Wednesday, May 17, 2017

வா(இ)ந்தியைப் பற்றி திரு. காயிதே மில்லத்...

இந்தி மொழி பற்றி *காயிதே மில்லத்* அவர்கள்...

அன்று நாடாளுமன்றத்தில் கேள்விகளைக்
கணைகள் போல் தொடுத்தார்.

#காயிதே #மில்லத்: இந்தியாவின் தேசிய மொழி எது?

பதில்: #இந்தி

காயிதே மில்லத்: ஏன் இந்தி மொழியை,
தேசிய மொழியாக  வைத்தார்கள்?

பதில்: இந்தி மொழியே இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி என்பதால்.

காயிதே மில்லத்: இந்தியாவின் தேசியப் பறவை எது?

பதில்: #மயில்.

காயிதே மில்லத்: *மயில் இனம் இந்தியாவில் மிகக் குறைவு, இந்தியாவில் அதிகம் இருக்கும் பறவை காக்கை. ஆகையால் காக்கையைத் தேசியப் பறவையாக வைக்க வேண்டியது தானே?* 👌👏✊👊 😛😜😝

யாரும் வாய் திறக்கவில்லை. 😀

காயிதே மில்லத்: எது வேண்டும், வேண்டாம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இந்தி தெரிந்தால் தான் நாடு முன்னேறும் என்றால்,  *இந்தி பேசத் தெரிந்த, பீகார், ஒடிசா மக்களின் வாழ்க்கைத் தரம் ஏன் முன்னேற்றம் காணவில்லை?* 👊👊👊👊

இதற்கும் யாரும் வாய் திறக்கவில்லை. 😁

காயிதே மில்லத்: கடைசித் தமிழன் இருக்கும் வரை இந்தியை உங்களால் திணிக்க முடியாது! சவாலாகச் சொல்கிறேன்!! *தமிழன் என்று மார்தட்டிச் சொல்லுகிறேன்.*

#ஜவஹர்லால் #காஜி (#நேரு): நீங்கள் முஸ்லீம். ஏன் தமிழ் மீது பற்று?

காயிதே மில்லத்: இசுலாம் எனது வழியாகும். *இன்பத் தமிழே எனது மொழியாகும்!!* 👏👏👏

(மூலம்: வாட்ஸ்அப்)

🌸🏵🌹💮🌺🌷🌼

இப்படி முகத்திலேயே கும்மாங்குத்து வாங்கியும் திருந்தவில்லை.

அது சரி. அன்று குத்து வாங்கியது, மோகன்தாஸின் இறப்பை வைத்து மேலே வந்த காஜிக்கள் காலம். இன்று, ஜெயலலிதாவின் இறப்பை வைத்து தமிழகத்தில் நுழைய முயலும் மஸ்தான்கள் காலம். செல்ஃபி, டீ ஆற்றுதல், நெல் வயலுக்கு நெருப்பு, பேஜார், ரூ. 10ல உடை என பல மாற்றங்கள், முன்னேற்றங்கள், மைல் கல்கள் கண்டவர்கள். 😛😜😝 மீண்டும் வாலை நுழைத்துப் பார்க்கிறார்கள். இழுத்து வைத்து ஒட்ட வெட்டுவோம்!!

(இணைப்பு: 1920களில் கூட பணத்தாளில் இடம் பெற வக்கில்லாத ஒரு குப்பை மொழி தான் வா(இ)ந்தி என்பதற்கு ஆதாரம். முகநூலில் கிடைத்தது.)

பா.ஜ.க.வின் வா(இ)ந்தி திணிப்பிற்கு மமதாவின் பதிலடி!! 👍

நேற்று நள்ளிரவில் வங்கத்திலிருந்து வந்த அந்த நல்ல செய்தி இதுதான்.

மேற்கு வங்க அரசு அந்த மாநிலத்திலுள்ள எல்லா பள்ளிகளிலும் வங்காள மொழியை கட்டாயமொழியாக அறிவித்திருக்கிறது. சிபிஎஸ்இ உள்பட அனைத்துப் பள்ளிகளிலும் இது அமல்படுத்தப்படும். நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மாநில பள்ளிக்கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி இதை அறிவித்தார்.

வாழ்த்துகள் சகோதரி மமதா அவர்களே!

