற்கொண்டு அனைத்து இறையுருவங்களுக்கும் பூசப்பட்டது விபூதி தான். அனைத்து மதங்களுக்கும் முன்னோடியான சைவ சமயத்திற்கு சாத்திரங்கள் ஏன் அனைத்திற்கும் பின்னர் உருவானது என்று சிந்திக்க ஆரம்பித்தால் அன்று (சமண பெளத்த வைணவ வைதீக வருகைகளுக்கு முன்பு) நடைமுறையில் இருந்த தமிழரின் சமயமே வேறு என்ற விடை கிடைக்கும். ஒவ்வொரு மகானும் தத்தம் சொந்த அனுபவத்திலிருந்து இறையுணர்வு பெறும் வழிகளை உருவாக்கியிருப்பார்கள். சில மகான்களின் வழிகள் சமூக நடைமுறைக்கு சிறிதும் ஏற்றதாக இல்லாமல் கூடவிருக்கும். அவர்கள் காட்டிய வழிகள் எத்தகையதாக இருப்பினும், அனைவரது குறிக்கோள்களும் ஒன்றேயாகும்: அவர்களை நாடி வருவோர் இறையுணர்வு பெறவேண்டும் (அ) தனியிருப்பை இழக்கவேண்டும். இரண்டும் ஒன்றேயாகும். இவ்வடிப்படையில் தான் இவ்விடுகையை எழுதியுள்ளேன்.
சித்த வேட்கை கொண்டு சிறந்து விளங்கிய சீலரே
அரங்கனிடத்தில் அணிகலன்கள் பெற்ற அற்புத மூர்த்தியே
எம் அறியாமை நீக்கி ஞானவரம் அருள்வாய் ஸ்ரீசட்டைமுனி பெருமானே!
("அரங்கனிடத்தில் அணிகலன்கள் பெற்ற" என்று வருவது இவரது வரலாற்றில் வரும் ஒரு நிகழ்வை குறிப்பதல்ல. இவ்வண்டம், இதில் வாழும் உயிர்கள், அவ்வுயிர்கள் வாழும் வாழ்க்கை என அனைத்தையும் இறையின் அணிகலன்களாக காணவேண்டும் என்ற பேருண்மையை உணர்ந்து வெளிப்படுத்தியவர் என்பதையே குறிக்கும். "சிவன் அபிஷேகப் பிரியர். பெருமாள் அலங்காரப் பிரியர்." என்பதில் வரும் "பெருமாள் அலங்காரப் பிரியர்" என்னும் சொற்றொடரின் பொருளும் இதுவே.)
🌸🌸🌸
🔥🔥🔥
🙏🙏🙏
*குறிப்புக்கள்:*
1. #ஐயர் - படித்தவர் / கற்றவர் / அறிந்தவர். இதைவிட, இன்றைய நிலையில், #பூசாரி - பூ சார்த்துபவர் - என்ற சொல்தான் இவர்களது பணியைச் சரியாக விளக்குகிறது என்று நினைக்கிறேன்.
#பூஜை என்ற சமற்கிருத சொல் பூசு மற்றும் பூ + வை ஆகிய தமிழ் சொற்களில் இருந்து வருகிறது. ஆக, இறை உருவங்களை குளிப்பாட்டி, சுத்தம் செய்து, பூக்கள், துணிகள், நகைகள் முதலியவற்றால் ஒப்பனை செய்து வழிபாடு நடத்தி வைக்கும் முறை தமிழருடையது!
2. இப்பொருளாதார இணைப்பினால் இன்று பெரும் பயனடைவோர் பெரும்பாலும் அந்நிய சக்திகள் வீசி எறியும் பொரைகளுக்காக நம் சமயத்தின் மீது கல்லெறியும் கூட்டத்தைச் சேர்ந்தோர் தான். கருவறைத் தவிர மீதமுள்ள இடங்கள் அனைத்தையும் கடைகளாக்கிவிட்டனர். காலணி பாதுகாப்பதிலிருந்து அனைத்து இடங்களையும் ஏலம் விடுவதில் கமிஷன் பார்ப்பது, மாதம் தோறும் கப்பம் பெறுவது என அனைத்திலும் காசு பார்ப்பது இந்தக் கூட்டமே.
3. ஒரு பொருள் உள்ளது; மேலும், அது பற்றி நமக்குத் தெரியும். இது தெரியும் என்கிற நிலை.
ஒரு பொருள் உள்ளது. அது பற்றி நமக்குத் தெரியாது. இது தெரியாது என்கிற நிலை.
ஒரு பொருள் உள்ளது. அதைப் பற்றி இன்று வரை நாம் கேள்விப்பட்டது கூடக் கிடையாது என்பதே கேவல நிலை.