என்ன காரணம்? தேசபக்தி மிக்க டைம்ஸ் ஆப் இந்தியாவே சொல்கிறது, கேளுங்கள்:

The move by the Mamata Banerjee-led government follows the Centre's move to make Hindi compulsory for all CBSE and ICSE students from Class I to X. "India is a large nation and our strength is unity in diversity," Partha said. "We have received complaints that Bengali is not provided as an option in several schools," he added.

(கமென்ட்டில் முழு செய்தி)

இதே காரணங்களுக்காக அண்மையில் இது போன்ற சட்டத்தை கேரளமும் நிறைவேற்றியது - அதுவும் அவசரச் சட்டமாக - என்பதை நாம் அறிவோம்.

தமது மாநிலத்தின் ஆட்சிமொழியை தமது மாநில எல்லைக்குள் உள்ள பள்ளிகளில் கற்றுத்தரப்படுவதை உறுதிசெய்வதற்காகவே பல போராட்டங்களை மாநிலங்கள் நடத்தவேண்டியிருக்கின்றன. தமிழ்நாட்டில் பல ஆண்டுகால போராட்டங்களுக்குப் பிறகு, 2006 இல் கலைஞர் அரசு இதற்காக தமிழ் கற்றல் சட்டம் ஒன்றை இயற்றியது. ஆனால் இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தமுடியவில்லை.  மீண்டும் சற்று வேருக்குத் திரும்பியிருக்கும் திமுக இப்போது இது குறித்து பேசத்தொடங்கவேண்டும்.

தொடக்கத்தில் மொழி விவகாரத்தில் சுணக்கம் காட்டிய மற்ற மாநிலங்கள் இப்போது விழித்துக்கொண்டன. தொடக்கத்தில் வீரம் காட்டிய தமிழகம் வழிவகை இல்லாமல் திகைத்துக்கொண்டிருக்கிறது!

இந்தக் குரல், மலையாளத்தையே வங்கமொழியையோ கன்னடமொழியையோ தத்தம் மாநிலங்களில் உறுதிப்படுத்துவதற்கான குரல், அடிப்படையில் தேசிய இனங்களின் உரிமைக் குரல். அவரவர் நிலத்தில் அவரவர் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சி. இது ஒரு ஜனநாயகக் கோரிக்கை.

இந்தி பேசாத மாநிலங்களில் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் போல ஆட்டம்போடும் பாஜகவின் மொழித்திணிப்புக்கு நான்கு புறங்களிலிருந்தும் இப்போது கடும் எதிர்ப்பு எழுந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவில் மொழியுரிமைக்காக போராடும் பலருடைய கூட்டுமுயற்சியும் இவற்றுக்கு பின்னால் இருக்கிறது என்பதை கடந்த ஆண்டில் மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் நடந்த மொழியுரிமையாளர்களின் தீவிரமான முயற்சிகளை நன்கு அறிந்தவனாக, அவற்றில் ஏதோ ஒரு விதத்தில் பங்கேற்றவனாக. நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.

ஒற்றை மனிதனாக  என் இனிய நண்பர் கோர்கோ சாட்டக்ஜி  Garga Chatterjee தொடர்ச்சியாக ஆங்கிலத்திலும் வங்க மொழியும் இதற்காக தொடர்ந்து எழுதிவந்தவர். இன்றைய வங்காள அரசியலை, வங்க மாநில உரிமை அரசியலை, தில்லியின் ஏகாதிப்பத்தியத்துக்கு எதிரான கொல்கத்தாவின் குமுறலை மிகச்சிறப்பாக வெளியுலகத்துக்கு அறிவித்துவருபவர் அவர். அவரது எழுத்துக்களும் முயற்சிகளும் வங்க அரசியலின் மீது தாக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன.

2015 சென்னை மொழியுரிமை மாநாட்டில் பங்குபெற்றவர் கோர்கோ. அவர் தொடர்ந்து மமதாவின் மாநில உரிமைக்குரல் குறித்து பேசியும் எழுதியும் வருகிறார். அவரைப் போன்றவர்கள் தான் இந்த முயற்சிகளுக்கெல்லாம் வித்தாக அமைந்தவர்கள். அவரைப் போல பலரும் கிளியர் அமைப்பின் செயல்பாடுகளில் பங்குகொண்டு வங்கமொழிக்காகவும் நம் அனைவரின் மொழிக்காகவும் குரல் கொடுத்துவருகிறார்கள்.

வங்காள மொழித்தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள், நன்றிகள்.

Courtesy

Aazhi Senthil Nathan

(மூலம்: https://m.facebook.com/story.php?story_fbid=1523104141053804&id=100000626997769)

Friday, May 5, 2017

போலியே இல்லாத பேஜார்... 😝

*நல்லாக் கேட்டுக்குங்க,*

முதல்ல ஆதார் கார்டையும் வோட்டர் ஐடி கார்டையும் தாசில்தார் ஆஃபிஸ்ல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

*அப்புறம்?*

ஒட்டர் ஐடி கார்டையும் ரேஷன் கார்டையும் சிவில் சப்ளை ஆஃபீசுல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

*சரி, அப்புறம்?*

ரேஷன் கார்டையும் பான் கார்டையும் இன்கம் டாக்ஸ் ஆஃபீஸ்ல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

*ஓ அப்புறம்?*

ஆதார் கார்டையும் பாஸ்புக்கையும் பேங்குல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

*அதுவும் சரிதான், அப்புறம்?*

பாங்க் பாஸ்புக்கையும் கேஸ் புக்கையும் கேஸ் ஆஃபீஸுல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

*ம்ம்ம்ம்ம்ம், அப்ப்ப்புறம்?*

மேப் இன் கார்டையும் பான் கார்டையும் ஆதார் கார்டையும் ஸ்டாக் புரோக்கர்ட்ட குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

*ஓஓஓஓஓ அப்புறம்?*

மேப் இன் கார்டு, பான் கார்டு, கிரிடிட் கார்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வோட்டர் ஐடி கார்டு, பேங்க் பாஸ் புக்கு, கேஸ் புக்கு எல்லாத்தையும் பாஸ்ப்போர்ட் ஆஃபீஸுக்கு எடுத்துட்டு போயி லிங்க் பண்ணிக்குங்க!

*ஐயையோ அப்புறம்?*

இதெல்லாம் லிங்க் பண்ணியாச்சுண்ணு கலெக்டர்கிட்ட லெட்டர் வாங்கிட்டு வந்து மாநகராட்சி ஆஃபீஸுல குடுத்தா அவங்க ஒரு கார்டு இஷ்யு பண்ணுவாங்க!

*ஐயையோ இன்னொரு கார்டா, அப்புறம்?*

அந்த கார்டை எடுத்துகிட்டு பத்துக் கிலோமீட்டர் தள்ளி இருக்கிற *பெருமாள் கோவில்ல டெய்லி காமிச்சியினாக்க ஒரு உண்ட கட்டி தருவானுங்க,* அதை வாங்கி உங்க குடும்பம் முழுவதும் பங்கு போட்டு சாப்பிட்டுட்டு *சந்தோஷமா* வாழ்க்கையை அனுபவிங்க.

படித்ததில் பிடித்தது...😜

(மூலம்: வாட்ஸ்அப்)

🌸🏵🌹💮🌺🌷🌼

ஏனுங்க, "நீதிபதிங்கறவர் 30 வருசம் பொய் சொன்னவருன்னு" நடிகவேள் ஐயா சொல்லிக் கொடுத்துட்டுப் போனாருங்க. இந்த அட்வகேட் ஜெனரல்ன்றவர் எவ்வளோ வருசம் பொய் சொல்லியிருப்பாருங்க? மனுசன் என்னம்மா பொளக்குறாரு! 😯 நம்ம உசிரு, ஒடம்பு, ஒடம எல்லாம் அரசுக்கு சொந்தங்களாம்!! 😱 அரசுக்கு ஒளிவு மறவு இல்லாம எல்லாம் தெரியணுங்களாம். நான் கேக்கிறேன், நமக்காக அரசுங்குளா? இல்ல அரசாங்கத்துக்காக நாமங்களா? நாம தானே ஓட்டுப் போட்டு இந்த கருமாந்தரங்கள அனுப்பிவச்சோம். நம்ம வரிப் பணத்துல தானே இவங்க டீ ஆத்துறாங்க. நாம எஜமானருங்களா? இல்ல, இந்த எச்சக்கலங்க எஜமானருங்களா? 😠