"#இறையுணர்வு பெறுவதற்காகத் தான் கோயில்களா?" என்பது ஒரு கேவல நிலையெனில், "இறையுணர்வு என்றால் என்ன?" என்று கேட்கும் கேவலத்திலும் கேவல நிலையில் தாம் இன்று நம்மில் பலர் உள்ளர்!! 😔
4. "சுவாமியை நன்றாக பார்த்தீர்களா?", "நல்லா தரிசனம் ஆச்சா?" போன்ற கேள்விகளின் சரியான உட்பொருள் "இறையுணர்வு பெற்றீரா?" என்பதே. இதைப் பற்றி விரிவாக இன்னொரு இடுகையில் எழுதவுள்ளேன்.
5. சட்டைமுனி சித்தர் உணர்ந்து வெளிப்படுத்திய பேருண்மைகளில் ஒன்றே வைணவத்தின் சின்னங்களுள் ஒன்றான திருசக்கிரம்! 🙏
(உடனே சக்கிரம், #சக்கிரத்தாழ்வார் போன்றவற்றை இவர் உருவாக்கினார் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. சித்தர் வெளிப்படுத்திய உண்மைக்கு பிற்காலத்தில் கொடுக்கப்பட்ட வடிவங்கள் இவை.)
நம்முள் தோன்றும் எண்ணங்கள் முதல், வெளிப்புறத்தில் நாம் காணும் காட்சிகள் வரை அனைத்தும் திரையில் தோன்றும் படக்காட்சிகள் போன்றவை. நாமோ அக்காட்சிகள் தோன்றுவதற்கு இடம் கொடுக்கும் திரை போன்றவர். அனைத்தும் தொடர்ந்து அசைந்த வண்ணம் இருந்தாலும், நாம் அசைவதில்லை. நாம் சாட்சி மட்டுமே. இதுவே #ஸ்ரீசக்கிரத்தாழ்வார் உணர்த்தும் உண்மை. #திருவரங்கநாதர் என்ற பெயரின் விளக்கமும் இதுவே (அரங்கத்திற்கு நாதன் என்று விரிக்காமல், அரங்கம் என்னும் நாதன் என்று விரித்தால் சரியான பொருள் விளங்கும்).
பின்னர் ஏன் மூலவராக திருசக்கிரத்தாழ்வாரை வைக்காமல் அரங்கநாதப் பெருமானை வைத்தார்கள்?
ஏனெனில், ஆழ்வார் வைணவ தத்துவங்களுக்கு ஏற்றவாறு பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவர். அரங்கநாதப் பெருமானோ, வைணவம் முழுமை பெறுவதற்கு முன்னரே உருவாக்கப்பட்டவராக இருக்கும். அரங்கநாதர், நடராஜப் பெருமானின் பிரதிபலிப்பு மற்றும் அரவ ஆபரணம் சூட்டப்பட்ட சிவலிங்க வடிவத்தின் விரிவாக்கமுமாவார். நடராஜப் பெருமானின் மேற்கைகளில் உள்ள தீ (ஒளி) மற்றும் உடுக்கையே (ஒலி) அரங்கநாதரின் மேற்கைகளில் உள்ள சக்கிரம் (ஒளி) மற்றும் சங்கு (ஒலி) ஆகும். அதாவது, அண்டம் என்பது ஒளி & ஒலியின் கலவையே! பிரதிபலிப்பு என்பதால் ஒளியும் ஒலியும் இடமாறியிருக்கும். அரவ ஆபரணம் சூட்டப்பட்ட சிவலிங்கத்தில், அரவம் ஐம்பூதங்களையும், லிங்கம் இன்னதென்று வடிவம் கொடுக்கமுடியாத இறையையும் (பிரம்மம்) குறிக்கும். அரங்கநாதரின் பாம்பனண ஐம்பூதங்களையும், அரங்கநாதர் லிங்கத்தையும் குறிக்கிறார்கள். அதாவது, அண்டம் ஐம்பூதங்களால் ஆன கலவை. இக்கலவையின் தோற்ற இயக்க மறைவுக்கு ஆதாரனமான இறைசக்தி சாட்சிமாத்திரமாக, எவ்வித சலனமுமில்லாமல், அனைத்தையும் அறிந்தவண்ணம் உள்ளது.
மீண்டும் ஸ்ரீசக்கிரத்தாழ்வாருக்கு திரும்புவோம். ஒரு கணக்கில் இது அண்டத்தையும், இன்னொரு கணக்கில் நம் உடலையும் குறிக்கும். உடல் என்று வரும் போது, சக்கிரம் உடலின் இயக்கத்தையும், பின்னிருக்கும் யோக நரசிம்மர் நம்முள்ளிருக்கும் இறை சக்தியையும் குறிக்கும். ஆன்மிகத்தின் இறுதி நிலையை எட்டிய பின், சீவன் தனது இயலாமையை உணர்ந்து பணியும் போது (சரணாகதி), உள்ளிருந்து இறை சக்தி வெளிப்பட்டு சீவனை - நமது தனித்தன்மையை - அழித்துவிடும். இவ்வாறு வெளிப்பட்டு அழிக்கும் சக்தியை (நரசிம்மரை), அது வெளிப்படும் முன்னர் உள்ள நிலையில் (#யோக #நரசிம்மர்) வடிவமைத்திருக்கிறார்கள். 🌸🔥🙏
6. இவ்விரண்டு சொற்றொடர்களும் ஆழ்ந்த பொருள் பொதிந்தவை:
▶ *மெய் (உடல் / உயிரற்றது) மறத்தல் - மெய்யை மறப்பது யார் / எது? மெய் மறந்தபின் அவர் / அதன் நிலையென்ன?*
▶ *பரவசம் அடைதல் - பர - பரம் - பரம்பொருள் - பரம்பொருள் என்றால் என்ன? எங்குள்ளது? பரம்பொருளிடம் யார் / எது வசமானது?*
இக்கேள்விகளுக்கு விடை தெரியாமல், எத்தனை கோயில்களுக்குச் சென்றாலும், எத்தனை வழிபாட்டில் கலந்து கொண்டாலும் ஆன்மிகத்தில் சிறிதும் முன்னேற முடியாது.
7. உலகப் பெருபான்மை மதத்தினரும் சிலைகளை, உருவங்களை, கட்டிடங்களை வணங்குபவர் தாம். இன்னும் சொல்லப்போனால், கெட் அவுட் (Get Out) என்ற ஹாலிவுட் படத்தில் மணி சப்தம் கேட்டவுடன், கேட்பவர் மதி மயங்குவது போல, இவர்களும் சில உருவங்களைப் பார்த்தவுடன், சில வார்த்தைகளை கேட்டவுடன் மதி மயங்குவார்கள். அவ்வாறு பழக்கியிருக்கிறார்கள்.
▶ சிலுவையில் அறையப்பட்ட ஞானி யேசுவின் சிலை - இச்சிலை பெரும்பாலான பரங்கி மதத்தினரின் வீடுகளில் தவறாமல் இருக்கும். இதற்கு பகவான் #ஸ்ரீரமணர் கொடுக்கும் விளக்கம்: உடல் என்னும் சிலுவையில், மனம் என்னும் யேசுவை அறைந்தால் (அதாவது நாம் உடல் என்னும் தனியிருப்பை ஒழித்தால்) எஞ்சியிருப்பது "தான்" மட்டுமே. இதுவே உயிர்த்தெழுதல் எனப்படும். ஆக, இச்சிலையைக் கண்டவுடன் அவர்களுக்குத் தோன்ற வேண்டிய எண்ணம் "மனதை அழி". ஆனால், அவர்களுக்குத் தோன்றுவது? தோன்ற வைத்திருப்பது? 😁
▶ வெற்றுச் சுவற்றை நோக்கி வழிபாடு நடத்தும் முகம்மதியர் - அது வெற்றுச் சுவரல்ல; மெக்காவிலுள்ள காபாவைக் குறிக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும். இன்று காபா ஒரு வெற்றுக் கட்டிடம். ஆனால், 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அவ்வாறல்ல. 360 சிலைகள் இருந்த கோயில் அது. (அது பெரும் சிவாலயம் என்றும், #சமண முனிவர் #பகுபாலி சமாதியான தலம் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.) அதிலிருந்த அனைத்துச் சிலைகளை உடைத்து எறிந்தவர் கூட ஒரு சிலையை ஆரத்தழுவி முத்தமிட்டுள்ளார். இன்றும் அச்சிலை கட்டிடத்தின் வெளிப்புறத்தில் ஒரு மூலையில் பதிக்கப்பட்டுள்ளது. இடம் வரும் போது அதை நோக்கித் திரும்பிப் பார்ப்பர் (தொட்டு வணங்குவதற்கு சமம்). மேலும், ஹஜ் பயணத்தின் போது சிலர் அவர்களது இறைத்தூதரின் சமாதி தலத்திற்கும் சென்று வருகின்றனர். இறைத்தூதர் இறைக்கு சமமல்ல. காபா, பதிக்கப்பட்ட கல், ஜம்ஜம் கிணறு, இறைதூதரின் சமாதி, குர்ஆன்... இவற்றை வணங்குவதும், இவைகளைப் பார்த்தவுடன் அல்லது இவைகளைப் பற்றிக் கேட்டவுடன் மனதில் மரியாதை, பாசம் பொங்குவதும் உருவ வழிபாடு தாம்.
முகம்மதியம் உருவாவதற்கு முன்னரே ஹஜ் பயணம் இருந்தது. மெக்கா நகர மக்கள் சரணடையும் முன்னர் போட்ட ஒப்பந்த விதிகளில் ஒன்று, ஹஜ் பயணம் நிறுத்தப்படக் கூடாது என்பதாகும். அன்று அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் என்பதால் இந்த விதி போடப்பட்டது.
posted from Bloggeroid