கொஞ்ச நாளக்கு முன்னாலே டீ ஆத்துறவரு வெளிநாடா சுத்திகிட்டிருந்தாருல்ல. மனுசன் நாட்டுக்காக சுத்தறாரா இல்ல, தனக்காக சுத்தறாரா, யாருக்காவது டீ ஆத்திக் கொடுக்கப் போனரான்னு தெரிஞ்சுக்க ஒருத்தரு தகவல் அறியும் உரிமை சட்டம் வழியா மனு கொடுத்தாருங்க. இந்த ஒட்டுண்ணி ஜென்மங்க, அதெல்லாம் தேவ ரகசியம், நாட்டுப் பாதுகாப்புன்னு சொல்லி எந்தத் தகவலும் கொடுக்க மறுத்துட்டாங்க. நம்ம வரிப் பணத்துல அதிகபட்சம் 5 வருசம் டீ ஆத்துற இந்த ஒட்டுண்ணிகளுக்கே தங்களோட சமாச்சாரங்கள காப்பாத்திக்கனும்ன்னு அக்கறை இருக்கும் போது, இவங்களுக்குப் படி அளக்கற எஜமானருங்க நமக்கு எவ்வளோ இருக்கும்? 😎 இவுங்க மறச்சு வெச்சுப்பாங்களாம். நாம ஓபனா இருக்கனுமாம். தனக்கு கல்யாணம் ஆனதையே மறச்சவருக்கு, யாரும் எதையும் மறைக்கக் கூடாதாம். "யோக்கியன் வரான். சொம்ப எடுத்து உள்ள வை."-ங்கற பழமொழிக்கு இனிமே சரியான உதாரணம் இவனுங்க தான். நம்ம ஊர் அரசியல்வியாதிங்க தோத்துட்டாங்க, போங்க. 😜

இருக்கறுதுலேயே பாதுகாப்பானதுன்னு நெனக்கிற பான் கார்டுலயும் டூப்ளிகேட் இருக்குதாம். தனியார வெச்சு "தயார்" பண்ணுற ஆதாரு ரொம்ப பர்ஃபெக்ட்டாம். வின்னர் பட காமெடி தோத்தது போங்க! 😁 ஸ்ரீராமருக்கும், கொரங்குக்கும் ஆதார் கொடுக்கறப்போ கண்டீப்பா அது பர்ஃபெக்ட்டு தான்! 😂

*ஆமா, AG ஐயா, நீங்க கோர்ட்டுல உடான்ஸ் உடறுதுக்கு கொஞ்சம் முன்னாடி ஒங்க டீ ஆத்துறவரு ஊருலேயே நிலேஷ் மிஸ்திரின்னு ஒருத்தர கைது செஞ்சீங்களே. அவரு சுமார் 100 பேருக்கு மேல போலி ஆதார் அட்டய தயார் பண்ணியிருக்காராமே? ஒங்களுக்குத் தெரியாதுங்களா?* 😛😜😝 டிஜிட்டல் இந்தியாவுல இது மாதிரி தகவல் கொஞ்சம் மெதுவாத்தான் ஒங்கள மாதிரி பெரியவங்களுக்கு வந்து சேரும்ன்னு நெனக்கிறேன்.

🌸🏵🌹💮🌺🌷🌼

அடுத்த சுதந்திரப் போராட்டம் இந்த கிராதக அரசாங்கத்தை எதிர்த்து தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

(இணைப்பு: தினமலர் - சென்னை - 03/05/2017)

Thursday, May 4, 2017

சீமைக்கருவேலம் பற்றி மறைந்த கலாம் ஐயா அவர்களின் அறிவியல் ஆலோசகர் திரு. பொன்ராஜ்

​*சீமைக்கருவேல மரங்களை அழிக்க வேண்டாம் என்று போடிநாயக்கனூரில் 4.3.17 அன்று டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் வெ.பொன்ராஜ் அளித்த பேட்டி:*

நண்பர்களே, 

#சீமைக்கருவேல மரங்கள் ஒழிப்பில் பரப்பட்ட தகவல் காரணமாக, ஏதோ அது விஷ செடி, நிலத்தடி நீரை உறிஞ்சிவிடும், காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும்,  அது தீங்கு   உடனே அழிக்காவிட்டால், இந்த நாடே நாசமாகிவிடும் என்று பரப்பப்பட்டு, அதை அப்படியே நம்பி, இந்த பொய்யான தகவலின் உண்மைத்தன்மையை ஆராயாமல், அதன் அறிவியல் உண்மைகளை ஆராயாமல்,  நீதிமன்றமும் தடை செய்து, அதை அழிக்க உத்திரவிட்டு, இன்றைக்கு ஒரு வாட்ஸ்அப் தகவல் எப்படி இன்றைக்கு மக்களை முட்டாளாக்கும் என்பது தெரியாமல், சில அறிவிலிகள் இதை செயல்படுத்த சிரமேற்கொண்டு அழைகிறார்கள். 

யாராவது பொய்யான தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்த்தார்களா. 

இதன் பின்னால் உள்ள அரசியல் சூழ்ச்சியை புரிந்து கொண்டு இருக்கிறார்களா இல்லையா என்பது இந்த ஞான சூன்யங்களுக்கு புரியவில்லை. 

1.   இந்த #சீமைக்கருவேலம் மரங்களை வேரோடு அழித்தால் தான், கேஸ் கம்பெனிகளால் கிராமத்திற்குள் புகமுடியும், இந்தியா 70 சதவிகிதம் கிராமங்களால் ஆனது.  அங்கே புகாமல், இவர்களுக்கு லாபம் இல்லை. 

2.   ரூ 230 க்கு  வாங்கி உபயோகித்த கேஸ், இன்றைக்கு நேரடி மானியத்தை உங்களுக்கு கொடு்த்து விட்டு அதன் விலையை தள்ளுபடி போக ரூ 570. தள்ளுபடி இல்லாத விலை ரூ 800 க்கு  மேல் செல்ல வாய்ப்பு.  அப்படி என்றால் 60 கோடி மக்களை இந்த கேஸ் அடுப்பு சென்றால் தான் கேஸ் கம்பெனிகளுக்கு வருமானம். 

3.   வெறும் மரத்தை வெட்டி வித்தால் டன்க்கு ரூ 2500, கரியாக மாற்றி வித்தால் ரூ 12000- 14000, அதை ஆக்டிவேட்டு கார்பனாக மற்றி சார்க்கோல்லாக மாற்றி வித்தால் ரூ 25000 - ரூ 75000, தேங்காய் ஒட்டில் இருந்து இதை ஆக்டிவேட்டு கார்பனாக மற்றி சார்க்கோல்லாக மாற்றி வித்தால் ரூ 1,50,000 - ரூ 1,75,000,  இதை 300 மெஸ்க்கு பவுடராக்கி கார்பன் ஆக மாற்றினால் இதைவிட இரண்டு, மூன்று மடங்கு விலை அதிகம்.  இது மருத்துவ குணத்திற்கும், தண்ணீர் சுத்திகரிப்பிற்கான தொழில் நுட்பத்திற்கும்,  மற்றும் இது போன்ற பல்வேறு மருத்து பொருள்களுக்கு உபயோகிக்கலாம், இதை ஏற்றுமதி பண்ணலாம்  - டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா என்று கேட்கிறானே அது போல. திரும்பவும் அது உங்களிடம் வரும் வெளிநாட்டில் இருந்து.  

இதை இந்த தமிழக அரசு செய்யுமா,  சீமைக்கருவேல மரத்தை ஒழிக்க புறப்பட்டிருக்கும் நண்பர்களுக்கு இது தெரியுமா, இல்லை வெட்டியவர்கள் யாரும் இதை செய்து அந்த கிராமத்தில் தொழிற்சாலையை ஏற்படுத்தி மதிப்பு கூட்டி வேலை வாய்ப்பை, பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கையில் ஈடு பட்டிருக்கிறார்களால இல்லை. 

சீமைக்கருவேலை மரத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்று இவர்கள் சொல்லும் எந்த காரணமும் அறிவியல் முறைப்படி நீரூபிக்க பட விலலை, அதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

4.   சீமைக்கருவேல இலைகளுக்கு ஒரு தனி குணம் இருக்கிறது, அது Anti microbial and Anto bacterial property இருக்கிறது இதன் காரணமாக பேக்ட்ரீயா, மைக்ரோப்ஸ் வராமல் இருக்கிறது. அதன் மூலம் உணவுப்பொருள்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்கு பாதுகாப்பு பிரிசெர்வேட்டிவாக, ராசாயண பொருள்களுக்கு பதில் இதை உபயோகித்தால் அதன் மூலம் ஏற்றுமதி வருமானம், பொருளாதாரம் பெருகும், வேலை வாய்ப்பு கிடைக்கும். 

5.  சீமைக்கருவேலை மரத்தின் இலைகள் மூலம் ஒளிரக்கூடிய பெயிண்ட் உற்பத்தி செய்ய முடியும். 

மேற்கண்ட இரண்டு ஆராய்ச்சியும்,  டாக்டர் அப்துல் கலாம் இன்னோவேஷன் ஈகோ சிஸ்டம் ஆராய்ச்சி விருதின் மூலம், என்பதை, சிவகாசி மெப்கோ கல்லூரி ஆராய்ச்சி மாணவி நீரூபித்து இருக்கிறார்.

6.  சீமைக்கருவேலை மரங்களின் காய்களில் இருந்து விலங்குகளுக்கு சத்தான உணவுப்பொருள்களை உற்பத்தி செய்ய முடியும். 

7.    சீமைக்கருவேலை மரத்தில் இருந்து பிர்க்கெட் போட்டு, அதை எரி பொருளாக மாற்றும் தொழில் நுட்பம், அதன் மூலம் இன்றைக்கு அதன் எரிசக்தி திறன் அதிகரித்து மின்சாரம் உற்பத்தி பண்ணும் திறன் உள்ள இந்த சீமைக்கருவேல மரங்களை அதிகமான குஜராத்தி கம்பெனிகள், வட இந்திய கம்பெனிகள், இதை மதிப்பு கூட்டி, மின்சாரம் தயாரிப்பதற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். 

8.   தமிழ்நாட்டில் சும்மார் 12,620 பஞ்சாயத்துகள் உள்ளன. அப்படியென்றால் சீமைக்கருவேலை மரத்தை வெட்டி அதன் மூலம்  கமார் 12,620 மெகா வாட் மின்சாரத்தை நம்மால் எளிதில் மின் உற்பத்தி செய்ய இயலும். இதன் மூலம் நம் மாநிலத்திற்கு தேவையான மின்சாரத்தை தயாரிப்பதோடு மட்டும் அல்லாமல் மற்ற மாநிலங்களுக்கும் மின்சாரம் அளிக்க முடியும். 

இதன் உற்பத்தி செலவு ரூ 2.50 முதல் ரூ 4.20 - மின்சாரத்தை விற்பனை விலை ரூ 6 முதல் ரூ 10 வரை அரசிற்கும் தனியாருக்கும் விற்பனை செய்யலாம். 

ஒரு மணி நேரத்திற்கு தேவைப்படும் எரி பொருள் 1000 கிலோ. 

ஒரு நாளுக்கான உறபத்தி செலவு ரூ 60,000 

ஒரு நாளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 18000 யூனிட்கள்

 

மின்சார விற்பனை விலை ரூ.7 விதம் ஒரு நாளிற்கு ரூ.126000 வருமானம். 

ஒரு நாளில் கிடைக்கும் நிகர லாபம் ஒரு நாளிற்கு ரூ. 66000

ஒரு வருடத்திற்கு கிடைக்கும் லாபம் (330 நாள்) ரூ. 2,17,80,000

முதலீட்டை திரும்ப பெரும் கால அளவு  20 மாதம்

இதை தான் 2016ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் அறிக்கையிலேயே அப்துல் கலாம் இலட்சிய இந்திய கட்சி இதனை செய்வோம் என்று தெளிவாக தமிழ்நாடு தொலைநோக்கு பார்வை திட்டம் 2026ல் தெளிவாக குறிப்பிட்டு இருந்தோம்.  ஆனால் நாங்கள் கண்டிப்பாக இதை செய்வோம். 

இந்தனையும் செய்ய வேண்டுமென்றால் அதற்கு அறிவார்ந்த அரசு வேண்டும். அதன் மூலம், சீமைக்கருவேலம் பல் வேறு பயன்பாட்டிற்கு வரும்.  இதன் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயரும், வேலை வாய்ப்பு பெருகும். 

இதை இங்கு வந்து உங்களிடம் பணம் கொடுத்து வாங்கி, தொழிற்சாலை போட்டு வேலை வாய்ப்பை உருவாக்குவதை விட எளிய வழி, இது விஷ செடி என்று வாட்ஸ் ஆப்பில் பரப்பி விட்டுவிட்டால், இங்கு இருக்கும் சமூக போராளிகள், சுற்றுச்சூழல் போராளிகள்.  அதை எளிதில் பரப்பிவிட்டு இலவசமாக வெட்டி அனுப்பி விடுவார்கள், அதை வியாபரம் செய்யபவர்கள், மதிப்பு கூட்டி விற்பவர்கள் எளிதாக லாபம் பார்த்து சென்று விடுவார்கள். மக்கள் பணியாற்றியது போன்று இலவச விளம்பரம் கிடைக்கும். 

ஆனால் இதை உண்மை என்று நம்பி பாவம் இளைஞர்களும், மாணவர்களும் இதன் உண்மை நிலையை ஆராயாமல் சமூக பணி என்று நினைத்து வெட்டி போட்டுவிட்டு போகிறானே, அவனது வேலை வாய்ப்பிற்கு உத்திரவாதம் கொடுக்குமா இந்த தமிழக அரசு. 

சிந்திக்காமல் எதை வேண்டுமானலும் சொல்லலாம் என்று பல பேர் கிளம்பி விடுவார்கள். அந்த அறிவிலிகளை பற்றி கவலை இல்லை. 

சீமைகருவேலை மரத்தை  வெட்டுகிறேன் பேர்வழி என்று நாட்டு கருவேலை மரங்களையும் வெட்டுகிறார்கள். 

சரி இதை வெட்டி என்ன செய்கிறார்கள், மீண்டும் எரிக்கிறார்கள், இல்லை விற்கிறார்கள். 

வெட்டும் செலவுக்கும் விற்பனைக்கூட கட்டுவதில்லை இல்லை மக்கள் புலம்புகிறார்கள். ஏனென்றால், அவர்களது சொந்த காட்டில், நிலத்தில் விளைந்திருக்கும் சீமைக்கருவேலை மரத்தை வெட்டு,இல்லை என்றால் அரசு வெட்டி அதன் கூலியை உங்களிடம் வசூலிப்போம் என்று மிரட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது, இதை விட ஒரு முட்டாள் தனம் வேறு எதுவும் உண்டா?

இது இன்றைக்கு ஒரு டன் ரூ 2300 முதல் ரூ 3000 விற்ற சீமை கருவேல மரங்களை இன்றைக்கு ரூ 1000 த்திற்கும் கீழே கொண்டு வந்தது தான் மிச்சம். 

சீமைக்கருவேலை மரங்கள், ஏழைகளின் வாழ்வதாரத்திற்கு ஒரு உத்திரவாதம்.  

எரிபொருளுக்கு அடிப்படை ஆதாரம்.  இதை வேறோடு பிடுங்கி அழித்து விட்டு, வீட்டு எரிபொருளுக்கும்,  சிறு குறும் தொழிற்சாலைகளுக்கும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியது தான்.  

இன்றைக்கு உயர்நீதிமன்றம் தலையிட்டு இதை அறிவியல் பூர்வமாக ஆராய உத்திர விட்டதை வரவேற்கிறேன். 

அறிவியல் ஆராய்ச்சி முடிவு வரட்டும், இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் தெளிவு பிறக்கட்டும். 

*"எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்*

*அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு."*

-- வெ. பொன்ராஜ்.

(மூலம்: வாட்ஸ்அப்)

"இம் என்றால் வனவாசம். ஏன் என்றால் சிறை வாசம்."

மோடியைப் பற்றி எழுதியதால், வடக்கு கர்நாடகாவில் உள்ள ஒரு வாட்ஸ்அப் குழுவின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் (https://youtu.be/dy5rPsM1Xpk)

🌸🏵🌹💮🌺🌷🌼

"இம் என்றால் சிறைவாசம். ஏன் என்றால் வனவாசம் என்பது ருஷ்ய நாட்டில் ஜார் மன்னர் நடத்திய கொடுங்கோல் ஆட்சி கண்டு கொதித்தெழுந்த மகாகவி சுப்பிரமணிய பாரதி எழுப்பிய அனல் கக்கும் கவிதை வரிகள்.

மனித சுதந்திரத்தின் குரல்வளையை நெரித்து குமுறி இடித்த கொடியவர்களின் காட்டாட்சி பாரதியை மட்டுமல்ல ருஷ்யத் தொழிலாளி வர்க்க்த்தையே திரண்டெழ வைத்து மாபெரும் புரட்சியை வெடிக்க வைத்து  ஜார் மன்னனையே  அரியணையிலிருந்து தூக்கியெறியும் நிலையை உருவாக்கியதுடன் ஒரு புதிய சுதந்திர ஆட்சியையும் தோற்றுவித்தது."

(ஒரு இணையப் பக்கத்திலிருந்து சுட்டது)

🌸🏵🌹💮🌺🌷🌼

அடுத்தது என்ன? பரங்கியர்களின் வழியில் "ஒரு வாட்ஸ்அப் குழுவில் 3 பேருக்கு மேல் சேர்க்கக்கூடாது" என்ற அறிவிப்பா? 😜

Wednesday, May 3, 2017

கீழடியில் சமற்கிருத நுழைப்பு!!

▶ வாட்ஸ்அப் மூலம் கிடைத்தது:

*#கீழடி*

பாகுபலியைப் பார்த்து வாயைப் பிளந்து கொண்டிருக்கும் தமிழனுக்கு அடுத்த அடியை மிக பலமாகவே கொடுத்திருக்கிறது ஆளும் மத்திய அரசு.

ஒரு இனத்தின் வரலாற்றை அழித்தால்தான் அந்த இனத்தை எளிதில் அழிக்க முடியும். அந்த விதத்தில் தமிழர்கள் மற்றும் தமிழ் மொழியை அழிப்பதில் மிக கவனமாக இருக்கும் மத்திய அரசு கீழடியில் தமிழ் மொழியின் அடையாளங்கள் மட்டுமே உள்ளது என்று தெளிவாக சொன்ன ஆராட்சியாளர் அமர்நாத் அவர்களை பணியிட மாற்றம் செய்துவிட்டு அங்கு சமஸ்கிருத சுவடுகள் இருந்ததாகத் திரித்து வரலாற்றை எழுதியுள்ளது.

மேலும், சமஸ்கிருதம் இருந்ததற்கான எந்த சுவடும் இல்லாத பட்சத்தில் அங்கு சமஸ்கிருத மொழி முக்கிய மொழியாகவும் தமிழ் வட்டார மொழியாகவும் இருந்தது என அப்பட்டமான, கேவலமான பொய்யை ஆளும் மத்திய அரசு திணித்துள்ளது.

இதற்கு எதிராக போராடிய மக்கள் இயக்கங்களை மிகவும் கொடூரமாக தாக்கினார்கள். இந்தியாவில் மட்டும் அல்ல உலகத்தின் எந்த மூலையிலும் தன் இனத்தைத் தாக்குபவனுக்கு கொடி பிடிக்கும் மானங்கெட்ட மக்களைக் கொண்ட ஒரு இடம் இருக்குமென்றால் அது தமிழ்நாடாகத்தான் இருக்கும்.

💥 தமிழ் மொழி சிதைக்கப்பட்டது,
💥 தமிழ் இனம் அழிக்கப்பட்டது,
💥 தமிழர் உரிமைகள் மறுக்கப்பட்டது,
💥 தமிழர் உடைமைகள் பறிக்கப்பட்டது,
💥 தற்போது உலகின் மூத்த குடியான தமிழர் வரலாறு அழிக்கப்படுகிறது.

ஆனாலும் தமிழனுக்கு இன்னும் சொரணை வரவே இல்லை.

🌸🏵🌹💮🌺🌷🌼

இத்தாலிய கயவர்கள் பரங்கி மதத்தை நுழைய விட்டு நம்மை அழிக்க முயற்சித்தார்கள் என்றால், இந்த குஜ்ஜு கயவர்கள் தமிழை அழித்தும், இந்தியை நுழைத்தும், சமற்கிருதத்தை உயர்த்தியும் தாங்கள் ஆரியர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்கள்.

ஓர் இனத்தை அவ்வினமே தான் ஆளவேண்டும். நேர் தமிழனின் ஆட்சி ராஜேந்திர சோழனின் மகன்களோடு முடிந்தது (சுமார் 1060 வரை). அதன் பின்னர் இன்று வரை வேற்று மொழி, மத, இன ஆட்சி தான் நடக்கிறது. அதிலும் இப்போது மத்தியில் இருப்போர் உலக மகா நயவஞ்சகர்கள். அந்த ஆளுடைய பிள்ளையார் மீண்டும் வந்தால் கூட ஏதும் செய்ய இயலாது என்றே தோன்றுகிறது.